முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யாருக்கு கூஜா ?

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யாருக்கு கூஜா ?

-

நோய்ப் படுக்கையில் துடிதுடித்துக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு ஒரு புதிய டாக்டர் வந்திருக்கிறார். ஆம், நடப்புக் கணக்கில் பற்றாக்குறை, ரூபாயின் மதிப்பு குறைவு, விவசாயத் துறையில் நலிவு, தொழில் துறையில் தேக்கம், வேலை வாய்ப்புகளில் வீழ்ச்சி இவற்றை எல்லாம் சரி செய்ய மன்மோகன் சிங், ப சிதம்பரம், மான்டேக் சிங் அலுவாலியா போன்ற ‘உலகப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர்களின்’ கரங்களை பலப்படுத்த ரகுராம் ராஜன் என்ற பன்னாட்டு பொருளாதார ‘நிபுணர்’ இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன் (படம் : நன்றி தி ஹிந்து)

ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக செப்டம்பர் மாதம் தேதி பதவி ஏற்கவுள்ள ரகுராம் ராஜன் அவரது தந்தை வெளியுறவுத் துறையில் பணி புரிந்ததால் 7-ம் வகுப்பு வரை வெளிநாடுகளில் பள்ளிக் கல்வி பயின்று அதன் பிறகு டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்தவர். அமெரிக்கா செல்ல அனுமதிச் சீட்டாக பயன்படும் வகையில் டெல்லி ஐஐடியில் எலக்ட்ரிகல் துறை பட்டமும், ஐஐஎம் அகமதாபாத்தில் மேலாண்மை பட்டமும் பெற்று அமெரிக்காவின் எம்ஐடிக்குப் போய் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். ஐஐடி, ஐஐஎம்மில் படிக்கும் மேட்டுக்குடி இந்தியர்களது தேசபக்தி அமெரிக்காவில்தான் பொங்கி வழியும் என்ற உண்மைக்கேற்ப இவரும் அமெரிக்காவிலேயே குடியேறி விட்டார்.

தமிழே தெரியாத இவரை தமிழரென்று கண்டுபிடித்து சில தினசரிகள் மகிழ்கின்றன. இனி, புதுதில்லி சென்று பணம் வென்ற மறத்தமிழனென்று சீமான் கூட்டம் நடத்தாததுதான் பாக்கி.

வங்கிகள் பற்றிய கட்டுரைகள் என்ற ஆய்வுத் தொகுப்புக்கு முனைவர் பட்டம் பெற்ற அவர் சிகாகோ பல்கலைக் கழகத்தின் பூத் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் (பூத் பொருளாதாரக் கல்லூரி) பணி புரிந்து வருகிறார். 2003-ம் ஆண்டு முதல் 2006 டிசம்பர் வரை ஐஎம்எப்-பின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் பணி புரிந்திருக்கிறார். 1980-களிலிருந்து உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அவற்றின் பொருளாதாரங்களை அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி அடிமைப்படுத்துவதற்கான கொள்கைகளை சுமத்துவதுதான் ஐஎம்எப்பின் பணி. கடன் கொடுக்கும் போதே கண்டிஷன்ஸ் அப்ளை என்று ஏழை நாடுகளது இறையாண்மையை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதுதான் அதன் முக்கிய நோக்கம். அத்தகைய திருப்பணிக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்தவர்தான் இப்போது இந்திய ரூபாயை நிர்வாகிக்க ரிசர்வ் வங்கியின் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இனி ஐஎம்எஃப் கடன் கொடுக்கும் போது இந்தியா கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளை பட்டியலிட வேண்டியதில்லை. அவற்றை வடிவமைத்த நிபுணர் குழுவைச் சேர்ந்தவரே இங்கு ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் போது “நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமை சாலி” என்று அமெரிக்கா மெச்சிக் கொள்ளும்.

அமெரிக்காவில் பணி புரிந்து வந்த ரகுராம் ராஜன் ஏற்கனவே இங்கு மன்மோகன் சிங், அலுவாலியா, சிதம்பரம் போன்றவர்கள் இந்தியாவை மலிவாக விற்பனை செய்து செயல்படுத்தி வரும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மேலும் வலு சேர்க்க அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் இந்திய அரசால் அழைக்கப்பட்டாரா, அல்லது பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அவரை இந்திய அரசின் மீது சுமத்தினார்களா என்பது மன்மோகன் சிங்குக்குத்தான் வெளிச்சம். இந்திய நிதித்துறை சீர்திருத்தங்களுக்கான கமிட்டியின் தலைவராகவும், பிரதமர் மன்மோகன் சிங்கின் கௌரவ பொருளாதார ஆலோசகராவும் பணியாற்றியவர் அதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

1960-களின் இறுதியில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் (UNCTAD) பணி புரிந்து விட்டு இந்தியாவுக்கு வந்து தனது 50 வயதில் 1982-ல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆனார் மன்மோகன் சிங். அதற்கு முந்தைய ஆண்டில்தான் இந்தியா ஐஎம்எப்பிடமிருந்து கடன் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் போலவே ஐஎம்எஃப்பில் ஆலோசகராக பணி புரிந்த ரகுராம் ராஜனும் தனது 50-வது வயதில் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆக்கப்பட்டுள்ளார்

இந்தியாவின் பொருளாதார நெருக்கடிகள், நிதித்துறை சிக்கல்கள் இவற்றை சமாளிக்க பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து காட்டும் அக்கறையை இது காட்டுகிறது என்று முதலாளித்து அறிஞர்கள் பேசுகிறார்கள். ஆனால் முழு இந்தியாவையும் ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்வதில் சுணக்கம் கூடாது என்பதற்காகவே ஐஎம்எஃப்பின் நிபுணர்கள் இங்கே நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றனர். இனி மறுகாலனியாக்க நடவடிக்கைகள் முன்னிலும் வேகம் பிடிக்கும்.

வங்கி உரிமம்
இந்திய பொருளாதாரத்தை உலக முதலீட்டாளர்களுக்கு மேலும் திறந்து விட வசதிகள் செய்து தருவது ரகுராம் ராஜனின் முக்கிய கடமையாக இருக்கும். (படம் : நன்றி sify.com)

1991 முதல் சுமார் 15 ஆண்டுகளுக்கு நடுத்தர வர்க்கத்தின் செல்லப் பிள்ளையாக விளங்கிய அந்த நிதி நிறுவனங்களின் பிரதிநிதியான மன் மோகன் சிங் இன்று அதே வர்க்கத்திடம் காலாவதியாகி இருப்பதால் புதிய தேவதைகள் தேவைப்படுகின்றன. அதன் பொருட்டு இந்த ரகுராம் ராஜன் இறக்கப்பட்டிருக்கிறார். இந்திய பொருளாதாரத்தை உலக முதலீட்டாளர்களுக்கு மேலும் திறந்து விட வசதிகள் செய்து தருவது ரகுராம் ராஜனின் முக்கிய கடமையாக இருக்கும்.

பாரம்பரியமாக எச்சரிக்கையுடன் கடன் கொடுக்கும் தன்மையுடைய வங்கித் துறை தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் உலக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டது; அப்படி இணைக்கப்பட்ட நிதித் துறையில் தகவல் தொழில் நுட்பத்தைப் மேலும் அதிகமாக பயன்படுத்தி சூதாடுவதற்கான புதுப் புது கருவிகள் உருவாக்கப்பட்டன; வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்கள் சரக்காக சந்தையில் கிடைத்ததால் அவர்களுடன் நேரடி தொடர்பு இல்லாமலேயே கடன் கொடுப்பதற்கான வசதி ஏற்பட்டது; இதனால் வங்கிகள், ஓய்வூதிய நிதியங்கள், முதலீட்டு வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் தொழில் முறை மேலாளர்கள் அதிக அபாயங்கள் அடங்கிய முதலீடுகள் செய்து தமது ஊதியத்தை பெருக்கிக் கொள்ள முயற்சித்தார்கள்; இவை அனைத்தும் அமெரிக்க நிதித் துறையிலும் அதைத் தொடர்ந்து உலகளாவிய நிதிச் சந்தையிலும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என்பதை 2005-ம் ஆண்டே முன்னறிவித்த புகழுடையவர் ரகுராம் ராஜன் என்று வணிக நாளிதழ்கள் புகழாரம் சூட்டுகின்றன.

ஆனால், தனி நபர்களும் நிறுவனங்களும் புதுப் புது வழிகளில் தமது மூலதனத்தை பெருக்கிக் கொள்ளும் வேட்டையில் ஈடுபடும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் இத்தகைய நெருக்கடிகளுக்குள் தள்ளப்படும் என்பது 300 ஆண்டு கால முதலாளித்துவ பொருளாதாரத்தில் பல முறை முன்னறிவிக்கப்பட்டும், நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான ஒரு நிகழ்வுதான். இத்தகைய நெருக்கடிகளை முன்னறிவிப்பதற்கு “பகலில் வெயிலடிக்கும், இரவில் இருட்டாக இருக்கும்” என்று சொல்வது போன்ற அடிப்படை அறிவே போதுமானதுதான்.

ரகுராம் ராஜன் இத்தகைய நெருக்கடிக்கு காரணமாக முதலளாத்துவ பொருளாதாரத்தின் அடிப்படைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மாறாக பாதுகாப்பாக தொழில் செய்வது எப்படி என்று நெருக்கடிகளை தடுக்கும் வழிகளை வரையறுக்கிறார். முன் பின் தெரியாதவர்களுக்கு கடன் கொடுக்காமல் இருந்திருந்தால் அமெரிக்க நெருக்கடி வந்திருக்காது என்பதாயும் அவரது கண்டுபிடிப்பை புரிந்து கொள்ளலாம். ஆனால் பெருத்து விட்ட மூலதனம் ஒரு போதும் முடங்கிப் போக வழியில்லை என்று மேலும் மேலும் சூதாட்டம் போல பெருக்க நினைத்ததில்தான் அமெரிக்க நெருக்கடி ஆரம்பத்ததுவே அன்றி பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளால் அல்ல. இது முதலாளித்துவம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் ஒருசுய முரண்பாடு. இதில் இருந்து முதலாளித்துவ பொருளாதாரம் தப்பவே முடியாது. எனினும் இதை எந்த முதலாளித்துவ பொருளாதார அறிஞரும் ஏற்பதில்லை.

பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கும் விவசாயத் துறையை அழிய விட்டது, தேசியத் தொழில் துறையை முடக்கி தரகு முதலாளித்துவத்தை வளர விட்டது, ஏற்றுமதிக்கான மற்றும் நிதித்துறை சேவைகளின் ஊதிப் பெருக்கப்பட்ட வளர்ச்சி இவற்றால் நலிந்துள்ள இந்தியப் பொருளாதாரத்தை ரகுராம் ராஜன் போன்ற நிதித்துறை நிபுணரை வைத்து ஒழுங்குபடுத்துவதன் மூலம் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மேலும் சுரண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க நினைக்கின்றன. ஆனால் அந்த ஒழுங்கு படுத்தல்கள் என்பது மக்களை மேலும் துன்ப துயரத்தில் தள்ளிவிடுவனவே அன்றி வேறு எதுவுமல்ல.

அடிப்படை துறைகளான விவசாயம், தொழில் உற்பத்தி, உள்நாட்டு சேவைத் துறை இவற்றில் இந்திய மக்கள் சார்ந்த வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்படாதது வரையில், பன்னாட்டு நிதி மூலதனத்தின் தயவில் நம் நாட்டை வைத்திருப்பது வரையில் இந்தியா மேலும் மேலும் மோசமாகும் நெருக்கடிகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும். மிகச் சிறுபான்மையினரான தரகு முதலாளி வர்க்கத்தினர் தமது செல்வத்தைப் பெருக்கிக் கொண்டே போக, பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்கள் அடகு வைக்கப்பட்டு அழிக்கப்படுவதை முறியடிக்க உலகமயமாக்கல் கொள்கைகளை தடுத்து நிறுத்துவதுதான் ஒரே வழி.

– பண்பரசு

மேலும் படிக்க

 1. இந்தியர்களின் கனவான 2020 வல்லரசு என்ற நோக்கத்திற்கு இடையூறாக இருப்பவர்களே இந்த விவசாயிகள் தான்.

  “ஏன் இன்னமும் 60 சதவிகித மக்கள் இந்த விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாற்று தொழிலில் இறங்கிவிட வேண்டியது தானே”.

  இது நான் சொன்னதில்லை. மன்மோகன் சிங் அலுவலகத்தில் உள்ள ஒரு பொருளாதார மேதை சொன்னது.

  ரகுராம் ராஜன் என்பவரைத் தெரியுமா?

  இவர் தான் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிதி ஆலோசகராவும் இருக்கிறார். சிகாகோ வர்த்தகப் பள்ளியில் பொருளாதார பேராசியராகவும் இருக்கிறார். இவர் தான் இந்தியாவில் விவசாயம் செய்ய மிகக் குறைவான சதவிகித மக்கள் இருந்தாலே போதுமானது. நவீன தொழில் நுட்பங்கள் மூலம் நாம் சாத்தியப்படுத்த முடியும் என்கிறார்.

  http://deviyar-illam.blogspot.in/2011/12/blog-post.html

  • ஜோதி,

   //“ஏன் இன்னமும் 60 சதவிகித மக்கள் இந்த விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாற்று தொழிலில் இறங்கிவிட வேண்டியது தானே”.///

   மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தைகள் இவை. வளர்ந்த நாடுகள் அனைத்திலும் (முன்னாள் சோசியலிச நாடுகளளான சோவியத் ரஸ்ஸியா உள்பட) படிப்படியாக மக்கள் விவசாயத்தில் இருந்து உற்பத்தி துறைக்கும், பிறகு சேவை துறைக்கும் மாறினார்கள். விவசாயம் நவீனமயமாக, குறைந்த பட்ச பண்ணை அளவு ஆயிரம் ஏக்கர்களில் உள்ளன. இதே போல் இந்தியாவில் மாறாமல், முட்டாள்தனமான நில உச்சவரம்பு சட்டங்கள் மற்றும் மூடிய பொருளாதார கொள்கைகளால் அழிந்தோம். கடந்த கால பெரும் தவறுகளின் நீண்ட கால விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. இதை பற்றி நிறையவே எழுதிவிட்டேன். அடுத்த மாதம் ஆழம் இதழிலும் இதை பற்றின கட்டுரை எழுதுகிறேன். மேலும் பார்க்கவும் :

   http://nellikkani.blogspot.in/2011/07/blog-post.html
   உணவும் உடையும்

 2. அனேகமாக ரிசர்வு வங்கி புதிசா 10 அல்லது 15நோட்டு அடிக்கும் இயந்திரஙலை நிறுவும்:

  அடகு கடை “அழகப்பன்” சிவகஙயில் ஒன்று நிறுவ 100% வாய்ப்பு!

  பண வீக்கம் குறைய தவிடு ஒத்தடம் கொடுக்கலாம்(யாருக்கு)

 3. //முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அவற்றின் பொருளாதாரங்களை அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி அடிமைப்படுத்துவதற்கான கொள்கைகளை சுமத்துவதுதான் ஐஎம்எப்பின் பணி. //

  கடன் கேட்கும் ஊதாரிகளை திட்டாமல் கடன் கொடுப்பவர்களை மட்டும் கெட்டவர்களாக சிதரிப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை

  மனைவியை வைத்து சூதாடிய தருமனை நல்லவன் என்பது போலவும் , பணயம் வைத்து ஆதி அனுபவி என்று அறிவுரை கூறிய சகுனி ( ஆமிரிக்காவை ) கேட்டவன் என்பது போலவும் காட்டும் மஹாபாரத கதை தான் நினைவுக்கு வருகிறது

  //
  கடன் கொடுக்கும் போதே கண்டிஷன்ஸ் அப்ளை என்று ஏழை நாடுகளது இறையாண்மையை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதுதான் அதன் முக்கிய நோக்கம்.
  //

  சொசலிச குடிகாரனுக்கு கடன் குடுப்பவன் குடிக்காதே என்று அறிவுரை கூறத்தான் செய்வான்

 4. “oodhaaris” are there in both the principal parties.Even if BJP comes to power,same measures will continue.What Raman is trying to say?Accept whatever comes in your way.That is your fate.Is it Mr.Raman?

 5. //“oodhaaris” are there in both the principal parties//

  In the above context , it refers // இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு// not just congress party.

  // if BJP comes to power,same measures will continue //

  My view is we shouldnt be blaming external entities for our failures and rather introspect our socialist policies or find fault in our leadership.

  தீதும் நன்றும் பிறர் தர வாரா

  You are inline with my view.

  //Accept whatever comes in your way.//

  I never suggested anything and it is your point.
  If you ask my suggestion,
  do not vote for symbols vote for persons. Identify good person and vote for him irrespective of the party

   • ஒருத்தன் மொல்லமாரி…
    இன்னொருத்தன் முடிச்சவுக்கி..
    அடுத்தது கேடி…அப்புறம் மாமா…யாரை தேர்ந்தெடுக்கலாம்?
    சொல்லுங்க ராமன் சார்?

 6. how do you make such assumptions as to how BJP ll run it?

  They did a nuclear test last time and went against the world powers,they can run a good show this time too without sucking upto anyone.

 7. ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் பின்தங்கி இருக்கிறதென்றால் , நாடு அரசியல் ரீதியாக முறையாக நிர்வகிக்கபடவில்லை என்பது தான் மூல காரணம்.
  ஊழல் , உட்கட்டமைப்பு சரியாக இல்லாமை ,வரவு செலவு அறிக்கையில் பண விரயம், திறமை வாய்ந்த ,தொழில் நுட்பம் தெரிந்த இளைஞர்களை , தொழிற்கல்வி, நவீன தொழில் நுட்ப இறக்குமதி மூலமாக உருவாக்காத கல்வி முறை , போன்ற காரணங்களும் முதலில் சொல்லப்பட்டதில் அடங்கும்.

  சீனாவில் , நவீன தொழில் நுட்பம் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கற்று கொடுக்கப்பட்டது.இருபதாண்டுகளுக்கு முன்னால் படித்தது நினைவுக்கு வருகிறது. நெதர்லாந்திலிருந்து வந்திறங்கிய ஆயில் ரிக் உற்பத்தியாளர்கள் – பொறியாளர்கள் இவர்களை விட்டகலாமல் எந்நேரமும் நிறைய சீன இளைஞர்கள் அவர்களையே சுற்றி கொண்டிருந்தார்களாம் .ஒரு வருடத்தில், அதே நெதர்லாந்த் கம்பனி உலக சந்தையில் , எங்கெங்கல்லாம் தங்கள் ஆயில் ரிக்குகளை விற்று கொண்டிருந்தார்களோ அங்கு சீனாவில் தயாரான ஆயில் ரிக்குகள் அதை விட குறைந்த விலையில் விற்கப்பட்டன.
  நவீன தொழில் நுட்பத்தை உடனடியாக தெரிந்து,பயின்று, செயல்படுத்தி,வியாபார ரீதியாக வெற்றியடையும் வகையில் அரசு ஊக்குவிப்புடன் ,ஆதரவுடன் வென்று முடிக்கிற வைராக்கியமும் ,உழைப்பும்,வேகமும் ,தீரமும் அங்கே சீன மக்களால் காட்டப்பட்டன.

  இருபதாண்டுகள் கழித்து இரண்டு நாட்களுக்கு முன்னால் கீழ்கண்ட சீனாவை பற்றிய செய்திகளை பார்க்க நேரிட்டது.

  http://www.macaudailytimes.com.mo/index.php?news=45504 (
  Poll: Many say PRC to become world’s top economy 
)

  டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஞாயிறு 11.8.2013 செய்திதாளில்,

  கம்ப்யூட்டர் முதல் கப்பல் கட்டுவது வரை என்று உலகின் மொத்த உற்பத்தியில், சீனாவின் பங்கு எவ்வளவு என்பதை ஆச்சரியப்படும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
  கம்ப்யூட்டரில் ,குளிர்பதனபெட்டிகள் தயாரிப்பில், கைபேசிகள் ,காலணிகள் உற்பத்தி ,சிமன்ட் ,நிலக்கரி உற்பத்தி, சூரிய ஒளி மின்சார தகடுகள், மாட்டு இறைச்சி,கப்பல் கட்டுமானம், என்று அணைத்து துறைகளிலும் , சீன தயாரிப்புக்கள் 90% லிருந்து 50% வரை , உற்பத்தி செய்து உலகம் முழுக்க விற்கப்பட்டுள்ளது.

  சீனத்தினுடைய பொருளாதார வெற்றிக்கு,ஏற்றுமதியை அதிகரித்து , வேலைவாய்ப்பு வழங்கியும் ,அந்நிய செலாவாணி ஈட்டியும் அடிப்படை வெற்றிகளை பதித்து விட்டு, அதே சமயத்தில் , வருமானம் ஏற்றுமதியால் பெருகிய போது , உள்நாட்டு தேவைகளுக்கான பொருள்களையும் தயாரித்து 140 கோடி மக்களுக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து GDP உயர்த்தப்பட்டது. (புரிந்து கொள்ளல்: அனைத்து நவீன தொழில் நுட்பங்கள் வந்த பிறகு யாரையும் எந்த பொருட்களுக்கும் கையேந்தி நிற்க வேண்டியதில்லை)

  அது போக சீனாவில் உற்பதியாளர்கள் நிறைய எண்ணிக்கையிலான பொருட்களை விற்க விரும்புவார்கள் , ஆனால், அவர்கள் என்றைக்குமே சரியான விலையில் அல்லது வாங்குபவர்களுக்கு குறைந்த விலையில் விற்பதற்கு தயாராயிருப்பார்கள்.பேராசையில் நிறைய விலையை வைக்க மாட்டார்கள் .அதனால் தான் அவர்கள் உலக நாடுகள் முழுவதற்கும் வியாபாரம் செய்கிறார்கள்.
  மா வோவின் கம்யூநிஸ்ட் பின்புலம் , உழைப்பின் பாரம்பரிய ஈடுபாடு ,சமமாக பிரித்து வாழ்ந்து பழகியதன்
  கலாசாரம் , இவைகள் தான் இன்று அவர்களை reasonable ஆக செயல்பட வைத்திருக்கிறது.
  திருப்பூர் போன்ற ஊர்களில் துணிகள் சாயமிடுதலுக்கு ரூ 50-60 லியே 30% லாபம் இருக்கிறதென்றாலும் ரூ 100-110 வைத்து ஏற்றுமதியாளர்களுக்கு பில் செய்வது ஏற்றுமதியை பாதிக்கிறது.

  கேரளாவில் ஆட்டோ நிறய சவாரி செய்து குறைந்த வாடகைக்கு ஓட்டுகிறார்கள். தமிழகத்திலும் ,சென்னையிலும் மீட்டருக்கு எதிராக கோடி தூக்கி ஆட்டோ ஓட்டுனர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் .

  எனவே, ஒட்டுமொத்தமாக தொழில் நுட்பங்களின் மூலமாக அனிவரையும் பங்கேற்க வைத்து , நாடு வளம் பெறுவது தான் நல்ல திட்டமே ஒழிய, தனி நபர் திறமையால், பெரிய அளவில் பலன் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை

  • In Kerala I had nice experience while riding auto rickshaw.
   As for china, it produce very good rugged, cheap power plant machinery. Otherwise power situation in India would have gone worst. Those power plants are good. I have seen some of the plants.

 8. ///இனி ஐஎம்எஃப் கடன் கொடுக்கும் போது இந்தியா கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளை பட்டியலிட வேண்டியதில்லை. ///

  ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நாம் அய்.எம்.எஃப் இடம் கடன் வாங்க வேண்டிய அவசியமே எழவில்லை. இனிமேலும் எழாது. மாற்றாக 2009இல் அய்.எம்.எஃப்க்கு இந்தியா டாலர்களை அளித்து, ஈடாக தங்கம் வாங்கியது :

  http://timesofindia.indiatimes.com/business/india-business/Full-circle-India-buys-200-tons-gold-from-IMF/articleshow/5194338.cms

  இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று ’விளக்குங்களேன்’. பிறகு ரகுராம் ராஜனை ஏசுங்கள்.

  வினவுக்கு ஒரு ஆலோசனை : உங்களுக்கு நல்ல தெரிந்த விசியங்களான சுரண்டல், வர்க போர்,
  செம்புரட்சி போன்றவைகளை பற்றி முழங்குங்கள். ஆட்சேபனை எதுவும் இல்லை. ஆனால் அடிப்படையே தெரியாத சிக்கலான பொருளாதார விசியங்களை பத்தி, சிவப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு ’ஆராய்சி’ செய்தா இப்படி தான் அபத்தமா எழுத நேரிடும்.

 9. While India’s current gold holdings, accounting for just 3.7% of assets, are said to be historically low, buying 200 tons in addition to the 358 tons it already holds is expected to bump up the gold reserves to more than 6%. The dash to gold is prompted by the unsteady dollar and countries such as China, Russia and Brazil have already gone this route(TOI).
  While the silver lining is private reserves, we have a blinkered RBI & GOI response. India has one of the lowest monetary reserves of gold in the world.
  Against a global average of 10.5% RBI holds only 3.7% of its reserves as gold. The EU holds 40% of its reserves in gold and USA – 70%.And while the RBI and GOI gently sleep, the Chinese have grown their gold purchases. China has become world’s 3rd largest consumer of gold – up from a 100 tons to 350 tons. Shanghai Gold Exchange has made it easier for individuals to invest in gold by reducing the transaction size from 1 kg to 100 gm.

 10. அதியமான்!னான் பொருளாதாரநிபுணர் இல்லை! ஆனாலும், அமெரிகாவின் டாலர் மதிப்பு அதல பாதாளத்திற்கும், தங்கம் எட்டாத உயரத்திலும் இருந்த 2009-ல் தஙகம் வாஙகியது, அதுவும் பஙகு சந்தை மூலதனமாக வந்தது(உபரி லாபமாக அல்ல), கடன் வாங்கி கல்யாணம் செய்தது போல ! இக்கட்டான சமயத்தில், தஙக விலையை ஏற்றிக்கொண்டே போக அமெரிக்காவிற்கு உதவியிருக்கிரார்!

  இப்பொது முதலீடு செய்த பணத்தை வட்டியும் முதலுமாக கேட் கத்தான் செய்வார்கள்!முன் கூட்டியே இத்ற்கு ப்ரொவிசன் செய்திருக்க வேண்டுமே இந்த பொருதாளாதார புலிகள்! இறக்குமதியாகும் கச்சா எண்ணையை கட்டுபடுத்த முடியாது, ஆனால் தங்க இறக்குமதியை பட்ஜெட்டின் போதே கட்டுப்படுத்தி இருக்கலாமே! அப்போதைய நிதியமைச்சர், தஙக லாபிக்கு பணிந்தது ஏன்?

  இந்த வருடம், மழையினால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும்போது , விவசாய அமைச்சர் ஏற்றுமதிக்கு துடிப்பது ஏன்?

  இந்த பொருளாதார மேதைகள் இந்திய விவசாயிகள், சாதரண்மக்கள் நலனுக்கு ஆலோசனை கூறுகிறார்களா அல்லது அமெரிக்கநலனுக்கு ஆலோசனை கூறுகிரார்களா?

  வெளியிலிருந்து வந்த அன்னிய முதலீடு எஙகே போனது? அதில் கிடைத்த லாப பங்கீடு எஙகே?
  அமெரிக்க இந்தியர்களின் உழைப்பும், மேற்காசிய உழைப்பாளிகளின் உழைப்பும் டாலர்களாகத்தானே வருகிறது? அது எப்படி செலவாயிற்று? பாமாரர்களுக்கு கொஞ்சம் விளக்குங்களேன்!

  சும்மா தஙகம் வாங்குவது மட்டும், வளர்ச்சிக்கான இன்டிகேட்டெர் ஆகாது!

  சீனா வாங்கியது, ஜப்பான் வாங்கியது என்று சொல்லாதீர்கள்! அது அவர்களது வியாபார உபரியான டாலரில் வாங்கியிருப்பார்கள்! நமக்கு ஏற்றுமதி பற்றாக்குறைதானே!

  • Ajaathasathru,

   தங்கம வாங்கியதை பத்தி நான் பேச வில்லை. 1950களில் இருந்து வருடந்தோரும் நாம் அய்.எம்.எஃப் இடம் டாலர் பற்றாகுறையை சமாளிக்க டாலர் கடன் வாங்கி சமாளித்தோம். இது ஊதி பெருகி, 1991 இனிமேலும் கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு, நம் தங்கதை அடமானம் வைத்து டாலர் கடன் வாங்கி, திவால் நிலையை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். (உங்களை போன்ற சோசியலிசம் பேசும் பொருளாதார நிபுணர்களின் அரிய ஆலோசனைகளின் படி அதுவரை செயல்பட்டதால் வந்த வினை அது). இன்று அய்.எம்.எஃப் இடம் கடன் வாங்கவே தேவையில்லா நிலை ஏற்பட்டு 15 ஆண்டுகளாகிறது. மேலும் நம் கையிருப்ப்பு டாலர்கள் அன்று மிக அதிகமாகா சேர்ந்ததால், அதே அய்.என்.எஃப் இடமே திரும்பி டாலர்களை அளித்து, தங்கத்தை வாங்கும் அளவுக்கு பலமான நாடாக மாறினோம். எப்படி இந்த மாற்றம் வந்தது என்ற கேள்வியை பல காலமாக கேட்டும், நேர்மையான பதிலை நீங்களோ, வினவு தோழர்களோ இதுவரை அளிக்க முன்வரவில்லை. ஏனென்றால் உங்களால் முடியாது. அல்லது தாரளமயமாக்கலின் விளைவு தான் இந்த நல்ல மாற்றம் எனப்தை ஒத்துகொள்ள வேண்டியிருக்கும்.

   இன்று ஏற்பட்டுள்ளது தற்காலிக சிக்கல். அதற்க்கு முக்கிய காரணம் நம் பற்றாகுறை பட்ஜெட்டுகள் தான். ரூபாயின் மதிப்பு அதை ஒட்டி தான் மாறும். மற்ற காரணிகள் அப்பறம் தான்.

   ஆனால் 1991 வரை நாம் இருந்த மிக பலகீனமான நிலையை போல் இனி ஏற்படாது. அய்.எம்.எஃப் இடம் கடன் வாங்கிய காலங்கள் பற்றி நேர்மையாக் பேச முடிந்தால் தொடரலாம். இல்லாவிட்டால் நீட்ட நீட்டமாக தொடர்ந்து நீங்க எழுதுவதை….

 11. நாட்டினுடைய அயல் நாட்டு நாணய சொத்து முழுவதும், அமரிக்க டாலரில் மட்டும் வைப்பது சரியில்ல என்று முடிவு செய்து, மொத்த சொத்துக்களில் ஒரு பகுதியை தங்கமாக வைத்திருக்கலாம் என்று ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தங்கத்தில் வைக்கப்படுகின்றன.

  அமரிக்காவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை (CAD) அதிகமாக இருந்தாலும், அமெரிக்க நாணயமான usd மதிப்பு கூட்டப்பட்டுகொண்டே போவதற்கு காரணம் , பல்வேறு நாடுகளும் தங்களுடைய அயல் நாட்டு நாணய சொத்துக்களை USD ல் மட்டும் வைதுகொண்டிருப்பது தான். ஒரு நாணயத்தையே எல்லோரும் தேடுகிறபோது, அதனுடைய மதிப்பு கூடத்தான் செய்யும், எனவே அடிப்படையில் பலமில்லாமல் அமரிக்க பொருளாதாரம் இருந்தாலும் , அதனுடைய நாணயம் மதிப்பு கூட்டப்பட்டுகொண்டு இருப்பதற்கு இது தான் காரணம்.
  பெட்ரோலியம் விற்கிற மத்திய கிழக்கு நாடுகள் சவுதி அரேபியா,போன்றவைகளுக்கு ராணுவ ர்தியில் பாதுகாப்பு அளித்து அவைகளை USD லியே ஆயில் பில்களை INVOICE செய்யச்சொல்லி உலக ஆயில் வர்த்தகம் முழுவதும் USD லியே நடக்கும் வகையில் அமரிக்கா கட்டுபாட்டில் வைத்திருக்கின்றது.அதனால் தான் பெட்ரோ டாலர் என்ற பெயர் வந்தது
  குருமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள கீழ்கண்ட கட்டுரையை படிக்க :
  http://www.thehindubusinessline.com/opinion/globalised-dollar-dollarised-world/article4905449.ece

 12. யூரொ டாலர் எனப்படும்,அமெரிக்காவிற்கு வெளியெ புழங்கப்படும் செலாவணிகள் டாலருக்குப்பதில் யூரொவிற்கு கொஞசம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகிறது! டாலரின் மதிப்பு குறைந்து போனதால் , அமெரிக்கர்களைவிட, இந்தியா,சீனா,ஜப்பான் தான், வாங்கும் சக்தியை இழந்து மிகவும் பாதிப்படைந்தது! பொருளாதார புலிகள் உடனே தங்கத்துக்கு பாய்ந்தார்கள்!நடுத்தர மக்கள், மத வாத சக்திகளால் தூண்டிவிடப்பட்டு-அட்சய த்ரிதி கப்சாக்கள் கிளப்பிவிடப்பட்டு, செயற்கையாக இந்தியாவில் தஙகத்துக்கான தேவை உயர்த்தபட்டது! அந்தநேரத்தில் அரசும் தன் கைவசம் இருந்த, கடனாக, முதலீடு ஆக வந்த, முறையற்ற சலுகைகள்டுடன் வந்த, மூலதணமாக பயன்பட வேண்டிய அன்னிய செலாவணியை, ஊதாரித்தனமாக தங்கம் வாங்க பயன்படுத்தலாமா? அது அமெரிக்க தூண்டுகோளால்நடந்ததா?

  ஏற்கென்வே, என்ராண்-1, திருவாளர் நரசிம்மராவ் அள்ளிகொடுத்தது, பின்னர் எண்ராண்-2 மன்மோகன் அள்ளிக்கொடுத்தது, இதையெல்லாம் பாடமாக எடுத்துகொள்ளாதது ஏன்?

  • Euro is not a great currency as you describe,it has poor fundamentals and most of the member countries struggle to pay back their sovereign credit/loans.

   US Dollar or USA is still trusted much much more than EU in any means and not only India/China/Japan but most countries still run on the Dollar Standard.

   And nothing wrong with Gold,it may be religious also but Gold is still a highly trustworthy investment providing hedge against inflation,so unless you can provide options dont criticize a pre existing good idea.

 13. இன்றைய இந்தியாவின் நிதி தலைமை, இரண்டு தமிழர்களிடம் இருப்பது பற்றி பெருமைபடலாம் தான்! ஆனால். அன்று வரி ஏய்ப்பு செய்யும் பெரு முதலாளிகளுக்கு எதிராக, மாற்று வரி கொண்டுவந்த ப.சி இப்பொதும் புறக்கணிக்கப்படுகிராரா? அவரும் உள் கையாக செயல்படுகிராரா? மத்தியில் எந்த அரசு ஏற்பட்டாலும் இந்த வல்லுனர்களை அசைக்க முடியவில்லையெ?

 14. வெளியிலிருந்து வந்த (கடந்த 23 வருடங்களில்) அன்னிய முதலீடு எஙகே போனது? அதில் கிடைத்த லாப பங்கீடு எஙகே?

  அதியமான்

  இவர் கேட்டுள்ள இந்த கேள்விக்கு மட்டும் கொஞ்சம் பதில் தர முடியுமா?

  பதில் பார்த்து தொடர்கின்றேன்.

  • எல்லாம் உங்களை போன்ற ஏற்றுமதியாளரிடம் பத்திரமாக உள்ளது ஜோ !! :))

   அன்னிய முதலீடுகள் உள்ள இன்னும் பத்திரமாக இருப்பதால் தான் வண்டி ஓடுது. இல்லாவிட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு இன்னேறம் 500க்கு சரிந்து, 1991ஐ விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம். try to look at the big picture and increase in reserves over the decades. also pls compare the same with China.

 15. PC is a lawyer masquerading as an economist/finance minister,he is not an expert in anything.

  VDIS is a bogus scheme allowing black money to be legalized instead of prosecuting them.

  PC is only an assistant to the IMF Mafia.

 16. @K.R.Athiyaman

  நான் முதலாளித்துவவாதி. ஆனாலும் உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

  அந்நிய முதலீடு கிடைப்பதால் நாம் வளர்க்ிறோம் என்பது ஏமாற்று வேலை

  பக்கத்து வீட்டுக்காரன் கொஞ்ச நாள் தங்கத்தை கொடுத்து வைத்து இருக்கிறான் . நம் வீட்டில் இப்போது தங்கம் இருக்கிறது அதனால் நாம் பணக்காரன் ஆகிவித்டோம் என்பதஎப்படி ஏற்று கொள்வது ?

  நமக்கே சொந்தமாக பொருள் உற்பத்தி செய்ய தெரியும் போதுதான் நாம் வழர்கிறோம் என்று அர்த்தம் .

  ஒரு என்ஜின் பண்ண தெரியாத மாருதி, ஹீரொ

  ஒரு ஸாஃப்ட்‌வேர் பண்ண தெரியாத இன்போ ஸிஸ்
  இவை எல்லாம் வளர்ச்சியாக தெரியவில்லை

  Our nation is growing because of the KINDNESS OF STRANGERS

  Recently some analysts were debating to include environmental cost in the GDP to reflect the true wealth state of nation. If we include that factor India is declining!

  • Exactly Mr. Raman.. I have told this to many of my friends… All the grown nations today (including RUSSIA, Actually before 1965 RUSSIA was far more ahead than the US in SPACE reseaerch) did not become grown nations because of FDI… Its becos they excelled in science and technology… The success of USA lies totally on this… If u closely monitor the Nobel prizes awarded every year for science most of them will be for US Nationals… In case of INDIA after independance we are NOT able to produce even one NOBEL Prize for science… Thinking INDIA will become super power by FDI and IT & BPO jobs ia the most STUPID thing that anyone person can do… It is a big topic why INDIA is not eble to do it.. A simple reason is our people is passionalte only about money just compare GOOGLE and INFOSYS.. GOOGLE can conviniently make more money from internet business but they wanted to do something new so they came up with G – GLASS.. But see INFOSYS they concentrate only on getting service products and make money… People are NOT understanding the nearing disaster the AFRICAN countries are getting educated in another 10 years they will be provided cheaper labour than INDIA the companies will automatically go there.. Thena wat wil be left for us ????… But if u see US and other western cuntries they will keep on inventing and becoming richer…. Even if we consider the so called scintists of INDIA they claim themselevs as scientes for reverse engineering the russian CRYO engine what shud we say to these people ????

   • Agreed. USD is accepted as a reserve currency because of its science and technology. And innovative products! Flights,Transistors,Computers,software,GPS….

    //what shud we say to these people //

    if you say it to Indians, they will be talking about how their ancestors knew turmeric is an anti septic and blah blah.
    When One of the Chinese traveler visited Tamil Nadu, he has written
    “These people have no knowledge of nails and needles. They dont know how to stitch clothes they just put it around their body”

    We never invented anything useful. Our business innovation is in opening new colleges and schools…thats it

    Poets are our scientists!
    Tamil teachers are our Archeologists!
    Movie Story writers are our leaders!
    Movie stars are our Role models!
    Watching soaps and playing cricket are our only hobby!

    // scientist for reverse engineering the Russian CRYO engine //
    They have been working on that project for last 2 decades , I think.

   • எங்களிடம் இல்லாத டெக்னாலகியா?
    மஞ்சல் துண்டு/பச்சை புடவை பேனரைப் பார்த்துமா நம்பிக்கை இல்லை உங்களுக்கு?

 17. //(உங்களை போன்ற சோசியலிசம் பேசும் பொருளாதார நிபுணர்களின் அரிய ஆலோசனைகளின் படி அதுவரை செயல்பட்டதால் வந்த வினை அது). //………

  அதியமான் அவர்களே! முதன்முதலாக அய் எம் எஃf-ல் கடன்வாங்கியது எந்த பொருளாதார நிபுணர்?
  அய்ந்தாயிரம் கொடி அய் எம் எஃf கடன் அப்படியே ஆசியாட் விளையாட்டுக்கு திருப்பி விடப்பட்டு, புஸ்வாணமாகிவிட்டது! எந்த வளர்ச்சித்திட்டத்துக்கும் பயன்படுத்தபடவில்லை! அதற்கு பிறகு கடன் வாங்கியவர்களும் தங்கள் பையைநிரப்பிக்கொள்ளும் திட்டங்கள் தவிர, வேறு சொசியலிச திட்டங்களுக்கு செலவிட்டதாக தெரியவில்லை!இந்திராவுக்குப்பிறகு யாரும் கனவில் கூட சொசியலிசம் பற்றி பேச வில்லை! அதியமான் நடுனிலையாக பேச கூடாதா?நாட்டுக்குநன்மை பயக்குமெனில் எந்த இசமென்றால் என்ன?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க