Sunday, August 9, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !

வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !

-

ருபத்து நான்கு மணி நேரமும், தடையில்லா மின்சாரம், மாநிலம் முழுவதும் தண்ணீர் விநியோகம், அபரிமிதமான விவசாய வளர்ச்சி, வந்து குவியும் அந்நிய முதலீடுகள், அவை உருவாக்கும் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் என மோடியின் குஜராத் குறித்து பொய்யானதொரு பிம்பம் உருவாக்கப்படுகின்றது. இவற்றுக்கு மத்தியில் குஜராத் குறித்த உண்மைச் செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படியே கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் வறுமைக் கோட்டுக்குக்  கீழ்  உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 39.06% அதிகரித்துள்ளது.  கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் தமிழ்நாடு, ஆந்திராவிற்குப் பின்னால் இந்தியாவிலேயே 11வது இடத்தில் குஜராத் இருக்கிறது.வாடகைத் தாய்மார்கள்

ஆனால் வேறொரு விசயத்தில் உலகிலேயே முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கிறது குஜராத். பணத்திற்காகத் தாய்மையை விற்கும் பரிதாபத்துக்குரிய வாடகைத் தாய்களின் எண்ணிக்கையில் உலகளவில் குஜராத்துக்குத்தான் முதலிடம்.

கடந்த காலங்களில் ‘வெண் மைப் புரட்சி’யின் அடையாளமாக, அமுல் நிறுவனத்தின் பிறப்பிடமாக, அறியப்பட்ட ஆனந்த் நகரம் இன்று, வாடகைத்தாய் முறையின் மையமாகி விட்டது. ஆண்டுக்கு 30,000 குழந்தைகளையும் உற்பத்தி செய்து, ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் இந்தத்துறையின், தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு கருத்தரிப்பு மையங்கள்  இந்நகரம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ஆனந்த் நகரம் மட்டுமன்றி, குஜராத்தின் அகமதாபாத், ஜாம்நகர், சூரத் என மற்ற நகரங்களிலும் இத்தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.

இன்விட்ரோ கருத்தரிப்புமுறை (IVF) என்ற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியது. அதே முறையில் கணவனின் விந்தணுவையும், மனைவியின் கருமுட்டையையும் இணைத்து சோதனைக் குழாயில் உருவாக்கப்படும் கருவை தனது கருப்பையில் சுமந்து, குழந்தையாகப் பெற்றுத்தரும் பெண்ணைத் தான் வாடகைத்தாய் என்கிறார்கள். பிறக்கும் குழந்தை தனது தாய் தந்தையின் மரபணுக்களைத்தான் கொண்டிருக்கும் என்பதும், அது பத்து மாதம் சுமந்த வாடகைத்தாயின் சாயலைக் கூடக் கொண்டிருக்காது என்பதும்தான் இந்த வாடகைத்தாய் முறை பிரபலமடைவதற்கு காரணம். இதனால்தான் வசதி படைத்த இந்தியர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு தம்பதியரும், பிள்ளைப்பேறுக்காகத் தேடி வரும்  புனிதத் தலமாகியிருக்கிறது மோடியின் குஜராத்.

நாய்னா படேல்
வாடகைத் தாய் வியாபாரத்தை எவ்வித உறுத்தலுமின்றி நடத்தி வரும் குஜராத்தை சேர்ந்த மருத்துவ வியாபாரி நாய்னா படேல்

குழந்தைப் பேறு இல்லாத அமெரிக்க, ஐரோப்பியத் தம்பதிகள் தங்களது நாட்டில் இதுபோன்று குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் மிக அதிகமாகச் செலவாகும். பல நாடுகளில் வாடகைத்தாய் முறையும் வாடகைத் தாய்க்குப்  பணம் கொடுப்பதும் தடைசெயப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஆகும் செலவில் ஒரு சிறுபகுதியைக் கொண்டே குஜராத்தில் வாடகைத் தாய்களை அமர்த்திக் கொள்ள முடியும். இதனால் வாடகைத் தாய்களைத் தேடி வரும் வெளிநாட்டுத் தம்பதிகளின்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட பாலினத்தில் குழந்தை வேண்டும் எனக் கேட்கும் தம்பதிகளுக்காக வாடகைத் தாய்மார்கள் அத்தகைய குழந்தை உருவாகும் வரை மீண்டும் மீண்டும் கருத்தரிப்புச்  சிகிச்சைக்கு உட்பட வேண்டும்.  குழந்தைப்பேறு காலம் முழுவதும் இந்த வாடகைத் தாய்மார்கள், குடும்பத்தைப் பிரிந்து மருத்துவமனை ஏற்பாடு செய்து தரும் கொட்டடியில் அடைந்து கிடக்க வேண்டும். குழந்தை பிறந்த பின், தாய்மையின் ஹார்மோன் மாற்றங்கள், ஏற்படுத்தும் உணர்ச்சிகளை எதிர்கொண்டு, குழந்தையுடனான பிணைப்பை அறுத்தெறிந்து, குழந்தையை ஒப்படைத்து விலகிவிட வேண்டும்.

இவ்வளவு துன்பங்களை எதிர்கொண்ட பிறகும் அவர்களுக்குப் பேசிய பணம் கிடைப்பதில்லை. வாடகைத்தாய் முறையில் குழந்தைபெறச் செலவாகும் மொத்த தொகையில் வெறும் 2% மட்டுமே வாடகைத்தாயாக வரும் பெண்ணிற்குக் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் 2 முதல் 3 லட்சம் வரை தருவதாகக் கூறினாலும்,  குழந்தைப்பேறுக் காலத்தில் அந்தப் பெண்ணைப் பராமரிக்கும் செலவுகள் அனைத்தையும் அவளது பங்கிலிருந்தே கழித்துக்கொண்டு இறுதியில் 12,000 முதல் 15,000 வரை கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். அதையும் கூட பல தவணைகளில் தருவதால் படிப்பறிவற்ற பல பெண்களுக்குத் தாங்கள் ஏமாற்றப்பட்டது கூடத் தெரிவதில்லை.

வெளிநாட்டுப் பெண் அட்ரீனி ஆரிஃப்
குஜராத்தை சேர்ந்த வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் ‘பெற்றுள்ள’ வெளிநாட்டுப் பெண் அட்ரீனி ஆரிஃப்

குஜராத்தின் இளம் பெண்கள், வாடகைத் தாயாக 2 முதல் 5 முறை வரை குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இதில்  அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும், அபாயங்களும் ஏராளம். அறுவை சிகிச்சைதான் சுலபமானது, குழந்தைக்கு பாதுகாப்பானது என்பதால் எந்த வாடகைத்தாயும் இயற்கையாக பிரசவிக்க அனுமதிக்கப் படுவதில்லை. இதன் காரணமாக ஆரோக்கியமான பெண்களே இரண்டு குழந்தை பெற்றபின் நோயாளியாகி விடுகின்றனர். ஊட்டச்சத்துக் குறைவு, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலைமையோ ஆபத்தானது.

குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக, கடன்களை அடைப்பதற்காக, கணவனின் மருத்துவச் செலவிற்காக எனத் தங்களது குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே குஜராத் பெண்கள் தங்களது கருப்பையை வாடகைக்கு விட வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

பத்தாண்டுகளில் குஜராத்தை பன்னாட்டு மூலதனத்தின் கருப்பையாக மாற்றியிருக்கும் மோடி, தனது மாநிலத்துப் பெண்களின் கருப்பையை அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் வாடகைக்கு விட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதில் அதிசயமில்லைதான்.

– கதிர்
___________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013
___________________________________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. குஜராத் பெண்களின் கருப்பையே வெளி நாட்டு தம்பதிக்கு விற்பது ….எந்த விதத்தில் நியாயம் …

  தேச பற்று …என்று பிற்றி கொள்ளும் காவி குண்டர்கள் ..இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்

  பத்தாண்டுகளில் குஜராத்தை பன்னாட்டு மூலதனத்தின் கருப்பையாக மாற்றியிருக்கும் மோடி, தனது மாநிலத்துப் பெண்களின் கருப்பையை அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் வாடகைக்கு விட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதில் அதிசயமில்லைதான்.

  • மணி அண்ணேன், சும்மா மோடி மோடி ன்னு பினாத்துறதுக்கு பதிலாக கட்டுரையில் எழுதியதற்க்கு மறுப்பு எழுதலாமே ..

 2. குஜராத்தில் நீங்கள் சொல்லும் இவ்வளவு கொடுமைகள் செய்திருந்தால் மூன்று முறை மோடியை மக்கள் தேர்வு செய்வார்களா ??

  • காங்கிரசைக் கூடத்தான் ஊழல் கட்சி ஊழல் கட்சின்னு கூப்பாடு போடறீங்க செங்கோட்டயில அதிகம் தேசியக் கொடிய ஏற்றினது அந்தக் கட்சிதானே. பத்து வருசமா சோனிய வெளிநாட்டுக்காரின்னும் கத்திப் பார்த்தீங்க மக்கள் அந்தக் கட்சியத்தானே தேர்ந்தெடுத்தார்கள்.

   • Before the entity called BJP came,Congress used to win full majorities,until 1991.

    From then on Congress individually as a party is limited to 150-200 seats and even votebank wise is heavily reduced.

    1996-BJP voting % is 20.29,Congress 29%

    1998:37.21%,

    1999:37.06,28.3

    2004:33.3,35.4

    2009: 33.3,35.4

    You can see that BJP gets 33% vote consistently even in its worst days and without any strong allies apart from the usual SAD/JDU/SS.

    Shiv Sena vote has split into 2,JDU is not there now and many other things,

    BJP has strength and governments in big important states.

    It had its first government in Karnataka and could easily make the next one in Telengana.

    BJP has cut the strength of Congress into 2,even TN and Kerala people now realize the value of great leaders like Namo and second level leaders.

    It is a matter of time before all the pazhaya percuhalis get buried.

    • அதென்ன namo .. மோடி னு சொல்ல வெக்கமா இருக்கா.. இந்து வெறியன்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது இரக்கம், கருணை , மானம் முக்கியமா வெட்கம் இருக்கவே கூடாது.

     • ஏன் இப்படி வெட்டி திண்ணை அரட்டை கணக்காக கருத்து எழுதுகிறீர்கள்?

      ஆகபூர்வமாகக் சிந்தனை செய்து கருத்து வெளியிட வேண்டுகிறேன்.

    • நீங்களே 1991 அப்புரம் தான் BJP ன் சதவிகிதம் பார்லிமெண்ட்டுல கூடுச்சுனு ஒத்துக்கிறீங்க. 1984 ல் இரண்டே இரண்டு MP seat வச்சிருந்த கட்சி பாபர் மசூதி இடிப்பு மூலமாக இந்து மத வெறியை தூண்டி பலாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொண்றுதான் ஆட்சிக்கு வந்தது. என்னமோ மக்கள் தொண்டாற்றி ஆட்சியை பிடித்தது போல பீத்திக்கிறிங்க.

 3. இந்திய மக்கள் முடிவு செய்து விட்டார்கள் .

  நீங்கள் மோடிக்காக இலவச விளம்பரம் செய்தது போதும் ..

  மோடி வெற்றி பெறுவது நிச்சயம் ……….

  • அப்பாவி முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்தவர்களை கொண்டாடியவர்களின் நிலை இது தான். மோடி மோடி என்று பிதற்றுபவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களையும் குழந்தைகளையும் கொஞ்சம் நினைத்து விட்டு எழுதுங்கள்.

   • கௌசர் பானுவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் இந்த நிகழ்வை மறுக்கிறார். பிணத்தின் கருப்பையில் குழந்தை இருந்ததாக கூறுகிறார். ஆனால், 2002 இல் பரிசோதனை நடந்த சமயம் அது அடையாளம் காணப்படாத உடல் என்று பதிவிடப்பதாகவும், பிறகு 2004 இல் கௌசர் பானு என்ற பெயர் சேர்க்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. உடல்கள் எரிக்கப் படியால், அடையாளம் கண்டிருக்க முடியாது என்றும் சொல்கிறார்கள். இந்த கொடூர நிகழ்வை நேரில் பார்த்ததாக சிலர் சொல்கிறார்கள். SIT அறிக்கை இப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்று சொல்லி, அதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. நரோடா பாடியாவில் கொல்லப்பட்டவர்கள் 97. இவர்களில் கர்பிணிப் பெண்கள் வேறு யாராவது இருந்தார்களா என்பதும், ஏதாவது ஒரு உடலின் போஸ்ட் மார்ட்டம் படி கருப்பை கிழிந்ததாக கண்டறியப் பட்டதா என்பதும் தெரியவில்லை. வேறேதாவது விவரம் தெரியுமா?

    இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் தான் கொடூரம் என்பதில்லை. கொலையே கொடூரம் தான். மேலே உள்ள பத்தியை எழுதக் கூட மனம் கஷ்டமாக இருந்தது.

    http://www.dnaindia.com/india/1365274/report-2002-riots-witness-questions-doc-s-statement-on-pregnant-woman

    • நரோடா பாட்டியா வழக்கு தீர்ப்பு ஒரு பகுதியை வாசித்தேன். Accused-18 பாபு பஜ்ரங்கி இந்த கொடூர செயலை செய்தார் என்று தீர்ப்பு சொல்கிறது. நீதிபதி எப்படி இதை முடிவு செய்தார் என்பதை இனிதான் படிக்க வேண்டும். தீர்ப்பு அடிப்படையில் இந்த மிருகம் இந்த கொடூர செயலை செய்தது என்றே நான் இப்போது நம்புகிறேன்.

     http://www.cjponline.org%2FgujaratTrials%2Fnarodapatiya%2FNP%2520Full%2520Judgmnt%2FNaroda%2520Patiya%2520-%2520Common%2520Judgment.pdf

     பக்கம் : 243 மற்றும் 258.

 4. வினவண்ணே!!
  மோடி ய விரட்டுரது இருக்கடும்.!! தங்கள் மனசுல யாரு அடுத்து ஆட்சிய புடிச்சா நல்லா இருக்கும்நு நெனைக்குறேன்க.?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க