Thursday, October 1, 2020
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் தாக்கரேவின் தமிழ் அவதாரம் சீமான் !

தாக்கரேவின் தமிழ் அவதாரம் சீமான் !

-

பா.ம.க – ராமதாசு – வன்னிய சாதிவெறி போன்ற சொற்களே இல்லாமல், மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்ட பல மொண்ணை அறிக்கைகள் இளவரசன் மரணத்தையொட்டி வெளிவந்து கொண்டிருக்கின்றன. சீமான் வெளியிட்ட அத்தகையதொரு அறிக்கையை விமரிசித்து நாம் நேற்று முன்தினம் ஒரு பதிவு எழுதியிருந்தோம்.

அதற்குப் பின்னூட்டமிட்ட சிலர் வளைத்து வளைத்து பல வார்த்தைகளில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். “எல்லா கட்சிகளும் மழுப்பியிருக்கும்போது எங்கள் செந்தமிழனை மட்டும் ஏன் வறுக்கிறீர்கள்?”, “சாதிப்பூசல் வந்து தமிழர் ஒற்றுமை கெட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் காரணமாகத்தான் அண்ணன் பா.ம.கவை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை” – இதுதான் அவர்களுடைய லா பாயின்ட்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
இலை மலர்ந்தால் ஈழம் மலரும்

இனி விசயத்துக்கு வருவோம். சீமான் மீது நமக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. சொல்லப்போனால் அவருடைய பொதுக்கூட்டத்தை இந்து மதவெறியர்கள் தாக்கியபோது அதைக் கண்டித்து குரல் கொடுத்திருக்கிறோம். கருணாநிதி ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்ததை எதிர்த்தும் குரல் கொடுத்திருக்கிறோம். இதெல்லாம் சொற்ப காலம்.

2009 வாக்கில் ஈழப்பிரச்சினையை முன்வைத்து அவர் நடத்தத் தொடங்கிய இனவாத-சந்தர்ப்பவாத அரசியல், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பாசிச ஜெயாவுக்கு காவடி எடுத்தது, ஈழத்தை கோட்சே ஆதரித்தால் நான் கோட்சே கட்சி என்று கொள்கை விளக்கமளித்தது, மும்பை முஸ்லிம் இனப்படுகொலையை நடத்திய சிவசேனாவை ஆதரித்து தேர்தல் வேலை செய்தது, முத்துராமலிங்கத் தேவர் வழிபாடு .. என வெகு வேகமாக தன்னைத்தானே அவர் அம்பலமாக்கிக் கொண்டார். பிறகு பெரியார் எதிர்ப்பை மையமாகக் கொண்ட பார்ப்பன அடிவருடி அரசியலை, “திராவிட இயக்க எதிர்ப்பு” என்ற பெயரில் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனமாக வெளியிட்டார். பிறகு மூக்குடைபட்டு மழுப்பினார்.

சீமான் கடை விரித்து வருவது ராஜ் தாக்கரே பாணியிலான இனவெறி அரசியல். இதற்குப் பொருத்தமாக, பிழைப்புவாத லும்பன்களுக்கே உரிய சவடால் பேச்சை அவர் ஆயுதமாக ஏந்தியிருக்கிறார். இந்த சவடால் பேச்சின் காரணமாக அரசியல் எதிர்காலம் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவர்கள் தமிழினத்தின் எதிரிகள் அல்லர். சீமானுக்கு மூத்தவர்களான பல இனவாதிகள். சீமான் அளவுக்கு இவர்களுக்குத் தொண்டையில் தெம்பில்லை என்பது மட்டுமின்றி, விஜய்-தனுஷ் ரசிகர்களின் அறிவு மட்டத்திற்குப் பொருந்தும் விதத்தில் தமிழின விடுதலைக்கு திரைக்கதை வசனம் எழுதும் திறன் இவர்களுக்கு இல்லை.

“உலகம் உருண்டையானது” என்ற அறிவியல் உண்மையை வெளியிடுவதாக இருந்தாலும் கூட, தொண்டை நரம்பு புடைக்காமலோ, யாருக்காவது சவால் விடாமலோ, ஒரு கையால் தனது இன்னொரு கையை குத்தித் தள்ளாமலோ அவரால் அதனை வெளியிட முடியாது. “காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்கிறேன்” என்ற வரியை அவர் மேடையில் பேசினாலும், அது “மென்னியைப் பிடித்து கொன்று விடுவேன்” என்பதாக நம் காதில் ஒலிக்கும். காரணம் அவ்வளவு காரம், அவ்வளவு போர்க்குணம்.

சீமான்
அடுத்த பாயின்ட் என்னவென்று தெரியாமல் வாய்தா வாங்குகிறாரா, அல்லது அடுத்த குண்டு வீச்சை எதிர்கொள்ளும் திறன் கூடியிருக்கும் தமிழர்களுக்கு உள்ளதா என்று சர்வே எடுக்கிறாரா

வைகோவுக்கு ஒரு ஸ்டைல் இருக்கிறது. அவர் பேச்சின் இடையே தனது தோளில் கொள்கை உறுதியோடு விரைப்பாகத் தொங்கும் குவாலியர் சூட்டிங் பாண்ட் பிட்டை ஏற்றி இறக்குவார். சீமான் திரைப்பட இயக்குநர் என்பதால், தனது பேச்சின் ஒவ்வொரு வரி முடிந்த பின்னரும் ஒரு “சைலன்ட் ஷாட்” வைத்திருக்கிறார். அந்த சைலன்ஸ் என்பது புயலுக்கு முந்தைய அமைதிக்கு இணையானது. காமெராவின் பானிங் ஷாட் போல அவர் கூட்டத்தை ஒருமுறை பார்ப்பார். அடுத்த பாயின்ட் என்னவென்று தெரியாமல் வாய்தா வாங்குகிறாரா, அல்லது அடுத்த குண்டு வீச்சை எதிர்கொள்ளும் திறன் கூடியிருக்கும் தமிழர்களுக்கு உள்ளதா என்று சர்வே எடுக்கிறாரா என்று யாரும் கண்டுபிடிக்க முடியாது.

வலுவான செவிப்புலன் வாய்க்கப் பெறாத தமிழர்கள், சீமானின் கருத்துக்களால் நடுங்கும் ஸ்பீக்கர் செட்டைக் கூட எதிர்கொள்ள இயலாது. அதிகம் சொல்வானேன். ஏற்கெனவே வைகோவின் மைக் செட்டுக்கு இருந்து வந்த செல்வாக்கை சீமான் கட்டிய குழாய் விஞ்சி விட்டது.

இதன் காரணமாக அவர் தமிழின விடுதலைக்கான அடுத்த போர்வாளாக ஆனது மட்டுமின்றி, அடுத்த தமிழக முதல்வருக்கான காத்திருப்போர் பட்டியலுக்கும் வந்து விட்டார். இதன் காரணமாகத்தான் அவருடைய கருத்துகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டியிருக்கிறது என்பதை சீமானின் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி அவருடைய அறிக்கையின் வரிகளுக்கு வருவோம்.

“நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும், அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால், தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும், நம் இனத்தின் விடுதலையும், உரிமை மீட்பும் கேள்விக்குறியாகி விடும் என்பதை தமிழினத்திற்கு நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூற கடமைபட்டுள்ளது.”

சாதிய சக்தி“கள்” என்று சீமான் குறிப்பிடுகிறாரே, இளவரசனையும் திவ்யாவையும் பிரித்த சாதிய சக்தி பா.ம.க மட்டும்தானே. அங்கே “கள்” ளுக்கு வேலை என்ன? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக “பிராமணர் முதல் தேவர்-நாடார் வரையிலான” சாதிச் சங்கங்களை ஒன்றிணைத்து மாமல்லபுரத்தில் விழா நடத்தியது வன்னியர் சங்கம்தானே!

உலகத்துக்கே தெரிந்த இந்த உண்மையை சீமான் கூறாமல் தவிர்ப்பதற்கு காரணம், தமிழின ஒற்றுமை மீது அவருக்கு இருக்கும் அக்கறையாம். இதன்படி ஆர்.எஸ்.எஸ்ஸை இந்து மதவெறியர்கள் என்றோ, தாலிபானை இசுலாமிய மதவெறியர்கள் என்றோ சொல்வது தவறு. மதவாத சக்திகள் என்றுதான் சொல்லவேண்டும். வெளிப்படையாக சொல்லவில்லையே தவிர பா.ம.க தான் அந்த சாதிய சக்தி என்பதில் அண்ணன் தெளிவாகத்தான் இருக்கிறார் என்கிறார்கள் பின்னூட்டம் போடும் அவருடைய தம்பிகள்.

மாமல்லபுரம் சாதி வெறியர்கள் மாநாட்டில்
மாமல்லபுரம் சாதி வெறியர்கள் மாநாட்டில்

“ஆழம்” மாத இதழில் (ஜூலை 2013) சீமானின் பேட்டி வெளிவந்துள்ளது. அதில் அண்ணனுடைய அறிவின் ஆழம் அன்டார்ட்டிக்கா வரை செல்கிறது. “ஒரு மாநில அரசு (ஈழப்பிரச்சினையில்) இதற்கு மேல் என்ன செய்திருக்க முடியும்?” என்ற கேள்விக்கு கீழ்வருமாறு பதிலளிக்கிறார் சீமான் :

“நானோ, ஐயா ராமதாஸோ, அண்ணன் திருமாவளவனோ முதலமைச்சராக இருந்திருந்தால் இலங்கையில் யுத்தமே நடந்திருக்காது! மலையாளி மலையாள மண்ணையும், கன்னடன் கன்னட மண்ணையும், தெலுங்கன் தெலுங்கு மண்ணையும் ஆள்வதைப் போல, ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆண்டிருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் நடத்தும் துணிவே இந்திய அரசுக்கு வந்திருக்காது. அப்படி நடத்த முற்பட்டிருந்தால் இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருந்திருக்காது!”

“நான் வன்னியன்” என்று ராமதாசு தெளிவாக பிரகடனம் செய்த பிறகும், அவரால் ஏத்தி விடப்பட்ட சொந்தங்கள் “நாங்கள் பல்லவ பரம்பரை” என்று கூறி மாமல்லபுரம் கோயில் மீது டான்ஸ் ஆடியபிறகும், நத்தம் காலனி தாக்குதல், மரக்காணம் தாக்குதல் என்று சாதிவெறித்தனங்களை அடுத்தடுத்து அரங்கேற்றிய பிறகும், சாதிச் சங்க கூட்டணி அமைத்து திராவிட இயக்கத்தை தமிழகத்தை விட்டு ஒழிப்பேன் என்று ராமதாசு சபதம் போட்ட பிறகும், “அவர் டம்லர்தான். அவர் ஆட்சியில் இருந்தால் ஈழத்து டம்லர்களையும் காப்பாற்றியிருப்பார்” என்கிறார் சீமான்.

“வட தமிழ்நாட்டை தனியாகப் பிரி. அப்போதுதான் வன்னியர் முதல்வராக முடியும்” என்கிறார் மருத்துவரய்யா. அய்யா முதல்வராக இருந்திருந்தால், இந்திய அரசை எதிர்த்து தமிழ் நாட்டையே தனிநாடு ஆக்கியிருப்பார் என்கிறார் சீமான். குச்சு கொளுத்தி என்று தாழ்த்தப்பட்ட தமிழர்களிடம் பட்டம் பெற்ற மருத்துவரய்யா, வன்னியில் கதறிய ஈழத்தமிழரை காப்பாற்றியிருப்பாராம்.

இப்படி சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட வன்னியரல்லாத அந்நியத் தமிழர்கள் காறித்துப்பி விடுவார்கள் என்பதால், முதல்வர் பதவியை திருமாவுக்கும் தனக்கும் வழங்கிக் கொள்கிறார். “உயிரைப் பணயம் வைத்து” ஈழம் சென்று வந்த வைகோ வடுகர் என்பதால் அவருக்கு இந்த முதல்வர் பட்டியலில் இடம் கிடையாது.

ஏனென்றால் ஈழத் தமிழனுக்கு நேரும் துன்பம் கண்டு துடிக்க வேண்டுமென்றால், உங்கள் உடம்பில் தெலுங்கு, மலையாளி, கன்னட கலப்பில்லாத தமிழ் ரத்தம் ஓட வேண்டுமாம். அப்படிப்பட்ட தமிழ் ரத்தம் கொங்கு ஈசுவரன், சேதுராமன், பொன் இராதா கிருஷ்ணன், அர்ஜுன் சம்பத் போன்றோரின் உடலில்தான் ஓடுகிறதாம். ஏனென்றால் இவர்களெல்லாம் தமிழ்ச் சாதிகளாம்!

ஆல் இன் ஆல் அழகுராஜா
இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது

பெரியார்தாசன் சொல்லும் ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. “தமிழனுக்கு அறிவு இல்லை, தமிழனுக்கு மானம் இல்லை” என்று என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள். எவனும் கேட்கமாட்டான். “செட்டியாருக்கு அறிவில்லை, தேவருக்கு மானமில்லை” என்று சொல்லிப் பாருங்கள். நீங்கள் வீடு போய் சேர முடியாது. இங்கே செட்டியாரும் முதலியாரும்தான் இருக்கிறான். தமிழன் இல்லை” என்பார்.

தமிழன் தன் பெயருக்குப் பின்னால் ஒட்ட வைத்திருந்த சாதியைக் கத்தரித்தார் பெரியார். வன்னியத் தமிழன், கவுண்டத் தமிழன் என்று “தமிழ்ச்சாதி”களை உருவாக்கி வரும் இந்த “நாம் தமிழர்கள்”, பெரியார் மரபை ஒழித்துக்கட்டி தமிழின உணர்வை உருவாக்கப் போகிறார்களாம்! பார்ப்பனியம்-சாதியம் என்ற இந்த விளக்குமாத்துக்கு தமிழின உணர்வு என்றொரு பட்டுக் குஞ்சம்!

வினவு, பா.ம.க வின் பெயரைச் சொல்லி சாதி வெறியர்கள் என்று சாடினால், தமிழர்களைப் பிளவு படுத்துவதாக குதிக்கிறார்கள் “நாம் டம்லர்” தம்பிகள். நாம் மட்டுமா? நத்தம் காலனி தாழ்த்தப்பட்ட மக்கள் ராமதாசின் பெயரைச் சொல்லித்தான் மண்ணை வாரி இறைக்கிறார்கள். நாடே காறித் துப்புகிறது. எனில் நத்தம் காலனி மக்கள் தமிழினத் துரோகிகளா, காடு வெட்டி குருதான் தமிழினப் போராளியா?

அண்ணன் இதனைத் தெளிவாக விளக்குகிறார். “பரமக்குடி, தர்மபுரி, மரக்காணம் கலவரங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?” என்ற ஆழம் பத்திரிகையின் கேள்விக்கு சீமானின் பதில் இது:

“எங்கள் தமிழினப் பிள்ளைகளிடையே சாதியப் பிரிவினையை உண்டு பண்ணுகிற அரசியல் மேலாதிக்க சக்திகள்தான் இதற்கெல்லாம் காரணம்… இந்த திராவிடக் கட்சிகளின் தலைமை எதுவும் இங்கே ஒரு சாதிய வேரோ இங்கே ஓர் ஆழமான உறவு வேரோ இல்லாதவை! பள்ளரையும் பறையரையும் மோதவிட்டு, படையாட்சியையும் பறையரையும் மோதவிட்டு அரசியல் செய்தால்தான் இவர்கள் பிழைப்பு நடத்த முடியும்… நான் முதலமைச்சரானால், “என்னப்பா.. இமானுவேல் நம்ம ஐயாப்பா. தேவரும் நம்ம ஐயாப்பா. ரெண்டு பேருமே நம்ம பாட்டன்யா. போய் அவங்கள சாமியா நெனச்சி கும்பிட்டு வாய்யா. நமக்குள்ள சண்டை போட்டுக்கிடறது பைத்தியக்காரத்தனமில்லையா. வாய்யா கிருஷ்ணசாமி, வாய்யா சேதுராமன் ரெண்டு பேரும் ஒண்ணா போய்க் கும்பிடுங்க. நானும் உங்களோட வரேன்” என்று சமாதானம் செய்து வைப்பேன்.” என்கிறார்.

“அப்படீன்னா இதுதான் மான்டிலாண்ணே? ஆமாண்டா, இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது!”

அழகுராஜா தத்துவத்தின் படி வெட்டுன தேவரையும் வெட்டுப் பட்ட இமானுவேலையும் கும்பிட வைப்பாராம். மேலவளவு முருகேசனை தேவமார்கள் கும்பிடணும். அவரை வெட்டிய தேவர் சாதிவெறியர்கள் அம்புட்டுப் பேரையும் தாழ்த்தப்பட்டவர்கள் கும்பிடணும். இளவரசனை சின்னய்யா கும்பிடணும். காடு வெட்டி குருவுக்கு நத்தம் காலனியில கோயில் கட்டணும்.

“இவ்வளவு அருமையான திட்டம் அண்ணன் கையில் இருக்கையில தெக்கு வடக்கு தெரியாம நாம தவிச்சுகிட்டிருக்கோமே, அண்ணன் இப்பவே இதை செஞ்சு காட்டிரலாமே” என்று நீங்கள் நினைக்கலாம்.

செஞ்சிருவாரு. ஆனால் அதுக்கு முன்னாலே நீங்க ஒரு சின்ன வேலை செய்யணும்னு அண்ணன் சொல்லியிருக்காருல்ல, அதக் கவனிங்க. அண்ணனை நீங்க முதல்வராக்கணும். அப்பதான் அவரால சமாதானம் செய்து வைக்க முடியுமாம். தமிழனுக்கு தமிழுணர்வு வந்து அவன் ஓட்டுப் போட்டு, அண்ணன் தனிப்பெரும்பான்மை பெற்று முதல்வராகி அப்புறம்தான் சாதிச் சண்டையை நிறுத்தணும்னா, தமிழினம் எந்தக் காலத்திலயும் விடுதலை பெறவே முடியாது. அண்ணனை முதல்வராக்குறது தமிழுணர்வாளர்கள் பொறுப்பு. தேர்தல்ல நின்னாதான் முதல்வராக முடியுமா என்ன? அதிரடிப்படை -2 மாதிரி முதல்வன் -2 எடுக்கச் சொல்லி இயக்குநர் சங்கர் கிட்ட கேட்டுப் பாக்கலாமே.

செந்தில்
மலையைத் தூக்கி தோள்ல வையி. தூக்கி காட்டுறேன்

பழைய காமெடியா யாவகத்துக்கு வருதே! ஊர்க்காரங்கள்ட்ட காசு வசூல் பண்ணிட்டு, மலையைத் தூக்கி தோள்ல வையி. தூக்கி காட்டுறேன்னு சொல்வாரே செந்தில், அதே காமெடிதான். இது ரீமிக்ஸ்.

திராவிடக் கட்சிகளுக்கு இங்கே தமிழ்ச் சாதிய வேர் இல்லையாம். அந்த காரணத்தினாலதான் திராவிட இயக்கம் தமிழ்ச் சாதிகளை மோதவிடுதாம். இப்போ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்னியர்களையும், பிற ஆதிக்க சாதிகளையும் தூண்டுவது யார்? கருணாநிதியா, வைகோவா, விஜயகாந்தா, ஜெயலலிதாவா? வன்னியர், கவுண்டர், தேவர் என்று இங்கே தமிழ் வேர் உள்ள சாதிகள்தானே தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குகிறார்கள். அது ஒடுக்குமுறை இல்லையாம், தமிழர்களுக்குள் மோதலாம்.

சீமான் கூறுவதற்கு நேர் எதிராகத்தான் இருக்கிறது எதார்த்தம். நேர் எதிராகத்தான் இருக்கிறது மக்கள் கருத்து. இங்கே வேரோ ஆள்பலமோ இல்லாத சாதிக்காரன் கட்சித் தலைவனாக இருந்தால்தான் ஓரளவு நடுநிலையாக இருப்பான் என்ற கருத்தின் அடிப்படையில்தான் எம்ஜியார், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் தமிழகத்தின் முதல்வர் பதவிக்கு கொண்டுவரப்படுகின்றனர். சீமானுக்கு புரியும் மொழியில் சொல்வதன்றால், “வன்னியத் தமிழனையோ, கவுண்டத் தமிழனையோ, தேவர்குலத் தமிழனையோ நம்ப முடியாது. வடுகர் கருணாநிதியை, மலையாளி எம்ஜியாரை, கன்னடத்து ஜெயாவை நம்பலாம்” என்று பெரும்பான்மைத் தமிழர்கள் கருதுகின்றனர். இது தாழ்த்தப்பட்ட மக்களின் கருத்து மட்டுமல்ல, வன்னியரைப் பள்ளி என்று ஏசும் கவுண்டர் முதல் தேவர், கள்ளர், நாடார் உள்ளிட்ட அனைத்து சாதிகளும் ஒருவரைப் பற்றி ஒருவர் வைத்திருக்கும் கருத்து இதுதான்.

மற்ற சாதிக்காரனை நம்ப முடியாது என்கிறான் ஒரு சாதித் தமிழன். சாதிய உணர்வின் பிச்சையில் தமிழன உணர்வுக்கு வாழ்வு கொடுக்கிறான் வேர் உள்ள சாதித் தமிழன். இப்பேற்பட்ட தமிழுணர்வுதான் புரட்சியை சாதிக்கும் என்கிறார் சீமான்.

இந்தக் கேவலமான நிலைமை குறித்து நமக்கு மகிழ்ச்சியோ, வருத்தமோ கிடையாது. கல்லானாலும் தமிழன் மிதிக்கும் கல்லாவேன், மரமானாலும் தமிழன் வெட்டும் மரமாவேன் என்பது நம் கொள்கையல்ல. அது இனவாதிகளின் கொள்கை. மதிப்பாகச் சொல்லிக் கொண்டால் – தமிழினவுணர்வு.

திராவிடக் கட்சிகளைச் சாடி விட்டு, சாதிய வேர் உள்ள தமிழர்களின் கட்சிகளுக்கு வருகிறார் சீமான். “ராமதாஸ் அய்யா கடந்த காங்கிரசு ஆட்சியில் ஈழப்படுகொலைகள் நடந்த போதே அதைக் கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியிருந்தாலோ, அண்ணன் திருமாவளவன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து நின்றிருந்தாலோ நான் அவர்கள் பின்னால் நின்றிருப்பேன். நாம் தமிழர் கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியமே வந்திருக்காது”

கருணாநிதி ஈழத்தமிழருக்கு துரோகம் செய்தது கிடக்கட்டும், பச்சைத் தமிழ் இரத்தம் உடம்பில் ஓடும் ராமதாசும், திருமாவும் ஏன் பதவி விலகவில்லை? ஈழத் தமிழினத்தின் இனப்படுகொலைக்கு இவர்கள் இருவரும் துணை நின்றார்கள் என்பது சீமானின் முதல் குற்றச்சாட்டு. இந்தக் குற்றத்தின் உடன் விளைவாக நாம் தமிழர் என்றொரு கட்சியை துவக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள் என்பது, அவர்கள் மீது சீமான் வைக்கும் இரண்டாவது குற்றச்சாட்டு.

முதல் குற்றம் முடிந்து விட்டது. இரண்டாவது குற்றத்தின் விளைவை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. ////திராவிடக் கட்சிகளைச் சாடி விட்டு, சாதிய வேர் உள்ள தமிழர்களின் கட்சிகளுக்கு வருகிறார் சீமான். “ராமதாஸ் அய்யா கடந்த காங்கிரசு ஆட்சியில் ஈழப்படுகொலைகள் நடந்த போதே அதைக் கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியிருந்தாலோ, அண்ணன் திருமாவளவன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து நின்றிருந்தாலோ நான் அவர்கள் பின்னால் நின்றிருப்பேன். நாம் தமிழர் கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியமே வந்திருக்காது”///////////

  தான் சாதி சமுதாயத்தில் ஒரு பெண் பிரச்சனை என்றதும் சாதி கூட்டம் போட்ட ராமதாஸ், ஈழத்தில் நடந்த இனபடுகொலை நடகும் போது அப்படி ஒரு மாநாடு, கூட்டம் ஏன் நடத்த வில்லை, தான் “ஜாதி என்றால் முக்கியம் தமிழன் என்றால் முக்கியம் இல்லை அப்படிதானே” என்று சீமான் பதிவு செய்ததை ஏன் இங்கு பதிவு செய்யவில்லை

  • சீமான் ஏன் ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு போன்ற காட்டுமிராண்டிகளைப் பற்றி தனது அறிக்கையில் பதிவு செய்யவில்லை என்று நீங்கள் கூற வேண்டும், நீங்கள் மிகவும் நேர்மையானவர் என்பதால் பதில் கூறாமல் இருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

   • ////சீமான் ஏன் ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு போன்ற காட்டுமிராண்டிகளைப் பற்றி தனது அறிக்கையில் பதிவு செய்யவில்லை ////
    இந்த அறிக்கை சாதி வெறிகளை பற்றியது இல்லை… இறந்து போன இளவரசன் கான அறிக்கை அது…….. சதிகளினால் நடகபடும் கொலை இது அல்ல முதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது…. உங்கள் கருத்தை பார்த்தல் சீமான் சாதி வெறி புடிதவர்களை பற்றி எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்று சொல்லுவது போல் உள்ளது….. you tube இல் தேடி பாருங்கள் தெர்யும், சீமான் பேசியதை பற்றி…… உங்கள் கேள்வி??? இவன் பெசியர்துகு அறிக்கை கொடுக்க வில்லை, அவன் பேசியதற்கு அறிக்கை கொடுக்க வில்லை………. நாம் தமிழர் என்பது எல்லா சாதிகளை வெறுப்பது அது எந்த சாதிக்கும் விதி விலக்கு இல்லை…

    • இல்லை விதிவிலக்கு உண்டு, நீங்கள் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இதை அப்படியே இன ஒடுக்குமுறைக்கு பொருத்தி எல்லா இனமும் சமத்துவமா இருக்கனும் இனங்கள் சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா ? ஒடுக்குகிற இனத்தை கண்டிக்காமல் இப்படி ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுபவனையும் ஒன்றாக்கி பேசுவது எப்படி சரியாக இருக்கும். இனத்திற்கு எப்படியோ அப்படித்தான் சாதிக்கும் ஒடுக்கும் சாதியையும் ஒடுக்கப்படும் சாதியையும் ஒரே தட்டில் வைத்து சாதியை ஒழிப்போம் என்று சபதமேற்பதும், அறிவுரை கூறுவதும் அயோக்கியத்தனம் ஆகும்.

     இன ஒடுக்குமுறை என்று வரும் போது மட்டும் சிங்களம் ராஜபக்சே என்று பேசும் முறுக்கும் சீமான், சாதி ஒடுக்குமுறையிலும் அப்படி பேச வேண்டியது தானே ? அங்கே பேசுபவர் இங்கே ஏன் பேச மறுக்கிறார் என்று தான் கட்டுரை கேட்கிறது.

     • /////ஒடுக்குகிற இனத்தை கண்டிக்காமல் இப்படி ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுபவனையும் ஒன்றாக்கி பேசுவது எப்படி சரியாக இருக்கும்////
      அந்த மக்களை ஓடுகிறவன் என்று சொல்லி இட ஒதுகிடு என்று பிச்சை போட்டு அந்த மக்களுக்கு சரியான கல்விகளை கொடுக்க துப்பு இல்லாமல்.. 60 வருடனகல்க வைத்து விட்டு… ஒடுக பட்டவன் ஒடுக பட்டவன் என்று சொல்லி கொண்டு இருபது நல்ல இருக்குதுல… இப்படி தொடரட்டும் நல்ல இருக்கும்… அன்று காமராஜர் என்ற ஒருவர் இல்லை என்றால் தமிழ் நாட்டில் 70% ஒடுக பட்டவர்கள் தான் எனையும் சேர்த்து….. ஒடுக பட்டவர்கள் ஒடுக பட்ட்வர்கர் என்று எதனை நாள் சொல்லி கொண்டு இருக்க போகிறோம்… அதைவைத்து அரசியல் பனுகிரவன் பண்ணி கொண்டு தான் இருப்பான்… இந்த கதைகளுக்கு முற்று புள்ளி எப்படி வைப்பது… அந்த மக்களை சமமாக பற்பத்த இல்லை ஒடுக பட்ட்வர்கர் என்று சொல்லுவதா???…

    • சீமானை நம்பும் தமிழர்களே!

     நாமெல்லாம் ஒரே மதம்,
     நாமெல்லாம் ஒரே சாதி,
     நாமெல்லாம் ஒரே தேசம்,
     நாமெல்லாம் ஒரே இனம்,
     நாமெல்லாம் ஒரே மொழி,
     என்று அரசியல் செய்தவர்கள் அனைவரும் மக்களை ஏய்க்கத்தான் இப்படி பேசுகிறார்கள்.
     அது மக்களுக்கு கடுகளவும் உதவாது.

     பிறகு கட்டபொம்மனும், எட்டப்பனும்

     ஒரே மொழி தான் அதற்காக இவர்களை ”நாம் தமிழர்கள்” என்று சேர்க்கமுடியுமா?

     ஆனால் சேர்க்க சொல்கிறார் சீமானு.
     என்ன ஒரு பித்தலாட்டம்!!
     சிந்தியுங்கள் இல்லையேல் ஏமாற்றப்படுவீர்கள்!
     அதுவும் விரைவில்!

     • அட அறிவாளிகளே, தமிழர்கள் என்று இனைய சொல்லுவது எல்லாரயும், அனால் துரோகிகள், கள்ளன், கொலைகரன் இவர்களை பிரித்து இனம் காண வேண்டியது அனைவரின் கடமை , இதை குட பிரித்து காண தெரியவில்லை என்றால் உங்கள் என்ன சொல்ல??? தமிழர்களை 100% எடுத்தல் நீங்கள் குறிப்பிட்ட சதவித மக்கள் 4-5% தான் வருவார்கள், அதனால் அவர்களை பிரித்து பார்க்க நம்மால் முடியும்… இதை புரிந்து வைத்து சொல்லுங்கள்……..

 2. ////சொல்லப்போனால் அவருடைய பொதுக்கூட்டத்தை இந்து மதவெறியர்கள் தாக்கியபோது அனைக் கண்டித்து குரல் கொடுத்திருக்கிறோம்////

  சாதியை வைத்து அரசியல் செய்கிறவர்களை சீமான் தான் போது மேடை களில் எல்லாம் தான் எதிர்ப்பை சரியாக பதிந்துள்ளார்… you tube இல் சீமான் பேசுக்கள் எல்லாம் உள்ளது, தேடிபருங்கள் தெரியும்…..

  • தர்மபுரியில் தலித் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட கலவரத்தை உருவாக்கிய ராமதாசைப் பற்றி பேசியிருக்கிறாரா, தென் மாவட்டத்து தேவர் சாதி வெறியர்களைப் பற்றி பேசியிருக்கிறாரா, முத்துராமலிங்கதேவர் என்கிற சாதிவெறியனைப் பற்றி பேசியிருக்கிறாரா ? இருந்தால் கொடுங்கள் கேட்போம்.

   • பதிக்க பட்ட மக்களுகாக அவர் போராட்டம் நடத்தி உள்ளார்…நேராக சென்று பார்வை செய்தும் உள்ளார்… நன் திருன்பவும் சொல்லுகிறேன்… சாதி மறுப்பு என்பது இன சாதி அந்த சாதி என்று இல்லை ஒட்டு மொத்த சாதியை மறுப்பது, ஒழிப்பது என்பது… அதனால் இவரை குறித்து பேசி இருக்கற, அவரை குறித்து பேசி இருக்கற என்பது விட்டுவிட்டு ஒட்டு மொத்த சாதி சமுதாயத்தை ஒலித்து பேசினார் பேசுகிறார் என்பதுதான் உண்மை………

    • அதை தான் யார் வேண்டுமானாலும் பேசலாமே ஏன் என்றால் அது வசதியானது. பா.ஜ.க கூட தான் சாதியை ஒழிக்கப்போறேன்னு சொல்றான். முத்துராமலிங்க தேவர் சாதிவெறியரா இல்லையான்னு முதல்ல சொல்லுங்க.

     • ///முத்துராமலிங்க தேவர் சாதிவெறியரா இல்லையான்னு முதல்ல சொல்லுங்க.////
      இவர சதி வெறியர், சதி வெறியர் இல்லை என்று நான் எதற்கு சொல்லணும் சொல்லுங்கள்???…..

  • சீமான் ஆதிக்க சாதிகளை எதிர்த்து தலித் மக்களுக்கு ஆதரவாக இதுவரை எங்கேயும் பேசுவதில்லை, இப்போது இளவரசன் பிரச்சினையிலும் ராமதாஸ் மனம் ப்ன்படாமல் தான் பேசியுள்ளார். இனப் பிரச்சினையில் ராஜபக்சே என்று கூவத் தெரிந்தவருக்கு இதில் ராமதாஸ் பெயர் ஏன் மறந்து போனது ?

   • ராஜபக்சே வந்து நேரே கேள்வி கேக்க போறதுல்ல, அதனால ஏய் ராஜபக்சேனு முஸ்டிய தூக்கி அறைகூவல் விடலாம். ஆனா ராமதாசு பக்கத்துலையே இருக்காரெய்யா!!!! அத நீங்கல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம பேசுனா எப்படி? பில்டிங் என்னவோ ஸ்ட்ராங்கு தான் ஆனா பேஸ்மட்டம் பத்தி நாம சொல்லவேணாம்

    • இளவரசனே தன கடிதத்தில் யார் பெயரையும் குறிப்பிடவில்லை.. நினைவில் கொள்ளுங்கள்..

   • பல தடவை சொல்லியாச்சு .

    உனக்கு தப்பு சொல்ல வேண்டும். நல்லா சொல்லு..

    • இளவரசனை கொன்னது பா.ம.க.வின் வன்னிய சாதிவெறி இதைச் சொல்ல உங்க அண்ணன் சீமாருக்கு துப்பு இல்லை அதை ஒத்துக்க வேண்டியது தானே.

     • மரக்காணத்தில் அப்பாவிகளை யார் கொன்றது ?

      அதை சொல்வதற்கு உனக்கும் வினவுவுக்கும் துப்பில்லை..

   • ///சீமான் ஆதிக்க சாதிகளை எதிர்த்து தலித் மக்களுக்கு ஆதரவாக இதுவரை எங்கேயும் பேசுவதில்லை, இப்போது இளவரசன் பிரச்சினையிலும் ராமதாஸ் மனம் ப்ன்படாமல் தான் பேசியுள்ளார்.///
    இப்படி சாதி சாதி என்று சொல்லி கொண்டு இருக்குங்கள், சீமானை கொற்றம் சொல்லி கொண்டு இருங்கள்…. ஒரு குடும்ப பிரச்சனயை சாதி பெயர் சொல்லி தெருவுக்கு கொண்டு வது வீடேர்கள்…. இதுல சீமான் அறிக்கை விடல அதுதான் முக்கியம்… இதற்கு சீமான் சாதி வெறியன் என்று பட்ட பெயர் வேற நல இருக்கு

 3. ////தாக்கரேவின் தமிழ் அவதாரம் சீமான் !////

  ஒரு கொலைகரன் உடன், மக்களுகாக போராட்டம் நடத்தி இறுதி வரை மக்களுகாக நிற்கும் ஒரு சமுதாய போராளியை.. கொலை கொள்ளை கார “தாக்கரே” கூட்டத்துடன் சேர்த்து பேசுவதை என்ன சொல்ல… முட்டாள் தனத்தின் உச்ச கட்டம்….

  • செந்தமிழன் சீமானே மராத்திய இனவெறியர்களை ஆதரித்து பேசியிருக்கிறார், தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டிருக்கிறார் இதெல்லாம் உங்கலுக்கு தெரியாதா நண்பரே ?

   • இல்லை நண்பா, அங்கு உள்ள தமிழர் களுக்கு ஆதரித்து பேசினார், அந்த மராட்டிய தாக்ரே கட்சி கொடியை மேடையில் இருந்து இறகிடுடன் தான் அவர் மேடையில் ஏறி பேசினார்… அதுவும் காங்கிரஸ் யை விழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள்காக தான்… பல்தரே வை ஆதரிக்கும் என்ற எண்ணம் துளிகூட இல்லை…. அதை புரிந்தால் போதும் இல்லை என்றால் இப்படி தேவை இல்லாத விமர்சன்கள் வந்து கொண்டு தான் இருக்கும்…

    • அப்படியானால் நாலை மோடியுடன் மேடை ஏறுவார், ஏன் இந்த சாதிவெறியன் ராமதாசுடனும் மேடை ஏறுவார் ஆனால் அவரை ஆதரிக்கும் எண்ணத்துடன் அல்ல.

     • அரசசியலில் ஒருவரை ஒறெயடியாக எல்லாவற்றிற்கும் எதிர்க்க வேண்டுமென்பதில்லை.

      நல்ல விடயங்கள் செய்தால் , சொன்னால் பாராட்டலாம் தப்பில்லை.

   • தமிழ்நாடு தமிழருக்கே என்று சீமான் சொன்னால் , சிவ சேனா மும்பாய் மாரத்தியர்க்கே என்று சொல்வதயும் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்

    • அவன் வெளிப்படையாக சாதிவெறியை ஆதரிப்பவன், பார்ப்பன பயங்கரவாதி அப்ப சீமானும் அப்படித்தானா. அப்படித்தான் ஆனா வெளிப்படையா இல்லங்கிறீங்களா.

     • நான் இங்கு சாதி வெறியப்பற்றி பேசவில்லை.

      மானில சுயாட்சி , உரிமை பற்றியே பேசியிருந்தேன்

  • ///மக்களுகாக போராட்டம் நடத்தி இறுதி வரை மக்களுகாக நிற்கும் ஒரு சமுதாய போராளியை..////

   அருகில் நிகழும் சாதிவெறியை கூட மக்களிடம் அம்பலபடுத்த நடுங்கும் போராளி(?) இறுதிவரைனா எப்படி சுடுகாடு வரை வந்து வழியனுப்பி வேப்பரானே

  • Ozhunga [padichu paarunga future thakkary thaan solliiraru.. aaru sonnadha ula thappe illa indha aala valara itta avanum future thakkaray madhiri thaan iruppan… anyway oru 50 votta aangara aala pathi ellam edhukku lentha argue pannanum vera velaya paarpom

  • Ozhunga padichu paarunga future thakkary thaan sollikiraru.. aaru sonnadha ula thappe illa indha aala valara itta avanum future thakkaray madhiri thaan iruppan… anyway oru 50 votta aangara aala pathi ellam edhukku lentha argue pannanum vera velaya paarpom

 4. உமக்கு ஒருத்தரப்பிடிக்கலேனா அவர மட்டப்படுத்தி எழுதி சுகம் காண வேண்டும்….னல்ல பொழப்பு…

  • பையாவுக்கு வினவைப் பிடிகலன்னா எதை வேணும்னாலும் சொல்லுவார்.

  • Paiya, though i respect your opinions on several opther matter when it comes to thi doucheba dubious uncredible opportunistic fascist seeman and his godawful group I support vinavu 100%. After all vinavu has iven you several opportunities to express yourself and have countered you in various debates. They follow a peaceful means unlike violent scumbags like seeman, Guru. Imagine whether you can pass opinion that u wish under a scum like seeman,,,

 5. ////பா.ம.க – ராமதாசு – வன்னிய சாதிவெறி போன்ற சொற்களே இல்லாமல், மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்ட /////

  சாதி வெறி பிடித்து அலைபவர்களிடம் சேர்த்து வைத்து சாதி வேண்டாம் தமிழ் மக்கள் ஒரு சேருங்கள் என்று சொல்லுபவரை… சாதியை வைத்து சேர்த்து, பிணைத்து இப்படி பதிவு போடும் உங்களை எல்லாம் என்ன சொல்ல???
  சாதி வேண்டாம் தமிழர்களாய் இணைவோம் என்று சொல்லுபவரை இப்படி சாதி சகதி கொண்டு வாரி இறகிரீகள். தவறு பண்ணினால் சுட்டி காமிக்கலாம் அனால் கொலை கரன் உடன் சேர்த்து வைத்து பேசுவது என்பது வருத்தந்த தக்கது…. இது தனி மனித தாக்குதல் தான்……..

  • இதில் தனிமனித தாக்குதல் எங்கே இருக்கிறது ? சாதி வேண்டாம் எல்லோரும் ஒன்னா இருங்கன்னு சொன்னால் அவர் சாதி எதிர்ப்பாலராகிவிடுவாரா ? அந்த வார்த்தையை இவர் மட்டுமா சொல்கிறார், தலித் மக்களை அரிசனன்னு கூறிய காந்தியும் அப்படி தான் சொன்னார், தற்போது ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கலும் இது போன்ற உபதேசங்களை செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் காரன் கூட சொல்வான். வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணக்கூடாது நண்பா.

   • முதலில் இந்த வினவுவில் இருக்கு சாதி வெறியை எதிர்த்து குரல் கொடு.

    பின்பு மற்றவர்களை கவனிக்கலாம்..

    • ராமதாஸ் கும்பல் தானே பர சாதி வெறியர்கள் அவர்களை தானே குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்.

     • இரு தரப்பினரையும் உள்ளே தள்ள வேண்டும்.

      அப்போதான் நாட்டில் அமைதி நிலவும்

    • அறுவைசிகிச்சைக்கும் கொலைசெய்வதற்கும் வேறுபாடு உள்ளது நண்பரே! இரண்டிற்கும் கத்தி போட்டுத்தான் ஆகவேண்டும், அனால் நோக்கம் வேறுவேறு முனைகள்.நீங்கள் கத்தியே கூடாது சீழ்கட்டியை துணியை வைத்து மூடு என்றல்லவா புலம்புகிறீர்கள் நண்பரே!

   • ////சீமான் திரைப்பட இயக்குநர் என்பதால், தனது பேச்சின் ஒவ்வொரு வரி முடிந்த பின்னரும் ஒரு “சைலன்ட் ஷாட்” வைத்திருக்கிறார். அந்த சைலன்ஸ் என்பது புயலுக்கு முந்தைய அமைதிக்கு இணையானது. காமெராவின் பானிங் ஷாட் போல அவர் கூட்டத்தை ஒருமுறை பார்ப்பார். அடுத்த பாயின்ட் என்னவென்று தெரியாமல் வாய்தா வாங்குகிறாரா, அல்லது அடுத்த குண்டு வீச்சை எதிர்கொள்ளும் திறன் கூடியிருக்கும் தமிழர்களுக்கு உள்ளதா என்று சர்வே எடுக்கிறாரா என்று யாரும் கண்டுபிடிக்க முடியாது.///
    இதை எப்படி சொல்லலாம் சொல்லுங்கள்???

    • சீமான் ராமதாசின் சாதிவெறியை ஆதரிக்கிறாரா எதிர்க்கிறா என்று சொல்லுங்கள்.

     • எதிர்ப்பதால்தான் காதலர்க்கு இரங்கற்பா பாடியுள்ளார்.

      அது உனக்கு போதவில்லை..

      • காதலர்களுக்கு இரங்கற்பா, சாதிவெறியர்களுக்கு ஜால்ரா,தமிழர்களுக்கு அல்வா.

     • தனி மனித தாக்குதலை வினவு பண்ணி இருக்கிறதை பதிவு பண்ணி வைத்தால், நீங்கள் கேள்விகளை குழப்பும் காரணம் என்ன ????
      //////சீமான் ராமதாசின் சாதிவெறியை ஆதரிக்கிறாரா எதிர்க்கிறா என்று சொல்லுங்கள்./////

      சீமான், சாதி வெறியன் ராமதாஸ்யை ஆதரித்தால் இப்படி ஒரு அறிக்கை கொடுக்க காரணம், அந்த இரண்டு வியாச சமுதாயத்தை செர்தவர்களையும் தமிழ் சமுதாயம் என்று சொல்லுவதற்கு காரணம்???? ராமதாஸ் யை அதரிபதல???? என்ன கேள்வி இது??

    • ////சீமான் திரைப்பட இயக்குநர் என்பதால், தனது பேச்சின் ஒவ்வொரு வரி முடிந்த பின்னரும் ஒரு “சைலன்ட் ஷாட்” வைத்திருக்கிறார். அந்த சைலன்ஸ் என்பது புயலுக்கு முந்தைய அமைதிக்கு இணையானது. காமெராவின் பானிங் ஷாட் போல அவர் கூட்டத்தை ஒருமுறை பார்ப்பார். அடுத்த பாயின்ட் என்னவென்று தெரியாமல் வாய்தா வாங்குகிறாரா, அல்லது அடுத்த குண்டு வீச்சை எதிர்கொள்ளும் திறன் கூடியிருக்கும் தமிழர்களுக்கு உள்ளதா என்று சர்வே எடுக்கிறாரா என்று யாரும் கண்டுபிடிக்க முடியாது.///
     இதை எப்படி சொல்லலாம் சொல்லுங்கள்???

     டாப்பு டக்கரு. அருமையான எள்ளல் நக்கல். வேறென்ன.

  • //திராவிடக் கட்சிகளுக்கு இங்கே தமிழ்ச் சாதிய வேர் இல்லையாம். அந்த காரணத்தினாலதான் திராவிட இயக்கம் தமிழ்ச் சாதிகளை மோதவிடுதாம்.// அதுக்கு பதிலா சாதி வெறி உள்ள சாதி தமிழனுக்கு பதவி கேட்கிறார?

 6. அனேகமாக திராவிட மொழியை தாய்மொழியைக் கொண்ட ஒருவர் இந்த கட்டுரையை எழுதியிருக்கக் கூடும்…

  தாக்கரே பீகாரிகள் மராட்டியத்தை விட்டு வெளியே போக சொன்னான்… உங்கள் கூற்று மெய்யாகட்டும்… சீமான் தமிழகத்தின் தாக்கரே ஆகட்டும்.. திராவிட மொழி பேசுபவர்கள் வெளியே போக சொல்லட்டும்…

   • இந்த கட்டுரையில் தெரிவிக்க பட்டிருப்பவைதான் இன வெறியையும் சாதி வெறியையும் கிளப்பி வருகிறது..

    • அட… சாதிவெறி ராமதாசையும் அந்த ராமன் அடிமையை ஆதரிக்கும் சீமானையும் ஆதரித்து சொம்படிக்கும் இந்த பர இப்படி பேசுவது சரி இல்லை.

     • ////சாதிவெறி ராமதாசையும் அந்த ராமன் அடிமையை ஆதரிக்கும் சீமானையும் /////

      நீங்கள் வேண்டும் என்று சொல்லுக்ரீக்ள இல்லை, தெரியாமல் சொல்லுகிறேகுள் என்று தெரியவில்லை??? ஆனால் எந்த சதுகளுகும் சீமான் துணை போகவில்லை என்று பலருக்கு தெரிதும் நீங்கள் சொல்லும் வீண் பழிகள் தான் வருந்த தக்க வைக்கிறது…….

     • சாதி முரண்பாடுகளை வளர்த்து வரும் வினவுவுக்கு ஜால்ரா போடும் நீ இதை சொல்லக்கூடாது ..

      • ஆமாம், ஆனா ஆதிக்க சாதிக்கு ஜால்ரா போடும் அண்ணன் செந்தமிழன் சொல்லலாம்.

       • சீமான் அவ்வாறு சொல்லவில்லை .

        உனக்குத்தான் எதைப்பார்த்தாலும் சாதி வெறியாக தெரிகிறது

 7. அய்யா, தங்கல் கட்டுரை படிதென், தயவு செய்து எங்கல் அன்னன் திரு சேமான் அவர்கலை குரை சொல்லி பலக வென்டாம்.நன்ட்ரி

 8. //அவர் டம்லர்தான். அவர் ஆட்சியில் இருந்தால் ஈழத்து டம்லர்களையும் காப்பாற்றியிருப்பார்” என்கிறார் சீமான்.//

  இந்த வரிகள் ஒட்டு மொத்த தமிழர்களையும் கேளுக்கு உள்ளாக்குவது.. தமிழன், தமிழனாக இல்லாமல், ஒருவேளை டமிலராகவோ, திராவிடராகவோ இருக்கவேண்டும் என்கிறதா இந்தக் கட்டுரை?

  • சீமான் தலித்துகளை இழிவுபடுத்துவது பற்றி உங்களுக்கு கவலை இல்லை டம்லர் என்று சொன்னது தான் பிரச்சினை, கோபம் வருகிறது. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொல்லி ஜெயலலிதாவை ஈழ ஆதரவாளர் என்று தமிழ் மக்கள் மத்தியில் நம்ப வைத்து ஓட்டுப்பொறுக்கி ஜெயாவை முதல்வராக்கியது அயோக்கியத்தனம் இல்லை ஆனால் டம்லர் என்று சொன்னதும் கோபம் வருகிறது. எதற்கு கோபம் வர வேண்டுமோ அதற்கு வருவதில்லை, எதற்கு வரக்கூடாதோ அதற்கு வருகிறது.

   • ////சீமான் தலித்துகளை இழிவுபடுத்துவது பற்றி உங்களுக்கு கவலை இல்லை டம்லர் என்று சொன்னது தான் ////
    சீமான் எந்த சமுதாய மக்களையும் தவறாக பேசவில்லை.. அப்படி ஒரு பதிவும் இதுவரை இல்லை…

    • ராமதாசின் சாதிவெறி பல உயிர்களை காவு வாங்கியுள்ளது சமீபத்தில் இளவரசனின் உயிர். இதைப் பற்றி அண்ணனின் கருத்து என்ன ?

     • ///சீமான் தலித்துகளை இழிவுபடுத்துவது பற்றி உங்களுக்கு கவலை இல்லை///

      இப்படி நீங்கள் பதிவு பண்ணினதற்கு தக்க அதாரம் தாருங்கள் முதலில்????

      • nee enathaan koovuinaalum unga annan vijayakanth madhiri oru seat kooda pidikka mudiyadhu… aama unga annan edhukku brahmin tv thanthi tvla program panraar.. ……..kaasu panam thuttu money money……

     • தலித்துகளின் சாதி வெறி மரக்காணத்தில் உயிர்களை காவு வாங்கிய்ள்ளது..

   • //இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொல்லி ஜெயலலிதாவை ஈழ ஆதரவாளர் என்று தமிழ் மக்கள் மத்தியில் நம்ப வைத்து ஓட்டுப்பொறுக்கி ஜெயாவை முதல்வராக்கியது //

    கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க சார்……சீமான் சொல்லித்தான் தமிழக மக்கள் ஜெ க்கு ஓட்டு போட்டாங்களா?

    சான்றோன்

 9. வினவுகிட்டேயும் சீமான் கிட்டேயும் இருக்குறது ஒரே விசயம் தான்…. சண்டை முன்ன பின்ன இருந்தாலும், சவூண்டு எப்பவும் ஜாஸ்தியாத்தான் இருக்கும்…. அந்தாளே அட்ரஸ் இல்லாம நட்டு இருக்கான்,நீ என்னடான்னா அவன வெச்சு ஆராய்ச்சி கட்டுரை எழுதுர…. ஏம்பா இந்த டி.ராஜேந்திரன் ஏதுவும் அறிக்கை குடுக்கலியா??? அத வெச்சு ஒரு ரெண்டு நாள் ஓட்டலாம்ல…..

 10. There is no point in blaming Siman . His point is very clear all tamilans should join together .Siman can’t support any single community. I do like vinvu articles but this time it is completely biased unnecessary vinavu using comedy scenes from cinema.

 11. இதில் சீமானை குற்றம் சாட்டி சொல்லப்பட்டது அனைத்துமே கடைந்து எடுத்த பொய்கள் .

  வன்னியர் என்றால் சீமானுக்கு பயம் என எழுதப்பட்ட ஆக்கத்திற்கு எழுந்த எதிர் வினைகள் வினவுக்கு பொறுக்க முடியவில்லை . இதனால் இர்ண்டு நாட் கள் கழித்து இப்போது மற்றுமொரு சேறு பூசும் கட்டுரை.

  இப்படி பொய் கட்டுரைகள் வரைவதற்கு வினவு ரூம் போட்டு யோசிக்குமோ ?

  ராமதாசையும் பாமகாவையும் சீமான் பல தடவைகள் விமர்சித்துள்ளார்.

  குறிப்பாக ஈழத்தின் இறுதிப்போரின்போது சேலையை பிடித்து தொங்கி கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். பல தடவைகள் விமர்சித்துள்ளார்.

  வினவுவின் காமலை கண்களுக்கு அது தெரியவில்லை.

  இதே போல் திருமாவையும் விமர்சித்துள்ளார்.

  சேறு அடிப்பது தீர்மானித்தாயிற்று , இணையதளம் ஒன்றும் கையில் இருக்கிறது , இனி நெர்மையாவது , புடலங்காயாவாது ,பாவமாவது , புண்ணியமாவது.

  யாரோடு வேண்டுமானாலும் ஒப்பிடலாம்.

  பால் தக்கரே என்ன ? கிட்லர் , முசொலினி , இடி அமீன் ,கோட்சே போன்றவர்களை ஏன் விட்டு வைத்திருக்கீர்கள் ?

  ஒ அடுத்தடுத்த வாரங்களில் அதையும் எதிர்பார்க்கலாமா ?

  • சாதிவெறியர்களை சீமான் என்னென்ன மாதிரி எல்லாம் விமர்சித்துள்ளார் என்பதற்கு ஆதாரங்களை சுட்டிகளை கொடுங்கள். ராமதாசை கூட விடுங்க தமிழகத்தின் மிகப்பெரிய சாதி தீவிரவாதி முத்துராமலிங்கன், அந்த தேவர் சாதி வெறியனின் சாதிவெறியைப் பற்றி உங்க அண்ணன் என்ன சொல்லியிருக்காருன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.

   • அது என்ன பெரிய சாதி வெறியன் சின்ன சாதி வெறியன்…. சாதி வெறியர் என்றால் ஏலரும் ஒரு மட்டைகள் தான்… சாதிகளை பிரித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.. சாதி ஒழிப்பு என்றால் மொத்த சாதி ஒழிப்பு தான்… நீங்கள் you tube இல் பாருங்கள் சீமான் சாதி வெறியர்களை யும் சாடி, தான் கட்சில் சாதியை வைத்து யார் இருந்தாலும் அவர் வெளில் போகலாம் என்று கட்சி கூட்டத்தில் பேசி உள்ளார், நன் இதை you tube ல் பார்த்து உள்ளேன்…முடிந்தால் பார்த்து உறுதி படுத்தி கொள்ளுங்கள்….
    நாம் நமிழர் கட்சி வளர்ந்து வரும் கட்சி… கண்டிப்பாக விமர்சனம் வேண்டும், அதற்காக இப்படி சாதி சகதியை எடுத்து அடிப்பது மிகவும் வருந்த தக்கது……

    • நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்கே ஆபத்தான கட்சி. ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவான கட்சி. ராமதாஸ் போன்ற சமூகவிரோதிகளைப் பற்றி மூச்சு கூட விடாத கட்சி இத்தகைய கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.

     • ///நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்கே ஆபத்தான கட்சி.////

      இது உங்கள் அறியாமை,

      ///ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவான கட்சி////
      சாதி மதம் இவைகளை வெறுப்பவன் தான் நம் தமிழர் கட்சி இல் இருக்கிறார்கள்… இது உச்ச கட்ட உளறல்…

      ///ராமதாஸ் போன்ற சமூகவிரோதிகளைப் பற்றி மூச்சு கூட விடாத கட்சி///

      ராமதாஸ், இல்லை சாதிக்கு எவன் செம்பு அடித்தாலும், அதை எதிர்க்கும் கட்சி …

      ///இத்தகைய கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்///
      மக்கள் முட்டாள் இல்லை 1960 கலீல் இருந்தது போல், யார் யார் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று மக்கள், இப்பொது உள்ள இளைய தலைமுறை பார்த்து கொண்டுதான் இருக்கிறது , அதனால் நீங்கள் வருது பட வேண்டிய அவசியம் இல்லை…

   • உம்மைப்போல் சாதி வெறிய வளர்த்து அதில் குள்ர் காய விரும்பவில்லை

    அதனால் எந்த சாதி தலவர்களை பற்றியும் பேசப்போவதில்லை..

    • எந்த ஆதிக்கசாதிவெறியர்களின் மனமும் புன்படும்படி பேசப்போவதில்லை சரி தானே பர.

     • சாதி வெறியை கண்டிப்பது அல்லது தண்டிப்பது என்று முடிவெடுத்து விட்டால் இரு தரப்பையும் அதற்கு உட்படுத்த வேண்டும் .
      தனியே ஒரு தரப்புக்கு மட்டும் இதனை செய்ய முடியாது.

      மேலும் வன்னியர் ஆதிக்க சாதி அல்ல .
      மிக பிற்படுத்த பட்ட சாதி

 12. சீமான் அவர்களின் அரசியல் கொள்கைகள், ஈழத்தை பற்றிய புரிதல் ஆகியவை விவாதத்துக்கு உரியன. அவர் சுய விமர்சனம் செய்து கொள்ளாத பட்சத்தில் மாற்று கருத்து உள்ளவர்கள் அவர் கருத்துகளை விமர்சனம் செய்ய விவாதம் செய்ய உரிமை உண்டு. சில நேரம் இப்படி பேசியே அவர் தமிழின விரோதியாக போய்விடுவாரோ என்ற கவலையும் நமக்கு உண்டு. அவர் பேச்சு வரலாற்றை பார்க்கும் போது நிறைய வரலாற்று நிகழ்வுகளை அவர் செய்திதாள் தரவுகளாக பேசுவது தெரிகிறது. மாற்று தரவுகளை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்ற முடிவுக்கு அநேகர் வரலாம். ஈழத்தின் சாதிய கொடுமையின் வரலாறு இனப்படு கொலை வரலாற்றை முந்தியதாக இருப்பதோ-வேண்டாம்- அவரே முயன்று வரலாற்றின் பல முகங்களை அறிந்து பேச வேண்டும் என்பதே நம் விருப்பம். அவ்வாறு அவர் பேசினால் அது தமிழருக்கு அவர் செய்யும் மிகப்பெரிய உதவி. ஆயினும் அவரைப்பற்றி விமர்சிக்காமல் அவர் கருத்துகளை விமர்சிப்பது நல்லது. தனி நபர் தாக்குதல் வேண்டாம்.
  தமிழர் வேற்று மொழி சாதியினரை நம்பி அதிகாரத்தை கொடுக்கும் போக்கு-தங்களின் சாதி இயல்பு பற்றிய சரியான சுய விமர்சனம் கொண்டுள்ளதால்தான்.எனினும் இந்த தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்டு தமிழ் சாதிகள் தங்களை தாங்களே நிர்வகிக்கும் ஆளுமையை வளர்த்து கொள்ள பாடுபடவேண்டும். அதற்கு இப்போதுள்ள தமிழ்/சாதி தலைவர்கள் தங்கள் சுயநலத்தை ஒதுக்கிவிட்டு முன் வர வேண்டும். இல்லையென்றால் மக்கள் வேறு தலைமையை தேட வேண்டும். மீண்டும் மீண்டும் பிற மொழி/இன தலைமையை நாடும் தவறை செய்யாதிருக்கவேண்டும். முடியாது என்பதே எதார்த்தம் என்ற உண்மையை உடைத்தெறியுங்கள்.
  நிற்க வோட்டு பொறுக்க நினைக்கும் எந்த அரசியல் தலைவரும்/கட்சியும் பெரும்பான்மை பக்கத்தை பகைத்துகொள்ள மாட்டார்கள். இது அறிவியல்[அறவியல் அல்ல என்றாலும்]. கூடாது- பகைத்தாலும் பரவாயில்லை நியாயம் பேச வேண்டும் நீங்கள் கேட்பது வேடிக்கை. மாற்று அரசியல் பேசுபவர்கள்தான் நியாயமான நிலைப்பாட்டை எடுக்க முடியும். ஆனால் இங்கே மாற்று அரசியல் பேசுபவர்கள் வெகுஜன மக்கள் மனதின் நியாய உணர்வுக்கு குறி வைப்பதா தெரியவில்லை.ஒப்பாரி ஒரு உரையாடல் அல்ல.தேர்தலில் சீட்டுக்கு அலையும் கட்சிகளின் போர் தந்திரம் இது. மார்க்சியம் என்பதும் ஒரு வதைசமயமே என்று சேம் சைடு கோல் போடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • ஆக சீமான் ஓட்டுப்பொறுக்க நினைப்பதால் தான் வன்னிய சாதி வெறியன் ராமதாசின் பெயரைக் கூறவில்லை என்று சரியாக கூறியுள்ளீர்கள் பரலோகப்பாண்டியன். இப்படி சந்தர்ப்பவாதமாக நடந்துகொள்ளும் சீமானை என்ன செய்வது என்பதையும் நீங்களே கூறினால் நல்லது.

   • அவர் குழியை அவரே வெட்டிக்கொள்வார். உங்கள் குழியை நீங்களே வெட்டுங்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

    • அவர்களுக்கு அவர்களே குழி வெட்டிக்கொண்டால் நல்லது தான் ஆனால் நாங்கள் முதலாளித்துவத்திற்கு குழிவெட்டுவதற்காக இருக்கிறோம் பரலோகபாண்டி.

     • நல்லா வெட்டுங்க. ஆனா நுனி கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுறது மாதிரி தெரியுது. நான் சொல்லுறதை நம்பாதீங்க.எதுக்கும் இன்னும் ரெண்டு பேர்கிட்ட கேட்டுட்டு வெட்டுங்க.

 13. As per Vinavu, Except Dalit everybody is bad. Dalit only do 100% good, behave as per Indian law and respect the society.

  “Only Dalit should read Vinavu. It is not suitable to read any other communities except Dalit in Tamil Nadu”.

  Vinavu doesn’t have any social responsibility, respecting society, always blaming other communities, particularly Vanniers, Seaman and taking about only Dalit, Dalit…………

  Vinavu
  Do you know, How many incidents about Dalit married in other community in the name of love. After some time bargained and grabbed huge money from the parents. I can prove 5 incidents in Dharmapuri itself. That means how many in Tamil Nadu. Other community people should aware of all this cheating business and to be prepared to safe guard our family and property from these cheaters.

 14. இளவரசன் – திவ்யா திருமணம். தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பா.ம.க வன்னிய ஜாதி வெறியர்களின் தாக்குதல்.

  அதே கும்பல் மற்றும் நீதிமன்றம், ஊடகங்கள் இளவரசனிடமிருந்து திவ்யாவை திட்டமிட்டு பிரித்தனர். அதன் தொடர்ச்சியாக இளவரசனின் மரணம்.

  இவ்வளவு நடந்த பிறகும்கூட இதை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்னிய ஜாதி வெறியர்களின் தாக்குதலாக கண்டிக்காமல்,

  ‘இது காதலுக்கு ஏற்பட்ட பின்னடைவு’. ‘ஜாதி காதலர்களை பிரித்துவிட்டது’ ‘காதலர்கள் நிம்மதியாகவே வாழ முடியாதா?’ ‘‘திவ்யா இனி என்ன செய்யப் போகிறார்?’ ‘உன்னத காதலின் முடிவு’ என்று சோக ரசம் சொட்டும் சுவாரஸ்யமான காதல் கதையாகவும்,

  இளவரசனின் கடிதத்தை வைத்துக்கொண்டு,

  ‘திவ்யா உனக்கு ஒண்ணு தெரியுமா? நீ என்னோட எல்லா விஷயத்திலும் சேர்ந்திருந்த! ஆனா இப்போ நீ என் கூட இல்ல… ரொம்ப கஷ்டமா இருக்குடா… என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா என்னை மன்னிச்சிடு …’ என்று இளவரசனின் மரணத்தை வெறும் காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையாக திசை திருப்புகிற தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளும், அந்த பத்திரிகையின் செய்தியையே தன் செய்தியாக இணையத்தில் பரப்பி, பத்திரிகை நிர்வாகத்திடம் நல்ல பெயர் பெறத் துடிக்கிற பத்திரிகையாளர்களும்.. ச்சீ என்ன பிழைப்பு இது?

  இதை விட மோசமாக,

  ‘பிராமணர்கள் சிறப்பானவர்கள், இந்து மதம் சிறப்பானது, பகவத் கீதை கருத்தே ஜாதி ஒழிக்க வழி, இது மனுவோ மனுவாதிகளோ (பார்ப்பனர்கள்) செய்த தப்பல்ல. பிராமண ஆழ்வார்களும், நாயன்மார்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சேவை செய்தவர்கள்’ என்று எழுதி, ஜூனியர் விகடனில் இன்னும் தொடர்ந்து எழுதுவதற்கு இளவரசன் பிணத்தின் மூலமாக ‘சீட்’ பிடித்து வைக்கும் தமிழருவி மணியன் போன்றவர்களின் இழிவான செயல்,

  இவர்களையெல்லாம் பார்க்கும்போது, பா.ம.க.வும், காடுவெட்டி குருவுமே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

  ‘உத்தர்காண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம்’ என்ற பெயரில் அங்குள்ள பிணங்களிலிருந்த உடமைகளை கொள்ளையடித்தவர்களுக்கும்

  தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை, வெறும் காதல் பிரச்சினையாக சுருக்கி பிணத்தை வைத்து கல்லா கட்டும் இந்த ஊடகங்களுக்கும், அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?

  இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

 15. ராமதாஸ் வன்னியர்களை குறிப்பிட்ட அளவுக்கு திரட்ட முடிந்தது போல சீமானும் நாடார் சாதியினரை திரட்ட முடிந்திருந்தால், ராமதாஸை விட மோசமான சாதி வெறியனாக சீமான் இருந்திருப்பார். நாடார்களும் முன்பு சாதிய வருணாஸ்ரமத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பது அவர்களை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக திரட்ட முடியவில்லை.

  வினவு கட்டுரை சீமான் மூலமாக ஒட்டுமொத்த தமிழ்த் தேசியவாதத்தின் உள்ளீடை பதம் பார்த்துள்ளது. அதனால் தான் இரண்டு கட்டுரைகளுக்கு இவ்வளவு எதிர்ப்பும், வரவேற்பும் இருக்கிறது. இளவரசனின் காதலை வெளிப்படையாக ஆதரிக்க இயலாத தமிழ்த் தேசியம் அழியட்டும்.

  சீமானின் உறுமல் போலி வீரம் கொண்டது; சாதியத்திடம் சரண்நிலை பாராட்டுவது. தமிழினத்தை வெளியிலிருந்து யாரோ தாக்க காத்திருப்பது போலவும், அதற்கு சீமானின் துணை வேண்டும் என்ற அடிப்படையில் சீமான் ஆதரவாளர்கள் மாய்மாலம் செய்கிறார்கள். பெரியாரும், திராவிட இயக்கமும் தமிழர்களின் நேரடியான பகை சக்திகளை துணிவுடன் அடையாளம் காட்டின.

  தந்தை பெரியார் நமக்களித்த பெருமைமிகு கொடையை அழிக்கும் கீழ்மையான வேலையை செய்கிறது சீமான் வகை தமிழ்த் தேசியம். சீமானை ஆதரிக்கும் தந்தி டிவி தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானதல்ல; சீமான் நட்பு பாராட்டும் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.இராதா போன்ற இந்துத்துவ கருநாகங்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்கள் அல்லர். ஆக, சீமான் செய்யும் அரசியல் தான் என்ன? தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான காதல் உணர்வு கொண்டவர்களே, சிந்தியுங்கள், இதனை.

  சீமானின் தமிழ்த் தேசியத்தை விமர்சிக்கிறது என்பதற்காக வினவு தமிழினத்திற்கு விரோதமானது அல்ல. ஒருவர் எப்படி பெற்றோருக்கு நல்ல மகனாகவும், மனைவிக்கு நல்ல கணவனாகவும், குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இருக்க முடியுமோ, அது போல, ஒடுக்கப்படுகின்ற அனைத்து பிரிவு மக்களுக்கு ஆதரவாளனாக ஒரு கம்யூனிஸ்ட் செயல்பட முடியும். சீமான் போன்ற பொய்க்கால் குதிரைகளை நம்பி ஏமாற விரும்பினால், ஒரு சுற்று பயணித்து விட்டு வாருங்கள்.

  • ” சீமான் போன்ற பொய்க்கால் குதிரைகளை நம்பி ஏமாற விரும்பினால், ஒரு சுற்று பயணித்து விட்டு வாருங்கள்.”

   Well Said….

 16. படிச்சு முன்னேறுங்கள் என்று இட ஒதுக்கிடு கொடுத்தல் காதலிச்சு தான் முன்னேற முடியும்னா எப்படி? புள்ளைய பெத்தவன் அடிக்க வராம என்ன பண்ணுவான்? அரசாங்க வேலை வாங்கி முன்னேறுங்கள் என்றால் அய்யர் பிகர் தேடி அலைந்தால் என்ன சொல்ல ?

  • நன்றாக சொன்னீர்கள் ஐய்யா ! தலித்களுக்கு எதற்கு காதல் உணர்வு ? மூன்று வேளை உணவு உண்ணும் பாக்கியத்தை வாழ்நாள் முழுவது தேடிக்கொண்டே இருப்பதை விட்டு விட்டு காதலாம்.

   ஆனால் வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு தரபடுகிறதே ஐய்யா ? அந்த பெண்ணும் காதலித்து இருகிறதே ? அவள் கணவனையும் அப்பனையும் கொன்றது போக வேறு
   என்ன தண்டனை தரலாம் என்று தீர்ப்பு கூறுங்கள்

   • மேல் சாதி பெண்ணை காதலித்து மணம் செய்தால் நீங்கள் குறிப்பிட்ட எல்லாம் இலவசமாக கிடைக்குமே..

 17. தலைப்பு சரியில்லை

  மும்பையின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பது இரண்டு என்பார்கள்
  1. மழை 2. தாக்கரே என்று சொன்னார்கள்.

  அப்படியே செய்து காண்பித்தான் தாக்கரே உயிரோடு இருந்தவரை

  சீமானைப் பற்றிய உங்களுடைய முந்தைய கட்டுரை பயம் பயம் என்றிருந்தது

  ஏனிப்படி?

  • உங்களால் இதை அவதானிக்க முடியவில்லையா!

   இன்று சீமானின் வளர்ச்சி என்பது நாளை பால்தாக்ரே போன்று ஒரு பயங்கரவாதியாகத்தான் மாறியாகவேண்டும், அதை சீமானே நினைத்தாலும் தவிர்க்க முடியாது.

   இதை நான் சொல்லவில்லை உலக வரலாறு தான் நமக்கு தெரிவிக்கிறது.

   சீமானை நம்பும் தமிழர்களே

   நாமெல்லாம் ஒரே மதம்,
   நாமெல்லாம் ஒரே சாதி,
   நாமெல்லாம் ஒரே தேசம்,
   நாமெல்லாம் ஒரே இனம்,
   நாமெல்லாம் ஒரே மொழி,
   என்று அரசியல் செய்தவர்கள் அனைவரும் மக்களை ஏய்க்கத்தான் இப்படி பேசுகிறார்கள்.
   அது மக்களுக்கு கடுகளவும் உதவாது, அதேசமயம் இன அழிப்பில் முடியும். ஹிட்லர் – ஜெர்மனி, இலங்கை, இந்தோனேசியா, இஸ்ரேல் இவையெல்லாம் உதாரணம்.

   பிறகு கட்டபொம்மனும், எட்டப்பனும்

   நாமெல்லாம் ஒரே மதம்,
   நாமெல்லாம் ஒரே சாதி,
   நாமெல்லாம் ஒரே தேசம்,
   நாமெல்லாம் ஒரே இனம்,
   நாமெல்லாம் ஒரே மொழி தான் அதற்காக இவர்களை ”நாம் தமிழர்கள்” என்று சேர்க்கமுடியுமா?

   ஆனால் சேர்க்க சொல்கிறார் சீமானு.
   என்ன ஒரு பித்தலாட்டம்!!
   சிந்தியுங்கள் இல்லையேல் ஏமாற்றப்படுவீர்கள்!
   அதுவும் விரைவில்!

   • அப்படியானால் நாமெல்லாம் இனம் , மொழி , மதம் , மானிலம் கடந்து ஒரே இந்தியர்கள் என்று கூப்பாடு போடுபவர்களை என்ன சொல்கிறாய் ..?

    • மக்கள் விரோதி, சமூகத்திலிருந்தே வளரும்முன் பிடுங்கியெரிய வேண்டிய விசச்செடி, சரி அது என்ன சாதி மதத்தை விட்டுவிட்டீர்.

     முதலில் மரியாதைய மற்றவரிடம் பேச, தெரிந்துக்கோங்க அதுகப்பரம் டமிலு, இங்கிலிபிஸுனு பேசலாம்.

     • சரிங்கண்ணா மரியாதையாவே கேட் கிறேன்.

      நாமெல்லலாம் மொழி இனம் மற்றும் நான் சொல்லாம விட்ட நீங்க குறிப்பிட சாதி , மதத்தை கடந்த இந்தியர்கள் என்று முழங்கிய காந்தி தாத்தா ,நேரு , காமாராஜர் , இந்திரா முதற் கொண்டு இந்தியாவின் முக்கிய தூண்கள் எல்லாம் உங்க லிஸ்டுக்குள்ள வரப்போகுதே ?

      இனிமேலாவது ஒண்ணை சொல்றத்துக்கு முன்னால ஒரு தடவை யோசிச்சிடுங்கண்ணா ?

      • சீமான் தம்பி என்பதை நிரூபிக்குரீங்களே பாஸ்!

       /காந்தி தாத்தா ,நேரு , காமாராஜர் , இந்திரா முதற் கொண்டு/

       ….இந்த பண்ணாடைகள் எல்லாம் சமூக விரோதிகள், துரோகிகள் தான் என்பது வெட்டவெளிச்சம் / உலகறிந்த விசியம்.

       இவர்கள் எல்லாம் யார்? யாருக்காக வாழ்ந்தார்கள் என்பதை கொஞ்சமாவது தெரிந்திக்கொள்ளுங்கள் !

       காங்கிரஸ் என்ற அமைப்பு எதற்காக? யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிஞ்சுக்க செல்லம்!

       இப்படி குழந்தையாக இருந்தா எப்படிதான் தமிழ் தேசியத்தை உருவாக்கப்போரிங்களோ தெரியல?

       சீமானின் தம்பி என்பதை மணிக்கு ஒருமுறை நிருபித்துக்கொண்டே இருக்குரீங்களே!

       ஐயோ! ஐயோ!!

       • மேற்கூறியவைகளையேல்லாம் கடந்துநாமெல்லாம் கம்யுனிஸ்டுகள் என்று கூறினாலும் அவர்கள் தங்களது விஷ செடி லிஸ்டுக்குள் தான் வருவார்கள்.

        • இவ்வளவுதான் தங்களின் அறிவா?

         இதுவரை இந்த உலகில் ‘நாமெல்லாம் கம்யூனிஸ்டுகள்’ என்று யாரேனும் சொல்லிருக்கிறார்களா? இல்லை இப்படி சொல்வதில் அர்த்தம் தான் உள்ளதா?

         ரஜினி ரசிகனிடம் போய், ‘ரஜினி ஒரு கோமாளி’ என்று சொன்னால் ஏத்துக்குவானா? அதே மனோபாவம் தான் உங்களைப்போன்றோருக்கு உள்ளது.

         இத்தனை பேர் சீமானை பற்றி சொல்வதில், அப்படி என்னதான் இருக்கும் என்று சிந்திக்கவோ முற்படவில்லையே ஏன்?

         போய் நிறைய புத்தகம் படியுங்கள், உண்மை எதுவென்று தேடுங்கள் அதுவும் இந்த தமிழ் பேசும் மக்கள் துன்பம் தீரவேண்டும் என உண்மையான உணர்வு இருந்தால்!

         ஆனால் உங்களை பேச்சைப் பார்த்தால் அப்படி எந்த உணர்வும் இல்லை ஏதோ ‘ஒரு வட்டச் செயலாளர்’ பதவி கிடைத்தால் அப்படியே பிழைப்புவாதியாக சீமானுக்கு ஜால்ரா போட்டுகிட்டு இருப்பவர் போல் தெரிகிறது.

         • ////ரஜினி ரசிகனிடம் போய், ‘ரஜினி ஒரு கோமாளி’ என்று சொன்னால் ஏத்துக்குவானா? அதே மனோபாவம் தான் உங்களைப்போன்றோருக்கு உள்ளது./////
          படத்தையும் நாட்டு நடப்புகளையும் வித்தியாசம் கண்டு புடிகிக்க தெரியாத கோமாளிகள் அல்ல…. கொள்கைகளுக்கு எதிராக சீமான் போனாலும் எடுத்து ஏறியும் மண் தெளிவுடன் தான் இருக்கிறோம்…

          ////இத்தனை பேர் சீமானை பற்றி சொல்வதில், அப்படி என்னதான் இருக்கும் என்று சிந்திக்கவோ முற்படவில்லையே ஏன்?////
          முதலில் நீங்கள் சிந்திக்க வேண்டும், நீங்கள் தான் சிந்திக்க தெரிந்தவர் என்ற நினைப்பு வேண்டாம், எல்லாருக்கும் சிந்திக்க தெர்யும் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

          ///போய் நிறைய புத்தகம் படியுங்கள், உண்மை எதுவென்று தேடுங்கள் அதுவும் இந்த தமிழ் பேசும் மக்கள் துன்பம் தீரவேண்டும் என உண்மையான உணர்வு இருந்தால்!/////
          நாட்டு நடப்புகள் தெரியாமல் இங்குவந்து யாரும் பேசவில்லை, தமிழன் வரலாறு தெரியாமல் இங்கு வந்து யாரும் உளறவில்லை… தமிழர்கள் எல்லாம் “சாதி, மதம்” விட்டு தமிழர்களாய் ஓன்று சேருங்கள் என்று சொல்லுவதில் என்ன தவறு இருக்கிறது என்று சுட்டி காட்டவும்…

          ////ஆனால் உங்களை பேச்சைப் பார்த்தால் அப்படி எந்த உணர்வும் இல்லை ஏதோ ‘ஒரு வட்டச் செயலாளர்’ பதவி கிடைத்தால் அப்படியே பிழைப்புவாதியாக சீமானுக்கு ஜால்ரா போட்டுகிட்டு /////
          உங்கள் புரிதலுக்கு வருத்த படுகிறேன்…. இங்கு யாரும் வட்ட செயலரளர், மொக்கை செயலர் களுக்கு போட்டி போடவில்லை, அவர்கள் அவர்கள் கருத்தை பதிவு செய்கிறார்கள்….. அதை இப்படி பதவிக்கு அசை படுபவர்கள் என்று கொச்சை படுத்த வேண்டாம்… உங்களால் தமிழ் மக்களுக்கு தோள் கொடுக்க முடியவில்லிய…. ஒதுங்கி நில்லுங்கள்… என் தமிழ் மக்களுக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்…. விமர்சனம் என்ற பெயரில் குரல் கொடுக்கும் மக்களை பதவிக்கு ஆசை படுகிறார்கள் என்று கேவல படுத்த வேண்டாம்….

         • மன்னிக்கவும் ,நாமெல்லாம் காம்ரேடுகள் என்று சொல்லிக்கொள்வார்கள்.

          உலகில் எல்லா தேச தலைவர்களும் தமது மக்களுக்கு பிரிவினைகளை மறந்து ஒன்றுபடும்படி கூறியுள்ளார்கள்..

  • வினவுவுக்கு பயம் சீமானைப்பற்றி அல்ல .

   வன்னியர்களைப்பற்றி…

   • அப்படியே சீமான். மே 17 மாதிரி யாரெல்லாம் ராமதாசை பாத்து பயப்படுறாங்களோ அவங்களை எல்லாம் வீரன்னு நல்லா ஏத்திவுடுங்க பாஸ்.

 18. யாசின் மாலிகை அழைத்து வந்து “அன்பு சகோதரனே, ஈழ விடுதலை இனி உங்கள் விடுதலை காஸ்மீரிய விடுதலை இனி தமிழர்கள் எங்கள் விடுதலை” என்று முழங்கிய சீமான் தமிழ்நாட்டின் பால்தாக்கரே என்று சொன்னால் அவனை விட முட்டாள் இந்த மண்ணில் யாராக இருக்க முடியும்.. இந்திய அரச உளவின் உருவாக்கம் வினவு மகஇகவிற்கு எந்த விடுதலையும் ஏற்பில்லை என்று தெரியும்.. அதற்காக இவ்வளவு முட்டாளாகவா இருப்பது…

  • // “அன்பு சகோதரனே, ஈழ விடுதலை இனி உங்கள் விடுதலை காஸ்மீரிய விடுதலை இனி தமிழர்கள் எங்கள் விடுதலை” என்று முழங்கிய சீமான் தமிழ்நாட்டின் பால்தாக்கரே என்று சொன்னால் அவனை விட முட்டாள் இந்த மண்ணில் யாராக இருக்க முடியும்./// modi ithaivida arumaiya pesuvaan antha alavukku seemaanukku kooda pesa theriyaathu puriyuthungalaa tamilare…

   ///இந்திய அரச உளவின் உருவாக்கம் வினவு மகஇகவிற்கு எந்த விடுதலையும் ஏற்பில்லை என்று தெரியும்.. அதற்காக இவ்வளவு முட்டாளாகவா இருப்பது…/// inthiya arasin raw vin uruvaakkam pirabagaran enbathai marukkum vaithaan vinavai inthiya ulavin uruvaakkam ena muzhungukirathu

  • தமிழ்தேசியம் என்பது பார்ப்பனியத்தின் மற்றொரு பதிப்பு அதாவது தமிழ் பதிப்பு அதற்கு மார்க்சியம், உழைக்கும் மக்கள், வர்க்க கண்ணோட்டம் எல்லாம் பிடிக்காது தான், இவை எதுவும் ஏற்பில்லை தான் அதற்காக சீமான் போன்ற டம்ப்ளர்கள் இவ்வளவு முட்டாளாகவா இருப்பது…

 19. சீமானின் தமிழின பாய்ச்சல் உச்சம் தொடுவது இங்குதான்…!……நான் முதலமைச்சர்…ஆனால்… அதுவரை அவர் யார் காலையும் பிடிப்பார்.

  சீமான், அக்மார்க் புலி சீடர் என்பது எலிகளுக்குக்கூட தெரியும். இருந்தாலும் எந்த எலியும் அவருக்கு பயப்படுவது இல்லை. காரணம் அவர் பாதி புலிதான்! பதுங்குவார்……!….பாயமாட்டார்….! இந்திய நாடளுமன்ற தேர்தல் களத்தில் திரியும் பலவண்ணப் புலிகள், சர்க்கஸ் புலிகள். ஓட்டுப்பொறுக்கி அரசியல் வளையத்தில் பாய்வதில் சிறப்புப் பயிற்சி பெற்றவை.

  சீமான் ரசிகர்கள்,மற்றவர்களுக்கும் அந்த பயிற்சியை கொடுக்க முயற்ச்சிக்கிறார்கள்.

  • ////சீமான் ரசிகர்கள்,மற்றவர்களுக்கும் அந்த பயிற்சியை கொடுக்க முயற்ச்சிக்கிறார்கள்////

   படம் பார்த்து படம் பார்த்து உங்கள் புத்தி படத்துக்குள் தான் போகிறது, சீமானை வைத்து நாம் தமிழர் கட்சி இல்லை முதலில் அதை தெறித்து கொள்ளுங்கள்… சீமான் தான் குறிகோளில் இருந்து அவர் தவறினால் அவரை தூக்கி எரிய தயங்க மாட்டோம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்….

   • அஜித் ஒரு தெலுங்கன் ரஜினி ஒரு கன்னடன் என்று இனவெறி உமிலும் நாம் தமிழர் கட்சியின் பல பேர் பேஸ்புக்கில் உள்ளனர் இப்படி ஒருவர் பேசும் மொழி அடிப்படையில் ஒருவரின் குணத்தைநீங்கள் தீர்மானிப்பீர்களா

    ஒரு எடுத்து காட்டு

    அஜித் உண்ணாவிரதம் : நடிகன் டா நீ என்றும்

    சிம்பு உண்ணாவிரதம் : தமிழன் டா நீ… என்றும் மெலும் பார்க்க

    https://www.facebook.com/photo.php?fbid=433487483384533&set=a.316124975120785.72844.235473896519227&type=1&theater

    https://www.facebook.com/photo.php?fbid=331817850218164&set=a.316124975120785.72844.235473896519227&type=1&relevant_count=1

    அந்த லிங்கில் பெரும்பாலும் தமிழ் நடிகர்கள் என்று கமல்,சூர்யா,விஜய் போன்றவர்கள்
    வாழ்த்தபடுகிறார்கள் மேலும் தனுஷ் ,அஜித் போன்றவர்கள் ரஜினி போன்றவர்கள் அவர்கள் தமிழர்களாக் பிறக்காமல் தமிழ்நாட்டில் நடிப்பதற்க்காக தூற்றப் படுகிறார்கள். இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா

 20. //நான் முதலமைச்சர்…ஆனால்… //சீமானின் பேராசை நம்பி பின்னிற்கும்(?) தமிழ் உள்ளங்களுக்கு பெருநஷ்டம்.

 21. காய்த்த மரத்துக்குத் தான் கல்லெறி விழும் என்பார்கள். வினவு சீமானின் துரித வளர்ச்சியைக் கண்டு பயப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் எல்லோரும் தான் சாதியை வெளிப்படையாக எதிர்க்கப் பயப்படுகிறார்கள். பெரியாரியத்தாலும், திராவிடத்தாலும் தமிழ்த் தேசியத்துக்கு ஏறபட்ட எதிர்மறையான விளைவுகளைச் சீமான் பேசத் துணிந்ததால் பெரியாரிஸ்டுக்களும், தமிழ் நாட்டில் வாழும், தமிழ் பேசுகின்ற தமிழரல்லாத திராவிட எச்சங்களும் சீமானைப் பழி வாங்கத் துடிக்கின்றனர். அவரை வசைபாடக் கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் இழக்க அவர்கள் தயாராகவில்லை. அதன் விளைவு தான் இப்படியான பதிவுகள். 🙂

  • கடைசிவரைக்கு இந்த காய்த்த மரம் ராமதாசை பத்தி மட்டும் பேசாதுன்னா அது மொட்டைமரம்யா.

   • ராமர்காஸுக்கு மொத்தமா இருக்கிற்தே 5 வீத வாக்குகள்தான் .
    அவரப்பத்தி பேசி நெரத்தை வீணாக்க முடியாது

 22. விளம்பரம் விளம்பரம்….

  சீமான் காசு கொடுத்து வினவுல எழுத சொல்லிருக்காரு… பாராட்டி எழுதுவதை விட லேசா திட்டி, தாக்கரே ரேஞ்சுக்கு பெரிய தலைவர் (நல்லவரோ கெட்டவரோ தலைமை பண்பு நிறைந்தவர்) போல உயர்த்தி எழுதி இருக்கறத பார்த்தாலே தெரிகிறது…

 23. அந்த இரு காதலர்கள் பிரிந்ததர்க்கு PMK, VC & வினவும் ஒரு காரணம். எப்படி என்றால், பா.ம.க க்கு -நம் சாதி பெண்னை தலித் காதலித்துவிட்டானெ என்ற கோபம். வி.சி & வினவுக்கு ஒரு வன்னிய சாதி பெண்னை தலித் காதலித்துவிட்டான் என்ற தலைகனம். வினவு கட்டுரைகள் என்னை போன்ற சாதி வெறி இல்லாதவர்களையும் கோபம் கொள்ள தூண்டுகிறது. என் உறவு பெண் ஒரு தலித் பையனுடன் திருமண்ம் செய்துகொண்டு அந்த ஊரிலேயெ வாழ்கிறார்கள். எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அது மட்டும் எப்படி?. சாதிவெறியை தூண்டுவது வினவு கட்டுரைகள் மட்றும் ஒரு சில தலித் மக்களின் சாதி வெறி பிடித்த ஆணவ பேச்சுக்கள்தான்.

 24. ராஜ் தாக்கரே செய்வதில் என்ன தப்பு?. மராட்டிய மாநிலத்துக்கு சாரி சாரியாக படையெடுத்து வரும் வட இந்தியர்களிடம் இல்லாத இனவெறியும் மொழிவெறியுமா ராஜ் தாக்கரேவிடம் இருக்கிறது?. நம் சென்னையில் நம் வீட்டுக்கு வெளியே இந்தியில் பேசினால் தான் நாம் பிழைக்க முடியும் என்னும் ஒரு வக்கிரமான நிலை இருந்தால் எவ்வளவு கொந்தளிப்பு அடைவோம். அந்த கொந்தளிப்பான உணர்வு தான் மராட்டிய மக்களுக்கு இருக்கிறது. இங்கே ராஜ் தாக்கரேவை இன வெறியன் என்று குறை சொல்ல என்ன இருக்கிறது?

 25. வினவில் வந்து பின்னூட்டம் போடுற ஆளுக பேரெல்லாம் ஏன் ஒருமாதிரி கோமாளித்தனமா இருக்கு , கம்மியுனிசம் முத்திப்போன கோமாளித்தனம் வந்துடுமா 😀

  மணி என் பேரு தானுங்கோ .

 26. இந்திய அரச உளவின் உருவாக்கம் வினவு மகஇகவிற்கு எந்த விடுதலையும் ஏற்பில்லை என்று தெரியும்../
  inthiya arasin raw vin uruvaakkam pirabagaran enbathai marukkum vaithaan vinavai inthiya ulavin uruvaakkam ena muzhungukirathu

 27. // தமிழன் தன் பெயருக்குப் பின்னால் ஒட்ட வைத்திருந்த சாதியைக் கத்தரித்தார் பெரியார். //

  டி.எம்.நாயர், சர் பிட்டி தியாகரய செட்டி(தெலுங்கு)போன்ற புனிதப் பெயர்களுக்கு கத்திரி போடாமல், தமிழர்களின் சாதிப் பெயரை கவனமாகக் கத்தரித்தார்..
  நடேச முதலியார் நடேசனார் ஆனார்.. பட்டிவீரன்பட்டி சவுந்தரபாண்டியன் நாடார் சவுந்தரபாண்டியனார் ஆனார்..

  நாயுடுகளும், ரெட்டியார்களும் தங்கள் சாதிப் பெயரை மறைத்து சந்தோசமாக தமிழர்களின் தலைவர்களானார்கள்.. அவர்களைச் சொல்லி குற்றமில்லை.. அய்யா காட்டிய வழி அத்தனை அருமையானது..

  பெரியார் வழிவந்த அவரது தமிழ்ச் சீடர்களோ பிறசாதியினரின் ஆதரவை இழந்துவிட கூடாது என்று, வெளிப்படையாக சாதிப் பெயர்களை மறுத்தும், உள்ளூர தனித்தனியாக தத்தமது சாதிகாரர்களை வளர்த்தெடுத்தும், சாதிச் சங்க கூட்டங்களில் தங்கள் சாதியின் புரவலர்களாக முழங்கியும் பெரியார் வழியில் சாதியை ஒழித்துக் கொண்டிருந்தனர்..

  இதன் விளைவு : இதெல்லாம் வேலைக்காகாது என்று, எண்ணிக்கை தந்த பலத்தில் வெளிப்படையாகவே சாதியை முன் நிறுத்திய பாமக ஒரு ’பெரியாரிய சமூக நீதிக் கட்சியாக’ உருவாகி வளர்ந்தது.. பார்ப்பன ஆதிக்கத்தை அது எதிர்ப்பதாக பெரியாரிய, முற்போக்கு அறிவுஜீவிகளால் வியந்தோதப்பட்டது.. பார்ப்பானுக்கு அடுத்ததாக யார் எதிரே தட்டுப்படுகிறார்கள் என்று அது தேடிய போதுதான், பெரியாரியர்கள் ”இது செல்லாது, செல்லாது வேண்டுமென்றால் தலித்துகளுடன் ஒரு ஜெண்டில்மென் அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டு அவர்களை அமுக்கிவிட்டு, வழக்கம் போல் பார்ப்பானை மட்டும் குறி வைத்து சாடலாம் வா.. இல்லாவிட்டால் தடை செய்யப்படுவாய் போ..” என நயத்தாலும், பயத்தாலும் பாமகவை ஆட்கொள்ள நினைக்கிறார்கள்..

  பாமக, தான் மதிப்பதாகக் கூறும் தமிழ்தேசியத்தை முன்னிட்டாவது, தமிழர் ஒற்றுமைக்காக, தலித் விரோதப் போக்கிலிருந்து விலகுமா..

 28. இந்திய அரச உளவின் உருவாக்கம் வினவு மகஇகவிற்கு எந்த விடுதலையும் ஏற்பில்லை என்று தெரியும்../
  inthiya arasin raw vin uruvaakkam pirabagaran enbathai marukkum vaithaan vinavai inthiya ulavin uruvaakkam ena muzhungukirathu
  இந்த இரண்டுமே உண்மைதான் ,புலிகளை ரா வளர்த்தது அழித்தது ,ரா வளர்க்கும் ம க இ க (வினவு )வின் நாளைய நிலை மார்க்ஸ் க்கே வெளிச்சம்

  • வின்சென்ட்.,
   நீங்க என்ன சொல்லவ்ரீங்க ஒன்னும் புரியவில்லை….கொஞம் தெளிவா சொல்லுங்க…..

 29. what i like about vinavu is their non iolent approach though many wouldt agree with their ideologie they are patient eogh not to retort to any silly mindless mayhem to its detractors. Vinavu people try to remain calm and respect their readers thats the way to a ood demoracy thouhg even i differ with them 99.99% but when it comes to violent idiot like this ebastian simon(seeman) who conjures unknown unbelievable facts weaves them into a non-linear story and shouts them in high voice in some speech, vinavu is miles ahead of this moron seeman and i doing the riht thing by highlighting his hypocrisy. Imaing what would be fate if a violent scumbag like seeman ets to rule a state it will hence mean Hitler would make even more sense than this mad hysterical maniac seeman

 30. வினவு ஏன் சாதி வரியாக பிரித்து பார்கிறது ஏன் சாதி சண்டை முட்டுவதற்கு எத்தனிகிறது?

 31. எந்நேரமும் சாதிய சிந்தனையும், காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் நிறைந்த ஒரு நபரால்தான் இந்த மாதிரியான ஒரு கட்டுரையை எழுத முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க