Friday, August 19, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் புதுச்சேரியில் மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக ஊர்வலம் !

புதுச்சேரியில் மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக ஊர்வலம் !

-

மாருதி-சுசுகி தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்தும், தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவிவரும் மாருதி-சுசுகி நிர்வாகம் மற்றும் இந்த அடக்கு முறைகளுக்கு உறுதுணையாக இருக்கும் இந்திய அரசை கண்டித்து

புதுச்சேரி பு.ஜ.தொ.மு சார்பாக கண்டன ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்!

இன்றைய மறுகாலனியாக்க சுழலில் பன்னாட்டு முதலாளிகளின் கட்டளைப்படி அவர்களின் கைக்கூலி இந்திய அரசும், நீதி மன்றமும், போலீசும், தொழிலாளர் துறையும், இந்த நாட்டினுடைய தொழிலாளர் வர்க்கத்தை மிக கடுமையாக ஒடுக்கி வருகின்றன. அந்த வரிசையில்தான் மாருதி-சுசுகி நிர்வாகம் அத்தொழிலாளர்களை ஒடுக்கி வருகிறது.

காலனியாதிக்க காலகட்டத்தில் தங்களின் உரிமைகளுக்காக போராடிய இந்திய நாட்டு மக்களை கொடூரமாக கொன்றொழித்தது, சிறையில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டது, சுதந்திரம் பெற்று விட்டதாக சொல்லப்படுகிற இந்திய திரு நாட்டில் இப்போதும் தங்களின் உரிமைகளுக்காக போராடுகிற மாருதி-சுசுகி தொழிலாளர்கள் கடந்த ஒரு வருட காலமாக பிணை மறுக்கப்பட்டு சிறையில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார்கள்.

காலனியாதிக்க காலக்கட்டத்தில் 1918-ல் சென்னை- பின்னி ஆலை தொழிலாளர்கள் முதல் சங்கத்தை கட்டி தங்களின் உரிமைகளுக்காக போராடிய போது அன்றைக்கு பிரிட்டிஷ் நீதி மன்றம் சங்கம் ஆரம்பித்தது ராஜதுரோகம், அரச துரோகம் என்று அறிவித்து ஒடுக்கியது. இன்றைக்கும் இந்திய அரசு போராடும் தொழிலாளர்களை இவ்வாறு பார்த்துதான் ஒடுக்குகிறது.

மாருதி-சுசுகி தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை இதற்கு ஒரு சாட்சியாக நம் முன்னே நிற்கிறது. எனவேதான் இதை மறுகாலனியாக்கம் என்கிறோம். இந்திய சுதந்திர போராட்டம் முடிந்துவிடவில்லை. இந்த மறுகாலனியாகத்திற்கு எதிராக போராடாமல் தொழிலாளர்கள் தங்களின் விடுதலை காணமுடியாது என்பதை வலியுருத்தியும், மாருதி-சுசுகி தொழிலாளர்களின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள், சிறை, வேலை நீக்கம் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் புதுச்சேரி பு.ஜ.தொ.மு மாநில தலைவர் தோழர். பழனிச்சாமி தலைமையில் புதுச்சேரியில் உள்ள மாருதி-சுசுகி ஷோரூம் எதிரில் கண்டன முழக்கத்தோடு பேரணி தொடங்கப்பட்டது.

தோழர்கள் முழக்கத் தட்டி, கொடி, பேனரோடு ஷோரூம் முன்பு கூடியபோது முகப்பில் இருந்த கார்ககளை எல்லாம் பின்புறத்திற்கு எடுத்து சென்றார்கள், வாயிற் கதவை இறுக பூட்டினார்கள். குர்கானில் நடந்த பிரச்சினைக்கு புதுச்சேரியில் எதிர்ப்பா? என்கிற அச்சம் அவர்களின் முகத்தில் காண முடிந்தது. திட்டமிட்டபடி பேரணி சுமார் 2 ½ கிலோ மீட்டர் தூரம் சென்றது. நெடுகிலும் மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் நின்று கவனித்தனர், ட்ராபிக் பல இடங்களில் ஸ்தம்பித்தது. போலீசுக்கு ஏன்? இந்த வழியில் அனுமதிகொடுத்தோம் என்றாகிவிட்டது.

பேரணியின் முடிவில் புதுச்சேரி பு.ஜ.தொ.மு மாநில இணை செயலாளர் தோழர். அனந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பு.ஜ.தொ.மு மாநில அலுவலக செயலாளர் தோழர். லோகநாதன் கண்டன உரை மற்றும் புதுவை மாநில பொதுசெயலாளர் தோழர். கலை இறுதி உரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சி தொடர்பாக பொது மக்களின் கருத்து.

  • இது போன்ற போராட்டங்கள் அடிக்கடி நடந்தால்தான் மக்களுக்கு விழிப்புணர்வு வரும்.
  • மக்களுக்காக எந்த கட்சிகளும் போராடாது, உங்களை மாதிரி அமைப்புகள் இருந்தால்தான் மக்களை காப்பாற்ற முடியும்.
  • உங்களுடைய ஊர்வலத்தில் முழக்கங்கள் தெளிவாக இருந்தது., அதே போல் ஊர்வலம் கட்டுப்பாடோடு நடந்தது. மேலும் உங்களுடைய போராட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நன்மை தருகிற போராட்டமாகவே இருக்கிறது, இதனால் ஆளும் வர்க்கங்களால் இடையூறுகள் அதிகமாக இருக்கும். பார்த்து இருங்கள்.
  • இது போன்று பொது பிரச்சினைகளை எடுத்து சென்றால் நல்லது. இருந்த போதிலும் அரசியல் தலையீடுகள் உங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
  • நிகழ்ச்சி சிறப்பு, மக்கள் கூட்டம் குறைவாக இருந்தார்கள் அது போக போகத்தான் அணிதிரட்டவும் முடியும்.
  • போராட்டமில்லாமல் வாழவே முடியாது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : பு.ஜ.தொ.மு புதுச்சேரி.

  1. பாண்டிச்சேரி தோழர்களுக்கு புரட்சிக்கர வாழ்த்துக்கள்.. தொடரட்டும் தொழிலாளர்கள் போராட்டம்!! வீழட்டும் பயங்கரவாத முதலாளித்துவம்!!!!

  2. இந்தியநாட்டின் முதலாளித்துவதுக்கு பேராபத்துநெருங்கிக்கொன்டிருக்கிறது என்பதுற்கான போராட்டம்தான் புஜதொமு வின் மாருதி தொழிலாளிகளுக்கு ஆதரவான போராட்ட்ம் வெல்லட்டும் தொழிலாளிகளுக்கான போராட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க