வாக்களிக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள்!
எர்வாமேட்டின் விளம்பரமும் மோடி விளம்பரமும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நம்மை பிறாண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நினைவு தெரிந்த நாள் முதலாய் பல்வேறு வழிகளில் செய்யப்படும் விளம்பரம் ”தவறாமல் வாக்களியுங்கள், அது நம் அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயக கடமை”. எர்வாமேட்டினின் தராதரத்தை ஒருமுறை வாங்கிப் பார்த்தால் தெரிந்துவிடும். என்ன, ஆயிரமோ ரெண்டாயிரமோ வீணாகித் தொலையும். மோடியின் லட்சணத்தை அறிந்துகொள்வது சற்றே சிரமம். அதற்கு கொஞ்சம் அறிவு, நியாய உணர்வு, மனிதாபிமானம் மற்றும் நாம் மந்தைகள் அல்ல எனும் தெளிவு என சில தகுதிகள் அவசியப்படுகின்றன, அது ஆயிரம் ரெண்டாயிரத்தில் முடியும் சமாச்சாரமல்ல. ஆனாலும் எர்வாமேட்டின் வளர்ச்சியும் மோடியின் வளர்ச்சியும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அம்பலப்பட்டு விடும் என்பது நிதர்சனம்.
ஆனால் ஓட்டு போடச்சொல்லி நம்மை கேன்வாஸ் செய்யும் விளம்பரங்கள், சேலம் சிவராஜ் வைத்திய சாலை விளம்பரங்களைப் போல அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நம்மைத் துரத்துகின்றன. ஊடகங்கள், நட்சத்திரங்கள் தொடங்கி ஹீரோ ஹோண்டா போன்ற பெருநிறுவனங்கள் வரை இத்தகைய விளம்பரங்களை மேற்கொள்கிறார்கள். மதக்கலவரங்கள் பற்றியோ, விவசாயிகள் தற்கொலைகள் பற்றியோ எந்த கருத்தையும் முன்வைத்திராத அரசு அதிகாரிகள், நடிகர்கள் மற்றும் மேட்டுக்குடி கனவான்கள் கூட இந்த வேள்வியில் மனமுவந்து பங்கேற்கிறார்கள். எல்லோரும் வாக்களித்தால் சகல பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என சில அறிவுஜீவிகள் சொல்கிறார்கள். வாக்களிப்பது நம் கடமை, அதை செய்யாதவன் எந்த உரிமையையும் கேட்க தகுதியற்றவன் என அச்சுறுத்துகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்.
தற்சமயத்துக்கு ஆனந்த விகடன் குழுமத்தின் தேர்தல் ஆலோசனை ரொம்பவே தூக்கலாக இருக்கிறது. வாக்களிப்பது நம் கடமை, உரிமை & பெருமை எனும் முழுப்பக்க விளம்பரம் விகடன் குழுமத்தின் சகல இதழ்களிலும் தவறாது இடம் பிடிக்கிறது. ஏப்ரல் இரண்டாம் தேதியிட்ட ஆனந்த விகடன் தலையங்கத்தில் “மாறிவரும் நவீன உலகுக்கு ஏற்ப இந்தியாவுக்கான பாத்திரத்தை வடிவமைக்கும் முக்கியமான பணி நம் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தவகை விளம்பரங்களைப் பார்க்கையில் ஒரு மனிதன் ஜட்டி போடுவதை விட ஓட்டு போடுவது முக்கியமானது எனும் முடிவுக்கு எல்லோரும் வந்தாக வேண்டும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடும் என சிலாகிக்கப்படும் இந்த வாக்குரிமை எப்படி நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமில்லையா? அதைப்பற்றி ஏன் இந்த கும்பல் பேச மறுக்கிறது?…
அவர்கள் பேச மறுப்பதை நாம் விவாதிக்கலாம்.
யார் இந்த தேர்தல் கமிஷன்? என்ன அதன் அருகதை?
முதலில் இந்த உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழாவை நடத்துபவர்களிடமிருந்து ஆரம்பிப்போம். பொதுவாக நம்பப்படும் கருத்து. இந்தியாவின் தேர்தலானது தேர்தல் கமிஷன் எனும் தன்னாட்சி பெற்ற அமைப்பால் நடத்தப்படுகிறது, தேர்தல் காலத்தில் நாட்டின் (அல்லது மாநிலத்தின்) நிர்வாகம் முழுதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும். இத்தனை பெரிய பொறுப்பை சுமக்கும் இந்தத்துறை எத்தனை பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும்? ஆனால் உண்மையில் இங்கே பணியாற்றுபவர்கள் சில நூறு பேர்தான். கலெக்டர், போலீஸ், தாசில்தார் போன்ற அரசு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழும் அவர்களிடம் பணியாற்றும் அரசு ஊழியர்களாலும்தான் தேர்தலானது நடத்தப்படுகிறது.
உங்களுக்குத் தெரிந்த நேர்மையான, அரசியல்வாதிகளின் ஊழலுக்கு துணைபோகாத அதிகாரிகள் பெயரை பட்டியலிடுங்கள். நாளெல்லாம் முக்கி முக்கி யோசித்தாலும் சகாயம், நரேஷ் குப்தா என ஒன்றிரண்டு பெயர்களுக்கு மேல் உங்களால் சொல்ல முடியாது. தமிழகத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு ஜெயலலிதாவுக்கு வாழ்த்துப்பா மட்டுமே பாடும் அதிமுக பொதுக்குழுவைவிட கீழான தரத்தில் நடந்தது. இந்த அதிகாரிகளது பங்கேற்பில்லாமல் எந்த ஒரு ஊழலும் மாவட்ட அளவிலோ மாநில அளவிலோ நடக்க வாய்ப்பில்லை. தேசிய அளவிலான ஊழல்கள் எல்லாவற்றிலும் அரசு அதிகாரிகள் சிக்குகிறார்கள். இது சுடுகாட்டு கொட்டகை முதல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வரை அனைத்து ஊழல்களுக்கும் பொருந்தும்.
போலீசைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் ஒரு பெண் சினிமாவுக்கு போகலாம், வேலைக்குப் போகலாம் ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் இருக்கக்கூடாது என அரசாங்கமே கண்டிப்பாக சொல்லியிருக்கிறது. ஆக, ஒரு பெண்ணைக்கூட நம்பி ஒப்படைக்க முடியாத துறை என அரசாங்கத்தாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட அரசின் ஓர் அங்கம் நம் காவல்துறை. இப்படி வருடத்தின் எல்லா நாட்களிலும் ஊழல் செய்கிற அதிகார துஷ்பிரயோகத்தில் ஊறித் தேறிய இந்த அரசு அதிகாரிகளை வைத்து தேர்தலை நேர்மையாக நடத்த முடியுமா? தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் இவர்கள் எல்லோரும் புனிதர்களாகி விடுவார்களா?
இன்னமும் உங்களுக்கு தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இருக்கும். அவர்கள் கடுமையாக கண்காணிக்கிறார்கள். பணம், பொருள் மற்றும் கள்ளச்சாராயம் என ஏராளமானவை கைப்பற்றப்படுகின்றன. எல்லா கட்சிகளும் தேர்தல் கமிஷனை கடுமையாக திட்டுகின்றன், ஆகவே தேர்தல் நேர்மையாக நடக்கிறது என நாம் உறுதியாக நம்பலாமென பரவலாக கருத்துக்கள் நிலவுகின்றன.
ஒவ்வொருவரும் இரண்டு முறை ஓட்டுப் போடுங்கள் என வெளிப்படையாக சொன்ன சரத்பவார், முஸ்லீம்களை பழிவாங்க எங்களுக்கு ஓட்டுபோடுங்கள் என்று சொன்ன அமித் ஷா ஆகியோரது பேச்சடங்கிய வீடியோ ஆதாரங்கள் தேர்தல் கமிஷன் வசம் இருக்கின்றன. ஆயினும் இவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இதுவரை நாற்பதாயிரத்துக்கும் மேலான விதிமீறல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன, யாரும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. திருமங்கலம் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது என தலைமை தேர்தல் அதிகாரியே ஒப்புக்கொண்ட பிறகும் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை. ஆக இந்த தேர்தல் கமிஷனால் நேர்மையானவர்களைக் கொண்டும் தேர்தலை நடத்த இயலாது, முறைகேடு செய்பவர்களை தண்டிக்கவும் முடியாது.
எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாத தேர்தல் கமிஷன், யாரும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என வாக்காளர்களுக்கு அறிவுரை சொல்ல மட்டும் பெரிதும் சிரத்தை எடுத்துக் கொள்கிறது. காரணம் நீங்கள் பணம் வாங்கினால், அது அரசியல் கட்சியின் ஒரு முதலீடாகிவிடும். பிறகு அவர்கள் முதலீட்டுக்கு லாபம் பார்க்க ஊழல் செய்வார்கள். ஆகவே நீ நேர்மையாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் அதன் விளக்கம். உண்மையில் பெருமளவிலான பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதில்தான் செலவாகிறதா?
ஒரு தேசிய நாளிதழின் முதல் பக்க முழு விளம்பரத்துக்கு தரப்படும் தொகை சற்றேறக்குறைய ஐம்பது லட்சம். ஒரு செய்திச் சேனலின் பத்துவினாடி விளம்பரத்துக்கான தொகை உத்தேசமாக இருபதாயிரம். நாமெல்லோரும் நரேந்திர மோடியின் முகரையை பார்ப்பதற்காக இந்தியா முழுவதும் வெளியாகும் நாளிதழ்களில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் ஆயிரத்து ஐந்நூறு முழுப்பக்க விளம்பரங்கள் தரப்பட்டிருக்கின்றன. இதனை இந்தியாவிலுள்ள எல்லா கட்சிகளும் தங்களது சக்திக்கேற்ற அளவில் செய்துகொண்டிருக்கின்றன. எல்லா கட்சிகளது டிவி விளம்பரங்களும் பெரிய சேனல்கள் எல்லாவற்றிலும் வருகின்றன.
ஐந்நூறு பேர் வரக்கூடிய ஒரு திருமணத்திற்கான சத்திர மற்றும் சாப்பாட்டு செலவு மட்டுமே குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் ஆகும் சூழலில்- சாராயம், போக்குவரத்து, சாப்பாடு, விளம்பரம் மற்றும் வருபவனுக்கு சம்பளம் என பணத்தை இறைக்க வேண்டிய நிகழ்வான மாநாடுகளும் பொதுக்கூட்டங்களும் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி தினசரி நடத்தப்படுகின்றன. இணைய விளம்பரங்களுக்கான செலவே நூற்றுக்கணக்கிலான கோடிகள் ஆகிறது. மேடையமைப்பு மற்றும் கட்சி ஊழியர்களுக்கு ஆகும் பணம் என கடைநிலை செலவுகள் இருக்கின்றது. ஆக, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை 100 சதவிகிதம் தடுத்தாலும்கூட தேர்தலுக்கு என கட்சிகள் செலவிடும் தொகை (எவ்வளவு குறைவாக கணக்கிட்டாலும்) ஆயிரக்கணக்கான கோடிகள் ஆகும். இவை அனைத்தும் சட்டபூர்வமாக தடுக்கவே முடியாத செலவுகள். இந்த பல்லாயிரம் கோடி முதலீட்டுக்கான ஒரே வருவாய் ஆதாரம் ஊழல்தான். ஆகவே நீங்கள் இந்த தேர்தல் முறையை ஏற்றுக்கொள்ளும்போதே அதன் விளைவான ஊழலையும் ஏற்றுக்கொள்ள வேண்டியவராகிறீர்கள்.
இந்த தேர்தல் எதற்காக நடத்தப்படுகிறது?
இதற்கு சொல்லப்படும் பதில் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க. அதிலும் குறிப்பாக, இருப்பவர்களில் நல்லவனைத் தேர்ந்தெடுக்க என்பதாக இருக்கும். அரசின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 70 சதம் மக்கள் போதுமான அளவு சாப்பாட்டுக்கு கூட செலவிட இயலாத ஏழைகள். அப்படியானால் மக்கள் பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதம் பேர் பரம ஏழைகளாக இருக்க வேண்டும். அதுதான் மக்கள் பிரதிநிதித்துவத்தின் நியாயமான விகிதாச்சாரம். ஆனால் இங்கே ஒரு வேட்பாளரது சின்னமும் முகமும் எல்லா வாக்காளர்களுக்கும் சென்றடையவே பல லட்சங்கள் செலவாகும்.
தமிழக வேட்பாளர்களில் ஓங்கி உலகளந்த உத்தமர் என பலராலும் சுட்டிக்காட்டவல்ல ஒரே வேட்பாளர் பத்திரிக்கையாளர் ஞாநி, தனது ஒருநாள் பிரச்சார செலவு ஐம்பதாயிரம் ஆவதாகச் சொல்கிறார். ஆகப்பெரும்பாலான பாராளுமன்ற வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். கட்சிக்கு தொடர்பே இல்லாத முதலாளிகளை வேட்பாளராக்கும் போக்கு இப்போது துவங்கியிருக்கிறது. சுருங்கச்சொன்னால் இந்த நாட்டின் பெரும்பாலானவர்களான ஏழை மக்களில் இருந்து ஒரு மக்கள் பிரதிநிதி உருவாக வாய்ப்பே கிடையாது. பிறகு என்ன மயிருக்கு இதனை மக்களாட்சி என நாம் அழைக்க வேண்டும்!
போகட்டும், இந்த எல்லா பிரச்சனைகளையும் தாண்டி ஒரு யோக்கியன் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு போகிறான் என ஒரு வாதத்துக்கு வைத்துக்கொள்ளலாம். அவனால் உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியுமா? அவனது அதிகார எல்லை எத்தகையது?
மக்கள் பிரதிநிதிக்கு என்ன அதிகாரம்?
அதிகார வர்க்க நபர்களைக் கொண்ட ஒழுங்கு முறை ஆணையத்தால் மட்டுமே மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல் விலை, எண்ணெய் நிறுவன அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. தொலைபேசித் துறையை டிராய் எனும் சுயேச்சையான அமைப்பு கட்டுப்படுத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தின் போக்கை மாற்றும் ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு வராமல் நிறைவேறுகின்றன (காட் ஒப்பந்தம், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்). பல ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் ஒப்புதலின்றி நிறைவேற்றப்படுகின்றன. நாட்டு மக்களின் சொத்தான அரசுத்துறை நிறுவனங்கள் ஒரு அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் சுலபமாக விற்பனை செய்யப்படுகின்றன (பால்கோ, மாடர்ன் பிரெட்). கனிம வளங்கள் முதலாளிகளுக்கு இனாமாக தரப்படுகின்றன. இவை எல்லாமே நம் வாழ்வோடு பெரிதும் தொடர்புடைய விடயங்கள்.
ஆனால் இவற்றைப் பற்றி முடிவெடுப்பதில் உங்களது மக்கள் பிரதிநிதிக்கு எந்த அதிகாரமும் இருக்கப்போவதில்லை. உங்களது வேலை பறிபோனாலோ, உங்களது வாழிடம் பறிக்கப்பட்டாலோ ஒரு எம்.பியால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. உங்கள் ஊரின் ஏரியோ ஆறோ விற்பனை செய்யப்பட்டால் அதனை தடுத்து நிறுத்த உங்களது எம்.எல்.ஏவால் முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசோடு போடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கூட அறிய முடியாது.
அரசின் எல்லா பேச்சுவார்த்தை விவரங்களும், வெளிநாட்டு ஒப்பந்தங்களும் முன்பே அதிகாரிகள் மட்டத்தினால் இறுதி செய்யப்பட்டு விடும், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் அமையும் பேச்சென்பது ஒரு சம்பிரதாயமே என ஈழப்பிரச்சனை தொடர்பான ஒரு பேட்டியில் நேரடியாகவே குறிப்பிட்டார் ப.சிதம்பரம். வருடத்துக்கு ஒன்றிரண்டு கோடி பாரளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர் நிதியை செலவு செய்யப் பரிந்துரைக்கலாம், அதுதான் ஒரு மக்கள் பிரதிநிதியின் இன்றைய அதிகபட்ச அதிகாரம் (அந்தப்பணமும் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில்தான் இருக்கும், அவரே செலவு செய்யும் பொறுப்பிலிருப்பவர்). ஆனால் அந்தத் தொகையை பதவியில் இல்லாத உள்ளூர் பவர்ஸ்டார்களே செய்வார்கள். அதிகாரமற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் அளவில் ஒரு செல்வாக்கு போய்விடக் கூடாது என்பதற்கே இந்த தொகுதி மேம்பாட்டு நிதி. இது ஒரு நாடகம். பிறகு உங்கள் ஓட்டுப்போடும் புனிதக் கடமையின் பலன்தான் என்ன?
இது அதிகார வர்க்கத்தால் ஆளப்படும் தேசம்!
கடந்த பத்தாண்டுகளாக பிரதமராக இருக்கும் மன்மோகன் ஒரு மக்கள் பிரதிநிதியல்ல. திட்டக்கமிஷன் துணைத்தலைவர் ஒரு மக்கள் பிரதிநிதியல்ல. ரிசர்வ் வங்கியின் இன்றைய தலைவர் ஒரு இந்தியரே அல்ல (பிறப்பின் அடிப்படையில் சொல்லவில்லை). ஆனால் இவர்கள் எல்லோரும் நம் நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதில் முக்கிய பாத்திரத்தை வகிப்பவர்கள். ஆகவே நண்பர்களே, இது அதிகாரிகளால் ஆளப்படும் ஒரு தேசம். ஜனநாயக ஆட்சி என்பது வெறும் பெயர்தான்.
ஒரு எளிய உதாரணத்தோடு இதனை விளங்கிக் கொள்ளலாம். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஃபெர்ணாண்டர்ஸ் தென்னமெரிக்காவுக்கான சுற்றுப் பயணத்தின்போது அமெரிக்க அதிகாரிகளால் அம்மணமாக்கி சோதனை செய்யப்பட்டார், ஒருமுறையல்ல இரண்டு முறை. பின்னாளில் ஜார்ஜே அதனை ஒப்புக்கொண்ட பிறகும், ஒரு அமெரிக்க அதிகாரி தான் எழுதிய புத்தகத்தில் அச்செய்தியை பகடியாக எழுதி வெளியிட்ட பிறகும் இந்திய அரசு மட்டத்தில் எந்த சலனமும் இல்லை.
ஆனால் ஒரு பச்சை பிராடுத்தனம் செய்து அமெரிக்க போலீசிடம் சிக்கிக்கொண்ட தேவயானி கோப்ரகடேவின் கைதுக்கு இந்திய அரசு கொதித்தெழுந்தது. அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது, அவர்களது சலுகைகள் பறிக்கப்பட்டன, அதிகாரியொருவர் திருப்பியனுப்பப்பட்டார். இந்தியா வந்த அமெரிக்க அரசு விருந்தாளிகளை சந்திக்க அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மறுத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு போர்ச்சூழலே அந்த பித்தலாட்டக்கார அதிகாரிக்காக உருவாக்கப்பட்டது. பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அடுத்த நிலையில் உள்ள பாதுகாப்பு அமைச்சரைக் காட்டிலும் ஒரு அதிகாரிக்கு செல்வாக்கு இருக்குமானால், இது யாரால் நடத்தப்படுகிற ஆட்சியாக இருக்க இயலும்?
சரி, இது மக்களாலோ மக்கள் பிரதிநிதிகளாலோ நடத்தப்படுகிற ஆட்சியில்லை என்பது உறுதியாகி விட்டது. இப்போது இது யாருக்காக நடத்தப்படும் ஆட்சி என்பதை பார்க்கலாம்.
இது முதலாளிகளுக்கான அரசு – ஆட்சி!
தொழிலாளிகளை ஒடுக்கும் மாருதி கார் நிறுவனம் உங்கள் ஓட்டை விற்காதீர்கள் என ஒழுக்கமாய் சொல்கிறது. அஞ்சு வருசமா எதையுமே செய்யாத உனக்கு என் ஓட்டு இல்லை என யாருக்கோ எதிராக வாக்களிக்க தூண்டுகிறது டாலர் பனியன்-ஜட்டி கம்பெனி. இது டேலண்டுக்கான தேர்தல் என்கிறது ஹீரோ ஹோண்டா. ஒயர் கம்பெனி முதல் ஊறுகாய் கம்பெனிவரை எல்லா நிறுவனங்களும் ஓட்டுபோடுவதன் மகாத்மியத்தைப் போற்றி விளம்பரம் கொடுத்த வண்ணமிருக்கின்றன. அது அவர்களது சமூக அக்கறை என கொள்ளலாமா? என் பொருளை வாங்கினால் அதன் லாபத்தில் ஒருபாகம் ஏழைக்குழந்தைகள் படிப்புக்கு தரப்படும் என்கிறது இந்துஸ்தான் லீவர் நிறுவன விளம்பரம். அதாவது அவர்கள் சமூக அக்கறையை காட்டவேண்டுமானால் நீங்கள் அவர்களது பொருளை வாங்கியாக வேண்டும்.
ஆனால் ஓட்டுபோடு எனும் விளம்பரத்துக்கு மட்டும் எந்த பிரதிபலனும் பாராமல் இவர்கள் விளம்பரம் செய்கிறார்களே.. ஏன்? காரணம் இது இவர்களுக்கான அரசு. இந்த அரசமைப்பானது அவர்களது நலனுக்காகவே கட்டமைக்கப்பட்டது. ஆகவே அதன்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தக்கவைக்கும் அக்கறையும் பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. அதற்கான முயற்சிதான் இந்த விளம்பரங்கள்.
பட்ஜெட் போடும்போது விவசாயிகளையோ நெசவாளர்களையோ நமது நிதியமைச்சர்கள் ஆலோசனை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் எல்லா பட்ஜெட்டுக்கு முன்பும் முதலாளிகளோடு அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். இந்தியாவுக்கு வந்த பில் கிளிண்டன் பாராளுமன்றத்தில் செலவிட்ட நேரத்தைவிட அம்பானி சகோதரர்களை சந்திக்க ஒதுக்கிய நேரம் அதிகம் என்பதை அறிவீர்களா? ஒரு சாமானிய மனிதன் பேருந்து நிலைய கழிப்பறையில் சிறுநீர் கழிக்கவே மூன்று ரூபாய் செலவழிக்கும் நாட்டில் ஒரு சதுர மீட்டர் விளைநிலம் ஒரு ரூபாய் விலையில் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அரை லிட்டர் பால் இருபது ரூபாய் விலையுடைய நாட்டில் நூறு ஏக்கர் தாதுமணல் சுரங்க நிலம் பதினாறு ரூபாய் ஆண்டு குத்தகைக்கு விடப்படுகிறது. உங்கள் தெருவில் உள்ள கடைக்காரர் திடீரென அரிசி விலையை இரண்டு மடங்காக்கினால் நாம் அமைதியாக இருப்போமா? அதே அண்ணாச்சி பக்கத்து தெருவுக்கு பழைய விலைக்கே அரிசி விற்றால் அவரை நீங்கள் விட்டுவைப்பீர்களா? இயற்கை எரிவாயு விலை விவகாரத்தில், எந்த இடையூறும் இல்லாமல் இதைத்தான் அம்பானி செய்கிறார்.
2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், தாதுமணல் ஊழல் போன்ற எண்ணற்ற ஊழல்களின் அடிப்படை, முதலாளிகளுக்கு நாட்டின் செல்வம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்பதுதான். இவற்றால் பலன் பெற்றவர்கள் எல்லோருமே டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகள். இவர்கள் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்பப் பெற முடியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இவர்களது அந்த ஆதாயத்துக்காக தரகு வேலை பார்த்த நீரா ராடியாவைக்கூட நம் அரசால் கைது செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆக, அரசாங்கம் என்பது முதலாளிகளுக்காவே நடத்தப்படுகிறது. எல்லா ஊழல்களும் அந்த முதலாளிகளின் லாபத்துக்காகவே செய்யப்படுகின்றன. ஊழலின் மூலவர்கள் பாதுகாப்பாக இருக்கும் நாட்டில் ஊழலை மட்டும் எப்படி ஒழிக்க முடியும்?
முதலாளிகளுக்கான நீதிதான் நீதித்துறையின் நீதி!
இவை எல்லாம் இருந்தாலும் நாட்டைக் காப்பாற்றும் வல்லமை நம் நாட்டு நீதிமன்றத்துக்கும் சட்டத்துக்கும் உண்டு என வாதிடுவோர் பலர் இருக்கிறார்கள். நாட்டின் சகல பாவங்களையும் போக்கும் பெரிய தோஷபரிகார ஸ்தலமாக உச்ச நீதிமன்றம் கருதப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் எட்டுபேர் ஊழல்வாதிகள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது என, தான் தொடுத்த வழக்கொன்றில் குறிப்பிட்டார், பிரஷாந்த் பூஷன் (மற்ற நீதிபதிகள் நியாயவான்கள் என அவர் சொல்லவில்லை, ஆதாரம் இல்லை அவ்வளவே). அவர் சொன்னது உண்மை என கருதினால் உச்சநீதிமன்றம் ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்க வேண்டும். அல்லது பொய்யென்றால் பிரஷாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாயிருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் அவரிடம் சமரசத்துக்கு முன்வந்தது, குறைந்தபட்சம் வருத்தத்தையாவது பதிவு செய்யுங்கள் நாம் வழக்கை முடித்துக்கொள்ளலாம் என கெஞ்சியது. ஏன்?
ஸ்டெர்லைட் வழக்கு உள்ளிட்ட பெரும்பாலான பெருநிறுவனங்களோடு தொடர்புடைய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முதலாளிகளுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்குகின்றது, பல பிரச்சனைகளில் தலையிடவே மறுக்கின்றன நீதிமன்றங்கள். அரிதினும் அரிதான நிகழ்வாக, வோடாஃபோன் நிறுவனம் வரிமோசடி செய்தது உறுதியாகி அவர்கள் பதினோராயிரம் கோடி அபராதம் செலுத்தவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இத்தீர்ப்புக்கு கட்டுப்பட முடியாது என்று சொல்லி அவர்கள் சர்வதேச நீதிமன்றங்களை அணுகுகிறார்கள். சர்வதேச மருந்து நிறுவனங்கள் இந்தியாவின் சட்டங்களுக்கெதிராக, தீர்ப்புக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகின்றன. 2ஜி ஊழல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமங்களால் தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு ஈடு கேட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சர்வதேச தீர்ப்பாயங்களை அணுகுகின்றன. உள்நாட்டில் செயல்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலோ இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடியாகாது.
இருக்கும் மிச்ச சொச்ச தொழிலாளர் சட்டங்களையும் ஒட்டுமொத்தமாக நீக்கு என முதலாளி வர்க்கம் அரசுக்கு கட்டளையிடுகிறது. தொலைத்தொடர்பு நிறுவங்களின் வருவாய் குறித்து தணிக்கை செய்ய சி.ஏ.ஜிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இது நிறுவன ஒப்பந்தங்களின் புனிதத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும். மேலும் இது மற்ற துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என அஞ்சுகிறோம் என சொல்லியிருக்கிறார் ஃபிக்கி (இந்திய வர்தக சபைகள்-தொழிலகங்களின் சம்மேளனம்) தலைவர் சித்தார்த் பிர்லா. என் வருமானத்தைக்கூட நீ ஆய்வு செய்யக்கூடாது என நீதிமன்றத்தை மறைமுகமாக கண்டிக்கிறது முதலாளிகள் கூட்டம். கார்ப்பரேட் கம்பெனிகளால் நம் சட்டத்தை வளைக்கமுடியும் சூழல் ஒருபக்கம், அவர்கள் நம் நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனும் கள யாதார்த்தம் மறுபக்கம் என இந்திய சட்டத்தின் மாண்பு சந்தி சிரிக்கிறது.
முதலாளிகளால் பராமரிக்கப்படும் ஊடகங்கள்!
இந்த எல்லா பிரச்சனைகளையும் மக்களிடம் தெரியப்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இருக்கிற ஊடகங்களின் நிலை என்ன? இன்று அவர்களும் பெருமுதலாளிகள் கைபொம்மையாகத்தான் இருக்கிறார்கள். அனேக ஊடகங்கள் பெருமுதலாளிகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன, அம்பானி வசம் மட்டும் சுமார் நாற்பது சேனல்கள் இருக்கின்றன. மற்ற ஊடகங்களும் அவர்களது கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். நாம் யாருக்காக அழவேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் தீர்மானித்ததால்தான் நாம் நிர்பயாவுக்காக மெழுகுவர்த்தி ஏந்தினோம். அவர்கள் விரும்பியதால் அன்னா ஹசாரேவின் ஏழுநாள் உண்ணாவிரதத்தின் ”நியாயம்” நம் எல்லோரையும் வந்தடைந்தது. அவர்கள் விரும்பவில்லை, ஆகவே பத்து வருடமாக நடக்கும் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் நம் யாரையும் சலனப்படுத்தவில்லை. விற்பனைச் சரக்காக அவர்கள் செய்தியை மாற்றியது மட்டும் பிரச்சனை அல்ல, சுவாரஸ்யமான செய்தியை மட்டும் நாடும் இழிவான ரசிகனாக நம்மையும் மாற்றியிருக்கிறார்கள்.
இப்படி இந்திய அரசு அமைப்பின் எல்லா தரப்பும் சீரழிந்திருக்கிறது. அதனை கண்காணிக்கவும் தண்டிக்கவும் உள்ள அமைப்புக்கள் ஊழல்மயமாகிவிட்டன. சுருக்கமாக சொன்னால் இன்னதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி இந்திய ஜனநாயகத்தின் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாமே புரையோடிப்போய் அழுகி நாற ஆரம்பித்திருக்கிறது. அது மக்களின் விவாதப் பொருளாவதை தவிர்க்கவே இந்த ஓட்டுப்போடும் புனிதக் காரியத்தின் மகிமைகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விளம்பரம் செய்கிறார்கள்.
மன்மோகன் சிங் காலாவதியாகி மோடி திணிக்கப்படுவது ஏன்?
இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் இறுதி இலக்கு நாட்டை மொத்தமாக முதலாளிகள் சொத்தாகவும் மக்களை வெறும் நுகர்வோராகவும் மாற்றுவதே. அதனை விரைவாக செய்ய திணிக்கப்பட்டவர்தான் மன்மோகன். முதலாளித்துவத்தின் யூஸ் அண்டு த்ரோ விதிப்படி இனி அவர் உபயோகமற்றவர். ஒரு பெரிய தாதாவின் கீழிருக்கும் கும்பலில், ஸ்கெட்ச் போடும் ஆளைப் போன்றவர் மன்மோகன். கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை பலியிடும் திட்டத்துக்கு ஸ்கெட்ச் போடும் அடிப்படைப் பணிகளை அவர் செவ்வனே செய்துவிட்டார், இது கழுத்தறுக்க வேண்டிய கட்டம். இப்போது ஸ்கெட்ச் போட்ட மன்மோகனுக்கு இங்கு வேலையில்லை, இனி இந்த அசைன்மெண்டுக்கு மோடி போன்ற மூளையற்ற அடியாள் அதிகாரத்தில் இருப்பதுதான் முதலாளிகளுக்கு வசதி.
அதனால்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பொருளாதார மீட்பராக அறிமுகமான மன்மோகன் இன்று அப்படி ஏற்றி விடப்பட்டவர்களாலேயே செயல் திறனற்றவர் என தூற்றப்படுகிறார். முதலாளிகளின் ஃபாசிஸ்ட் தேர்வில் முதல் வகுப்பில் தேறிய மோடி, புதிய மீட்பராக அறிமுகம் செய்யப்படுகிறார். அங்கிங்கெனாதபடி எல்லா ஊடகங்களிலும் அவர் வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தப்படுகிறார். தெகல்கா கூட அவருக்கு எதிரான ஆதாரங்களை இப்போது வெளியிட மறுக்கிறது. ஒருவேளை மோடியை கொண்டுவரும் திட்டத்தில் பிசகு ஏற்படும் சாத்தியத்தை கவனத்தில் கொண்டு களமிறக்கப்பட்டிருக்கும் டம்மி வேட்பாளர்தான் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால். குறைந்தபட்ச அவநம்பிக்கை இருப்பின் அதை சமன் செய்யவும் அது அதிகமாகி விட்டால் அதனை அறுவடை செய்யவுமே அவர் களத்துக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.
ஆம் ஆத்மி – ஆளும் வர்க்கத்தின் பிளான் பி
நாடு முழுக்க இருக்கும் இரண்டு லட்சம் என்.ஜி.ஓக்களின் ஏக பிரதிநிதிதான் கெஜ்ரிவால். அவரது வேட்பாளர்கள் பலரும் என்.ஜி.ஓ ஓனர்கள்தான். பொதுவான நபர்களை ஆ.ஆ கட்சிக்கு கொண்டுவரும் பிள்ளை பிடிக்கும் வேலையை செய்வதும் என்.ஜி.ஓக்கள்தான். ஒரு வருடத்துக்குள் கட்சி ஆரம்பித்து நாடுமுழுக்க வேட்பாளர்களை நிறுத்தும் வல்லமை, இவர்களால்தான் ஆம் ஆத்மிக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏகாதிபத்திய நிதியால் இயங்குபவை. தங்களை ஒரு மாற்று என சொல்லிக்கொள்ளும் போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளும் மற்ற பெயர்ப்பலகை இடதுசாரிக் கட்சிகளும் இவர்களுக்கு எவ்வகையிலும் மாற்றல்ல. அவர்களது முதலாளித்துவ சார்பை விளங்கிக்கொள்ள சிங்கூர் நந்திகிராம உதாரணங்களே போதும்.
இந்தியா இனியும் ஒரு நாடல்ல, அது ஒரு ஐஎன்சி (INC) கம்பெனி – இங்கே வளர்ச்சி என்பது என்ன?
அரசு என்பது ராணுவம், போலீஸ் போன்ற துறைகளை மட்டும் வைத்திருந்தால் போதும் மற்ற எல்லாவற்றையும் எங்களுக்கு கொடு என்பதுதான் முதலாளிகளின் உத்தரவு. மக்கள் பிரதிநிதிகள் எனும் பெயரில் அரசியல் கட்சிகளினால் ஏற்படும் சிறிய அளவு தாமதத்தை தவிர்க்கவும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய லஞ்சத்தின் அளவை குறைக்கவும் முதலாளிகள் “லெஸ் கவர்மெண்ட், மோர் கவர்னென்ஸ்” எனும் செயல் திட்டத்தை முன்மொழிகிறார்கள். அரசின் பங்கைக் குறை, அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகமாக்கு என்பதாக அதனை புரிந்துகொள்ளலாம். இங்கே அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த செயல்திட்டம்தான் அமுலுக்கு வரும். இந்த காரணிகள் அனைத்தையும் பரிசீலித்தால் நாம் சிக்கியிருக்கும் வலையின் எல்லா கண்ணிகளும் ஏகாதிபத்தியத்தோடு இணைக்கப்பட்டவை என்பது புலனாகும். இந்த அமைப்புக்குள் உருப்படியான மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அறவே இல்லை என்பதும் விளங்கும்.
இவை எல்லாவற்றுக்கும் மேல் நம் நாடு கணிசமான வளர்ச்சியை சந்தித்திருப்பதாக நம்ப வைக்கப்படுகிறோம். மன்மோகன், சிதம்பரம், கோபண்ணா போன்ற காங்கிரஸ்காரர்களும் பத்ரி, வெங்கடேசன் போன்ற பா.ஜ.க சார்பு “அறிவுஜீவிகளும்” நாடு வளர்ந்திருப்பதாகவே சொல்கிறார்கள். பா.ஜ.க வந்தால் அது இன்னும் வேகமாக இருக்கும் என்பதுதான் பத்ரி மாதிரியானவர்களின் அபிப்ராயம். அவர்களது பார்வையில் வளர்ச்சி என்பது அகலமான சாலைகள், பெருமளவுக்கான அன்னிய முதலீடு, பெரிய ஷாப்பிங் மால்கள் ஆகிய கட்டுமானங்களும் ஜி.டி.பி, அன்னிய செலாவணி கையிருப்பு ஆகிய எண்களும்தான்.
உண்மையில் இவை நமக்கு என்ன வளர்ச்சியை தந்திருக்கின்றன? சாலைகள் அகலமாகியிருக்கின்றன, ஆனால் இலவசமாக பயணித்த சாலைகளை பாவிக்க பணம் செலுத்த வேண்டிய நுகர்வோராக இன்று நாம் மாற்றப்பட்டு விட்டோம். சொந்த ஊரில் பிழைக்கும் வாய்ப்பு நம்மில் பெரும்பாலானோருக்கு இன்றில்லை. நாம் பெருநகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஓடுகிறோம். வட இந்திய பணியாளர்கள் நம் நகரங்களுக்கு வருகிறார்கள்.
பயணங்கள் இலகுவாகியிருக்கின்றன, ஆனால் அவை நமக்கு செலவு மிக்கதாகியிருக்கின்றன, அது தவிர்க்க இயலாததாகி நாம் நவீன நாடோடிகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வின் இனிமையான பருவமாக கருதப்பட்ட குழந்தைப் பருவம் இன்றைய மாணவர்களுக்கு பெரும் சுமையாகவும் வெறும் போட்டியாகவும் மாறியிருக்கிறது. முன்பு தண்ணீர் விலைபொருளாக இருந்திருக்கவில்லை, அது அதிகபட்சமாக கோரியது உங்கள் உழைப்பை மட்டுமே. இன்று கிராமம் நகரம் என பாரபட்சமில்லாம் தண்ணீர் ஒரு விற்பனைப் பண்டம். கேன் தண்ணீர் கவர்ச்சிக்கு நாம் ஆட்படுத்தப்பட்ட வேளையில் அரசு தந்திரமாக குடிநீர் வழங்கும் கடமையில் இருந்து விலகிவிட்டது.
இன்று டிவியும் வாகனமும் இலகுவாக கிடைக்கிறது ஆனால் நாளைய நம் வேலை என்பது அனேகருக்கு உத்திரவாதமற்றதாக மாறிவிட்டது. பெரிய அதிநவீன மருத்துவமனைகள் எல்லா நகரங்களிலும் முளைக்கின்றன, ஆனால் மருத்துவம் ஏழைகளுக்கு கைக்கெட்டாததாக இருக்கிறது. சகல வசதிகளோடு இருக்கும் பள்ளி கல்லூரிகள் எல்லா இடங்களிலும் இன்று இருக்கின்றன, ஆனால் கல்விச்செலவானது நடுத்தர வர்க்க மக்களுக்குகூட பெருஞ்சுமையாய் மாறியிருக்கிறது.
பொருள், வசதி என்றில்லை, வாழ்க்கை முறையும் பெருமளவு சிதைக்கப்பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்குவது குற்றம் எனும் சிந்தனையை மக்களில் பலரும் கைவிட்டாயிற்று. இயல்பான மனித அற உணர்ச்சிகள் குறைந்து போய்க் கொண்டிருக்கிறது, அதன் விளைவாக சாமானிய மக்கள் ஈடுபடும் குற்றச் செயல்கள் பெருகுகின்றன. இளைஞர்கள் பலர் சமூக சிந்தனையற்றவர்களாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் தோல்வியடையும் வேளையில் தான் தனித்து விடப்பட்டதாக இளையோர்கள் உணர்கிறார்கள். விளைவு, முப்பது வயதுக்குட்பட்டோரது மரணத்திற்கான முதல் காரணியாக தற்கொலை மாறியிருக்கிறது. குடிக்கும் தண்ணீரில் இருந்து கேட்கும் செய்திவரை எல்லாவற்றையும் ஒரிஜினல்தானா என சந்தேகிக்க வேண்டிய அளவுக்கு நாம் நம்பிக்கையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். மனசாட்சியோடு நேர்மையாக சிந்தித்தால் இந்த வளர்ச்சி நம்மை பாதுகாப்பற்றவர்களாக, சக மனிதர்கள் மீது நம்பிக்கையற்றவர்களாக, நிம்மதியில்லாதவனாக, கடனாளியாக மாற்றியிருப்பது புரியும். இது வளர்ச்சியா, வளர்ச்சியென்றால் இந்த வளர்ச்சிதான் நமக்கு வேண்டுமா?
மேற்சொன்ன உண்மைகளை விவாதிக்கும் எல்லா தருனங்களிலும் நாம் எதிர்கொள்ளும் கேள்வி, இந்த அரசமைப்பு பிரயோஜனமற்றது என்றால் வேறு மாற்றுதான் என்ன?
புழுத்து நாறும் இந்த அரசமைப்பிற்கு தீர்வு என்ன?
நாம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்குமான ஆணிவேர் தனிச் சொத்துடைமைதான். பெண்ணடிமைத்தனம், வறுமை, மதம் என எல்லா சிக்கல்களும் தனியுடைமையால்தான் உருவாகின்றன. ஒருவன் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் எனும் சூழலே இன்னொருவனிடம் இருந்து அபகரிக்கவும், அடுத்தவனை அடிமையாக்கவும் தூண்டுகிறது. அதற்கான கவசமாக மதம் பயன்படுத்தப்படுகிறது. பணக்கார வர்கத்தின் வளர்ச்சி என்பது ஏழைகளை மேலும் ஏழையாக்காமல் சாத்தியப்படாது. இந்தியாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை இருபது கோடி, வசிக்க ஆளற்ற வீடுகள் சற்றேறக்குறைய ஐந்துகோடி. தஞ்சையில் விவசாய வேலைக்கு ஆளில்லை, ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் தொழிலாளர்களுக்கு வேலையில்லை. இந்த அபாயகரமான முரண்பாடுதான் முதலாளித்துவம் தரும் பரிசு. ஆகவே நம் பிரச்சனைகளின் தீர்வென்பது தனிச்சொத்துடமையை ஒழிக்கும் கோட்பாட்டின் வாயிலாகத்தான் கிடைக்கும்.
சோசலிசப் புரட்சியின் சாதனைகள்
1917 புரட்சிக்குப் பிறகு அரசமைத்த லெனின், முதலில் மூன்று காரியங்களை செயலாக்குகிறார்.
- நிலங்களை விவசாயிகளுக்கு பிரித்தளிப்பது.
- பெரிய நிறுவனங்களை அரசுடமையாக்குவது.
- சமனற்ற வெளிநாட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்வது.
பிறகு தமது அரசின் முக்கியமான உடனடி இலக்குகளாக அனைவருக்கும் உணவு, இலவசக் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிவற்றை நிர்ணயித்தார் . இவற்றை அடைந்த பிறகே மற்றவற்றின் மீது கவனம் செலுத்தப்படும் எனவும் அறிவித்தார். கல்வி புகட்டுவது ஒரு மக்கள் நடவடிக்கையாக மாற்றப்படுகிறது. கற்ற ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு கற்றுத் தரவேண்டும் எனும் முயற்சி தொடங்குகிறது. தொழிலாளர்கள் அதிகம் கூடும் ஆலைகளிலும் பண்னைகளிலும்கூட பள்ளிகள் துவங்கப்படுகின்றன. முதியோருக்கான கல்வி தனியே செயல்படுத்தப்படுகிறது. 1918 அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் ஒரே தரத்திலான இலவசக் கல்விச் சட்டமாக்கப்படுகிறது. அதுவரை இருந்த வசதிக்கு ஏற்ப இருந்து வந்த பாரபட்சமான கல்விமுறை ஒழிக்கப்பட்டது.
எழுத்தறிவை மூன்று சதவிகிதத்தில் இருந்து நூறு சதவிகிதமாக்க சோசலிச ரஷ்யா எடுத்துக்கொண்ட காலம் வெறும் பத்தாண்டுகள். புரட்சி நடந்து இருபதாண்டுகளுக்குள் ரசியாவில் வரிவடிவம் இல்லாதிருந்த நாற்பது தேசிய இனங்களின் (சிறுபான்மை இனங்கள் உட்பட) மொழிகளுக்கு வரிவடிவம் உருவாக்கப்பட்டது. நாடு முழுக்க கிராமங்களிலும் நகரங்களிலும் பெரிய நூலகங்கள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலின் காலத்தில், ஏழை நாட்டு மாணவர்களுக்கு அறிவு மறுக்கப்படக் கூடாது என்பதற்காக அறிவியல் நூல்கள் மிக மிக மலிவான விலையில் அவர்கள் மொழியிலேயே தயாரித்தளிக்கப்பட்டது. யுத்தத்தினால் ஆதரவற்றோராகிவிட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஏராளமான காப்பகங்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. அவர்களில் இருந்து பல ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் பின்னாட்களில் உருவானார்கள்.
மற்ற இலக்குகளான அனைவருக்கும் உணவு, குடியிருப்பு, மருத்துவம் ஆகியவை ஸ்டாலின் காலத்தில் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. 1940 மற்றும் 1950-க்கும் இடையேயான பத்தாண்டுகளில் ரசியாவின் மருத்துவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்தில் இருந்து இரண்டு லட்சத்து அறுபத்தைந்தாயிரமாக உயர்ந்த்து. பத்தாண்டுகளில் 1.10 லட்சம் புதிய மருத்துவர்கள். கர்ப்பிணிகள் மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டியதில்லை, அவர்களை நாடி மருத்துவப் பணியாளர்கள் வருவார்கள். பிரசவத்திற்கான உத்தேசமான தேதிக்கு ஒரு வாரம் முன்னதாக அரசே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வரும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. கர்ப்பிணிகளுக்கு ஓராண்டுவரை முழு ஊதியத்துடனான விடுமுறையும், இரண்டாம் ஆண்டு அரை சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் வழங்கப்பட்டது. 1916-ல் ரசியாவின் தனிமனித சராசரி ஆயுள் 32 ஆண்டுகள். 1960-ல் அது 70 வருடமாக அதிகரிக்கப்பட்டது. அதே வருடத்தில் ரசியாவில் பத்தாயிரம் பேருக்கு 20 மருத்துவர்கள் இருந்தார்கள், உலகிலேயே இதுதான் அதிகம். மற்ற நாடுகளின் அன்றைய தரவுகள் கீழே,
- அமெரிக்கா – 10,000 பேருக்கு 12 மருத்துவர்கள்
- பிரான்ஸ் – 10,000 பேருக்கு 10.7 மருத்துவர்கள்
- இங்கிலாந்து – 10,000 பேருக்கு 10 மருத்துவர்கள்
- பாகிஸ்தான் – 10,000 பேருக்கு 0.7 மருத்துவர்கள்??!!
1941 மற்றும் 1951 -க்கும் இடையேயான பத்தாண்டுகளில் மட்டும் கட்டப்பட்ட மக்கள் குடியிருப்புக்களின் அளவு நகர்ப்புறத்தில் நூற்று பத்து கோடி சதுரஅடி. கிராமப்புறங்களில் உருவாக்கப்பட்ட புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை 27 லட்சம். இது ரசியாவின் அன்றைய ஐந்தாண்டு திட்ட இலக்கைக் காட்டிலும் 21 சதவிகிதம் அதிகம். இதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கை 77 லட்சம். 1947-ல் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நுகர்பொருட்கள் மீதான ரேஷன் கட்டுப்பாட்டுமுறை முழுமையாக நீக்கப்படுகிறது.
இந்தியாவில் போலி ஜனநாயகத்தின் ‘சாதனைகள்’!
ஆனால் ஜனநாயகத்தின் கோயிலான இந்தியாவில் அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டம் நிறைவேறவே 65 ஆண்டுகள் ஆனது, அதனை சாத்தியமாக்கும் முயற்சிகள் இன்றைக்குவரைக்கும் ஆரம்பமாகவில்லை. இன்றும் இந்தியாவில் எழுபது விழுக்காடு மக்களே எழுத்தறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். 70 சதம் மக்களுக்கு இரண்டு வேளை உணவு மட்டுமே கிடைக்கிறது. முக்கால்வாசி மக்களுக்கு ஒழுங்கான சாப்பாடே இல்லாத நாட்டின் மொத்த மருத்துவ செலவில் அரசின் பங்கு 16 விழுக்காடுதான். 86 சதவிகித செலவை மக்களே செய்கிறார்கள். வீடற்றவர்கள் எண்ணிக்கை 20 கோடி. கிராமங்களில் வாழ வழியின்றி நகரங்களுக்கு இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் பத்து கோடி. சரியான உணவில்லாததால் நாட்டின் பெண்களில் பாதிபேர் ரத்த சோகையுடையோராக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இதே சதவிகிதத்திலான இந்திய குழந்தைகள் போதிய ஊட்டச்சத்தற்றவர்கள். இவை அனைத்தும் சிலநூறு முதலாளிகளால் முடக்கப்படும் செல்வத்தின் காரணமாக உருவாகின்றன. ஆகவே முதலாளித்துவத்தை ஒழிக்காமல் மக்கள் நலன் என்பது எக்காலத்திலும் சாத்தியமில்லை.
மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்த சோசலிசத்தை தோற்ற ஃபார்முலா என கிண்டலடிப்பதும் மக்களுக்கு எதையுமே செய்ய முடியாத செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை போற்றிப் புகழ்வதும் அறிவுடையோர் செய்யும் காரியமல்ல. தோல்வியிலிருந்து பாடம் கற்பதில் சிறுமையும் இல்லை பிணத்துக்கு பேன் பார்ப்பதில் பெருமையும் இல்லை.
தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தார் பாம்பின் பெருமையை சொல்லும் “வெள்ளிக்கிழமை விரதம்” என்ற படத்தை எடுத்தார்கள். ஆனால் அந்த படத்தை எடுக்க கொல்லப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கை உத்தேசமாக நூறு (இதனை அதன் கதாசிரியர் கலைஞானம் நக்கீரன் இதழ் தொடர்கட்டுரையில் குறிப்பிடுகிறார்). அதே கதைதான் இங்கேயும், சாமானிய மக்களை தேர்தல் மூலம் அரசு கவுரவிப்பதாக ஒரு தோற்றம் நமக்கு காட்டப்படலாம். ஆனால் பின்னணியில் நம்மைப் போன்ற மக்களில் பலர் அழிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. மாமாக்களை மாற்றினால் விபச்சாரத்தை ஒழித்துவிட இயலும் என்பதை உங்களால் நம்ப இயலுமெனில் இந்தத் தேர்தல் மூலம் மக்கள் நல அரசை அமைத்துவிட முடியும் என்றும் நீங்கள் நம்பலாம்.
தேர்தலை புறக்கணியுங்கள்!
புதிய ஜனநாயக் புரட்சிக்கு பணியாற்ற புரட்சிகர அமைப்புகளில் இணையுங்கள்!
வினவுடன் தொடர்பு (vinavu@gmail.com அல்லது 9941175876) கொள்ளுங்கள்!
அன்பார்ந்த வாசகர்களே,
தேர்தல் அரசியல் குறித்தும், அது ஏன் போலி ஜனநாயகம் என்பதையும் விளக்கி பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். இருப்பினும் பல்வேறு வாசகர்களுக்கு வினவு கூறும் மாற்று அரசியல் என்ன,எப்படி என்று ஏராளம் கேள்விகள் இருக்கின்றன. அதை விரிவாகவும், முழுமையாகவும் எழுதுவதில் உள்ள சிரமம், இணைய வாசகர்களின் வேகமான படிப்பிற்கு அந்த நீண்ட கட்டுரைகள் கட்டுப்படுமா என்று பல்வேறு தடைகள் உள்ளன. இருப்பினும் இந்தக் கட்டுரை அவை குறித்த ஒரு அடிப்படைப் புரிதலை வழங்கும் என்று நம்புகிறோம். பிறகு இதையும் விரித்து எழுதுகிறோம். தேர்தல் தேதியோடு சமூக மாற்றமும், கடமைகளும் முடிந்து விடாது என்பதால் இந்த கேள்விகளை நாம் தொடர்ந்து விவாதிக்கலாம். இந்தக் கட்டுரையில் முடிந்த அளவு விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு தோழர்களை கோருகிறோம். வினவு சார்பிலும் செய்கிறோம். நன்றி
Dear Vinavu,
Wonderful article. Timely one.
நோட்டா -வை தேர்ந்தெடுப்பதன் மூலம் தேர்தல் புறக்கணிப்பை உறுதிப்படுத்தலாமே?..
Our country is becoming Nepotism country. In TamilNadu DMK wants to grab the CM Chair by hook or crook. Karuna’s sons want to kill each other. Every grand sons of Karuna will attach NIDI after their name to showpublically that they are after money ie NIDHI.
Amma Jayalalitha thinks that JAYA means SUCCESS always and tries to have hold in DELHI also.
She is ready to support and ready to make MODI as P>M> if he promises in public to sanction
Rs.65K crores as relief to Tamil Nadu.
P.Chidamabaram tries his level best to make son Karthik as his successor. Karthik is minting money
by setting up VASAN EYE CARE in all major cities of Tamilnadu.
Waste fellows like VIJAYKANTH, SHARATH KUMAR, KARTHIK ( late muthuraman’s son) trying to split votes for their cheap popularity. THEY CAN ACT BEHIND CAMERAS ONLY.
What is the necessity of Election for INDIA ??
Your writing is good, but is the solution you are suggesting?
P.Chidambaram became FM by re-counting only. He is indispensible for Gandhi Family.
His mother Sonia Gandhi cannot manage finance without his support and help. He cannot take SANYAS
or to go out of Politics. He wants his son to enter politics, but he may lose deposit in Sivagagai, as he is busy in managing his Vasan Eye care.
நல்ல கட்டுரை ஆழமான விமர்சனம் நமது போலி ஜனநாயக்த்த பத்தி இதத்தான் ரெம்ப நாள எதிர் பார்த்தேன் தேர்தலில் ஓட்டு போட்டு ஒருவரை தேர்ந்தெடுப்பதில் எந்த பயனும் இல்லை அவர் ரெம்ப நல்லவராகவே இருந்தாலும் எதையும் செய்ய முடியாத நிலைலில் இருப்பதை விளக்கினீற்கள் அனால் இந்த நிலமையை ஏற்ப்படித்தியதே அவர்கள் தானே அரசு நிறுவங்களை தனியாருக்கு விற்றது சர்வதேச நிருவனங்களை நமது தேசத்தில் தொலில் செய்ய அனுமதிதது எல்லாம் இவர்கள தானே இவர்களே இதை மாற்றினால் தான் மாறும் புரட்சி எப்படி தீர்வாகும் விளக்கவும்
/இந்த நிலமையை ஏற்ப்படித்தியதே அவர்கள் தானே அரசு நிறுவங்களை தனியாருக்கு விற்றது சர்வதேச நிருவனங்களை நமது தேசத்தில் தொலில் செய்ய அனுமதிதது எல்லாம் இவர்கள தானே இவர்களே இதை மாற்றினால் தான் மாறும்/
அவர்களே இதை எப்படி மாற்றுவார்கள்? நீதி கதைகளை உபதேசித்து இவர்களை மாற்ற இயலுமா? இல்லை அவர்களது மனதை சென்டிமன்டாக டச் செய்தால் மாற்றிக்கொள்வார்களா?
தங்கள் வர்க்க நனனுக்காக உழைக்கும் வர்க்கத்தை சுரண்ட ட் இதை செய்கிறார்கள்.சுரண்டப்படுபவர்கள் தங்களை வீழ்த்திவிடாமல் இருக்க பல தடுப்பு அரண்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
முதலில் தான் சுரன்டப்படுகிறோம் என்ற நினைப்பே வர முடியாதபடி மதம் முதல் பத்திரிகை வரை மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துகின்றது. ஆசையே அழிவுக்கு காரணம் ்முதல் அத்தனைக்கும் ஆசைப்படு என்று மதமும் சுரண்டல் முறைக்கேற்ப மாறி வருகிறது.
இதையும் மீறி வருபவர்களுக்கு இந்த அமைப்புக்குள்ளேயே தீர்வு இருக்கிறது என்று சொல்லி மழுங்கடிக என்.ஜி.ஒ வைடி வைத்த்ருக்கிறார்கள்.
அதையும் மீறினால் போலீசு, ராணுவம் கொண்டு ஒடுக்குவார்கள்.
புரட்சிகர இல்லாமல் இதை எப்படி தாண்டமுடியும். சாத்தியமே இல்லை.
Dear Vinavu
Shall I post this Article in FB let my friends are also came to know what magic going to do by these Election.
இன்றைய தமிழ் இந்து நாளிதலில்
வாக்களிப்பதால் எந்தப் பலனும் இல்லையா? என்ற தலைப்பில் இந்தியாவின் ஜனநாயக அமைப்பை பற்றி சில விசயங்கள் இருக்கின்றன
//நம் நாட்டில் எல்லாமே ஜனநாயக அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மட்டுமே செய்யப்படுவதில்லை. மிகப் பெரிய பொதுநிர்வாக அமைப்பு, நீதிமன்ற அமைப்பு, ஒவ்வொரு துறையிலும் பல ஒழுங்குமுறை ஆணையங்கள், தன்னிச்சையாகவும் வெளிப்படையாகவும் முடிவுகளை அலசி ஆராயும் ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், தொண்டுநிறுவனங்கள் என்று எண்ணற்றவை உள்ளன. இவற்றின் கூட்டுச் செயல்பாட்டால்தான் நம் சமூக-பொருளாதாரச் சக்கரம் சுழல்கிறது. இதில் குறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விமர்சனங்கள் உள்ளன.//
///இங்கு வாக்களிப்பதும், லாட்டரிச் சீட்டு வாங்குவதும் ஒன்றுதான். லாட்டரிச் சீட்டு வாங்குவது பொருளியல்ரீதியில் சரியான முடிவு இல்லை. ஆனாலும், அதில் உள்ள சுவாரஸ்யத்துக்காக லாட்டரிச் சீட்டு வாங்கலாம். அதேபோல், வாக்களிப்பது ஒரு சுவாரஸ்யமான வேலை என்பதால் பலர் அதில் ஈடுபடலாம். ///
//எல்லோரையும் வாக்களிக்கச் செய்யப் பல முயற்சிகள் நடந்துள்ளன. அரசியல் கட்சிகள் வாக்களிக்கக் (தங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று நம்பி) காசு கொடுக்கின்றன. இதன் மூலம், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்வதை அவர்கள் உறுதிசெய்கின்றனர்.//
ஆனால் இறுதியாக மட்டும்
///வாக்களிப்பது மட்டுமே சமூகப் பொறுப்பு இல்லை. நடுநிலையுடன் சிந்தித்து வாக்களிப்பதுதான் சமூகப் பொறுப்பு என்பதை நிலைநிறுத்த வேண்டும். இது மட்டுமே நாம் வாக்களிப்பதைப் பொருளியல்ரீதியில் நியாயப்படுத்தும். ///
புரட்சி மட்டும் தான் தீர்வு என்று விளக்கமாக கூறிய பிறகும் புரட்சி எப்படி தீர்வு என்று கேட்டால் எப்படி? இந்த பதிவு புரட்சியை பற்றிய அடிப்படை புரிதலை வழங்குகிறது. இதிலிருந்து புரட்சி பற்றிய முழுமையான புரிதலுக்கு வந்துவிட முடியாது என்பதும் முதல் பின்னூட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. உங்களுடைய அனைத்து கேள்விகளையும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக்கொள்ளும்போது தான் முழுமையான புரிதலுக்கு வர முடியும். அதற்கு தோழர்களை தொடர்புகொண்டு விவாதியுங்கள்.
புரட்சினா என்ன எனக்கு அவ்வளவா தெரியாது சார் ஜெயலலிதா வ கூட அவங்க கட்சி கார்ங்க புரட்ச்சி தலைவினு சொல்லுராங்க ரஸ்யா ல மக்கள் தொழிலாலர்கள் எல்லாம் கூட்டமா போய் ஜார் மன்னர் குடும்பத்த கொன்னுட்டு மக்கள் ஆட்சிய மலர செஞ்சாங்கனு படிச்சு இருக்கேன் அது புரட்சி அப்ப்டிங்றாங்க 1 ஏக்கர் நிலத்துல 35 மூட்டை நெல் விளையவச்சது பசுமை புரச்சிங்றாங்க அத மாறி எனக்கு கொஞ்சம் விளக்கமா சொன்னாதன் புரியும் என்னா நான் அவ்வளவா புரட்சி பத்தி படிச்சது இல்ல அதான் கேட்டேன் ரஸ்யால மாறி கூட்டமா மக்கள் போயி பாராளுமண்றத்த முற்றுகை இட்டு இப்ப இருக்கிற அரசு அமைப்ப அடிச்சு நொருக்கி மாத்தலாம்னு சொல்ல வறிங்களா என்னனு தெரியல அப்பிடியே மாத்த நினைச்சாலும் அது கொஞ்சம் கஸ்டம் தான் ஏன்னா இங்க கிளைச் செயலாளர் ல இருந்து பொது செயளாலர் வரைக்கும் பிழைப்பு வாதிகள்தான் அது மட்டும் இல்லாம் ஜாதி மதம் மொழி இனம் எல்லாம் கட்ந்து மக்கள ஒன்னு சேர்க்கறது ரெம்ப கஸ்டம்
ரசியாவில் மாதிரி தான். அதை எப்படி செய்வது என்பதை விரிவாக தான் பேச வேண்டும். எல்லோரையும் பிழைப்புவாதிகள் என்று சொல்லிவிட முடியாது. சமூகத்தில் நல்லவர்கள் இல்லையா? நல்லவர்களும் பிழைப்புவாதிகளாக மாறக்காரணம் இந்த சமூக அமைப்பு தான். இந்த நிலையிலும் பெரும்பாண்மை மக்கள் நல்லவர்களாக தான் இருக்கின்றனர்.
எல்லாம் கெட்டவர்கள், எனவே எதையும் மாற்ற முடியாது என்கிற வசனத்தை உலகத்தில் முதன்முதலில் கூறுபவர் நீங்கள் அல்ல ஜோசம். ஒவ்வொரு சமூக அமைப்பிலும் அனைவரும் அலுப்புடனும் சலிப்புடனும் கூறிய வார்த்தை தான் அது. உதாரணத்திற்கு மாக்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலில் இதைப்பற்றி ஒரு காட்சியே வரும். பாவெலும் தோழர்களும் தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிக்காக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் போது, தோழர்கள் கொடுத்த துண்டறிக்கைகளை கசக்கி வீசியெறிந்துவிட்டு எதையும் மாற்ற முடியாது என்று தொழிலாளிகள் சலிப்புடன் அந்த இடத்தைவிட்டு கிளம்புவார்கள். ஆனால் அதன் பிறகு உலகையே உலுக்கிய ரசியப்புரட்சி நடந்ததா இல்லையா?
எனவே நாம் சலிப்படையாமல் சரியான பக்கத்தில் வந்து நிற்க வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இன்று நாம் ஒரு நவீன சமூகத்தில் வாழ்கிறோம் என்றால் அதற்கு காரணம் கோடிக்கணக்கான மக்கள் நடந்த்திய போராட்டங்கள் தான். எனவே மக்கள் தான் வரலாற்றை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றனர். மக்களால் அனைத்தையும் தலைகீழாக மாற்றியமைக்க முடியும்.
//அரசின் எல்லா பேச்சுவார்த்தை விவரங்களும், வெளிநாட்டு ஒப்பந்தங்களும் முன்பே அதிகாரிகள் மட்டத்தினால் இறுதி செய்யப்பட்டு விடும், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் அமையும் பேச்சென்பது ஒரு சம்பிரதாயமே என ஈழப்பிரச்சனை தொடர்பான ஒரு பேட்டியில் நேரடியாகவே குறிப்பிட்டார் ப.சிதம்பரம். //
2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்கம்,இயற்கை எரிவாயு எடுத்தல் -காடுகள்- மலைகள்- ஆறுகள் ஏலம் விடுவது, ஒப்பந்தம் போடுவது எல்லாம் அதிகாரிகள் மட்டத்திலேயே இறுதி செய்யப்பட்டுவிட்டது; பிரதமர்,அமைச்சர் பெருமக்கள் சும்மா பேருக்கு நாலு வார்த்தை பேசிவிட்டு கையெழுத்து போடத்தான் முடிந்தது, அவங்களுக்கு ஒண்ணியுமே தெரியாது, முடியாது பாவம் என்கிறீர்களோ..
எந்த முதலாளிக்கு கொடுக்கலாம் என்பதை வேண்டுமானால் தீர்மாகின்க்கும் இடத்தில் ஒருவராக அமைச்சர் இருக்கலாம். அதையும் உங்கள் பிரதிநிதி தட்டி கேட்க முடியாது. ஆனால் முதலாளிக்கு கொடுக்க வேண்டும் என்பதிலும் அதற்கான விதிமுறைகளை வகுப்பதிலும் அதிகாரம் படைத்திருப்பது ஒழுங்கு முறை ஆணையங்கள் தானே?
மின்சார கட்டணத்தை தீர்மானிக்க அதிகாரம் இல்லை என ஜெ சட்டமன்றத்தில் அறிவித்தாரே?
இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை மன்மோசன் சிங்கோ இல்லை மோடியோ ரூம் போட்டு யோசித்தா செயல்படுத்துகிறார்கள்?
மாண்டெக்சிங் அலுவாலியாவும் ரகுராம் ரஞ்சனும் யார்? உங்க மக்கள் பிரதிநிதியா? பனவீக்கத்தை கட்டுபடுத்தவோ, வட்டிவிகிதத்தை உயர்த்தவோ அதற்காக அரசின் செலவினங்களை குறைக்க சொல்லவோ உங்கள் மக்கள் பிரதிநிதிக்க்கு இல்லாத அதிகாரம் இவர்களுக்கு ஏன் இருக்கிறது?
//எந்த முதலாளிக்கு கொடுக்கலாம் என்பதை வேண்டுமானால் தீர்மாகின்க்கும் இடத்தில் ஒருவராக அமைச்சர் இருக்கலாம். அதையும் உங்கள் பிரதிநிதி தட்டி கேட்க முடியாது. //
அமைச்சரும் பிரதிநிதிதானே, அவரை அவரது கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள்கூட கேள்வி கேட்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா..?!
// ஆனால் முதலாளிக்கு கொடுக்க வேண்டும் என்பதிலும் அதற்கான விதிமுறைகளை வகுப்பதிலும் அதிகாரம் படைத்திருப்பது ஒழுங்கு முறை ஆணையங்கள் தானே?//
ஒழுங்கு முறை ஆணையங்கள் யாரால் நியமிக்கப்படுகின்றன.. அதிகாரிகளாலா..?
//இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை மன்மோசன் சிங்கோ இல்லை மோடியோ ரூம் போட்டு யோசித்தா செயல்படுத்துகிறார்கள்?//
மோடியைப் பற்றி தெரியாது, மன்மோகன் ரூம் போட வேண்டியதில்லை, போன் போட்டாலே போதும் உத்தரவு வந்துவிடும்..
// மாண்டெக்சிங் அலுவாலியாவும் ரகுராம் ரஞ்சனும் யார்? உங்க மக்கள் பிரதிநிதியா? //
இவர்கள் தாங்களாகவே போய் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்களா..?
// பனவீக்கத்தை கட்டுபடுத்தவோ, வட்டிவிகிதத்தை உயர்த்தவோ அதற்காக அரசின் செலவினங்களை குறைக்க சொல்லவோ உங்கள் மக்கள் பிரதிநிதிக்க்கு இல்லாத அதிகாரம் இவர்களுக்கு ஏன் இருக்கிறது? //
மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏடிஎம் இயந்திரத்தை திறக்கும் அதிகாரம் கூடத்தான் இல்லை.. என்ன சொல்லவருகிறீர்கள்..?!
ஒண்ணியுமே தெரியாது என்றோ, பாவம் அப்பாவிகள் என்றோ கூறவில்லை. தனக்கு அதிகாரம் இல்லை என்பதும், தான் கையெழுத்து போடுவதற்காக அமர்த்தப்பட்டிருக்கும் பொம்மை தான் என்கிற விசயமும் ‘மக்கள் பிரதிநிதிகள்’ என்கிற தலையாட்டி பொம்மைகளுக்கு நன்கு தெரியும் என்கிற போது அவர்களுக்கு எப்படி ஒண்ணியுமே தெரியாது என்று கூற முடியும்?
//தனக்கு அதிகாரம் இல்லை என்பதும்//
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் கேட்கும் கேள்விகள், தெரிவிக்கும் கண்டனங்கள், விமர்சனங்களுக்காக அவர்களை உச்சநீதி மன்றத்தால் கூட தண்டிக்க முடியாது.. அரசியல் சட்டம் இத்தகைய அதிகாரம் வழங்கியிருக்கிறது.. அதை மதிக்கும் அரசியல் கட்சி தலைமைகள் இல்லாவிட்டால் தலையாட்டி பொம்மைகள் தான் தேர்தலில் கட்சி வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்..
முதலில் பாராளுமன்றமே இந்த நாட்டிற்கு சொந்தமா என்பதை கூறுங்கள்?
//கேட்கும் கேள்விகள், தெரிவிக்கும் கண்டனங்கள், விமர்சனங்களுக்காக அவர்களை உச்சநீதி மன்றத்தால் கூட தண்டிக்க முடியாது.//
இதெல்லாம் ஒரு அதிகாரமா ?
அம்பி,
[1]முடிவு செய்வது [Decision Making] ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள், செயல்படுத்துவது அதிகாரவர்கம் என்பதையும் ,யார் நலனுக்காக இவர்கள் இயங்குகின்றனர் [பெரு முதலாளிகள் நலனுக்காக] என்பதையும் சரியாக சொன்னீர்கள்.
[2]இலங்கைக்கு எதிரான UN ஒட்டு எடுப்பை புறகணித்த இந்திய அரசுக்கு வக்காலத்து வாங்கும் திருட்டு ப.சிதம்பர பேச்சுக்கு வினவு ஜால்ரா போடுது !
[3]இலங்கைக்கு எதிரான UN ஒட்டு எடுப்பை புறகணிக்கும் தமிழர்க்கு எதிரான முடிவை எடுத்தது சோனி,ராகு ,மோகன்,சிதம்பர என்ற கொலை வெறி கும்பல் என்பதை வினவு ஏன் மறைக்க பார்க்குது ?
//அரசின் எல்லா பேச்சுவார்த்தை விவரங்களும், வெளிநாட்டு ஒப்பந்தங்களும் முன்பே அதிகாரிகள் மட்டத்தினால் இறுதி செய்யப்பட்டு விடும், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் அமையும் பேச்சென்பது ஒரு சம்பிரதாயமே என ஈழப்பிரச்சனை தொடர்பான ஒரு பேட்டியில் நேரடியாகவே குறிப்பிட்டார் ப.சிதம்பரம். //
//எழுத்தறிவை மூன்று சதவிகிதத்தில் இருந்து நூறு சதவிகிதமாக்க சோசலிச ரஷ்யா எடுத்துக்கொண்ட காலம் வெறும் பத்தாண்டுகள். புரட்சி நடந்து இருபதாண்டுகளுக்குள் ரசியாவில் வரிவடிவம் இல்லாதிருந்த நாற்பது தேசிய இனங்களின் (சிறுபான்மை இனங்கள் உட்பட) மொழிகளுக்கு வரிவடிவம் உருவாக்கப்பட்டது. நாடு முழுக்க கிராமங்களிலும் நகரங்களிலும் பெரிய நூலகங்கள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலின் காலத்தில், ஏழை நாட்டு மாணவர்களுக்கு அறிவு மறுக்கப்படக் கூடாது என்பதற்காக அறிவியல் நூல்கள் மிக மிக மலிவான விலையில் அவர்கள் மொழியிலேயே தயாரித்தளிக்கப்பட்டது. யுத்தத்தினால் ஆதரவற்றோராகிவிட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஏராளமான காப்பகங்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. அவர்களில் இருந்து பல ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் பின்னாட்களில் உருவானார்கள்.//
புதிய ஜனநாயக இந்தியாவில் இவையெல்லாம் எத்தனை நாட்கள் நடக்கும்..?! அமெரிக்க, அய்ரோப்பிய முதலாளித்துவ ஏகாதிபத்தியங்கள் சும்மா இருக்குமா.. நாட்டின் பாதுகாப்புக்கே எல்லா வருமானத்தையும் செலவு செய்ய வைத்து இந்தியாவை சிதறடித்துவிடமாட்டார்களா..?
அவ்வாறு தலையிட்டால் அந்த ஏகாதிபத்தியங்களை இந்திய மக்கள் பார்த்துக்கொள்வார்கள். ஏகாதிபத்தியங்கள் எதிர்காலத்தில் தலையிடுமா என்கிற கேள்வி ஏன்? கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அது அவ்வாறு தான் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டுக்கொண்டிருக்கிறது, ஆனால் எங்கும் நிரந்தரமாக வெற்றி பெற்றதில்லை.
கடந்தகாலத்தில், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன மக்கள் ஏகாதிபத்தியங்களை ஓட ஓட விரட்டியடித்தார்கள். ரசிய மக்களை அடிமைப்படுத்த நுழைந்த பதிநான்கு ஏகாதிபத்திய, வல்லரசு நாடுகளை போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் ரசிய மக்களும் விரட்டியடித்தார்கள். வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்திற்கு செருப்படி விழுந்தது.
இன்று ஈராக் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியங்களை தாக்கி பலவீனப்படுத்தி வருகிறார்கள். பிற நாடுகளின் உதாரணம் ஏன்? ஏகாதிபத்தியத்தின் நுழைவுவாயிலிலேயே அதை எட்டி உதைக்கிறார்கள் அமெரிக்க மக்கள். அமெரிக்காவில் மட்டுமல்ல இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் மக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகிறார்கள். முதலாளித்துவம் ஒழிக என்றும், நாங்கள் 99% என்றும் முழக்கமிட்டு ஏகாதிபத்திய கொள்கைகளை கண்டிக்கிறார்கள்.
எனவே இந்தியாவின் புதிய ஜனநாயக சமூக அமைப்பில் ஏகாதிபத்தியங்கள் தலையிட்டால் அது இந்திய மக்களின் பிரச்சினையாக மட்டும் இருக்காது உலக மக்களின் பிரச்சினையாகிவிடும். இந்தியாவிற்குள் தலையிடும் ஏகாதிபத்தியங்களை இந்திய மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களும் எதிர்த்து முறியடிப்பார்கள்.
எனவே அது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம், நீங்கள் கவலை கொள்ள வேண்டியதும் விவாதிக்க வேண்டியதும். இந்த போலி ஜனநாயக சமூக அமைப்பு ஏற்படுத்தும் பிரச்சினைகளையும், அதை எப்படி மாற்றியமைப்பது என்பதை பற்றியும் தான். இந்த சமூக அமைப்பை அடியோடு மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை (நியாயங்களை) நீங்கள் அறிந்துகொண்டால் அமைக்கப்படும் புதிய ஜனநாயக சமூகத்தில் உருவாகும் பிரச்சினைகளை தீர்ப்பது பெரிய பிரச்சினை அல்ல.
தவறாக எடுத்துகொள்ள வேண்டாம்.
முப்பது ஆண்டு கால போராட்டத்திற்கு பின், குறைந்த பட்சம், ஒரு சட்டமன்ற தொகுதி, ஒரு கவுன்சிலர் தேர்தல் அளவில் கூட பொதுமக்களிடையே ஒட்டு மொத்த தேர்தல் புறக்கணிப்பிற்கு தங்களால் ஆதரவு திரட்ட முடியவில்லை.
ஒரு குறிக்கோள் என்று இருந்தால் அதற்கு முதலில் சிறிய அளவில் இலக்குகள் நிர்ணயித்து ஒவ்வொரு சிறிய இலக்காக வெற்றி அடைந்து பின் உங்கள் குறிக்கோளை அடையலாம்.
அப்படி பார்த்தால், 30 வருட போராட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் கூட மக்கள் ஆதரவு தங்களுக்கு கிடைக்கவில்லையே? ஏன் என்று யோசித்து பார்த்தீர்களா?
தவறு மக்களிடம் இல்லை. ஒன்று, தங்களது சித்தாந்தத்தை நீங்கள் மக்களிடம் ஒழுங்கான முறையில் தாங்கள் விளக்கவில்லை. இல்லை, தங்களது சித்தாந்தம் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று மக்கள் அதை ஒதுக்கி தள்ளி விட்டனர்.
ஒரு தொகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிப்பது என்பது ஒரு நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் செய்தி. அது நடந்தால் டி.ஆர்.பி. ரேடிங்குக்காக அலையும் மீடியாக்கள் அனைத்தும் அந்த ஒரு தொகுதியை நோக்கி படையெடுத்து வந்து கேட்பார்கள். தங்களது முயற்சிக்கு அது முதல் வெற்றியாக இருந்திருக்கும். மற்ற தொகுதி மக்களிடையே இதனை குறித்து ஒரு விழிப்புணர்வு வந்து இருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. ஏன் அப்படி நடக்கவில்லை, ஏன் மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை என்று தாங்கள் சுயபரிசோதனை செய்யும் நேரம் வந்து விட்டது.
ஒரே ஒரு தொகுதியில் கூட தேர்தலை புறக்கணிக்க வேண்டும் உங்கள் கருத்துக்கு மக்கள் ஆதரவு பெற முடியாத நிலையில் ஒட்டு மொத்த நாட்டையும் தங்களது புரட்சி முறை ஆட்சி வரும் என்று நினைப்பது பகல் கனவு போல அல்லவா இருக்கிறது?
ஒட்டு மொத்தமாக மக்களை தேர்தலை புறக்கணிக்க செய்யவேண்டுமானால் நீங்கள் இன்னும் நிறைய நிறைய உழைக்க வேண்டும். முதலில் மக்களின் பிரச்சினைகளுக்கு உங்களால் ஆனா தீர்வுகளை தர வேண்டும். உங்களால் மக்களுக்கு ஒரு பயன் உண்டென்றால் தான் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
செய்வீர்களா?
எத்தனை ஆண்டுகளுக்குள் ஒரு தத்துவம் நடைமுறையில் நிரூபிக்கப்படுகிறது என்பதை வைத்து அதன் உண்மைத்தன்மையை அறிய முற்படுவது அறிவியல் அணுகுமுறை ஆகாது. அப்படி பார்த்தால் கட்சி ஆரம்பித்து வெறும் ஐந்தே ஆண்டுகளில் ரசியாவிலும், இருபத்தியெட்டே ஆண்டுகளில் சீனாவிலும் இதே தத்துவம் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டது.
அறிவியலில் வானியல் என்கிற துறை தோன்றியவுடனே விஞ்ஞானிகள் செவ்வாய்கிரகத்திற்கு பறந்துவிட்டனரா? வானியல் என்கிற அறிவியல் துறை வரலாற்றில் மிகவும் பின்தங்கியது. அது கி.மு விலேயே தோன்றிவிட்டது. ஆனால் கி.பி யில் தான் உலகம் உருண்டை என்பது கண்டுபிடிக்கப்படுகிறது, அப்போதும் உலகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அல்லது கி.மு வில் தோன்றிய வானியல் துறை இத்தனை நூற்றாண்டுகளாகியும் கோபர்நிகஸ் காலத்தில் கூட செவ்வாய் கிரகத்தை பற்றி ஒன்றையுமே கண்டறியவில்லை என்பதால் ஒன்று கோபர்நிகஸ் வானியலை சரியாக விளக்கவில்லை அல்லது வாணியல் என்கிற அறிவியலே தவறானது என்கிற முடிவுக்கு வருவோமா?
பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது, முழு பிரபஞ்சத்தை பற்றியும் இப்போதே விளக்கினால் தான் அறிவியலை ஏற்றுக்கொள்வேன் என்று கூற முடியுமா? அறிவியல் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
இத்தனை ஆன்டுகளுக்குள் இத்தனை கண்டுபிடிப்புகளை செய்தால் தான் அறிவியலை ஏற்றுக்கொள்வேன் என்று எப்படி சொல்ல முடியாதோ அப்படி தான் மார்க்சியத்தையும் இத்தனை ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தினால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று மதிப்பிடக்கூடாது. அது சரியா இல்லையா, அறிவியலா அறிவியலுக்கு புறம்பானதா என்பதிலிருந்தே மதிப்பிட வேண்டும்.
எனவே மார்க்சியம் சரியானது. புரட்சிகர அமைப்புகளின் நடைமுறையும் முழக்கங்களும் சரியானவை. போலி ஜனநாயகத்தேர்தல் தவறானது. எனவே அதை புறக்கணிப்பது தான் சரியானது.
நீங்கள் சொல்வதை வினவு தோழர்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். நான் சொல்வதை நீங்களும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ளாதவர்கள் தெரிந்தே வாக்களிக்கிறார்கள்.ஒட்டு போடுவது சரி; நான் ஓட்டு போடுவதன் மூலம் இவை இவைகளை சாதிக்க முடியும்; என்று தான் ஓட்டு போடுவதன் நியாயத்தை பேசமுடியாமல், மக்கள் பெருமளவில் ஓட்டுபோடுகிறார்கள் அது இது என்று சப்பைகட்டு கட்டுகிறார்கள்.
அவர்களுக்கு புரியவைக்க நீங்கள் சொல்வது போல வினவு இன்னும் உழைக்க வேண்டும் என்பது உண்மையே
ராஜா, கட்டுரை எல்லாம் சூப்பரு. ஆனா சோவியத் யூனியனின் லெனின், ஸ்டாலின் அந்தநாட்டை அமெரிக்காவை விட பிரமாதமாக்கிட்டாங்கன்னு சொன்ன பாரு, அங்கதான் ஃபேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்காயிருச்சு. அதுனால நீ இன்னா பண்ணு, எப்படி இந்தியா மோசமாயிருச்சுங்கறத 5000, 10000 வார்த்தைல எழுதினயோ அதே மாரி அவ்வளவு வார்த்தைகளை உபயோகிச்சு விஸ்தாரமா ஸ்டாலினோட சோவியத்த பத்தி எழுதேன்!
புரட்சிக்கு முன்னர் பசி பட்டினில் இருந்த நாடு புரட்சிக்கு பின்னர் அமெரிக்காவுக்கு விஞ்சும் அளவு அளவு வளர்ந்த்தா இல்லையா? குறுகியகாலத்தி எப்படி சாத்தியமானது அது? முதல் உலகப்போரின் தோற்ற ஜாரின் ரஷ்யா இரண்டாம் உலகப்போரின் ஹிட்லரை தோற்கடித்ததே எப்படி?
ஊருக்கே தெரிஞ்ச சமாச்சாரம் தெரியலயா? போங்க தம்பி கொஞ்சம் பொது அறிவு வளத்துக்கோங்க…
மனோஜ் அவர்களே,
//புரட்சிக்கு முன்னர் பசி பட்டினில் இருந்த நாடு புரட்சிக்கு பின்னர் அமெரிக்காவுக்கு விஞ்சும் அளவு அளவு வளர்ந்த்தா இல்லையா? //
அது சரி, அதற்கு அப்புறம் ஏன் புரட்சி ஆட்சிக்கு மக்களிடம் ஆதரவு குறைந்தது?
ஒன்றிணைந்த USSR ஏன் சிதறியது?
பாரதிராஜாவின் படத்தில் ஒரு பதினெட்டு வயது கதாநாயகனும், கதாநாயகியும் கைகோர்த்து கொண்டு கடலோரம் நடப்பதோடு எண்டு கார்டு போட்டு கதையை முடிப்பது போல இருக்கிறது தாங்கள் சொல்வது. அப்புறம் என்ன நடந்தது என்று பார்த்தால் அவர்களின் வாழ்வு எவ்வளவு போராட்டம் நிறைந்தது என்று தெரியும். அது போல நீங்கள் அமெரிக்காவை விஞ்சும் அளவு வளர்ந்த ரசியா அப்புறம் ஏன் இப்படி ஆனது? கருத்துரிமை, ஜனநாயகம் என்ற அளவு கோள்களில் ரசியா, சீனா எந்த அளவில் உள்ளது?
சற்று விளக்கவும் நண்பரே,
பஞ்சை பராரிகளான தொழிலாளிவர்க்கம் முதலாளிவர்க்கம் போல் காலம் காலமாக அதிகாரம் செய்து பழகியது அல்ல.அதுபோல பாசிசத்துக்கு எதிரான போராட்டதில் பல தோழர்களை கட்சி இழந்தது. இது போன்ற பல காரணங்களால் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை பொறுப்புவரை முதலாளிகளி கையாட்கள் ஊடுறுவினார்கள்…முதலாளிகளிடம் தங்கள் அதிகாரத்தை இழந்தார்கள். அதன் பின்னர் நீங்கள் சோவியத் ஒரு ஏகாதிபத்தியமாக மாறி சீரழிந்தது.
உங்கள் வாதப்படியே பிரெஞ்சு புரட்சியில் மலர்ந்த முதலாளித்துவ ‘ஜனநாயகம்’ கூட தோல்வியுற்று மீண்டும் சர்வாதிகாரம் திரும்பியது.அதை முதலாளித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாத தனம் என்று சொல்ல முடியாமா? பார்பன எதிர்ப்பு களப்பிரர்களின் ஆட்சியை தோல்வியுற்று தான் சோழர்களின் பார்பன ஆட்சி வந்தது இவ்வளவு ஏன் திப்பு சுல்தான் கூட தோல்வியடைந்தார், ஆர்காட்டு நவாப் தோல்வியடையவில்லை.எனில் வெற்றி பெற்றவர் தான் சிறந்தவரா?இந்த அளவுகோல் சரியா?
நாட்டுமக்களுக்க்கு வேலை,உணவு, மருத்துவம்,கல்வி என அனைத்தையும் பூர்த்தி செய்த அரசு சோவியத் அரசு தான்.
மக்கள் நலனில் அக்கறை இருக்கும் ஒருவர் ஏன் தோற்றது என்பதை தான் ஆராய்ந்து கழைந்துகொள்ள முயலுவார்.
———–
உயிர் வாழும் உரிமையே இந்த முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் இல்லை.இதுல கருத்துரிமையை வெச்சு நாக்கு வழிக்கவா? நீங்க வேலை பார்க்கும் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்கலாம் என்று பிரச்சாரம் செய்து பாருங்களேன் அப்போது தெரியும் முதலாளிகளின் கருத்துரிமை பற்றி.
கருத்துகளை பரப்பும் பத்திரிகைகள் முதலாளிகளின் பாக்கெட்டில் இருக்கிறது. பிறகு எங்கிருந்து கருத்துரிமை?
இம் என்றால் அவதூறு வழக்கு பாயும் திருநாட்டில் இருந்துகொண்டு, மோடிக்காக பல பத்திரிகையாளர்களை துரத்தியடித்த திருநாட்டில் இருந்துகொண்டு கருத்துரிமை என்று பேசுவது காமெடியாக இருக்கிறது.
சவுக்கு என்று ஒரு தளம் இப்போது தடை செய்யப்பட்டிருக்கிறதே தெரியுமா?
கருத்துரிமை காவலர்கள் மாவோயிஸ்டுகளின் கருத்துகளை ஏன் தடை செய்கிறார்கள். கருத்தோடு கருத்தை மோதவிட்டு பார்க்க வேண்டியது தானே?
இன்று மாவோயிஸ்டுகளின் கருத்துக்கள் தடை செய்திப்பது போன்று புரட்சிக்கு பின்னர் முதலாளிகளின் பத்திரிகைகள் தடை செய்யப்படும். ஜனநாயகம் என்பது வர்க்க சார்புடையது தான்.சோவியத்திலும், செஞ்சீனத்திலும் அது தான் நடந்தது.
நண்பரே ,
கட்டுரைல தரவுகளின் அடிப்படையில் முதாளித்துவ அமெரிக்காவை விட சோசலிச சோவியத் ருசியா முன்னேறி இருந்ததுன்னு சொல்றாங்க . நீங்களும் ஏதாவது தரவுகள வைத்து மறுக்கலாம். அத விட்டுட்டு சும்மா குண்டக்க மண்டக்க பேசிட்டு இருந்த எப்படி.
நீங்களே எழுதுங்களேன்.
நீங்க எந்த கட்சி சேர்ந்தவர் என்பது எனக்கு தெரியாது
ஆனால் இந்த கட்டுரை படிக்க நல்லாவே இருகுகு
ஆனா கடைசியா இன்னாதான் சொல்ல வற்றீங்க அது மடுடும் புரியல
நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வெறும் உண்ணா விரத போராட்டத்தோடு
முடியகூடிய விசயம் இல்லை சம்மா இருப்பவர்களை உசுப்பேத்தி
இழுத்து விடும் இந்த வேலை தேவையா எனுறு யோசியங்கள்
உன்ன போல் ஒருவரே ,
//நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வெறும் உண்ணா விரத போராட்டத்தோடு
முடியகூடிய விசயம் இல்லை//
அத தான்யா நாங்களும் சொல்றோம். ஆக பெரும்பான்மையான மக்கள் 2 வேலை உணவுக்கே கஷ்டப்படும் போது அவங்கள உண்ணாவிரத போராட்டத்துக்கு வர சொல்ல முடியுமா ?
//ஆனா கடைசியா இன்னாதான் சொல்ல வற்றீங்க அது மடுடும் புரியல//
அப்பெரும்பான்மையான மக்களை வழிநடத்தி சென்று ஆயுத போராட்டத்தால் மட்டுமே இந்த அரசமைப்பை வீழ்த்தி புதிய மக்கள் அரசமைப்பை உருவாக்க முடியும். உழைக்கும் மக்களுக்கு இழப்பதற்க்கு அவர்களின் உயிரைத் தவிர வேறெதும் இல்லை ஆனால் பெறுவதற்கோ இவ்வுலகமே இருக்கின்றது .
அதே போல புரட்சியொன்றும் கடைச்சரக்கல்ல. அப்படியே போய் அள்ளி கொண்டு வர. அல்லது தான்தோன்றித்தனமாகவும் வந்து விடாது . அதற்கென்று ஒரு கட்சி வேண்டும் . அதற்கென்று ஒரு கோட்பாடு வேண்டும் . அது அறிவியல்பூர்வமாகவும் இருக்க வேண்டும். அதை கண்னுங்கருத்த்துமாக செயல்படுத்த்த வேண்டும் . பாட்டாளிகளும், விவசாயிகளும் மற்றெல்லா உழைக்கும் மக்களையும் சேர்த்து ஒரு மக்கள் திரள் ஒன்றை கட்டமைக்க வேண்டும். நடப்பு அரசியலையும் , உலக நடப்பையும் ஊர்ந்து அவதானித்து புரட்சியை வழிநடத்த வேண்டும்.
நன்றி
ஆயுதம் ஏந்துபவர்கள் ஆட்சியை பிடித்த பின் ஜனநாயக ஆட்சி கொடுப்பார்கள் என்று என்ன நிச்சயம்?
ஆயுதம் ஏந்திய புரட்சியை செய்து தற்போதைய எல்லா அரசியல்வாதிகளையும் கொன்றோ அல்லது சிறையில் அடைத்தோ விடுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அதன் பிறகு எதிர்ப்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையில் உங்கள் மனதில் சர்வாதிகார வெறி புகுந்தால் நாடு என்ன ஆகும்?
ஆயுதம் ஏந்திய புலிகளின் நிலை என ஆனது?
முதலில் உங்கள் புரட்சி ஆட்சி முறைக்கு சிறந்த மாதிரி வடிவமாக எந்த நாட்டை காட்டுகிறீர்கள்?
நீங்கள் காட்டும் நாடுகளில் ஜனநாயக அளவுகோலில் மக்கள் மகிழ்ச்சியாக நிம்மதியாக உள்ளார்களா?
பதில் தாருங்கள்?
இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது சரி என்று உங்கள் உள்ளுணர்வு சொல்வதால் தான் அது உங்களுக்கு படிக்க நல்லா இருக்கு. இந்த பிரச்சனை வெறும் உண்ணாவிரதத்தோடு முடியும் விசயமும் அல்ல என்பது வரை புரிந்துகொன்டிருக்கிறீர்கள். அதையும் தாண்டி ஏதோ செய்தால் தான் பிரச்சனை தீரும் என்பது தான் சரி.
அதுக்கு புரட்சி தான் தீர்வு என்று வினவு சொல்கிறது.அது தேவை என்பதால் தான் அப்படி சொல்கிறது.தேவை இல்லை என்று நீங்கள் கருதினால் இந்த பிரச்சனைகளை எப்படி தீர்க்கலாம் என்று சொல்லுங்கள்?
நான் சொல்றேன் மனோஜு, நோய் நாடி, நோய் முதல் நாடி ங்கற மாதிரி, மனுசனோட குணம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த மாதிரி தீர்வை யோசிக்கணும். நீங்க 5 பேரு கூடி நின்னுக்கிட்டு, காலேல யானை போறத பாத்துட்டு, இதோ ராத்திரியோட மிச்ச இருட்டு இந்தா இங்க நடந்து போயிட்டிருக்குன்னு சொல்லப்படாது
எல்லாரும் ஒரே மாதிரி திறமையோடயும், குணாதியசத்தோடயும் பிறக்கரதில்லை. அதுனால முதல்ல எல்லாரும் சமம் கிடயாது. அப்ப ஒரு தனிமனுசனுக்கு அவனோட திட்டங்களை, எண்ணங்களை செயல்படுத்தறதுக்கான ஆடுகளமா இந்த பூமி இருக்கணும். இப்ப நீங்களும் கம்யூனிசம், புரட்சின்னு முழுமூச்சா இருக்கறீங்க. போராட்டம்லாம் நடத்தறீங்க. ஒண்ணும் பேரமாட்டேங்குதே.
/எல்லாரும் ஒரே மாதிரி திறமையோடயும், குணாதியசத்தோடயும் பிறக்கரதில்லை. /
ஆக தீர்வு என்று எதுவும் இல்லை என்று கூறவருகிறீர்கள். உங்கள் வாதப்படி விவசாயிகள் கொத்து கொத்தாக சாவதோ இல்லை முதலாளித்துவ பயங்கரவாதத்தால் தொழிலாளிகள் கொல்லப்படுவதற்கோ காரணம் அவர்கள் கொல்லப்படுவதற்காக திறமையில்லாமல் பிறந்திருக்கிறார்கள் அப்படிதானே. உனக்கு வெட்கமாக இல்லையா இதை சொல்லுவதற்கு?
/அதுனால முதல்ல எல்லாரும் சமம் கிடயாது. /
வினவு தோழர்களும் அதை தான் சொல்கிறார்கள். உழைச்சி சாப்பிடுபவனும் உக்காந்து சாப்பிடுபவனும் சமம் கிடையாது. ஆனால் இங்கே நிலை எப்படி இருக்கிறது உக்காந்து தின்பவன் சொகுசா இருக்கான் உழைப்பவன் கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கான். ஏன் இப்படி? பெரும்பான்மையான் உழைக்கும் மக்கள் இந்த சமூக அமைப்பை அப்படியே தலைகீழாக புரட்டி போட்டால் தான் அவர்களுக்கு வாழ்வு பிறக்கும்.
/அப்ப ஒரு தனிமனுசனுக்கு அவனோட திட்டங்களை, எண்ணங்களை செயல்படுத்தறதுக்கான ஆடுகளமா இந்த பூமி இருக்கணும்./
எப்படி ‘சாராய கடன்காரன்’ விஜய் மல்லையா,’வரி எய்ப்பு’ நோக்கியா , ‘கஞ்சா வியாபாரி’டாடா நீரா ராடியா மாதிரி தனிமனித திட்டங்களை செயல்படுத்த ஆடுகளமா இருக்கனுமா?
அருமையான தீர்வு இருக்கு ராஜா, அது நடைமுறைலயும் இருக்கு. நீங்கதான் கண்ண மூடிக்கிட்டு இருட்டா இருக்கு, இருட்டா இருக்கு, வீட்டை கொளுத்து வெளிச்சம் வரட்டும்னு சொல்றேள்.
தண்ணீர் தன்மட்டத்தை தானே சென்றடையும். அது போல சத்வ, ரஜோ, தமோ குணங்களாக சிதறுண்டிருக்கும் இந்த பிரபஞ்சமானது, இயங்கியும், முயங்கியும், சேர்ந்தும், விலகியும், அரவணைத்து கொண்டும். அடித்து கொன்று கொண்டும் தனக்கான சமநிலையுடன் இருந்து வருகிறது. இதுக்கு dynamic equilibrium ன்னு பேரு.
இப்ப அமெரிக்காதான் உலகத்துக்கே சண்டியர். அவனோட தற்காப்பு செலவு எவ்வளவு தெரியுமா? அவனுக்கு பின்னால் இருக்கு அடுத்த 10 நாடுகளின் தற்காப்பு செலவை மொத்தமாக கூட்டினாலும் பக்கத்துல வரமுடியாது. அவன் smart bomb வெச்சி ஊடுகட்டி அடிச்சான்னா எல்லாருக்கும் சங்குதான். அப்பேர்ப்பட்ட அமெரிக்கால டாலர் நோட்டை தனியார்தான் அடிக்கிறான். ஆயுதங்களையும் தனியார்தான் பண்றான். அவாள்ளாம் GOD ஐ கும்புடறவா. அதாவது Gold, Oil, Drug. இந்த மும்மூர்த்திகள்தான் அவாளுக்கு எல்லாம். அவா ஏன் சகல ஐஸ்வர்யத்தோடயும் இருக்கா? மனுஷாளோட குணம் தெரிஞ்சி அதுக்கேத்தாப்புல system வச்சிருக்கா
அதுனால சக்கரம்லாம் ஏற்கனவே கண்டுபிடிச்சி தேர் சர்வ அலங்காரத்தோட ஜோரா வந்துண்ட்ருக்கு. இன்னும் நீங்க சக்கரம் இப்படி இருக்கப்படாது, வட்டம் சரிப்பட்டு வராது, கொஞ்சம் வீலை பெண்டு எடுக்கணும் அப்படின்னு சொல்லிண்ட்ருந்தேள்னா எப்படி? வாங்கோ நாம முன்வரிசைக்கு போயி நன்னா சேவிச்சுக்கலாம்!!!
நீங்க சொல்றது எல்லாம் சரி ஆனா உங்க கொள்கைக்காக போராடுபவர்களின்
உயிருக்கம் அவர் கிடும்பத்திற்கும் எந்த பாதகமும் இல்லாமல் பிற மக்களுகுகும்
எந்த பாதகமும் இல்லாமல் போராடும் வழியை கூறுஙகள்
இநுதிய சுதந்திரதுதிறுகு பல ஆயிரம் பேர் தன் உடல் உயிர் உடமை அத்தனையும்
இழந்தா்கள் ஆனால் அவற்றுக்கு இந்த காலத்தில் என்ன மரியாதை என்று எல்லாருக்கும் தெரியும்
வினவு தோழர்கள் சொல்வது சரி என்று படுகிறது ஆனால் உயிருக்கும் குடும்பத்துக்கும் பாதகம் இல்லாமல் போராட வேண்டும் என்கிறீர்கள். சரி தான். நியாயமான் விருப்பம் தான்.
வினவு தோழர்கள் துப்பாக்கிகளோடு காட்டில் இல்லை.நம்முடன் தான் வாழ்கிறார்கள். பேருந்துகளில் ரயில்களில் வெளிப்படையாக தான் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து போராடினால் உயிர் போய்விடும் என்று அச்சபடுவதற்கு அடிப்படையே இல்லை.
நீங்கள் கூறுவதை வைத்து உயிருக்கு பாதகவில்லாம்ல் போராடும் வழியை கூறினால் நீங்கள் போராட தயாராக இருப்பதாக நம்புகிறேன்.அப்படிதானே?
”இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரப்படாது, நானும் வரமாட்டேன்.. பேச்சு பேச்சாவே இருக்கணும்..” என்ற வ.வா.ச. தலைவர் கொள்கைப்படி, பார்ப்பானைத் திட்டுவது மட்டுமே உயிருக்கு பாதகமில்லாமல் போராடும் ஒரே வழி.. அதுவே பெரியார் பிறந்த மண்ணில் புரட்சி என்று நம்பப்படும் நம்பகமான வழி..
நீங்கள் கை நீட்டும் அனைவரும் தவறானவர்கள் என்றால் நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும் நீங்கள் நல்லவராக இருந்தால் ஜனநாயக முறைப்படி
தேர்தலில் நின்று ஜெயித்து மக்களுக்கு நல்லது செய்யலாமே, ஆம் ஆத்மி ஊழலுக்கு எதிரான கொள்கையை முன்னெடுத்து சென்றதால் கட்சி ஆரம்பித்த 9 மாதத்தில் டெல்லி ஆட்சியை கைப்பற்றியது, நீங்களும் நல்ல கொள்கையோடு ஜனநாயக முறைப்படி வந்தால் இந்திய மற்றும் தமிழக மக்கள் உங்களை அமோக ஆதரவுடன் வெற்றி பெற செய்வார்கள் , பிறகு மக்களுக்கு நல்லது செய்யலாமே, ஆயுத புரட்சி என்று பலரை பலி வாங்கி உங்கள் கொள்கையை நிலைநாட்டிய பிறகு நல்லது செய்வோம் என்பது நியாயமா? ஜனநாயகத்தில் நேர்மையானவர்களுக்கு மக்களின் ஆதரவு எப்போதுமே உண்டு
நீங்கள் சொல்வது 100% சரி. ஜனநாயகத்தில் நேர்மையானவர்களுக்கு மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு தான்.
இங்கு கேள்வி இந்தியாவில் நிலவுவது ஜனநாயகம் தானா? இந்த கட்டுரையிலேயே ஒரு வேட்பாளரோ அவரது சின்னமோ மக்களிடம் அறிமுகமாகுவதற்கு சில பல கோடிகள் தேவைபடுகிறது என்பதையும் இந்தியாவில் பெரும்பாண்மை மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அடுத்து அப்படி வெற்றி பெற்றாலும் அந்த மக்கள் பிரதிநிதி அதிகாரம் இல்லாத டம்மி பீசாக தான் இருக்க முடியும் என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கட்டுரையை மீண்டும் ஒரு படித்து அதில் கூறப்பட்டுள்ளது தவறு என்று நீருபித்துவிட்டு தேர்தலில் நிற்க கூறலாமே?
நீங்கள் ஒட்டு போடாதே, ஒட்டு போடாதே என்று சொல்வதற்கு செய்யும் செலவை, நேர்மையானவர்களை போட்டியில் நிறுத்தி எங்களுக்கு ஒட்டு போடுங்கள் என்று நீங்கள் போராடலாமே? வார்டு கவுன்சிலர் அளவில் போட்டியிட எந்த பெரிய முதலீடும் தேவையில்லையே. உழைப்பு இருந்தாலே தெருத்தெருவாக, வீடுவீடாக சென்று மக்களின் அன்றாட பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை பதவியில் இல்லாதபோதே போராடி தீர்த்து வைக்கலாமே, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருபவர்களுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்களா என்ன?
தங்கள் கருத்தை நாம் அமோதிக்கிறேன்.
இதை தான் ஆரம்பத்தில் இருந்து வினவில் ஒட்டு போடாதே, ஒட்டு போடாதே என்று முழங்கும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு வருகிறேன்.
ஆக்கபூர்வமாக யோசிப்பதை விடுத்து கீறல் விழுந்த டேப் ரெகார்டர் போல ஒட்டு போடாதே, புரட்சி செய், ஒட்டு போடாதே, புரட்சி செய் என்று பிரச்சாரம் செய்தால் மக்கள் நம்பி விடுவார்களா?
புரட்சி ஆட்சிக்கு ஒரு மாதிரி வடிவம், மக்கள் கண்களுக்கு தெரிய வேண்டும். முதலில் ஒரு வார்டு கவுன்சிலர் பதவியையாவது பிடித்து மக்களுக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் நேர்மையானவராக, திறமையானவராக இருக்கும்பட்சத்தில் மக்கள் உங்கள் குழுவிற்கு மேலும் மேலும் ஆதரவை தருவார்கள்.
மக்களுக்கு நீங்கள் பயன்பட வேண்டும். இல்லையேல் எல்லா கோஷமும் வெற்று கோஷம் தான்.
எனக்கு உங்கள் கருத்துகளின் மீது ஈடுபாடு இருந்தாலும் நீங்கள் எதிர்க்கும் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறேன். பணம் நிறைய சம்பாதிக்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமானால் இந்த சந்தையில் இருந்து நான் தார்மீக ரீதியில் வெளியேற வேண்டுமா?
அதாவது பொதுவில் சோசலிசத்தை விரும்பினாலும் முதலாளித்துவ கூறுகளை அவரவர் நலனுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளும்படிதான் இன்றைய வாழ்க்கை முறை அமைந்துள்ளது. உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.
கார்த்திக்.
நீங்கள் புரட்சிகர கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறீர்கள்,சோசலிச சமூகம் தான் சரி அத்தகைய சமூக அமைப்பை தான் உருவாக்க வேண்டும் என்கிறீர்கள்.
சரி ஏன் புரட்சிகர கருத்துக்களையும், சோசலிசத்தையும் ஏற்றுக்கொண்டீர்கள்?
முதலாளித்துவம் தவறு என்பதாலும் சோசலிசம் சரி என்பதாலும் தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறீர்கள், சரியா?
எனில் உங்களுடைய கேள்விக்கு வெளியிலிருந்து யாரும் பதிலளிக்க வேண்டியதில்லை, நீங்களே யோசித்துப்பாருங்கள்.
வினவில் சில தினங்களுக்கு முன் vinavu home page ல் முதலாளிகளீன் விளம்பரங்கள் ஜோலித்ததே அதற்கு என்ன சொல்கின்றீர் ?
தாங்கள் ஏதேனும் பலான தளங்களுக்கு சென்று திரும்பியிருந்தால் அதற்கு வினவு தளமா பொறுப்பு?
பார்ரா ,
இன்டர்நெட்[World Wide Web]அய் கண்டுபிடித்த Tim Berners-Lee தப்பை கண்டு பீடித்துட்டார் !
Screen சாட் அய் வினவுக்கு அனுப்பி உள்ளேன் !
நன்றி வினவு . technical trouble shouting செய்ய உதவியதற்கு வினவுக்கு மிக்க நன்றி.
I will try my best to delete the tool bar from my system through control panel add/remove program.
vinavu emails me://நீங்கள் ஏதாவது ஒரு இணைய தளம் சென்று அறிந்தோ அறியாமலோ ஏதாவது ஒரு டூல்
பாரை டவுண் லோடு செய்து விட்டால் அது உங்களது பிரவுசரில்
இறங்கிக்கொள்ளும். பிறகு அது நீங்கள் பார்க்கும் இணைய தளங்களில்
அவர்களுடைய அல்லது அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் விளம்பரங்களை
காண்பிக்கும். இதற்கும் வினவு தளத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
நாங்கள் எந்த விளம்பரங்களையும் எப்போதும் போட்டதில்லை,போடுவதில்லை. எனவே
நீங்கள் இது போன்ற டூல் பாரை உங்களுக்கு தெரியாமலேயே இறக்கும் தளங்கள்
குறித்து கவனமாக இருக்க வேண்டும். நன்றி//
மிக அற்புதமான கட்டுரை…
ஆனாலும் சில நெருடல்கள்..
//நாம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்குமான ஆணிவேர் தனிச் சொத்துடைமைதான்.//
தனி சொத்துடமை என்பது இருந்தால் தான் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்கிற உத்வேகம் வரும். நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்றெல்லாம் கூறினால் யாரும் உழைக்க முன்வரமாட்டார்கள். நிலம் வாங்கி நம் இஷ்டப்படி வீடு கட்டி கொண்டு வாழலாம் என்கிற நிலை இருந்தால் தான், உழைக்க வேண்டும் என்கிற ஆசை வரும்.
//பெண்ணடிமைத்தனம், வறுமை, மதம் என எல்லா சிக்கல்களும் தனியுடைமையால்தான் உருவாகின்றன.//
பெண்ணடிமை தனத்திற்கும் தனி சொத்துடைமைக்கும் என்ன தொடர்பு. ஒரு ஆண் ஒரு பெண்ணை ஆதிக்கம் செய்ய கூடாது. அதே போல் ஒரு பெண்ணும் தேவை இல்லாமல் பெண்ணியம் பேச கூடாது. இது தவிர பெண் என்பவள் தன் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் சில விஷயங்களில் அடி பணிந்து தான் போக வேண்டும். தேவையில்லாமல் இந்த சமுகத்தில் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் காப்பதில் பெண்ணுக்கு தான் முக்கிய பங்குண்டு என்பதை உணர வேண்டும்.
தனிச்சொத்துடைமை இருந்தால் தான் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்கிற ஆர்வம் வரும் என்றால், உலகில் பெரும்பாண்மை மக்கள் தனிச்சொத்துடைமை இல்லாதவர்கள் தான், ஆனால் உலகம் சுறுசுறுப்பாகத்தானே இருக்கிறது?
நமது நாட்டையே எடுத்துக்கொள்வோம், 90% மக்களுக்கு பெரிதாக தனிச்சொத்துடைமை என்று ஒன்றும் இல்லை. இந்திய மக்களில் பெரும்பாண்மையானவர்கள் விவசாயிகள். விவசாயிகள் அனைவருமே காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ஐந்து ஆறு மணிக்கெல்லாம் வயல்வெளிகளில் இறங்கி வேலைசெய்கிறார்கள். மாலை சாயும் போது தான் வீடு திரும்புகிறார்கள். இப்படி கடுமையாக உழைக்கும் பெரும்பாண்மை விவசாயிகளுக்கு துண்டு நிலம் கூட சொந்தமாக இல்லை. ஆனால் நூறு, ஆயிரம் ஏக்கர் என்று நிலங்களை குவித்துவைத்துக்கொண்டிருக்கும் பன்ணையார்களும், நிலப்பிரபுக்களும் சொத்துடைமையாளர்கள் என்பதாலேயே என்றாவது வயலில் இறங்கி வேலை செய்திருக்கிறார்களா?
ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளை எடுத்துக்கொள்வோம். அவர்களுக்கு தனிச்சொத்து என்பதே இல்லை. ஆனால் அவர்கள் தான் முழுச்சமூகத்தையும் பராமரிக்கிறார்கள். தினமும் ஆலையை இயக்குவதும், உற்பத்தியை பெருக்கி ஒட்டுமொத்த சமூகத்தையும் முதலாளிகளையும் சேர்த்து பராமரிப்பதும் சொத்துடமைகள் எதுவுமற்ற தொழிலாளிகள் தான். சொத்துடைமையாளனாக இருக்கும் காரணத்தினாலேயே முதலாளி எந்த நாட்டிலாவது உழைப்பில் ஈடுபட்டிருக்கிறானா?
உடைமைகள் எதுவுமற்ற விவசாயிகளும், தொழிலாளிகளும் பிற உழைக்கும் மக்களும் தான் உண்மையில் உழைக்கிறார்கள். அவர்களால் தான் இந்த சமூகமே இயங்குகிறது. தம்முடைய உழைப்பால் தம்மை மட்டுமின்றி உழைக்காமல் உட்கார்ந்துகொண்டிருக்கும் சோம்பேறிகளான சொத்துடமையாளர்களையும் பராமரிப்பவர்கள் இந்த உழைக்கும் மக்கள் தான்.
இவ்வாறு தனிச்சொத்துடைமையை மூலதனமாக வைத்துக்கொண்டு உழைக்காமல் உட்கார்ந்து திங்கும் சிறு கூட்டத்தால் தான் உழைக்கும் மக்களுக்கு அனைத்து சமூக, பொருளாதார பிரச்சினைகளும் எழுகின்றன. சோம்பேறிகளின் கைகளில் இருக்கும் இந்த தனிச்சொத்துடைமை தான் உழைக்கும் மக்கள் வறுமையிலும் அனைத்து துன்பதுயரங்களிலும் உழல காரணமாக இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு வருகின்ற பிரச்சினைகளில் ஒன்றாவது முதலாளிகளுக்கு வந்ததுண்டா? என்றாவது முதலாளிகள் ஏழைகளை போல வறுமையில் வாடியதுண்டா? அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காக தூக்குமாட்டிக்கொண்டு செத்தது தான் உண்டா? இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் இலட்சக்கணக்கில் தற்கொலை செய்துகொண்டவர்கள் விவசாயிகளா முதலாளிகளா?
எனவே தனிச்சொத்துடைமை இருந்தால் தான் மக்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள் என்கிற வாதம் தவறானது.
தனிச்சொத்து வாரிசுரிமையாக கைமாற்றிக்கொடுக்கப்படுவது பெண் மூலம் தான். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் தன்னுடைய வாரிசுகளுக்கே போய் சேர வேண்டும் என்று நினைப்பதால் தான் ஆண் ‘சட்டப்படி’ ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். தனிச்சொத்துடைமைக்கு பொருத்தமாக தான் ஒருதார மணமும் உருவாகிறது. அதற்கு முன்புவரை பொதுச்சொத்தும் பலதார மணமுறையும் தான் நிலவியது. எனவே தான் பல ஆண்கள் சட்டப்படி ஒரு மனைவியையும் திருட்டுத்தனமாக பல பெண்களையும் வைத்துள்ளனர். எனவே சொத்துக்காக பெண் மனைவி என்கிற பெயரில் அடிமையாக வைக்கப்பட்டிருக்கிறாள்.
‘ஒரு ஆண் ஒரு பெண்ணை ஆதிக்கம் செய்யக் கூடாது’ என்று சட்டம் போட்டால் ஆண்கள் அனைவரும் அடுத்தநாளே ஏற்றுக்கொண்டுவிடுவார்களா? எந்த அடிப்படையில் இப்படி பேசுகிறீர்கள்? ‘அதே போல ஒரு பெண்ணும் தேவை இல்லாமல் பெண்ணியம் பேசக் கூடாது’ என்கிறீர்கள். இது அடிக்கடி கேள்விப்பட்ட டயலாக் தான். ஆனால் இது பெரும்பான்மையான பெண்களின் பிரச்சினைகளை பற்றி ஒன்றுமே அறியாத சில மேட்டுக்குடி பெண்கள் பேசும் வசனமாகும். இவர்களுக்கும் பெரும்பாண்மை பெண்களின் பிரச்சினைகளுக்கும் தொடர்பு இல்லை என்பதால் தான் அவர்கள் அப்படி பேசுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை நெருங்கிப்பார்த்தால் ஆணாதிக்கம் காட்டுமிராண்டித்தனம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வார்கள். எனினும் இவர்களும் வேறுபட்ட அளவில் ஆணாதிக்கத்தின் அடிமைகளாக தன் இருக்கின்றனர்.
‘இது தவிர பெண் என்பவள் தன் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் சில விஷயங்களில் அடி பணிந்து தான் போக வேண்டும்’ என்று கூறியுள்ளீர்கள். ஏன் அடிபணிந்து போக வேண்டும் என்பதையும் கூறுங்கள். ஆனால் உங்களுடைய வார்த்தைகளே பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துவதை பாருங்கள். ஆணாதிக்கத்தை தார்மீகரீதியில் ஏற்றுக்கொள்ளும் போது அது பெண்களின் வழியாகவே பெண்களுக்கு எதிராக வேலை செய்வதை இந்த வார்த்தைகள் நிரூபிக்கிறது.
இறுதியாக ‘இந்த சமுகத்தில் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் காப்பதில் பெண்ணுக்கு தான் முக்கிய பங்குண்டு’ என்று கூறியுள்ளீர்கள். ஏன் பெண்ணுக்கு மட்டும் முக்கிய பங்கு, ஆணுக்கு ஏன் இல்லை? இப்படி பெண்ணுக்கு மட்டும் அநீதியாக முக்கிய பங்கை பிரித்துகொடுத்தது யார் என்பதையும் விளக்குங்கள்.
Hi ஓ போ பு செ (Its better you get a better pseudonym),
//அதற்கு முன்புவரை பொதுச்சொத்தும் பலதார மணமுறையும் தான் நிலவியது. எனவே தான் பல ஆண்கள் சட்டப்படி ஒரு மனைவியையும் திருட்டுத்தனமாக பல பெண்களையும் வைத்துள்ளனர்.//
ஒரு திருத்தம்:பல பெண்இணை (polygamy) அதாவது பலதாரம் மட்டுமல்ல பல ஆண்இணை (polyandry)யும் கூட.. அதாவது பாஞ்சாலிகள் மற்றும் அர்சுனன்களால் ஆன சமூகம். அதாவது தாய் வழி சமூகம். குழந்தைகள் தற்போதுள்ளதைப்போலல்லாமல் தாயினால் அறியப்பட்டனர். Even today this mix of polyandry and polygamy exists in some primitive societies in some remote islands. Engels has written a detailed account about this in his book ‘The Origin of the Family, Private Property, and the State’
//தேவையில்லாமல் இந்த சமுகத்தில் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் காப்பதில் பெண்ணுக்கு தான் முக்கிய பங்குண்டு என்பதை உணர வேண்டும்.//
ஒரு சிறிய typing mistake மேலே உள்ள வாசகத்தில் தேவையில்லாமல் என்கிற வார்த்தையை நீக்கி விட்டு ” இந்த சமுகத்தில் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் காப்பதில் பெண்ணுக்கு தான் முக்கிய பங்குண்டு என்பதை உணர வேண்டும்”. என்று படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சி ஒன்று தான் தீர்வு..
இன்னும் எத்தனை காலத்திற்கு இதே பழைய பல்லவியை பாடி கொண்டே இருப்பீர்கள்.
//தனிச்சொத்துடைமை இருந்தால் தான் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்கிற ஆர்வம் வரும் என்றால், உலகில் பெரும்பாண்மை மக்கள் தனிச்சொத்துடைமை இல்லாதவர்கள் தான், ஆனால் உலகம் சுறுசுறுப்பாகத்தானே இருக்கிறது?//
அந்த பெரும்பான்மை மக்கள் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு காரணமே. தாங்கள் என்றாவது ஒருநாள் வீடு மனை என்று தனி சொத்துடமையாளர்கள் ஆகிவிடுவோம் என்கிற எதார்த்தமான உந்தலினால் தான். அப்படி பல பேர் சொத்துடமையாளார்களாகவும் ஆகி இருகிறார்கள்.ஒரு இலக்கு இருக்க வேண்டும். அப்போது தான் அதை அடைய வேண்டும் என்பதற்காக மனிதனுக்கு உழைக்க வேண்டும் என்கிற ஆசை வரும்.
நீங்கள் கூறும் ஆலை தொழிலாளிகள், விவசாயிகள் அனைவருமே தினமும் உழைத்து கஷ்டபடுவது தாங்கள் அடையாத ஒன்றை (தரமான கல்வி, தனி சொத்துகள்) தங்கள் பிள்ளைகளாவது அடைய வேண்டுமே என்கிற குறிக்கோள் இருப்பதால் தான். எனக்கு தெரிந்த ஒரு ஏழை விவசாயி திருவண்ணாமலையில் வேர்கடலை பயிரிடுகிறார். தன்னுடைய நிலத்தில் கிடைக்கும் சொற்ப விளைச்சலில் பணம் சம்பாதித்து கஷ்ட பட்டு தன் பிள்ளையை படிக்க வைத்தார். அவரும் தன் தந்தையின் கஷ்டங்களை புரிந்து கொண்டு நன்றாக படித்து இப்போது மாதம் 70,000 வரை சம்பாதிக்கிறார். இப்போது மிக நல்ல நிலையில் அவரின் குடும்பம் இருக்கிறது இது நான் நேரில் கண்ட அனுபவம். இது தான் எதார்த்தமும் கூட. இதை தவிர நீங்கள் சொல்வது போல் கூட்டு பண்ணைகள் அமைத்து அனைவரும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்றால் என்ன சொல்வது.. சோவியத் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலை தான் மீண்டும் திரும்பும்.
எல்லா சொத்துக்களும் அரசுக்கே உடமை என்பது கம்யூனிச சித்தாந்தம். ஆனால் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் காணப்பட்டதால், அவசியத்தை முன்னிட்டு தனிநபர் சொத்துரிமையை அளிக்க , சீன அரசே முன்வந்தது காலத்தின் கட்டாயம். அரசியல் அமைப்பையே திருத்தி, தனி நபர் சொத்துரிமையை அனுமதிக்க நேரிட்டது.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் அதற்க்கு காரணம் இப்போது இருக்கும் சுயநல அரசியல் அமைப்பு. ஏன் மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்ட் ஆட்சியில் விவசாய நிலங்களை டாடாவிற்கு பிடுங்கி தரவில்லையா. கேட்டால் அவர்கள் போலி கம்யுனிஸ்ட்கள் என்ற ஒற்றை வரியை கூறி நழுவி விடுவீர்கள். சரி இப்போது நீங்கள் வியந்தோதும் உங்களின் அச்சு அசல் கம்யுனிஸ்டுகள் ம.க.இ.க கட்சி நாளையே ஒரு போலி கம்யுனிச அமைப்பாக மாறாது என்பதற்கு என்ன நிச்சயம். ஆக, எந்த “Ideology”யை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் சரி,அதில் நல்லவர்கள் இருக்க வேண்டும், பிழைப்பு வாதிகள் தோன்றினால் இப்படி தான் “போலி” என்கிற அடைமொழியுடன் தான் போய் மடியும்.
ஒருவரிடம் நிலம் அதிகபடியாக இருக்கிறது என்றால் நில உச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்தி அவரிடம் இருக்கும் அதிகப்படியான நிலத்தை கையகப்படுத்தி நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து தரட்டும். அதை விட்டு அனைத்தையும் அரசுடமை ஆக்க வேண்டும் என்றால் நிலை இன்னும் மோசமாகி போகும்.
இறுதியாக,உலகம் கருப்பு வெள்ளையினால் மட்டும் ஆனது இல்லை. முற்று முழுதாகக் கருப்பாகத் தீட்ட அல்லது முற்று முழுதாக வெள்ளையாகத் தீட்ட. நீங்கள் சொல்லும் கம்யுனிச கோட்பாடு இப்படி தான் இருக்கிறது.
//ஒரு ஆண் ஒரு பெண்ணை ஆதிக்கம் செய்யக் கூடாது’ என்று சட்டம் போட்டால் ஆண்கள் அனைவரும் அடுத்தநாளே ஏற்றுக்கொண்டுவிடுவார்களா?//
சட்டம் போடுங்கள் என்று நான் கூறினேனா. ஒரு குடும்பத்தில் ஆண் பெண்ணை ஆதிக்கம் செய்ய கூடாது. பெண்ணும் ஆணிடம் பெண்ணியம் பேச கூடாது என்றுதான் கூறினேன். அப்போது தான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.
//இது தவிர பெண் என்பவள் தன் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் சில விஷயங்களில் அடி பணிந்து தான் போக வேண்டும்’ என்று கூறியுள்ளீர்கள். ஏன் அடிபணிந்து போக வேண்டும் என்பதையும் கூறுங்கள்.//
சமுதாயத்தில் ஆடை கோட்பாடு, பொது நாகரிகம் என்று வரும்போது சமுகத்தின் கோட்பாடுகளுக்கு பார்வைக்கு ஏற்றார் போல் தான் நம்மை தகவமைத்து கொள்ள வேண்டும். நான் எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்துவேன் எப்படி வேண்டுமானாலும் என் வாழ்கை முறையை அமைத்து கொள்வேன். அதற்க்கு ஏற்றார் போல் உன் பார்வையை நீ மாற்றி கொள் என்றெல்லாம் பெண்ணியம் பேசக்கூடாது. பொதுவில் நாகரிகத்தை, ஒரு பெண்ணை பார்த்தால் மரியாதையை ஏற்படுத்தும் விதமாக “DRESS CODE “.அமைய வேண்டும். அதே போல் தேவை இல்லாமல் குடும்பத்தில் இருந்து கொண்டு சம உரிமை எல்லாம் பேசி கொண்டிருக்க கூடாது. சில விசயங்களில் விட்டு கொடுத்து தியாக மனப்பான்மையுடன் தான் பெண் என்பவள் நடந்து கொள்ள வேண்டும். அதற்காக, வரதட்சனை கொடுமை, ஆண் ஆதிக்க கொடூரங்களை எல்லாம் சகித்து கொள்ள வேண்டும் என்கிற அர்த்தத்தில் நான் கூறவில்லை. மொத்தத்தில் ஒரு பெண் எவ்வளவு சம்பாதித்தாலும் தான் ஒரு பெண் என்பதை மறந்து தன் இஷ்டப்படி ஆணுடன் போட்டி போட்டு கொண்டு மனம்போன படி எல்லாம் வாழ நினைக்க கூடாது.
//தாங்கள் என்றாவது ஒருநாள் வீடு மனை என்று தனி சொத்துடமையாளர்கள் ஆகிவிடுவோம் என்கிற எதார்த்தமான உந்தலினால் தான். அப்படி பல பேர் சொத்துடமையாளார்களாகவும் ஆகி இருகிறார்கள்.ஒரு இலக்கு இருக்க வேண்டும். அப்போது தான் அதை அடைய வேண்டும் என்பதற்காக மனிதனுக்கு உழைக்க வேண்டும் என்கிற ஆசை வரும்.//
மனிதன் மட்டுமல்ல சமூகமாக வாழும் அனைத்து உயிரினங்களும் உழைப்பது என்பது முதலில் அதன் தேவைக்கே. காட்டில் வாழும் ஒரு சிங்கமானாலும் கூட தான் முதலில் நன்றாக சாப்பிட்ட பிறகே தன் குட்டிகளுக்கு மாமிசத்தை/பாலினைக் கொடுக்கும். அதனடிப்படையிலும் மனிதன் தன் அடிப்படைத் தேவைகளுக்கு உழைப்பதனூடாகத் தன் சமூகத்துக்காகவும் உழைக்கிறான். அதனடிப்படையில் அது அவனுக்கு இலக்கு அல்ல ஒரு முன் நிபந்தனை.
//அப்படி பல பேர் சொத்துடமையாளார்களாகவும்//
இதற்கு ஏதாவது புள்ளி விவரம் இருக்கின்றதா? சும்மா அடிச்சு விடக் கூடாது.
//எனக்கு தெரிந்த ஒரு ஏழை விவசாயி திருவண்ணாமலையில் வேர்கடலை பயிரிடுகிறார். தன்னுடைய நிலத்தில் கிடைக்கும் சொற்ப விளைச்சலில் பணம் சம்பாதித்து கஷ்ட பட்டு தன் பிள்ளையை படிக்க வைத்தார். அவரும் தன் தந்தையின் கஷ்டங்களை புரிந்து கொண்டு நன்றாக படித்து இப்போது மாதம் 70,000 வரை சம்பாதிக்கிறார். இப்போது மிக நல்ல நிலையில் அவரின் குடும்பம் இருக்கிறது//
அவர் கடினமாக உழைத்தார் அவர் பிள்ளைகள் நன்றாக உள்ளனர் . இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? மற்றவர்கள் உழைப்பதில்லயா ? மற்ற பிள்ளைகள் தனது பெற்றோரின் பிரச்சினையை புரிந்து கொள்வதில்லயா? எத்தனைக் குழந்தைகள் சமூக/குடும்பக் சூழ்நிலைக் காரணமாக பள்ளிக்கல்வியை பாதியிக்ள் நிறுத்தி விடுகின்றனர்.
//சட்டம் போடுங்கள் என்று நான் கூறினேனா. ஒரு குடும்பத்தில் ஆண் பெண்ணை ஆதிக்கம் செய்ய க்கூடாது. பெண்ணும் ஆணிடம் பெண்ணியம் பேச கூடாது என்றுதான் கூறினேன். அப்போது தான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.//
பெண்ணியம் என்பது ஆணாதிக்கத்திற்கு எதிர்ப்பதம் அன்று. அது சும்மா பொழுதுபோக்கிற்காக மேட்டுக்குடி பெண்களால் பொழுதுபோக்கிற்காக பேசப்படும் ஒன்று . போதுவாக இருவரும் சமம் என்பதே போதுமானது .
//சமுதாயத்தில் ஆடை கோட்பாடு, பொது நாகரிகம் என்று வரும்போது சமுகத்தின் கோட்பாடுகளுக்கு பார்வைக்கு ஏற்றார் போல் தான் நம்மை தகவமைத்து கொள்ள வேண்டும்//
கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆணால் போடப்படும் போது சரிபாதி பெண்களின் நிலை என்ன ?
பெண்களின் ஆடைக் கோட்பாடு ,பொது நாகரிகம் பற்றி ஆண்களுக்கு என்ன கவலை?
சரிபாதி பெண்களின் நிலையைப் பற்றி அவர்களுக்கு இல்லாத கவலை உங்களுக்கென்ன ?
கம்மியுனிசம் குறித்த ரெபேக்க அவர்களின் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்.
அதே சமயம் பெண்ணுக்கு சம உரிமை விடயத்தில் அவரது பின்னூட்டத்தில் ஏன் கொஞ்சம் பெண்ணடிமைத்தனம் வருகிறதென்று தெரியவில்லை.
தவறு நண்பா !
உங்கள் முதலாளிகள் நடத்தும் இந்த அரசில் எல்லா குழந்தைகளுக்கும் சமமான உரிமைகள் உள்ளனவா ?
முதலாளி வீட்டு குழந்தை படிக்கும் கல்வியீன் தரமும் தொழிலாளி வீட்டு குழந்தை படிக்கும் கல்வியீன் தரமும் ஒன்றா ?
முதலாளி வீட்டு குழந்தை உண்ணும் உணவின் அளவு /தரம் /intake க்கும் தொழிலாளி வீட்டு குழந்தை உண்ணும் உணவின் அளவு /தரம் /intake க்கும் ஒன்றா ?
ஏன் நம்பா , எல்லா குழந்தையும் இந்தியர்கள் என்றால் ஏன் இந்த பாகுபாடு ?
எனக்கு சோவித் ரஷ்யாவில் ரொம்ம பிடித்த விடயமே அவர்கள் [ருஷயர்கள்] குழந்தைக்ளீன் கல்வி /உணவுக்கு கொடுத்த முக்கியதுவம் தான்.
உங்கள் நாறிபோன முதலாளிகள் நடத்தும் இந்த அரசில் iron ,vitamin etc deficiency உடன் 80% தொழிலாளி வீட்டு குழந்தைகள் வாழ்வதும் உடல் பருமனுடன் [obesity] உடன் 20% தொழிலாளி வீட்டு குழந்தைகள் வாழ்வதும் ஏன் ?
இந்த ஏற்ற தாழ்வுக்கு உங்கள் முதலாளி அரசாங்கம் இந்தியா சுதந்திரம் பெற்ற கடந்த 67 ஆண்டுகளாக என்ன தீர்வு கண்டது நண்பா ?
அனைவருக்கும் ஒரே வகை உணவு என்பது நடைமுறையில் சாத்தியப்படுமா, தெரியவில்லை. வருமானம் இருந்தும் நம்மில் பலர் கருமியாக இருந்து கொண்டு உணவின் அளவு/தரம்/ குறைவாக உண்ணுகின்றனர். வருமானம் குறைவாக உள்ளவர்களும் இயற்கை உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர்.
என்னை பொறுத்தவரை பிரச்சினை வருமான நிர்ணயத்தில் உள்ளது.
வெளிநாடுகளில் எந்த வித தொழிலாளியாக இருந்தாலும் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிறது. நம்மூரில் இளிச்சவாயன் தொழிலாளி தான். அதனால் தான் உலகமே Cheap Labour என்று இந்தியர்களை நாடுகிறது. நல்ல வருமானம் இருந்தால் தொழிலாளிகள் அவர்களின் குடும்பத்திற்கு, குழந்தைகளுக்கு நல்ல உணவு, நல்ல உடைகள், நல்ல கல்வி அளிக்க முடியும்.
இந்தியர்களிடம் இருக்கும் ஒரு முக்கிய குறை, சோம்பேறித்தனம், ஏனோதானோ என்ற வகையில் வேலை செய்து பொருட்களின் தரத்தில் கவனத்தை குறைப்பது, இது போன்ற குறைகளை நாம் நீக்க வேண்டும். தனிப்பட்ட நபரென்று இல்லாமல் ஒட்டு மொத்தமாக நம்மில் அனைவருக்கும் இவ்விரு குறைகள் இருக்க தான் செய்கிறது.
எனக்கு ஒரு கனவு. தரமான இயந்திரங்கள் என்றால் எல்லோரும் ஜெர்மன் தொழில்நுட்ப இயந்திரங்களை தான் காட்டுவார்கள். அது போல தரமான பொருட்களின் ஊற்றாக நம் நாடு இருக்க வேண்டும். தரம் நன்றாக இருந்தால் பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும் உலக சந்தையில் நல்ல விலை கிடைக்கும். நம்மவர்கள் இங்கே தான் கோட்டை விடுகிறார்கள்.
மற்றொரு குறை, நம்மில் பெரும்பாலான தொழிற்சாலைகளில் சீனா, தைவான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து பெறப்பட்ட மூலாதார பொருட்களை வெறும் அசெம்பிள் செய்து, நானும் ஒரு தொழிற்சாலை வைத்திருக்கிறேன் என்று பீற்றிக்கொள்கிறார்கள்.
Mass Production – சீனா.
Hydraulic and mechanical Machines – தைவான்.
Electronics – கொரியா.
இவ்வகை தொழிசாளைகளை நம்மவர்கள் உலக சந்தையில் முழுக்க முழுக்க நமது தொழில்நுட்பத்தை கொண்டு நல்ல தரமான பொருட்களை உலக சந்தையில் விற்றால் எப்படி இருக்கும்.
கற்றது கையளவுக்கு இந்த முதலாளிகள் அரசின் அவலச்சணம் மீது நான் வைத்த கேள்விகளுக்கு பதில் கூற வழி இன்றி “கருமி”,”இயற்கை உணவு”,”சோம்பேறித்தனம்” என்று கூறி திசை திருப்புகின்றார்.
[1] நாட்டின் தலைவர்[தோழர் லெனின்] முதல் அனைவருக்கும் ஒரே ஊதீயம் [600 ருபில்ஸ்] என்ற சோவித் ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் நடைமுறைக்கும் , இந்திய முதலாளிகள் [for example India Cement CEO ] இந்தியாவில் வாங்க்கும் ஊதீயம் பல கோடிகள் ! ஆனால் இந்திய தொழிலாளிகளீன் ஊதீயம் என்ன ? ஏன் இந்த வேறுபாடு.
[2] நாறி போன முதலாளித்துவ மாடல் இந்திய அரசை கற்றது கையளவு கொட்டியாக பீடித்துகொள்ளும் காரணம் என்ன ?
[3]குழந்தைகளுக்கு கூட சமமான உரிமைகள் அளிக்க இயலாத இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசை கற்றது கையளவு பீடித்துகொண்டு தொங்குவது ஏனோ ?
ரசியாவில் இன்று வரையும் அதே சம ஊதியம் அளிக்க முடிகிறதா?
600 ரூபில்ஸ் வேண்டாம், பண வீக்கத்தினால் 6000 ரூபில்ஸ் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். இன்று ரசியாவில் இதே முறை இன்னும் பின்பற்றப்படுகிறதா?
ரசிய அதிபர் புதினுக்கும், அவரது அலுவலகத்தை சுத்தம் செய்யும் தொழிலாளுக்கும் இன்றும் ஒரே ஊதியம் தானா?
குழந்தைகளின் எதிர்காலத்தை பராமரிப்பது அந்த குழந்தைகளின் பெற்றோரின் கடமை.
வயதானதும் பெற்றோரை பராமரிப்பது அந்த வளர்ந்த குழந்தைகளின் கடமை.
இது தான் இந்திய குடும்ப வாழ்க்கை முறை.
அரசே எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தால் பின் மக்களிடம் சோம்பேறித்தனம் தான் மிஞ்சும்.
உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்ற கருத்தை நான் எப்போதும் வரவேற்கவே செய்கிறேன். இந்நாட்டின் முதுகெலும்பான விவசாயிக்கு தகுந்த கூலி, வருமானம் கொடுக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. அதே சமயம் அதிகம் உழைத்தால் அதிகம் வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள்.
ஒரு அலுவலகத்தில் எல்லோருக்கும் ஒரே சம்பளம். திறமையாக வேலை செய்பவருக்கும், வலை செய்வது போல பாவ்லா காட்டிக்கொண்டு ஓபி அடிப்பவர்களுக்கும் ஒரே சம்பளம் என்றால் எப்படி. ஒரு கடையில் நன்கு சுறுசுறுப்பாக வேலை செய்து அதிக வாடிக்கையாளர்களை கொண்டு வரும் விற்பனை நபருக்கு வேளைக்கு ஏற்ற வகையில் Incentive கொடுத்தால் தானே அவர் மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவர முயலுவார்? இல்லையென்றால் கொடுத்த சம்பளத்திற்கு இந்த வேலையே அதிகம் என்று சுணங்கி போக மாட்டாரா?
நான் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகவும், முதலாளித்துவத்தை ஆதரிப்பதாகவும் தவறாக எண்ண வேண்டாம். என்னை முதலாளித்துவவாதியாக உருவகப்படுத்தாமல், உண்மையான ஜனநாயகவாதியாக கருதுங்கள்.
கம்யுனிசம் தற்போது ஏட்டு சுரைக்காயாக, கறிக்கு உதவாததாக உள்ளது.
தற்போதைய ஜனநாயக முறையிலும் தேர்தல் முறையிலும் சில குறைகள் உள்ளது, இல்லை என்று சொல்ல வில்லை. கம்மியுநிசத்திலும் சில குறைகள் இருக்கிறது, இல்லைவே இல்லை என்று நீங்கள் மறுக்க இயலாது. இரு முறைகளையும் தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு புதிய ஜனநாயக முறையான கம்யினுநிசத்தை நாம் வடிவமைத்தால் எல்லோருக்கும் அது நல்ல தீர்வாக இருக்கும் அல்லவா.
சற்று யோசித்து பாருங்கள்.
உடனுக்குடன் கோபப்படாமல் தீவிரமாக யோசிக்கலாம். நாம் அனைவரும் யோசித்தால் நல்ல தீர்வு கிடைக்க வழியுண்டு.
வரலாறு சில பாடங்களை நமக்கு கற்று கொடுக்கிறது. சோவியத் யூனியன், சீனா, இவற்றில் கம்யுனிசம் பின்னடைவு அடைந்ததென்றால் ஏன் என்று ஆராயாமல் எல்லா நாடுகளிலும் அதே முறையை கண்ணை மூடிக்கொண்டு மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் கேட்கலாம்? கம்யுனிசம் தோன்றிய இடத்திலேயே அதனால் அதன் உண்மையான வடிவில் நிலைத்திருக்க முடியவில்லை என்றால் தவறு எங்கே ஆரம்பிக்கிறது?
ஜனநாயக தேர்தல் முறை என்பது தவறல்ல, அதனை ஆள்பவர் தவறானவறாக இருப்பதால் ஜனநாயகம் தவறென்று சொல்ல முடியாது. வண்டியை ஓட்டுபவர் செய்யும் தவறுக்கு வண்டியை குறை சொல்லி பிரயோசனம் இல்லை.
தங்களுடன் விவாதம் செய்வதில் எனக்கு பல புதிய விவரங்கள் கிடைக்கிறது, புதிய கோணங்களில் யோசிக்க தோன்றுகிறது. மிக்க நன்றி சரவணன்.
Please ignore previous comment and approve this please.
கற்றது கையளவு,
///இந்நாட்டின் முதுகெலும்பான விவசாயிக்கு தகுந்த கூலி, வருமானம் கொடுக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. அதே சமயம் அதிகம் உழைத்தால் அதிகம் வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள். ///
அதிகம் உழைத்தால் அதிக வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள் – என்பதால் தான் விவசாயிக்கும் தொழிலாளிக்கும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை அதிகமாக உழைக்க ஊக்குவிக்கிறோம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகிறோம் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா??
அதிகம் உழைத்தால் நாட்டின் பொருளாதாரம் அதிகமாக வளரும், பொருளாதாரம் வளர்ந்தால் அது மக்களுக்கே திருப்பிவிடப்படும், அதன் மூலம் அதிக வசதி வாய்ப்புகளை பெறலாம் என்றும் மக்கள் அதிகம் உழைப்பார்கள். அது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரம் பெருக பெருக மக்களின் வேலை நேரமும் குறையும். இது சோசலிச ரசியாவில் நிறுபிக்கப்பட்டுள்ளது. சபோத்னிக் என்ற நாட்டிற்காக தன்னார்வ வேலைக்கு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு சில பத்தாண்டுகளிலேயே ரசிய பொருளாதாரத்தை மிக வலிமையுள்ளதாக மாற்றினர்.
தற்போதைய நிலை என்ன? நாட்டின் பெருளாதாரம் வளர்ந்தாலும் கூட மக்களின் வாழ்க்கைநிலை மேம்படுவதில்லை. மாறாக மேலும் கீழிறங்குகிறது. முன்னர் 8 மணி நேரம் உழைத்தவர்கள் இன்று 12 மணி நேரம் உழைத்தாலும் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. வளரும் பொருளாதாரம் ஒரு சில நூறு தனியாரின் சொத்துகளை தான் பெருக்குகின்றன.
தேவையும் ஆசையும் இல்லையெனில், உழைப்பின்றி மனிதன் சோம்பேறியாகிவிடுவான் என்று தோன்றுவது நியாயமனது தான். தேவையும், ஆசையும், தனிமனித நுகர்வுக்கானதா? சந்தைக்கானதா? சந்தைக்கானதாக இருக்கும் இந்த சமூகத்திலேயே அதன் அழுக்குகளிலேயே பழகிவிட்ட நமக்கு இது நம்பமுடியாததாக தான் இருக்கும்.
உழைப்பு தான் மனிதனின் இயல்பான நிலை அதை தெரிந்து கொள்ள இதை படித்து பாருங்களேன் : https://www.vinavu.com/2008/11/12/tmstar3/
என் நண்பர்களாகிய நீங்கள் எல்லோரும் கம்மியிநிசம் என்றால் பழைய ரசியாவை தான் உதாரணத்திற்கு காட்டுகிறீர்கள். என் ஒரே கேள்வி. அப்படி ஒரு சிறந்த ஒரு சித்தாந்தத்தை ரசிய மக்கள் இன்று ஏன் உதாசீனப்படுத்துகிறார்கள்?
இந்திய மக்களுக்கு கம்மியுனிசம் பரப்பும் நீங்கள், ரசியாவில் கம்மியுனிசம் ஏன் இப்போது செழிக்கவில்லை என்று ஆராய்ந்து பாருங்கள்.
ஒரு சில முதலாளிகள் ஆட்சியாளர்களை வளைத்து கொண்டு, சேர்ந்து, ரசியா போன்ற ஒரு பலம் மிக்க ஒரு நாட்டை கம்மியுனிச முறையிலிருந்து முதலாளித்துவ முறைக்கு மாற்ற முடியும் என்றால் ரசிய மக்கள் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று நம்புகிறீர்களா? சார் மன்னர்களுக்கு எதிராகவே போராடி கம்மியுநிசத்தை வென்ற ரசிய மக்கள் இந்த சிறிய கூட்டத்திற்கு பயப்பட்டு போராடாமல் இருக்கிறார்களா?
யோசித்து பாருங்கள்.
ரசிய மக்களுக்கு கம்மியுனிசம் மேல் நம்பிக்கை போய் விட்டது. இதை நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். ஆனால் அது தான் உண்மை.
இதனாலேயே இந்திய மக்களுக்கும் கம்மியுனிசம் மேல் நம்பிக்கை வராமல் இருக்கிறது.
ஒரு நல்ல திறனுள்ள மாடல் ஆட்சியை தற்கால, நிகழ்கால கட்டத்தில் உலகில் வெற்றிகரமாக ஒரு கம்மியுனிச மாடல் இருந்தால் இந்திய மக்களுக்கும் கம்மியுனிசம் மேல் நம்பிக்கை வரும்.
ஒரு சாதாரண குடிமகனாக நான் பேசுகிறேன். நான் எல்லாம் படித்த மேதாவியும் அல்ல, அதே சமயம் கம்மியுனிசம் இங்கே வெற்றி அடைய வேண்டுமானால் முதலில் என்னை போன்ற சாமானியர்களுக்கு உங்கள் கம்மியுனிசம் போய் சேர வேண்டும். எனக்கு இன்னும் கம்மியுனிசம் மேல் நம்பிக்கை வரவில்லை. கம்மியுனிச ஆட்சி அமைந்தால் சர்வாதிகாரம் தலை தூக்கும் என்பது எம்மை போன்ற பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் பயம். அதனை நீக்கும் வண்ணம் தற்கால நாடுகளில் சிறந்த வகை கம்மியுநிசத்தை நடத்தும் உதாரணங்கள் எங்கள் கண்களுக்கு தெரியவில்லை. இந்த பக்கம் புதின், அந்த பக்கம் இரும்பு திரை சீனா, இவை தான் எங்கள் கண்களில் நிழலாடுகின்றன. உள்ளூர் அளவிலும், கேரளா, மேற்கு வங்கம் இவற்றிலும் கம்மியுநிஸ்ட் ஆட்சி என்பது நல்லாட்சியாக இல்லாமல் இருப்பதும் உங்களுக்கு ஒரு பின்னடைவு தான்.
மேலும் விவாதிக்கலாம்…
// இந்த பக்கம் புதின், அந்த பக்கம் இரும்பு திரை சீனா, இவை தான் எங்கள் கண்களில் நிழலாடுகின்றன. உள்ளூர் அளவிலும், கேரளா, மேற்கு வங்கம் இவற்றிலும் கம்மியுநிஸ்ட் ஆட்சி என்பது நல்லாட்சியாக இல்லாமல் இருப்பதும் உங்களுக்கு ஒரு பின்னடைவு தான்.//
இங்கு சோஷலிச ஆட்சி முறை பற்றிக் குறிப்பிடுவது 1953க்கு முன்பிருந்த சோவியத் ரஷ்யாவையும், 1976க்கு முன்பிருந்த செஞ்சீனத்தையும் தான்.
இப்போதுள்ள ரஷ்யாவும், சீனாவும் அக்மார்க் முதலாளித்துவ நாடுகள் தான்.
மற்றபடி சி.பி.எம், சி.பி.ஐ போன்ற கட்சிகளை கம்யூனிசக் கட்சிகள் என்று நினைப்பது உங்கள் மூட நம்பிக்கை.
இவை பற்றி வினவில் ஏராளமான கட்டுரைகள் வந்துள்ளன. தேடிப் படியுங்கள். இல்லையென்றால் நானே அதற்கான இணைப்புகளைத் தருகிறேன்.
கற்றது கையளவு,
சோவியத் ரஷ்யா மற்றும் சீனாவில் ஏன் பின்னடைவு ஏற்பட்டது? என்பது குறித்து உலகில் உள்ள அனைத்து கம்யூனிச இயக்கங்களும் எவ்வளவோ பேசியிருக்கின்றன, எழுதியிருக்கின்றன. வினவிலும் அது தொடர்பாக கட்டுரைகள் வந்துள்ளன.
சோவியத் ரஷ்யாவில் 1917-ல் புரட்சி நடந்தபின் சுமார் ஏழு ஆண்டு காலம், சோவியத் ரஷ்யா ஏகாதிபத்திய நாடுகளால் முற்றுயிடப்பட்டது. முற்றுகையை வெற்றிகரமாக முறியடிக்கும் வேளையில் தோழர்.லெனின் 1924-ல் மரணமடைந்துவிடுகிறார். அப்போது சோவியத் ரஷ்யாவில் சோஷலிசப் பொருளுற்பத்தி முறை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. உலகின் முதல் சோஷலிச நாட்டை உருவாக்கும் பணி தோழர்.ஸ்டாலின் தலையில் வந்து விழுந்தது. முன்மாதிகள் ஏதும் இல்லாமல், சோஷலிச நாட்டை உருவாக்கும் பணியில் இறங்கியது ஸ்டாலின் தலைமையிலான சோவியத் பாட்டாளி வர்க்கம்.
இந்த முயற்சியில் கோட்பாடு ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் சில தவறுகள் இழைக்கப்பட்டிருப்பினும், சோவியத் ரஷ்யா பல சாதனைகளைப் புரிந்தது. கட்சியில் ஊடுறுவிய புல்லுறுவிகளை களையெடுக்கும் முயற்சியில் நடந்த தவறுகளை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகக் கையாள முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணம் கட்சியை மக்களின் நேர்டிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை என்பதுதான். இதை உணர்ந்த ஸ்டாலின் கலாச்சாரப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். ஆனால் அதை நடைமுறைப்படுத்தப்படும் முன்பே ஸ்டாலின் மரணமடைந்து விடுகிறார்.
சோவியத் செய்த தவறுகளை சரியாக விமர்சித்த தோழர்.மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கலாச்சார புரட்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. ஆனால் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு 1956-ல் ஆட்சிக்கு வந்த குருச்சேவ் கும்பல் ஸ்டாலினை அவதூறு செய்வதில் இருந்து தொடங்கி இறுதியாக கம்யூனிசத்தையே திரித்துப் புரட்டியது.அதுபோல் மாவோவின் மறைவையடுத்து ஆட்சியைக் கைப்பற்றிய டெங்சியோ பிங் கும்பல் சீனாவை முதலாளித்துப் பாதையை நோக்கித் தள்ளியது.
சோஷலிசத்தைக் கட்டியமைக்கும் பணியில் முன் அனுபவமில்லாத பாட்டாளி வர்க்கம் செய்த தவறுகளை ஏகாதிபத்தியங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டன. அதன் காரணமாக 1980 களுக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள கம்யூனிச இயக்கங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தப் பின்னடைவுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்று தவறுகள் நடைபெறாத வண்ணம் அமைப்புகளை வழிநடத்துகின்றன இப்போதைய கம்யூனிச இயக்கங்கள்.
ஆனால் 2008-ல் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்தியில் இன்னும் மீளவில்லை. ஆகவே சோஷலிசத்தின் வெற்றி என்பது வரலாற்றின் கட்டாயம்.
நன்றி பகத். பொறுமையாக நீண்ட விளக்கத்தை அளித்துள்ளீர்கள்.
நீங்கள் சொன்னபடி பார்த்தால் லெனின் எண்ணத்தில் தோன்றிய கம்மியுநிசத்தை அவருக்கு பின் வந்த ஸ்டாலின் நடைமுறைபடுத்துகையில் சில தவறுகள் செய்தார் என்று தெரிகிறது. அப்போதைய காலகட்டத்தில் சோஷலிச ஆட்சி அமைவதற்கு முன்மாதிரி எதுவும் இல்லாததால் சில நடைமுறை சிக்கல்கள், பின்னடைவுகள் ஏற்பட்டது என்றும் அதனை முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டு கம்மியுநிசத்தில் முதலாளித்துவத்தை கலப்படம் செய்து களங்கம் கற்பித்து பின்னடைவை ஏற்படுத்தினர் என்று கூறுகிறீர்கள்.
சரி, உங்கள் வாதப்படியே பார்த்தாலும், எனது மனதில் இருந்த சில சந்தேகங்கள் உண்மையாகின்றன:
1. லெனின், ஸ்டாலின் உருவாக்கிய ஒரிஜினல் கம்ம்மியுனிச மாடலில்லேயே நடைமுறை தவறுகள் நிகழ்ந்தது என்று ஒத்துக்கொண்டீர்கள். இப்போது இருக்கும் கம்மியுனிசம் எல்லாம் போலி கம்மியுனிசம் என்றும் சொல்கிறீர்கள். அப்போது ஒரு நல்ல கம்மியுனிச மாடலுக்கு நாங்கள் எங்கே போவது?
2. தாங்கள் பின்பற்றும் கம்மியுநிச மாடலில் நடைமுறை சிக்கல்கள் இல்லை என்று நீங்கள் சொன்னால் அதை நாங்கள் எப்படி நம்புவது? சிறப்பாக அமைந்த ஒரு மாதிரி வடிவம் எங்கள் கண்களுக்கு காட்டாமல் எங்களை எல்லாம் உங்கள் வழிக்கு வரச்சொன்னால் நாங்கள் எப்படி வருவது?
3. ஸ்டாலின் சில தவறுகளை செய்தார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஒருவேளை கம்மியுனிச வாதிகள் கையில் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்தால் அந்த புதிய கம்மியுனிச தலைவர் ஸ்டாலின் செய்தது போன்ற தவறுகளை செய்ய மாட்டார் என்று என்ன நிச்சயம்.
4. ரசியாவில் ஒரு குருசேவ், சீனாவில் ஒரு டெங்சியோ போல நபர்கள் அவ்வளவு எளிதில் கம்மியுநிசத்தை வீழ்த்திட முடியும் என்றால் அப்போது கம்மியுனிசம் எளிதில் வீழும் என்றல்லவா எண்ண தோன்றுகிறது?
5. பழைய வரலாற்றின் வழி பார்த்தால் இந்தியாவில் தூய கம்மியுனிச ஆட்சி வந்தால் கூட அந்த ஆட்சியை மிக எளிதில் முதலாளித்துவ சக்திகள் வீழ்த்தி விடும் என்றல்லவா தெரிகிறது?
முடிவில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒட்டு மொத்த மக்கள் சக்தியின் ஆதரவை பெறாமல் நீங்கள் கம்மியுநிசத்தை நிறுவினால் மீண்டும் மீண்டும் மீண்டும் தோல்வி தான் கிட்டும். ஜனநாயகத்தை மதிக்கும் கம்மியுநிசத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். ஸ்டாலின் கம்மியுநிசத்திற்கு மக்கள் ஆதரவு கிட்டாததற்கு அவரது சர்வாதிகார மனப்பான்மை தான் காரணம்.
முதலில் மக்களுக்கு பயன்படும் வகையில் முயற்சிகள் தொடங்குங்கள். மக்களின் பேராதரவை பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்.
ஒட்டு மொத்த மக்களின் ஆதரவு கிட்டுமானால் ஒரு சில முதலாளிகளால் மக்கள் சக்தியை முடக்கி போட முடியாது. அதற்கு என்ன வழி என்று யோசிப்போம்.
சும்மா, ஆயுத புரட்சி அது இது என்று யோசித்தால் பின் அனைத்தும் நாசமாக தான் போகும். கொஞ்சம் யோசித்து பாருங்கள், தற்கால நடைமுறையில் ஆயுதம் ஏந்திய போராட்டங்களை அரசுகள் எளிதில் வீழ்த்தி விடும். ஏனென்றால் ஆயுதம் ஏந்திய போராட்டதிற்கு மக்கள் ஆதரவு கிடைக்காது.
பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஆக்கபூர்வமாக என்ன செய்வது என்று யோசிப்போமே. முதல் வேலையாக சில சட்டங்கள்/சட்ட திருத்தங்கள் கொண்டு வர போராடுவோம்:
1. வாக்களித்த வேட்பாளர் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லைஎனில் அவர்களை திரும்ப பெரும் CANDIDATE RECALL உரிமை வாக்காளர்களுக்கு கிடைக்க வேண்டும்.
2. 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல். ஆனால் வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தனி அமைப்பு அரசின் செயல்பாடுகளை சரி பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் மக்கள் திறமையில்லாத அரசை 5 வருடம் வரை காத்திருக்காது விரைவில் தூக்கி எரியும் வழியாக ஒரு சட்டம்.
3. அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் முக்கியமாக செயல்முறை கல்விக்கும், வகுப்பறை கல்வி என்ற கட்டத்தை தாண்டி சுற்றுசூழல் கல்வி, வெளியுலக நடைமுறை வாழ்க்கை முறை போன்ற விடயங்களும் பாடங்களாக வேண்டும்.
4. நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம், வேலை நேரம், வேலை பளு ஆகியவை நிர்ணயிக்கும் சட்டம். அந்த சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு மிக அதிக அபராதம் அல்லது லைசன்ஸ் கான்சல் போன்ற சட்டம்.
5. குறிப்பிட்ட இலாபத்திற்கு மேல் விற்ககூடாது என்ற சட்டம்.
நான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்ல, ஏதோ எனக்கு தெரிந்த அளவில் இது போன்ற சட்டங்கள் அமைந்தால் நாடு நன்றாக இருக்கும் என்று கருதினேன். இது போன்ற பல சட்டங்கள், மக்களுக்கு நேரடியாக பயன் தரும் பல சட்டங்கள் உங்கள் மனதில் தோன்றியிருக்கும். அவற்றையும் சேர்த்து, இந்த புதிய சட்டங்களை நிறைவேற்ற அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.
RTA ந்டைமுரைபடுத்தியது போல, லோக்பால் சட்ட திருத்த மசோதா கொண்டு வந்ததை போல, மக்கள் போராடினால் சில சட்டங்களை அரசுகள் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றன.
யோசித்து பாருங்கள்.
கற்றது கையளவு,
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.கம்யூனிசத்தைப் பற்றியும், கம்யூனிச இயக்க வரலாறு பற்றியும் உங்கள் புரிதல் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக இருக்கின்றது.
1. கம்யூனிச மாடலை உருவாக்கியவர்கள் லெனினோ, ஸ்டாலினோ அல்ல. 19ஆம் நூற்றாண்டில் “எல்லார்க்கும் எல்லாமும்“ என்று சோஷலிசத்தைப் பற்றி பல பேர் கனவு கண்டார்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக அதை எப்படி அடைவது என்பது குறித்து யாருமே தெளிவாக விளக்கவில்லை.
மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தான் முதன்முறையாக சோஷலிச சமுதாயம் எப்படி இருக்கும், அதை எப்படி அடைவது என்பது குறித்து அறிவியல் பூர்வமாக விளக்கினர்.
மார்க்ஸ் கூறினார்: “தத்துவாதிகள் உலகை பல்வேறு முறையில் விளக்கினார்கள்; நமது வேலை இவ்வுலகை மாற்றியமைப்பதுதான்“.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் சமூகத்தை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தனர். அவர்கள் சமூகத்தையும், மனிதகுல வரலாற்றையும் ஆய்வு செய்வதற்காக வளர்த்தெடுத்த ஆய்வுமுறை தான் “இயங்கியல் பொருள்முதல்வாதம்“(Dialectical Materialism). இயங்கியல் பொருள்முதல்வாதம் தான் மார்க்சியத்தின் அடிப்படை.
மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் வாழ்ந்த காலம் “போட்டி முதலாளித்துவம்“. அது 20-ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியமாக மாறியது. ஏகாதிபத்திய சூழலுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தை லெனின் அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார். இதைத்தான் நாம் மார்க்சிய-லெனினியம் என்கிறோம். தோழர்.மாவோ மார்க்சிய-லெனினியத்தை முதலாளித்துவம் முழுமையாக வளர்ச்சியடையாத அரைக்காலனிய-அரை நிலப்பிரபுத்துவ சமூகமான சீனாவில் நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக புரட்சியை நடத்திக் காட்டினார்.
2. சோதித்தறியக்கூடியது தான் அறிவியல். தவறுகளே நிகழாமல் அறிவியலில் கண்டுபிடிப்புகள் சாத்தியமில்லை. அதுபோலத்தான் கம்யூனிச இயக்கங்களின் 150 கால வரலாறு நமக்குப் பல படிப்பினைகளை விட்டுச் சென்றுள்ளது. அதிலிருந்து நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கற்றுக் கொண்டு முன்னேறுவது தான் சரியானதாக இருக்கும். கடந்த காலத்தில் நடந்த தவறுகள் எதிர்காலத்தின் மீண்டும் நடக்காதவாறு நமது செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இது தான் மார்க்சிய நடைமுறை.
3. கம்யூனிசம் ஓட்டுக் கட்சிகளைப் போன்று தனிப்பட்ட நபர்களை முன்னிறுத்துவதல்ல. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் , மாவோ போன்ற கம்யூனிசத் தலைவர்கள் வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தில் உருவானவர்கள். அவர்களை அப்படியே காப்பியடிக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் செய்தது மாதிரியான தவறுகளை எதிர்காலத்தில் வரும் தலைவர்களும் இழைத்தால் அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை நாம் வரலாற்றிலிருந்து கற்றிருக்கிறோம். சமுகம், இயற்கையைப் பற்றிய மனிதனின் அறிவு என்பது பல ஆண்டுகளாக கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறுவதால் தான் உருவானது.
4. கம்யூனிசம் அவ்வளவு எளிதாக வீழ்த்திவிடக் கூடியதா? என்று கேட்கிறீர்கள்.
ஒரு சமுதாயத்திலிருந்து இன்னொரு சமுதாயத்திற்கு மாறும் பொழுது அதிகாரத்தை இழக்கும் பழைய ஆளும் வர்க்கம் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? பரம்பரை பரம்பரையாக சொகுசாக வாழ்ந்து வந்த, அதிகாரம் செய்தே பழகிய ஆளும் வர்க்கம் அவ்வளவு எளிதாக அதிகாரத்தை இழந்துவிடுமா?
இப்போது இந்தியாவில் டாடா, அம்பானி, போன்றோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவர்களை சாதரண மனிதர்கள் போல் வாழுங்கள் என்றால் உடனே மனம் திருந்தி ஏற்றுக் கொள்வார்களா?
புரட்சியின் போது அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்ட ஆளும் வர்க்கம் எதையாவது செய்து, என்ன விலை கொடுத்தாவது, எந்த வழியிலாவது மீண்டும் இழந்த அதிகாரத்தைப் பெறத்துடிக்கும். இதை எதிர் கொண்டு முடிப்பது சவாலானது. அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் முடியாத காரியமுமல்ல.
அதற்குத்தான் புரட்சி நடந்த பிறகு வர்க்கப் போராட்டத்தை மிகவும் தீவிரமாக நடத்த வேண்டும் என்று லெனின் கூறுகிறார். சீனாவிலும், சோவியத்திலும் வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டதன் விளைவுதான் முதலாளித்துவ மீட்சி. முதலாளித்துவ மீட்சி குறித்து கம்யூனிச ஆசான்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். நமக்கு வரலாற்று அனுபவமும் இருக்கிறது. ஆகவே எதிர்காலத்தில் இது போன்ற பிரச்ச்னைகளை கண்டிப்பாக எதிர் கொண்டு முறியடிக்க முடியும்.
மேலும் முதலாளித்தும் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொண்டால் ஏன் பெரும்பாலான மக்கள் ஏன் தேர்தலைப் புறக்கணிக்க் வில்லை என்ற உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
ஆளும் வர்க்கம் இரண்டு முறைகளில் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது.
1.கருத்தியல் ரீதியில் தற்போதைய ஆளும் வர்க்கம் தான் ஆள்வதற்குத் தகுதியானது, இந்த சமுதாய அமைப்பு முறை சரியானது, சாத்தியமானது. இந்த சமுதாய அமைப்பை பலாத்காரமாக மாற்ற முயற்சிக்கக் கூடாது என்று மக்களை பல்வேறு சமூக, அரசியல் நிறுவனங்கள் மூலம் ஏற்றுக் கொள்ளச் செய்வதன் மூலமாக. இது குடும்பம், கல்வி நிறுவனங்கள், மதம், சட்டம், ஊடகங்கள், சினிமா, கலை, இலக்கியம் ஆகிய நிறுவனங்கள் மூலமாக நடைமுறைப்படுத்தப் படுகிறது.
2. இதை மீறி கலகம் செய்தால் போலீசு, ராணுவம் மூலமாக ஒடுக்குவது.
புரட்சி நடந்தவுடன் மக்களின் பழைய கருத்துக்கள் உடனடியாக அடியோடு மாறிவிடுவது இல்லை. பழைய சமூக நிறுவனங்களின் கருத்துகள் புரட்சிக்குப் பின் உள்ள சமுதாயத்திலும் கோலோச்சும். அதை ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் மாற்ற முடியும். இக்கருத்துகள் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் மனதில் கோலோச்சுகின்றன்.
இந்தியாவில் சாதிக்கெதிராக பல போராட்டங்கள் நடந்திருப்பினும் இன்னும் சாதி ஒழிக்கப் படவில்லையே. ஏன்? சாதி என்ற கருத்தாகம் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் கோலோச்சி வருகிறது. அதை கடுமையான, தொடர்ச்சியான, சாதியின் ஆணிவேராகிய நிலவுடைமை சமுதாயத்தை பிடுங்கி எறியும் பாதையில் போராட்டங்கள் நடத்துவதன் மூலம் தான் ஒழிக்கமுடியும்.
ஆகவே முதலாளித்துவ, தன்வுடைமைச் சிந்தனையை மக்கள் மனதில் இருந்து அகற்றும், அதன் பொருளியல் அடிப்படையைத் தகர்க்கும் இந்தப் போராட்டத்தில் பின்னடைவுகள் ஏற்படலாம். இப்பின்னடைவுகள் தற்காலிகமானதே. அப்படிப்பட்ட பின்னடைவுதான் சோவியத்திலும், சீனவிலும் ஏற்பட்டது.
புரட்சிக்குப் பின்னான சீனாவில் எப்படி பழைய முதலாளித்துவக் கருத்துகள் மக்களிடமும், கட்சி உறுப்பினர்களிடமும் கோலோச்சுகிறது; அதை எப்படி முறியடிப்பது என்பதை விளக்கும் அருமையான சீனத்திரைப்படம்
Breaking With Old Ideas
https://www.youtube.com/watch?v=HQRE35_DGa8
ரஷ்யா, சீனாவில் ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணம் என்ன? அதை எதிர்காலத்தில் எப்படி முறியடிப்பது என்பது குறித்து ம.க.இ.க மாநிலப் இணைப் பொதுச்செயலாளர் தோழர்.காளியப்பன் அவர்கள் ஆற்றிய உரை
கம்யூனிசமே வெல்லும் – பாகம் -1 தோழர். காளியப்பன்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2124:kaliappan21&catid=111:speech&Itemid=111
கம்யூனிசமே வெல்லும் – பாகம் -2 தோழர். காளியப்பன்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2123:kaliappan22&catid=111:speech&Itemid=111
முதலாளித்தும் எப்படி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது எனபதை விளக்கும் கட்டுரை
Ideology and Ideological State Apparatuses
https://www.marxists.org/reference/archive/althusser/1970/ideology.htm
மார்க்சியத்தின் அடிப்படை குறித்துத் தெரிந்து கொள்ள
Beginners Guide to Marxism
http://www.marxists.org/subject/students/
கீழ்க்கண்ட இணைப்பிலுள்ள கட்டுரைகளையும் வாசிக்கவும்
https://www.vinavu.com/2014/04/23/futile-elections-pseudo-democracy-what-is-the-real-solution/#comment-137043
மார்க்சிய நூல்கள்- தமிழில்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6883&Itemid=119
தயவு செய்து கம்யூனிசத்தைப் பற்றி சரியாகப் படிக்காமல் நீங்களாக ஊகித்து எதையும் கூற வேண்டாம்.
நன்றி! தொடர்ந்து விவாதிப்போம்.
கற்றது கையளவு,
///கம்யுனிசம் தற்போது ஏட்டு சுரைக்காயாக, கறிக்கு உதவாததாக உள்ளது.
தற்போதைய ஜனநாயக முறையிலும் தேர்தல் முறையிலும் சில குறைகள் உள்ளது, இல்லை என்று சொல்ல வில்லை.///
கம்யூனிசமே இன்று உலகமக்களின் விடுதலைக்கான விடிவெள்ளியாக இருக்கிறது. வேறு மாற்று எதுவுமில்லை.
தற்போதைய முறை ஜனநாயக முறையே அல்ல, அது காலாவதியாகி விட்டது, அது இனிமேலும் நீடிக்கமுடியாது என்கிறோம். செத்துபோன பிணத்துக்கு என்னதான் வைத்தியம் பார்த்தாலும் அது வீண், அதற்கு பதில் புதிதாக பிரசவிக்கும் குழந்தையின் மீது கவனம் செலுத்தலாம் என்கிறோம். அதை தான் கட்டுரையும் குறிப்பிடுகிறது.
அப்படி இல்லை, இந்த முறை இன்னும் நீடிக்க முடியும், இம்முறைக்குள்ளேயே சீர்திருத்தங்களை செய்து மக்களுக்கு பயன்படுமாறு மாற்றலாம் என்று நீங்கள் சொன்னால், அதை எப்படி செய்வது என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும். தயவு செய்து உங்கள் திட்டத்தை முரணின்றி விளக்குங்களேன்.
கற்றது கையளவு,
///இந்நாட்டின் முதுகெலும்பான விவசாயிக்கு தகுந்த கூலி, வருமானம் கொடுக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. அதே சமயம் அதிகம் உழைத்தால் அதிகம் வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள். ///
அதிகம் உழைத்தால் அதிக வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள் – என்பதால் தான் விவசாயிக்கும் தொழிலாளிக்கும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை அதிகமாக உழைக்க ஊக்குவிக்கிறோம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகிறோம் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா??
அதிகம் உழைத்தால் நாட்டின் பொருளாதாரம் அதிகமாக வளரும், பொருளாதாரம் வளர்ந்தால் அது மக்களுக்கே திருப்பிவிடப்படும், அதன் மூலம் அதிக வாசை வாய்ப்புகளை பெறலாம் என்றும் மக்கள் அதிகம் உழைப்பார்கள். அது மட்டுமின்றி பொருளாதாரம் பெருக பெருக மக்களின் வேலை நேரமும் குறையும். இது சோசலிச ரசியாவில் நிறுபிக்கப்பட்டுள்ளது. சபோத்னிக் என்ற நாட்டிற்காக தன்னார்வ வேலைக்கு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு சில பத்தாண்டுகளிலேயே ரசிய பொருளாதாரத்தை மிக வலிமையுள்ளதாக மாற்றினர்.
தற்போதைய நிலை என்ன? நாட்டின் பெருளாதாரம் வளர்ந்தாலும் கூட மக்களின் வாழ்க்கைநிலை மேம்படுவதில்லை. மாறாக மேலும் கீழிறங்குகிறது. முன்னர் 8 மணி நேரம் உழைத்தவர்கள் இன்று 12 மணி நேரம் உழைத்தாலும் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. வளரும் பொருளாதாரம் ஒரு சில நூறு தனியாரின் சொத்துகளை தான் பெருக்குகின்றன.
தேவையும் ஆசையும் இல்லையெனில், உழைப்பின்றி மனிதன் சோம்பேறியாகிவிடுவான் என்று தோன்றுவது நியாயமனது தான். தேவையும், ஆசையும், தனிமனித நுகர்வுக்கானதா? சந்தைக்கானதா? சந்தைக்கானதாக இருக்கும் இந்த சமூகத்திலேயே அதன் அழுக்குகளிலேயே பழகிவிட்ட நமக்கு இது நம்பமுடியாததாக தான் இருக்கும்.
உழைப்பு தான் மனிதனின் இயல்பான நிலை அதை தெரிந்து கொள்ள இதை படித்து பாருங்களேன் : https://www.vinavu.com/2008/11/12/tmstar3/
Hi Saravanan,
நீங்கள் ‘பேடிதனமான’ என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இது பெண் மற்றும் மாற்றுப் பாலினத்தவரை அவமதிக்கும் சொல். பதிலாக கையாளாகாத போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
யுனிவர்பட்டி,
சரவணன் முதலாளித்துவம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துவதற்கு பதில் சமமான உரிமைகள் அளிக்க இயலாத பேடிதனமான, திறமைஅற்ற, ஊழல் மிக்க, புழுத்து போன,நாறிப்போன, தொழிலாளிகள் விரோத, விவசாயிகள் விரோத முதலாளித்துவம் என்று மைல் நீளத்துக்கு வாக்கியமாக தான் சொல்வேன் என்கிறார். அவரது வாக்கியத்தை படித்து முடிப்பதற்குள் அயர்ச்சி வந்து விடுகிறது. நன்கு விவாதம் செய்கிறார். ஆனால் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார். 🙂
கற்றது கையளவு,
கையாளாகாத, திறமைஅற்ற, ஊழல் மிக்க, புழுத்து போன,நாறிப்போன, தொழிலாளிகள் விரோத, விவசாயிகள் விரோத முதலாளித்துவ மாடல் இந்திய அரசை கற்றது கையளவு பீடித்துகொண்டு தொங்குவது ஏனோ ?. 🙂
Ideal Conditions என்ற அளவில் தேர்தல் முறை ஜனநாயகமும் நன்றாக இருக்கும், கம்மியுனிச முறை புரட்சி ஆட்சியையும் நன்றாக இருக்கும்.
ஆனால் நடைமுறையில் இரு அமைப்புகளிலும் சில ஓட்டைகள் உள்ளன, அவற்றை எப்படி சீரமைத்து நல்வழி நடப்பது என்பது குறித்து தான் விவாதிக்கிறோம்.
முதலில் பெரும்பாலான மக்களுக்கு கம்மியுனிசம் என்றால் என்ன என்று புரிய வைக்க வேண்டும். தற்போதைய வேகத்தில் சென்றால் 30 வருடங்கள் அல்ல, 300 வருடங்களானாலும் அதற்கு சாத்தியம் இல்லை என்று தான் தோன்றுகிறது).
கொஞ்சம் யோசித்து பாருங்கள், 30 வருடங்கள் அல்ல, ஒரே வருடத்தில் அண்ணா அசாரே லோக்பால் என்ற சட்ட திருத்தத்தை இந்திய அரசை கொண்டு வரச்செய்தது எப்படி?
நான் அண்ணா அசாரேவின் ஆதரவாளன் அல்ல. அவர்கள் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் நமக்கு எல்லாம் ஒரு படிப்பினையை தருகிறதல்லவா?
ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிக்க சொன்னால் மக்கள் தயங்குவார்கள். மக்களுக்கு பயன் தரும் சட்ட திருத்தங்கள் கொண்டு வர நீங்கள் போராடினால் மக்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். யோசித்து பாருங்கள்.
அண்ணா ஹசாரே முன் வைக்கும் சட்ட திருத்தத்தத்தில் தனியார் முதலாளிகள்,நீதிபதிகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதே . அண்ணாவும் முதலாளிகளும் ஒன்றுபடும் புள்ளி என்பது ஒன்று தான். முதலாளிகளின் அகோரப் பசிக்கு தடையாக மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை லஞ்சம் உள்ளது. அதனால் முதலாளித்துவத்தின் வரம்புக்கு உட்பட்டு சில சட்ட திருத்தத்துடன் மசோதாவை நிறைவேத்தி உள்ளனர் . நண்பரே நீங்கள் இன்னும் ஒன்றை நினைவில் வையுங்கள் .
இன்னும் அது சட்டமாக்கவில்லை . அது மட்டமல்ல . அது போல இன்னும் ஏகமான சட்டங்கள் செயல்படுத்தபபடாமல் இருக்கின்றது . அது அதிகார வர்க்கத்தின் வழியாகத்தான் நிறைவேற்றப்படும் . கல்வி சட்டங்களாகட்டும், பழங்குடி மக்களின் உயிர்வாழும் உரிமைகலாகட்டும் அதை நிறைவேற்றாவிடில் அவர்களைத் திருப்பி அழைக்கும் அதிகாரம் நமக்கு இல்லை எனில் நமக்கு இருக்கும் வழிமுறை தான் என்ன? நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது தானே? நீதியரசர்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அவர்களாயும் திருப்பி அழைக்க முடியாது . கடைசியாக என்ன செய்வது ?
அனைத்து கதவுகளயும் அடைத்து விட்டு எப்படி தப்பி செல்வது அதை உடைத்தெறியாமல் .
நன்றி .
//அவர்கள் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் நமக்கு எல்லாம் ஒரு படிப்பினையை தருகிறதல்லவா?
அவர் என்ன தாக்கத்தினை ஏற்பபடுத்தினார் என்பது பற்றி வினவில் கட்டுரைகள் உள்ளன .
அதுவும் அவர் முதலில் சொன்ன லோக் பாலில் ஏகப்பட்ட திருத்தம் செய்து தானே கடைசியில் மசோதா மட்டும் நிறைவேறியது .
நண்பா, அண்ணா அசாரே வின் லோக்பால் கூத்துக்கு நான் ஆதரவாளன் இல்லை. அவர்கள் சுய விளம்பரத்துக்கு செய்தது தான் அந்த ஸ்டண்ட் எல்லாம்.
நான் அவர் போராடிய வழியை தான் சொன்னேன். தக்க வகையில் போராடினால், சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாமலேயே ஒருவரால் ஒரு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர முடியும் என்ற கருத்துருவை தான் நான் பேசுகிறேன்.
வினவின் அடுத்த குறிக்கோள் மக்களை ஒட்டு போடாதிருக்க செய்வது என்பதை தாண்டி மக்களுக்கு பயனுள்ள, தொழிலாளர்கள் நலன் பேணும், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தரும் சட்டங்கள் / சட்ட திருத்தங்கள் கொண்டு வர தீவிரமாக முயற்சிக்கலாமே.
தங்களது சட்ட திருத்தங்கள் மக்களுக்கு பயன் தரும் என்ற நம்பிக்கை வந்தால் எங்களை போன்ற பொதுமக்களின் பேராதரவு தங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
முயற்சி செய்து தான் பாருங்களேன்.
முயலாமலேயே இது தேறாது என்று சொல்லிக்கொண்டிருந்தால் 30 அல்ல, 300 வருட போராட்டமும் இதே தேக்க நிலையில் தான் இருக்கும்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள். விகிதாச்சார அடிப்படையில் மக்கள் தொகையில் எத்தனை விழுக்காடு மக்களுக்கு கம்மியுனிசம் பற்றிய தெளிவு இருக்கிறது?
30 வருடம் போராடியும் விழுக்காடு அளவில் முன்னேற்றம் இல்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
உங்கள் சித்தாந்தம் மக்களுக்கு புரியவில்லை என்பதா?
நீங்கள் மக்களிடம் உங்கள் சித்தாந்தத்தை சரியான பாதையில் விலக்கவில்லையா?
உங்கள் சித்தாந்தத்தின் மேல் மக்களுக்கு நம்பிக்கை வரவில்லையா?
சிறந்த கம்மியுநிசத்திற்கு தகுந்த மாடல் அரசு ஒன்று தற்காலத்தில் இல்லாதது ஒரு குறையா?
தீவிரமாக யோசிக்க வேண்டிய தருணம் இது.
மெய்ப்பொருள் காண்பது அறிவு!
//முதலில் பெரும்பாலான மக்களுக்கு கம்மியுனிசம் என்றால் என்ன என்று புரிய வைக்க வேண்டும்.//
பெரும்பாலான மக்களுக்கு கம்யுனிசம் வகுப்பெடுத்து புரிய வைத்து பின்னர் புரட்சி நடத்துவதென்பது நடக்காத காரியம் . ஆனால் மக்கள் அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளின் இடையே போராட்டமும் நடத்துகின்றனர் . மக்களுக்கு அவர்களின் பிரச்சினைக்கு மூல காரணத்தை எளிமையாக விளக்கி அவர்களின் வர்க்க உணர்ச்சியை தூண்டி விட்டாலே போதுமானது.
உங்களுக்கு ஒரு கேள்வி . இப்போ இருக்கும் இந்த போலி ஜனநாயகம் பற்றி மக்களுக்கு யாராச்சும் வகுப்பெடுத்தார்களா?
பின் எப்படி பெரும்பாலான மக்களின் ஆதரவு கம்மியுநிஸ்ட்களுக்கு கிடைக்கும்?
120 கோடி மக்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய, மாற்றியமைக்க கூடிய ஒரு சித்தாந்தத்தை எந்த வித கேள்வியும் இல்லாமல் கண்மூடிக்கொண்டு மக்கள் ஏற்பார்கள் என்று எப்படி நீங்கள் நம்பலாம் செல்வகுமார்?
முதல் படி: மக்களுக்கு கம்மியிநிசத்தால் பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.கம்மியுநிசத்தால் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிபோகாது காக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் வர வேண்டும்.
இது இல்லாமல் கம்மியுனிசம் இந்தியாவில் புரட்சியாக வெடிக்க முடியாது.
ஜனநாயக அமைப்பை குறை கூறினால் உடனே தானாக மக்கள் கம்மியுநிசத்தை ஆதரித்து விடுவார்கள் என்று எண்ணுவது பகல் கனவு.
அப்படி பார்த்தால் எல்லோரையும் (ஜெ தவிர) குறை கூறும் சோ வும் சீமானும் இந்நேரம் தமிழகத்தை ஆண்டு இருக்க வேண்டும். குறை கூறினால் மட்டும் மக்கள் ஆதரவு கிடைக்காது. ஆக்கபூர்வமாக மக்களுக்கு உங்கள் சித்தாந்தம் பயன் தரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு எப்போது வருகிறதோ அப்போது தான் மக்கள் பேராதரவு கம்மியுநிஸ்ட்களுக்கு கிடைக்கும்.
பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு நீங்கள் மதிப்பளித்து தான் ஆக வேண்டும்.
அவர்களுக்கு கம்மியுநிசத்தை நீங்கள் புரிய வைக்காமல் எப்படி அவர்களை ஆள உங்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்?
போலி ஜனநாயகம் குறித்து மக்களுக்கு யாரும் வகுப்பெடுக்கவில்லை. ஆனால் மன்னராட்சியை கண்ட மக்கள், வெள்ளைக்காரர்களின் ஆட்சியை கண்ட மக்கள், சுதந்திரம் அடைந்ததும் தங்களுக்கு கருத்து சுதந்திரம் கிடைத்துள்ளது என்று நம்புவதால் தான் ஜனநாயகத்துக்கு எங்களை போன்ற மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
முதலில் எங்களுக்கு தற்கால நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய ஒரு நல்ல மாடல் அரசு நடத்தி காட்டுங்கள். அது நல்வழியில் நடக்கிறதென்றால் அந்த மாடலை மக்களாகிய நாங்கள் இங்கும் ஆதரிக்கிறோம்.
அப்பெரும்பான்மையான மக்களை வழிநடத்தி சென்று ஆயுத போராட்டத்தால் மட்டுமே இந்த அரசமைப்பை வீழ்த்தி புதிய மக்கள் அரசமைப்பை உருவாக்க முடியும். உழைக்கும் மக்களுக்கு இழப்பதற்க்கு அவர்களின் உயிரைத் தவிர வேறெதும் இல்லை ஆனால் பெறுவதற்கோ இவ்வுலகமே இருக்கின்றது
People have seen enough of socialism….
Govt running and protecting all the business was a nightmare situation.
You want phone line, wait in line
You want gas connection, wait in line
You want a car, wait in line
If socialism itself is not bearable , who is ready to take communism?
Anyone who wants badly, should visit Cuba and see the effects firsthand from people. Again don’t take your survey from party members/Govt officials.
I regrade for my mistake. Here after I use the word “கையாளாகாத” to indicate the performance of this Indian capitalistic Model Government.
correction:
From
உடல் பருமனுடன் [obesity] உடன் 20% தொழிலாளி வீட்டு குழந்தைகள் வாழ்வதும்…..
To
###உடல் பருமனுடன் [obesity] உடன் 20% முதலாளி வீட்டு குழந்தைகள் வாழ்வதும் ……
கற்றது கையளவு,
[1]இந்தியர்களீன் சராசரி மாத வருமானம் Rs 5,729 ! இது யாருடைய சராசரி மாத வருமானம் ? டாடா,பிர்லா ,அம்பானி உடைய சராசரி மாத வருமானமா ? இல்லை ஏழை விவசாயீகள் ,தொழிலாளிகள் வருமானமா ?
[2]மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 27 கோடி இந்திய மக்களீன் தின கூலீ rs 29 க்கும் கீழ்!
[3] 67 ஆண்டுகளாக முதலாளித்துவ மாடல் இந்திய அரசு செய்த சாதனை இது !
[4] குஷ்ட நோய்/AIDS நோய் பிடித்த இந்த முதலாளித்துவ மாடல் இந்திய அரசு நீங்கள் ஆதரிப்பது ஏனோ ?
//ம்மியுனிசம் குறித்த ரெபேக்க அவர்களின் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்.
கற்றது கையளவு,
குழந்தைகளை மானபங்கம் செய்யும் முதலாளித்துவ மாடல் இந்திய அரசு
———————————————————————————————————————————————————-
[1]இந்த முதலாளித்துவ மாடல் இந்திய அரசு நம் குழந்தைகளை எவ்வளவு கேவலமாக treatment செய்யுது தெரியுமா ?
[2] பிறக்கும் குழந்தைகள் based on ransom selection concept படி XX ,XY [female ,male ] குழந்தைகளாக தான் பிறக்குது. ஆனால் இந்த முதலாளித்துவ மாடல் இந்திய அரசு எல்லா குழந்தையும் ஒரே மாதிரியா treat செய்யுது ?பணக்கார ஊட்டு குழந்தைக்கு CBSC ,ஏழை ஊட்டு குழந்தைக்கு state board ! CBSCயீல் படித்த குழந்தைக்கு தானே IITல் சேரும் சாத்தியம் அதிகம் உள்ளது!
[3]இந்தியா என்ற ஒரு பொதுவான இடத்தில் ஏழை குழந்தைகளுக்கு குறையான கல்வி கொடுக்கும் உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசு சும்மா பம்மாத்துக்கு கொடுக்கும் ஒட்டு உரிமையை வைத்து கொண்டு நாக்கு வழிக்கவா ?
[4]எல்லா குழந்தைகளுக்கும் சமமான திறமை அளிக்கும் கல்வியை கொடுக்காத உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசு சரியான மொல்லமாறி, முடிச்டுஅவீக்கீ அரசு.
[5] அட ச , வேறு வேறு தர கல்வியை கொடுப்பதன் மூலம் ஏழை குழந்தைகளை மானபங்கம் செய்யுது உங்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசு.
[6]குழந்தைகளுக்கு கூட சமமான உரிமைகள் அளிக்க இயலாத இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசை கற்றது கையளவு பீடித்துகொண்டு தொங்குவது ஏனோ ?
கோவப்படாமல் கொஞ்சம் நான் சொல்வதை கேளுங்கள் சரவணன்,
குழந்தைகளின் படிப்புக்கு அந்த குழந்தையின் பெற்றோர் தானே பொறுப்பேற்க வேண்டும்.
அரசு பள்ளியில் படித்து தான்,டோட் தேர்வில் வெற்றி பெற்று நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். என் பெற்றோர் படிக்கவில்லை, பணக்காரர்களும் இல்லை. அதனால் பணமில்லை என்றால் நன்கு படிக்க முடியாது என்ற தவறான என்னத்தை தவிர்க்கவும்.
CBSC பள்ளியில் படித்தால் மட்டும் அல்ல State Board பள்ளியில் படித்தும் எத்தனையோ மாணவர்கள் IITயில் சேர்ந்திருக்கிறார்கள்.
ஸ்டேட் போர்டில் உள்ள ஒரு முக்கிய குறை, புத்தகத்தில் உள்ளதை அப்படியே மக்கடித்து ஒப்பிக்கும் திறன் இருந்தால் போதும், நல்ல மதிப்பெண் வாங்கி விடலாம் என்ற நிலை உள்ளது.
என் உடன் படித்த பார்ப்பன மாணவர்கள் என்னை விட அதிக மதிப்பெண் வாங்கினாலும், பல முறை என்னுடைய சந்தேகங்களுக்கு அவர்களிடம் பதில் கிடைக்காது. புத்தகத்தில் உள்ள முழு பதிலையும் அப்படியே ஒப்பிப்பார்கள், ஆனால் அவர்களுக்கே அதன் உண்மையான விளக்கம் தெரியாது. இந்த மக்கடிக்கும் முறையால் தாழ்வு மனப்பான்மை பெற்று தேர்வினில் தோல்வி கண்டு படிப்படி நிறுத்திய நண்பர்கள் உண்டு. இந்த மக்கடிக்கும் திறமையல்லாது கருத்துருவை புரிந்து கொண்டு கற்கும் கல்வி முறையை மாணவர்களிடம் ஆசிரியர்களும் பெற்றோரும் வளர்க்க வேண்டும்.
ப்ராக்டிகல் கல்வி, ஏட்டறிவு மட்டுமல்லாது தமது சுற்றத்தை உன்னிப்பாக கவனித்து நோக்கி கற்கும் திறனை மாணவர்களிடம் வளர்க்க முயற்சிக்க வேண்டும்.
எடுத்த உடனே நம் இலக்கை அடைய இயலாது. முதல் படியாக அனைத்து மாணவர்களையும், 100 சதவீதம் படிக்க வைத்து வருங்கால வாக்காளர்களை நூறு சதவீதம் படித்தவர்களாக ஆக்க வேண்டும்.
படிப்பறிவோடு, பண்பாடும், உடன் இருக்கும் சக மனிதர்களுக்கும் உதவும் குணமும், சமத்துவ மனப்பான்மையும், இன, மத சகிப்புத்தன்மையும் சிறு வயதிலிருந்தே கற்று கொடுத்தால் வருங்காலம் நன்றாக இருக்கும்.
எல்லா பிரச்சினைக்கும் அரசையே குறை கூறிக்கொண்டு நாம் எதுவும் செய்யவில்லை என்றால், தவறு நம் மேல் தான் சரவணன் சார், நாமும் ஒன்றிரண்டு அடிகள் முன் வைத்து சில வேலைகளை செய்ய வேண்டும்.
Katrathu kaiyalavu avargala migavum arumaiyaga sonneergal ippo irukum kaala kattathil ithumattumay saathiyamaana vazhi
கற்றது கையளவு,
[1]கம்யூனிஸ்ட் அரசு இருந்த வரை சோவித் ருசியாவில் அனைவருக்கும் ஒரே ஊதீயம் இருந்தது.
தற்போது உள்ள அதிபர் புதின் ருசியா அரசு கம்யூனிஸ்ட் அரசா அல்லது capitalist அரசா என்பதை தாங்களே முடிவு செய்யுங்கள்.
//ரசியாவில் இன்று வரையும் அதே சம ஊதியம் அளிக்க முடிகிறதா?
600 ரூபில்ஸ் வேண்டாம், பண வீக்கத்தினால் 6000 ரூபில்ஸ் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். இன்று ரசியாவில் இதே முறை இன்னும் பின்பற்றப்படுகிறதா?
ரசிய அதிபர் புதினுக்கும், அவரது அலுவலகத்தை சுத்தம் செய்யும் தொழிலாளுக்கும் இன்றும் ஒரே ஊதியம் தானா?//
[2]வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 27 கோடி இந்திய மக்களீன் தின கூலீ rs 29 க்கும் கீழ்.இந்தியர்களீன் சராசரி மாத வருமானம் Rs 5,729 ! இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி,உணவு,உடை ஆகிய செலவுகளுக்கு யார் பொறுப்பு ? 5729 * 12= rs 68,748.வீட்டுவாடகை,உணவு ,மின்சாரம்,உடை,கல்வி ஆகியவற்றுக்கு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு வருமானம் போதுமா ?முதலாளித்துவ மாடல் இந்திய அரசுக்கு மக்களீன் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியாத போது அதனை அடித்து வீழ்த்தும் கம்யூனிஸ்ட் புரட்சி சாத்தியம் தான் !
//குழந்தைகளின் எதிர்காலத்தை பராமரிப்பது அந்த குழந்தைகளின் பெற்றோரின் கடமை.
வயதானதும் பெற்றோரை பராமரிப்பது அந்த வளர்ந்த குழந்தைகளின் கடமை.
இது தான் இந்திய குடும்ப வாழ்க்கை முறை. //
[3]குழந்தைகள் யார் சொத்து ? ஒரு நாட்டின் அறிவு,ஆற்றல் வாய்ந்த சொத்து நம் குழந்தைகள். அவர்களுக்கு முறையான கல்வி /உணவு /உடை கொடுக்க முடியாத உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசின் குரல் உங்கள் பதிலில் [அரசே எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தால் பின் மக்களிடம் சோம்பேறித்தனம் தான் மிஞ்சும்.] எதிரொலிக்கின்றது.இருக்கும் அரசு பள்ளி /கல்லூரிகளையும் மூடிவிட சொல்கின்றீர்களா ?
//அரசே எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தால் பின் மக்களிடம் சோம்பேறித்தனம் தான் மிஞ்சும்.//
[4]இது எல்லாம் உங்கள் முதலாளித்துவ மாடல் பொருளாதாரம் பின் பற்றும் முறைகள்,அதன் தவீர்க்க இயலாத பிரச்சனைகள் . ஆனால் எமது கம்யூனிஸ்ட் சமுதாயம், 67 ஆண்டுகளாக உங்கள் இந்திய முதலாளித்துவ மாடல் உயர்த்தாத மக்கள் வாழ்க்கை தரத்தை வெறும் 10 ஆண்டுளில் ருசியாவில் உயர்தியது.
//ஒரு அலுவலகத்தில் எல்லோருக்கும் ஒரே சம்பளம். திறமையாக வேலை செய்பவருக்கும், வலை செய்வது போல பாவ்லா காட்டிக்கொண்டு ஓபி அடிப்பவர்களுக்கும் ஒரே சம்பளம் என்றால் எப்படி. ஒரு கடையில் நன்கு சுறுசுறுப்பாக வேலை செய்து அதிக வாடிக்கையாளர்களை கொண்டு வரும் விற்பனை நபருக்கு வேளைக்கு ஏற்ற வகையில் Incentive கொடுத்தால் தானே அவர் மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவர முயலுவார்? இல்லையென்றால் கொடுத்த சம்பளத்திற்கு இந்த வேலையே அதிகம் என்று சுணங்கி போக மாட்டாரா?//
con…..
கற்றது கையளவு,,
[5]குழந்தைகளுக்கு கூட சமமான உரிமைகள் அளிக்க இயலாத பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசை நான் அம்பல படுத்தியும் உங்களால் ஏற்க்க முடியாதது எனக்கு வீயப்பு அளிக்கவில்லை. அய்யா இரு முறைகளையும் ஒருங்கீணைத்தல் வருவது நமது நேரு கண்ட கலப்பு பொருளாதாரம் [mixed economy]. அது தோல்வியா ? வெற்றியா ? என்பதை சிந்தியுங்கள்.!
//கம்யுனிசம் தற்போது ஏட்டு சுரைக்காயாக, கறிக்கு உதவாததாக உள்ளது.
தற்போதைய ஜனநாயக முறையிலும் தேர்தல் முறையிலும் சில குறைகள் உள்ளது, இல்லை என்று சொல்ல வில்லை. கம்மியுநிசத்திலும் சில குறைகள் இருக்கிறது, இல்லைவே இல்லை என்று நீங்கள் மறுக்க இயலாது. இரு முறைகளையும் தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு புதிய ஜனநாயக முறையான கம்யினுநிசத்தை நாம் வடிவமைத்தால் எல்லோருக்கும் அது நல்ல தீர்வாக இருக்கும் அல்லவா. //
con……
கற்றது கையளவு,
[6]முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆதரிக்கும் எவருமே முதலாளித்துவ ஜனநாயகவாதிதான்
//நான் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகவும், முதலாளித்துவத்தை ஆதரிப்பதாகவும் தவறாக எண்ண வேண்டாம். என்னை முதலாளித்துவவாதியாக உருவகப்படுத்தாமல், உண்மையான ஜனநாயகவாதியாக கருதுங்கள்.//
[7]கம்யுனிசன் “ஏட்டு சுரைக்காய்” என்றால் நாறிபோன இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசுக்கு மாற்று என்ன ?
//கம்யுனிசம் தற்போது ஏட்டு சுரைக்காயாக, கறிக்கு உதவாததாக உள்ளது.//
[8]கம்யுனிசத்தீன் பின்னடைவு என்று எதை கூறுகின்றீர் ?
அனைவருக்கும் வேலை ,கல்வி ,உணவு,உடை,இருப்பீடம் ஆகியவற்றை உறுதி செய்த தோழர் லெனின்,ஜோசப் ஸ்டாலின்,மாஒ ஆகீயவர்களீன் அரசையா?
அல்லது ரஷ்ய ,சீனா கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாளிகள் ஊடுருவி சீரழீத்த நிகழ்வையா ?ரஷ்ய ,சீனா நாடுகளில் முதலாளித்துவம் மீண்டும் வந்ததுக்கு இது தான் காரணம்.
//வரலாறு சில பாடங்களை நமக்கு கற்று கொடுக்கிறது. சோவியத் யூனியன், சீனா, இவற்றில் கம்யுனிசம் பின்னடைவு அடைந்ததென்றால் ஏன் என்று ஆராயாமல் எல்லா நாடுகளிலும் அதே முறையை கண்ணை மூடிக்கொண்டு மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் கேட்கலாம்? கம்யுனிசம் தோன்றிய இடத்திலேயே அதனால் அதன் உண்மையான வடிவில் நிலைத்திருக்க முடியவில்லை என்றால் தவறு எங்கே ஆரம்பிக்கிறது?//
கற்றது கையளவு,
[9]ஆம் ஜனநாயக தேர்தல் முறை என்பது தவறல்ல தான் ! யாருக்கு தவறு இல்லை ? டாடா,பிர்லா,அம்பானி போன்ற 20 % முதலாளிகளுக்கு ஜனநாயக தேர்தல் முறை தவறு இல்லை தான். ஆனால் 80% ஏழை எளீய உழைக்கும் தொழிலாளர்கள்,வீவசாயீகலுக்கு உங்கள் முதலாளித்துவ ஜனநாயக தேர்தல் முறை எந்த பயனையும் அளிக்கவில்லை.எனவே இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசை நாங்கள் வீழ்த்துவோம் ! தொழிலாளர்கள்,வீவசாயீகள் தலைமையில் புதிய ஜனநாயக அரசை உருவாக்குவோம்.
//ஜனநாயக தேர்தல் முறை என்பது தவறல்ல, அதனை ஆள்பவர் தவறானவறாக இருப்பதால் ஜனநாயகம் தவறென்று சொல்ல முடியாது. வண்டியை ஓட்டுபவர் செய்யும் தவறுக்கு வண்டியை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. //
[10]ஆம் நடைமுறையில் சாத்தியம் இல்லை தான். யாருக்கு சாத்தியம் இல்லை?இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசுக்கு அனைவருக்கும் உணவு அளீப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை தான். அதனால் தானே முதலாளித்துவ மாடல் இந்திய அரசை வீழ்த்த வேண்டும் என கூறுகின்றோம் .
//அனைவருக்கும் ஒரே வகை உணவு என்பது நடைமுறையில் சாத்தியப்படுமா, தெரியவில்லை//
[11]முதலீல் ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழைந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ?
//CBSC பள்ளியில் படித்தால் மட்டும் அல்ல State Board பள்ளியில் படித்தும் எத்தனையோ மாணவர்கள் IITயில் சேர்ந்திருக்கிறார்கள். //
[12]ஆம் …,ஆம். எல்லா பிரச்சினைக்கும் முதலாளித்துவ மாடல் இந்திய அரசையே குறை கூறிக்கொண்டு நாம் எதுவும் செய்யவில்லை என்றால், தவறு நம் மேல் தான்.உண்மை தான். அதனால் தான் இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசை வீழ்த்தி தொழிலாளர்கள்,வீவசாயீகள் தலைமையில் புதிய ஜனநாயக அரசை உருவாக்குவதற்கு தோழர்களுக்கு உதவ போகிறேன்.
//எல்லா பிரச்சினைக்கும் அரசையே குறை கூறிக்கொண்டு நாம் எதுவும் செய்யவில்லை என்றால், தவறு நம் மேல் தான் சரவணன் சார், நாமும் ஒன்றிரண்டு அடிகள் முன் வைத்து சில வேலைகளை செய்ய வேண்டும்.//
சரவணன்,
நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டு விவாதிக்கிறீர்கள். கம்யூனிசத்தையோ, முதலாளித்துவத்தையோ இறுதித் தீர்ப்பாக எடுத்துக் கொள்ளாமல் அதன் கூறுகளை விவாதியுங்கள்; விமர்சியுங்கள். நமக்குத் தெளிவு பிறக்கும். கற்றது கையளவு சரியாக விவாதத்தினை எடுத்துச் செல்கிறார்.
சரவணன் அவர்களே, நீங்கள் செந்தில்குமரன் தான், சந்தேகமே இல்லை எங்களுக்கு 🙂
இப்போது தங்களது பதில்களுக்கு வருவோம்.
//கம்யூனிஸ்ட் அரசு இருந்த வரை சோவித் ருசியாவில் அனைவருக்கும் ஒரே ஊதீயம் இருந்தது.
தற்போது உள்ள அதிபர் புதின் ருசியா அரசு கம்யூனிஸ்ட் அரசா அல்லது capitalist அரசா என்பதை தாங்களே முடிவு செய்யுங்கள்.//
1. லெனின், ஸ்டாலின் உருவாக்கிய கம்மியுனிச சித்தாந்தம் ஏன் புதின் தலைமையில் முதலாளித்துவ ஆட்சியாக மாறியது? ஒரு சித்தாந்தம் சிறந்தது என்றால் ஏன் அந்த சித்தாந்தத்தை மக்கள் புறக்கணிக்கிறார்கள்? மிக ஆழமாக யோசிக்க வேண்டிய விடயம் இது. ரசியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த புரட்சி சித்தாந்தம் ரசியாவிலேயே பின்பற்றப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம். ரசியாவிலேயே பின்பற்றாத புரட்சி சிந்தாந்தத்தை இந்தியாவிலும் ஏன் பின்பற்ற வேண்டும்? உலகின் ஏதாவது ஒரு மூலையில் தற்போதைய நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய சிறந்த புரட்சி அமைப்பு ஆட்சி எங்காவது இருந்தால், எங்களுக்கு காட்டுங்கள். அதை ஒரு மாதிரி வடிவமாக நாங்கள் ஆராய்ந்து மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் மக்களிடமே அதை நாம் அனைவரும் கொண்டு செல்வோம். We need to see a live, workable Model state for your type of Governance.
//வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 27 கோடி இந்திய மக்களீன் தின கூலீ rs 29 க்கும் கீழ்.இந்தியர்களீன் சராசரி மாத வருமானம் Rs 5,729 ! இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி,உணவு,உடை ஆகிய செலவுகளுக்கு யார் பொறுப்பு ? 5729 * 12= rs 68,748.வீட்டுவாடகை,உணவு ,மின்சாரம்,உடை,கல்வி ஆகியவற்றுக்கு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு வருமானம் போதுமா ?//
2. போதாது தான். குறைந்த பட்ச கூலி, குறைந்த பட்ச மாதச்சம்பளம் என்ற ஒரு குறிப்பிட்ட அளவை தொழிலாளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை சட்டமாக கொண்டு வர நாம் அனைவரும் முயலலாம். ஒட்டு மொத்தமாக மக்களை தேர்தலை புறக்கணிக்க வைப்பதை விட இது போன்ற மக்களுக்கு பயன் தரும் சட்டங்களை நிறைவேற்ற முதலில் ம.க.இ.க. தோழர்கள் முயல வேண்டும்.
விலைவாசி ஏற்றத்தை, பண வீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த குறைந்த பட்ச சம்பளம்/கூலி அவ்வபோது சீரமைக்கப்பட்டு கொண்டே இருக்க வேண்டும். நாட்டை ஒரேயடியாக மாற்ற முடியாது, படிப்படியாக மாற்றலாம். இது முதல் படியாக இருக்கட்டுமே. அண்ணா அசாரேவால் ஒரு சிறு கும்பலை வைத்து கொண்டு லோக்பால் என்ற சட்டத்தை கொண்டு வர பாராளுமன்றத்தை நிர்பந்தித்து வெற்றி பெறுவதை போல நாட்டில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட்களும் (ம.க.இ.க. உட்பட) சேர்ந்து இந்த குறைந்த பட்ச சம்பளம்/கூலி, தொழிலாளிகளின் வேலை நேரம் போன்றவற்றை சட்டம் மூலம் காக்கலாம்.
3. அரசு கல்லூரிகளை நான் எப்போது மூடச்சொன்னேன். கோபப்படாதீர்கள் சார், நானே அரசு பள்ளியில் படித்தவன் தான். குழந்தைகளை பெற்றால் மட்டும் போதாது, குழந்தைகளின் உணவு, உடை, கல்வி அனைத்தையும் அளிப்பது பெற்றோரின் கடமை என்று தான் சொன்னேன். நான் மேலே சொன்ன குறைந்த பட்ச சம்பளம் தொழிலாளிகளுக்கு அளிக்கப்பட்டால் அவர்களால் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு முடியும். CBSE பள்ளிகளுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. அரசு பள்ளிகளில் படித்த நான் CBSE மாணவர்களை விட நன்றாகவே மதிப்பெண் வாங்கினேன். அதையும் இதையும் குழப்பி கொள்ள வேண்டாம் சார். குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோரின் கடமை. வயதான பின் பெற்றோரை பாதுகாப்பது பிள்ளைகளின் கடமை.
4. கம்மியுனிசம் ரசியாவில் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது, உயர்த்தியது என்றே சொல்கிறீர்கள். அதன் பின் ஏன் கம்முநிசம் அங்கே சுணங்கி போனது? ஆரம்பம் நன்றாக இருந்தால் பத்தாது சராணன் சார், FINISHING உம் சரியாக இருக்க வேண்டாமா? ரசியாவில் வாழ்க்கை தரம் உயர்ந்தது போல உலகில் எத்தனையோ நாடுகளில் ஜனநாயக ஆட்சியிலேயே மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்தே வந்துள்ளதே. அவற்றை ஏன் கணக்கில் எடுத்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?
5. நாடு முழுவதும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சமச்சீர் கல்வி என்ற சட்டம் கொண்டு வந்தால் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டலாம். தமிழக அளவில் இந்த கல்வி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதே, இதை இன்னும் செம்மை படுத்தினாலே போதும்.
6. நான் கண்டவரை கம்யுனிச ஆட்சிகளில் ஜனநாயகம் கொஞ்சம் அடிவாங்கி கொண்டு தான் இருக்கிறது. ரசியா, சீனாவில் மக்கள் குரலுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கின்றனவா, இல்லை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறதா? அரசாங்கத்துக்கு எதிராக வினவு போல தைரியமாக சீனாவில் மீடியா செயல்பட முடியுமா? கம்யுனிச சீனாவில் ஜனநாயகம் தழைக்கின்றதா? தியான்மென் சதுக்கம் நினைவில் இருக்கிறதா?
7. திறமையற்ற, ஊழல்வாதிகள் இவர்களை மக்கள் நிராகரித்தாலே போதுமே. மக்களான நம் கையில் தான் இந்த சக்தி இருக்கிறது. நான் ஏற்கனவே கூறியது போல கக்கன் போல ஒருவர் இப்போது கிடைத்தாரானால் நாங்கள் அனைவரும் அவரது ஆட்சிக்கே ஒட்டு போடுவோம். நான் ஏற்கனவே மேலே கூறியது போல மக்களுக்கு பயனுள்ள சட்டங்களை அவர் மூலம் நிறைவேற்றலாம். அது முடியாத பட்சத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சிகளை அண்ணா அசாரே வழி போல நிர்பந்தித்து சில சட்டங்களை நிறைவேற்ற போராடலாம். நல்ல சட்டங்களுக்கு எங்களை போன்ற பொதுமக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
8. நீங்கள் தான் முன்னொரு பதிவில் ரசியாவிலும் சீனாவிலும் கம்மியுனிசம் தோல்வி அடையவில்லை, சற்று பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னீர்கள். அதை தான் நானும் குறிப்பிட்டேன். பின்னடைவு ஏற்பட்டது உண்மை. நோய் நாடி, நோய் முதல் நாடி… பின்னடைவுக்கான காரணத்தை தீர்க்கமாக ஆராயுங்கள். தற்போதைய கம்மியுநிசத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்றால் ஏன் இல்லை, என்ன மாற்றம் தேவை என்று தாங்கள் தான் யோசிக்க வேண்டும்.
9. ஜனநாயக தேர்தல் முறையால் பயனில்லை சரி. கம்மியுனிச ஆட்சிகளாலும் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அப்போது மக்களாகிய நாங்கள் என்ன தான் செய்வது. முதலில் கம்மியுநிசத்தில் உள்ள குறைகளை நீங்களே சீர்தூக்கி ஆராய்ந்து நிவர்த்தி செய்து மக்களிடம் மீண்டும் கொண்டு வாருங்கள். தங்களது தற்போதைய கம்மியுநிசத்தில் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. நம்பிக்கை வருவதற்கு கம்மியுநிஸ்ட்கள் ஏதாவது செய்ய வேண்டும்.
10. தங்களது வாதங்களில் கோபம் மட்டும் தான் கொப்பளிக்கிறது. சற்று நிதானமாக யோசியுங்கள். நடைமுறைக்கு சாத்தியமான ஒரு வழியை எங்களுக்கு கொடுத்தால், அந்த வழி எம்மை போன்ற பொதுமக்களுக்கு பயனளிக்கும் என்றால் எங்கள் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு.
11.எனது மூன்றாவது பதிலை பாருங்கள்.
12. தற்போதைய ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக வீழ்த்தி புதிய ஜனநாயக ஆட்சியை கொண்டு வருவதை விட தற்போதைய ஜனநாயக வழியிலேயே சட்டங்களை மாற்ற முயலலாம். 30 வருட போராட்டத்தில் ம.க.இ.க வினால் எத்தனை சதவீத வெற்றி பெற முடிந்தது? மன்னிக்கவும், மக்களிடையே ம.க.இ.க வின் புரட்சி ஆட்சி விளக்கம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
(இது வரை இத்தனை பெரிய பின்னூட்டத்தை நான் பதிவிட்டதில்லை. சரவணன்/செந்தில்குமரன் அவர்களின் புண்ணியத்தில் இத்தனை பெரிய பதிலை அளிக்க வேண்டியதாயிற்று 🙂 )
கற்றது கையளவு,
[1] “லெனின், ஸ்டாலின் உருவாக்கிய கம்மியுனிச சித்தாந்தம் ஏன் புதின் தலைமையில் முதலாளித்துவ ஆட்சியாக மாறியது? “என்ற உங்கள் கேள்விக்கு நான் கூறிய பதில் என்ன ?
அனைவருக்கும் வேலை ,கல்வி ,உணவு,உடை,இருப்பீடம் ஆகியவற்றை உறுதி செய்த தோழர் லெனின்,ஜோசப் ஸ்டாலின்,மாஒ ஆகீயவர்களீன் அரசையா? இதை மறுக்க முடியுமா உங்களால்? கம்மியுனிச சித்தாந்தம் சரி என்று நிருபணம் ஆகி உள்ளதே. 🙂 )
ரஷ்ய ,சீனா கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாளிகள் ஊடுருவி முதலாளித்துவ கொள்கைகளை புகுத்தி ரஷ்ய ,சீனா நாடுகளை முதலாளித்துவ நாடக்கினர்.பெயருக்கு கம்யுனிச நாடு ஆனால் நடந்தது capitalism.அதன் பின்பு 1990 களில் ரஷ்யாவில் கோர்பசேவ் அந்த போலி கம்யுனிசத்தையும் நீக்கி முழுமையான முதலாளித்துவ நாடக்கினார்.
[2]ஆம் இவர்களால் [முதலாளித்துவ மாடல் இந்திய அரசால்] முதலாளிகளுக்கு மட்டும் தானே வரி சலுகைகளும், கடன் தள்ளுபடிகளும் [ex kingfisher airlines ] அளிக்க முடியும். உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசு தொழிலாளர், விவசாயி விரோத அரசாக இருப்பதை ஏற்றுகொண்டதற்கு நன்றி !நீங்கள் அவர்களுடன் பேசி பார்க்க சொல்கின்றீர். நாங்கள் இந்த தொழிலாளர், விவசாயி விரோத முதலாளித்துவ மாடல் இந்திய அரசையே துக்கி ஏறிய சொல்கின்றோம்.
[3]”குழந்தைகளின் உணவு, உடை, கல்வி அனைத்தையும் அளிப்பது பெற்றோரின் கடமை என்று தான் சொன்னேன். நான் மேலே சொன்ன குறைந்த பட்ச சம்பளம் தொழிலாளிகளுக்கு அளிக்கப்பட்டால் அவர்களால் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு முடியும்” என்று இத்துனை 67 ஆண்டுகளாக எத்துனையோ கற்றது கையளவுகள் பேசிவீட்டார்கள். ஆனால் நடப்பது என்ன ? தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கை தரம் குறைவது, முதலாளி மேலும் மேலும் சொத்து சேர்ப்பது தானே நடக்கிறது.
முதலீல் ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழைந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ? என்ற என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
[4]. //”கம்மியுனிசம் ரசியாவில் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது, உயர்த்தியது என்றே சொல்கிறீர்கள்.”//
உங்களுக்கு உண்மையை கூறினால் ஏன் எரிச்சல் வருகிறது ? இந்தியாவில் 67 ஆண்டுகளாக உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசால் செய்ய முடியாத சாதனைகளை வெறும் 10 ஆண்டுகளில் செய்த சோவித் ருஷ்ய அரசை நான் பாராட்டாமல் ஏன் இருக்க வேண்டும்.
[5]முதலீல் ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழைந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ? என்ற என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
இந்தியா என்ற ஒரு பொதுவான இடத்தில் ஏழை குழந்தைகளுக்கு குறையான கல்வி கொடுக்கும் உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசு சும்மா பம்மாத்துக்கு கொடுக்கும் ஒட்டு உரிமையை வைத்து கொண்டு நாக்கு வழிக்கவா ? என்ற என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
[6]கம்யுனிசம் என்பதே பாட்டாளி வர்க சர்வாதிகாரம் தான். முதலாளிகளுக்கு எந்த உரிமையும் இல்லை.
[7]இந்தியாவில் 67 ஆண்டுகளாக உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசால் செய்ய முடியாத சாதனைகளை இனிமேல் தான் சாதிக்க போகின்றிர்களா ?
[8]கம்யுனிசத்தீன் பின்னடைவு என்று எதை கூறுகின்றீர் ?
அனைவருக்கும் வேலை ,கல்வி ,உணவு,உடை,இருப்பீடம் ஆகியவற்றை உறுதி செய்த தோழர் லெனின்,ஜோசப் ஸ்டாலின்,மாஒ ஆகீயவர்களீன் அரசையா?
அல்லது ரஷ்ய ,சீனா கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாளிகள் ஊடுருவி சீரழீத்த நிகழ்வையா ?ரஷ்ய ,சீனா நாடுகளில் முதலாளித்துவம் மீண்டும் வந்ததுக்கு இது தான் காரணம். என்ற என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
[9]//கம்மியுனிச ஆட்சிகளாலும் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை.//
அனைவருக்கும் வேலை ,கல்வி ,உணவு,உடை,இருப்பீடம் ஆகியவற்றை உறுதி செய்த தோழர் லெனின்,ஜோசப் ஸ்டாலின்,மாஒ ஆகீயவர்களீன் கம்யுனிச அரசு
[10]ஆம் நடைமுறையில் சாத்தியம் இல்லை தான். யாருக்கு சாத்தியம் இல்லை?இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசுக்கு அனைவருக்கும் உணவு அளீப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை தான். அதனால் தானே முதலாளித்துவ மாடல் இந்திய அரசை வீழ்த்த வேண்டும் என கூறுகின்றோம் . இதற்க்கு இன்னும் பதில் இல்லை.
[11]முதலீல் ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழைந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ? என்ற என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
[12]ஊருல ஒரே ஒரு ஓட்டு பொறுக்காத நல்லவன்[ம.க.இ.க] இருந்தால் அவனையும் கெட்டவனாக்க பார்கீன்றீர்களே நண்பா !
மறுபடியும் 12 பதில்களா? சரி, முடிந்தவரை உங்களது பின்னூட்டங்களுக்கு எளிய வகையில் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
1. நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். ரசியாவில் உண்மையான கம்மியுனிசம் முதலில் இருந்தது. ஆனால் முதலாளிகள் அந்த கம்மியுநிசத்தை ஒழித்து கட்டி, போலி கம்மியுநிசத்தை உருவாக்கி விட்டார்கள் என்கிறீர்கள். சரி. ஒத்துக்கொள்கிறேன், முதலாளிகள் ஆட்சியாளர்களை வளைத்து போட்டு சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றனர் என்றே கருதிக்கொள்வோம். ஆனால், ஏன் பழைய கம்மியுனிசம் தான் வேண்டும் என்று ரசிய மக்கள் போராடவில்லை? ஏன் முதலாளித்துவத்தை மக்கள் ஒத்துக்கொண்டனர்? கம்மியிநிசம் வேரூன்றியதற்கு மக்கள் போராட்டம் ஒரு முக்கிய தூண்டுகோலாய் இருந்ததல்லவா, ஏன் இரண்டாம் போராட்டத்தை மக்கள் துவக்கவில்லை? ஆவேசமாக இல்லாமல் சற்று நிதானமாக யோசித்து பார்க்க வேண்டிய முக்கிய விடயம் இது. பழைய கம்மியுனிசம் தான் வேண்டும் என்று ரசிய மக்களிடம் தற்காலத்தில் எந்த வித பெரிய புரட்சியும் போராட்டமும் நடைபெறுவதாக எனக்கு தெரியவில்லை.
2. முதலாளித்துவ மாடல் தவறு என்று சொல்கிறீர்கள். தங்களுடைய கம்மியுனிச மாடல் சரி என்றால் ஏன் அதற்கான ஒரு மாடல் தற்காலத்தில் இல்லை? ஒரு நல்ல மாடல் அரசாங்கம் இருந்தால் காட்டுங்கள். பொருளாதார அளவில், ஜனநாயக அளவில், வளர்ச்சி அளவில், அனைத்திலும் அந்த மாடல் எப்படி செயல்படுகிறதென்று பார்த்து விட்டு மக்களாகிய நாங்கள் முடிவு செய்கிறோம், எது நல்லது, எது கெட்டது என்று. தற்கால நிகழ்கால நாடுகளில் உங்களது வெற்றிகரமான மாடல் இருந்தால் காட்டுங்கள், பழைய வரலாறு வேண்டாம். அப்படி ஒரு மாடல் இல்லை என்றால் ஏன் இல்லை? ஏன் மக்கள் ஒரு நல்ல மாடலை புறக்கணிக்கிறார்கள்?
மெய்ப்பொருள் காணுங்கள். இந்தியாவின் ஜனநாயக ஆட்சிமுறை ஊழல்வாதிகளால் களங்கப்பட்டது போல ரசியாவின் கம்மியுனிச மாடலும் முதலாளிகளால் களங்கப்பட்டது. இதனால் ஆட்சி முறை எவ்வாறாக இருந்தாலும், ஆள்பவர் எப்படி என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. ஒரு பிழைப்புவாதியிடம், ஊழல்வாதியிடம் ஆட்சியை ஒப்படைத்தால் கம்மியுநிசமாவது, ஜனநாயகமாவது, மன்னராட்சியாவது, எல்லா ஆட்சியையும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஒரு திறமையான நேர்மையான தலைமை இருந்தால் ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும், கம்மியுனிச ஆட்சியாக இருந்தாலும், மன்னராட்சியே இருந்தாலும், மக்கள் நலமாக வாழ்வார்கள்.
மீண்டும் சொல்கிறேன். வண்டியை ஒட்டுபவனுடைய தவறுக்கு நீங்கள் வண்டியை குறை கூறிக்கொண்டிருக்கிறீர்கள். ஜனநாயகத்தில் ஆள்பவர் தவறு செய்தால் அது ஜனநாயகத்தின் தவறல்ல. ஆள்பவரின் தவறு தான்.
மற்றபடி உங்களது அனைத்து பதில்களிலும் ஒரே கருத்தை தான் திரும்ப திரும்ப வேறு வேறு வழிகளில் சொல்கிறீர்கள். நான் கேட்கும் முக்கிய கேள்விகளுக்கு நேரடியாக பதில்கள் தராமல் தற்போதைய அரசாங்க முறையில் இருக்கும் குறைகளை மட்டும் காட்டுகிறீர்கள். அந்த குறைகளுக்கு நான் கொடுத்த மாற்று வழிகளை (குறைந்த பட்ச கூலி/சம்பள நிர்ணயம், சமச்சீர் கல்வி முறை போன்றவை)ஜனநாயக ஆட்சியிலேயே சட்டமாக கொண்டு வந்து செம்மையாக நடைமுறை படுத்தினாலே போதும்.
சரவணன், ஒரு சிறிய வேண்டுகோள். “Brevity is the Soul of Wit” என்று சொல்வார்கள்.
தங்களது கருத்துக்களை நச் என்று நாலே வரிகளில் சொல்லலாம். மைல் கணக்கில் பெரிய பின்னூட்டமிட்டால் பெரும்பாலானவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் சென்றடையாது. நீங்கள் 12 பாயிண்டுகளை சொன்னதால் நான் அனைத்திற்கும் முதலில் தனித்தனியாக பதிலளித்தேன். ஆனால் கூர்ந்து பார்த்தோமானால் பெரும்பாலான கருத்துக்கள் Repetition ஆக திரும்ப திரும்ப வருகிறது.
பின்னூட்டங்கள் பெரிதானால் விவாதங்கள் நீர்த்து போகின்றன. அதே போல ஒரு வார்த்தையில் முடிக்க வேண்டிய சொல்லை ஒரு பெரிய வாக்கியமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நல்ல மனிதர்கள் ஒரு மோசமான அமைப்பு முறையை திருத்தி விடுவார்கள் என்பது தவறான அபிப்பிராயம் என்பது திரும்ப திரும்ப நிரூபிக்கப்பட்டுள்ளது. மிகச்சமீப உதாரணம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் அமைச்சகத்தில் நடந்திருக்கும் முறைகேடுகள். அந்தோணி அரசியல் வாழ்க்கையில் அப்பழுக்கற்றவர் என்று பெயர் பெற்றவர். அரசியல் நேர்மைக்கு சமகாலத்தில் அதிகம் உதாரணத்திற்கு கட்டப்படுபவர். சர்வதேச ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ராணுவ விமானங்கள் வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த முறைகேடு ஒருமுறை நிகழவில்லை. ஐந்து வருடங்கள் 2007 லிருந்து 2011 காலகட்டம் வரை தங்குதடையின்றி நடைபெற்று வந்துள்ளது. இது மட்டுமின்றி தரம் குறைந்த நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கி அவை விபத்துக்குள்ளான பிரச்சினையிலும் கடுமையான ஊழல் புகார்கள் எழுந்தன. அந்தோணியால் ஊழல் அதிகாரிகளையும், வி.கே. சிங் மாதிரியான காவி பயங்கரவாத சிந்தனையும், ஊழல் தளபதிகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதல்ல பிரச்சினை. முதலாளித்துவ ஊடகங்கள் ஊழல் புகார் எழும்பிய அதிகாரிகளை கண்டிக்கவில்லை; மாறாக அவர்கள் மீதான புகாரை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்ட அந்தோணி மீது பாய்ந்தனர். அவர் வேகவேகமாக முடிவுகள் எடுக்கவில்லையாம். மிகவும் தாமதமாக முடிவுகள் எடுக்கிறாராம். மிகவும் ஆய்ந்து எடுத்த முடிவுகளே இந்த கதியில் இருக்கும் போது அவர் இன்னும் வேகமாக முடிவுகள் எடுக்க வலியுறுத்துகிறார்கள். அதாவது, ராணுவக் கொள்ளைக்கு ராணுவ அமைச்சகத்தை திறந்து விட கோருகிறார்கள். இது தான் முதலாளித்துவ பொருளாதாரம் இயங்கும் முறை. முதலாளித்துவக் கொள்ளைக்கு பயன்படுவது தான் முதலாளித்துவ ஜனநாயகம். இதற்கும் கம்யூனிஸ்ட்கள் விரும்பும் சோசலிச ஜனநாயகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
சுக்தேவ் அவர்களே,
நம்மிடையே இருக்கும் OPTIONS என்ன என்று பார்க்கலாம்.
1. தேர்தல் முறை ஜனநாயகம்
2. புரட்சி முறை ஆட்சி
இரு அமைப்புகளிலும் ஆள்பவர் பலமில்லாதவராகவோ, சந்தர்ப்பவாதியாகவோ, ஊழல்வாதியாகவோ, பாசிச சர்வாதிகார உணர்வு கொண்டவராகவோ இருந்தால் இரு அமைப்புகளுமே தோல்வியை அடைவது நிச்சயம்.
தேர்தல் முறை ஜனநாயகத்தை மக்களாகிய நாங்கள் அனுபவித்துள்ளதால் அதில் உள்ள நிறை/குறை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது – Known Devil.
புரட்சி முறை ஆட்சி குறித்து பொதுமக்களிடையே இன்னும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை – May be an Unknown Angel, We are not sure. கம்யூனிஸ்ட்கள் தற்போதைய நடைமுறை ஜனநாயகத்தில் உள்ள குறைகளை மட்டுமே கவனம் செலுத்துகின்றனரே தவிர மாற்று அமைப்பை பற்றி தெளிவான ஒரு விளக்கத்தை பொதுமக்களாகிய எங்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பது கசப்பான உண்மை. ஒத்துக்கொள்ள வேண்டியது தான்.
புரட்சி முறை ஆட்சி நடைமுறை படுத்தப்பட்ட ரசியா, சீனாவில் இன்று கம்மியுனிசம் வெறும் ஏட்டளவில் தான் உள்ளது, நடைமுறையில் இரு நாடுகளும் முதலாளித்துவத்தை தான் பின்பற்றுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. புரட்சி முறை ஆட்சி தோன்றிய இடங்களிலேயே அவற்றிக்கு இத்தகைய பின்னடைவு இருக்கும்போது அது இன்னும் சரியாக வேரூன்டிராத நம் நாட்டில் மக்கள் முழு நம்பிக்கையுடன் ஆதரிப்பார்கள் என்று நாம் எப்படி எதிர்ப்பார்க்கலாம்? நண்பர் சரவணன் சொல்கிறார், ஜனநாயக மாடல் தோல்வி அடைந்தது என்று. கம்மியுனிச மாடலும் அப்படி தானே இருக்கிறது?
தற்போது சீனாவில், ரசியாவில் இருப்பது போலி கம்மியுனிசம் தான். ஆனால் அதனோடு அடக்குமுறை, ஒளிவுமறைவு, இரும்புத்திரை ஆட்சி, ஊடகங்களின் மேல் கடிவாளம் என்று எல்லா பக்கங்களிலும் ஒரு வித அடக்குமுறை, சர்வாதிகாரம் தான் தெரிகிறதே ஒழிய முழு ஜனநாயகம் இருப்பதாக தெரியவில்லையே.
ஆக தற்போதைய நிலவரப்படி கம்மியுநிசத்திலும் போலி கம்மியுனிசம் வந்து விட்டது, ஜனநாயகத்திலும் போலி ஜனநாயகம் வந்து விட்டது. இதற்கு தீர்வு என்ன, யோசிக்கலாம்.
என்னை பொறுத்தவரை, தற்போதைய தேர்தல் முறை ஜனநாயகம் ஒரு சிறந்த ஆட்சி முறை தான், ஆள்பவர்கள் நல்லவர்களாக இருக்கும் வரை. இதே பிரச்சினை கம்மியுனிச ஆட்சியிலும் உண்டு. ஆள்பவர் நல்லவராக, திறமையானவராக, நேர்மையானவராக, ஆளுமை திறன் கொண்டவராக இருக்கும் பட்சத்தில் அந்த ஆட்சி கம்மியுனிச ஆட்சியாக இருந்தாலும் சரி, தேர்தல் முறை ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும் சரி, நன்றாகவே இருக்கும். ஓட்டுபவர் சரியாக இருந்தால் வண்டி நன்றாகவே ஓடும். ஓட்டுபவர் சரியில்லையெனில் எத்தகைய வண்டியாக இருந்தாலும் விபத்துக்குள்ளாகும்.
தேர்தல் ஜனநாயகம், கம்மியுனிச புரட்சி முறை இரு வழிகளிலும் சில நிறைகள் இருக்கின்றன, சில குறைகளும் இருக்கின்றன. நாம் யோசிக்க வேண்டியது, இரண்டு வழிகளிலும் இருக்கும் நல்ல சட்டதிட்டங்களை சேர்த்து மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு புதிய பாதையை நீங்கள் காட்டலாம் அல்லவா? தேர்தல் முறையை முழுவதுமாக புறக்கணிக்க தாங்கள் போராடுகிறீர்கள். 30 ஆண்டு கால வரலாற்றில் இது வரை வெற்றி கண்டதாக தெரியவில்லை. அதனால் வழிமுறையை மாற்றி பார்க்கலாமே. முதலில் மக்களிடம் உங்களுக்கு நம்பிக்கை பிறந்து உங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் உங்களை நம்பினால், பின் நீங்களே தேர்தல் அரசியலில் இறங்கி, உங்களது கம்மியுனிச கருத்துக்களை ஜனநாயக முறையில் நீங்களே ஆட்சி அமைத்து செயல்படுத்தலாமே.
இதுவரை தேர்தல் புறக்கணிப்பு நடத்தி பார்த்து ஒன்றும் ஆகவில்லை என்றபோது மக்களிடம் உங்கள் ஆட்சி வந்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்று நீங்கள் நேரடியாக மக்களை சந்தித்து விளக்கலாமே.
உதாரணத்திற்கு, நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளிகளுக்கும் குறைந்த பட்ச சம்பளம்/கூலி நிர்ணயம் செய்யப்படும் என்றும், இந்த குறைந்த பட்ச வருமானத்தை வழங்காத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றோ, அபராதம் விதிக்கப்படும் என்றோ சட்டம் கொண்டு வருவோம் என்று நீங்கள் மக்களிடையே, குறிப்பாக தொழிலாளர்களிடையே விளக்கினால் அவர்களின் ஒட்டு மொத்த ஆதரவு, வாக்குகள் உங்களுக்கு கிடைக்குமல்லவா?
இது போல, நாட்டில் பெருன்மான்மையான மக்களாக விளங்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் நாடித்துடிப்பை நீங்கள் நன்கு அறிவீர்களானால் உங்களுக்கு தோல்வியே கிடைக்காது. என்ன, கொஞ்சம் பாடுபட வேண்டும். அதற்கு நீங்கள் தயார் என்று தான் நான் நம்புகிறேன்.
எடுத்தவுடனே எல்லா இடங்களிலும் வெற்றி பெற இயலாது தான். ஆனால் படிப்படியாக மக்கள் மனதில் உங்களது ஆட்சி முறை குறித்த தெளிவான விளக்கத்தை நீங்கள் வைக்க வேண்டும். உங்கள் ஆட்சி இல்லாவிடினும், அது கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, மேற்கூறிய சட்டம் போல மக்களுக்கு மிக மிக பயன்படும் ஒரு சட்டத்தை கொண்டு வர மக்களின் பேராதரவு இருக்கிறதென்று ஆட்சியாளர்கள் உணர்ந்தால் அந்த சட்டத்தை அவர்களே (ஒட்டு பொறுக்குவதற்காக) நிறைவேற்றுவார்கள். உங்கள் குறிக்கோள் அந்த சட்டம் நிறைவேற்றுவது தானே, அது நீங்கள் ஆட்சிக்கு வந்தும் நிறைவேற்றலாம், புத்திசாலித்தனமாக யோசித்து செயல்பட்டால் நீங்கள் ஆட்சியில் இல்லாவிடிலும், மக்கள் பேராதரவை பெற்று அந்த சட்டத்தை தற்போதைய ஆட்சியாளர்களை வைத்தே நிறைவேற்றலாம். எல்லாம் நம் கையில் தான் உள்ளது.
மக்களுக்கு நீங்கள் பயன்பட வேண்டும். இல்லை என்றால் கம்மியுனிசம் என்பது ஏட்டு சுரக்காய் தான்.
உங்கள் கருத்து கம்யூனிசம் தோற்று விட்டது; முதலாளித்துவம் வென்றுள்ளது என்பதாக இருக்கிறது. ஒரு வரலாற்று நோக்கில் கம்யூனிசத்துக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு ஒரு தோல்வியே இல்லை. முதலாளித்துவமோ பல முறை தோல்வியை கண்டுள்ளது. எனினும் அதனை தொடர்ந்து பரீட்சித்து வருகிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் தேர்தல் ஜனநாயகம் அதன் பயன்பாட்டை எப்போதோ இழந்து விட்டது. அதன் போதாமையை பட்டியலிடுவது சோர்வை அளிக்கக்கூடியது. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ஜனநாயகம் ஆகக்கீழ்மையான ஜனநாயக வடிவம். முதலில் வருபவர் வெற்றி பெற்றவர் என்ற இந்த தேர்தல் முறையைக் காட்டிலும் ஒரு பன்மை சமூகத்துக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ ஜனநாயகமே மேலானது என்ற கருத்தை கருத்தை முதலாளித்துவ அறிஞர்கள் முன்மொழிகிறார்கள்.
பல முக்கியமான முடிவுகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே தான் எடுக்கப்பட்டுள்ளன. புதிய பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட போதும் நாடாளுமன்ற ஒப்புதலை பெறவில்லை. அதன் பிறகு அந்நிய மூலதனத்தை 2006 ஆம் வருடம் சில்லறை வணிகத்தில் அனுமதிக்க அரசு எடுத்த கொள்கை முடிவுக்கும் நாடாளுமன்றத்தின் துணையை நாடவில்லை. வால்மார்ட்டை எதிர்ப்பது என்று முடிவெடுத்த பல்வேறு கட்சிகள் திமுக, சமாஜ்வாடி, பிஎஸ்பி ஆகியவற்றை சூழ்ச்சியாக கையாண்டு தமது நோக்கத்தை நிறைவேற்றினர்.
எனவே இந்திய ஜனநாயகம் காலாவதியான ஒன்று.
இந்தியாவை ஆள்பவர்கள் செய்யும் தவறுக்கு ஜனநாயகத்தை சாடுவது சரியா?
ரசியா, சீனாவை பற்றி பேசினால் அங்கு போலி கம்மியுனிசம் என்கிறீர்கள். அது போல இந்தியாவில் ஜனநாயகம் சரியாக பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். அதனால் ஜனநாயக முறையே தவறென்று கூற முடியாது.
இருக்கும் தவறுகளை சரிப்படுத்தவதேப்படி என்று யோசித்து பார்ப்போம்.
தற்போதைய நிலவரப்படி கம்மியுனிசம் அதன் முழு தூய வடிவில், நடைமுறையில் எங்கும் இல்லை என்பதே உண்மை. அது ஏன் இல்லாமல் போனது? மக்கள் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை? இதற்கு பதில் தேடினால் கம்மியுநிசத்தின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்தது தங்களுக்கு தெரியும். பின்னடைவு, பின்னடைவு என்று எத்தனை நாள் சொல்ல முடியும்?
நீங்கள் ஜனநாயகத்துக்கு மாற்றாக கம்மியுநிசத்தை சொன்னதை போல கம்மியுநிசத்திற்கு மாற்றாக ஜனநாயக கம்மியுநிசத்தை நாம் ஏற்கலாம்.
நடைமுறையில் சாத்தியப்படும் முறையை பற்றி பேசலாம் நண்பர்களே.
கற்றது கையளவு,
/// நம்மிடையே இருக்கும் OPTIONS – 1. தேர்தல் முறை ஜனநாயகம், 2. புரட்சி முறை ஆட்சி///
/// ஆள்பவர் பலமில்லாதவராகவோ, சந்தர்ப்பவாதியாகவோ, ஊழல்வாதியாகவோ, பாசிச சர்வாதிகார உணர்வு கொண்டவராகவோ இருந்தால்///
நடைமுறையிலுள்ள ஜனநாயகமும் – நீங்கள் கூறும் ஜனநாயகம் – அதன் ஆட்சி முறையும் பெருமுதலாளிகளுக்கானது, மற்ற பெரும்பான்மை மக்களை வாட்டி வதக்கி சுரண்டுவது என்பதை வினவில் பல கட்டுரைகள் விளக்கியுள்ளன, உங்களுடன் விவாதித்த பல தோழர்களும் இதை தான் சுட்டி காட்டியுள்ளனர். இதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.
நீங்கள் முன்வைத்துள்ள முதல் Option – தேர்தல் முறை ஜனநாயகம் – உண்மையானதாக மக்களுக்கானதாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு புதிய முறையிலான தேர்தல் முறையை கொண்ட புதிய ஜனநாயகம் வேண்டும்; அதற்கு புரட்சி வேண்டும் என்கிறோம். அந்த புதிய முறையில் மக்களுக்கு முழுமையான அதிகாரம் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீது அதிருப்தி ஏற்பட்டால் உடனடியாக மக்கள் அவரை திருப்பி அழைக்க அதிகாரம் இருக்கும்.
/// Known Devil./// Unknown Angel///
Known Devil – இனிமேலும் நீடிக்கமுடியாது என்பதை தான் நிழவுய்ம் சூழல் நிருபிக்கிறது. அதில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள் விவாதிக்கலாம்.
கம்யூனிசம் Unknown Angel அல்ல என்பதை சோசலிச ரசியா, சோசலிச சீனா உதாரணங்களுடன், தரவுகளுடன் கட்டுரை விளக்கியுள்ளது. தோழர்களும் விளக்கியுள்ளனர்.
/// புரட்சி முறை ஆட்சி தோன்றிய இடங்களிலேயே அவற்றிக்கு இத்தகைய பின்னடைவு இருக்கும்போது///
அடுத்ததாக, இன்றைய ஆட்சிமுறை ஆதிகாலம் தொட்டு -மனித நாகரீகம் தோன்றியது முதலே நிலவிவரவில்லை. இந்த ஆட்சிமுறையும் கூட புரட்சி – மாற்றங்களால் தான் அதிகாரத்துக்கு வந்தது. அதுவும் கூட முதல் முறையிலேயே பின்னடைவின்றி வெற்றி பெற்றுவிடவில்லை.
17ம் நூற்றாண்டில் (1600களில்) ஆரம்பித்து 19ம் நூற்றாண்டு (1800கள்) வரை முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் அது முன்னேற்றங்களையும், பின்னடைவுகளையும் சந்தித்த பின்னரே உலகம் முழுவதும் மாற்றம் ஏற்பட்டது.
இப்படி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஜனநாயகம் ஆரம்பம் முதலே முதலாளிகளுக்கானதாக தான் இருக்கிறது. இதை தான் வரலாறு பதிவு செய்திருக்கிறது. இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை முதலாளிகள் பெரும்பான்மை மக்களின் உதவியுடன் தமக்கு எதிரான மன்னராட்சி முறையை தூக்கியெறிந்து தான் நிலைநாட்டினர்.
பின்னர் “வரலாற்று” காரணங்களால் இந்த ஜனநாயக அமைப்பை உருவாக்குவதைக் கூட அவர்கள் கைவிட்டு சமரசம் செய்து கொண்டனர். இதை பற்றி விரிவாக பின்னர் பேசலாம். வாய்ப்பிருந்தால் தோழர் மாவோ எழுதிய ‘புதிய ஜனநாயகம்’ புத்தகத்தை படித்து பாருங்கள்.
///தேர்தல் முறையை முழுவதுமாக புறக்கணிக்க தாங்கள் போராடுகிறீர்கள்.///
இல்லை. தேர்தல் முறையை முழுவதுமாக புறக்கணிக்க நாங்கள் போராடவில்லை. இந்த போலியான தேர்தல் முறையை புறக்கணித்து உண்மையான ஜனநாயகப்பூர்வமான தேர்தல் முறையை உருவாக்கவே போராடுகிறோம். அந்த முறையை புதிய ஜனநாயகம் என்கிறோம். அதை பழையதை நிராகரித்து புரட்சியின் மூலம் தூக்கியெறிவதன் மூலம் தான் அடைய முடியும் என்கிறோம். அது தான் அறிவியல் பூர்வமானது, அறிவுப்பூர்வமானது, தர்க்கபூர்வமானது. அதை தான் வினவின் பல கட்டுரைகள் விளக்குகின்றன. தோழர்களும் உங்களுக்கு அதை தான் புரியவைக்க முயற்சிக்கிறார்கள்.
/// மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு புதிய பாதையை நீங்கள் காட்டலாம் அல்லவா? ///
மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு புதிய பாதை தான் புதிய ஜனநாயகம். அதை சாதிக்க புரட்சிப் பாதையை தவிர வேறு மாற்று இல்லை.
///உங்களது கம்மியுனிச கருத்துக்களை ஜனநாயக முறையில் நீங்களே ஆட்சி அமைத்து செயல்படுத்தலாமே. ///
கம்யூனிச கருத்துகளை செயல்படுத்த உண்மையான ஜனநாயக அமைப்பு வேண்டும். அதுதான் புதிய ஜனநாயக அமைப்பு. பழைய ஜனநாயகத்தில் அதை செய்ய முடியாது. அதற்கு ஒரு உதாரணம் – சிலி, வெனிசுலா போன்ற நாடுகளில் நடந்த ஆட்சி கவிழ்ப்புகள்.
வரலாறு அனுபங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது.
இந்த அமைப்பில் அரசு, அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, ஊடகங்கள் என சகல துறைகளும் மொத்த அமைப்பும் அழுகி நாறிக்கொண்டிருப்பதை தான் இந்த கட்டுரை பேசுகிறது. அதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்றும் மாற்றம் தேவை என்பதை உணர்ந்துள்ளீர்கள் என்றும் நினைக்கிறேன். மாற்றம் வேண்டும் என நினைத்துக் கொண்டே இந்த அமைப்புக்குள்ளேயே மாற்றத்தை தேடுவது உங்களுகே முரணாக தெரியவில்லையா?
இல்லை, இந்த முறையிலேயே மக்களுக்கு பயன் தரக்கூடிய உண்மையான ஜனநாயகத்தை சாதிக்க முடியும் என்று நீங்கள் கருதினால், அதை நீங்கள் அறிவியல் பூர்வமாக முரணற்ற முறையில் விளக்கவேண்டும். தயவு செய்து விளக்குங்கள்.
சமுகத்தில் அரசியல் ,பொருளாதாரம் ,கலாச்சார மாற்றங்களை முழுமையாக ஏற்படுத்துவது தான் புரட்சி என்பது.இன்றைய முதலாளிகளீன் கையில் உள்ள அரசு அதிகாரத்தை தொழிலாளர்-விவசாயிகள் தலைமைக்கு மாற்றுவது தான் அரசியல் புரட்சி. இப் புரட்சியீன் தொடர்சியாக தான் தொழிலாளர்-விவசாயிகள் தலைமையிலான அரசு socialism சார்ந்தா பொருளாதாரம்,கலாச்சார மாற்றங்களை செய்ய முடியும். தற்போது உள்ள முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளர்-விவசாயிகளுக்கு உகந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே முதலீல் அரசு அதிகாரத்தை தொழிலாளர்-விவசாயிகளுக்கு தலைமை ஏற்க்கும் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சீ முலம் பெற வேண்டும்.
புரட்சீ செய்வதற்க்கு மக்கள் தான் முதன்மை என்றாலும் புரட்சீக்கு மக்களை வழி நடத்த அறிவும் ஆற்றலும் உள்ள, கொள்கையில் இருந்து விளகாத கம்யூனிஸ்ட் கட்சி வேண்டும். அது போன்ற ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தேவதைகள் வானிலிருந்து அனுப்பமாட்டார்கள்.மக்கள் மீதும், எதீர்கால சந்ததிகள் மீதும் அன்பும் ,பாசமும் கொண்ட நாம்மை போன்றவர்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டும்.உலக நாடுகளில் உள்ள பிரசனையே இது தான்.ரஷ்யாவுக்கும் இப்போதைய சூழலீல் இது பொருந்தும்.
//ஆனால், ஏன் பழைய கம்மியுனிசம் தான் வேண்டும் என்று ரசிய மக்கள் போராடவில்லை? ஏன் முதலாளித்துவத்தை மக்கள் ஒத்துக்கொண்டனர்? கம்மியிநிசம் வேரூன்றியதற்கு மக்கள் போராட்டம் ஒரு முக்கிய தூண்டுகோலாய் இருந்ததல்லவா, ஏன் இரண்டாம் போராட்டத்தை மக்கள் துவக்கவில்லை? ஆவேசமாக இல்லாமல் சற்று நிதானமாக யோசித்து பார்க்க வேண்டிய முக்கிய விடயம் இது. பழைய கம்மியுனிசம் தான் வேண்டும் என்று ரசிய மக்களிடம் தற்காலத்தில் எந்த வித பெரிய புரட்சியும் போராட்டமும் நடைபெறுவதாக எனக்கு தெரியவில்லை. //
வைகோ, சீமான் இவர்களுக்கு வரும் கூட்டம் வாக்குகளாக ஏன் மாறுவதில்லை?
மக்கள் இவர்கள் பேச்சை ரசிக்கிறார்கள். ஆனால் இவர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ம.க.இ.க தேர்தலை புறக்கணிக்க ஆயிரம் காரணங்களை கூறி போராட்டம் நடத்தினால் மக்கள் அதை பார்ப்பார்கள், கை கூட தட்டுவார்கள். ஆனால் உங்களை நம்பி தேர்தலை புறக்கணிக்க மாட்டார்கள். ஏன் என்றால் உங்களது மாற்று முறை பற்றி தெளிவான எளிய ஒரு விளக்கத்தை யாரும் தருவதாக தெரியவில்லை.
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதை விட்டு, இருக்கும் வீட்டை மூட்டை பூச்சி தாக்காதவண்ணம் எப்படி சீரமைப்பது என்று நாம் யோசித்து பார்க்கலாமே.
மதம், இனம், மொழி, சாதி, என்று பல்வேறு வழிகளில் பிரிந்திருக்கும் இந்த நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக புரட்சி முறை ஆட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே எனக்கு படுகிறது. அதனால் இருக்கும் ஜனநாயக ஆட்சி முறையில் மக்களுக்கு பயன்படும் வகையில் சில முக்கிய சட்ட திருத்தங்கள் கொண்டு வர நாம் போராடலாமே?
மாவோயிஸ்டுகள் என்றால் தீவிரவாதிகள் என்றிருக்கும் எண்ணம் மாறி, மக்களுக்காக மாற்று வழிகளை ஜனநாயக வழியிலேயே தருபவர்கள் என்ற எண்ணம் வந்தால் மக்களின் ஆதரவு உங்களுக்கு தானாக கூடும், மக்களே உங்களை தேடி வருவார்கள்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமாக என்ன செய்வது என்று யோசிக்கலாமே,
ஒரு சிறிய குழுவை வைத்து அண்ணா அசாரே நாட்டின் பாராளுமன்றத்தில் லோக்பால் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வர முடிந்ததல்லவா, அந்த வழிமுறையை கம்மியுநிஸ்ட்கள் ஏன் பின்பற்ற கூடாது? உங்களின் நோக்கம் மக்களுக்கு பயன்படும், தொழிலாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்கு இந்த வழியை நீங்கள் ஏன் பயன்படுத்த கூடாது.
நான் அண்ணா அசாறேவின் ஆதரவாளனோ, அனுதாபியோ கிடையாது. அந்த உதாரணத்தை ஏன் சொன்னேன் என்றால் ஒரு சிறு குழுவை வைத்து கொண்டு ஒரு நாட்டின் சட்டத்தையே மாற்ற கூடிய தாக்கத்தை ஒருவரால் உருவாக்க முடியும் என்றால் ம.க.இ.க ஏன் அப்படி ஒரு தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தக்கூடாது?
அரவிந்த் கேஜ்ரிவாலால் டெல்லி ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு ஒரு 6 மாதத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றால் ம.க.இ.க. முயன்றால் தமிழ்நாட்டு அளவிலாவது ஒரு குறிப்பிட்ட அளவு தாக்கத்தை உண்டாக்க முடியும் அல்லவா?
முயற்சி செய்து தான் பாருங்களேன்.
இன்னொரு முக்கிய விடயம். மக்களை அணுகும்போது உங்களுக்கு ஒரு முகம் தேவை. ம.க.இ.க விற்கு மக்களை கவரக்கூடிய ஒரு முகம் தேவை. காமராஜர், கக்கன் போன்ற ஒருவர் உங்களிடம் இருக்கிறாரா, அவரை முன்னிறுத்தி முயன்று பாருங்களேன்.
குழந்தைகள் கல்வி ,தொழிலாளர் ஊதீயம் ஆகிய விடயங்களுக்கு உங்களால் நேர் பதில் அளிக்க முடியாததுக்கு காரணம் உங்கள் மனசாட்சி தான் காரணம்.
பெயரளவுக்கு உள்ள தொழிலாளர் நல சட்டங்களும் இந்தியாவில் இருந்தும் அவை ஏட்டு சுரக்காய் ஆக தூங்குவதன் மர்மம் என்ன ? நான் கூறும் ஒவ் ஒரு விடயத்துக்கும் உங்களுக்குள் நீங்களே பதில் அளித்து பாருங்கள் உங்கள் முதலாளித்துவ ஜனநாயகம் எதற்கும் வீடை தராது என்பது உங்களுக்கு வீளங்கும்
//மற்றபடி உங்களது அனைத்து பதில்களிலும் ஒரே கருத்தை தான் திரும்ப திரும்ப வேறு வேறு வழிகளில் சொல்கிறீர்கள். நான் கேட்கும் முக்கிய கேள்விகளுக்கு நேரடியாக பதில்கள் தராமல் தற்போதைய அரசாங்க முறையில் இருக்கும் குறைகளை மட்டும் காட்டுகிறீர்கள். அந்த குறைகளுக்கு நான் கொடுத்த மாற்று வழிகளை (குறைந்த பட்ச கூலி/சம்பள நிர்ணயம், சமச்சீர் கல்வி முறை போன்றவை)ஜனநாயக ஆட்சியிலேயே சட்டமாக கொண்டு வந்து செம்மையாக நடைமுறை படுத்தினாலே போதும். //
குழந்தைகள் கல்வி, தொழிலாளர் ஊதியம் குறித்து நான் மேலே பதில் அளித்துள்ளேன் சரவணன். குறைந்த பட்ச ஊதியம்/கூலி குறித்த சட்ட திருத்தம், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகையான சமச்சீர் கல்வி பற்றி நான் குறிப்பிட்டுள்ளதை பாருங்கள்.
இந்தியாவில் உள்ள தேர்தல் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதென்று நான் சொல்லவில்லை. பிரச்சினை உள்ளது. அதை எப்படி தீர்க்க வேண்டும் என்ற வழியில் தான் நாம் வேறுபடுகிறோம்.
நீங்கள் ஒரேயடியாக வீட்டை எரிக்க வேண்டும் என்கிறீர்கள். நான் மூட்டைபூச்சியை மட்டும் அழிக்க வழி என்ன என்று யோசிக்கிறேன். இது தான் நமக்குள் இருக்கும் வித்தியாசம்.
முதலாளித்துவ ஜனநாயகத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் தேர்தல் முறை ஜனநாயகத்தை நான் ஆதரிக்கிறேன். தவறு செய்யும் ஆட்சியாளர்களை 5 வருடங்களுக்கு ஒருமுறையாவது தூக்கி எரியும் வாய்ப்பு உள்ளது.
ஆரம்பத்தில் ஜனநாயகத்தை பேசிய ரசிய சீன கம்மியுனிச ஆட்சியாளர்கள் தற்போது ஜனநாயக அளவுகோலில் எப்படி ஆட்சி நடத்துகிறார்கள் என்று தங்களுக்கு தெரியாததல்ல.
கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், வெளிப்படையான ஆட்சி இதெல்லாம் அங்கே இருக்கிறதா, சற்று யோசித்து பாருங்கள்.
முழுக்க
Hi KK,
//தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு புதிய ஜனநாயக முறையான கம்யினுநிசத்தை நாம் வடிவமைத்தால் எல்லோருக்கும் அது நல்ல தீர்வாக இருக்கும் அல்லவா.//
This is what we mean. It is good you used ‘நாம்’ here. Some of your questions should have been answered already by others. Let me put in my contribution by answering some fundamental issues.
//ஒரே ஒரு தொகுதியில் கூட மக்கள் ஆதரவு தங்களுக்கு கிடைக்கவில்லையே?//
Every constituency has its own share of ruling class, indifferent class, etc. You should learn about the fate of communists of British and Nehru’s India, Macarthyism in US, etc.
//ஆயுதம் ஏந்துபவர்கள் ஆட்சியை பிடித்த பின் ஜனநாயக ஆட்சி கொடுப்பார்கள் என்று என்ன நிச்சயம்? *** அதன் பிறகு எதிர்ப்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையில் உங்கள் மனதில் சர்வாதிகார வெறி புகுந்தால் நாடு என்ன ஆகும்?//
As People’s army will be qualitatively very different from the current one, you need not fear People’s army. It will be for the people, by the people.
//வீடுவீடாக சென்று மக்களின் அன்றாட பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை பதவியில் இல்லாதபோதே போராடி தீர்த்து வைக்கலாமே,//
We ARE people. We know what OUR problems are. We are already doing what we can within the current system. Of all people, you should be well aware of the works of our comrades.
//இந்தியர்களிடம் இருக்கும் ஒரு முக்கிய குறை, சோம்பேறித்தனம், ஏனோதானோ என்ற வகையில் வேலை செய்து பொருட்களின் தரத்தில் கவனத்தை குறைப்பது//
This is the curse of Caste division. People are left with only their own group. When a person’s minimum basic social and physical needs are not fulfilled, he/she cannot be expected to work for the betterment of others.
//அதிகம் உழைத்தால் அதிகம் வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள். //
அதிகம் வருமானம் and ஆசை are the problems. In communist society, it is enough to do a just amount of work to get all our needs fulfilled. No need to worry about our children, as the whole society is a family. It is hard to imagine this but not as hard as it is made out to be. We should work our hearts hard not our body.
//ஓபி அடிப்பவர்களுக்கும் ஒரே சம்பளம் என்றால் எப்படி//
In communist society, we may not find people cheating on their contribution, because he is not cheated and because others are there to set in right path at the beginning itself. Actually, historically, it is this selfish group who has become the ruling class. In new society, we should find mechanisms to control this sort of degeneration. As I told you already, until the significant number of people becomes aware of our common destiny and the challenges involved, we cannot get a new setup
//We need to see a live, workable Model state//
Cuba is a good model. Capitalistic media is onto a total block-out of Cuba’s model.
//ம.க.இ.க வின் புரட்சி ஆட்சி விளக்கம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. //
I am a communist because of MKEK.
// மாற்று அமைப்பை பற்றி தெளிவான ஒரு விளக்கத்தை பொதுமக்களாகிய எங்களிடம் கொண்டு சேர்க்கவில்லை//
You should join and we all should come together define the new setup. Let’s discuss and prepare a new setup in writing first.
// ரசியா, சீனாவில் இன்று கம்மியுனிசம் வெறும் ஏட்டளவில் தான் உள்ளது,//
There is no Communism at all in Russia
திரு. கற்றது கையளவு….
//அதே சமயம் பெண்ணுக்கு சம உரிமை விடயத்தில் அவரது பின்னூட்டத்தில் ஏன் கொஞ்சம் பெண்ணடிமைத்தனம் வருகிறதென்று தெரியவில்லை.//
மன்னிக்க வேண்டும்.. நான் பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று எங்கும் குறிப்பிடவில்லை. சமஉரிமை கோஷத்தை குடும்பத்தில் வைத்து கொள்ள கூடாது என்று தான் கூறினேன்.