Saturday, April 26, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விதனியார் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும் - சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் !

தனியார் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும் – சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் !

-

பெற்றோர்களே, மாணவர்களே !
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்கப் போராடுவோம்

தமிழக அரசே!
கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்களுக்கு என்ன தண்டனை?

பொதுக் கூட்டம்

நாள் : 21.09.2013 சனி, மாலை 5.00 மணி
இடம்
: போல் நாராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம்

தலைமை :
திரு G ராமகிருஷ்ணன், தலைவர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.

வரவேற்புரை
திரு. தக்ஷ்ணா கலையரசன், செயலாளர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.

கருத்துரை
திரு வி. வி. சுவாமிநாதன், முன்னாள் அமைச்சர், சிதம்பரம்.

திரு C மதியழகன், தலைவர்
அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் சங்கம்,
தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம்.

வழக்கறிஞர் ம. பாரி, உயர்நீதி மன்றம், சென்னை.

வழக்கறிஞர் சி ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

திரு வை. வெங்கடேசன், மாவட்டத் தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம்.

வழக்கறிஞர் சி செந்தில், மாநில துணைச் செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம்

நன்றியுரை
திரு இரா செல்வக்குமார்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.

cdm-meeting

தகவல் :

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
பேச : 9790404031, 9443876977

  1. அனைவருக்கும் தரமான, இலவச கல்வி அரசு அளிக்க வேண்டும் என்பது மிகச் சரி. ஆனால், அதற்காக தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க வேண்டும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.

    அரசுப் பள்ளிகளில் 80% மாணவர்களும், தனியார் பள்ளிகளில் மற்றவரும் படிக்கின்றனர். இந்த 20% மாணவர்கள் அரசுப் பள்ளியில் இடம் கிடைக்காததால் இப்படி செய்யவில்லை. விரும்பிதான் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். அரசுப் பள்ளிகள் மோசம், தனியார் பள்ளிகள் நல்லவை என்ற பிம்பம் பரவி விட்டது. சமீபத்தில், மும்பை நகரத்தில் தனியார் பள்ளிகள், மாநகராட்சி பள்ளி மாணர்வர்கள் இடையே நடந்த ஆய்வில் இருவரும் சம அளவு மோசமான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டது. தமிழகத்தில் இப்படி ஏதும் ஆய்வு நடந்தனவா என தெரியவில்லை. அரசுப் பள்ளிகள் உண்மையிலேயே மோசம் தானா, அல்லது அது மாயையா என அரசு முதலில் கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும். ஒருவன் இலவசமாக ஒரு பொருளை தருகிறான். மற்றவன் அதிக விலை வைக்கிறான். எனினும் மக்கள் இரண்டாவது ஆசாமியிடமே செல்கின்றனர். அவனிடம் விலை குறைக்கும் படி போராட தயார். ஆனால், இலவச ஆசாமியிடம் செல்ல விருப்பமில்லை. இதென்ன கூத்து?

    அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தி, அவற்றின் மேலுள்ள மக்கள் நம்பிக்கையும் கூட்ட வேண்டும். தனியார் பள்ளிகள் தானாக வலுவிழந்துவிடும். நான் முன்பே ஒருமுறை எழுதி இருந்தேன். அரசுப் பள்ளிகள் என்னும் கோட்டின் நீளத்தை கூட்டினால் தனியார் பள்ளி என்னும் கோட்டின் நீளம் தானே சுருங்கி விடும். இதுவே சரியான வழி.

      • டாஸ்மாக் உதாரணம் சரி அல்ல. அரசு பள்ளியின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
        மற்ற அரசு ஊழியர்கள் மோசமாக இருக்கும் போது அரசு ஆசிரியர்கள் மட்டும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது கடினம். தீர்வு கடினம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க