privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்ஓய்வூதியத்தின் பாதுகாப்பின்மை!

ஓய்வூதியத்தின் பாதுகாப்பின்மை!

-

ஓய்வூதியத்தில் அன்னிய முதலீடு

காப்பீட்டுத் துறைக்கு சமமாக ஓய்வூதிய நிதியிலும் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது மற்றும் ஓய்வூதிய மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவதென்ற மத்திய அமைச்சரவை முடிவுகள் மத்திய அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 4 அன்று மத்திய அமைச்சரவை ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அதிகார (PFRDA) மசோதா 2011ல் அலுவலக ரீதியான திருத்தங்கள் உருவாக்குவதற்கான ஒப்புதல் அளித்தது,  அந்த முடிவென்பது, நிதித்துறை நிலைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்பது அதன் துவக்கத்திலேயே பட்டவர்த்தனமாக தெரிந்தது.  அத்தகைய நடவடிக்கைகள் ஓய்வூதியத்திற்கு பங்களிப்பவர் நலனுக்கு உகந்தது போல் தெரிந்தாலும், தொழிலாளர்களுக்கான அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை வேறுவிதமாக புரிந்தறிந்தன/ அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் டிசம்பர் 12ல் இத்தகைய சீரமைப்பு என்ற பெயரிலான நடவடிக்கைகளை எதிர்த்து தேசிய அளவிலான ஒரு வேலை நிறுத்தத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.

மத்திய அரசு, மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்குமான ஓய்வூதியத் திட்டத்தில் “சீர்திருத்தம்” கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் விரைவு படுத்தப்பட்டிருக்கும் அந்த நிலையில்தான் இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதாவின் தோற்றமே உருவெடுத்தது.  அதைத் தொடர்ந்து இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.  இராணுவ சேவையில் உள்ளவர்களை தவிர்த்து, 2004ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பணியிலமரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டம் முன்பிருந்த “வரையறுக்கப்பட்ட பயனுள்ள திட்டம்” என்ற நிலையிலிருந்து “வரையறுக்கப்பட்ட பங்களிப்பு திட்டமாக” சாராம்சத்தில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2005 மார்ச்-ல் மக்களவையில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் முக்கியமான பிரிவு, 2003ல் உருவாக்கப்பட்ட இந்த “ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதாவிற்கு” சட்ட பூர்வ அந்தஸ்து வழங்கியது.  ஆனால் 14வது மக்களவை முடிவடைந்ததை தொடர்ந்து இந்த மசோதாவும் காலாவதியானது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டம் மட்டும், எந்த வித ஒழுங்குபடுத்தும் அமைப்பு இல்லா நிலையிலும், தொடர்ந்து இருந்து வந்தது. கிட்டத்தட்ட 27 மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டது.  விதிவிலக்காக, இடது சாரிகள் ஆண்ட மேற்கு வங்கம், திரிபுரா, மற்றும் கேரளா மாநில அரசுகள் மட்டும் இந்த திட்டத்தை ஏற்காமல், ஏற்கனவே இருந்துவந்த “வரையறுக்கப்பட்ட பலன்களுடைய திட்டத்தையே” தொடர்ந்து அமுல்படுத்தி வருகின்றனர்.

2009 ம் ஆண்டு சூலை துவங்கி, மத்திய அரசில் 2ம் முறை ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அணி இந்த திட்டத்தை சுய தொழில் செய்பவர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நீடித்தது.  2010 மத்திய நிதி நிலை அறிக்கையில் சுவாவாலம்பன் திட்டம் என்ற இந்த கூட்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2011ம் ஆண்டு மார்ச் 24ம் நாள் மத்திய அரசு இந்த ஓய்வூதிய மசோதாவை மறுபடியும் மக்களவையில் அறிமுகப்படுத்தியது.  அது பின்னர் நிதிக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.  அந்த ஆண்டு ஆகஸ்ட் திங்களிலேயே அந்த குழு தனது அறிக்கைகளை சமர்ப்பித்தது.  அந்நிய நேரடி முதலீடு 49 சதத்தை அனுமதிக்கும் மத்திய அமைச்சரவையின் அக்டோபர் 4ம் தேதிய திட்டத்தையே இந்த குழுவின் சிபாரிசும் எதிரொலித்தது.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திய பெருமையை பெற்றிருந்தாலும் உண்மையில் 2003-ல் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் ஆகஸ்ட் 2003-ல் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு பணியில் சேரும் புதிய நியமனதாரர்களுக்கு அமுல்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போது இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் 37.45 லட்சம் சந்தாதார்களும், ரூ 20-535 கோடி சந்தாவையும் அடிப்படை நிதியாகவும் கொண்டுள்ளது.  ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக இந்த ஓய்வூதியம் நாட்டின் மக்கள் தொகையில் 12 சதமானவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக உள்ளது.  நாட்டில் எல்லோருக்கும் இந்த திட்டத்தை விரிவாக்குவது என்பது மிகப்பெரிய யோசனைதான்.  ஆனால், இந்த திட்டத்தை மத்திய அரசு ஊழியர்கள் இன்றுவரை எதிர்த்து வருகின்றனர்.  “நாங்கள் ஓய்வூதிய திட்டத்தில் அந்நிய முதலீட்டை முற்றாக எதிர்க்கிறோம்.  இப்போது இந்த அந்நிய முதலீட்டை அனுமதித்தோமானால், இந்த நிதியை கையாளுகிறவர்கள் அவர்கள் விரும்பிய தொழிலில் முதலீடு செய்வார்கள்.  இவ்வாறு இந்த நேரடி அந்நிய முதலீடு எதிர்மறையாகிவிடும்.  இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டபோது, ஓய்வூதியத்திற்கான நிதி தேவை அதிகமாகிக் கொண்டுவரும் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அவசியம் என்று மத்திய அரசால் கூறப்பட்டது- என்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு கே.கே.என்.குட்டி தெரிவித்தார்”.  ஓய்வூதியத்திற்கான நிதியை இவ்வாறு புதிய பணியாளர்கள் வழங்குகிறார்கள்.  2001 – 2009ம் ஆண்டிற்குமிடையே மத்திய அரசில் பணிக்கு எடுக்கப்படும் அளவு குறைந்து விட்டதால், இந்த திட்டத்திற்கான நிதி வரத்தும் குறைந்துவிட்டது.

தொழிலாளர்கள் எதிர்ப்பு

இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய காரணம் ஓய்வூதியத்திற்கான நிதி நெருக்கடி அதிகமாகி வருவதுதான் என்று சொல்லப்பட்டது.  “ஓய்வூதிய நிதியின் பெரும் பகுதி பங்கு ராணுவ சேவையில் உள்ளவர்களைத்தான் சென்றடைகிறது. ஆனால் அவர்களுக்குத்தான் இந்த திட்டத்திலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது” என்றார் கே.கே.என்.குட்டி.

வரும் 34 ஆண்டுகளில் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் நிதி தற்போதைய ரூ 14,284 கோடியிலிருந்து ரூ 57,088 கோடி ரூபாயாக இருக்கும் என்று பெங்களுரை சேர்ந்த பொருளாதார மாற்றத்திற்கான கொள்கை மையத்திலுள்ள கே.காயத்திரியின் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி அவர் கூறுகிறார்.  2004-05ம் ஆண்டிற்கான மத்திய அரசின் ஓய்வூதிய செலவினம் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 0.51 சதமானமே.  அதில் 0.26 சதமானம் ராணுவ சேவையில் உள்ளவர்களுக்கு செல்கிறது.

தற்போதுள்ள பணியாளர்கள் இந்த திட்டத்தில் இல்லாவிட்டாலும், அரசு எந்த நேரத்திலும் ஒரு ஒப்பந்தம் மூலமாக அனைவரையும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குள் கொண்டுவர சுதந்திரமுள்ளது என்கிறார் திரு குட்டி.  இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக திட்ட மசோதா, இந்த திட்டம் மூலம், சந்தை சார்ந்த நன்மையே கிடைக்கும் என்பதுடன், வேறு எந்த விதமான நேரடியான, மறைமுகமாக எந்த பலன் குறித்தும் உறுதி சொல்லவில்லை.  இது சந்தை சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் சந்தாதாரர்களை அதிர்ச்சிக்கு  தள்ளிவிடுகிறது.

கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் 25ல், அரசு ஊழியர் கூட்டமைப்பானது, இந்த “ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதா” முற்றாக விலக்கிக் கொள்ள பிரதமருக்கு கடிதம் எழுதியது.  சந்தை முதலீட்டில் ஏதாவது அதிர்ச்சி ஏற்படும் பட்சத்தில், சந்தாவை வாங்குவதற்கான சக்தி இல்லாத நிலையில், ஏற்கனவே உள்ள அவரது சந்தாவிற்கான உண்மை விலை குறிப்பிடப்படாததால், அதன் மதிப்பு தற்போதுள்ள பண வீக்கத்தால், மிகவும் குறைந்துவிடும் என்கிறார்.  மேலும் கூறுகையில், இந்த சந்தாதாரர் மத்திய அரசு ஊழியர் என்பதால், இந்ததிட்டத்தின்படியே தனது முதலீட்டை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால், ஒரு தவறான தேர்வில் முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

இந்தியா மற்றும் அந்நிய தனியார் முதலீட்டாளர்களின் நியாயமற்ற அப்பட்டமான, தனியார் லாபத்திற்கு பொது மக்கள் பணத்தை திருப்பிவிடும் பங்குச் சந்தையில், இந்த ஓய்வூதிய நிதி முதலீடு செய்யப்படுகிறது என்கிறது அந்த கடிதம்.  இந்த ஓய்வூதிய திட்டத்தை திணிப்பதன் மூலம், அரசு ஊழியர்களிடையே இரண்டு பிரிவினரை உருவாக்குகிறது அரசு.  அதில் ஒரு பிரிவினரை நிச்சயமாக உறுதி செய்யப்படாத சந்தை சார்ந்த விளைவுகளுக்குள் தள்ளிவிடுகிறது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் கொண்டுவரப்பட்டவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் எவ்வளவு என்று உறுதிசெய்யப்படவில்லை.  ஆனால் அதே நேரத்தில் அவர்களில் ஒரு பகுதியினரான ஏற்கனவே உள்ள பழைய ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப் படுவதுடன், அவர் மறைவுக்கு பிறகு அவரது சட்டப்படியான வாரிசுகளுக்கு அந்த ஓய்வூதியம் கிடைத்திட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வு காலத்தில் அவர்களுக்கான வாழ்க்கை ஆதாரமான பணவீக்கத்தை ஈடுகட்டிவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை பறித்துவிடும் என்று அவர்கள் மத்திய நிலைக் குழுவிடம் முறையிட்டனர்.

தொழில்துறையிலிருந்து நெருக்கடி

ஆனால் இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தை உருவாக்கவும் ஓய்வூதிய சீர்திருத்திவரும் தொழில்துறை நிபுணர்களும், வர்த்தக கூட்டமைப்பும் ஆதரவு தெரிவிப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.  அரசும், தொழில்துறையினரும் முன்வைக்கும் ஒரே வாதம், தற்போதைய வரைமுறைப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் அரசின் நிதியில் பெரும்பங்கு மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படுகிறது என்பதுடன், இது நீடித்திருக்க சாத்தியமில்லை என்பதுடன், அதன் காரணமாக சமூக நலத்திட்டங்களை நாட்டின் எளியவர்களுக்கு கொண்டு செல்ல இயலவில்லை என்பதுதானாம்.

2006ம் ஆண்டு உண்டாக்கப்பட்ட 6வது ஊதியக் குழு, ஓய்வூதியதாரர்களுக்கான நிதி நிலையை ஆய்வு செய்து மாற்று வழிமுறைகளை உருவாக்க ஆலோசனை கூறியுள்ளது.  “இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தியதால் ஏற்கனவே உள்ள திட்டம் சிக்கலுக்குள்ளாகிறது என்பதுடன், ஓய்வூதிய திட்டத்தில் மேலும் சீரமைப்பு என்பது மேலும் பல சிக்கலை உண்டாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது”.

ஆனால், அமைச்சரவை, நிலைக் குழுவின் யோசனையை / எச்சரிக்கையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு புதிய ஓய்வூதிய திட்ட அறிமுகத்தை நியாயப் படுத்துகிறது.  மற்றொருபுறம் புதிய ஓய்வூதியதாரர்கள், இந்த நிதியை எங்கு முதலீடு செய்வது என்பதை தீர்மானிக்கும் நிலையில் இல்லாததால், எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் அது எப்போது கிடைக்கும் என்றே தெரியாத நிலையில் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.  இந்த நிதி முதலீடு எங்கு முதலீடு செய்யப்படும் என்பது, புதிய ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள வழிமுறைகள், விதிகளுக்குட்பட்டே  முடிவெடுக்கப்பட்டு முதலீடு செய்யப்படும்.

உதாரணமாக, அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த குழுவின் முதல் ஆலோசனை, அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் சந்தாதாரர் எங்கு தனக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறதோ, அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் அனைத்து திட்டங்களும், இந்த ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுவிட்டது,  அவை அனைத்தும் உறுதி சொல்லப்படும் வரவை கொடுக்குமா அல்லது விலைவாசி உயர்வை சமன் செய்யுமா என்பதற்கு உறுதியில்லை.

மேலும் இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டம், சந்தாதாரர் எத்தனை முறை, பணம் எடுப்பது, நோக்கம் மற்றும் எடுக்கும் அளவு குறித்து தீர்மானிக்கும் உரிமையை தன்னிடம் வைத்துள்ளது.  இந்த மசோதாவில் உள்ள ஒரு திருத்தம், ஒரு சந்தாதாரர், அல்லது மொத்த வைப்பிலிருந்து 25 சதமானத்திற்கு மேல் தனது கணக்கிலிருந்து ஓய்வூதியம் எடுத்துக் கொள்ள முடியாது.  எதிர்பாராத அவசர காலத் தேவைக்காக சந்தாதாரர்கள் தேவைப்படும் போது பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் சில சலுகைகளை நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.  மேலும், சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதியத்திற்கான சந்தாவை, அரசின் பங்கில் 100 சதம் முதலீடு செய்ய உரிமை வழங்கி ஒரு திருத்தம் கொடுத்துள்ளது.  ஆனால், குழுவின் இந்த இரண்டு ஆலோசனைகளையும் அமைச்சரவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.  ஓய்வூதிய திட்டத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதலே தற்போதுள்ள மற்றொரு கவலை.  அதே நேரத்தில், இந்த திட்டத்தின் கீழ், “ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அமைப்பு” நெறிமுறைகளை வகுக்க ஆலோசனை கூற, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளவர்களின் பிரதிநிதிகளை கொண்ட, “துடிப்புள்ள ஓய்வூதிய ஆலோசனை குழு” ஒன்றை அமைப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

“உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசின் செலவினங்கள் குறைக்கப்படுவதில், ஓய்வூதியமும் அடங்கும்” தொழிலாளர்கள் இந்த பிரச்சனைகள் மீது வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  ஓய்வூதியத் திட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு செய்தால், இந்தியாவின் எளியவர்கள் பயனடைவார்கள் என்பது நகைப்புக் குரியதாக உள்ளது.  நிதி நாட்டுக்குள் வரும் என்றில்லாமல், நாட்டை விட்டு பணம் அதிகமாக வெளியே போவதுதான் சாத்தியம்” என்கிறார் ராஜ்ய சபை உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியை சேர்ந்த திரு டாபன் சென்.  இவர் இந்திய தொழிற்சங்க மையத்தின் பொதுச் செயலாளர் ஆவார்.  குறிப்பாகச் சொல்லப்போனால், நிலைக்குழு பரிந்துரைத்த பல்வேறு ஆலோசனைகள் மந்திரிசபை ஏற்கவில்லை.  இந்த ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொதுத்துறை நிறுவனத்தில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற இந்த குழுவின் யோசனை கூட ஏற்கப்படவில்லை.  இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அமைப்பு தற்போதைய அடிப்படை நிலையிலிருந்த ஆய்வில் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து ஒரே ஒருவரை மட்டுமே இந்த அமைப்பில் நிதி மேலாளராக வைத்துக் கொள்ளலாம் என்றும், அது காலப்போக்கில் நடைமுறையின் அடிப்படையில் விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்று விதி வகுத்துள்ளது என்ற அடிப்படையில் இந்த ஆலோசனையை அமைச்சரவை நிராகரித்துவிட்டது.

அமைப்புசாரா தொழிலில் உள்ள மக்களுக்கான சமூக பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு விரிவான சட்டம் இயற்றப்படவேண்டும் என இந்த குழு பரிந்துரைத்தது.  இந்த நிலைக்குழு அந்நிய நேரடி முதலீட்டை ஆதரிப்பதாக இருந்தாலும், ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரை, முதலீடு என்பது நாட்டிற்கு அப்பால் செல்லாத வகையில், தற்போதைய காப்பீட்டுத் துறை முதலீடுகள் போல இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.  இந்த ஓய்வூதிய அமைப்பில் தொழிலாளர்கள் சார்பு அமைப்புகளின் பிரதிநிதிகளும், சந்தாதாரர்களும், சிறப்பு குழுவில் கூட்டு பிரதிநிதிகளாக ஏற்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தது.  அந்நிய நேரடி முதலீட்டை ஓய்வூதிய திட்டத்தில் 28 சதமானம் அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்தக் குழு அறிவுறுத்தியது.  ஏனென்றால், நிதித்துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் / தொழில்மைய அமைப்புகள் போன்றவற்றோடு, இந்த முதுமைக்கால ஓய்வூதிய நிதியை நிர்வகிப்பதை ஒப்பிட முடியாது”. நேரடி அந்நிய முதலீட்டை ஓய்வூதியத் திட்டத்தில் அனுமதிப்பது என்பதை, தற்போதைய சட்டத்தில் பொருத்தமான திருத்தங்கள் கொண்டுவந்த பின்னரே அமுல்படுத்த வேண்டும் என்றும் குழு தங்களது பரிந்துரையில் சிபாரிசு செய்துள்ளது.

இந்த திருத்தங்கள் மக்களவையின் ஒப்புதல் பெற வேண்டும்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைப்பில் உள்ள சில உறுப்பினர்களே இந்த நேரடி அந்நிய முதலீட்டிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.  எனவே, குறிப்பாக ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை ஏற்க மாட்டார்கள்.  பாரதீய ஜனதா கட்சியோ, நேரடி அந்நிய முதலீட்டை எதிர்த்தாலும், ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்திற்கும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஆதரவாக உள்ளது.  இடது சாரிகள் மட்டுமே இந்த ஓய்வூதிய நெறி மற்றும் விரிவாக்கத் திட்டத்திற்கும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், ஓய்வூதியத்தில் நேரடி அந்நிய முதலீட்டையும் எதிர்த்து நிற்பர் என்று தெரிகிறது.

_____________________________________________________________

நன்றி : டி.கே.ராஜலட்சுமி, ஃபிரண்ட்லைன்

தமிழில்சித்ரகுப்தன்

_____________________________________________________________________