Thursday, May 8, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக 15 மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் !

முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக 15 மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் !

-

ங்கள் உரிமைகளுக்காக போராடியதற்காக மாருதி நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட 546 தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் நிர்வாகத்தின் சார்பாக பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 149 தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் மாருதி சுசுகி தொழிலாளர்கள் யூனியன் பிப்ரவரி 5ம் தேதியை நாடு தழுவிய ஒருமைப்பாடு தினமாக அனுசரிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதைத் தொடர்ந்து 15 மாநிலங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.

1. டில்லி ஜந்தர் மந்தரில் 20 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. சிறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களை விடுவிக்குமாறு கோரும் விண்ணப்பங்கள் பிரதமருக்கும், ஹரியான முதலமைச்சருக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மறுபடியும் வேலைக்கு எடுக்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

மேலும் படிக்க

 

2. ஓசூரில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பில் ராம்நகர் அண்ணாசிலை அருகே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அவ்வமைப்பை சேர்ந்த பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன், மற்றும் ஆலைத் தொழிலாளி தோழர் வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் எழுச்சிமிகு சிறப்புரையாற்றினார். இறுதியாக இவ்வமைப்பின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த திரளான உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர் .

3. சென்னை மெமொரியல் ஹால் அருகில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் அ முகுந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரை ஆற்றினார்.