privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?

தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?

-

வாக்களிக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள்!

எர்வாமேட்டின் விளம்பரமும் மோடி விளம்பரமும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நம்மை பிறாண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நினைவு தெரிந்த நாள் முதலாய் பல்வேறு வழிகளில் செய்யப்படும் விளம்பரம் ”தவறாமல் வாக்களியுங்கள், அது நம் அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயக கடமை”. எர்வாமேட்டினின் தராதரத்தை ஒருமுறை வாங்கிப் பார்த்தால் தெரிந்துவிடும். என்ன, ஆயிரமோ ரெண்டாயிரமோ வீணாகித் தொலையும். மோடியின் லட்சணத்தை அறிந்துகொள்வது சற்றே சிரமம். அதற்கு கொஞ்சம் அறிவு, நியாய உணர்வு, மனிதாபிமானம் மற்றும் நாம் மந்தைகள் அல்ல எனும் தெளிவு என சில தகுதிகள் அவசியப்படுகின்றன, அது ஆயிரம் ரெண்டாயிரத்தில் முடியும் சமாச்சாரமல்ல. ஆனாலும் எர்வாமேட்டின் வளர்ச்சியும் மோடியின் வளர்ச்சியும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அம்பலப்பட்டு விடும் என்பது நிதர்சனம்.

மோடி - சிவராஜ் வைத்தியர்
சேலம் சிவராஜ் வைத்தியர் விளம்பரங்கள் போல நம்மைத் துரத்தும் தேர்தல் விளம்பரங்கள்.

ஆனால் ஓட்டு போடச்சொல்லி நம்மை கேன்வாஸ் செய்யும் விளம்பரங்கள், சேலம் சிவராஜ் வைத்திய சாலை விளம்பரங்களைப் போல அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நம்மைத் துரத்துகின்றன. ஊடகங்கள், நட்சத்திரங்கள் தொடங்கி ஹீரோ ஹோண்டா போன்ற பெருநிறுவனங்கள் வரை இத்தகைய விளம்பரங்களை மேற்கொள்கிறார்கள். மதக்கலவரங்கள் பற்றியோ, விவசாயிகள் தற்கொலைகள் பற்றியோ எந்த கருத்தையும் முன்வைத்திராத அரசு அதிகாரிகள், நடிகர்கள் மற்றும் மேட்டுக்குடி கனவான்கள் கூட இந்த வேள்வியில் மனமுவந்து பங்கேற்கிறார்கள். எல்லோரும் வாக்களித்தால் சகல பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என சில அறிவுஜீவிகள் சொல்கிறார்கள். வாக்களிப்பது நம் கடமை, அதை செய்யாதவன் எந்த உரிமையையும் கேட்க தகுதியற்றவன் என அச்சுறுத்துகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்.

தற்சமயத்துக்கு ஆனந்த விகடன் குழுமத்தின் தேர்தல் ஆலோசனை ரொம்பவே தூக்கலாக இருக்கிறது. வாக்களிப்பது நம் கடமை, உரிமை & பெருமை எனும் முழுப்பக்க விளம்பரம் விகடன் குழுமத்தின் சகல இதழ்களிலும் தவறாது இடம் பிடிக்கிறது. ஏப்ரல் இரண்டாம் தேதியிட்ட ஆனந்த விகடன் தலையங்கத்தில் “மாறிவரும் நவீன உலகுக்கு ஏற்ப இந்தியாவுக்கான பாத்திரத்தை வடிவமைக்கும் முக்கியமான பணி நம் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தவகை விளம்பரங்களைப் பார்க்கையில் ஒரு மனிதன் ஜட்டி போடுவதை விட ஓட்டு போடுவது முக்கியமானது எனும் முடிவுக்கு எல்லோரும் வந்தாக வேண்டும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடும் என சிலாகிக்கப்படும் இந்த வாக்குரிமை எப்படி நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமில்லையா? அதைப்பற்றி ஏன் இந்த கும்பல் பேச மறுக்கிறது?…

அவர்கள் பேச மறுப்பதை நாம் விவாதிக்கலாம்.

யார் இந்த தேர்தல் கமிஷன்? என்ன அதன் அருகதை?

முதலில் இந்த உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழாவை நடத்துபவர்களிடமிருந்து ஆரம்பிப்போம். பொதுவாக நம்பப்படும் கருத்து. இந்தியாவின் தேர்தலானது தேர்தல் கமிஷன் எனும் தன்னாட்சி பெற்ற அமைப்பால் நடத்தப்படுகிறது, தேர்தல் காலத்தில் நாட்டின் (அல்லது மாநிலத்தின்) நிர்வாகம் முழுதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும். இத்தனை பெரிய பொறுப்பை சுமக்கும் இந்தத்துறை எத்தனை பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும்? ஆனால் உண்மையில் இங்கே பணியாற்றுபவர்கள் சில நூறு பேர்தான். கலெக்டர், போலீஸ், தாசில்தார் போன்ற அரசு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழும் அவர்களிடம் பணியாற்றும் அரசு ஊழியர்களாலும்தான் தேர்தலானது நடத்தப்படுகிறது.

தேர்தல் ஆணையம்
கலெக்டர், போலீஸ், தாசில்தார் போன்ற அரசு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழும் அவர்களிடம் பணியாற்றும் அரசு ஊழியர்களாலும்தான் தேர்தலானது நடத்தப்படுகிறது.

உங்களுக்குத் தெரிந்த நேர்மையான, அரசியல்வாதிகளின் ஊழலுக்கு துணைபோகாத அதிகாரிகள் பெயரை பட்டியலிடுங்கள். நாளெல்லாம் முக்கி முக்கி யோசித்தாலும் சகாயம், நரேஷ் குப்தா என ஒன்றிரண்டு பெயர்களுக்கு மேல் உங்களால் சொல்ல முடியாது. தமிழகத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு ஜெயலலிதாவுக்கு வாழ்த்துப்பா மட்டுமே பாடும் அதிமுக பொதுக்குழுவைவிட கீழான தரத்தில் நடந்தது. இந்த அதிகாரிகளது பங்கேற்பில்லாமல் எந்த ஒரு ஊழலும் மாவட்ட அளவிலோ மாநில அளவிலோ நடக்க வாய்ப்பில்லை. தேசிய அளவிலான ஊழல்கள் எல்லாவற்றிலும் அரசு அதிகாரிகள் சிக்குகிறார்கள். இது சுடுகாட்டு கொட்டகை முதல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வரை அனைத்து ஊழல்களுக்கும் பொருந்தும்.

போலீசைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் ஒரு பெண் சினிமாவுக்கு போகலாம், வேலைக்குப் போகலாம் ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் இருக்கக்கூடாது என அரசாங்கமே கண்டிப்பாக சொல்லியிருக்கிறது. ஆக, ஒரு பெண்ணைக்கூட நம்பி ஒப்படைக்க முடியாத துறை என அரசாங்கத்தாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட அரசின் ஓர் அங்கம் நம் காவல்துறை. இப்படி வருடத்தின் எல்லா நாட்களிலும் ஊழல் செய்கிற அதிகார துஷ்பிரயோகத்தில் ஊறித் தேறிய இந்த அரசு அதிகாரிகளை வைத்து தேர்தலை நேர்மையாக நடத்த முடியுமா? தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் இவர்கள் எல்லோரும் புனிதர்களாகி விடுவார்களா?

இன்னமும் உங்களுக்கு தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இருக்கும். அவர்கள் கடுமையாக கண்காணிக்கிறார்கள். பணம், பொருள் மற்றும் கள்ளச்சாராயம் என ஏராளமானவை கைப்பற்றப்படுகின்றன. எல்லா கட்சிகளும் தேர்தல் கமிஷனை கடுமையாக திட்டுகின்றன், ஆகவே தேர்தல் நேர்மையாக நடக்கிறது என நாம் உறுதியாக நம்பலாமென பரவலாக கருத்துக்கள் நிலவுகின்றன.

ஒவ்வொருவரும் இரண்டு முறை ஓட்டுப் போடுங்கள் என வெளிப்படையாக சொன்ன சரத்பவார், முஸ்லீம்களை பழிவாங்க எங்களுக்கு ஓட்டுபோடுங்கள் என்று சொன்ன அமித் ஷா ஆகியோரது பேச்சடங்கிய வீடியோ ஆதாரங்கள் தேர்தல் கமிஷன் வசம் இருக்கின்றன. ஆயினும் இவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இதுவரை நாற்பதாயிரத்துக்கும் மேலான விதிமீறல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன, யாரும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. திருமங்கலம் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது என தலைமை தேர்தல் அதிகாரியே ஒப்புக்கொண்ட பிறகும் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை. ஆக இந்த தேர்தல் கமிஷனால் நேர்மையானவர்களைக் கொண்டும் தேர்தலை நடத்த இயலாது, முறைகேடு செய்பவர்களை தண்டிக்கவும் முடியாது.

எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாத தேர்தல் கமிஷன், யாரும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என வாக்காளர்களுக்கு அறிவுரை சொல்ல மட்டும் பெரிதும் சிரத்தை எடுத்துக் கொள்கிறது. காரணம் நீங்கள் பணம் வாங்கினால், அது அரசியல் கட்சியின் ஒரு முதலீடாகிவிடும். பிறகு அவர்கள் முதலீட்டுக்கு லாபம் பார்க்க ஊழல் செய்வார்கள். ஆகவே நீ நேர்மையாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் அதன் விளக்கம். உண்மையில் பெருமளவிலான பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதில்தான் செலவாகிறதா?

ஒரு தேசிய நாளிதழின் முதல் பக்க முழு விளம்பரத்துக்கு தரப்படும் தொகை சற்றேறக்குறைய ஐம்பது லட்சம். ஒரு செய்திச் சேனலின் பத்துவினாடி விளம்பரத்துக்கான தொகை உத்தேசமாக இருபதாயிரம். நாமெல்லோரும் நரேந்திர மோடியின் முகரையை பார்ப்பதற்காக இந்தியா முழுவதும் வெளியாகும் நாளிதழ்களில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் ஆயிரத்து ஐந்நூறு முழுப்பக்க விளம்பரங்கள் தரப்பட்டிருக்கின்றன. இதனை இந்தியாவிலுள்ள எல்லா கட்சிகளும் தங்களது சக்திக்கேற்ற அளவில் செய்துகொண்டிருக்கின்றன. எல்லா கட்சிகளது டிவி விளம்பரங்களும் பெரிய சேனல்கள் எல்லாவற்றிலும் வருகின்றன.

ஐந்நூறு பேர் வரக்கூடிய ஒரு திருமணத்திற்கான சத்திர மற்றும் சாப்பாட்டு செலவு மட்டுமே குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் ஆகும் சூழலில்- சாராயம், போக்குவரத்து, சாப்பாடு, விளம்பரம் மற்றும் வருபவனுக்கு சம்பளம் என பணத்தை இறைக்க வேண்டிய நிகழ்வான மாநாடுகளும் பொதுக்கூட்டங்களும் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி தினசரி நடத்தப்படுகின்றன. இணைய விளம்பரங்களுக்கான செலவே நூற்றுக்கணக்கிலான கோடிகள் ஆகிறது. மேடையமைப்பு மற்றும் கட்சி ஊழியர்களுக்கு ஆகும் பணம் என கடைநிலை செலவுகள் இருக்கின்றது. ஆக, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை 100 சதவிகிதம் தடுத்தாலும்கூட தேர்தலுக்கு என கட்சிகள் செலவிடும் தொகை (எவ்வளவு குறைவாக கணக்கிட்டாலும்) ஆயிரக்கணக்கான கோடிகள் ஆகும். இவை அனைத்தும் சட்டபூர்வமாக தடுக்கவே முடியாத செலவுகள். இந்த பல்லாயிரம் கோடி முதலீட்டுக்கான ஒரே வருவாய் ஆதாரம் ஊழல்தான். ஆகவே நீங்கள் இந்த தேர்தல் முறையை ஏற்றுக்கொள்ளும்போதே அதன் விளைவான ஊழலையும் ஏற்றுக்கொள்ள வேண்டியவராகிறீர்கள்.

இந்த தேர்தல் எதற்காக நடத்தப்படுகிறது?

கோடீஸ்வர வேட்பாளர்கள்இதற்கு சொல்லப்படும் பதில் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க. அதிலும் குறிப்பாக, இருப்பவர்களில் நல்லவனைத் தேர்ந்தெடுக்க என்பதாக இருக்கும். அரசின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 70 சதம் மக்கள் போதுமான அளவு சாப்பாட்டுக்கு கூட செலவிட இயலாத ஏழைகள். அப்படியானால் மக்கள் பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதம் பேர் பரம ஏழைகளாக இருக்க வேண்டும். அதுதான் மக்கள் பிரதிநிதித்துவத்தின் நியாயமான விகிதாச்சாரம்.  ஆனால் இங்கே ஒரு வேட்பாளரது சின்னமும் முகமும் எல்லா வாக்காளர்களுக்கும் சென்றடையவே பல லட்சங்கள் செலவாகும்.

தமிழக வேட்பாளர்களில் ஓங்கி உலகளந்த உத்தமர் என பலராலும் சுட்டிக்காட்டவல்ல ஒரே வேட்பாளர் பத்திரிக்கையாளர் ஞாநி, தனது ஒருநாள் பிரச்சார செலவு ஐம்பதாயிரம் ஆவதாகச் சொல்கிறார். ஆகப்பெரும்பாலான பாராளுமன்ற வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். கட்சிக்கு தொடர்பே இல்லாத முதலாளிகளை வேட்பாளராக்கும் போக்கு இப்போது துவங்கியிருக்கிறது. சுருங்கச்சொன்னால் இந்த நாட்டின் பெரும்பாலானவர்களான ஏழை மக்களில் இருந்து ஒரு மக்கள் பிரதிநிதி உருவாக வாய்ப்பே கிடையாது. பிறகு என்ன மயிருக்கு இதனை மக்களாட்சி என நாம் அழைக்க வேண்டும்!

போகட்டும், இந்த எல்லா பிரச்சனைகளையும் தாண்டி ஒரு யோக்கியன் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு போகிறான் என ஒரு வாதத்துக்கு வைத்துக்கொள்ளலாம். அவனால் உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியுமா? அவனது அதிகார எல்லை எத்தகையது?

மக்கள் பிரதிநிதிக்கு என்ன அதிகாரம்?

அதிகார வர்க்க நபர்களைக் கொண்ட ஒழுங்கு முறை ஆணையத்தால் மட்டுமே மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல் விலை, எண்ணெய் நிறுவன அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. தொலைபேசித் துறையை டிராய் எனும் சுயேச்சையான அமைப்பு கட்டுப்படுத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தின் போக்கை மாற்றும் ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு வராமல் நிறைவேறுகின்றன (காட் ஒப்பந்தம், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்). பல ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் ஒப்புதலின்றி நிறைவேற்றப்படுகின்றன. நாட்டு மக்களின் சொத்தான அரசுத்துறை நிறுவனங்கள் ஒரு அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் சுலபமாக விற்பனை செய்யப்படுகின்றன (பால்கோ, மாடர்ன் பிரெட்). கனிம வளங்கள் முதலாளிகளுக்கு இனாமாக தரப்படுகின்றன. இவை எல்லாமே நம் வாழ்வோடு பெரிதும் தொடர்புடைய விடயங்கள்.

நாடாளுமன்றம்
மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் இவற்றைப் பற்றி முடிவெடுப்பதில் உங்களது மக்கள் பிரதிநிதிக்கு எந்த அதிகாரமும் இருக்கப்போவதில்லை. உங்களது வேலை பறிபோனாலோ, உங்களது வாழிடம் பறிக்கப்பட்டாலோ ஒரு எம்.பியால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. உங்கள் ஊரின் ஏரியோ ஆறோ விற்பனை செய்யப்பட்டால் அதனை தடுத்து நிறுத்த உங்களது எம்.எல்.ஏவால் முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசோடு போடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கூட அறிய முடியாது.

அரசின் எல்லா பேச்சுவார்த்தை விவரங்களும், வெளிநாட்டு ஒப்பந்தங்களும் முன்பே அதிகாரிகள் மட்டத்தினால் இறுதி செய்யப்பட்டு விடும், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் அமையும் பேச்சென்பது ஒரு சம்பிரதாயமே என ஈழப்பிரச்சனை தொடர்பான ஒரு பேட்டியில் நேரடியாகவே குறிப்பிட்டார் ப.சிதம்பரம். வருடத்துக்கு ஒன்றிரண்டு கோடி பாரளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர் நிதியை செலவு செய்யப் பரிந்துரைக்கலாம், அதுதான் ஒரு மக்கள் பிரதிநிதியின் இன்றைய அதிகபட்ச அதிகாரம் (அந்தப்பணமும் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில்தான் இருக்கும், அவரே செலவு செய்யும் பொறுப்பிலிருப்பவர்). ஆனால் அந்தத் தொகையை பதவியில் இல்லாத உள்ளூர் பவர்ஸ்டார்களே செய்வார்கள். அதிகாரமற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் அளவில் ஒரு செல்வாக்கு போய்விடக் கூடாது என்பதற்கே இந்த தொகுதி மேம்பாட்டு நிதி. இது ஒரு நாடகம். பிறகு உங்கள் ஓட்டுப்போடும் புனிதக் கடமையின் பலன்தான் என்ன?

இது அதிகார வர்க்கத்தால் ஆளப்படும் தேசம்!

கடந்த பத்தாண்டுகளாக பிரதமராக இருக்கும் மன்மோகன் ஒரு மக்கள் பிரதிநிதியல்ல. திட்டக்கமிஷன் துணைத்தலைவர் ஒரு மக்கள் பிரதிநிதியல்ல. ரிசர்வ் வங்கியின் இன்றைய தலைவர் ஒரு இந்தியரே அல்ல (பிறப்பின் அடிப்படையில் சொல்லவில்லை). ஆனால் இவர்கள் எல்லோரும் நம் நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதில் முக்கிய பாத்திரத்தை வகிப்பவர்கள். ஆகவே நண்பர்களே, இது அதிகாரிகளால் ஆளப்படும் ஒரு தேசம். ஜனநாயக ஆட்சி என்பது வெறும் பெயர்தான்.

அதிகார வர்க்கம்
அதிகார வர்க்கத்தால் ஆளப்படும் தேசம்

ஒரு எளிய உதாரணத்தோடு இதனை விளங்கிக் கொள்ளலாம். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஃபெர்ணாண்டர்ஸ் தென்னமெரிக்காவுக்கான சுற்றுப் பயணத்தின்போது அமெரிக்க அதிகாரிகளால் அம்மணமாக்கி சோதனை செய்யப்பட்டார், ஒருமுறையல்ல இரண்டு முறை. பின்னாளில் ஜார்ஜே அதனை ஒப்புக்கொண்ட பிறகும், ஒரு அமெரிக்க அதிகாரி தான் எழுதிய புத்தகத்தில் அச்செய்தியை பகடியாக எழுதி வெளியிட்ட பிறகும் இந்திய அரசு மட்டத்தில் எந்த சலனமும் இல்லை.

ஆனால் ஒரு பச்சை பிராடுத்தனம் செய்து அமெரிக்க போலீசிடம் சிக்கிக்கொண்ட தேவயானி கோப்ரகடேவின் கைதுக்கு இந்திய அரசு கொதித்தெழுந்தது. அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது, அவர்களது சலுகைகள் பறிக்கப்பட்டன, அதிகாரியொருவர் திருப்பியனுப்பப்பட்டார். இந்தியா வந்த அமெரிக்க அரசு விருந்தாளிகளை சந்திக்க அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மறுத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு போர்ச்சூழலே அந்த பித்தலாட்டக்கார அதிகாரிக்காக உருவாக்கப்பட்டது. பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அடுத்த நிலையில் உள்ள பாதுகாப்பு அமைச்சரைக் காட்டிலும் ஒரு அதிகாரிக்கு செல்வாக்கு இருக்குமானால், இது யாரால் நடத்தப்படுகிற ஆட்சியாக இருக்க இயலும்?

சரி, இது மக்களாலோ மக்கள் பிரதிநிதிகளாலோ நடத்தப்படுகிற ஆட்சியில்லை என்பது உறுதியாகி விட்டது. இப்போது இது யாருக்காக நடத்தப்படும் ஆட்சி என்பதை பார்க்கலாம்.

இது முதலாளிகளுக்கான அரசு – ஆட்சி!

தொழிலாளிகளை ஒடுக்கும் மாருதி கார் நிறுவனம் உங்கள் ஓட்டை விற்காதீர்கள் என ஒழுக்கமாய் சொல்கிறது. அஞ்சு வருசமா எதையுமே செய்யாத உனக்கு என் ஓட்டு இல்லை என யாருக்கோ எதிராக வாக்களிக்க தூண்டுகிறது டாலர் பனியன்-ஜட்டி கம்பெனி. இது டேலண்டுக்கான தேர்தல் என்கிறது ஹீரோ ஹோண்டா. ஒயர் கம்பெனி முதல் ஊறுகாய் கம்பெனிவரை எல்லா நிறுவனங்களும் ஓட்டுபோடுவதன் மகாத்மியத்தைப் போற்றி விளம்பரம் கொடுத்த வண்ணமிருக்கின்றன. அது அவர்களது சமூக அக்கறை என கொள்ளலாமா? என் பொருளை வாங்கினால் அதன் லாபத்தில் ஒருபாகம் ஏழைக்குழந்தைகள் படிப்புக்கு தரப்படும் என்கிறது இந்துஸ்தான் லீவர் நிறுவன விளம்பரம். அதாவது அவர்கள் சமூக அக்கறையை காட்டவேண்டுமானால் நீங்கள் அவர்களது பொருளை வாங்கியாக வேண்டும்.

ஓட்டுக்கு நோட்டு
தொழிலாளிகளை ஒடுக்கும் மாருதி கார் நிறுவனம் உங்கள் ஓட்டை விற்காதீர்கள் என ஒழுக்கமாய் சொல்கிறது.

ஆனால் ஓட்டுபோடு எனும் விளம்பரத்துக்கு மட்டும் எந்த பிரதிபலனும் பாராமல் இவர்கள் விளம்பரம் செய்கிறார்களே.. ஏன்? காரணம் இது இவர்களுக்கான அரசு. இந்த அரசமைப்பானது அவர்களது நலனுக்காகவே கட்டமைக்கப்பட்டது. ஆகவே அதன்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தக்கவைக்கும் அக்கறையும் பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. அதற்கான முயற்சிதான் இந்த விளம்பரங்கள்.

பட்ஜெட் போடும்போது விவசாயிகளையோ நெசவாளர்களையோ நமது நிதியமைச்சர்கள் ஆலோசனை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் எல்லா பட்ஜெட்டுக்கு முன்பும் முதலாளிகளோடு அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். இந்தியாவுக்கு வந்த பில் கிளிண்டன் பாராளுமன்றத்தில் செலவிட்ட நேரத்தைவிட அம்பானி சகோதரர்களை சந்திக்க ஒதுக்கிய நேரம் அதிகம் என்பதை அறிவீர்களா? ஒரு சாமானிய மனிதன் பேருந்து நிலைய கழிப்பறையில் சிறுநீர் கழிக்கவே மூன்று ரூபாய் செலவழிக்கும் நாட்டில் ஒரு சதுர மீட்டர் விளைநிலம் ஒரு ரூபாய் விலையில் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அரை லிட்டர் பால் இருபது ரூபாய் விலையுடைய நாட்டில் நூறு ஏக்கர் தாதுமணல் சுரங்க நிலம் பதினாறு ரூபாய் ஆண்டு குத்தகைக்கு விடப்படுகிறது. உங்கள் தெருவில் உள்ள கடைக்காரர் திடீரென அரிசி விலையை இரண்டு மடங்காக்கினால் நாம் அமைதியாக இருப்போமா? அதே அண்ணாச்சி பக்கத்து தெருவுக்கு பழைய விலைக்கே அரிசி விற்றால் அவரை நீங்கள் விட்டுவைப்பீர்களா? இயற்கை எரிவாயு விலை விவகாரத்தில், எந்த இடையூறும் இல்லாமல் இதைத்தான் அம்பானி செய்கிறார்.

2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், தாதுமணல் ஊழல் போன்ற எண்ணற்ற ஊழல்களின் அடிப்படை, முதலாளிகளுக்கு நாட்டின் செல்வம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்பதுதான். இவற்றால் பலன் பெற்றவர்கள் எல்லோருமே டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற  தரகு முதலாளிகள். இவர்கள் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்பப் பெற முடியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இவர்களது அந்த ஆதாயத்துக்காக தரகு வேலை பார்த்த நீரா ராடியாவைக்கூட நம் அரசால் கைது செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆக, அரசாங்கம் என்பது முதலாளிகளுக்காவே நடத்தப்படுகிறது. எல்லா ஊழல்களும் அந்த முதலாளிகளின் லாபத்துக்காகவே செய்யப்படுகின்றன. ஊழலின் மூலவர்கள் பாதுகாப்பாக இருக்கும் நாட்டில் ஊழலை மட்டும் எப்படி ஒழிக்க முடியும்?

முதலாளிகளுக்கான நீதிதான் நீதித்துறையின் நீதி!

இவை எல்லாம் இருந்தாலும் நாட்டைக் காப்பாற்றும் வல்லமை நம் நாட்டு நீதிமன்றத்துக்கும் சட்டத்துக்கும் உண்டு என வாதிடுவோர் பலர் இருக்கிறார்கள். நாட்டின் சகல பாவங்களையும் போக்கும் பெரிய தோஷபரிகார ஸ்தலமாக உச்ச நீதிமன்றம் கருதப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் எட்டுபேர் ஊழல்வாதிகள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது என, தான் தொடுத்த வழக்கொன்றில் குறிப்பிட்டார், பிரஷாந்த் பூஷன் (மற்ற நீதிபதிகள் நியாயவான்கள் என அவர் சொல்லவில்லை, ஆதாரம் இல்லை அவ்வளவே). அவர் சொன்னது உண்மை என கருதினால் உச்சநீதிமன்றம் ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்க வேண்டும். அல்லது பொய்யென்றால் பிரஷாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாயிருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் அவரிடம் சமரசத்துக்கு முன்வந்தது, குறைந்தபட்சம் வருத்தத்தையாவது பதிவு செய்யுங்கள் நாம் வழக்கை முடித்துக்கொள்ளலாம் என கெஞ்சியது. ஏன்?

கஙகுலி
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி.

ஸ்டெர்லைட் வழக்கு உள்ளிட்ட பெரும்பாலான பெருநிறுவனங்களோடு தொடர்புடைய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முதலாளிகளுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்குகின்றது, பல பிரச்சனைகளில் தலையிடவே மறுக்கின்றன நீதிமன்றங்கள். அரிதினும் அரிதான நிகழ்வாக, வோடாஃபோன் நிறுவனம் வரிமோசடி செய்தது உறுதியாகி அவர்கள் பதினோராயிரம் கோடி அபராதம் செலுத்தவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இத்தீர்ப்புக்கு கட்டுப்பட முடியாது என்று சொல்லி அவர்கள் சர்வதேச நீதிமன்றங்களை அணுகுகிறார்கள். சர்வதேச மருந்து நிறுவனங்கள் இந்தியாவின் சட்டங்களுக்கெதிராக, தீர்ப்புக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகின்றன. 2ஜி ஊழல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமங்களால் தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு ஈடு கேட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சர்வதேச தீர்ப்பாயங்களை அணுகுகின்றன. உள்நாட்டில் செயல்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலோ இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடியாகாது.

இருக்கும் மிச்ச சொச்ச தொழிலாளர் சட்டங்களையும் ஒட்டுமொத்தமாக நீக்கு என முதலாளி வர்க்கம் அரசுக்கு கட்டளையிடுகிறது. தொலைத்தொடர்பு நிறுவங்களின் வருவாய் குறித்து தணிக்கை செய்ய சி.ஏ.ஜிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இது நிறுவன ஒப்பந்தங்களின் புனிதத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும். மேலும் இது மற்ற துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என அஞ்சுகிறோம் என சொல்லியிருக்கிறார் ஃபிக்கி (இந்திய வர்தக சபைகள்-தொழிலகங்களின் சம்மேளனம்) தலைவர் சித்தார்த் பிர்லா. என் வருமானத்தைக்கூட நீ ஆய்வு செய்யக்கூடாது என நீதிமன்றத்தை மறைமுகமாக கண்டிக்கிறது முதலாளிகள் கூட்டம். கார்ப்பரேட் கம்பெனிகளால் நம் சட்டத்தை வளைக்கமுடியும் சூழல் ஒருபக்கம், அவர்கள் நம் நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனும் கள யாதார்த்தம் மறுபக்கம் என இந்திய சட்டத்தின் மாண்பு சந்தி சிரிக்கிறது.

முதலாளிகளால் பராமரிக்கப்படும் ஊடகங்கள்!

முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஊடகங்கள்
பன்னாட்டு ஊடக முதலை முர்டோச்சின் வழித்தடத்தில் முதலாளிகளுக்கு சொந்தமான, முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஊடகங்கள்

இந்த எல்லா பிரச்சனைகளையும் மக்களிடம் தெரியப்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இருக்கிற ஊடகங்களின் நிலை என்ன? இன்று அவர்களும் பெருமுதலாளிகள் கைபொம்மையாகத்தான் இருக்கிறார்கள். அனேக ஊடகங்கள் பெருமுதலாளிகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன, அம்பானி வசம் மட்டும் சுமார் நாற்பது சேனல்கள் இருக்கின்றன. மற்ற ஊடகங்களும் அவர்களது கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். நாம் யாருக்காக அழவேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் தீர்மானித்ததால்தான் நாம் நிர்பயாவுக்காக மெழுகுவர்த்தி ஏந்தினோம். அவர்கள் விரும்பியதால் அன்னா ஹசாரேவின் ஏழுநாள் உண்ணாவிரதத்தின் ”நியாயம்” நம் எல்லோரையும் வந்தடைந்தது. அவர்கள் விரும்பவில்லை, ஆகவே பத்து வருடமாக நடக்கும் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் நம் யாரையும் சலனப்படுத்தவில்லை. விற்பனைச் சரக்காக அவர்கள் செய்தியை மாற்றியது மட்டும் பிரச்சனை அல்ல, சுவாரஸ்யமான செய்தியை மட்டும் நாடும் இழிவான ரசிகனாக நம்மையும் மாற்றியிருக்கிறார்கள்.

இப்படி இந்திய அரசு அமைப்பின் எல்லா தரப்பும் சீரழிந்திருக்கிறது. அதனை கண்காணிக்கவும் தண்டிக்கவும் உள்ள அமைப்புக்கள் ஊழல்மயமாகிவிட்டன. சுருக்கமாக சொன்னால் இன்னதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி இந்திய ஜனநாயகத்தின் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாமே புரையோடிப்போய் அழுகி நாற ஆரம்பித்திருக்கிறது. அது மக்களின் விவாதப் பொருளாவதை தவிர்க்கவே இந்த ஓட்டுப்போடும் புனிதக் காரியத்தின் மகிமைகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விளம்பரம் செய்கிறார்கள்.

மன்மோகன் சிங் காலாவதியாகி மோடி திணிக்கப்படுவது ஏன்?

மன்மோகன் சிங், மோடி
மன்மோகன் சிங் காலாவதியாகி மோடி திணிக்கப்படுவது ஏன்?

இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் இறுதி இலக்கு நாட்டை மொத்தமாக முதலாளிகள் சொத்தாகவும் மக்களை வெறும் நுகர்வோராகவும் மாற்றுவதே. அதனை விரைவாக செய்ய திணிக்கப்பட்டவர்தான் மன்மோகன். முதலாளித்துவத்தின் யூஸ் அண்டு த்ரோ விதிப்படி இனி அவர் உபயோகமற்றவர். ஒரு பெரிய தாதாவின் கீழிருக்கும் கும்பலில், ஸ்கெட்ச் போடும் ஆளைப் போன்றவர் மன்மோகன். கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை பலியிடும் திட்டத்துக்கு ஸ்கெட்ச் போடும் அடிப்படைப் பணிகளை அவர் செவ்வனே செய்துவிட்டார், இது கழுத்தறுக்க வேண்டிய கட்டம். இப்போது ஸ்கெட்ச் போட்ட மன்மோகனுக்கு இங்கு வேலையில்லை, இனி இந்த அசைன்மெண்டுக்கு மோடி போன்ற மூளையற்ற அடியாள் அதிகாரத்தில் இருப்பதுதான் முதலாளிகளுக்கு வசதி.

அதனால்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பொருளாதார மீட்பராக அறிமுகமான மன்மோகன் இன்று அப்படி ஏற்றி விடப்பட்டவர்களாலேயே செயல் திறனற்றவர் என தூற்றப்படுகிறார். முதலாளிகளின் ஃபாசிஸ்ட் தேர்வில் முதல் வகுப்பில் தேறிய மோடி, புதிய மீட்பராக அறிமுகம் செய்யப்படுகிறார். அங்கிங்கெனாதபடி எல்லா ஊடகங்களிலும் அவர் வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தப்படுகிறார். தெகல்கா கூட அவருக்கு எதிரான ஆதாரங்களை இப்போது வெளியிட மறுக்கிறது. ஒருவேளை மோடியை கொண்டுவரும் திட்டத்தில் பிசகு ஏற்படும் சாத்தியத்தை கவனத்தில் கொண்டு களமிறக்கப்பட்டிருக்கும் டம்மி வேட்பாளர்தான் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால். குறைந்தபட்ச அவநம்பிக்கை இருப்பின் அதை சமன் செய்யவும் அது அதிகமாகி விட்டால் அதனை அறுவடை செய்யவுமே அவர் களத்துக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.

ஆம் ஆத்மி – ஆளும் வர்க்கத்தின் பிளான் பி

நாடு முழுக்க இருக்கும் இரண்டு லட்சம் என்.ஜி.ஓக்களின் ஏக பிரதிநிதிதான் கெஜ்ரிவால். அவரது வேட்பாளர்கள் பலரும் என்.ஜி.ஓ ஓனர்கள்தான். பொதுவான நபர்களை ஆ.ஆ கட்சிக்கு கொண்டுவரும் பிள்ளை பிடிக்கும் வேலையை செய்வதும் என்.ஜி.ஓக்கள்தான். ஒரு வருடத்துக்குள் கட்சி ஆரம்பித்து நாடுமுழுக்க வேட்பாளர்களை நிறுத்தும் வல்லமை, இவர்களால்தான் ஆம் ஆத்மிக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏகாதிபத்திய நிதியால் இயங்குபவை. தங்களை ஒரு மாற்று என சொல்லிக்கொள்ளும் போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளும் மற்ற பெயர்ப்பலகை இடதுசாரிக் கட்சிகளும் இவர்களுக்கு எவ்வகையிலும் மாற்றல்ல. அவர்களது முதலாளித்துவ சார்பை விளங்கிக்கொள்ள சிங்கூர் நந்திகிராம உதாரணங்களே போதும்.

இந்தியா இனியும் ஒரு நாடல்ல, அது ஒரு ஐஎன்சி  (INC) கம்பெனி – இங்கே வளர்ச்சி என்பது என்ன?

அரசு என்பது ராணுவம், போலீஸ் போன்ற துறைகளை மட்டும் வைத்திருந்தால் போதும் மற்ற எல்லாவற்றையும் எங்களுக்கு கொடு என்பதுதான் முதலாளிகளின் உத்தரவு. மக்கள் பிரதிநிதிகள் எனும் பெயரில் அரசியல் கட்சிகளினால் ஏற்படும் சிறிய அளவு தாமதத்தை தவிர்க்கவும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய லஞ்சத்தின் அளவை குறைக்கவும் முதலாளிகள் “லெஸ் கவர்மெண்ட், மோர் கவர்னென்ஸ்” எனும் செயல் திட்டத்தை முன்மொழிகிறார்கள். அரசின் பங்கைக் குறை, அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகமாக்கு என்பதாக அதனை புரிந்துகொள்ளலாம். இங்கே அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த செயல்திட்டம்தான் அமுலுக்கு வரும். இந்த காரணிகள் அனைத்தையும் பரிசீலித்தால் நாம் சிக்கியிருக்கும் வலையின் எல்லா கண்ணிகளும் ஏகாதிபத்தியத்தோடு இணைக்கப்பட்டவை என்பது புலனாகும். இந்த அமைப்புக்குள் உருப்படியான மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அறவே இல்லை என்பதும் விளங்கும்.

இந்தியா இன்க்
இந்தியா ஒரு நாடு அல்ல, முதலாளிகள் முதல் போட்டு லாபம் சம்பாதிக்க பயன்படும் கம்பெனி.

இவை எல்லாவற்றுக்கும் மேல் நம் நாடு கணிசமான வளர்ச்சியை சந்தித்திருப்பதாக நம்ப வைக்கப்படுகிறோம். மன்மோகன், சிதம்பரம், கோபண்ணா போன்ற காங்கிரஸ்காரர்களும் பத்ரி, வெங்கடேசன் போன்ற பா.ஜ.க சார்பு “அறிவுஜீவிகளும்” நாடு வளர்ந்திருப்பதாகவே சொல்கிறார்கள். பா.ஜ.க வந்தால் அது இன்னும் வேகமாக இருக்கும் என்பதுதான் பத்ரி மாதிரியானவர்களின் அபிப்ராயம். அவர்களது பார்வையில் வளர்ச்சி என்பது அகலமான சாலைகள், பெருமளவுக்கான அன்னிய முதலீடு, பெரிய ஷாப்பிங் மால்கள் ஆகிய கட்டுமானங்களும் ஜி.டி.பி, அன்னிய செலாவணி கையிருப்பு ஆகிய எண்களும்தான்.

உண்மையில் இவை நமக்கு என்ன வளர்ச்சியை தந்திருக்கின்றன? சாலைகள் அகலமாகியிருக்கின்றன, ஆனால் இலவசமாக பயணித்த சாலைகளை பாவிக்க பணம் செலுத்த வேண்டிய நுகர்வோராக இன்று நாம் மாற்றப்பட்டு விட்டோம். சொந்த ஊரில் பிழைக்கும் வாய்ப்பு நம்மில் பெரும்பாலானோருக்கு இன்றில்லை. நாம் பெருநகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஓடுகிறோம். வட இந்திய பணியாளர்கள் நம் நகரங்களுக்கு வருகிறார்கள்.

பயணங்கள் இலகுவாகியிருக்கின்றன, ஆனால் அவை நமக்கு செலவு மிக்கதாகியிருக்கின்றன, அது தவிர்க்க இயலாததாகி நாம் நவீன நாடோடிகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வின் இனிமையான பருவமாக கருதப்பட்ட குழந்தைப் பருவம் இன்றைய மாணவர்களுக்கு பெரும் சுமையாகவும் வெறும் போட்டியாகவும் மாறியிருக்கிறது. முன்பு தண்ணீர் விலைபொருளாக இருந்திருக்கவில்லை, அது அதிகபட்சமாக கோரியது உங்கள் உழைப்பை மட்டுமே. இன்று கிராமம் நகரம் என பாரபட்சமில்லாம் தண்ணீர் ஒரு விற்பனைப் பண்டம். கேன் தண்ணீர் கவர்ச்சிக்கு நாம் ஆட்படுத்தப்பட்ட வேளையில் அரசு தந்திரமாக குடிநீர் வழங்கும் கடமையில் இருந்து விலகிவிட்டது.

இன்று டிவியும் வாகனமும் இலகுவாக கிடைக்கிறது ஆனால் நாளைய நம் வேலை என்பது அனேகருக்கு உத்திரவாதமற்றதாக மாறிவிட்டது. பெரிய அதிநவீன மருத்துவமனைகள் எல்லா நகரங்களிலும் முளைக்கின்றன, ஆனால் மருத்துவம் ஏழைகளுக்கு கைக்கெட்டாததாக இருக்கிறது. சகல வசதிகளோடு இருக்கும் பள்ளி கல்லூரிகள் எல்லா இடங்களிலும் இன்று இருக்கின்றன, ஆனால் கல்விச்செலவானது நடுத்தர வர்க்க மக்களுக்குகூட பெருஞ்சுமையாய் மாறியிருக்கிறது.

பொருள், வசதி என்றில்லை, வாழ்க்கை முறையும் பெருமளவு சிதைக்கப்பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்குவது குற்றம் எனும் சிந்தனையை மக்களில் பலரும் கைவிட்டாயிற்று. இயல்பான மனித அற உணர்ச்சிகள் குறைந்து போய்க் கொண்டிருக்கிறது, அதன் விளைவாக சாமானிய மக்கள் ஈடுபடும் குற்றச் செயல்கள் பெருகுகின்றன. இளைஞர்கள் பலர் சமூக சிந்தனையற்றவர்களாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் தோல்வியடையும் வேளையில் தான் தனித்து விடப்பட்டதாக இளையோர்கள் உணர்கிறார்கள். விளைவு, முப்பது வயதுக்குட்பட்டோரது மரணத்திற்கான முதல் காரணியாக தற்கொலை மாறியிருக்கிறது. குடிக்கும் தண்ணீரில் இருந்து கேட்கும் செய்திவரை எல்லாவற்றையும் ஒரிஜினல்தானா என சந்தேகிக்க வேண்டிய அளவுக்கு நாம் நம்பிக்கையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். மனசாட்சியோடு நேர்மையாக சிந்தித்தால் இந்த வளர்ச்சி நம்மை பாதுகாப்பற்றவர்களாக, சக மனிதர்கள் மீது நம்பிக்கையற்றவர்களாக, நிம்மதியில்லாதவனாக, கடனாளியாக மாற்றியிருப்பது புரியும். இது வளர்ச்சியா, வளர்ச்சியென்றால் இந்த வளர்ச்சிதான் நமக்கு வேண்டுமா?

மேற்சொன்ன உண்மைகளை விவாதிக்கும் எல்லா தருனங்களிலும் நாம் எதிர்கொள்ளும் கேள்வி, இந்த அரசமைப்பு பிரயோஜனமற்றது என்றால் வேறு மாற்றுதான் என்ன?

புழுத்து நாறும் இந்த அரசமைப்பிற்கு தீர்வு என்ன?

நாம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்குமான ஆணிவேர் தனிச் சொத்துடைமைதான். பெண்ணடிமைத்தனம், வறுமை, மதம் என எல்லா சிக்கல்களும் தனியுடைமையால்தான் உருவாகின்றன. ஒருவன் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் எனும் சூழலே இன்னொருவனிடம் இருந்து அபகரிக்கவும், அடுத்தவனை அடிமையாக்கவும் தூண்டுகிறது. அதற்கான கவசமாக மதம் பயன்படுத்தப்படுகிறது. பணக்கார வர்கத்தின் வளர்ச்சி என்பது ஏழைகளை மேலும் ஏழையாக்காமல் சாத்தியப்படாது. இந்தியாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை இருபது கோடி, வசிக்க ஆளற்ற வீடுகள் சற்றேறக்குறைய ஐந்துகோடி. தஞ்சையில் விவசாய வேலைக்கு ஆளில்லை, ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் தொழிலாளர்களுக்கு வேலையில்லை. இந்த அபாயகரமான முரண்பாடுதான் முதலாளித்துவம் தரும் பரிசு. ஆகவே நம் பிரச்சனைகளின் தீர்வென்பது தனிச்சொத்துடமையை ஒழிக்கும் கோட்பாட்டின் வாயிலாகத்தான் கிடைக்கும்.

சோசலிசப் புரட்சியின் சாதனைகள்

1917 புரட்சிக்குப் பிறகு அரசமைத்த லெனின், முதலில் மூன்று காரியங்களை செயலாக்குகிறார்.

  • நிலங்களை விவசாயிகளுக்கு பிரித்தளிப்பது.
  • பெரிய நிறுவனங்களை அரசுடமையாக்குவது.
  • சமனற்ற வெளிநாட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்வது.
லெனின் - ஸ்டாலின்
உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்கிய முன்னோடி தலைவர்கள் – லெனின், ஸ்டாலின்

பிறகு தமது அரசின் முக்கியமான உடனடி இலக்குகளாக அனைவருக்கும் உணவு, இலவசக் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிவற்றை நிர்ணயித்தார் . இவற்றை அடைந்த பிறகே மற்றவற்றின் மீது கவனம் செலுத்தப்படும் எனவும் அறிவித்தார். கல்வி புகட்டுவது ஒரு மக்கள் நடவடிக்கையாக மாற்றப்படுகிறது. கற்ற ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு கற்றுத் தரவேண்டும் எனும் முயற்சி தொடங்குகிறது. தொழிலாளர்கள் அதிகம் கூடும் ஆலைகளிலும் பண்னைகளிலும்கூட பள்ளிகள் துவங்கப்படுகின்றன. முதியோருக்கான கல்வி தனியே செயல்படுத்தப்படுகிறது. 1918 அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் ஒரே தரத்திலான இலவசக் கல்விச் சட்டமாக்கப்படுகிறது. அதுவரை இருந்த வசதிக்கு ஏற்ப இருந்து வந்த பாரபட்சமான கல்விமுறை ஒழிக்கப்பட்டது.

எழுத்தறிவை மூன்று சதவிகிதத்தில் இருந்து நூறு சதவிகிதமாக்க சோசலிச ரஷ்யா எடுத்துக்கொண்ட காலம் வெறும் பத்தாண்டுகள். புரட்சி நடந்து இருபதாண்டுகளுக்குள் ரசியாவில் வரிவடிவம் இல்லாதிருந்த நாற்பது தேசிய இனங்களின் (சிறுபான்மை இனங்கள் உட்பட) மொழிகளுக்கு வரிவடிவம் உருவாக்கப்பட்டது. நாடு முழுக்க கிராமங்களிலும் நகரங்களிலும் பெரிய நூலகங்கள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலின் காலத்தில், ஏழை நாட்டு மாணவர்களுக்கு அறிவு மறுக்கப்படக் கூடாது என்பதற்காக அறிவியல் நூல்கள் மிக மிக மலிவான விலையில் அவர்கள் மொழியிலேயே தயாரித்தளிக்கப்பட்டது. யுத்தத்தினால் ஆதரவற்றோராகிவிட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஏராளமான காப்பகங்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. அவர்களில் இருந்து பல ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் பின்னாட்களில் உருவானார்கள்.

மற்ற இலக்குகளான அனைவருக்கும் உணவு, குடியிருப்பு, மருத்துவம் ஆகியவை ஸ்டாலின் காலத்தில் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. 1940 மற்றும் 1950-க்கும் இடையேயான பத்தாண்டுகளில் ரசியாவின் மருத்துவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்தில் இருந்து இரண்டு லட்சத்து அறுபத்தைந்தாயிரமாக உயர்ந்த்து. பத்தாண்டுகளில் 1.10 லட்சம் புதிய மருத்துவர்கள். கர்ப்பிணிகள் மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டியதில்லை, அவர்களை நாடி மருத்துவப் பணியாளர்கள் வருவார்கள். பிரசவத்திற்கான உத்தேசமான தேதிக்கு ஒரு வாரம் முன்னதாக அரசே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வரும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. கர்ப்பிணிகளுக்கு ஓராண்டுவரை முழு ஊதியத்துடனான விடுமுறையும், இரண்டாம் ஆண்டு அரை சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் வழங்கப்பட்டது. 1916-ல் ரசியாவின் தனிமனித சராசரி ஆயுள் 32 ஆண்டுகள். 1960-ல் அது 70 வருடமாக அதிகரிக்கப்பட்டது. அதே வருடத்தில் ரசியாவில் பத்தாயிரம் பேருக்கு 20 மருத்துவர்கள் இருந்தார்கள், உலகிலேயே இதுதான் அதிகம். மற்ற நாடுகளின் அன்றைய தரவுகள் கீழே,

  • அமெரிக்கா – 10,000 பேருக்கு 12 மருத்துவர்கள்
  • பிரான்ஸ் –  10,000 பேருக்கு 10.7 மருத்துவர்கள்
  • இங்கிலாந்து – 10,000 பேருக்கு 10 மருத்துவர்கள்
  • பாகிஸ்தான் – 10,000 பேருக்கு 0.7 மருத்துவர்கள்??!!

1941 மற்றும் 1951 -க்கும் இடையேயான பத்தாண்டுகளில் மட்டும் கட்டப்பட்ட மக்கள் குடியிருப்புக்களின் அளவு நகர்ப்புறத்தில் நூற்று பத்து கோடி சதுரஅடி. கிராமப்புறங்களில் உருவாக்கப்பட்ட புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை 27 லட்சம். இது ரசியாவின் அன்றைய ஐந்தாண்டு திட்ட இலக்கைக் காட்டிலும் 21 சதவிகிதம் அதிகம். இதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கை 77 லட்சம். 1947-ல் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நுகர்பொருட்கள் மீதான ரேஷன் கட்டுப்பாட்டுமுறை முழுமையாக நீக்கப்படுகிறது.

இந்தியாவில் போலி ஜனநாயகத்தின் ‘சாதனைகள்’!

ஆனால் ஜனநாயகத்தின் கோயிலான இந்தியாவில் அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டம் நிறைவேறவே 65 ஆண்டுகள் ஆனது, அதனை சாத்தியமாக்கும் முயற்சிகள் இன்றைக்குவரைக்கும் ஆரம்பமாகவில்லை. இன்றும் இந்தியாவில் எழுபது விழுக்காடு மக்களே எழுத்தறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  70 சதம் மக்களுக்கு இரண்டு வேளை உணவு மட்டுமே கிடைக்கிறது. முக்கால்வாசி மக்களுக்கு ஒழுங்கான சாப்பாடே இல்லாத நாட்டின் மொத்த மருத்துவ செலவில் அரசின் பங்கு 16 விழுக்காடுதான். 86 சதவிகித செலவை மக்களே செய்கிறார்கள். வீடற்றவர்கள் எண்ணிக்கை 20 கோடி. கிராமங்களில் வாழ வழியின்றி நகரங்களுக்கு இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் பத்து கோடி. சரியான உணவில்லாததால் நாட்டின் பெண்களில் பாதிபேர் ரத்த சோகையுடையோராக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இதே சதவிகிதத்திலான இந்திய குழந்தைகள் போதிய ஊட்டச்சத்தற்றவர்கள். இவை அனைத்தும் சிலநூறு முதலாளிகளால் முடக்கப்படும் செல்வத்தின் காரணமாக உருவாகின்றன. ஆகவே முதலாளித்துவத்தை ஒழிக்காமல் மக்கள் நலன் என்பது எக்காலத்திலும் சாத்தியமில்லை.

மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்த சோசலிசத்தை தோற்ற ஃபார்முலா என கிண்டலடிப்பதும் மக்களுக்கு எதையுமே செய்ய முடியாத செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை போற்றிப் புகழ்வதும் அறிவுடையோர் செய்யும் காரியமல்ல. தோல்வியிலிருந்து பாடம் கற்பதில் சிறுமையும் இல்லை பிணத்துக்கு பேன் பார்ப்பதில் பெருமையும் இல்லை.

தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தார் பாம்பின் பெருமையை சொல்லும் “வெள்ளிக்கிழமை விரதம்” என்ற படத்தை எடுத்தார்கள். ஆனால் அந்த படத்தை எடுக்க கொல்லப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கை உத்தேசமாக நூறு (இதனை அதன் கதாசிரியர் கலைஞானம் நக்கீரன் இதழ் தொடர்கட்டுரையில் குறிப்பிடுகிறார்). அதே கதைதான் இங்கேயும், சாமானிய மக்களை தேர்தல் மூலம் அரசு கவுரவிப்பதாக ஒரு தோற்றம் நமக்கு காட்டப்படலாம். ஆனால் பின்னணியில் நம்மைப் போன்ற மக்களில் பலர் அழிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. மாமாக்களை மாற்றினால் விபச்சாரத்தை ஒழித்துவிட இயலும் என்பதை உங்களால் நம்ப இயலுமெனில் இந்தத் தேர்தல் மூலம் மக்கள் நல அரசை அமைத்துவிட முடியும் என்றும் நீங்கள் நம்பலாம்.

தேர்தலை புறக்கணியுங்கள்!
புதிய ஜனநாயக் புரட்சிக்கு பணியாற்ற புரட்சிகர அமைப்புகளில் இணையுங்கள்!
வினவுடன் தொடர்பு (vinavu@gmail.com அல்லது 9941175876) கொள்ளுங்கள்!

  1. அன்பார்ந்த வாசகர்களே,

    தேர்தல் அரசியல் குறித்தும், அது ஏன் போலி ஜனநாயகம் என்பதையும் விளக்கி பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். இருப்பினும் பல்வேறு வாசகர்களுக்கு வினவு கூறும் மாற்று அரசியல் என்ன,எப்படி என்று ஏராளம் கேள்விகள் இருக்கின்றன. அதை விரிவாகவும், முழுமையாகவும் எழுதுவதில் உள்ள சிரமம், இணைய வாசகர்களின் வேகமான படிப்பிற்கு அந்த நீண்ட கட்டுரைகள் கட்டுப்படுமா என்று பல்வேறு தடைகள் உள்ளன. இருப்பினும் இந்தக் கட்டுரை அவை குறித்த ஒரு அடிப்படைப் புரிதலை வழங்கும் என்று நம்புகிறோம். பிறகு இதையும் விரித்து எழுதுகிறோம். தேர்தல் தேதியோடு சமூக மாற்றமும், கடமைகளும் முடிந்து விடாது என்பதால் இந்த கேள்விகளை நாம் தொடர்ந்து விவாதிக்கலாம். இந்தக் கட்டுரையில் முடிந்த அளவு விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு தோழர்களை கோருகிறோம். வினவு சார்பிலும் செய்கிறோம். நன்றி

  2. Our country is becoming Nepotism country. In TamilNadu DMK wants to grab the CM Chair by hook or crook. Karuna’s sons want to kill each other. Every grand sons of Karuna will attach NIDI after their name to showpublically that they are after money ie NIDHI.
    Amma Jayalalitha thinks that JAYA means SUCCESS always and tries to have hold in DELHI also.
    She is ready to support and ready to make MODI as P>M> if he promises in public to sanction
    Rs.65K crores as relief to Tamil Nadu.
    P.Chidamabaram tries his level best to make son Karthik as his successor. Karthik is minting money
    by setting up VASAN EYE CARE in all major cities of Tamilnadu.
    Waste fellows like VIJAYKANTH, SHARATH KUMAR, KARTHIK ( late muthuraman’s son) trying to split votes for their cheap popularity. THEY CAN ACT BEHIND CAMERAS ONLY.
    What is the necessity of Election for INDIA ??

    • Your writing is good, but is the solution you are suggesting?
      P.Chidambaram became FM by re-counting only. He is indispensible for Gandhi Family.
      His mother Sonia Gandhi cannot manage finance without his support and help. He cannot take SANYAS
      or to go out of Politics. He wants his son to enter politics, but he may lose deposit in Sivagagai, as he is busy in managing his Vasan Eye care.

  3. நல்ல கட்டுரை ஆழமான விமர்சனம் நமது போலி ஜனநாயக்த்த பத்தி இதத்தான் ரெம்ப நாள எதிர் பார்த்தேன் தேர்தலில் ஓட்டு போட்டு ஒருவரை தேர்ந்தெடுப்பதில் எந்த பயனும் இல்லை அவர் ரெம்ப நல்லவராகவே இருந்தாலும் எதையும் செய்ய முடியாத நிலைலில் இருப்பதை விளக்கினீற்கள் அனால் இந்த நிலமையை ஏற்ப்படித்தியதே அவர்கள் தானே அரசு நிறுவங்களை தனியாருக்கு விற்றது சர்வதேச நிருவனங்களை நமது தேசத்தில் தொலில் செய்ய அனுமதிதது எல்லாம் இவர்கள தானே இவர்களே இதை மாற்றினால் தான் மாறும் புரட்சி எப்படி தீர்வாகும் விளக்கவும்

    • /இந்த நிலமையை ஏற்ப்படித்தியதே அவர்கள் தானே அரசு நிறுவங்களை தனியாருக்கு விற்றது சர்வதேச நிருவனங்களை நமது தேசத்தில் தொலில் செய்ய அனுமதிதது எல்லாம் இவர்கள தானே இவர்களே இதை மாற்றினால் தான் மாறும்/

      அவர்களே இதை எப்படி மாற்றுவார்கள்? நீதி கதைகளை உபதேசித்து இவர்களை மாற்ற இயலுமா? இல்லை அவர்களது மனதை சென்டிமன்டாக டச் செய்தால் மாற்றிக்கொள்வார்களா?

      தங்கள் வர்க்க நனனுக்காக உழைக்கும் வர்க்கத்தை சுரண்ட ட் இதை செய்கிறார்கள்.சுரண்டப்படுபவர்கள் தங்களை வீழ்த்திவிடாமல் இருக்க பல தடுப்பு அரண்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

      முதலில் தான் சுரன்டப்படுகிறோம் என்ற நினைப்பே வர முடியாதபடி மதம் முதல் பத்திரிகை வரை மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துகின்றது. ஆசையே அழிவுக்கு காரணம் ்முதல் அத்தனைக்கும் ஆசைப்படு என்று மதமும் சுரண்டல் முறைக்கேற்ப மாறி வருகிறது.

      இதையும் மீறி வருபவர்களுக்கு இந்த அமைப்புக்குள்ளேயே தீர்வு இருக்கிறது என்று சொல்லி மழுங்கடிக என்.ஜி.ஒ வைடி வைத்த்ருக்கிறார்கள்.

      அதையும் மீறினால் போலீசு, ராணுவம் கொண்டு ஒடுக்குவார்கள்.

      புரட்சிகர இல்லாமல் இதை எப்படி தாண்டமுடியும். சாத்தியமே இல்லை.

  4. இன்றைய தமிழ் இந்து நாளிதலில்
    வாக்களிப்பதால் எந்தப் பலனும் இல்லையா? என்ற தலைப்பில் இந்தியாவின் ஜனநாயக அமைப்பை பற்றி சில விசயங்கள் இருக்கின்றன

    //நம் நாட்டில் எல்லாமே ஜனநாயக அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மட்டுமே செய்யப்படுவதில்லை. மிகப் பெரிய பொதுநிர்வாக அமைப்பு, நீதிமன்ற அமைப்பு, ஒவ்வொரு துறையிலும் பல ஒழுங்குமுறை ஆணையங்கள், தன்னிச்சையாகவும் வெளிப்படையாகவும் முடிவுகளை அலசி ஆராயும் ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், தொண்டுநிறுவனங்கள் என்று எண்ணற்றவை உள்ளன. இவற்றின் கூட்டுச் செயல்பாட்டால்தான் நம் சமூக-பொருளாதாரச் சக்கரம் சுழல்கிறது. இதில் குறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விமர்சனங்கள் உள்ளன.//

    ///இங்கு வாக்களிப்பதும், லாட்டரிச் சீட்டு வாங்குவதும் ஒன்றுதான். லாட்டரிச் சீட்டு வாங்குவது பொருளியல்ரீதியில் சரியான முடிவு இல்லை. ஆனாலும், அதில் உள்ள சுவாரஸ்யத்துக்காக லாட்டரிச் சீட்டு வாங்கலாம். அதேபோல், வாக்களிப்பது ஒரு சுவாரஸ்யமான வேலை என்பதால் பலர் அதில் ஈடுபடலாம். ///

    //எல்லோரையும் வாக்களிக்கச் செய்யப் பல முயற்சிகள் நடந்துள்ளன. அரசியல் கட்சிகள் வாக்களிக்கக் (தங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று நம்பி) காசு கொடுக்கின்றன. இதன் மூலம், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்வதை அவர்கள் உறுதிசெய்கின்றனர்.//

    ஆனால் இறுதியாக மட்டும்

    ///வாக்களிப்பது மட்டுமே சமூகப் பொறுப்பு இல்லை. நடுநிலையுடன் சிந்தித்து வாக்களிப்பதுதான் சமூகப் பொறுப்பு என்பதை நிலைநிறுத்த வேண்டும். இது மட்டுமே நாம் வாக்களிப்பதைப் பொருளியல்ரீதியில் நியாயப்படுத்தும். ///

  5. புரட்சி மட்டும் தான் தீர்வு என்று விளக்கமாக கூறிய பிறகும் புரட்சி எப்படி தீர்வு என்று கேட்டால் எப்படி? இந்த பதிவு புரட்சியை பற்றிய அடிப்படை புரிதலை வழங்குகிறது. இதிலிருந்து புரட்சி பற்றிய முழுமையான புரிதலுக்கு வந்துவிட முடியாது என்பதும் முதல் பின்னூட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. உங்களுடைய அனைத்து கேள்விகளையும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக்கொள்ளும்போது தான் முழுமையான புரிதலுக்கு வர முடியும். அதற்கு தோழர்களை தொடர்புகொண்டு விவாதியுங்கள்.

    • புரட்சினா என்ன எனக்கு அவ்வளவா தெரியாது சார் ஜெயலலிதா வ கூட அவங்க கட்சி கார்ங்க புரட்ச்சி தலைவினு சொல்லுராங்க ரஸ்யா ல மக்கள் தொழிலாலர்கள் எல்லாம் கூட்டமா போய் ஜார் மன்னர் குடும்பத்த கொன்னுட்டு மக்கள் ஆட்சிய மலர செஞ்சாங்கனு படிச்சு இருக்கேன் அது புரட்சி அப்ப்டிங்றாங்க 1 ஏக்கர் நிலத்துல 35 மூட்டை நெல் விளையவச்சது பசுமை புரச்சிங்றாங்க அத மாறி எனக்கு கொஞ்சம் விளக்கமா சொன்னாதன் புரியும் என்னா நான் அவ்வளவா புரட்சி பத்தி படிச்சது இல்ல அதான் கேட்டேன் ரஸ்யால மாறி கூட்டமா மக்கள் போயி பாராளுமண்றத்த முற்றுகை இட்டு இப்ப இருக்கிற அரசு அமைப்ப அடிச்சு நொருக்கி மாத்தலாம்னு சொல்ல வறிங்களா என்னனு தெரியல அப்பிடியே மாத்த நினைச்சாலும் அது கொஞ்சம் கஸ்டம் தான் ஏன்னா இங்க கிளைச் செயலாளர் ல இருந்து பொது செயளாலர் வரைக்கும் பிழைப்பு வாதிகள்தான் அது மட்டும் இல்லாம் ஜாதி மதம் மொழி இனம் எல்லாம் கட்ந்து மக்கள ஒன்னு சேர்க்கறது ரெம்ப கஸ்டம்

      • ரசியாவில் மாதிரி தான். அதை எப்படி செய்வது என்பதை விரிவாக தான் பேச வேண்டும். எல்லோரையும் பிழைப்புவாதிகள் என்று சொல்லிவிட முடியாது. சமூகத்தில் நல்லவர்கள் இல்லையா? நல்லவர்களும் பிழைப்புவாதிகளாக மாறக்காரணம் இந்த சமூக அமைப்பு தான். இந்த நிலையிலும் பெரும்பாண்மை மக்கள் நல்லவர்களாக தான் இருக்கின்றனர்.

        எல்லாம் கெட்டவர்கள், எனவே எதையும் மாற்ற முடியாது என்கிற வசனத்தை உலகத்தில் முதன்முதலில் கூறுபவர் நீங்கள் அல்ல ஜோசம். ஒவ்வொரு சமூக அமைப்பிலும் அனைவரும் அலுப்புடனும் சலிப்புடனும் கூறிய வார்த்தை தான் அது. உதாரணத்திற்கு மாக்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலில் இதைப்பற்றி ஒரு காட்சியே வரும். பாவெலும் தோழர்களும் தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிக்காக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் போது, தோழர்கள் கொடுத்த துண்டறிக்கைகளை கசக்கி வீசியெறிந்துவிட்டு எதையும் மாற்ற முடியாது என்று தொழிலாளிகள் சலிப்புடன் அந்த இடத்தைவிட்டு கிளம்புவார்கள். ஆனால் அதன் பிறகு உலகையே உலுக்கிய ரசியப்புரட்சி நடந்ததா இல்லையா?

        எனவே நாம் சலிப்படையாமல் சரியான பக்கத்தில் வந்து நிற்க வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இன்று நாம் ஒரு நவீன சமூகத்தில் வாழ்கிறோம் என்றால் அதற்கு காரணம் கோடிக்கணக்கான மக்கள் நடந்த்திய போராட்டங்கள் தான். எனவே மக்கள் தான் வரலாற்றை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றனர். மக்களால் அனைத்தையும் தலைகீழாக மாற்றியமைக்க முடியும்.

  6. //அரசின் எல்லா பேச்சுவார்த்தை விவரங்களும், வெளிநாட்டு ஒப்பந்தங்களும் முன்பே அதிகாரிகள் மட்டத்தினால் இறுதி செய்யப்பட்டு விடும், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் அமையும் பேச்சென்பது ஒரு சம்பிரதாயமே என ஈழப்பிரச்சனை தொடர்பான ஒரு பேட்டியில் நேரடியாகவே குறிப்பிட்டார் ப.சிதம்பரம். //

    2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்கம்,இயற்கை எரிவாயு எடுத்தல் -காடுகள்- மலைகள்- ஆறுகள் ஏலம் விடுவது, ஒப்பந்தம் போடுவது எல்லாம் அதிகாரிகள் மட்டத்திலேயே இறுதி செய்யப்பட்டுவிட்டது; பிரதமர்,அமைச்சர் பெருமக்கள் சும்மா பேருக்கு நாலு வார்த்தை பேசிவிட்டு கையெழுத்து போடத்தான் முடிந்தது, அவங்களுக்கு ஒண்ணியுமே தெரியாது, முடியாது பாவம் என்கிறீர்களோ..

    • எந்த முதலாளிக்கு கொடுக்கலாம் என்பதை வேண்டுமானால் தீர்மாகின்க்கும் இடத்தில் ஒருவராக அமைச்சர் இருக்கலாம். அதையும் உங்கள் பிரதிநிதி தட்டி கேட்க முடியாது. ஆனால் முதலாளிக்கு கொடுக்க வேண்டும் என்பதிலும் அதற்கான விதிமுறைகளை வகுப்பதிலும் அதிகாரம் படைத்திருப்பது ஒழுங்கு முறை ஆணையங்கள் தானே?

      மின்சார கட்டணத்தை தீர்மானிக்க அதிகாரம் இல்லை என ஜெ சட்டமன்றத்தில் அறிவித்தாரே?

      இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை மன்மோசன் சிங்கோ இல்லை மோடியோ ரூம் போட்டு யோசித்தா செயல்படுத்துகிறார்கள்?

      மாண்டெக்சிங் அலுவாலியாவும் ரகுராம் ரஞ்சனும் யார்? உங்க மக்கள் பிரதிநிதியா? பனவீக்கத்தை கட்டுபடுத்தவோ, வட்டிவிகிதத்தை உயர்த்தவோ அதற்காக அரசின் செலவினங்களை குறைக்க சொல்லவோ உங்கள் மக்கள் பிரதிநிதிக்க்கு இல்லாத அதிகாரம் இவர்களுக்கு ஏன் இருக்கிறது?

      • //எந்த முதலாளிக்கு கொடுக்கலாம் என்பதை வேண்டுமானால் தீர்மாகின்க்கும் இடத்தில் ஒருவராக அமைச்சர் இருக்கலாம். அதையும் உங்கள் பிரதிநிதி தட்டி கேட்க முடியாது. //

        அமைச்சரும் பிரதிநிதிதானே, அவரை அவரது கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள்கூட கேள்வி கேட்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா..?!

        // ஆனால் முதலாளிக்கு கொடுக்க வேண்டும் என்பதிலும் அதற்கான விதிமுறைகளை வகுப்பதிலும் அதிகாரம் படைத்திருப்பது ஒழுங்கு முறை ஆணையங்கள் தானே?//

        ஒழுங்கு முறை ஆணையங்கள் யாரால் நியமிக்கப்படுகின்றன.. அதிகாரிகளாலா..?

        //இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை மன்மோசன் சிங்கோ இல்லை மோடியோ ரூம் போட்டு யோசித்தா செயல்படுத்துகிறார்கள்?//

        மோடியைப் பற்றி தெரியாது, மன்மோகன் ரூம் போட வேண்டியதில்லை, போன் போட்டாலே போதும் உத்தரவு வந்துவிடும்..

        // மாண்டெக்சிங் அலுவாலியாவும் ரகுராம் ரஞ்சனும் யார்? உங்க மக்கள் பிரதிநிதியா? //

        இவர்கள் தாங்களாகவே போய் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்களா..?

        // பனவீக்கத்தை கட்டுபடுத்தவோ, வட்டிவிகிதத்தை உயர்த்தவோ அதற்காக அரசின் செலவினங்களை குறைக்க சொல்லவோ உங்கள் மக்கள் பிரதிநிதிக்க்கு இல்லாத அதிகாரம் இவர்களுக்கு ஏன் இருக்கிறது? //

        மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏடிஎம் இயந்திரத்தை திறக்கும் அதிகாரம் கூடத்தான் இல்லை.. என்ன சொல்லவருகிறீர்கள்..?!

    • ஒண்ணியுமே தெரியாது என்றோ, பாவம் அப்பாவிகள் என்றோ கூறவில்லை. தனக்கு அதிகாரம் இல்லை என்பதும், தான் கையெழுத்து போடுவதற்காக அமர்த்தப்பட்டிருக்கும் பொம்மை தான் என்கிற விசயமும் ‘மக்கள் பிரதிநிதிகள்’ என்கிற தலையாட்டி பொம்மைகளுக்கு நன்கு தெரியும் என்கிற போது அவர்களுக்கு எப்படி ஒண்ணியுமே தெரியாது என்று கூற முடியும்?

      • //தனக்கு அதிகாரம் இல்லை என்பதும்//

        நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் கேட்கும் கேள்விகள், தெரிவிக்கும் கண்டனங்கள், விமர்சனங்களுக்காக அவர்களை உச்சநீதி மன்றத்தால் கூட தண்டிக்க முடியாது.. அரசியல் சட்டம் இத்தகைய அதிகாரம் வழங்கியிருக்கிறது.. அதை மதிக்கும் அரசியல் கட்சி தலைமைகள் இல்லாவிட்டால் தலையாட்டி பொம்மைகள் தான் தேர்தலில் கட்சி வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்..

        • முதலில் பாராளுமன்றமே இந்த நாட்டிற்கு சொந்தமா என்பதை கூறுங்கள்?

        • //கேட்கும் கேள்விகள், தெரிவிக்கும் கண்டனங்கள், விமர்சனங்களுக்காக அவர்களை உச்சநீதி மன்றத்தால் கூட தண்டிக்க முடியாது.//
          இதெல்லாம் ஒரு அதிகாரமா ?

    • அம்பி,

      [1]முடிவு செய்வது [Decision Making] ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள், செயல்படுத்துவது அதிகாரவர்கம் என்பதையும் ,யார் நலனுக்காக இவர்கள் இயங்குகின்றனர் [பெரு முதலாளிகள் நலனுக்காக] என்பதையும் சரியாக சொன்னீர்கள்.

      [2]இலங்கைக்கு எதிரான UN ஒட்டு எடுப்பை புறகணித்த இந்திய அரசுக்கு வக்காலத்து வாங்கும் திருட்டு ப.சிதம்பர பேச்சுக்கு வினவு ஜால்ரா போடுது !

      [3]இலங்கைக்கு எதிரான UN ஒட்டு எடுப்பை புறகணிக்கும் தமிழர்க்கு எதிரான முடிவை எடுத்தது சோனி,ராகு ,மோகன்,சிதம்பர என்ற கொலை வெறி கும்பல் என்பதை வினவு ஏன் மறைக்க பார்க்குது ?

      //அரசின் எல்லா பேச்சுவார்த்தை விவரங்களும், வெளிநாட்டு ஒப்பந்தங்களும் முன்பே அதிகாரிகள் மட்டத்தினால் இறுதி செய்யப்பட்டு விடும், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் அமையும் பேச்சென்பது ஒரு சம்பிரதாயமே என ஈழப்பிரச்சனை தொடர்பான ஒரு பேட்டியில் நேரடியாகவே குறிப்பிட்டார் ப.சிதம்பரம். //

  7. //எழுத்தறிவை மூன்று சதவிகிதத்தில் இருந்து நூறு சதவிகிதமாக்க சோசலிச ரஷ்யா எடுத்துக்கொண்ட காலம் வெறும் பத்தாண்டுகள். புரட்சி நடந்து இருபதாண்டுகளுக்குள் ரசியாவில் வரிவடிவம் இல்லாதிருந்த நாற்பது தேசிய இனங்களின் (சிறுபான்மை இனங்கள் உட்பட) மொழிகளுக்கு வரிவடிவம் உருவாக்கப்பட்டது. நாடு முழுக்க கிராமங்களிலும் நகரங்களிலும் பெரிய நூலகங்கள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலின் காலத்தில், ஏழை நாட்டு மாணவர்களுக்கு அறிவு மறுக்கப்படக் கூடாது என்பதற்காக அறிவியல் நூல்கள் மிக மிக மலிவான விலையில் அவர்கள் மொழியிலேயே தயாரித்தளிக்கப்பட்டது. யுத்தத்தினால் ஆதரவற்றோராகிவிட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஏராளமான காப்பகங்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. அவர்களில் இருந்து பல ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் பின்னாட்களில் உருவானார்கள்.//

    புதிய ஜனநாயக இந்தியாவில் இவையெல்லாம் எத்தனை நாட்கள் நடக்கும்..?! அமெரிக்க, அய்ரோப்பிய முதலாளித்துவ ஏகாதிபத்தியங்கள் சும்மா இருக்குமா.. நாட்டின் பாதுகாப்புக்கே எல்லா வருமானத்தையும் செலவு செய்ய வைத்து இந்தியாவை சிதறடித்துவிடமாட்டார்களா..?

    • அவ்வாறு தலையிட்டால் அந்த ஏகாதிபத்தியங்களை இந்திய மக்கள் பார்த்துக்கொள்வார்கள். ஏகாதிபத்தியங்கள் எதிர்காலத்தில் தலையிடுமா என்கிற கேள்வி ஏன்? கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அது அவ்வாறு தான் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டுக்கொண்டிருக்கிறது, ஆனால் எங்கும் நிரந்தரமாக வெற்றி பெற்றதில்லை.

      கடந்தகாலத்தில், சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன மக்கள் ஏகாதிபத்தியங்களை ஓட ஓட விரட்டியடித்தார்கள். ரசிய மக்களை அடிமைப்படுத்த நுழைந்த பதிநான்கு ஏகாதிபத்திய, வல்லரசு நாடுகளை போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் ரசிய மக்களும் விரட்டியடித்தார்கள். வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்திற்கு செருப்படி விழுந்தது.

      இன்று ஈராக் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியங்களை தாக்கி பலவீனப்படுத்தி வருகிறார்கள். பிற நாடுகளின் உதாரணம் ஏன்? ஏகாதிபத்தியத்தின் நுழைவுவாயிலிலேயே அதை எட்டி உதைக்கிறார்கள் அமெரிக்க மக்கள். அமெரிக்காவில் மட்டுமல்ல இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் மக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகிறார்கள். முதலாளித்துவம் ஒழிக என்றும், நாங்கள் 99% என்றும் முழக்கமிட்டு ஏகாதிபத்திய கொள்கைகளை கண்டிக்கிறார்கள்.

      எனவே இந்தியாவின் புதிய ஜனநாயக சமூக அமைப்பில் ஏகாதிபத்தியங்கள் தலையிட்டால் அது இந்திய மக்களின் பிரச்சினையாக மட்டும் இருக்காது உலக மக்களின் பிரச்சினையாகிவிடும். இந்தியாவிற்குள் தலையிடும் ஏகாதிபத்தியங்களை இந்திய மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களும் எதிர்த்து முறியடிப்பார்கள்.

      எனவே அது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம், நீங்கள் கவலை கொள்ள வேண்டியதும் விவாதிக்க வேண்டியதும். இந்த போலி ஜனநாயக சமூக அமைப்பு ஏற்படுத்தும் பிரச்சினைகளையும், அதை எப்படி மாற்றியமைப்பது என்பதை பற்றியும் தான். இந்த சமூக அமைப்பை அடியோடு மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை (நியாயங்களை) நீங்கள் அறிந்துகொண்டால் அமைக்கப்படும் புதிய ஜனநாயக சமூகத்தில் உருவாகும் பிரச்சினைகளை தீர்ப்பது பெரிய பிரச்சினை அல்ல.

      • தவறாக எடுத்துகொள்ள வேண்டாம்.
        முப்பது ஆண்டு கால போராட்டத்திற்கு பின், குறைந்த பட்சம், ஒரு சட்டமன்ற தொகுதி, ஒரு கவுன்சிலர் தேர்தல் அளவில் கூட பொதுமக்களிடையே ஒட்டு மொத்த தேர்தல் புறக்கணிப்பிற்கு தங்களால் ஆதரவு திரட்ட முடியவில்லை.

        ஒரு குறிக்கோள் என்று இருந்தால் அதற்கு முதலில் சிறிய அளவில் இலக்குகள் நிர்ணயித்து ஒவ்வொரு சிறிய இலக்காக வெற்றி அடைந்து பின் உங்கள் குறிக்கோளை அடையலாம்.
        அப்படி பார்த்தால், 30 வருட போராட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் கூட மக்கள் ஆதரவு தங்களுக்கு கிடைக்கவில்லையே? ஏன் என்று யோசித்து பார்த்தீர்களா?

        தவறு மக்களிடம் இல்லை. ஒன்று, தங்களது சித்தாந்தத்தை நீங்கள் மக்களிடம் ஒழுங்கான முறையில் தாங்கள் விளக்கவில்லை. இல்லை, தங்களது சித்தாந்தம் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று மக்கள் அதை ஒதுக்கி தள்ளி விட்டனர்.

        ஒரு தொகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிப்பது என்பது ஒரு நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் செய்தி. அது நடந்தால் டி.ஆர்.பி. ரேடிங்குக்காக அலையும் மீடியாக்கள் அனைத்தும் அந்த ஒரு தொகுதியை நோக்கி படையெடுத்து வந்து கேட்பார்கள். தங்களது முயற்சிக்கு அது முதல் வெற்றியாக இருந்திருக்கும். மற்ற தொகுதி மக்களிடையே இதனை குறித்து ஒரு விழிப்புணர்வு வந்து இருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. ஏன் அப்படி நடக்கவில்லை, ஏன் மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை என்று தாங்கள் சுயபரிசோதனை செய்யும் நேரம் வந்து விட்டது.

        ஒரே ஒரு தொகுதியில் கூட தேர்தலை புறக்கணிக்க வேண்டும் உங்கள் கருத்துக்கு மக்கள் ஆதரவு பெற முடியாத நிலையில் ஒட்டு மொத்த நாட்டையும் தங்களது புரட்சி முறை ஆட்சி வரும் என்று நினைப்பது பகல் கனவு போல அல்லவா இருக்கிறது?

        ஒட்டு மொத்தமாக மக்களை தேர்தலை புறக்கணிக்க செய்யவேண்டுமானால் நீங்கள் இன்னும் நிறைய நிறைய உழைக்க வேண்டும். முதலில் மக்களின் பிரச்சினைகளுக்கு உங்களால் ஆனா தீர்வுகளை தர வேண்டும். உங்களால் மக்களுக்கு ஒரு பயன் உண்டென்றால் தான் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

        செய்வீர்களா?

        • எத்தனை ஆண்டுகளுக்குள் ஒரு தத்துவம் நடைமுறையில் நிரூபிக்கப்படுகிறது என்பதை வைத்து அதன் உண்மைத்தன்மையை அறிய முற்படுவது அறிவியல் அணுகுமுறை ஆகாது. அப்படி பார்த்தால் கட்சி ஆரம்பித்து வெறும் ஐந்தே ஆண்டுகளில் ரசியாவிலும், இருபத்தியெட்டே ஆண்டுகளில் சீனாவிலும் இதே தத்துவம் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டது.

          அறிவியலில் வானியல் என்கிற துறை தோன்றியவுடனே விஞ்ஞானிகள் செவ்வாய்கிரகத்திற்கு பறந்துவிட்டனரா? வானியல் என்கிற அறிவியல் துறை வரலாற்றில் மிகவும் பின்தங்கியது. அது கி.மு விலேயே தோன்றிவிட்டது. ஆனால் கி.பி யில் தான் உலகம் உருண்டை என்பது கண்டுபிடிக்கப்படுகிறது, அப்போதும் உலகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
          அல்லது கி.மு வில் தோன்றிய வானியல் துறை இத்தனை நூற்றாண்டுகளாகியும் கோபர்நிகஸ் காலத்தில் கூட செவ்வாய் கிரகத்தை பற்றி ஒன்றையுமே கண்டறியவில்லை என்பதால் ஒன்று கோபர்நிகஸ் வானியலை சரியாக விளக்கவில்லை அல்லது வாணியல் என்கிற அறிவியலே தவறானது என்கிற முடிவுக்கு வருவோமா?

          பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது, முழு பிரபஞ்சத்தை பற்றியும் இப்போதே விளக்கினால் தான் அறிவியலை ஏற்றுக்கொள்வேன் என்று கூற முடியுமா? அறிவியல் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

          இத்தனை ஆன்டுகளுக்குள் இத்தனை கண்டுபிடிப்புகளை செய்தால் தான் அறிவியலை ஏற்றுக்கொள்வேன் என்று எப்படி சொல்ல முடியாதோ அப்படி தான் மார்க்சியத்தையும் இத்தனை ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தினால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று மதிப்பிடக்கூடாது. அது சரியா இல்லையா, அறிவியலா அறிவியலுக்கு புறம்பானதா என்பதிலிருந்தே மதிப்பிட வேண்டும்.

          எனவே மார்க்சியம் சரியானது. புரட்சிகர அமைப்புகளின் நடைமுறையும் முழக்கங்களும் சரியானவை. போலி ஜனநாயகத்தேர்தல் தவறானது. எனவே அதை புறக்கணிப்பது தான் சரியானது.

        • நீங்கள் சொல்வதை வினவு தோழர்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். நான் சொல்வதை நீங்களும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

          எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ளாதவர்கள் தெரிந்தே வாக்களிக்கிறார்கள்.ஒட்டு போடுவது சரி; நான் ஓட்டு போடுவதன் மூலம் இவை இவைகளை சாதிக்க முடியும்; என்று தான் ஓட்டு போடுவதன் நியாயத்தை பேசமுடியாமல், மக்கள் பெருமளவில் ஓட்டுபோடுகிறார்கள் அது இது என்று சப்பைகட்டு கட்டுகிறார்கள்.

          அவர்களுக்கு புரியவைக்க நீங்கள் சொல்வது போல வினவு இன்னும் உழைக்க வேண்டும் என்பது உண்மையே

  8. ராஜா, கட்டுரை எல்லாம் சூப்பரு. ஆனா சோவியத் யூனியனின் லெனின், ஸ்டாலின் அந்தநாட்டை அமெரிக்காவை விட பிரமாதமாக்கிட்டாங்கன்னு சொன்ன பாரு, அங்கதான் ஃபேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்காயிருச்சு. அதுனால நீ இன்னா பண்ணு, எப்படி இந்தியா மோசமாயிருச்சுங்கறத 5000, 10000 வார்த்தைல எழுதினயோ அதே மாரி அவ்வளவு வார்த்தைகளை உபயோகிச்சு விஸ்தாரமா ஸ்டாலினோட சோவியத்த பத்தி எழுதேன்!

    • புரட்சிக்கு முன்னர் பசி பட்டினில் இருந்த நாடு புரட்சிக்கு பின்னர் அமெரிக்காவுக்கு விஞ்சும் அளவு அளவு வளர்ந்த்தா இல்லையா? குறுகியகாலத்தி எப்படி சாத்தியமானது அது? முதல் உலகப்போரின் தோற்ற ஜாரின் ரஷ்யா இரண்டாம் உலகப்போரின் ஹிட்லரை தோற்கடித்ததே எப்படி?

      ஊருக்கே தெரிஞ்ச சமாச்சாரம் தெரியலயா? போங்க தம்பி கொஞ்சம் பொது அறிவு வளத்துக்கோங்க…

      • மனோஜ் அவர்களே,

        //புரட்சிக்கு முன்னர் பசி பட்டினில் இருந்த நாடு புரட்சிக்கு பின்னர் அமெரிக்காவுக்கு விஞ்சும் அளவு அளவு வளர்ந்த்தா இல்லையா? //

        அது சரி, அதற்கு அப்புறம் ஏன் புரட்சி ஆட்சிக்கு மக்களிடம் ஆதரவு குறைந்தது?
        ஒன்றிணைந்த USSR ஏன் சிதறியது?

        பாரதிராஜாவின் படத்தில் ஒரு பதினெட்டு வயது கதாநாயகனும், கதாநாயகியும் கைகோர்த்து கொண்டு கடலோரம் நடப்பதோடு எண்டு கார்டு போட்டு கதையை முடிப்பது போல இருக்கிறது தாங்கள் சொல்வது. அப்புறம் என்ன நடந்தது என்று பார்த்தால் அவர்களின் வாழ்வு எவ்வளவு போராட்டம் நிறைந்தது என்று தெரியும். அது போல நீங்கள் அமெரிக்காவை விஞ்சும் அளவு வளர்ந்த ரசியா அப்புறம் ஏன் இப்படி ஆனது? கருத்துரிமை, ஜனநாயகம் என்ற அளவு கோள்களில் ரசியா, சீனா எந்த அளவில் உள்ளது?

        சற்று விளக்கவும் நண்பரே,

        • பஞ்சை பராரிகளான தொழிலாளிவர்க்கம் முதலாளிவர்க்கம் போல் காலம் காலமாக அதிகாரம் செய்து பழகியது அல்ல.அதுபோல பாசிசத்துக்கு எதிரான போராட்டதில் பல தோழர்களை கட்சி இழந்தது. இது போன்ற பல காரணங்களால் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை பொறுப்புவரை முதலாளிகளி கையாட்கள் ஊடுறுவினார்கள்…முதலாளிகளிடம் தங்கள் அதிகாரத்தை இழந்தார்கள். அதன் பின்னர் நீங்கள் சோவியத் ஒரு ஏகாதிபத்தியமாக மாறி சீரழிந்தது.

          உங்கள் வாதப்படியே பிரெஞ்சு புரட்சியில் மலர்ந்த முதலாளித்துவ ‘ஜனநாயகம்’ கூட தோல்வியுற்று மீண்டும் சர்வாதிகாரம் திரும்பியது.அதை முதலாளித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாத தனம் என்று சொல்ல முடியாமா? பார்பன எதிர்ப்பு களப்பிரர்களின் ஆட்சியை தோல்வியுற்று தான் சோழர்களின் பார்பன ஆட்சி வந்தது இவ்வளவு ஏன் திப்பு சுல்தான் கூட தோல்வியடைந்தார், ஆர்காட்டு நவாப் தோல்வியடையவில்லை.எனில் வெற்றி பெற்றவர் தான் சிறந்தவரா?இந்த அளவுகோல் சரியா?

          நாட்டுமக்களுக்க்கு வேலை,உணவு, மருத்துவம்,கல்வி என அனைத்தையும் பூர்த்தி செய்த அரசு சோவியத் அரசு தான்.

          மக்கள் நலனில் அக்கறை இருக்கும் ஒருவர் ஏன் தோற்றது என்பதை தான் ஆராய்ந்து கழைந்துகொள்ள முயலுவார்.
          ———–
          உயிர் வாழும் உரிமையே இந்த முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் இல்லை.இதுல கருத்துரிமையை வெச்சு நாக்கு வழிக்கவா? நீங்க வேலை பார்க்கும் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்கலாம் என்று பிரச்சாரம் செய்து பாருங்களேன் அப்போது தெரியும் முதலாளிகளின் கருத்துரிமை பற்றி.

          கருத்துகளை பரப்பும் பத்திரிகைகள் முதலாளிகளின் பாக்கெட்டில் இருக்கிறது. பிறகு எங்கிருந்து கருத்துரிமை?

          இம் என்றால் அவதூறு வழக்கு பாயும் திருநாட்டில் இருந்துகொண்டு, மோடிக்காக பல பத்திரிகையாளர்களை துரத்தியடித்த திருநாட்டில் இருந்துகொண்டு கருத்துரிமை என்று பேசுவது காமெடியாக இருக்கிறது.

          சவுக்கு என்று ஒரு தளம் இப்போது தடை செய்யப்பட்டிருக்கிறதே தெரியுமா?

          கருத்துரிமை காவலர்கள் மாவோயிஸ்டுகளின் கருத்துகளை ஏன் தடை செய்கிறார்கள். கருத்தோடு கருத்தை மோதவிட்டு பார்க்க வேண்டியது தானே?

          இன்று மாவோயிஸ்டுகளின் கருத்துக்கள் தடை செய்திப்பது போன்று புரட்சிக்கு பின்னர் முதலாளிகளின் பத்திரிகைகள் தடை செய்யப்படும். ஜனநாயகம் என்பது வர்க்க சார்புடையது தான்.சோவியத்திலும், செஞ்சீனத்திலும் அது தான் நடந்தது.

    • நண்பரே ,

      கட்டுரைல தரவுகளின் அடிப்படையில் முதாளித்துவ அமெரிக்காவை விட சோசலிச சோவியத் ருசியா முன்னேறி இருந்ததுன்னு சொல்றாங்க . நீங்களும் ஏதாவது தரவுகள வைத்து மறுக்கலாம். அத விட்டுட்டு சும்மா குண்டக்க மண்டக்க பேசிட்டு இருந்த எப்படி.

  9. நீங்க எந்த கட்சி சேர்ந்தவர் என்பது எனக்கு தெரியாது
    ஆனால் இந்த கட்டுரை படிக்க நல்லாவே இருகுகு
    ஆனா கடைசியா இன்னாதான் சொல்ல வற்றீங்க அது மடுடும் புரியல
    நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வெறும் உண்ணா விரத போராட்டத்தோடு
    முடியகூடிய விசயம் இல்லை சம்மா இருப்பவர்களை உசுப்பேத்தி
    இழுத்து விடும் இந்த வேலை தேவையா எனுறு யோசியங்கள்

  10. உன்ன போல் ஒருவரே ,

    //நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வெறும் உண்ணா விரத போராட்டத்தோடு
    முடியகூடிய விசயம் இல்லை//

    அத தான்யா நாங்களும் சொல்றோம். ஆக பெரும்பான்மையான மக்கள் 2 வேலை உணவுக்கே கஷ்டப்படும் போது அவங்கள உண்ணாவிரத போராட்டத்துக்கு வர சொல்ல முடியுமா ?

    //ஆனா கடைசியா இன்னாதான் சொல்ல வற்றீங்க அது மடுடும் புரியல//

    அப்பெரும்பான்மையான மக்களை வழிநடத்தி சென்று ஆயுத போராட்டத்தால் மட்டுமே இந்த அரசமைப்பை வீழ்த்தி புதிய மக்கள் அரசமைப்பை உருவாக்க முடியும். உழைக்கும் மக்களுக்கு இழப்பதற்க்கு அவர்களின் உயிரைத் தவிர வேறெதும் இல்லை ஆனால் பெறுவதற்கோ இவ்வுலகமே இருக்கின்றது .

    அதே போல புரட்சியொன்றும் கடைச்சரக்கல்ல. அப்படியே போய் அள்ளி கொண்டு வர. அல்லது தான்தோன்றித்தனமாகவும் வந்து விடாது . அதற்கென்று ஒரு கட்சி வேண்டும் . அதற்கென்று ஒரு கோட்பாடு வேண்டும் . அது அறிவியல்பூர்வமாகவும் இருக்க வேண்டும். அதை கண்னுங்கருத்த்துமாக செயல்படுத்த்த வேண்டும் . பாட்டாளிகளும், விவசாயிகளும் மற்றெல்லா உழைக்கும் மக்களையும் சேர்த்து ஒரு மக்கள் திரள் ஒன்றை கட்டமைக்க வேண்டும். நடப்பு அரசியலையும் , உலக நடப்பையும் ஊர்ந்து அவதானித்து புரட்சியை வழிநடத்த வேண்டும்.

    நன்றி

    • ஆயுதம் ஏந்துபவர்கள் ஆட்சியை பிடித்த பின் ஜனநாயக ஆட்சி கொடுப்பார்கள் என்று என்ன நிச்சயம்?
      ஆயுதம் ஏந்திய புரட்சியை செய்து தற்போதைய எல்லா அரசியல்வாதிகளையும் கொன்றோ அல்லது சிறையில் அடைத்தோ விடுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அதன் பிறகு எதிர்ப்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையில் உங்கள் மனதில் சர்வாதிகார வெறி புகுந்தால் நாடு என்ன ஆகும்?

      ஆயுதம் ஏந்திய புலிகளின் நிலை என ஆனது?

      முதலில் உங்கள் புரட்சி ஆட்சி முறைக்கு சிறந்த மாதிரி வடிவமாக எந்த நாட்டை காட்டுகிறீர்கள்?
      நீங்கள் காட்டும் நாடுகளில் ஜனநாயக அளவுகோலில் மக்கள் மகிழ்ச்சியாக நிம்மதியாக உள்ளார்களா?

      பதில் தாருங்கள்?

  11. இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது சரி என்று உங்கள் உள்ளுணர்வு சொல்வதால் தான் அது உங்களுக்கு படிக்க நல்லா இருக்கு. இந்த பிரச்சனை வெறும் உண்ணாவிரதத்தோடு முடியும் விசயமும் அல்ல என்பது வரை புரிந்துகொன்டிருக்கிறீர்கள். அதையும் தாண்டி ஏதோ செய்தால் தான் பிரச்சனை தீரும் என்பது தான் சரி.

    அதுக்கு புரட்சி தான் தீர்வு என்று வினவு சொல்கிறது.அது தேவை என்பதால் தான் அப்படி சொல்கிறது.தேவை இல்லை என்று நீங்கள் கருதினால் இந்த பிரச்சனைகளை எப்படி தீர்க்கலாம் என்று சொல்லுங்கள்?

    • நான் சொல்றேன் மனோஜு, நோய் நாடி, நோய் முதல் நாடி ங்கற மாதிரி, மனுசனோட குணம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த மாதிரி தீர்வை யோசிக்கணும். நீங்க 5 பேரு கூடி நின்னுக்கிட்டு, காலேல யானை போறத பாத்துட்டு, இதோ ராத்திரியோட மிச்ச இருட்டு இந்தா இங்க நடந்து போயிட்டிருக்குன்னு சொல்லப்படாது

      எல்லாரும் ஒரே மாதிரி திறமையோடயும், குணாதியசத்தோடயும் பிறக்கரதில்லை. அதுனால முதல்ல எல்லாரும் சமம் கிடயாது. அப்ப ஒரு தனிமனுசனுக்கு அவனோட திட்டங்களை, எண்ணங்களை செயல்படுத்தறதுக்கான ஆடுகளமா இந்த பூமி இருக்கணும். இப்ப நீங்களும் கம்யூனிசம், புரட்சின்னு முழுமூச்சா இருக்கறீங்க. போராட்டம்லாம் நடத்தறீங்க. ஒண்ணும் பேரமாட்டேங்குதே.

      • /எல்லாரும் ஒரே மாதிரி திறமையோடயும், குணாதியசத்தோடயும் பிறக்கரதில்லை. /

        ஆக தீர்வு என்று எதுவும் இல்லை என்று கூறவருகிறீர்கள். உங்கள் வாதப்படி விவசாயிகள் கொத்து கொத்தாக சாவதோ இல்லை முதலாளித்துவ பயங்கரவாதத்தால் தொழிலாளிகள் கொல்லப்படுவதற்கோ காரணம் அவர்கள் கொல்லப்படுவதற்காக திறமையில்லாமல் பிறந்திருக்கிறார்கள் அப்படிதானே. உனக்கு வெட்கமாக இல்லையா இதை சொல்லுவதற்கு?

        /அதுனால முதல்ல எல்லாரும் சமம் கிடயாது. /

        வினவு தோழர்களும் அதை தான் சொல்கிறார்கள். உழைச்சி சாப்பிடுபவனும் உக்காந்து சாப்பிடுபவனும் சமம் கிடையாது. ஆனால் இங்கே நிலை எப்படி இருக்கிறது உக்காந்து தின்பவன் சொகுசா இருக்கான் உழைப்பவன் கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கான். ஏன் இப்படி? பெரும்பான்மையான் உழைக்கும் மக்கள் இந்த சமூக அமைப்பை அப்படியே தலைகீழாக புரட்டி போட்டால் தான் அவர்களுக்கு வாழ்வு பிறக்கும்.

        /அப்ப ஒரு தனிமனுசனுக்கு அவனோட திட்டங்களை, எண்ணங்களை செயல்படுத்தறதுக்கான ஆடுகளமா இந்த பூமி இருக்கணும்./

        எப்படி ‘சாராய கடன்காரன்’ விஜய் மல்லையா,’வரி எய்ப்பு’ நோக்கியா , ‘கஞ்சா வியாபாரி’டாடா நீரா ராடியா மாதிரி தனிமனித திட்டங்களை செயல்படுத்த ஆடுகளமா இருக்கனுமா?

        • அருமையான தீர்வு இருக்கு ராஜா, அது நடைமுறைலயும் இருக்கு. நீங்கதான் கண்ண மூடிக்கிட்டு இருட்டா இருக்கு, இருட்டா இருக்கு, வீட்டை கொளுத்து வெளிச்சம் வரட்டும்னு சொல்றேள்.

          தண்ணீர் தன்மட்டத்தை தானே சென்றடையும். அது போல சத்வ, ரஜோ, தமோ குணங்களாக சிதறுண்டிருக்கும் இந்த பிரபஞ்சமானது, இயங்கியும், முயங்கியும், சேர்ந்தும், விலகியும், அரவணைத்து கொண்டும். அடித்து கொன்று கொண்டும் தனக்கான சமநிலையுடன் இருந்து வருகிறது. இதுக்கு dynamic equilibrium ன்னு பேரு.

          இப்ப அமெரிக்காதான் உலகத்துக்கே சண்டியர். அவனோட தற்காப்பு செலவு எவ்வளவு தெரியுமா? அவனுக்கு பின்னால் இருக்கு அடுத்த 10 நாடுகளின் தற்காப்பு செலவை மொத்தமாக கூட்டினாலும் பக்கத்துல வரமுடியாது. அவன் smart bomb வெச்சி ஊடுகட்டி அடிச்சான்னா எல்லாருக்கும் சங்குதான். அப்பேர்ப்பட்ட அமெரிக்கால டாலர் நோட்டை தனியார்தான் அடிக்கிறான். ஆயுதங்களையும் தனியார்தான் பண்றான். அவாள்ளாம் GOD ஐ கும்புடறவா. அதாவது Gold, Oil, Drug. இந்த மும்மூர்த்திகள்தான் அவாளுக்கு எல்லாம். அவா ஏன் சகல ஐஸ்வர்யத்தோடயும் இருக்கா? மனுஷாளோட குணம் தெரிஞ்சி அதுக்கேத்தாப்புல system வச்சிருக்கா

          அதுனால சக்கரம்லாம் ஏற்கனவே கண்டுபிடிச்சி தேர் சர்வ அலங்காரத்தோட ஜோரா வந்துண்ட்ருக்கு. இன்னும் நீங்க சக்கரம் இப்படி இருக்கப்படாது, வட்டம் சரிப்பட்டு வராது, கொஞ்சம் வீலை பெண்டு எடுக்கணும் அப்படின்னு சொல்லிண்ட்ருந்தேள்னா எப்படி? வாங்கோ நாம முன்வரிசைக்கு போயி நன்னா சேவிச்சுக்கலாம்!!!

  12. நீங்க சொல்றது எல்லாம் சரி ஆனா உங்க கொள்கைக்காக போராடுபவர்களின்

    உயிருக்கம் அவர் கிடும்பத்திற்கும் எந்த பாதகமும் இல்லாமல் பிற மக்களுகுகும்
    எந்த பாதகமும் இல்லாமல் போராடும் வழியை கூறுஙகள்
    இநுதிய சுதந்திரதுதிறுகு பல ஆயிரம் பேர் தன் உடல் உயிர் உடமை அத்தனையும்
    இழந்தா்கள் ஆனால் அவற்றுக்கு இந்த காலத்தில் என்ன மரியாதை என்று எல்லாருக்கும் தெரியும்

    • வினவு தோழர்கள் சொல்வது சரி என்று படுகிறது ஆனால் உயிருக்கும் குடும்பத்துக்கும் பாதகம் இல்லாமல் போராட வேண்டும் என்கிறீர்கள். சரி தான். நியாயமான் விருப்பம் தான்.

      வினவு தோழர்கள் துப்பாக்கிகளோடு காட்டில் இல்லை.நம்முடன் தான் வாழ்கிறார்கள். பேருந்துகளில் ரயில்களில் வெளிப்படையாக தான் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து போராடினால் உயிர் போய்விடும் என்று அச்சபடுவதற்கு அடிப்படையே இல்லை.

      நீங்கள் கூறுவதை வைத்து உயிருக்கு பாதகவில்லாம்ல் போராடும் வழியை கூறினால் நீங்கள் போராட தயாராக இருப்பதாக நம்புகிறேன்.அப்படிதானே?

      • ”இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரப்படாது, நானும் வரமாட்டேன்.. பேச்சு பேச்சாவே இருக்கணும்..” என்ற வ.வா.ச. தலைவர் கொள்கைப்படி, பார்ப்பானைத் திட்டுவது மட்டுமே உயிருக்கு பாதகமில்லாமல் போராடும் ஒரே வழி.. அதுவே பெரியார் பிறந்த மண்ணில் புரட்சி என்று நம்பப்படும் நம்பகமான வழி..

  13. நீங்கள் கை நீட்டும் அனைவரும் தவறானவர்கள் என்றால் நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும் நீங்கள் நல்லவராக இருந்தால் ஜனநாயக முறைப்படி
    தேர்தலில் நின்று ஜெயித்து மக்களுக்கு நல்லது செய்யலாமே, ஆம் ஆத்மி ஊழலுக்கு எதிரான கொள்கையை முன்னெடுத்து சென்றதால் கட்சி ஆரம்பித்த 9 மாதத்தில் டெல்லி ஆட்சியை கைப்பற்றியது, நீங்களும் நல்ல கொள்கையோடு ஜனநாயக முறைப்படி வந்தால் இந்திய மற்றும் தமிழக மக்கள் உங்களை அமோக ஆதரவுடன் வெற்றி பெற செய்வார்கள் , பிறகு மக்களுக்கு நல்லது செய்யலாமே, ஆயுத புரட்சி என்று பலரை பலி வாங்கி உங்கள் கொள்கையை நிலைநாட்டிய பிறகு நல்லது செய்வோம் என்பது நியாயமா? ஜனநாயகத்தில் நேர்மையானவர்களுக்கு மக்களின் ஆதரவு எப்போதுமே உண்டு

    • நீங்கள் சொல்வது 100% சரி. ஜனநாயகத்தில் நேர்மையானவர்களுக்கு மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு தான்.

      இங்கு கேள்வி இந்தியாவில் நிலவுவது ஜனநாயகம் தானா? இந்த கட்டுரையிலேயே ஒரு வேட்பாளரோ அவரது சின்னமோ மக்களிடம் அறிமுகமாகுவதற்கு சில பல கோடிகள் தேவைபடுகிறது என்பதையும் இந்தியாவில் பெரும்பாண்மை மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

      அடுத்து அப்படி வெற்றி பெற்றாலும் அந்த மக்கள் பிரதிநிதி அதிகாரம் இல்லாத டம்மி பீசாக தான் இருக்க முடியும் என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கட்டுரையை மீண்டும் ஒரு படித்து அதில் கூறப்பட்டுள்ளது தவறு என்று நீருபித்துவிட்டு தேர்தலில் நிற்க கூறலாமே?

      • நீங்கள் ஒட்டு போடாதே, ஒட்டு போடாதே என்று சொல்வதற்கு செய்யும் செலவை, நேர்மையானவர்களை போட்டியில் நிறுத்தி எங்களுக்கு ஒட்டு போடுங்கள் என்று நீங்கள் போராடலாமே? வார்டு கவுன்சிலர் அளவில் போட்டியிட எந்த பெரிய முதலீடும் தேவையில்லையே. உழைப்பு இருந்தாலே தெருத்தெருவாக, வீடுவீடாக சென்று மக்களின் அன்றாட பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை பதவியில் இல்லாதபோதே போராடி தீர்த்து வைக்கலாமே, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருபவர்களுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்களா என்ன?

    • தங்கள் கருத்தை நாம் அமோதிக்கிறேன்.
      இதை தான் ஆரம்பத்தில் இருந்து வினவில் ஒட்டு போடாதே, ஒட்டு போடாதே என்று முழங்கும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

      ஆக்கபூர்வமாக யோசிப்பதை விடுத்து கீறல் விழுந்த டேப் ரெகார்டர் போல ஒட்டு போடாதே, புரட்சி செய், ஒட்டு போடாதே, புரட்சி செய் என்று பிரச்சாரம் செய்தால் மக்கள் நம்பி விடுவார்களா?

      புரட்சி ஆட்சிக்கு ஒரு மாதிரி வடிவம், மக்கள் கண்களுக்கு தெரிய வேண்டும். முதலில் ஒரு வார்டு கவுன்சிலர் பதவியையாவது பிடித்து மக்களுக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் நேர்மையானவராக, திறமையானவராக இருக்கும்பட்சத்தில் மக்கள் உங்கள் குழுவிற்கு மேலும் மேலும் ஆதரவை தருவார்கள்.

      மக்களுக்கு நீங்கள் பயன்பட வேண்டும். இல்லையேல் எல்லா கோஷமும் வெற்று கோஷம் தான்.

  14. எனக்கு உங்கள் கருத்துகளின் மீது ஈடுபாடு இருந்தாலும் நீங்கள் எதிர்க்கும் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறேன். பணம் நிறைய சம்பாதிக்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமானால் இந்த சந்தையில் இருந்து நான் தார்மீக ரீதியில் வெளியேற வேண்டுமா?

    அதாவது பொதுவில் சோசலிசத்தை விரும்பினாலும் முதலாளித்துவ கூறுகளை அவரவர் நலனுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளும்படிதான் இன்றைய வாழ்க்கை முறை அமைந்துள்ளது. உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

  15. கார்த்திக்.
    நீங்கள் புரட்சிகர கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறீர்கள்,சோசலிச சமூகம் தான் சரி அத்தகைய சமூக அமைப்பை தான் உருவாக்க வேண்டும் என்கிறீர்கள்.
    சரி ஏன் புரட்சிகர கருத்துக்களையும், சோசலிசத்தையும் ஏற்றுக்கொண்டீர்கள்?

    முதலாளித்துவம் தவறு என்பதாலும் சோசலிசம் சரி என்பதாலும் தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறீர்கள், சரியா?

    எனில் உங்களுடைய கேள்விக்கு வெளியிலிருந்து யாரும் பதிலளிக்க வேண்டியதில்லை, நீங்களே யோசித்துப்பாருங்கள்.

    • வினவில் சில தினங்களுக்கு முன் vinavu home page ல் முதலாளிகளீன் விளம்பரங்கள் ஜோலித்ததே அதற்கு என்ன சொல்கின்றீர் ?

      • தாங்கள் ஏதேனும் பலான தளங்களுக்கு சென்று திரும்பியிருந்தால் அதற்கு வினவு தளமா பொறுப்பு?

        • பார்ரா ,

          இன்டர்நெட்[World Wide Web]அய் கண்டுபிடித்த Tim Berners-Lee தப்பை கண்டு பீடித்துட்டார் !

          Screen சாட் அய் வினவுக்கு அனுப்பி உள்ளேன் !

          • நன்றி வினவு . technical trouble shouting செய்ய உதவியதற்கு வினவுக்கு மிக்க நன்றி.
            I will try my best to delete the tool bar from my system through control panel add/remove program.

            vinavu emails me://நீங்கள் ஏதாவது ஒரு இணைய தளம் சென்று அறிந்தோ அறியாமலோ ஏதாவது ஒரு டூல்
            பாரை டவுண் லோடு செய்து விட்டால் அது உங்களது பிரவுசரில்
            இறங்கிக்கொள்ளும். பிறகு அது நீங்கள் பார்க்கும் இணைய தளங்களில்
            அவர்களுடைய அல்லது அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் விளம்பரங்களை
            காண்பிக்கும். இதற்கும் வினவு தளத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
            நாங்கள் எந்த விளம்பரங்களையும் எப்போதும் போட்டதில்லை,போடுவதில்லை. எனவே
            நீங்கள் இது போன்ற டூல் பாரை உங்களுக்கு தெரியாமலேயே இறக்கும் தளங்கள்
            குறித்து கவனமாக இருக்க வேண்டும். நன்றி//

  16. மிக அற்புதமான கட்டுரை…

    ஆனாலும் சில நெருடல்கள்..

    //நாம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்குமான ஆணிவேர் தனிச் சொத்துடைமைதான்.//

    தனி சொத்துடமை என்பது இருந்தால் தான் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்கிற உத்வேகம் வரும். நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்றெல்லாம் கூறினால் யாரும் உழைக்க முன்வரமாட்டார்கள். நிலம் வாங்கி நம் இஷ்டப்படி வீடு கட்டி கொண்டு வாழலாம் என்கிற நிலை இருந்தால் தான், உழைக்க வேண்டும் என்கிற ஆசை வரும்.

    //பெண்ணடிமைத்தனம், வறுமை, மதம் என எல்லா சிக்கல்களும் தனியுடைமையால்தான் உருவாகின்றன.//

    பெண்ணடிமை தனத்திற்கும் தனி சொத்துடைமைக்கும் என்ன தொடர்பு. ஒரு ஆண் ஒரு பெண்ணை ஆதிக்கம் செய்ய கூடாது. அதே போல் ஒரு பெண்ணும் தேவை இல்லாமல் பெண்ணியம் பேச கூடாது. இது தவிர பெண் என்பவள் தன் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் சில விஷயங்களில் அடி பணிந்து தான் போக வேண்டும். தேவையில்லாமல் இந்த சமுகத்தில் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் காப்பதில் பெண்ணுக்கு தான் முக்கிய பங்குண்டு என்பதை உணர வேண்டும்.

    • தனிச்சொத்துடைமை இருந்தால் தான் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்கிற ஆர்வம் வரும் என்றால், உலகில் பெரும்பாண்மை மக்கள் தனிச்சொத்துடைமை இல்லாதவர்கள் தான், ஆனால் உலகம் சுறுசுறுப்பாகத்தானே இருக்கிறது?

      நமது நாட்டையே எடுத்துக்கொள்வோம், 90% மக்களுக்கு பெரிதாக தனிச்சொத்துடைமை என்று ஒன்றும் இல்லை. இந்திய மக்களில் பெரும்பாண்மையானவர்கள் விவசாயிகள். விவசாயிகள் அனைவருமே காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ஐந்து ஆறு மணிக்கெல்லாம் வயல்வெளிகளில் இறங்கி வேலைசெய்கிறார்கள். மாலை சாயும் போது தான் வீடு திரும்புகிறார்கள். இப்படி கடுமையாக உழைக்கும் பெரும்பாண்மை விவசாயிகளுக்கு துண்டு நிலம் கூட சொந்தமாக இல்லை. ஆனால் நூறு, ஆயிரம் ஏக்கர் என்று நிலங்களை குவித்துவைத்துக்கொண்டிருக்கும் பன்ணையார்களும், நிலப்பிரபுக்களும் சொத்துடைமையாளர்கள் என்பதாலேயே என்றாவது வயலில் இறங்கி வேலை செய்திருக்கிறார்களா?

      ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளை எடுத்துக்கொள்வோம். அவர்களுக்கு தனிச்சொத்து என்பதே இல்லை. ஆனால் அவர்கள் தான் முழுச்சமூகத்தையும் பராமரிக்கிறார்கள். தினமும் ஆலையை இயக்குவதும், உற்பத்தியை பெருக்கி ஒட்டுமொத்த சமூகத்தையும் முதலாளிகளையும் சேர்த்து பராமரிப்பதும் சொத்துடமைகள் எதுவுமற்ற தொழிலாளிகள் தான். சொத்துடைமையாளனாக இருக்கும் காரணத்தினாலேயே முதலாளி எந்த நாட்டிலாவது உழைப்பில் ஈடுபட்டிருக்கிறானா?

      உடைமைகள் எதுவுமற்ற விவசாயிகளும், தொழிலாளிகளும் பிற உழைக்கும் மக்களும் தான் உண்மையில் உழைக்கிறார்கள். அவர்களால் தான் இந்த சமூகமே இயங்குகிறது. தம்முடைய உழைப்பால் தம்மை மட்டுமின்றி உழைக்காமல் உட்கார்ந்துகொண்டிருக்கும் சோம்பேறிகளான சொத்துடமையாளர்களையும் பராமரிப்பவர்கள் இந்த உழைக்கும் மக்கள் தான்.

      இவ்வாறு தனிச்சொத்துடைமையை மூலதனமாக வைத்துக்கொண்டு உழைக்காமல் உட்கார்ந்து திங்கும் சிறு கூட்டத்தால் தான் உழைக்கும் மக்களுக்கு அனைத்து சமூக, பொருளாதார பிரச்சினைகளும் எழுகின்றன. சோம்பேறிகளின் கைகளில் இருக்கும் இந்த தனிச்சொத்துடைமை தான் உழைக்கும் மக்கள் வறுமையிலும் அனைத்து துன்பதுயரங்களிலும் உழல காரணமாக இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு வருகின்ற பிரச்சினைகளில் ஒன்றாவது முதலாளிகளுக்கு வந்ததுண்டா? என்றாவது முதலாளிகள் ஏழைகளை போல வறுமையில் வாடியதுண்டா? அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காக தூக்குமாட்டிக்கொண்டு செத்தது தான் உண்டா? இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் இலட்சக்கணக்கில் தற்கொலை செய்துகொண்டவர்கள் விவசாயிகளா முதலாளிகளா?

      எனவே தனிச்சொத்துடைமை இருந்தால் தான் மக்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள் என்கிற வாதம் தவறானது.

      தனிச்சொத்து வாரிசுரிமையாக கைமாற்றிக்கொடுக்கப்படுவது பெண் மூலம் தான். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் தன்னுடைய வாரிசுகளுக்கே போய் சேர வேண்டும் என்று நினைப்பதால் தான் ஆண் ‘சட்டப்படி’ ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். தனிச்சொத்துடைமைக்கு பொருத்தமாக தான் ஒருதார மணமும் உருவாகிறது. அதற்கு முன்புவரை பொதுச்சொத்தும் பலதார மணமுறையும் தான் நிலவியது. எனவே தான் பல ஆண்கள் சட்டப்படி ஒரு மனைவியையும் திருட்டுத்தனமாக பல பெண்களையும் வைத்துள்ளனர். எனவே சொத்துக்காக பெண் மனைவி என்கிற பெயரில் அடிமையாக வைக்கப்பட்டிருக்கிறாள்.

      ‘ஒரு ஆண் ஒரு பெண்ணை ஆதிக்கம் செய்யக் கூடாது’ என்று சட்டம் போட்டால் ஆண்கள் அனைவரும் அடுத்தநாளே ஏற்றுக்கொண்டுவிடுவார்களா? எந்த அடிப்படையில் இப்படி பேசுகிறீர்கள்? ‘அதே போல ஒரு பெண்ணும் தேவை இல்லாமல் பெண்ணியம் பேசக் கூடாது’ என்கிறீர்கள். இது அடிக்கடி கேள்விப்பட்ட டயலாக் தான். ஆனால் இது பெரும்பான்மையான பெண்களின் பிரச்சினைகளை பற்றி ஒன்றுமே அறியாத சில மேட்டுக்குடி பெண்கள் பேசும் வசனமாகும். இவர்களுக்கும் பெரும்பாண்மை பெண்களின் பிரச்சினைகளுக்கும் தொடர்பு இல்லை என்பதால் தான் அவர்கள் அப்படி பேசுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை நெருங்கிப்பார்த்தால் ஆணாதிக்கம் காட்டுமிராண்டித்தனம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வார்கள். எனினும் இவர்களும் வேறுபட்ட அளவில் ஆணாதிக்கத்தின் அடிமைகளாக தன் இருக்கின்றனர்.

      ‘இது தவிர பெண் என்பவள் தன் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் சில விஷயங்களில் அடி பணிந்து தான் போக வேண்டும்’ என்று கூறியுள்ளீர்கள். ஏன் அடிபணிந்து போக வேண்டும் என்பதையும் கூறுங்கள். ஆனால் உங்களுடைய வார்த்தைகளே பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துவதை பாருங்கள். ஆணாதிக்கத்தை தார்மீகரீதியில் ஏற்றுக்கொள்ளும் போது அது பெண்களின் வழியாகவே பெண்களுக்கு எதிராக வேலை செய்வதை இந்த வார்த்தைகள் நிரூபிக்கிறது.

      இறுதியாக ‘இந்த சமுகத்தில் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் காப்பதில் பெண்ணுக்கு தான் முக்கிய பங்குண்டு’ என்று கூறியுள்ளீர்கள். ஏன் பெண்ணுக்கு மட்டும் முக்கிய பங்கு, ஆணுக்கு ஏன் இல்லை? இப்படி பெண்ணுக்கு மட்டும் அநீதியாக முக்கிய பங்கை பிரித்துகொடுத்தது யார் என்பதையும் விளக்குங்கள்.

      • Hi ஓ போ பு செ (Its better you get a better pseudonym),

        //அதற்கு முன்புவரை பொதுச்சொத்தும் பலதார மணமுறையும் தான் நிலவியது. எனவே தான் பல ஆண்கள் சட்டப்படி ஒரு மனைவியையும் திருட்டுத்தனமாக பல பெண்களையும் வைத்துள்ளனர்.//

        ஒரு திருத்தம்:பல பெண்இணை (polygamy) அதாவது பலதாரம் மட்டுமல்ல பல ஆண்இணை (polyandry)யும் கூட.. அதாவது பாஞ்சாலிகள் மற்றும் அர்சுனன்களால் ஆன சமூகம். அதாவது தாய் வழி சமூகம். குழந்தைகள் தற்போதுள்ளதைப்போலல்லாமல் தாயினால் அறியப்பட்டனர். Even today this mix of polyandry and polygamy exists in some primitive societies in some remote islands. Engels has written a detailed account about this in his book ‘The Origin of the Family, Private Property, and the State’

  17. //தேவையில்லாமல் இந்த சமுகத்தில் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் காப்பதில் பெண்ணுக்கு தான் முக்கிய பங்குண்டு என்பதை உணர வேண்டும்.//

    ஒரு சிறிய typing mistake மேலே உள்ள வாசகத்தில் தேவையில்லாமல் என்கிற வார்த்தையை நீக்கி விட்டு ” இந்த சமுகத்தில் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் காப்பதில் பெண்ணுக்கு தான் முக்கிய பங்குண்டு என்பதை உணர வேண்டும்”. என்று படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

  18. புரட்சி ஒன்று தான் தீர்வு..

    இன்னும் எத்தனை காலத்திற்கு இதே பழைய பல்லவியை பாடி கொண்டே இருப்பீர்கள்.

    //தனிச்சொத்துடைமை இருந்தால் தான் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்கிற ஆர்வம் வரும் என்றால், உலகில் பெரும்பாண்மை மக்கள் தனிச்சொத்துடைமை இல்லாதவர்கள் தான், ஆனால் உலகம் சுறுசுறுப்பாகத்தானே இருக்கிறது?//

    அந்த பெரும்பான்மை மக்கள் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு காரணமே. தாங்கள் என்றாவது ஒருநாள் வீடு மனை என்று தனி சொத்துடமையாளர்கள் ஆகிவிடுவோம் என்கிற எதார்த்தமான உந்தலினால் தான். அப்படி பல பேர் சொத்துடமையாளார்களாகவும் ஆகி இருகிறார்கள்.ஒரு இலக்கு இருக்க வேண்டும். அப்போது தான் அதை அடைய வேண்டும் என்பதற்காக மனிதனுக்கு உழைக்க வேண்டும் என்கிற ஆசை வரும்.

    நீங்கள் கூறும் ஆலை தொழிலாளிகள், விவசாயிகள் அனைவருமே தினமும் உழைத்து கஷ்டபடுவது தாங்கள் அடையாத ஒன்றை (தரமான கல்வி, தனி சொத்துகள்) தங்கள் பிள்ளைகளாவது அடைய வேண்டுமே என்கிற குறிக்கோள் இருப்பதால் தான். எனக்கு தெரிந்த ஒரு ஏழை விவசாயி திருவண்ணாமலையில் வேர்கடலை பயிரிடுகிறார். தன்னுடைய நிலத்தில் கிடைக்கும் சொற்ப விளைச்சலில் பணம் சம்பாதித்து கஷ்ட பட்டு தன் பிள்ளையை படிக்க வைத்தார். அவரும் தன் தந்தையின் கஷ்டங்களை புரிந்து கொண்டு நன்றாக படித்து இப்போது மாதம் 70,000 வரை சம்பாதிக்கிறார். இப்போது மிக நல்ல நிலையில் அவரின் குடும்பம் இருக்கிறது இது நான் நேரில் கண்ட அனுபவம். இது தான் எதார்த்தமும் கூட. இதை தவிர நீங்கள் சொல்வது போல் கூட்டு பண்ணைகள் அமைத்து அனைவரும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்றால் என்ன சொல்வது.. சோவியத் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலை தான் மீண்டும் திரும்பும்.

    எல்லா சொத்துக்களும் அரசுக்கே உடமை என்பது கம்யூனிச சித்தாந்தம். ஆனால் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் காணப்பட்டதால், அவசியத்தை முன்னிட்டு தனிநபர் சொத்துரிமையை அளிக்க , சீன அரசே முன்வந்தது காலத்தின் கட்டாயம். அரசியல் அமைப்பையே திருத்தி, தனி நபர் சொத்துரிமையை அனுமதிக்க நேரிட்டது.

    விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் அதற்க்கு காரணம் இப்போது இருக்கும் சுயநல அரசியல் அமைப்பு. ஏன் மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்ட் ஆட்சியில் விவசாய நிலங்களை டாடாவிற்கு பிடுங்கி தரவில்லையா. கேட்டால் அவர்கள் போலி கம்யுனிஸ்ட்கள் என்ற ஒற்றை வரியை கூறி நழுவி விடுவீர்கள். சரி இப்போது நீங்கள் வியந்தோதும் உங்களின் அச்சு அசல் கம்யுனிஸ்டுகள் ம.க.இ.க கட்சி நாளையே ஒரு போலி கம்யுனிச அமைப்பாக மாறாது என்பதற்கு என்ன நிச்சயம். ஆக, எந்த “Ideology”யை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் சரி,அதில் நல்லவர்கள் இருக்க வேண்டும், பிழைப்பு வாதிகள் தோன்றினால் இப்படி தான் “போலி” என்கிற அடைமொழியுடன் தான் போய் மடியும்.

    ஒருவரிடம் நிலம் அதிகபடியாக இருக்கிறது என்றால் நில உச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்தி அவரிடம் இருக்கும் அதிகப்படியான நிலத்தை கையகப்படுத்தி நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து தரட்டும். அதை விட்டு அனைத்தையும் அரசுடமை ஆக்க வேண்டும் என்றால் நிலை இன்னும் மோசமாகி போகும்.

    இறுதியாக,உலகம் கருப்பு வெள்ளையினால் மட்டும் ஆனது இல்லை. முற்று முழுதாகக் கருப்பாகத் தீட்ட அல்லது முற்று முழுதாக வெள்ளையாகத் தீட்ட. நீங்கள் சொல்லும் கம்யுனிச கோட்பாடு இப்படி தான் இருக்கிறது.

    //ஒரு ஆண் ஒரு பெண்ணை ஆதிக்கம் செய்யக் கூடாது’ என்று சட்டம் போட்டால் ஆண்கள் அனைவரும் அடுத்தநாளே ஏற்றுக்கொண்டுவிடுவார்களா?//

    சட்டம் போடுங்கள் என்று நான் கூறினேனா. ஒரு குடும்பத்தில் ஆண் பெண்ணை ஆதிக்கம் செய்ய கூடாது. பெண்ணும் ஆணிடம் பெண்ணியம் பேச கூடாது என்றுதான் கூறினேன். அப்போது தான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.

    //இது தவிர பெண் என்பவள் தன் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் சில விஷயங்களில் அடி பணிந்து தான் போக வேண்டும்’ என்று கூறியுள்ளீர்கள். ஏன் அடிபணிந்து போக வேண்டும் என்பதையும் கூறுங்கள்.//

    சமுதாயத்தில் ஆடை கோட்பாடு, பொது நாகரிகம் என்று வரும்போது சமுகத்தின் கோட்பாடுகளுக்கு பார்வைக்கு ஏற்றார் போல் தான் நம்மை தகவமைத்து கொள்ள வேண்டும். நான் எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்துவேன் எப்படி வேண்டுமானாலும் என் வாழ்கை முறையை அமைத்து கொள்வேன். அதற்க்கு ஏற்றார் போல் உன் பார்வையை நீ மாற்றி கொள் என்றெல்லாம் பெண்ணியம் பேசக்கூடாது. பொதுவில் நாகரிகத்தை, ஒரு பெண்ணை பார்த்தால் மரியாதையை ஏற்படுத்தும் விதமாக “DRESS CODE “.அமைய வேண்டும். அதே போல் தேவை இல்லாமல் குடும்பத்தில் இருந்து கொண்டு சம உரிமை எல்லாம் பேசி கொண்டிருக்க கூடாது. சில விசயங்களில் விட்டு கொடுத்து தியாக மனப்பான்மையுடன் தான் பெண் என்பவள் நடந்து கொள்ள வேண்டும். அதற்காக, வரதட்சனை கொடுமை, ஆண் ஆதிக்க கொடூரங்களை எல்லாம் சகித்து கொள்ள வேண்டும் என்கிற அர்த்தத்தில் நான் கூறவில்லை. மொத்தத்தில் ஒரு பெண் எவ்வளவு சம்பாதித்தாலும் தான் ஒரு பெண் என்பதை மறந்து தன் இஷ்டப்படி ஆணுடன் போட்டி போட்டு கொண்டு மனம்போன படி எல்லாம் வாழ நினைக்க கூடாது.

    • //தாங்கள் என்றாவது ஒருநாள் வீடு மனை என்று தனி சொத்துடமையாளர்கள் ஆகிவிடுவோம் என்கிற எதார்த்தமான உந்தலினால் தான். அப்படி பல பேர் சொத்துடமையாளார்களாகவும் ஆகி இருகிறார்கள்.ஒரு இலக்கு இருக்க வேண்டும். அப்போது தான் அதை அடைய வேண்டும் என்பதற்காக மனிதனுக்கு உழைக்க வேண்டும் என்கிற ஆசை வரும்.//

      மனிதன் மட்டுமல்ல சமூகமாக வாழும் அனைத்து உயிரினங்களும் உழைப்பது என்பது முதலில் அதன் தேவைக்கே. காட்டில் வாழும் ஒரு சிங்கமானாலும் கூட தான் முதலில் நன்றாக சாப்பிட்ட பிறகே தன் குட்டிகளுக்கு மாமிசத்தை/பாலினைக் கொடுக்கும். அதனடிப்படையிலும் மனிதன் தன் அடிப்படைத் தேவைகளுக்கு உழைப்பதனூடாகத் தன் சமூகத்துக்காகவும் உழைக்கிறான். அதனடிப்படையில் அது அவனுக்கு இலக்கு அல்ல ஒரு முன் நிபந்தனை.

      //அப்படி பல பேர் சொத்துடமையாளார்களாகவும்//

      இதற்கு ஏதாவது புள்ளி விவரம் இருக்கின்றதா? சும்மா அடிச்சு விடக் கூடாது.

      //எனக்கு தெரிந்த ஒரு ஏழை விவசாயி திருவண்ணாமலையில் வேர்கடலை பயிரிடுகிறார். தன்னுடைய நிலத்தில் கிடைக்கும் சொற்ப விளைச்சலில் பணம் சம்பாதித்து கஷ்ட பட்டு தன் பிள்ளையை படிக்க வைத்தார். அவரும் தன் தந்தையின் கஷ்டங்களை புரிந்து கொண்டு நன்றாக படித்து இப்போது மாதம் 70,000 வரை சம்பாதிக்கிறார். இப்போது மிக நல்ல நிலையில் அவரின் குடும்பம் இருக்கிறது//

      அவர் கடினமாக உழைத்தார் அவர் பிள்ளைகள் நன்றாக உள்ளனர் . இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? மற்றவர்கள் உழைப்பதில்லயா ? மற்ற பிள்ளைகள் தனது பெற்றோரின் பிரச்சினையை புரிந்து கொள்வதில்லயா? எத்தனைக் குழந்தைகள் சமூக/குடும்பக் சூழ்நிலைக் காரணமாக பள்ளிக்கல்வியை பாதியிக்ள் நிறுத்தி விடுகின்றனர்.

    • //சட்டம் போடுங்கள் என்று நான் கூறினேனா. ஒரு குடும்பத்தில் ஆண் பெண்ணை ஆதிக்கம் செய்ய க்கூடாது. பெண்ணும் ஆணிடம் பெண்ணியம் பேச கூடாது என்றுதான் கூறினேன். அப்போது தான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.//

      பெண்ணியம் என்பது ஆணாதிக்கத்திற்கு எதிர்ப்பதம் அன்று. அது சும்மா பொழுதுபோக்கிற்காக மேட்டுக்குடி பெண்களால் பொழுதுபோக்கிற்காக பேசப்படும் ஒன்று . போதுவாக இருவரும் சமம் என்பதே போதுமானது .

      //சமுதாயத்தில் ஆடை கோட்பாடு, பொது நாகரிகம் என்று வரும்போது சமுகத்தின் கோட்பாடுகளுக்கு பார்வைக்கு ஏற்றார் போல் தான் நம்மை தகவமைத்து கொள்ள வேண்டும்//
      கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆணால் போடப்படும் போது சரிபாதி பெண்களின் நிலை என்ன ?
      பெண்களின் ஆடைக் கோட்பாடு ,பொது நாகரிகம் பற்றி ஆண்களுக்கு என்ன கவலை?
      சரிபாதி பெண்களின் நிலையைப் பற்றி அவர்களுக்கு இல்லாத கவலை உங்களுக்கென்ன ?

  19. கம்மியுனிசம் குறித்த ரெபேக்க அவர்களின் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்.
    அதே சமயம் பெண்ணுக்கு சம உரிமை விடயத்தில் அவரது பின்னூட்டத்தில் ஏன் கொஞ்சம் பெண்ணடிமைத்தனம் வருகிறதென்று தெரியவில்லை.

    • தவறு நண்பா !

      உங்கள் முதலாளிகள் நடத்தும் இந்த அரசில் எல்லா குழந்தைகளுக்கும் சமமான உரிமைகள் உள்ளனவா ?

      முதலாளி வீட்டு குழந்தை படிக்கும் கல்வியீன் தரமும் தொழிலாளி வீட்டு குழந்தை படிக்கும் கல்வியீன் தரமும் ஒன்றா ?

      முதலாளி வீட்டு குழந்தை உண்ணும் உணவின் அளவு /தரம் /intake க்கும் தொழிலாளி வீட்டு குழந்தை உண்ணும் உணவின் அளவு /தரம் /intake க்கும் ஒன்றா ?

      ஏன் நம்பா , எல்லா குழந்தையும் இந்தியர்கள் என்றால் ஏன் இந்த பாகுபாடு ?

      எனக்கு சோவித் ரஷ்யாவில் ரொம்ம பிடித்த விடயமே அவர்கள் [ருஷயர்கள்] குழந்தைக்ளீன் கல்வி /உணவுக்கு கொடுத்த முக்கியதுவம் தான்.

      உங்கள் நாறிபோன முதலாளிகள் நடத்தும் இந்த அரசில் iron ,vitamin etc deficiency உடன் 80% தொழிலாளி வீட்டு குழந்தைகள் வாழ்வதும் உடல் பருமனுடன் [obesity] உடன் 20% தொழிலாளி வீட்டு குழந்தைகள் வாழ்வதும் ஏன் ?

      இந்த ஏற்ற தாழ்வுக்கு உங்கள் முதலாளி அரசாங்கம் இந்தியா சுதந்திரம் பெற்ற கடந்த 67 ஆண்டுகளாக என்ன தீர்வு கண்டது நண்பா ?

      • அனைவருக்கும் ஒரே வகை உணவு என்பது நடைமுறையில் சாத்தியப்படுமா, தெரியவில்லை. வருமானம் இருந்தும் நம்மில் பலர் கருமியாக இருந்து கொண்டு உணவின் அளவு/தரம்/ குறைவாக உண்ணுகின்றனர். வருமானம் குறைவாக உள்ளவர்களும் இயற்கை உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர்.

        என்னை பொறுத்தவரை பிரச்சினை வருமான நிர்ணயத்தில் உள்ளது.
        வெளிநாடுகளில் எந்த வித தொழிலாளியாக இருந்தாலும் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிறது. நம்மூரில் இளிச்சவாயன் தொழிலாளி தான். அதனால் தான் உலகமே Cheap Labour என்று இந்தியர்களை நாடுகிறது. நல்ல வருமானம் இருந்தால் தொழிலாளிகள் அவர்களின் குடும்பத்திற்கு, குழந்தைகளுக்கு நல்ல உணவு, நல்ல உடைகள், நல்ல கல்வி அளிக்க முடியும்.

        இந்தியர்களிடம் இருக்கும் ஒரு முக்கிய குறை, சோம்பேறித்தனம், ஏனோதானோ என்ற வகையில் வேலை செய்து பொருட்களின் தரத்தில் கவனத்தை குறைப்பது, இது போன்ற குறைகளை நாம் நீக்க வேண்டும். தனிப்பட்ட நபரென்று இல்லாமல் ஒட்டு மொத்தமாக நம்மில் அனைவருக்கும் இவ்விரு குறைகள் இருக்க தான் செய்கிறது.

        எனக்கு ஒரு கனவு. தரமான இயந்திரங்கள் என்றால் எல்லோரும் ஜெர்மன் தொழில்நுட்ப இயந்திரங்களை தான் காட்டுவார்கள். அது போல தரமான பொருட்களின் ஊற்றாக நம் நாடு இருக்க வேண்டும். தரம் நன்றாக இருந்தால் பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும் உலக சந்தையில் நல்ல விலை கிடைக்கும். நம்மவர்கள் இங்கே தான் கோட்டை விடுகிறார்கள்.
        மற்றொரு குறை, நம்மில் பெரும்பாலான தொழிற்சாலைகளில் சீனா, தைவான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து பெறப்பட்ட மூலாதார பொருட்களை வெறும் அசெம்பிள் செய்து, நானும் ஒரு தொழிற்சாலை வைத்திருக்கிறேன் என்று பீற்றிக்கொள்கிறார்கள்.

        Mass Production – சீனா.
        Hydraulic and mechanical Machines – தைவான்.
        Electronics – கொரியா.

        இவ்வகை தொழிசாளைகளை நம்மவர்கள் உலக சந்தையில் முழுக்க முழுக்க நமது தொழில்நுட்பத்தை கொண்டு நல்ல தரமான பொருட்களை உலக சந்தையில் விற்றால் எப்படி இருக்கும்.

        • கற்றது கையளவுக்கு இந்த முதலாளிகள் அரசின் அவலச்சணம் மீது நான் வைத்த கேள்விகளுக்கு பதில் கூற வழி இன்றி “கருமி”,”இயற்கை உணவு”,”சோம்பேறித்தனம்” என்று கூறி திசை திருப்புகின்றார்.

          [1] நாட்டின் தலைவர்[தோழர் லெனின்] முதல் அனைவருக்கும் ஒரே ஊதீயம் [600 ருபில்ஸ்] என்ற சோவித் ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் நடைமுறைக்கும் , இந்திய முதலாளிகள் [for example India Cement CEO ] இந்தியாவில் வாங்க்கும் ஊதீயம் பல கோடிகள் ! ஆனால் இந்திய தொழிலாளிகளீன் ஊதீயம் என்ன ? ஏன் இந்த வேறுபாடு.

          [2] நாறி போன முதலாளித்துவ மாடல் இந்திய அரசை கற்றது கையளவு கொட்டியாக பீடித்துகொள்ளும் காரணம் என்ன ?

          [3]குழந்தைகளுக்கு கூட சமமான உரிமைகள் அளிக்க இயலாத இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசை கற்றது கையளவு பீடித்துகொண்டு தொங்குவது ஏனோ ?

          • ரசியாவில் இன்று வரையும் அதே சம ஊதியம் அளிக்க முடிகிறதா?
            600 ரூபில்ஸ் வேண்டாம், பண வீக்கத்தினால் 6000 ரூபில்ஸ் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். இன்று ரசியாவில் இதே முறை இன்னும் பின்பற்றப்படுகிறதா?

            ரசிய அதிபர் புதினுக்கும், அவரது அலுவலகத்தை சுத்தம் செய்யும் தொழிலாளுக்கும் இன்றும் ஒரே ஊதியம் தானா?

            குழந்தைகளின் எதிர்காலத்தை பராமரிப்பது அந்த குழந்தைகளின் பெற்றோரின் கடமை.
            வயதானதும் பெற்றோரை பராமரிப்பது அந்த வளர்ந்த குழந்தைகளின் கடமை.
            இது தான் இந்திய குடும்ப வாழ்க்கை முறை.

            அரசே எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தால் பின் மக்களிடம் சோம்பேறித்தனம் தான் மிஞ்சும்.
            உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்ற கருத்தை நான் எப்போதும் வரவேற்கவே செய்கிறேன். இந்நாட்டின் முதுகெலும்பான விவசாயிக்கு தகுந்த கூலி, வருமானம் கொடுக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. அதே சமயம் அதிகம் உழைத்தால் அதிகம் வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள்.

            ஒரு அலுவலகத்தில் எல்லோருக்கும் ஒரே சம்பளம். திறமையாக வேலை செய்பவருக்கும், வலை செய்வது போல பாவ்லா காட்டிக்கொண்டு ஓபி அடிப்பவர்களுக்கும் ஒரே சம்பளம் என்றால் எப்படி. ஒரு கடையில் நன்கு சுறுசுறுப்பாக வேலை செய்து அதிக வாடிக்கையாளர்களை கொண்டு வரும் விற்பனை நபருக்கு வேளைக்கு ஏற்ற வகையில் Incentive கொடுத்தால் தானே அவர் மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவர முயலுவார்? இல்லையென்றால் கொடுத்த சம்பளத்திற்கு இந்த வேலையே அதிகம் என்று சுணங்கி போக மாட்டாரா?

            • நான் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகவும், முதலாளித்துவத்தை ஆதரிப்பதாகவும் தவறாக எண்ண வேண்டாம். என்னை முதலாளித்துவவாதியாக உருவகப்படுத்தாமல், உண்மையான ஜனநாயகவாதியாக கருதுங்கள்.

              கம்யுனிசம் தற்போது ஏட்டு சுரைக்காயாக, கறிக்கு உதவாததாக உள்ளது.
              தற்போதைய ஜனநாயக முறையிலும் தேர்தல் முறையிலும் சில குறைகள் உள்ளது, இல்லை என்று சொல்ல வில்லை. கம்மியுநிசத்திலும் சில குறைகள் இருக்கிறது, இல்லைவே இல்லை என்று நீங்கள் மறுக்க இயலாது. இரு முறைகளையும் தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு புதிய ஜனநாயக முறையான கம்யினுநிசத்தை நாம் வடிவமைத்தால் எல்லோருக்கும் அது நல்ல தீர்வாக இருக்கும் அல்லவா.

              சற்று யோசித்து பாருங்கள்.
              உடனுக்குடன் கோபப்படாமல் தீவிரமாக யோசிக்கலாம். நாம் அனைவரும் யோசித்தால் நல்ல தீர்வு கிடைக்க வழியுண்டு.

              • வரலாறு சில பாடங்களை நமக்கு கற்று கொடுக்கிறது. சோவியத் யூனியன், சீனா, இவற்றில் கம்யுனிசம் பின்னடைவு அடைந்ததென்றால் ஏன் என்று ஆராயாமல் எல்லா நாடுகளிலும் அதே முறையை கண்ணை மூடிக்கொண்டு மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் கேட்கலாம்? கம்யுனிசம் தோன்றிய இடத்திலேயே அதனால் அதன் உண்மையான வடிவில் நிலைத்திருக்க முடியவில்லை என்றால் தவறு எங்கே ஆரம்பிக்கிறது?

                ஜனநாயக தேர்தல் முறை என்பது தவறல்ல, அதனை ஆள்பவர் தவறானவறாக இருப்பதால் ஜனநாயகம் தவறென்று சொல்ல முடியாது. வண்டியை ஓட்டுபவர் செய்யும் தவறுக்கு வண்டியை குறை சொல்லி பிரயோசனம் இல்லை.

                தங்களுடன் விவாதம் செய்வதில் எனக்கு பல புதிய விவரங்கள் கிடைக்கிறது, புதிய கோணங்களில் யோசிக்க தோன்றுகிறது. மிக்க நன்றி சரவணன்.

                • Please ignore previous comment and approve this please.

                  கற்றது கையளவு,

                  ///இந்நாட்டின் முதுகெலும்பான விவசாயிக்கு தகுந்த கூலி, வருமானம் கொடுக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. அதே சமயம் அதிகம் உழைத்தால் அதிகம் வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள். ///

                  அதிகம் உழைத்தால் அதிக வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள் – என்பதால் தான் விவசாயிக்கும் தொழிலாளிக்கும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை அதிகமாக உழைக்க ஊக்குவிக்கிறோம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகிறோம் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா??

                  அதிகம் உழைத்தால் நாட்டின் பொருளாதாரம் அதிகமாக வளரும், பொருளாதாரம் வளர்ந்தால் அது மக்களுக்கே திருப்பிவிடப்படும், அதன் மூலம் அதிக வசதி வாய்ப்புகளை பெறலாம் என்றும் மக்கள் அதிகம் உழைப்பார்கள். அது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரம் பெருக பெருக மக்களின் வேலை நேரமும் குறையும். இது சோசலிச ரசியாவில் நிறுபிக்கப்பட்டுள்ளது. சபோத்னிக் என்ற நாட்டிற்காக தன்னார்வ வேலைக்கு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு சில பத்தாண்டுகளிலேயே ரசிய பொருளாதாரத்தை மிக வலிமையுள்ளதாக மாற்றினர்.

                  தற்போதைய நிலை என்ன? நாட்டின் பெருளாதாரம் வளர்ந்தாலும் கூட மக்களின் வாழ்க்கைநிலை மேம்படுவதில்லை. மாறாக மேலும் கீழிறங்குகிறது. முன்னர் 8 மணி நேரம் உழைத்தவர்கள் இன்று 12 மணி நேரம் உழைத்தாலும் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. வளரும் பொருளாதாரம் ஒரு சில நூறு தனியாரின் சொத்துகளை தான் பெருக்குகின்றன.

                  தேவையும் ஆசையும் இல்லையெனில், உழைப்பின்றி மனிதன் சோம்பேறியாகிவிடுவான் என்று தோன்றுவது நியாயமனது தான். தேவையும், ஆசையும், தனிமனித நுகர்வுக்கானதா? சந்தைக்கானதா? சந்தைக்கானதாக இருக்கும் இந்த சமூகத்திலேயே அதன் அழுக்குகளிலேயே பழகிவிட்ட நமக்கு இது நம்பமுடியாததாக தான் இருக்கும்.
                  உழைப்பு தான் மனிதனின் இயல்பான நிலை அதை தெரிந்து கொள்ள இதை படித்து பாருங்களேன் : https://www.vinavu.com/2008/11/12/tmstar3/

                  • என் நண்பர்களாகிய நீங்கள் எல்லோரும் கம்மியிநிசம் என்றால் பழைய ரசியாவை தான் உதாரணத்திற்கு காட்டுகிறீர்கள். என் ஒரே கேள்வி. அப்படி ஒரு சிறந்த ஒரு சித்தாந்தத்தை ரசிய மக்கள் இன்று ஏன் உதாசீனப்படுத்துகிறார்கள்?

                    இந்திய மக்களுக்கு கம்மியுனிசம் பரப்பும் நீங்கள், ரசியாவில் கம்மியுனிசம் ஏன் இப்போது செழிக்கவில்லை என்று ஆராய்ந்து பாருங்கள்.

                    ஒரு சில முதலாளிகள் ஆட்சியாளர்களை வளைத்து கொண்டு, சேர்ந்து, ரசியா போன்ற ஒரு பலம் மிக்க ஒரு நாட்டை கம்மியுனிச முறையிலிருந்து முதலாளித்துவ முறைக்கு மாற்ற முடியும் என்றால் ரசிய மக்கள் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று நம்புகிறீர்களா? சார் மன்னர்களுக்கு எதிராகவே போராடி கம்மியுநிசத்தை வென்ற ரசிய மக்கள் இந்த சிறிய கூட்டத்திற்கு பயப்பட்டு போராடாமல் இருக்கிறார்களா?

                    யோசித்து பாருங்கள்.
                    ரசிய மக்களுக்கு கம்மியுனிசம் மேல் நம்பிக்கை போய் விட்டது. இதை நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். ஆனால் அது தான் உண்மை.

                    இதனாலேயே இந்திய மக்களுக்கும் கம்மியுனிசம் மேல் நம்பிக்கை வராமல் இருக்கிறது.
                    ஒரு நல்ல திறனுள்ள மாடல் ஆட்சியை தற்கால, நிகழ்கால கட்டத்தில் உலகில் வெற்றிகரமாக ஒரு கம்மியுனிச மாடல் இருந்தால் இந்திய மக்களுக்கும் கம்மியுனிசம் மேல் நம்பிக்கை வரும்.

                    ஒரு சாதாரண குடிமகனாக நான் பேசுகிறேன். நான் எல்லாம் படித்த மேதாவியும் அல்ல, அதே சமயம் கம்மியுனிசம் இங்கே வெற்றி அடைய வேண்டுமானால் முதலில் என்னை போன்ற சாமானியர்களுக்கு உங்கள் கம்மியுனிசம் போய் சேர வேண்டும். எனக்கு இன்னும் கம்மியுனிசம் மேல் நம்பிக்கை வரவில்லை. கம்மியுனிச ஆட்சி அமைந்தால் சர்வாதிகாரம் தலை தூக்கும் என்பது எம்மை போன்ற பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் பயம். அதனை நீக்கும் வண்ணம் தற்கால நாடுகளில் சிறந்த வகை கம்மியுநிசத்தை நடத்தும் உதாரணங்கள் எங்கள் கண்களுக்கு தெரியவில்லை. இந்த பக்கம் புதின், அந்த பக்கம் இரும்பு திரை சீனா, இவை தான் எங்கள் கண்களில் நிழலாடுகின்றன. உள்ளூர் அளவிலும், கேரளா, மேற்கு வங்கம் இவற்றிலும் கம்மியுநிஸ்ட் ஆட்சி என்பது நல்லாட்சியாக இல்லாமல் இருப்பதும் உங்களுக்கு ஒரு பின்னடைவு தான்.

                    மேலும் விவாதிக்கலாம்…

                    • // இந்த பக்கம் புதின், அந்த பக்கம் இரும்பு திரை சீனா, இவை தான் எங்கள் கண்களில் நிழலாடுகின்றன. உள்ளூர் அளவிலும், கேரளா, மேற்கு வங்கம் இவற்றிலும் கம்மியுநிஸ்ட் ஆட்சி என்பது நல்லாட்சியாக இல்லாமல் இருப்பதும் உங்களுக்கு ஒரு பின்னடைவு தான்.//

                      இங்கு சோஷலிச ஆட்சி முறை பற்றிக் குறிப்பிடுவது 1953க்கு முன்பிருந்த சோவியத் ரஷ்யாவையும், 1976க்கு முன்பிருந்த செஞ்சீனத்தையும் தான்.

                      இப்போதுள்ள ரஷ்யாவும், சீனாவும் அக்மார்க் முதலாளித்துவ நாடுகள் தான்.

                      மற்றபடி சி.பி.எம், சி.பி.ஐ போன்ற கட்சிகளை கம்யூனிசக் கட்சிகள் என்று நினைப்பது உங்கள் மூட நம்பிக்கை.

                      இவை பற்றி வினவில் ஏராளமான கட்டுரைகள் வந்துள்ளன. தேடிப் படியுங்கள். இல்லையென்றால் நானே அதற்கான இணைப்புகளைத் தருகிறேன்.

                • கற்றது கையளவு,

                  சோவியத் ரஷ்யா மற்றும் சீனாவில் ஏன் பின்னடைவு ஏற்பட்டது? என்பது குறித்து உலகில் உள்ள அனைத்து கம்யூனிச இயக்கங்களும் எவ்வளவோ பேசியிருக்கின்றன, எழுதியிருக்கின்றன. வினவிலும் அது தொடர்பாக கட்டுரைகள் வந்துள்ளன.

                  சோவியத் ரஷ்யாவில் 1917-ல் புரட்சி நடந்தபின் சுமார் ஏழு ஆண்டு காலம், சோவியத் ரஷ்யா ஏகாதிபத்திய நாடுகளால் முற்றுயிடப்பட்டது. முற்றுகையை வெற்றிகரமாக முறியடிக்கும் வேளையில் தோழர்.லெனின் 1924-ல் மரணமடைந்துவிடுகிறார். அப்போது சோவியத் ரஷ்யாவில் சோஷலிசப் பொருளுற்பத்தி முறை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. உலகின் முதல் சோஷலிச நாட்டை உருவாக்கும் பணி தோழர்.ஸ்டாலின் தலையில் வந்து விழுந்தது. முன்மாதிகள் ஏதும் இல்லாமல், சோஷலிச நாட்டை உருவாக்கும் பணியில் இறங்கியது ஸ்டாலின் தலைமையிலான சோவியத் பாட்டாளி வர்க்கம்.

                  இந்த முயற்சியில் கோட்பாடு ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் சில தவறுகள் இழைக்கப்பட்டிருப்பினும், சோவியத் ரஷ்யா பல சாதனைகளைப் புரிந்தது. கட்சியில் ஊடுறுவிய புல்லுறுவிகளை களையெடுக்கும் முயற்சியில் நடந்த தவறுகளை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகக் கையாள முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணம் கட்சியை மக்களின் நேர்டிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை என்பதுதான். இதை உணர்ந்த ஸ்டாலின் கலாச்சாரப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். ஆனால் அதை நடைமுறைப்படுத்தப்படும் முன்பே ஸ்டாலின் மரணமடைந்து விடுகிறார்.

                  சோவியத் செய்த தவறுகளை சரியாக விமர்சித்த தோழர்.மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கலாச்சார புரட்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. ஆனால் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு 1956-ல் ஆட்சிக்கு வந்த குருச்சேவ் கும்பல் ஸ்டாலினை அவதூறு செய்வதில் இருந்து தொடங்கி இறுதியாக கம்யூனிசத்தையே திரித்துப் புரட்டியது.அதுபோல் மாவோவின் மறைவையடுத்து ஆட்சியைக் கைப்பற்றிய டெங்சியோ பிங் கும்பல் சீனாவை முதலாளித்துப் பாதையை நோக்கித் தள்ளியது.

                  சோஷலிசத்தைக் கட்டியமைக்கும் பணியில் முன் அனுபவமில்லாத பாட்டாளி வர்க்கம் செய்த தவறுகளை ஏகாதிபத்தியங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டன. அதன் காரணமாக 1980 களுக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள கம்யூனிச இயக்கங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தப் பின்னடைவுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்று தவறுகள் நடைபெறாத வண்ணம் அமைப்புகளை வழிநடத்துகின்றன இப்போதைய கம்யூனிச இயக்கங்கள்.

                  ஆனால் 2008-ல் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்தியில் இன்னும் மீளவில்லை. ஆகவே சோஷலிசத்தின் வெற்றி என்பது வரலாற்றின் கட்டாயம்.

                  • நன்றி பகத். பொறுமையாக நீண்ட விளக்கத்தை அளித்துள்ளீர்கள்.

                    நீங்கள் சொன்னபடி பார்த்தால் லெனின் எண்ணத்தில் தோன்றிய கம்மியுநிசத்தை அவருக்கு பின் வந்த ஸ்டாலின் நடைமுறைபடுத்துகையில் சில தவறுகள் செய்தார் என்று தெரிகிறது. அப்போதைய காலகட்டத்தில் சோஷலிச ஆட்சி அமைவதற்கு முன்மாதிரி எதுவும் இல்லாததால் சில நடைமுறை சிக்கல்கள், பின்னடைவுகள் ஏற்பட்டது என்றும் அதனை முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டு கம்மியுநிசத்தில் முதலாளித்துவத்தை கலப்படம் செய்து களங்கம் கற்பித்து பின்னடைவை ஏற்படுத்தினர் என்று கூறுகிறீர்கள்.

                    சரி, உங்கள் வாதப்படியே பார்த்தாலும், எனது மனதில் இருந்த சில சந்தேகங்கள் உண்மையாகின்றன:

                    1. லெனின், ஸ்டாலின் உருவாக்கிய ஒரிஜினல் கம்ம்மியுனிச மாடலில்லேயே நடைமுறை தவறுகள் நிகழ்ந்தது என்று ஒத்துக்கொண்டீர்கள். இப்போது இருக்கும் கம்மியுனிசம் எல்லாம் போலி கம்மியுனிசம் என்றும் சொல்கிறீர்கள். அப்போது ஒரு நல்ல கம்மியுனிச மாடலுக்கு நாங்கள் எங்கே போவது?
                    2. தாங்கள் பின்பற்றும் கம்மியுநிச மாடலில் நடைமுறை சிக்கல்கள் இல்லை என்று நீங்கள் சொன்னால் அதை நாங்கள் எப்படி நம்புவது? சிறப்பாக அமைந்த ஒரு மாதிரி வடிவம் எங்கள் கண்களுக்கு காட்டாமல் எங்களை எல்லாம் உங்கள் வழிக்கு வரச்சொன்னால் நாங்கள் எப்படி வருவது?
                    3. ஸ்டாலின் சில தவறுகளை செய்தார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஒருவேளை கம்மியுனிச வாதிகள் கையில் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்தால் அந்த புதிய கம்மியுனிச தலைவர் ஸ்டாலின் செய்தது போன்ற தவறுகளை செய்ய மாட்டார் என்று என்ன நிச்சயம்.
                    4. ரசியாவில் ஒரு குருசேவ், சீனாவில் ஒரு டெங்சியோ போல நபர்கள் அவ்வளவு எளிதில் கம்மியுநிசத்தை வீழ்த்திட முடியும் என்றால் அப்போது கம்மியுனிசம் எளிதில் வீழும் என்றல்லவா எண்ண தோன்றுகிறது?
                    5. பழைய வரலாற்றின் வழி பார்த்தால் இந்தியாவில் தூய கம்மியுனிச ஆட்சி வந்தால் கூட அந்த ஆட்சியை மிக எளிதில் முதலாளித்துவ சக்திகள் வீழ்த்தி விடும் என்றல்லவா தெரிகிறது?

                    முடிவில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒட்டு மொத்த மக்கள் சக்தியின் ஆதரவை பெறாமல் நீங்கள் கம்மியுநிசத்தை நிறுவினால் மீண்டும் மீண்டும் மீண்டும் தோல்வி தான் கிட்டும். ஜனநாயகத்தை மதிக்கும் கம்மியுநிசத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். ஸ்டாலின் கம்மியுநிசத்திற்கு மக்கள் ஆதரவு கிட்டாததற்கு அவரது சர்வாதிகார மனப்பான்மை தான் காரணம்.

                    முதலில் மக்களுக்கு பயன்படும் வகையில் முயற்சிகள் தொடங்குங்கள். மக்களின் பேராதரவை பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்.
                    ஒட்டு மொத்த மக்களின் ஆதரவு கிட்டுமானால் ஒரு சில முதலாளிகளால் மக்கள் சக்தியை முடக்கி போட முடியாது. அதற்கு என்ன வழி என்று யோசிப்போம்.

                    சும்மா, ஆயுத புரட்சி அது இது என்று யோசித்தால் பின் அனைத்தும் நாசமாக தான் போகும். கொஞ்சம் யோசித்து பாருங்கள், தற்கால நடைமுறையில் ஆயுதம் ஏந்திய போராட்டங்களை அரசுகள் எளிதில் வீழ்த்தி விடும். ஏனென்றால் ஆயுதம் ஏந்திய போராட்டதிற்கு மக்கள் ஆதரவு கிடைக்காது.

                    பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஆக்கபூர்வமாக என்ன செய்வது என்று யோசிப்போமே. முதல் வேலையாக சில சட்டங்கள்/சட்ட திருத்தங்கள் கொண்டு வர போராடுவோம்:

                    1. வாக்களித்த வேட்பாளர் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லைஎனில் அவர்களை திரும்ப பெரும் CANDIDATE RECALL உரிமை வாக்காளர்களுக்கு கிடைக்க வேண்டும்.
                    2. 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல். ஆனால் வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தனி அமைப்பு அரசின் செயல்பாடுகளை சரி பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் மக்கள் திறமையில்லாத அரசை 5 வருடம் வரை காத்திருக்காது விரைவில் தூக்கி எரியும் வழியாக ஒரு சட்டம்.
                    3. அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் முக்கியமாக செயல்முறை கல்விக்கும், வகுப்பறை கல்வி என்ற கட்டத்தை தாண்டி சுற்றுசூழல் கல்வி, வெளியுலக நடைமுறை வாழ்க்கை முறை போன்ற விடயங்களும் பாடங்களாக வேண்டும்.
                    4. நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம், வேலை நேரம், வேலை பளு ஆகியவை நிர்ணயிக்கும் சட்டம். அந்த சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு மிக அதிக அபராதம் அல்லது லைசன்ஸ் கான்சல் போன்ற சட்டம்.
                    5. குறிப்பிட்ட இலாபத்திற்கு மேல் விற்ககூடாது என்ற சட்டம்.

                    நான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்ல, ஏதோ எனக்கு தெரிந்த அளவில் இது போன்ற சட்டங்கள் அமைந்தால் நாடு நன்றாக இருக்கும் என்று கருதினேன். இது போன்ற பல சட்டங்கள், மக்களுக்கு நேரடியாக பயன் தரும் பல சட்டங்கள் உங்கள் மனதில் தோன்றியிருக்கும். அவற்றையும் சேர்த்து, இந்த புதிய சட்டங்களை நிறைவேற்ற அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.

                    RTA ந்டைமுரைபடுத்தியது போல, லோக்பால் சட்ட திருத்த மசோதா கொண்டு வந்ததை போல, மக்கள் போராடினால் சில சட்டங்களை அரசுகள் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றன.

                    யோசித்து பாருங்கள்.

                    • கற்றது கையளவு,

                      தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.கம்யூனிசத்தைப் பற்றியும், கம்யூனிச இயக்க வரலாறு பற்றியும் உங்கள் புரிதல் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக இருக்கின்றது.

                      1. கம்யூனிச மாடலை உருவாக்கியவர்கள் லெனினோ, ஸ்டாலினோ அல்ல. 19ஆம் நூற்றாண்டில் “எல்லார்க்கும் எல்லாமும்“ என்று சோஷலிசத்தைப் பற்றி பல பேர் கனவு கண்டார்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக அதை எப்படி அடைவது என்பது குறித்து யாருமே தெளிவாக விளக்கவில்லை.

                      மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தான் முதன்முறையாக சோஷலிச சமுதாயம் எப்படி இருக்கும், அதை எப்படி அடைவது என்பது குறித்து அறிவியல் பூர்வமாக விளக்கினர்.

                      மார்க்ஸ் கூறினார்: “தத்துவாதிகள் உலகை பல்வேறு முறையில் விளக்கினார்கள்; நமது வேலை இவ்வுலகை மாற்றியமைப்பதுதான்“.

                      மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் சமூகத்தை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தனர். அவர்கள் சமூகத்தையும், மனிதகுல வரலாற்றையும் ஆய்வு செய்வதற்காக வளர்த்தெடுத்த ஆய்வுமுறை தான் “இயங்கியல் பொருள்முதல்வாதம்“(Dialectical Materialism). இயங்கியல் பொருள்முதல்வாதம் தான் மார்க்சியத்தின் அடிப்படை.

                      மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் வாழ்ந்த காலம் “போட்டி முதலாளித்துவம்“. அது 20-ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியமாக மாறியது. ஏகாதிபத்திய சூழலுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தை லெனின் அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார். இதைத்தான் நாம் மார்க்சிய-லெனினியம் என்கிறோம். தோழர்.மாவோ மார்க்சிய-லெனினியத்தை முதலாளித்துவம் முழுமையாக வளர்ச்சியடையாத அரைக்காலனிய-அரை நிலப்பிரபுத்துவ சமூகமான சீனாவில் நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக புரட்சியை நடத்திக் காட்டினார்.

                      2. சோதித்தறியக்கூடியது தான் அறிவியல். தவறுகளே நிகழாமல் அறிவியலில் கண்டுபிடிப்புகள் சாத்தியமில்லை. அதுபோலத்தான் கம்யூனிச இயக்கங்களின் 150 கால வரலாறு நமக்குப் பல படிப்பினைகளை விட்டுச் சென்றுள்ளது. அதிலிருந்து நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கற்றுக் கொண்டு முன்னேறுவது தான் சரியானதாக இருக்கும். கடந்த காலத்தில் நடந்த தவறுகள் எதிர்காலத்தின் மீண்டும் நடக்காதவாறு நமது செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இது தான் மார்க்சிய நடைமுறை.

                      3. கம்யூனிசம் ஓட்டுக் கட்சிகளைப் போன்று தனிப்பட்ட நபர்களை முன்னிறுத்துவதல்ல. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் , மாவோ போன்ற கம்யூனிசத் தலைவர்கள் வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தில் உருவானவர்கள். அவர்களை அப்படியே காப்பியடிக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் செய்தது மாதிரியான தவறுகளை எதிர்காலத்தில் வரும் தலைவர்களும் இழைத்தால் அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை நாம் வரலாற்றிலிருந்து கற்றிருக்கிறோம். சமுகம், இயற்கையைப் பற்றிய மனிதனின் அறிவு என்பது பல ஆண்டுகளாக கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறுவதால் தான் உருவானது.

                      4. கம்யூனிசம் அவ்வளவு எளிதாக வீழ்த்திவிடக் கூடியதா? என்று கேட்கிறீர்கள்.

                      ஒரு சமுதாயத்திலிருந்து இன்னொரு சமுதாயத்திற்கு மாறும் பொழுது அதிகாரத்தை இழக்கும் பழைய ஆளும் வர்க்கம் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? பரம்பரை பரம்பரையாக சொகுசாக வாழ்ந்து வந்த, அதிகாரம் செய்தே பழகிய ஆளும் வர்க்கம் அவ்வளவு எளிதாக அதிகாரத்தை இழந்துவிடுமா?

                      இப்போது இந்தியாவில் டாடா, அம்பானி, போன்றோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவர்களை சாதரண மனிதர்கள் போல் வாழுங்கள் என்றால் உடனே மனம் திருந்தி ஏற்றுக் கொள்வார்களா?

                      புரட்சியின் போது அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்ட ஆளும் வர்க்கம் எதையாவது செய்து, என்ன விலை கொடுத்தாவது, எந்த வழியிலாவது மீண்டும் இழந்த அதிகாரத்தைப் பெறத்துடிக்கும். இதை எதிர் கொண்டு முடிப்பது சவாலானது. அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் முடியாத காரியமுமல்ல.

                      அதற்குத்தான் புரட்சி நடந்த பிறகு வர்க்கப் போராட்டத்தை மிகவும் தீவிரமாக நடத்த வேண்டும் என்று லெனின் கூறுகிறார். சீனாவிலும், சோவியத்திலும் வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டதன் விளைவுதான் முதலாளித்துவ மீட்சி. முதலாளித்துவ மீட்சி குறித்து கம்யூனிச ஆசான்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். நமக்கு வரலாற்று அனுபவமும் இருக்கிறது. ஆகவே எதிர்காலத்தில் இது போன்ற பிரச்ச்னைகளை கண்டிப்பாக எதிர் கொண்டு முறியடிக்க முடியும்.

                      மேலும் முதலாளித்தும் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொண்டால் ஏன் பெரும்பாலான மக்கள் ஏன் தேர்தலைப் புறக்கணிக்க் வில்லை என்ற உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

                      ஆளும் வர்க்கம் இரண்டு முறைகளில் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது.
                      1.கருத்தியல் ரீதியில் தற்போதைய ஆளும் வர்க்கம் தான் ஆள்வதற்குத் தகுதியானது, இந்த சமுதாய அமைப்பு முறை சரியானது, சாத்தியமானது. இந்த சமுதாய அமைப்பை பலாத்காரமாக மாற்ற முயற்சிக்கக் கூடாது என்று மக்களை பல்வேறு சமூக, அரசியல் நிறுவனங்கள் மூலம் ஏற்றுக் கொள்ளச் செய்வதன் மூலமாக. இது குடும்பம், கல்வி நிறுவனங்கள், மதம், சட்டம், ஊடகங்கள், சினிமா, கலை, இலக்கியம் ஆகிய நிறுவனங்கள் மூலமாக நடைமுறைப்படுத்தப் படுகிறது.

                      2. இதை மீறி கலகம் செய்தால் போலீசு, ராணுவம் மூலமாக ஒடுக்குவது.

                      புரட்சி நடந்தவுடன் மக்களின் பழைய கருத்துக்கள் உடனடியாக அடியோடு மாறிவிடுவது இல்லை. பழைய சமூக நிறுவனங்களின் கருத்துகள் புரட்சிக்குப் பின் உள்ள சமுதாயத்திலும் கோலோச்சும். அதை ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் மாற்ற முடியும். இக்கருத்துகள் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் மனதில் கோலோச்சுகின்றன்.

                      இந்தியாவில் சாதிக்கெதிராக பல போராட்டங்கள் நடந்திருப்பினும் இன்னும் சாதி ஒழிக்கப் படவில்லையே. ஏன்? சாதி என்ற கருத்தாகம் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் கோலோச்சி வருகிறது. அதை கடுமையான, தொடர்ச்சியான, சாதியின் ஆணிவேராகிய நிலவுடைமை சமுதாயத்தை பிடுங்கி எறியும் பாதையில் போராட்டங்கள் நடத்துவதன் மூலம் தான் ஒழிக்கமுடியும்.

                      ஆகவே முதலாளித்துவ, தன்வுடைமைச் சிந்தனையை மக்கள் மனதில் இருந்து அகற்றும், அதன் பொருளியல் அடிப்படையைத் தகர்க்கும் இந்தப் போராட்டத்தில் பின்னடைவுகள் ஏற்படலாம். இப்பின்னடைவுகள் தற்காலிகமானதே. அப்படிப்பட்ட பின்னடைவுதான் சோவியத்திலும், சீனவிலும் ஏற்பட்டது.

                      புரட்சிக்குப் பின்னான சீனாவில் எப்படி பழைய முதலாளித்துவக் கருத்துகள் மக்களிடமும், கட்சி உறுப்பினர்களிடமும் கோலோச்சுகிறது; அதை எப்படி முறியடிப்பது என்பதை விளக்கும் அருமையான சீனத்திரைப்படம்
                      Breaking With Old Ideas
                      https://www.youtube.com/watch?v=HQRE35_DGa8

                      ரஷ்யா, சீனாவில் ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணம் என்ன? அதை எதிர்காலத்தில் எப்படி முறியடிப்பது என்பது குறித்து ம.க.இ.க மாநிலப் இணைப் பொதுச்செயலாளர் தோழர்.காளியப்பன் அவர்கள் ஆற்றிய உரை

                      கம்யூனிசமே வெல்லும் – பாகம் -1 தோழர். காளியப்பன்
                      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2124:kaliappan21&catid=111:speech&Itemid=111

                      கம்யூனிசமே வெல்லும் – பாகம் -2 தோழர். காளியப்பன்
                      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2123:kaliappan22&catid=111:speech&Itemid=111

                      முதலாளித்தும் எப்படி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது எனபதை விளக்கும் கட்டுரை
                      Ideology and Ideological State Apparatuses
                      https://www.marxists.org/reference/archive/althusser/1970/ideology.htm

                      மார்க்சியத்தின் அடிப்படை குறித்துத் தெரிந்து கொள்ள
                      Beginners Guide to Marxism
                      http://www.marxists.org/subject/students/

                      கீழ்க்கண்ட இணைப்பிலுள்ள கட்டுரைகளையும் வாசிக்கவும்
                      https://www.vinavu.com/2014/04/23/futile-elections-pseudo-democracy-what-is-the-real-solution/#comment-137043

                      மார்க்சிய நூல்கள்- தமிழில்
                      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6883&Itemid=119

                      தயவு செய்து கம்யூனிசத்தைப் பற்றி சரியாகப் படிக்காமல் நீங்களாக ஊகித்து எதையும் கூற வேண்டாம்.

                      நன்றி! தொடர்ந்து விவாதிப்போம்.

              • கற்றது கையளவு,

                ///கம்யுனிசம் தற்போது ஏட்டு சுரைக்காயாக, கறிக்கு உதவாததாக உள்ளது.
                தற்போதைய ஜனநாயக முறையிலும் தேர்தல் முறையிலும் சில குறைகள் உள்ளது, இல்லை என்று சொல்ல வில்லை.///

                கம்யூனிசமே இன்று உலகமக்களின் விடுதலைக்கான விடிவெள்ளியாக இருக்கிறது. வேறு மாற்று எதுவுமில்லை.

                தற்போதைய முறை ஜனநாயக முறையே அல்ல, அது காலாவதியாகி விட்டது, அது இனிமேலும் நீடிக்கமுடியாது என்கிறோம். செத்துபோன பிணத்துக்கு என்னதான் வைத்தியம் பார்த்தாலும் அது வீண், அதற்கு பதில் புதிதாக பிரசவிக்கும் குழந்தையின் மீது கவனம் செலுத்தலாம் என்கிறோம். அதை தான் கட்டுரையும் குறிப்பிடுகிறது.

                அப்படி இல்லை, இந்த முறை இன்னும் நீடிக்க முடியும், இம்முறைக்குள்ளேயே சீர்திருத்தங்களை செய்து மக்களுக்கு பயன்படுமாறு மாற்றலாம் என்று நீங்கள் சொன்னால், அதை எப்படி செய்வது என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும். தயவு செய்து உங்கள் திட்டத்தை முரணின்றி விளக்குங்களேன்.

            • கற்றது கையளவு,

              ///இந்நாட்டின் முதுகெலும்பான விவசாயிக்கு தகுந்த கூலி, வருமானம் கொடுக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. அதே சமயம் அதிகம் உழைத்தால் அதிகம் வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள். ///

              அதிகம் உழைத்தால் அதிக வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள் – என்பதால் தான் விவசாயிக்கும் தொழிலாளிக்கும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை அதிகமாக உழைக்க ஊக்குவிக்கிறோம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகிறோம் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா??

              அதிகம் உழைத்தால் நாட்டின் பொருளாதாரம் அதிகமாக வளரும், பொருளாதாரம் வளர்ந்தால் அது மக்களுக்கே திருப்பிவிடப்படும், அதன் மூலம் அதிக வாசை வாய்ப்புகளை பெறலாம் என்றும் மக்கள் அதிகம் உழைப்பார்கள். அது மட்டுமின்றி பொருளாதாரம் பெருக பெருக மக்களின் வேலை நேரமும் குறையும். இது சோசலிச ரசியாவில் நிறுபிக்கப்பட்டுள்ளது. சபோத்னிக் என்ற நாட்டிற்காக தன்னார்வ வேலைக்கு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு சில பத்தாண்டுகளிலேயே ரசிய பொருளாதாரத்தை மிக வலிமையுள்ளதாக மாற்றினர்.

              தற்போதைய நிலை என்ன? நாட்டின் பெருளாதாரம் வளர்ந்தாலும் கூட மக்களின் வாழ்க்கைநிலை மேம்படுவதில்லை. மாறாக மேலும் கீழிறங்குகிறது. முன்னர் 8 மணி நேரம் உழைத்தவர்கள் இன்று 12 மணி நேரம் உழைத்தாலும் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. வளரும் பொருளாதாரம் ஒரு சில நூறு தனியாரின் சொத்துகளை தான் பெருக்குகின்றன.

              தேவையும் ஆசையும் இல்லையெனில், உழைப்பின்றி மனிதன் சோம்பேறியாகிவிடுவான் என்று தோன்றுவது நியாயமனது தான். தேவையும், ஆசையும், தனிமனித நுகர்வுக்கானதா? சந்தைக்கானதா? சந்தைக்கானதாக இருக்கும் இந்த சமூகத்திலேயே அதன் அழுக்குகளிலேயே பழகிவிட்ட நமக்கு இது நம்பமுடியாததாக தான் இருக்கும்.
              உழைப்பு தான் மனிதனின் இயல்பான நிலை அதை தெரிந்து கொள்ள இதை படித்து பாருங்களேன் : https://www.vinavu.com/2008/11/12/tmstar3/

          • Hi Saravanan,

            நீங்கள் ‘பேடிதனமான’ என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இது பெண் மற்றும் மாற்றுப் பாலினத்தவரை அவமதிக்கும் சொல். பதிலாக கையாளாகாத போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

            • யுனிவர்பட்டி,

              சரவணன் முதலாளித்துவம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துவதற்கு பதில் சமமான உரிமைகள் அளிக்க இயலாத பேடிதனமான, திறமைஅற்ற, ஊழல் மிக்க, புழுத்து போன,நாறிப்போன, தொழிலாளிகள் விரோத, விவசாயிகள் விரோத முதலாளித்துவம் என்று மைல் நீளத்துக்கு வாக்கியமாக தான் சொல்வேன் என்கிறார். அவரது வாக்கியத்தை படித்து முடிப்பதற்குள் அயர்ச்சி வந்து விடுகிறது. நன்கு விவாதம் செய்கிறார். ஆனால் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார். 🙂

              • கற்றது கையளவு,

                கையாளாகாத, திறமைஅற்ற, ஊழல் மிக்க, புழுத்து போன,நாறிப்போன, தொழிலாளிகள் விரோத, விவசாயிகள் விரோத முதலாளித்துவ மாடல் இந்திய அரசை கற்றது கையளவு பீடித்துகொண்டு தொங்குவது ஏனோ ?. 🙂

                • Ideal Conditions என்ற அளவில் தேர்தல் முறை ஜனநாயகமும் நன்றாக இருக்கும், கம்மியுனிச முறை புரட்சி ஆட்சியையும் நன்றாக இருக்கும்.

                  ஆனால் நடைமுறையில் இரு அமைப்புகளிலும் சில ஓட்டைகள் உள்ளன, அவற்றை எப்படி சீரமைத்து நல்வழி நடப்பது என்பது குறித்து தான் விவாதிக்கிறோம்.

                  முதலில் பெரும்பாலான மக்களுக்கு கம்மியுனிசம் என்றால் என்ன என்று புரிய வைக்க வேண்டும். தற்போதைய வேகத்தில் சென்றால் 30 வருடங்கள் அல்ல, 300 வருடங்களானாலும் அதற்கு சாத்தியம் இல்லை என்று தான் தோன்றுகிறது).

                  கொஞ்சம் யோசித்து பாருங்கள், 30 வருடங்கள் அல்ல, ஒரே வருடத்தில் அண்ணா அசாரே லோக்பால் என்ற சட்ட திருத்தத்தை இந்திய அரசை கொண்டு வரச்செய்தது எப்படி?
                  நான் அண்ணா அசாரேவின் ஆதரவாளன் அல்ல. அவர்கள் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் நமக்கு எல்லாம் ஒரு படிப்பினையை தருகிறதல்லவா?

                  ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிக்க சொன்னால் மக்கள் தயங்குவார்கள். மக்களுக்கு பயன் தரும் சட்ட திருத்தங்கள் கொண்டு வர நீங்கள் போராடினால் மக்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். யோசித்து பாருங்கள்.

                  • அண்ணா ஹசாரே முன் வைக்கும் சட்ட திருத்தத்தத்தில் தனியார் முதலாளிகள்,நீதிபதிகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதே . அண்ணாவும் முதலாளிகளும் ஒன்றுபடும் புள்ளி என்பது ஒன்று தான். முதலாளிகளின் அகோரப் பசிக்கு தடையாக மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை லஞ்சம் உள்ளது. அதனால் முதலாளித்துவத்தின் வரம்புக்கு உட்பட்டு சில சட்ட திருத்தத்துடன் மசோதாவை நிறைவேத்தி உள்ளனர் . நண்பரே நீங்கள் இன்னும் ஒன்றை நினைவில் வையுங்கள் .

                    இன்னும் அது சட்டமாக்கவில்லை . அது மட்டமல்ல . அது போல இன்னும் ஏகமான சட்டங்கள் செயல்படுத்தபபடாமல் இருக்கின்றது . அது அதிகார வர்க்கத்தின் வழியாகத்தான் நிறைவேற்றப்படும் . கல்வி சட்டங்களாகட்டும், பழங்குடி மக்களின் உயிர்வாழும் உரிமைகலாகட்டும் அதை நிறைவேற்றாவிடில் அவர்களைத் திருப்பி அழைக்கும் அதிகாரம் நமக்கு இல்லை எனில் நமக்கு இருக்கும் வழிமுறை தான் என்ன? நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது தானே? நீதியரசர்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அவர்களாயும் திருப்பி அழைக்க முடியாது . கடைசியாக என்ன செய்வது ?

                    அனைத்து கதவுகளயும் அடைத்து விட்டு எப்படி தப்பி செல்வது அதை உடைத்தெறியாமல் .

                    நன்றி .

                  • //அவர்கள் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் நமக்கு எல்லாம் ஒரு படிப்பினையை தருகிறதல்லவா?

                    அவர் என்ன தாக்கத்தினை ஏற்பபடுத்தினார் என்பது பற்றி வினவில் கட்டுரைகள் உள்ளன .

                    அதுவும் அவர் முதலில் சொன்ன லோக் பாலில் ஏகப்பட்ட திருத்தம் செய்து தானே கடைசியில் மசோதா மட்டும் நிறைவேறியது .

                    • நண்பா, அண்ணா அசாரே வின் லோக்பால் கூத்துக்கு நான் ஆதரவாளன் இல்லை. அவர்கள் சுய விளம்பரத்துக்கு செய்தது தான் அந்த ஸ்டண்ட் எல்லாம்.

                      நான் அவர் போராடிய வழியை தான் சொன்னேன். தக்க வகையில் போராடினால், சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாமலேயே ஒருவரால் ஒரு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர முடியும் என்ற கருத்துருவை தான் நான் பேசுகிறேன்.

                      வினவின் அடுத்த குறிக்கோள் மக்களை ஒட்டு போடாதிருக்க செய்வது என்பதை தாண்டி மக்களுக்கு பயனுள்ள, தொழிலாளர்கள் நலன் பேணும், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தரும் சட்டங்கள் / சட்ட திருத்தங்கள் கொண்டு வர தீவிரமாக முயற்சிக்கலாமே.

                      தங்களது சட்ட திருத்தங்கள் மக்களுக்கு பயன் தரும் என்ற நம்பிக்கை வந்தால் எங்களை போன்ற பொதுமக்களின் பேராதரவு தங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

                      முயற்சி செய்து தான் பாருங்களேன்.
                      முயலாமலேயே இது தேறாது என்று சொல்லிக்கொண்டிருந்தால் 30 அல்ல, 300 வருட போராட்டமும் இதே தேக்க நிலையில் தான் இருக்கும்.

                      கொஞ்சம் யோசித்து பாருங்கள். விகிதாச்சார அடிப்படையில் மக்கள் தொகையில் எத்தனை விழுக்காடு மக்களுக்கு கம்மியுனிசம் பற்றிய தெளிவு இருக்கிறது?
                      30 வருடம் போராடியும் விழுக்காடு அளவில் முன்னேற்றம் இல்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

                      உங்கள் சித்தாந்தம் மக்களுக்கு புரியவில்லை என்பதா?
                      நீங்கள் மக்களிடம் உங்கள் சித்தாந்தத்தை சரியான பாதையில் விலக்கவில்லையா?
                      உங்கள் சித்தாந்தத்தின் மேல் மக்களுக்கு நம்பிக்கை வரவில்லையா?
                      சிறந்த கம்மியுநிசத்திற்கு தகுந்த மாடல் அரசு ஒன்று தற்காலத்தில் இல்லாதது ஒரு குறையா?

                      தீவிரமாக யோசிக்க வேண்டிய தருணம் இது.
                      மெய்ப்பொருள் காண்பது அறிவு!

                  • //முதலில் பெரும்பாலான மக்களுக்கு கம்மியுனிசம் என்றால் என்ன என்று புரிய வைக்க வேண்டும்.//
                    பெரும்பாலான மக்களுக்கு கம்யுனிசம் வகுப்பெடுத்து புரிய வைத்து பின்னர் புரட்சி நடத்துவதென்பது நடக்காத காரியம் . ஆனால் மக்கள் அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளின் இடையே போராட்டமும் நடத்துகின்றனர் . மக்களுக்கு அவர்களின் பிரச்சினைக்கு மூல காரணத்தை எளிமையாக விளக்கி அவர்களின் வர்க்க உணர்ச்சியை தூண்டி விட்டாலே போதுமானது.

                    உங்களுக்கு ஒரு கேள்வி . இப்போ இருக்கும் இந்த போலி ஜனநாயகம் பற்றி மக்களுக்கு யாராச்சும் வகுப்பெடுத்தார்களா?

                    • பின் எப்படி பெரும்பாலான மக்களின் ஆதரவு கம்மியுநிஸ்ட்களுக்கு கிடைக்கும்?

                      120 கோடி மக்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய, மாற்றியமைக்க கூடிய ஒரு சித்தாந்தத்தை எந்த வித கேள்வியும் இல்லாமல் கண்மூடிக்கொண்டு மக்கள் ஏற்பார்கள் என்று எப்படி நீங்கள் நம்பலாம் செல்வகுமார்?

                      முதல் படி: மக்களுக்கு கம்மியிநிசத்தால் பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.கம்மியுநிசத்தால் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிபோகாது காக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் வர வேண்டும்.

                      இது இல்லாமல் கம்மியுனிசம் இந்தியாவில் புரட்சியாக வெடிக்க முடியாது.

                      ஜனநாயக அமைப்பை குறை கூறினால் உடனே தானாக மக்கள் கம்மியுநிசத்தை ஆதரித்து விடுவார்கள் என்று எண்ணுவது பகல் கனவு.
                      அப்படி பார்த்தால் எல்லோரையும் (ஜெ தவிர) குறை கூறும் சோ வும் சீமானும் இந்நேரம் தமிழகத்தை ஆண்டு இருக்க வேண்டும். குறை கூறினால் மட்டும் மக்கள் ஆதரவு கிடைக்காது. ஆக்கபூர்வமாக மக்களுக்கு உங்கள் சித்தாந்தம் பயன் தரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு எப்போது வருகிறதோ அப்போது தான் மக்கள் பேராதரவு கம்மியுநிஸ்ட்களுக்கு கிடைக்கும்.

                      பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு நீங்கள் மதிப்பளித்து தான் ஆக வேண்டும்.
                      அவர்களுக்கு கம்மியுநிசத்தை நீங்கள் புரிய வைக்காமல் எப்படி அவர்களை ஆள உங்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்?

                      போலி ஜனநாயகம் குறித்து மக்களுக்கு யாரும் வகுப்பெடுக்கவில்லை. ஆனால் மன்னராட்சியை கண்ட மக்கள், வெள்ளைக்காரர்களின் ஆட்சியை கண்ட மக்கள், சுதந்திரம் அடைந்ததும் தங்களுக்கு கருத்து சுதந்திரம் கிடைத்துள்ளது என்று நம்புவதால் தான் ஜனநாயகத்துக்கு எங்களை போன்ற மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

                      முதலில் எங்களுக்கு தற்கால நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய ஒரு நல்ல மாடல் அரசு நடத்தி காட்டுங்கள். அது நல்வழியில் நடக்கிறதென்றால் அந்த மாடலை மக்களாகிய நாங்கள் இங்கும் ஆதரிக்கிறோம்.

                    • அப்பெரும்பான்மையான மக்களை வழிநடத்தி சென்று ஆயுத போராட்டத்தால் மட்டுமே இந்த அரசமைப்பை வீழ்த்தி புதிய மக்கள் அரசமைப்பை உருவாக்க முடியும். உழைக்கும் மக்களுக்கு இழப்பதற்க்கு அவர்களின் உயிரைத் தவிர வேறெதும் இல்லை ஆனால் பெறுவதற்கோ இவ்வுலகமே இருக்கின்றது

                    • People have seen enough of socialism….

                      Govt running and protecting all the business was a nightmare situation.

                      You want phone line, wait in line
                      You want gas connection, wait in line
                      You want a car, wait in line

                      If socialism itself is not bearable , who is ready to take communism?

                      Anyone who wants badly, should visit Cuba and see the effects firsthand from people. Again don’t take your survey from party members/Govt officials.

            • I regrade for my mistake. Here after I use the word “கையாளாகாத” to indicate the performance of this Indian capitalistic Model Government.

      • correction:
        From
        உடல் பருமனுடன் [obesity] உடன் 20% தொழிலாளி வீட்டு குழந்தைகள் வாழ்வதும்…..

        To
        ###உடல் பருமனுடன் [obesity] உடன் 20% முதலாளி வீட்டு குழந்தைகள் வாழ்வதும் ……

    • கற்றது கையளவு,

      [1]இந்தியர்களீன் சராசரி மாத வருமானம் Rs 5,729 ! இது யாருடைய சராசரி மாத வருமானம் ? டாடா,பிர்லா ,அம்பானி உடைய சராசரி மாத வருமானமா ? இல்லை ஏழை விவசாயீகள் ,தொழிலாளிகள் வருமானமா ?

      [2]மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 27 கோடி இந்திய மக்களீன் தின கூலீ rs 29 க்கும் கீழ்!

      [3] 67 ஆண்டுகளாக முதலாளித்துவ மாடல் இந்திய அரசு செய்த சாதனை இது !

      [4] குஷ்ட நோய்/AIDS நோய் பிடித்த இந்த முதலாளித்துவ மாடல் இந்திய அரசு நீங்கள் ஆதரிப்பது ஏனோ ?

      //ம்மியுனிசம் குறித்த ரெபேக்க அவர்களின் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்.

    • கற்றது கையளவு,
      குழந்தைகளை மானபங்கம் செய்யும் முதலாளித்துவ மாடல் இந்திய அரசு
      ———————————————————————————————————————————————————-
      [1]இந்த முதலாளித்துவ மாடல் இந்திய அரசு நம் குழந்தைகளை எவ்வளவு கேவலமாக treatment செய்யுது தெரியுமா ?
      [2] பிறக்கும் குழந்தைகள் based on ransom selection concept படி XX ,XY [female ,male ] குழந்தைகளாக தான் பிறக்குது. ஆனால் இந்த முதலாளித்துவ மாடல் இந்திய அரசு எல்லா குழந்தையும் ஒரே மாதிரியா treat செய்யுது ?பணக்கார ஊட்டு குழந்தைக்கு CBSC ,ஏழை ஊட்டு குழந்தைக்கு state board ! CBSCயீல் படித்த குழந்தைக்கு தானே IITல் சேரும் சாத்தியம் அதிகம் உள்ளது!

      [3]இந்தியா என்ற ஒரு பொதுவான இடத்தில் ஏழை குழந்தைகளுக்கு குறையான கல்வி கொடுக்கும் உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசு சும்மா பம்மாத்துக்கு கொடுக்கும் ஒட்டு உரிமையை வைத்து கொண்டு நாக்கு வழிக்கவா ?

      [4]எல்லா குழந்தைகளுக்கும் சமமான திறமை அளிக்கும் கல்வியை கொடுக்காத உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசு சரியான மொல்லமாறி, முடிச்டுஅவீக்கீ அரசு.

      [5] அட ச , வேறு வேறு தர கல்வியை கொடுப்பதன் மூலம் ஏழை குழந்தைகளை மானபங்கம் செய்யுது உங்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசு.

      [6]குழந்தைகளுக்கு கூட சமமான உரிமைகள் அளிக்க இயலாத இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசை கற்றது கையளவு பீடித்துகொண்டு தொங்குவது ஏனோ ?

      • கோவப்படாமல் கொஞ்சம் நான் சொல்வதை கேளுங்கள் சரவணன்,

        குழந்தைகளின் படிப்புக்கு அந்த குழந்தையின் பெற்றோர் தானே பொறுப்பேற்க வேண்டும்.
        அரசு பள்ளியில் படித்து தான்,டோட் தேர்வில் வெற்றி பெற்று நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். என் பெற்றோர் படிக்கவில்லை, பணக்காரர்களும் இல்லை. அதனால் பணமில்லை என்றால் நன்கு படிக்க முடியாது என்ற தவறான என்னத்தை தவிர்க்கவும்.

        CBSC பள்ளியில் படித்தால் மட்டும் அல்ல State Board பள்ளியில் படித்தும் எத்தனையோ மாணவர்கள் IITயில் சேர்ந்திருக்கிறார்கள்.

        ஸ்டேட் போர்டில் உள்ள ஒரு முக்கிய குறை, புத்தகத்தில் உள்ளதை அப்படியே மக்கடித்து ஒப்பிக்கும் திறன் இருந்தால் போதும், நல்ல மதிப்பெண் வாங்கி விடலாம் என்ற நிலை உள்ளது.
        என் உடன் படித்த பார்ப்பன மாணவர்கள் என்னை விட அதிக மதிப்பெண் வாங்கினாலும், பல முறை என்னுடைய சந்தேகங்களுக்கு அவர்களிடம் பதில் கிடைக்காது. புத்தகத்தில் உள்ள முழு பதிலையும் அப்படியே ஒப்பிப்பார்கள், ஆனால் அவர்களுக்கே அதன் உண்மையான விளக்கம் தெரியாது. இந்த மக்கடிக்கும் முறையால் தாழ்வு மனப்பான்மை பெற்று தேர்வினில் தோல்வி கண்டு படிப்படி நிறுத்திய நண்பர்கள் உண்டு. இந்த மக்கடிக்கும் திறமையல்லாது கருத்துருவை புரிந்து கொண்டு கற்கும் கல்வி முறையை மாணவர்களிடம் ஆசிரியர்களும் பெற்றோரும் வளர்க்க வேண்டும்.

        ப்ராக்டிகல் கல்வி, ஏட்டறிவு மட்டுமல்லாது தமது சுற்றத்தை உன்னிப்பாக கவனித்து நோக்கி கற்கும் திறனை மாணவர்களிடம் வளர்க்க முயற்சிக்க வேண்டும்.

        எடுத்த உடனே நம் இலக்கை அடைய இயலாது. முதல் படியாக அனைத்து மாணவர்களையும், 100 சதவீதம் படிக்க வைத்து வருங்கால வாக்காளர்களை நூறு சதவீதம் படித்தவர்களாக ஆக்க வேண்டும்.

        படிப்பறிவோடு, பண்பாடும், உடன் இருக்கும் சக மனிதர்களுக்கும் உதவும் குணமும், சமத்துவ மனப்பான்மையும், இன, மத சகிப்புத்தன்மையும் சிறு வயதிலிருந்தே கற்று கொடுத்தால் வருங்காலம் நன்றாக இருக்கும்.

        எல்லா பிரச்சினைக்கும் அரசையே குறை கூறிக்கொண்டு நாம் எதுவும் செய்யவில்லை என்றால், தவறு நம் மேல் தான் சரவணன் சார், நாமும் ஒன்றிரண்டு அடிகள் முன் வைத்து சில வேலைகளை செய்ய வேண்டும்.

  20. கற்றது கையளவு,
    [1]கம்யூனிஸ்ட் அரசு இருந்த வரை சோவித் ருசியாவில் அனைவருக்கும் ஒரே ஊதீயம் இருந்தது.
    தற்போது உள்ள அதிபர் புதின் ருசியா அரசு கம்யூனிஸ்ட் அரசா அல்லது capitalist அரசா என்பதை தாங்களே முடிவு செய்யுங்கள்.

    //ரசியாவில் இன்று வரையும் அதே சம ஊதியம் அளிக்க முடிகிறதா?
    600 ரூபில்ஸ் வேண்டாம், பண வீக்கத்தினால் 6000 ரூபில்ஸ் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். இன்று ரசியாவில் இதே முறை இன்னும் பின்பற்றப்படுகிறதா?

    ரசிய அதிபர் புதினுக்கும், அவரது அலுவலகத்தை சுத்தம் செய்யும் தொழிலாளுக்கும் இன்றும் ஒரே ஊதியம் தானா?//

    [2]வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 27 கோடி இந்திய மக்களீன் தின கூலீ rs 29 க்கும் கீழ்.இந்தியர்களீன் சராசரி மாத வருமானம் Rs 5,729 ! இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி,உணவு,உடை ஆகிய செலவுகளுக்கு யார் பொறுப்பு ? 5729 * 12= rs 68,748.வீட்டுவாடகை,உணவு ,மின்சாரம்,உடை,கல்வி ஆகியவற்றுக்கு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு வருமானம் போதுமா ?முதலாளித்துவ மாடல் இந்திய அரசுக்கு மக்களீன் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியாத போது அதனை அடித்து வீழ்த்தும் கம்யூனிஸ்ட் புரட்சி சாத்தியம் தான் !

    //குழந்தைகளின் எதிர்காலத்தை பராமரிப்பது அந்த குழந்தைகளின் பெற்றோரின் கடமை.
    வயதானதும் பெற்றோரை பராமரிப்பது அந்த வளர்ந்த குழந்தைகளின் கடமை.
    இது தான் இந்திய குடும்ப வாழ்க்கை முறை. //

    [3]குழந்தைகள் யார் சொத்து ? ஒரு நாட்டின் அறிவு,ஆற்றல் வாய்ந்த சொத்து நம் குழந்தைகள். அவர்களுக்கு முறையான கல்வி /உணவு /உடை கொடுக்க முடியாத உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசின் குரல் உங்கள் பதிலில் [அரசே எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தால் பின் மக்களிடம் சோம்பேறித்தனம் தான் மிஞ்சும்.] எதிரொலிக்கின்றது.இருக்கும் அரசு பள்ளி /கல்லூரிகளையும் மூடிவிட சொல்கின்றீர்களா ?

    //அரசே எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தால் பின் மக்களிடம் சோம்பேறித்தனம் தான் மிஞ்சும்.//

    [4]இது எல்லாம் உங்கள் முதலாளித்துவ மாடல் பொருளாதாரம் பின் பற்றும் முறைகள்,அதன் தவீர்க்க இயலாத பிரச்சனைகள் . ஆனால் எமது கம்யூனிஸ்ட் சமுதாயம், 67 ஆண்டுகளாக உங்கள் இந்திய முதலாளித்துவ மாடல் உயர்த்தாத மக்கள் வாழ்க்கை தரத்தை வெறும் 10 ஆண்டுளில் ருசியாவில் உயர்தியது.

    //ஒரு அலுவலகத்தில் எல்லோருக்கும் ஒரே சம்பளம். திறமையாக வேலை செய்பவருக்கும், வலை செய்வது போல பாவ்லா காட்டிக்கொண்டு ஓபி அடிப்பவர்களுக்கும் ஒரே சம்பளம் என்றால் எப்படி. ஒரு கடையில் நன்கு சுறுசுறுப்பாக வேலை செய்து அதிக வாடிக்கையாளர்களை கொண்டு வரும் விற்பனை நபருக்கு வேளைக்கு ஏற்ற வகையில் Incentive கொடுத்தால் தானே அவர் மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவர முயலுவார்? இல்லையென்றால் கொடுத்த சம்பளத்திற்கு இந்த வேலையே அதிகம் என்று சுணங்கி போக மாட்டாரா?//

    con…..

  21. கற்றது கையளவு,,

    [5]குழந்தைகளுக்கு கூட சமமான உரிமைகள் அளிக்க இயலாத பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசை நான் அம்பல படுத்தியும் உங்களால் ஏற்க்க முடியாதது எனக்கு வீயப்பு அளிக்கவில்லை. அய்யா இரு முறைகளையும் ஒருங்கீணைத்தல் வருவது நமது நேரு கண்ட கலப்பு பொருளாதாரம் [mixed economy]. அது தோல்வியா ? வெற்றியா ? என்பதை சிந்தியுங்கள்.!

    //கம்யுனிசம் தற்போது ஏட்டு சுரைக்காயாக, கறிக்கு உதவாததாக உள்ளது.
    தற்போதைய ஜனநாயக முறையிலும் தேர்தல் முறையிலும் சில குறைகள் உள்ளது, இல்லை என்று சொல்ல வில்லை. கம்மியுநிசத்திலும் சில குறைகள் இருக்கிறது, இல்லைவே இல்லை என்று நீங்கள் மறுக்க இயலாது. இரு முறைகளையும் தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு புதிய ஜனநாயக முறையான கம்யினுநிசத்தை நாம் வடிவமைத்தால் எல்லோருக்கும் அது நல்ல தீர்வாக இருக்கும் அல்லவா. //

    con……

  22. கற்றது கையளவு,

    [6]முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆதரிக்கும் எவருமே முதலாளித்துவ ஜனநாயகவாதிதான்

    //நான் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகவும், முதலாளித்துவத்தை ஆதரிப்பதாகவும் தவறாக எண்ண வேண்டாம். என்னை முதலாளித்துவவாதியாக உருவகப்படுத்தாமல், உண்மையான ஜனநாயகவாதியாக கருதுங்கள்.//

    [7]கம்யுனிசன் “ஏட்டு சுரைக்காய்” என்றால் நாறிபோன இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசுக்கு மாற்று என்ன ?
    //கம்யுனிசம் தற்போது ஏட்டு சுரைக்காயாக, கறிக்கு உதவாததாக உள்ளது.//

  23. [8]கம்யுனிசத்தீன் பின்னடைவு என்று எதை கூறுகின்றீர் ?

    அனைவருக்கும் வேலை ,கல்வி ,உணவு,உடை,இருப்பீடம் ஆகியவற்றை உறுதி செய்த தோழர் லெனின்,ஜோசப் ஸ்டாலின்,மாஒ ஆகீயவர்களீன் அரசையா?

    அல்லது ரஷ்ய ,சீனா கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாளிகள் ஊடுருவி சீரழீத்த நிகழ்வையா ?ரஷ்ய ,சீனா நாடுகளில் முதலாளித்துவம் மீண்டும் வந்ததுக்கு இது தான் காரணம்.

    //வரலாறு சில பாடங்களை நமக்கு கற்று கொடுக்கிறது. சோவியத் யூனியன், சீனா, இவற்றில் கம்யுனிசம் பின்னடைவு அடைந்ததென்றால் ஏன் என்று ஆராயாமல் எல்லா நாடுகளிலும் அதே முறையை கண்ணை மூடிக்கொண்டு மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் கேட்கலாம்? கம்யுனிசம் தோன்றிய இடத்திலேயே அதனால் அதன் உண்மையான வடிவில் நிலைத்திருக்க முடியவில்லை என்றால் தவறு எங்கே ஆரம்பிக்கிறது?//

  24. கற்றது கையளவு,

    [9]ஆம் ஜனநாயக தேர்தல் முறை என்பது தவறல்ல தான் ! யாருக்கு தவறு இல்லை ? டாடா,பிர்லா,அம்பானி போன்ற 20 % முதலாளிகளுக்கு ஜனநாயக தேர்தல் முறை தவறு இல்லை தான். ஆனால் 80% ஏழை எளீய உழைக்கும் தொழிலாளர்கள்,வீவசாயீகலுக்கு உங்கள் முதலாளித்துவ ஜனநாயக தேர்தல் முறை எந்த பயனையும் அளிக்கவில்லை.எனவே இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசை நாங்கள் வீழ்த்துவோம் ! தொழிலாளர்கள்,வீவசாயீகள் தலைமையில் புதிய ஜனநாயக அரசை உருவாக்குவோம்.

    //ஜனநாயக தேர்தல் முறை என்பது தவறல்ல, அதனை ஆள்பவர் தவறானவறாக இருப்பதால் ஜனநாயகம் தவறென்று சொல்ல முடியாது. வண்டியை ஓட்டுபவர் செய்யும் தவறுக்கு வண்டியை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. //

  25. [10]ஆம் நடைமுறையில் சாத்தியம் இல்லை தான். யாருக்கு சாத்தியம் இல்லை?இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசுக்கு அனைவருக்கும் உணவு அளீப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை தான். அதனால் தானே முதலாளித்துவ மாடல் இந்திய அரசை வீழ்த்த வேண்டும் என கூறுகின்றோம் .

    //அனைவருக்கும் ஒரே வகை உணவு என்பது நடைமுறையில் சாத்தியப்படுமா, தெரியவில்லை//

    [11]முதலீல் ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழைந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ?

    //CBSC பள்ளியில் படித்தால் மட்டும் அல்ல State Board பள்ளியில் படித்தும் எத்தனையோ மாணவர்கள் IITயில் சேர்ந்திருக்கிறார்கள். //

    [12]ஆம் …,ஆம். எல்லா பிரச்சினைக்கும் முதலாளித்துவ மாடல் இந்திய அரசையே குறை கூறிக்கொண்டு நாம் எதுவும் செய்யவில்லை என்றால், தவறு நம் மேல் தான்.உண்மை தான். அதனால் தான் இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசை வீழ்த்தி தொழிலாளர்கள்,வீவசாயீகள் தலைமையில் புதிய ஜனநாயக அரசை உருவாக்குவதற்கு தோழர்களுக்கு உதவ போகிறேன்.

    //எல்லா பிரச்சினைக்கும் அரசையே குறை கூறிக்கொண்டு நாம் எதுவும் செய்யவில்லை என்றால், தவறு நம் மேல் தான் சரவணன் சார், நாமும் ஒன்றிரண்டு அடிகள் முன் வைத்து சில வேலைகளை செய்ய வேண்டும்.//

  26. சரவணன்,
    நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டு விவாதிக்கிறீர்கள். கம்யூனிசத்தையோ, முதலாளித்துவத்தையோ இறுதித் தீர்ப்பாக எடுத்துக் கொள்ளாமல் அதன் கூறுகளை விவாதியுங்கள்; விமர்சியுங்கள். நமக்குத் தெளிவு பிறக்கும். கற்றது கையளவு சரியாக விவாதத்தினை எடுத்துச் செல்கிறார்.

  27. சரவணன் அவர்களே, நீங்கள் செந்தில்குமரன் தான், சந்தேகமே இல்லை எங்களுக்கு 🙂

    இப்போது தங்களது பதில்களுக்கு வருவோம்.

    //கம்யூனிஸ்ட் அரசு இருந்த வரை சோவித் ருசியாவில் அனைவருக்கும் ஒரே ஊதீயம் இருந்தது.
    தற்போது உள்ள அதிபர் புதின் ருசியா அரசு கம்யூனிஸ்ட் அரசா அல்லது capitalist அரசா என்பதை தாங்களே முடிவு செய்யுங்கள்.//

    1. லெனின், ஸ்டாலின் உருவாக்கிய கம்மியுனிச சித்தாந்தம் ஏன் புதின் தலைமையில் முதலாளித்துவ ஆட்சியாக மாறியது? ஒரு சித்தாந்தம் சிறந்தது என்றால் ஏன் அந்த சித்தாந்தத்தை மக்கள் புறக்கணிக்கிறார்கள்? மிக ஆழமாக யோசிக்க வேண்டிய விடயம் இது. ரசியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த புரட்சி சித்தாந்தம் ரசியாவிலேயே பின்பற்றப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம். ரசியாவிலேயே பின்பற்றாத புரட்சி சிந்தாந்தத்தை இந்தியாவிலும் ஏன் பின்பற்ற வேண்டும்? உலகின் ஏதாவது ஒரு மூலையில் தற்போதைய நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய சிறந்த புரட்சி அமைப்பு ஆட்சி எங்காவது இருந்தால், எங்களுக்கு காட்டுங்கள். அதை ஒரு மாதிரி வடிவமாக நாங்கள் ஆராய்ந்து மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் மக்களிடமே அதை நாம் அனைவரும் கொண்டு செல்வோம். We need to see a live, workable Model state for your type of Governance.

    //வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 27 கோடி இந்திய மக்களீன் தின கூலீ rs 29 க்கும் கீழ்.இந்தியர்களீன் சராசரி மாத வருமானம் Rs 5,729 ! இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி,உணவு,உடை ஆகிய செலவுகளுக்கு யார் பொறுப்பு ? 5729 * 12= rs 68,748.வீட்டுவாடகை,உணவு ,மின்சாரம்,உடை,கல்வி ஆகியவற்றுக்கு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு வருமானம் போதுமா ?//

    2. போதாது தான். குறைந்த பட்ச கூலி, குறைந்த பட்ச மாதச்சம்பளம் என்ற ஒரு குறிப்பிட்ட அளவை தொழிலாளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை சட்டமாக கொண்டு வர நாம் அனைவரும் முயலலாம். ஒட்டு மொத்தமாக மக்களை தேர்தலை புறக்கணிக்க வைப்பதை விட இது போன்ற மக்களுக்கு பயன் தரும் சட்டங்களை நிறைவேற்ற முதலில் ம.க.இ.க. தோழர்கள் முயல வேண்டும்.
    விலைவாசி ஏற்றத்தை, பண வீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த குறைந்த பட்ச சம்பளம்/கூலி அவ்வபோது சீரமைக்கப்பட்டு கொண்டே இருக்க வேண்டும். நாட்டை ஒரேயடியாக மாற்ற முடியாது, படிப்படியாக மாற்றலாம். இது முதல் படியாக இருக்கட்டுமே. அண்ணா அசாரேவால் ஒரு சிறு கும்பலை வைத்து கொண்டு லோக்பால் என்ற சட்டத்தை கொண்டு வர பாராளுமன்றத்தை நிர்பந்தித்து வெற்றி பெறுவதை போல நாட்டில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட்களும் (ம.க.இ.க. உட்பட) சேர்ந்து இந்த குறைந்த பட்ச சம்பளம்/கூலி, தொழிலாளிகளின் வேலை நேரம் போன்றவற்றை சட்டம் மூலம் காக்கலாம்.

    3. அரசு கல்லூரிகளை நான் எப்போது மூடச்சொன்னேன். கோபப்படாதீர்கள் சார், நானே அரசு பள்ளியில் படித்தவன் தான். குழந்தைகளை பெற்றால் மட்டும் போதாது, குழந்தைகளின் உணவு, உடை, கல்வி அனைத்தையும் அளிப்பது பெற்றோரின் கடமை என்று தான் சொன்னேன். நான் மேலே சொன்ன குறைந்த பட்ச சம்பளம் தொழிலாளிகளுக்கு அளிக்கப்பட்டால் அவர்களால் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு முடியும். CBSE பள்ளிகளுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. அரசு பள்ளிகளில் படித்த நான் CBSE மாணவர்களை விட நன்றாகவே மதிப்பெண் வாங்கினேன். அதையும் இதையும் குழப்பி கொள்ள வேண்டாம் சார். குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோரின் கடமை. வயதான பின் பெற்றோரை பாதுகாப்பது பிள்ளைகளின் கடமை.

    4. கம்மியுனிசம் ரசியாவில் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது, உயர்த்தியது என்றே சொல்கிறீர்கள். அதன் பின் ஏன் கம்முநிசம் அங்கே சுணங்கி போனது? ஆரம்பம் நன்றாக இருந்தால் பத்தாது சராணன் சார், FINISHING உம் சரியாக இருக்க வேண்டாமா? ரசியாவில் வாழ்க்கை தரம் உயர்ந்தது போல உலகில் எத்தனையோ நாடுகளில் ஜனநாயக ஆட்சியிலேயே மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்தே வந்துள்ளதே. அவற்றை ஏன் கணக்கில் எடுத்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?

    5. நாடு முழுவதும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சமச்சீர் கல்வி என்ற சட்டம் கொண்டு வந்தால் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டலாம். தமிழக அளவில் இந்த கல்வி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதே, இதை இன்னும் செம்மை படுத்தினாலே போதும்.

    6. நான் கண்டவரை கம்யுனிச ஆட்சிகளில் ஜனநாயகம் கொஞ்சம் அடிவாங்கி கொண்டு தான் இருக்கிறது. ரசியா, சீனாவில் மக்கள் குரலுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கின்றனவா, இல்லை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறதா? அரசாங்கத்துக்கு எதிராக வினவு போல தைரியமாக சீனாவில் மீடியா செயல்பட முடியுமா? கம்யுனிச சீனாவில் ஜனநாயகம் தழைக்கின்றதா? தியான்மென் சதுக்கம் நினைவில் இருக்கிறதா?

    7. திறமையற்ற, ஊழல்வாதிகள் இவர்களை மக்கள் நிராகரித்தாலே போதுமே. மக்களான நம் கையில் தான் இந்த சக்தி இருக்கிறது. நான் ஏற்கனவே கூறியது போல கக்கன் போல ஒருவர் இப்போது கிடைத்தாரானால் நாங்கள் அனைவரும் அவரது ஆட்சிக்கே ஒட்டு போடுவோம். நான் ஏற்கனவே மேலே கூறியது போல மக்களுக்கு பயனுள்ள சட்டங்களை அவர் மூலம் நிறைவேற்றலாம். அது முடியாத பட்சத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சிகளை அண்ணா அசாரே வழி போல நிர்பந்தித்து சில சட்டங்களை நிறைவேற்ற போராடலாம். நல்ல சட்டங்களுக்கு எங்களை போன்ற பொதுமக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

    8. நீங்கள் தான் முன்னொரு பதிவில் ரசியாவிலும் சீனாவிலும் கம்மியுனிசம் தோல்வி அடையவில்லை, சற்று பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னீர்கள். அதை தான் நானும் குறிப்பிட்டேன். பின்னடைவு ஏற்பட்டது உண்மை. நோய் நாடி, நோய் முதல் நாடி… பின்னடைவுக்கான காரணத்தை தீர்க்கமாக ஆராயுங்கள். தற்போதைய கம்மியுநிசத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்றால் ஏன் இல்லை, என்ன மாற்றம் தேவை என்று தாங்கள் தான் யோசிக்க வேண்டும்.

    9. ஜனநாயக தேர்தல் முறையால் பயனில்லை சரி. கம்மியுனிச ஆட்சிகளாலும் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அப்போது மக்களாகிய நாங்கள் என்ன தான் செய்வது. முதலில் கம்மியுநிசத்தில் உள்ள குறைகளை நீங்களே சீர்தூக்கி ஆராய்ந்து நிவர்த்தி செய்து மக்களிடம் மீண்டும் கொண்டு வாருங்கள். தங்களது தற்போதைய கம்மியுநிசத்தில் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. நம்பிக்கை வருவதற்கு கம்மியுநிஸ்ட்கள் ஏதாவது செய்ய வேண்டும்.

    10. தங்களது வாதங்களில் கோபம் மட்டும் தான் கொப்பளிக்கிறது. சற்று நிதானமாக யோசியுங்கள். நடைமுறைக்கு சாத்தியமான ஒரு வழியை எங்களுக்கு கொடுத்தால், அந்த வழி எம்மை போன்ற பொதுமக்களுக்கு பயனளிக்கும் என்றால் எங்கள் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு.

    11.எனது மூன்றாவது பதிலை பாருங்கள்.

    12. தற்போதைய ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக வீழ்த்தி புதிய ஜனநாயக ஆட்சியை கொண்டு வருவதை விட தற்போதைய ஜனநாயக வழியிலேயே சட்டங்களை மாற்ற முயலலாம். 30 வருட போராட்டத்தில் ம.க.இ.க வினால் எத்தனை சதவீத வெற்றி பெற முடிந்தது? மன்னிக்கவும், மக்களிடையே ம.க.இ.க வின் புரட்சி ஆட்சி விளக்கம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

    (இது வரை இத்தனை பெரிய பின்னூட்டத்தை நான் பதிவிட்டதில்லை. சரவணன்/செந்தில்குமரன் அவர்களின் புண்ணியத்தில் இத்தனை பெரிய பதிலை அளிக்க வேண்டியதாயிற்று 🙂 )

    • கற்றது கையளவு,

      [1] “லெனின், ஸ்டாலின் உருவாக்கிய கம்மியுனிச சித்தாந்தம் ஏன் புதின் தலைமையில் முதலாளித்துவ ஆட்சியாக மாறியது? “என்ற உங்கள் கேள்விக்கு நான் கூறிய பதில் என்ன ?

      அனைவருக்கும் வேலை ,கல்வி ,உணவு,உடை,இருப்பீடம் ஆகியவற்றை உறுதி செய்த தோழர் லெனின்,ஜோசப் ஸ்டாலின்,மாஒ ஆகீயவர்களீன் அரசையா? இதை மறுக்க முடியுமா உங்களால்? கம்மியுனிச சித்தாந்தம் சரி என்று நிருபணம் ஆகி உள்ளதே. 🙂 )

      ரஷ்ய ,சீனா கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாளிகள் ஊடுருவி முதலாளித்துவ கொள்கைகளை புகுத்தி ரஷ்ய ,சீனா நாடுகளை முதலாளித்துவ நாடக்கினர்.பெயருக்கு கம்யுனிச நாடு ஆனால் நடந்தது capitalism.அதன் பின்பு 1990 களில் ரஷ்யாவில் கோர்பசேவ் அந்த போலி கம்யுனிசத்தையும் நீக்கி முழுமையான முதலாளித்துவ நாடக்கினார்.

      [2]ஆம் இவர்களால் [முதலாளித்துவ மாடல் இந்திய அரசால்] முதலாளிகளுக்கு மட்டும் தானே வரி சலுகைகளும், கடன் தள்ளுபடிகளும் [ex kingfisher airlines ] அளிக்க முடியும். உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசு தொழிலாளர், விவசாயி விரோத அரசாக இருப்பதை ஏற்றுகொண்டதற்கு நன்றி !நீங்கள் அவர்களுடன் பேசி பார்க்க சொல்கின்றீர். நாங்கள் இந்த தொழிலாளர், விவசாயி விரோத முதலாளித்துவ மாடல் இந்திய அரசையே துக்கி ஏறிய சொல்கின்றோம்.

      [3]”குழந்தைகளின் உணவு, உடை, கல்வி அனைத்தையும் அளிப்பது பெற்றோரின் கடமை என்று தான் சொன்னேன். நான் மேலே சொன்ன குறைந்த பட்ச சம்பளம் தொழிலாளிகளுக்கு அளிக்கப்பட்டால் அவர்களால் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு முடியும்” என்று இத்துனை 67 ஆண்டுகளாக எத்துனையோ கற்றது கையளவுகள் பேசிவீட்டார்கள். ஆனால் நடப்பது என்ன ? தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கை தரம் குறைவது, முதலாளி மேலும் மேலும் சொத்து சேர்ப்பது தானே நடக்கிறது.

      முதலீல் ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழைந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ? என்ற என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

      [4]. //”கம்மியுனிசம் ரசியாவில் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது, உயர்த்தியது என்றே சொல்கிறீர்கள்.”//
      உங்களுக்கு உண்மையை கூறினால் ஏன் எரிச்சல் வருகிறது ? இந்தியாவில் 67 ஆண்டுகளாக உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசால் செய்ய முடியாத சாதனைகளை வெறும் 10 ஆண்டுகளில் செய்த சோவித் ருஷ்ய அரசை நான் பாராட்டாமல் ஏன் இருக்க வேண்டும்.

      [5]முதலீல் ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழைந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ? என்ற என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

      இந்தியா என்ற ஒரு பொதுவான இடத்தில் ஏழை குழந்தைகளுக்கு குறையான கல்வி கொடுக்கும் உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசு சும்மா பம்மாத்துக்கு கொடுக்கும் ஒட்டு உரிமையை வைத்து கொண்டு நாக்கு வழிக்கவா ? என்ற என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

      [6]கம்யுனிசம் என்பதே பாட்டாளி வர்க சர்வாதிகாரம் தான். முதலாளிகளுக்கு எந்த உரிமையும் இல்லை.

      [7]இந்தியாவில் 67 ஆண்டுகளாக உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசால் செய்ய முடியாத சாதனைகளை இனிமேல் தான் சாதிக்க போகின்றிர்களா ?

      [8]கம்யுனிசத்தீன் பின்னடைவு என்று எதை கூறுகின்றீர் ?
      அனைவருக்கும் வேலை ,கல்வி ,உணவு,உடை,இருப்பீடம் ஆகியவற்றை உறுதி செய்த தோழர் லெனின்,ஜோசப் ஸ்டாலின்,மாஒ ஆகீயவர்களீன் அரசையா?
      அல்லது ரஷ்ய ,சீனா கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாளிகள் ஊடுருவி சீரழீத்த நிகழ்வையா ?ரஷ்ய ,சீனா நாடுகளில் முதலாளித்துவம் மீண்டும் வந்ததுக்கு இது தான் காரணம். என்ற என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

      [9]//கம்மியுனிச ஆட்சிகளாலும் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை.//
      அனைவருக்கும் வேலை ,கல்வி ,உணவு,உடை,இருப்பீடம் ஆகியவற்றை உறுதி செய்த தோழர் லெனின்,ஜோசப் ஸ்டாலின்,மாஒ ஆகீயவர்களீன் கம்யுனிச அரசு

      [10]ஆம் நடைமுறையில் சாத்தியம் இல்லை தான். யாருக்கு சாத்தியம் இல்லை?இந்த பேடிதனமான, தீறமைஅற்ற, ஊழல் மிக்க முதலாளித்துவ மாடல் இந்திய அரசுக்கு அனைவருக்கும் உணவு அளீப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை தான். அதனால் தானே முதலாளித்துவ மாடல் இந்திய அரசை வீழ்த்த வேண்டும் என கூறுகின்றோம் . இதற்க்கு இன்னும் பதில் இல்லை.

      [11]முதலீல் ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழைந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ? என்ற என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

      [12]ஊருல ஒரே ஒரு ஓட்டு பொறுக்காத நல்லவன்[ம.க.இ.க] இருந்தால் அவனையும் கெட்டவனாக்க பார்கீன்றீர்களே நண்பா !

  28. மறுபடியும் 12 பதில்களா? சரி, முடிந்தவரை உங்களது பின்னூட்டங்களுக்கு எளிய வகையில் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

    1. நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். ரசியாவில் உண்மையான கம்மியுனிசம் முதலில் இருந்தது. ஆனால் முதலாளிகள் அந்த கம்மியுநிசத்தை ஒழித்து கட்டி, போலி கம்மியுநிசத்தை உருவாக்கி விட்டார்கள் என்கிறீர்கள். சரி. ஒத்துக்கொள்கிறேன், முதலாளிகள் ஆட்சியாளர்களை வளைத்து போட்டு சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றனர் என்றே கருதிக்கொள்வோம். ஆனால், ஏன் பழைய கம்மியுனிசம் தான் வேண்டும் என்று ரசிய மக்கள் போராடவில்லை? ஏன் முதலாளித்துவத்தை மக்கள் ஒத்துக்கொண்டனர்? கம்மியிநிசம் வேரூன்றியதற்கு மக்கள் போராட்டம் ஒரு முக்கிய தூண்டுகோலாய் இருந்ததல்லவா, ஏன் இரண்டாம் போராட்டத்தை மக்கள் துவக்கவில்லை? ஆவேசமாக இல்லாமல் சற்று நிதானமாக யோசித்து பார்க்க வேண்டிய முக்கிய விடயம் இது. பழைய கம்மியுனிசம் தான் வேண்டும் என்று ரசிய மக்களிடம் தற்காலத்தில் எந்த வித பெரிய புரட்சியும் போராட்டமும் நடைபெறுவதாக எனக்கு தெரியவில்லை.

    2. முதலாளித்துவ மாடல் தவறு என்று சொல்கிறீர்கள். தங்களுடைய கம்மியுனிச மாடல் சரி என்றால் ஏன் அதற்கான ஒரு மாடல் தற்காலத்தில் இல்லை? ஒரு நல்ல மாடல் அரசாங்கம் இருந்தால் காட்டுங்கள். பொருளாதார அளவில், ஜனநாயக அளவில், வளர்ச்சி அளவில், அனைத்திலும் அந்த மாடல் எப்படி செயல்படுகிறதென்று பார்த்து விட்டு மக்களாகிய நாங்கள் முடிவு செய்கிறோம், எது நல்லது, எது கெட்டது என்று. தற்கால நிகழ்கால நாடுகளில் உங்களது வெற்றிகரமான மாடல் இருந்தால் காட்டுங்கள், பழைய வரலாறு வேண்டாம். அப்படி ஒரு மாடல் இல்லை என்றால் ஏன் இல்லை? ஏன் மக்கள் ஒரு நல்ல மாடலை புறக்கணிக்கிறார்கள்?
    மெய்ப்பொருள் காணுங்கள். இந்தியாவின் ஜனநாயக ஆட்சிமுறை ஊழல்வாதிகளால் களங்கப்பட்டது போல ரசியாவின் கம்மியுனிச மாடலும் முதலாளிகளால் களங்கப்பட்டது. இதனால் ஆட்சி முறை எவ்வாறாக இருந்தாலும், ஆள்பவர் எப்படி என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. ஒரு பிழைப்புவாதியிடம், ஊழல்வாதியிடம் ஆட்சியை ஒப்படைத்தால் கம்மியுநிசமாவது, ஜனநாயகமாவது, மன்னராட்சியாவது, எல்லா ஆட்சியையும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஒரு திறமையான நேர்மையான தலைமை இருந்தால் ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும், கம்மியுனிச ஆட்சியாக இருந்தாலும், மன்னராட்சியே இருந்தாலும், மக்கள் நலமாக வாழ்வார்கள்.
    மீண்டும் சொல்கிறேன். வண்டியை ஒட்டுபவனுடைய தவறுக்கு நீங்கள் வண்டியை குறை கூறிக்கொண்டிருக்கிறீர்கள். ஜனநாயகத்தில் ஆள்பவர் தவறு செய்தால் அது ஜனநாயகத்தின் தவறல்ல. ஆள்பவரின் தவறு தான்.

    மற்றபடி உங்களது அனைத்து பதில்களிலும் ஒரே கருத்தை தான் திரும்ப திரும்ப வேறு வேறு வழிகளில் சொல்கிறீர்கள். நான் கேட்கும் முக்கிய கேள்விகளுக்கு நேரடியாக பதில்கள் தராமல் தற்போதைய அரசாங்க முறையில் இருக்கும் குறைகளை மட்டும் காட்டுகிறீர்கள். அந்த குறைகளுக்கு நான் கொடுத்த மாற்று வழிகளை (குறைந்த பட்ச கூலி/சம்பள நிர்ணயம், சமச்சீர் கல்வி முறை போன்றவை)ஜனநாயக ஆட்சியிலேயே சட்டமாக கொண்டு வந்து செம்மையாக நடைமுறை படுத்தினாலே போதும்.

    சரவணன், ஒரு சிறிய வேண்டுகோள். “Brevity is the Soul of Wit” என்று சொல்வார்கள்.
    தங்களது கருத்துக்களை நச் என்று நாலே வரிகளில் சொல்லலாம். மைல் கணக்கில் பெரிய பின்னூட்டமிட்டால் பெரும்பாலானவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் சென்றடையாது. நீங்கள் 12 பாயிண்டுகளை சொன்னதால் நான் அனைத்திற்கும் முதலில் தனித்தனியாக பதிலளித்தேன். ஆனால் கூர்ந்து பார்த்தோமானால் பெரும்பாலான கருத்துக்கள் Repetition ஆக திரும்ப திரும்ப வருகிறது.
    பின்னூட்டங்கள் பெரிதானால் விவாதங்கள் நீர்த்து போகின்றன. அதே போல ஒரு வார்த்தையில் முடிக்க வேண்டிய சொல்லை ஒரு பெரிய வாக்கியமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    • நல்ல மனிதர்கள் ஒரு மோசமான அமைப்பு முறையை திருத்தி விடுவார்கள் என்பது தவறான அபிப்பிராயம் என்பது திரும்ப திரும்ப நிரூபிக்கப்பட்டுள்ளது. மிகச்சமீப உதாரணம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் அமைச்சகத்தில் நடந்திருக்கும் முறைகேடுகள். அந்தோணி அரசியல் வாழ்க்கையில் அப்பழுக்கற்றவர் என்று பெயர் பெற்றவர். அரசியல் நேர்மைக்கு சமகாலத்தில் அதிகம் உதாரணத்திற்கு கட்டப்படுபவர். சர்வதேச ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ராணுவ விமானங்கள் வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த முறைகேடு ஒருமுறை நிகழவில்லை. ஐந்து வருடங்கள் 2007 லிருந்து 2011 காலகட்டம் வரை தங்குதடையின்றி நடைபெற்று வந்துள்ளது. இது மட்டுமின்றி தரம் குறைந்த நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கி அவை விபத்துக்குள்ளான பிரச்சினையிலும் கடுமையான ஊழல் புகார்கள் எழுந்தன. அந்தோணியால் ஊழல் அதிகாரிகளையும், வி.கே. சிங் மாதிரியான காவி பயங்கரவாத சிந்தனையும், ஊழல் தளபதிகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதல்ல பிரச்சினை. முதலாளித்துவ ஊடகங்கள் ஊழல் புகார் எழும்பிய அதிகாரிகளை கண்டிக்கவில்லை; மாறாக அவர்கள் மீதான புகாரை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்ட அந்தோணி மீது பாய்ந்தனர். அவர் வேகவேகமாக முடிவுகள் எடுக்கவில்லையாம். மிகவும் தாமதமாக முடிவுகள் எடுக்கிறாராம். மிகவும் ஆய்ந்து எடுத்த முடிவுகளே இந்த கதியில் இருக்கும் போது அவர் இன்னும் வேகமாக முடிவுகள் எடுக்க வலியுறுத்துகிறார்கள். அதாவது, ராணுவக் கொள்ளைக்கு ராணுவ அமைச்சகத்தை திறந்து விட கோருகிறார்கள். இது தான் முதலாளித்துவ பொருளாதாரம் இயங்கும் முறை. முதலாளித்துவக் கொள்ளைக்கு பயன்படுவது தான் முதலாளித்துவ ஜனநாயகம். இதற்கும் கம்யூனிஸ்ட்கள் விரும்பும் சோசலிச ஜனநாயகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

      • சுக்தேவ் அவர்களே,

        நம்மிடையே இருக்கும் OPTIONS என்ன என்று பார்க்கலாம்.

        1. தேர்தல் முறை ஜனநாயகம்
        2. புரட்சி முறை ஆட்சி

        இரு அமைப்புகளிலும் ஆள்பவர் பலமில்லாதவராகவோ, சந்தர்ப்பவாதியாகவோ, ஊழல்வாதியாகவோ, பாசிச சர்வாதிகார உணர்வு கொண்டவராகவோ இருந்தால் இரு அமைப்புகளுமே தோல்வியை அடைவது நிச்சயம்.

        தேர்தல் முறை ஜனநாயகத்தை மக்களாகிய நாங்கள் அனுபவித்துள்ளதால் அதில் உள்ள நிறை/குறை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது – Known Devil.

        புரட்சி முறை ஆட்சி குறித்து பொதுமக்களிடையே இன்னும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை – May be an Unknown Angel, We are not sure. கம்யூனிஸ்ட்கள் தற்போதைய நடைமுறை ஜனநாயகத்தில் உள்ள குறைகளை மட்டுமே கவனம் செலுத்துகின்றனரே தவிர மாற்று அமைப்பை பற்றி தெளிவான ஒரு விளக்கத்தை பொதுமக்களாகிய எங்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பது கசப்பான உண்மை. ஒத்துக்கொள்ள வேண்டியது தான்.

        புரட்சி முறை ஆட்சி நடைமுறை படுத்தப்பட்ட ரசியா, சீனாவில் இன்று கம்மியுனிசம் வெறும் ஏட்டளவில் தான் உள்ளது, நடைமுறையில் இரு நாடுகளும் முதலாளித்துவத்தை தான் பின்பற்றுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. புரட்சி முறை ஆட்சி தோன்றிய இடங்களிலேயே அவற்றிக்கு இத்தகைய பின்னடைவு இருக்கும்போது அது இன்னும் சரியாக வேரூன்டிராத நம் நாட்டில் மக்கள் முழு நம்பிக்கையுடன் ஆதரிப்பார்கள் என்று நாம் எப்படி எதிர்ப்பார்க்கலாம்? நண்பர் சரவணன் சொல்கிறார், ஜனநாயக மாடல் தோல்வி அடைந்தது என்று. கம்மியுனிச மாடலும் அப்படி தானே இருக்கிறது?

        தற்போது சீனாவில், ரசியாவில் இருப்பது போலி கம்மியுனிசம் தான். ஆனால் அதனோடு அடக்குமுறை, ஒளிவுமறைவு, இரும்புத்திரை ஆட்சி, ஊடகங்களின் மேல் கடிவாளம் என்று எல்லா பக்கங்களிலும் ஒரு வித அடக்குமுறை, சர்வாதிகாரம் தான் தெரிகிறதே ஒழிய முழு ஜனநாயகம் இருப்பதாக தெரியவில்லையே.

        ஆக தற்போதைய நிலவரப்படி கம்மியுநிசத்திலும் போலி கம்மியுனிசம் வந்து விட்டது, ஜனநாயகத்திலும் போலி ஜனநாயகம் வந்து விட்டது. இதற்கு தீர்வு என்ன, யோசிக்கலாம்.

        என்னை பொறுத்தவரை, தற்போதைய தேர்தல் முறை ஜனநாயகம் ஒரு சிறந்த ஆட்சி முறை தான், ஆள்பவர்கள் நல்லவர்களாக இருக்கும் வரை. இதே பிரச்சினை கம்மியுனிச ஆட்சியிலும் உண்டு. ஆள்பவர் நல்லவராக, திறமையானவராக, நேர்மையானவராக, ஆளுமை திறன் கொண்டவராக இருக்கும் பட்சத்தில் அந்த ஆட்சி கம்மியுனிச ஆட்சியாக இருந்தாலும் சரி, தேர்தல் முறை ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும் சரி, நன்றாகவே இருக்கும். ஓட்டுபவர் சரியாக இருந்தால் வண்டி நன்றாகவே ஓடும். ஓட்டுபவர் சரியில்லையெனில் எத்தகைய வண்டியாக இருந்தாலும் விபத்துக்குள்ளாகும்.

        தேர்தல் ஜனநாயகம், கம்மியுனிச புரட்சி முறை இரு வழிகளிலும் சில நிறைகள் இருக்கின்றன, சில குறைகளும் இருக்கின்றன. நாம் யோசிக்க வேண்டியது, இரண்டு வழிகளிலும் இருக்கும் நல்ல சட்டதிட்டங்களை சேர்த்து மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு புதிய பாதையை நீங்கள் காட்டலாம் அல்லவா? தேர்தல் முறையை முழுவதுமாக புறக்கணிக்க தாங்கள் போராடுகிறீர்கள். 30 ஆண்டு கால வரலாற்றில் இது வரை வெற்றி கண்டதாக தெரியவில்லை. அதனால் வழிமுறையை மாற்றி பார்க்கலாமே. முதலில் மக்களிடம் உங்களுக்கு நம்பிக்கை பிறந்து உங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் உங்களை நம்பினால், பின் நீங்களே தேர்தல் அரசியலில் இறங்கி, உங்களது கம்மியுனிச கருத்துக்களை ஜனநாயக முறையில் நீங்களே ஆட்சி அமைத்து செயல்படுத்தலாமே.

        இதுவரை தேர்தல் புறக்கணிப்பு நடத்தி பார்த்து ஒன்றும் ஆகவில்லை என்றபோது மக்களிடம் உங்கள் ஆட்சி வந்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்று நீங்கள் நேரடியாக மக்களை சந்தித்து விளக்கலாமே.

        உதாரணத்திற்கு, நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளிகளுக்கும் குறைந்த பட்ச சம்பளம்/கூலி நிர்ணயம் செய்யப்படும் என்றும், இந்த குறைந்த பட்ச வருமானத்தை வழங்காத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றோ, அபராதம் விதிக்கப்படும் என்றோ சட்டம் கொண்டு வருவோம் என்று நீங்கள் மக்களிடையே, குறிப்பாக தொழிலாளர்களிடையே விளக்கினால் அவர்களின் ஒட்டு மொத்த ஆதரவு, வாக்குகள் உங்களுக்கு கிடைக்குமல்லவா?

        இது போல, நாட்டில் பெருன்மான்மையான மக்களாக விளங்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் நாடித்துடிப்பை நீங்கள் நன்கு அறிவீர்களானால் உங்களுக்கு தோல்வியே கிடைக்காது. என்ன, கொஞ்சம் பாடுபட வேண்டும். அதற்கு நீங்கள் தயார் என்று தான் நான் நம்புகிறேன்.

        எடுத்தவுடனே எல்லா இடங்களிலும் வெற்றி பெற இயலாது தான். ஆனால் படிப்படியாக மக்கள் மனதில் உங்களது ஆட்சி முறை குறித்த தெளிவான விளக்கத்தை நீங்கள் வைக்க வேண்டும். உங்கள் ஆட்சி இல்லாவிடினும், அது கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, மேற்கூறிய சட்டம் போல மக்களுக்கு மிக மிக பயன்படும் ஒரு சட்டத்தை கொண்டு வர மக்களின் பேராதரவு இருக்கிறதென்று ஆட்சியாளர்கள் உணர்ந்தால் அந்த சட்டத்தை அவர்களே (ஒட்டு பொறுக்குவதற்காக) நிறைவேற்றுவார்கள். உங்கள் குறிக்கோள் அந்த சட்டம் நிறைவேற்றுவது தானே, அது நீங்கள் ஆட்சிக்கு வந்தும் நிறைவேற்றலாம், புத்திசாலித்தனமாக யோசித்து செயல்பட்டால் நீங்கள் ஆட்சியில் இல்லாவிடிலும், மக்கள் பேராதரவை பெற்று அந்த சட்டத்தை தற்போதைய ஆட்சியாளர்களை வைத்தே நிறைவேற்றலாம். எல்லாம் நம் கையில் தான் உள்ளது.

        மக்களுக்கு நீங்கள் பயன்பட வேண்டும். இல்லை என்றால் கம்மியுனிசம் என்பது ஏட்டு சுரக்காய் தான்.

        • உங்கள் கருத்து கம்யூனிசம் தோற்று விட்டது; முதலாளித்துவம் வென்றுள்ளது என்பதாக இருக்கிறது. ஒரு வரலாற்று நோக்கில் கம்யூனிசத்துக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு ஒரு தோல்வியே இல்லை. முதலாளித்துவமோ பல முறை தோல்வியை கண்டுள்ளது. எனினும் அதனை தொடர்ந்து பரீட்சித்து வருகிறார்கள்.

          இந்தியாவில் இருக்கும் தேர்தல் ஜனநாயகம் அதன் பயன்பாட்டை எப்போதோ இழந்து விட்டது. அதன் போதாமையை பட்டியலிடுவது சோர்வை அளிக்கக்கூடியது. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ஜனநாயகம் ஆகக்கீழ்மையான ஜனநாயக வடிவம். முதலில் வருபவர் வெற்றி பெற்றவர் என்ற இந்த தேர்தல் முறையைக் காட்டிலும் ஒரு பன்மை சமூகத்துக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ ஜனநாயகமே மேலானது என்ற கருத்தை கருத்தை முதலாளித்துவ அறிஞர்கள் முன்மொழிகிறார்கள்.

          பல முக்கியமான முடிவுகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே தான் எடுக்கப்பட்டுள்ளன. புதிய பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட போதும் நாடாளுமன்ற ஒப்புதலை பெறவில்லை. அதன் பிறகு அந்நிய மூலதனத்தை 2006 ஆம் வருடம் சில்லறை வணிகத்தில் அனுமதிக்க அரசு எடுத்த கொள்கை முடிவுக்கும் நாடாளுமன்றத்தின் துணையை நாடவில்லை. வால்மார்ட்டை எதிர்ப்பது என்று முடிவெடுத்த பல்வேறு கட்சிகள் திமுக, சமாஜ்வாடி, பிஎஸ்பி ஆகியவற்றை சூழ்ச்சியாக கையாண்டு தமது நோக்கத்தை நிறைவேற்றினர்.

          எனவே இந்திய ஜனநாயகம் காலாவதியான ஒன்று.

          • இந்தியாவை ஆள்பவர்கள் செய்யும் தவறுக்கு ஜனநாயகத்தை சாடுவது சரியா?
            ரசியா, சீனாவை பற்றி பேசினால் அங்கு போலி கம்மியுனிசம் என்கிறீர்கள். அது போல இந்தியாவில் ஜனநாயகம் சரியாக பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். அதனால் ஜனநாயக முறையே தவறென்று கூற முடியாது.

            இருக்கும் தவறுகளை சரிப்படுத்தவதேப்படி என்று யோசித்து பார்ப்போம்.

            தற்போதைய நிலவரப்படி கம்மியுனிசம் அதன் முழு தூய வடிவில், நடைமுறையில் எங்கும் இல்லை என்பதே உண்மை. அது ஏன் இல்லாமல் போனது? மக்கள் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை? இதற்கு பதில் தேடினால் கம்மியுநிசத்தின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்தது தங்களுக்கு தெரியும். பின்னடைவு, பின்னடைவு என்று எத்தனை நாள் சொல்ல முடியும்?

            நீங்கள் ஜனநாயகத்துக்கு மாற்றாக கம்மியுநிசத்தை சொன்னதை போல கம்மியுநிசத்திற்கு மாற்றாக ஜனநாயக கம்மியுநிசத்தை நாம் ஏற்கலாம்.

            நடைமுறையில் சாத்தியப்படும் முறையை பற்றி பேசலாம் நண்பர்களே.

        • கற்றது கையளவு,

          /// நம்மிடையே இருக்கும் OPTIONS – 1. தேர்தல் முறை ஜனநாயகம், 2. புரட்சி முறை ஆட்சி///

          /// ஆள்பவர் பலமில்லாதவராகவோ, சந்தர்ப்பவாதியாகவோ, ஊழல்வாதியாகவோ, பாசிச சர்வாதிகார உணர்வு கொண்டவராகவோ இருந்தால்///

          நடைமுறையிலுள்ள ஜனநாயகமும் – நீங்கள் கூறும் ஜனநாயகம் – அதன் ஆட்சி முறையும் பெருமுதலாளிகளுக்கானது, மற்ற பெரும்பான்மை மக்களை வாட்டி வதக்கி சுரண்டுவது என்பதை வினவில் பல கட்டுரைகள் விளக்கியுள்ளன, உங்களுடன் விவாதித்த பல தோழர்களும் இதை தான் சுட்டி காட்டியுள்ளனர். இதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

          நீங்கள் முன்வைத்துள்ள முதல் Option – தேர்தல் முறை ஜனநாயகம் – உண்மையானதாக மக்களுக்கானதாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு புதிய முறையிலான தேர்தல் முறையை கொண்ட புதிய ஜனநாயகம் வேண்டும்; அதற்கு புரட்சி வேண்டும் என்கிறோம். அந்த புதிய முறையில் மக்களுக்கு முழுமையான அதிகாரம் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீது அதிருப்தி ஏற்பட்டால் உடனடியாக மக்கள் அவரை திருப்பி அழைக்க அதிகாரம் இருக்கும்.

          /// Known Devil./// Unknown Angel///

          Known Devil – இனிமேலும் நீடிக்கமுடியாது என்பதை தான் நிழவுய்ம் சூழல் நிருபிக்கிறது. அதில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள் விவாதிக்கலாம்.
          கம்யூனிசம் Unknown Angel அல்ல என்பதை சோசலிச ரசியா, சோசலிச சீனா உதாரணங்களுடன், தரவுகளுடன் கட்டுரை விளக்கியுள்ளது. தோழர்களும் விளக்கியுள்ளனர்.

          /// புரட்சி முறை ஆட்சி தோன்றிய இடங்களிலேயே அவற்றிக்கு இத்தகைய பின்னடைவு இருக்கும்போது///

          அடுத்ததாக, இன்றைய ஆட்சிமுறை ஆதிகாலம் தொட்டு -மனித நாகரீகம் தோன்றியது முதலே நிலவிவரவில்லை. இந்த ஆட்சிமுறையும் கூட புரட்சி – மாற்றங்களால் தான் அதிகாரத்துக்கு வந்தது. அதுவும் கூட முதல் முறையிலேயே பின்னடைவின்றி வெற்றி பெற்றுவிடவில்லை.

          17ம் நூற்றாண்டில் (1600களில்) ஆரம்பித்து 19ம் நூற்றாண்டு (1800கள்) வரை முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் அது முன்னேற்றங்களையும், பின்னடைவுகளையும் சந்தித்த பின்னரே உலகம் முழுவதும் மாற்றம் ஏற்பட்டது.

          இப்படி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஜனநாயகம் ஆரம்பம் முதலே முதலாளிகளுக்கானதாக தான் இருக்கிறது. இதை தான் வரலாறு பதிவு செய்திருக்கிறது. இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை முதலாளிகள் பெரும்பான்மை மக்களின் உதவியுடன் தமக்கு எதிரான மன்னராட்சி முறையை தூக்கியெறிந்து தான் நிலைநாட்டினர்.

          பின்னர் “வரலாற்று” காரணங்களால் இந்த ஜனநாயக அமைப்பை உருவாக்குவதைக் கூட அவர்கள் கைவிட்டு சமரசம் செய்து கொண்டனர். இதை பற்றி விரிவாக பின்னர் பேசலாம். வாய்ப்பிருந்தால் தோழர் மாவோ எழுதிய ‘புதிய ஜனநாயகம்’ புத்தகத்தை படித்து பாருங்கள்.

          ///தேர்தல் முறையை முழுவதுமாக புறக்கணிக்க தாங்கள் போராடுகிறீர்கள்.///

          இல்லை. தேர்தல் முறையை முழுவதுமாக புறக்கணிக்க நாங்கள் போராடவில்லை. இந்த போலியான தேர்தல் முறையை புறக்கணித்து உண்மையான ஜனநாயகப்பூர்வமான தேர்தல் முறையை உருவாக்கவே போராடுகிறோம். அந்த முறையை புதிய ஜனநாயகம் என்கிறோம். அதை பழையதை நிராகரித்து புரட்சியின் மூலம் தூக்கியெறிவதன் மூலம் தான் அடைய முடியும் என்கிறோம். அது தான் அறிவியல் பூர்வமானது, அறிவுப்பூர்வமானது, தர்க்கபூர்வமானது. அதை தான் வினவின் பல கட்டுரைகள் விளக்குகின்றன. தோழர்களும் உங்களுக்கு அதை தான் புரியவைக்க முயற்சிக்கிறார்கள்.

          /// மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு புதிய பாதையை நீங்கள் காட்டலாம் அல்லவா? ///

          மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு புதிய பாதை தான் புதிய ஜனநாயகம். அதை சாதிக்க புரட்சிப் பாதையை தவிர வேறு மாற்று இல்லை.

          ///உங்களது கம்மியுனிச கருத்துக்களை ஜனநாயக முறையில் நீங்களே ஆட்சி அமைத்து செயல்படுத்தலாமே. ///

          கம்யூனிச கருத்துகளை செயல்படுத்த உண்மையான ஜனநாயக அமைப்பு வேண்டும். அதுதான் புதிய ஜனநாயக அமைப்பு. பழைய ஜனநாயகத்தில் அதை செய்ய முடியாது. அதற்கு ஒரு உதாரணம் – சிலி, வெனிசுலா போன்ற நாடுகளில் நடந்த ஆட்சி கவிழ்ப்புகள்.

          வரலாறு அனுபங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது.

          இந்த அமைப்பில் அரசு, அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, ஊடகங்கள் என சகல துறைகளும் மொத்த அமைப்பும் அழுகி நாறிக்கொண்டிருப்பதை தான் இந்த கட்டுரை பேசுகிறது. அதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்றும் மாற்றம் தேவை என்பதை உணர்ந்துள்ளீர்கள் என்றும் நினைக்கிறேன். மாற்றம் வேண்டும் என நினைத்துக் கொண்டே இந்த அமைப்புக்குள்ளேயே மாற்றத்தை தேடுவது உங்களுகே முரணாக தெரியவில்லையா?
          இல்லை, இந்த முறையிலேயே மக்களுக்கு பயன் தரக்கூடிய உண்மையான ஜனநாயகத்தை சாதிக்க முடியும் என்று நீங்கள் கருதினால், அதை நீங்கள் அறிவியல் பூர்வமாக முரணற்ற முறையில் விளக்கவேண்டும். தயவு செய்து விளக்குங்கள்.

    • சமுகத்தில் அரசியல் ,பொருளாதாரம் ,கலாச்சார மாற்றங்களை முழுமையாக ஏற்படுத்துவது தான் புரட்சி என்பது.இன்றைய முதலாளிகளீன் கையில் உள்ள அரசு அதிகாரத்தை தொழிலாளர்-விவசாயிகள் தலைமைக்கு மாற்றுவது தான் அரசியல் புரட்சி. இப் புரட்சியீன் தொடர்சியாக தான் தொழிலாளர்-விவசாயிகள் தலைமையிலான அரசு socialism சார்ந்தா பொருளாதாரம்,கலாச்சார மாற்றங்களை செய்ய முடியும். தற்போது உள்ள முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளர்-விவசாயிகளுக்கு உகந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே முதலீல் அரசு அதிகாரத்தை தொழிலாளர்-விவசாயிகளுக்கு தலைமை ஏற்க்கும் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சீ முலம் பெற வேண்டும்.

      புரட்சீ செய்வதற்க்கு மக்கள் தான் முதன்மை என்றாலும் புரட்சீக்கு மக்களை வழி நடத்த அறிவும் ஆற்றலும் உள்ள, கொள்கையில் இருந்து விளகாத கம்யூனிஸ்ட் கட்சி வேண்டும். அது போன்ற ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தேவதைகள் வானிலிருந்து அனுப்பமாட்டார்கள்.மக்கள் மீதும், எதீர்கால சந்ததிகள் மீதும் அன்பும் ,பாசமும் கொண்ட நாம்மை போன்றவர்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டும்.உலக நாடுகளில் உள்ள பிரசனையே இது தான்.ரஷ்யாவுக்கும் இப்போதைய சூழலீல் இது பொருந்தும்.

      //ஆனால், ஏன் பழைய கம்மியுனிசம் தான் வேண்டும் என்று ரசிய மக்கள் போராடவில்லை? ஏன் முதலாளித்துவத்தை மக்கள் ஒத்துக்கொண்டனர்? கம்மியிநிசம் வேரூன்றியதற்கு மக்கள் போராட்டம் ஒரு முக்கிய தூண்டுகோலாய் இருந்ததல்லவா, ஏன் இரண்டாம் போராட்டத்தை மக்கள் துவக்கவில்லை? ஆவேசமாக இல்லாமல் சற்று நிதானமாக யோசித்து பார்க்க வேண்டிய முக்கிய விடயம் இது. பழைய கம்மியுனிசம் தான் வேண்டும் என்று ரசிய மக்களிடம் தற்காலத்தில் எந்த வித பெரிய புரட்சியும் போராட்டமும் நடைபெறுவதாக எனக்கு தெரியவில்லை. //

  29. வைகோ, சீமான் இவர்களுக்கு வரும் கூட்டம் வாக்குகளாக ஏன் மாறுவதில்லை?
    மக்கள் இவர்கள் பேச்சை ரசிக்கிறார்கள். ஆனால் இவர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

    ம.க.இ.க தேர்தலை புறக்கணிக்க ஆயிரம் காரணங்களை கூறி போராட்டம் நடத்தினால் மக்கள் அதை பார்ப்பார்கள், கை கூட தட்டுவார்கள். ஆனால் உங்களை நம்பி தேர்தலை புறக்கணிக்க மாட்டார்கள். ஏன் என்றால் உங்களது மாற்று முறை பற்றி தெளிவான எளிய ஒரு விளக்கத்தை யாரும் தருவதாக தெரியவில்லை.

    மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதை விட்டு, இருக்கும் வீட்டை மூட்டை பூச்சி தாக்காதவண்ணம் எப்படி சீரமைப்பது என்று நாம் யோசித்து பார்க்கலாமே.

    மதம், இனம், மொழி, சாதி, என்று பல்வேறு வழிகளில் பிரிந்திருக்கும் இந்த நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக புரட்சி முறை ஆட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே எனக்கு படுகிறது. அதனால் இருக்கும் ஜனநாயக ஆட்சி முறையில் மக்களுக்கு பயன்படும் வகையில் சில முக்கிய சட்ட திருத்தங்கள் கொண்டு வர நாம் போராடலாமே?

    மாவோயிஸ்டுகள் என்றால் தீவிரவாதிகள் என்றிருக்கும் எண்ணம் மாறி, மக்களுக்காக மாற்று வழிகளை ஜனநாயக வழியிலேயே தருபவர்கள் என்ற எண்ணம் வந்தால் மக்களின் ஆதரவு உங்களுக்கு தானாக கூடும், மக்களே உங்களை தேடி வருவார்கள்.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமாக என்ன செய்வது என்று யோசிக்கலாமே,

  30. ஒரு சிறிய குழுவை வைத்து அண்ணா அசாரே நாட்டின் பாராளுமன்றத்தில் லோக்பால் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வர முடிந்ததல்லவா, அந்த வழிமுறையை கம்மியுநிஸ்ட்கள் ஏன் பின்பற்ற கூடாது? உங்களின் நோக்கம் மக்களுக்கு பயன்படும், தொழிலாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்கு இந்த வழியை நீங்கள் ஏன் பயன்படுத்த கூடாது.

    நான் அண்ணா அசாறேவின் ஆதரவாளனோ, அனுதாபியோ கிடையாது. அந்த உதாரணத்தை ஏன் சொன்னேன் என்றால் ஒரு சிறு குழுவை வைத்து கொண்டு ஒரு நாட்டின் சட்டத்தையே மாற்ற கூடிய தாக்கத்தை ஒருவரால் உருவாக்க முடியும் என்றால் ம.க.இ.க ஏன் அப்படி ஒரு தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தக்கூடாது?

    அரவிந்த் கேஜ்ரிவாலால் டெல்லி ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு ஒரு 6 மாதத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றால் ம.க.இ.க. முயன்றால் தமிழ்நாட்டு அளவிலாவது ஒரு குறிப்பிட்ட அளவு தாக்கத்தை உண்டாக்க முடியும் அல்லவா?

    முயற்சி செய்து தான் பாருங்களேன்.

    இன்னொரு முக்கிய விடயம். மக்களை அணுகும்போது உங்களுக்கு ஒரு முகம் தேவை. ம.க.இ.க விற்கு மக்களை கவரக்கூடிய ஒரு முகம் தேவை. காமராஜர், கக்கன் போன்ற ஒருவர் உங்களிடம் இருக்கிறாரா, அவரை முன்னிறுத்தி முயன்று பாருங்களேன்.

  31. குழந்தைகள் கல்வி ,தொழிலாளர் ஊதீயம் ஆகிய விடயங்களுக்கு உங்களால் நேர் பதில் அளிக்க முடியாததுக்கு காரணம் உங்கள் மனசாட்சி தான் காரணம்.

    பெயரளவுக்கு உள்ள தொழிலாளர் நல சட்டங்களும் இந்தியாவில் இருந்தும் அவை ஏட்டு சுரக்காய் ஆக தூங்குவதன் மர்மம் என்ன ? நான் கூறும் ஒவ் ஒரு விடயத்துக்கும் உங்களுக்குள் நீங்களே பதில் அளித்து பாருங்கள் உங்கள் முதலாளித்துவ ஜனநாயகம் எதற்கும் வீடை தராது என்பது உங்களுக்கு வீளங்கும்

    //மற்றபடி உங்களது அனைத்து பதில்களிலும் ஒரே கருத்தை தான் திரும்ப திரும்ப வேறு வேறு வழிகளில் சொல்கிறீர்கள். நான் கேட்கும் முக்கிய கேள்விகளுக்கு நேரடியாக பதில்கள் தராமல் தற்போதைய அரசாங்க முறையில் இருக்கும் குறைகளை மட்டும் காட்டுகிறீர்கள். அந்த குறைகளுக்கு நான் கொடுத்த மாற்று வழிகளை (குறைந்த பட்ச கூலி/சம்பள நிர்ணயம், சமச்சீர் கல்வி முறை போன்றவை)ஜனநாயக ஆட்சியிலேயே சட்டமாக கொண்டு வந்து செம்மையாக நடைமுறை படுத்தினாலே போதும். //

    • குழந்தைகள் கல்வி, தொழிலாளர் ஊதியம் குறித்து நான் மேலே பதில் அளித்துள்ளேன் சரவணன். குறைந்த பட்ச ஊதியம்/கூலி குறித்த சட்ட திருத்தம், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகையான சமச்சீர் கல்வி பற்றி நான் குறிப்பிட்டுள்ளதை பாருங்கள்.

      இந்தியாவில் உள்ள தேர்தல் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதென்று நான் சொல்லவில்லை. பிரச்சினை உள்ளது. அதை எப்படி தீர்க்க வேண்டும் என்ற வழியில் தான் நாம் வேறுபடுகிறோம்.
      நீங்கள் ஒரேயடியாக வீட்டை எரிக்க வேண்டும் என்கிறீர்கள். நான் மூட்டைபூச்சியை மட்டும் அழிக்க வழி என்ன என்று யோசிக்கிறேன். இது தான் நமக்குள் இருக்கும் வித்தியாசம்.

      முதலாளித்துவ ஜனநாயகத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் தேர்தல் முறை ஜனநாயகத்தை நான் ஆதரிக்கிறேன். தவறு செய்யும் ஆட்சியாளர்களை 5 வருடங்களுக்கு ஒருமுறையாவது தூக்கி எரியும் வாய்ப்பு உள்ளது.

      ஆரம்பத்தில் ஜனநாயகத்தை பேசிய ரசிய சீன கம்மியுனிச ஆட்சியாளர்கள் தற்போது ஜனநாயக அளவுகோலில் எப்படி ஆட்சி நடத்துகிறார்கள் என்று தங்களுக்கு தெரியாததல்ல.
      கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், வெளிப்படையான ஆட்சி இதெல்லாம் அங்கே இருக்கிறதா, சற்று யோசித்து பாருங்கள்.

      முழுக்க

  32. Hi KK,

    //தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு புதிய ஜனநாயக முறையான கம்யினுநிசத்தை நாம் வடிவமைத்தால் எல்லோருக்கும் அது நல்ல தீர்வாக இருக்கும் அல்லவா.//

    This is what we mean. It is good you used ‘நாம்’ here. Some of your questions should have been answered already by others. Let me put in my contribution by answering some fundamental issues.

    //ஒரே ஒரு தொகுதியில் கூட மக்கள் ஆதரவு தங்களுக்கு கிடைக்கவில்லையே?//

    Every constituency has its own share of ruling class, indifferent class, etc. You should learn about the fate of communists of British and Nehru’s India, Macarthyism in US, etc.

    //ஆயுதம் ஏந்துபவர்கள் ஆட்சியை பிடித்த பின் ஜனநாயக ஆட்சி கொடுப்பார்கள் என்று என்ன நிச்சயம்? *** அதன் பிறகு எதிர்ப்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையில் உங்கள் மனதில் சர்வாதிகார வெறி புகுந்தால் நாடு என்ன ஆகும்?//

    As People’s army will be qualitatively very different from the current one, you need not fear People’s army. It will be for the people, by the people.

    //வீடுவீடாக சென்று மக்களின் அன்றாட பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை பதவியில் இல்லாதபோதே போராடி தீர்த்து வைக்கலாமே,//

    We ARE people. We know what OUR problems are. We are already doing what we can within the current system. Of all people, you should be well aware of the works of our comrades.

    //இந்தியர்களிடம் இருக்கும் ஒரு முக்கிய குறை, சோம்பேறித்தனம், ஏனோதானோ என்ற வகையில் வேலை செய்து பொருட்களின் தரத்தில் கவனத்தை குறைப்பது//

    This is the curse of Caste division. People are left with only their own group. When a person’s minimum basic social and physical needs are not fulfilled, he/she cannot be expected to work for the betterment of others.

    //அதிகம் உழைத்தால் அதிகம் வருமானம் வரும் என்ற ஆசை இருந்தால் தான் மக்கள் அதிகம் உழைப்பார்கள். //

    அதிகம் வருமானம் and ஆசை are the problems. In communist society, it is enough to do a just amount of work to get all our needs fulfilled. No need to worry about our children, as the whole society is a family. It is hard to imagine this but not as hard as it is made out to be. We should work our hearts hard not our body.

    //ஓபி அடிப்பவர்களுக்கும் ஒரே சம்பளம் என்றால் எப்படி//

    In communist society, we may not find people cheating on their contribution, because he is not cheated and because others are there to set in right path at the beginning itself. Actually, historically, it is this selfish group who has become the ruling class. In new society, we should find mechanisms to control this sort of degeneration. As I told you already, until the significant number of people becomes aware of our common destiny and the challenges involved, we cannot get a new setup

    //We need to see a live, workable Model state//

    Cuba is a good model. Capitalistic media is onto a total block-out of Cuba’s model.

    //ம.க.இ.க வின் புரட்சி ஆட்சி விளக்கம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. //
    I am a communist because of MKEK.

    // மாற்று அமைப்பை பற்றி தெளிவான ஒரு விளக்கத்தை பொதுமக்களாகிய எங்களிடம் கொண்டு சேர்க்கவில்லை//

    You should join and we all should come together define the new setup. Let’s discuss and prepare a new setup in writing first.

    // ரசியா, சீனாவில் இன்று கம்மியுனிசம் வெறும் ஏட்டளவில் தான் உள்ளது,//

    There is no Communism at all in Russia

  33. திரு. கற்றது கையளவு….

    //அதே சமயம் பெண்ணுக்கு சம உரிமை விடயத்தில் அவரது பின்னூட்டத்தில் ஏன் கொஞ்சம் பெண்ணடிமைத்தனம் வருகிறதென்று தெரியவில்லை.//

    மன்னிக்க வேண்டும்.. நான் பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று எங்கும் குறிப்பிடவில்லை. சமஉரிமை கோஷத்தை குடும்பத்தில் வைத்து கொள்ள கூடாது என்று தான் கூறினேன். அதை சமுதாயத்தில் வைத்து கொள்ளலாம். அதே போல் அனைத்திற்கு சமஉரிமை வேண்டும் என கண்மூடி தனமாக போராடக்கூடாது. வேலைவாய்ப்புகளில் அல்லது சமுக முன்னேற்றம் சார்ந்த விசயங்களில் சமஉரிமை கேட்டு போராடுவதில் தவறில்லை. ஆனால், தற்போது மிக அண்மையாக பெண்ணியவாதிகள் என்கிற பேர்வழிகள் “பெண்களுக்கு ஆண்களை போன்று கட்டற்ற பாலியல் சுதந்திரம் வேண்டும்” என்று கோருகிறார்கள். எது எதில் சுதந்திரம் வேண்டும் என்கிற வரைமுறையே இல்லாமல் இப்படி எல்லாம் கேட்க கூடாது என்று தான் கூறினேன். கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்கிற பொறுக்கி தனத்தை ஆண்கள் செய்தாலே தவறு எனும்போது. இந்த பொறுக்கி தனமான கலாச்சாரத்தில் தங்களுக்கு சமஉரிமை என்கிற பெயரில் பங்கு கேட்பது எந்த வகையில் நியாயம்?

    பொதுவாக, பெண்கள் எல்லாம் அவிழ்த்து விட்ட மாடுகள் போன்று தங்கள் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் போய் எவ்வளவு நேரமானாலும் மேய்ந்து விட்டு எப்போது வேண்டுமானாலும் கொட்டிலுக்கு (வீடு)க்கு திரும்பலாம். அதற்க்கு போதுமான சுதந்திரம் வேண்டும் என்று கூறினால். இதற்க்கு பெயர் தான் சமுக அவலம். இந்த அவலத்தை தான் பெண் சுதந்திரம் என்று எதிர்பார்கிறார்கள்.

  34. நீங்கள் சொல்லும் இவ்வகை சுதந்திரத்தை பற்றி நான் கூறவில்லை. கட்டற்ற பாலியல், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தவறு தவறு தான்.

  35. //முதலாளித்துவ மாடல் தவறு என்று சொல்கிறீர்கள். தங்களுடைய கம்மியுனிச மாடல் சரி என்றால் ஏன் அதற்கான ஒரு மாடல் தற்காலத்தில் இல்லை? ஒரு நல்ல மாடல் அரசாங்கம் இருந்தால் காட்டுங்கள். பொருளாதார அளவில், ஜனநாயக அளவில், வளர்ச்சி அளவில், அனைத்திலும் அந்த மாடல் எப்படி செயல்படுகிறதென்று பார்த்து விட்டு மக்களாகிய நாங்கள் முடிவு செய்கிறோம், எது நல்லது, எது கெட்டது என்று. தற்கால நிகழ்கால நாடுகளில் உங்களது வெற்றிகரமான மாடல் இருந்தால் காட்டுங்கள், பழைய வரலாறு வேண்டாம். அப்படி ஒரு மாடல் இல்லை என்றால் ஏன் இல்லை? ஏன் மக்கள் ஒரு நல்ல மாடலை புறக்கணிக்கிறார்கள்?//

    மிக தீர்கமான கருத்து. முதலாளித்துவமோ அல்லது கம்யுநிசமோ ஒரு நாட்டின் வளர்ச்சி, உணவு மற்றும் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைவது எல்லாம் அந்தந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மற்றும் அந்த நாட்டின் மக்கள் போன்ற இருவரின் கைகளில் தான் இருக்கின்றது.
    நோர்வே,ஜப்பான்,பின்லாந்த்,கனடா,ஜெர்மன்,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் முதலாளித்துவ முறையை ஏற்று கொண்ட நாடுகள் தான். அதற்காக, மேற்கண்ட நாடுகளில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாடு, எழுத்தறிவின்மை,படிப்பை தொடராமல் பாதியில் விடுவது கொத்தடிமைத்தனம் போன்ற சமுக அவலங்கள் கொஞ்சமும் கிடையாது. லஞ்சம்,ஊழல்,அடுத்தவனை ஏய்த்து பிழைப்பது,மோசடி செய்வது போன்ற அவலங்களும் இந்தியாவுடன் ஒப்பிடும் பொழுது மிக மிக குறைவே. அங்கு இது போல் நடந்தால் மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள்,ஆனால்,இங்கோ நிலை தலைகீழாக இருக்கிறது.

    • கற்றது கையளவும் & Rebecca Mary யும் கம்மியுனிச மாடல் காட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். ரஸ்ய மக்கள் எந்த ஒரு மாடலும் இல்லாமல் எப்படி புரட்சி செய்து ஒரு சோசலிச அரசை உறுவாக்கினார்கள் என்று கூற முடியுமா? (நமக்காவது இரண்டு படிப்பினைகள் இருக்கிறது).

      இதுவரை எந்த சமுக மாற்றமும் மாடல் பார்த்து மாறியது கிடையாது.

      பிறகு நீங்கள் கூறும் முதலாளித்துவ நாடுகள் எல்லாம் மற்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து சுரண்டி தான் வாழ்கின்றன. அவர்கள் ஒன்றும் மக்களுக்கு விருப்பபட்டு இந்த சலுகைகள் வழங்கவில்லை. ரஸ்யாவில் நடந்த சோஸ்லிச புரட்சியே முதலாளித்துவ நாடுகளை welfare state ஆக மாற நிர்பந்தித்தது (இல்லாவிடில் அவர்கள் நாட்டிலும் சோசலிச புரட்சி வெடிக்கும் என்று பயந்தார்கள்)

      பிறகு சமுகத்தில் பெண்களுக்கான சம உரிமையை வளங்கியதும் சோசலிச நாடுதான். பெண்களை போகப் பொருளாக காட்டி வியாபாரம் செய்வது முதலாளித்துவம் தான்.

  36. கற்றது கையளவு,

    இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன பின்பும் 80% குடி மக்களுக்கு [தொழிலாளர்-விவசாயிகள் ] உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளிக்காத தற்போது உள்ள இந்திய முதலாளித்துவ அமைப்புடன் ,10 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளித்த சோவித் ரஷ்யா அமைப்பை ஒப்பீடு செய்யும் போது என் அறிவுக்கு கம்யுனிசம் தான் இந்தியாவிற்க்கு சரியான model என தெரிகின்றது.

    விவாதித்தமைக்கு நன்றி நண்பா !
    மே தின வாழ்த்துகள் நண்பா !

  37. பன்னாட்டு முதலாளிகளுக்கு [மாமா வேலை ] செய்யும் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு : உண்மை கதை I
    —————————————————————————————————–

    கற்றது கையளவு,

    முதலாளித்துவ மாடல் இந்திய அரசு எப்படி எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்கு தரகு வேலை[மாமா வேலை broker business ] செய்து தொழிலாளிகளுக்கு விவசாயிகளுக்கு விரோதமாக நடந்து கொள்கிறது என்பதை உண்மை கதையுடன் விளக்க போகிறேன்.

    [1]இந்தியாவில் ,தமிழ் நாட்டில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறைமலை நகருக்கும் ,சிங்க பெருமாள் கோவில் ஊருக்கும் இடையே NH 45 ல் கீழக்கரனை என்ற ஊர் “இருந்தது.” இப்போதும் அது இருக்கிறது. எப்படி இருக்கிறது தெரியுமா ? 2000 ஆண்டுகளில் ஈழம் போல விரிந்து இருந்த அவ் ஊர் 2009 ல் முள்ளிவாய்க்களுக்குல் ஈழம் சுருங்க்கீயது போல இன்று Ford என்ற பன்னாட்டு முதலாளியீன் கோர பிடிக்குள் சிக்கி சிதைவுற்று அகதி முகாம் போல உள்ளது. காரணம் யார் ? Ford பன்னாட்டு முதலாளி பீரங்கி,F16 விமானம் முலமாகவா கீழக்கரனை என்ற ஊரை கைபற்றினான் ? செழுமையான அந்த பூமியை , நெல்லும், கருனைகிழங்கும் வீளைந்த அந்த பல 100 கணக்கான ஏக்கர் வீளைநீளங்கள் Ford பன்னாட்டு முதலாளி கைகளுக்கு சென்ற கதை தெரியுமா உங்களுக்கு ?

    [2]தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பெயரில் கீழக்கரனை விவசாயிகளை அழீத்து அவர்கள் நிலங்களை Ford க்கு தாரைவார்த்த அரசு எது ? Ford பன்னாட்டு முதலாளியீடன் ஒப்பந்தம் போட்டு அதை செயல்படுத்தியது DMK ,ADMK அரசுகள் தானே! இன்று கீழக்கரனை விவசாயிகளீன் நிலை என்ன ?அவர்கள் தின கூலிகளாகவும், அருகில் உள்ள SRM போன்ற நீறுவனங்களில் மாதம் rs 5000 க்கு அடிமாட்டு சம்பளத்துக்கும் வேலை செய்யும் அவலம் ஏற்பட காரணம் இந்த அம்மா ஜெயா ,பெரிசு கருணா புறம்போக்குகளும் ,பன்னாடைகளும் தான்.

    [3]சரி விவசாயிகளைதான் அழித்திர்கள். தொழிலாளியாவது உயர்ந்தான என்றால் அதுவும் இல்லை. அதே Fordல் வேலை செய்யும் தொழிலார்களில் நிலை என்ன தெரியுமா ? சில தினங்களுக்கு முன் வரை நம் தம்பி,தங்கைகள் அழகிய நீல நிற சீருடையுடன் Fordக்கு முன்று shiftல் வேலைக்கு செல்வதை பார்த்து நான் பெருமை பட்டது உண்டு. இந்த பொருமை எல்லாம் அவர்களுடன் உரையாடும் போது நீர்த்து போனது , என் மனம் வலியில் வேதனை பட்டது. ஏன் தெரியுமா ?

    [4]அவர்கள் மாத சம்பளம் rs7500. வேலை நிரந்தரம் கிடையாது. ஒரு ஆண்டு contract job. தொழிலாளர் சங்கம் வைக்க அனுமதி இல்லை. டீ கடையில் டீ குடிக்கும்போது ஒரு ஆண்டு contract job முடியும் நிலையில் இருந்த தேனியை சேர்ந்த ஒரு Ford தொழிலாளி தம்பியீடம் நான் உரையாடி பெற்ற விவரங்கள் இவை.

    [5]தம்பி கற்றது கையளவு,நீங்கள் வெளி நாட்டில் வேலை செய்து கொண்டு ,ஒய்வு நேரத்தில் இந்திய முதலாளித்துவ அரசுக்கு internetல் கொடி பிடித்து சேவகம் செய்தது போதும். பன்னாட்டு முதலாளிகளுக்கு தரகு வேலை[மாமா வேலை broker business ] செய்யும், கையாளாகாத, திறமைஅற்ற, ஊழல் மிக்க, புழுத்து போன,நாறிப்போன, தொழிலாளிகள் விரோத, விவசாயிகள் விரோத “தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசை” கற்றது கையளவு பீடித்துகொண்டு தொங்குவது ஏனோ ?

    • சரவணன், நான் இந்திய அரசுக்கோ, முதலாளித்துவத்துக்கோ கொடி பிடிக்கவில்லை.
      ஜனநாயக முறையிலேயே நாடு முன்னேற என்ன வழி என்று தான் யோசிக்கிறேன்.

      சீனாவிலும் ரசியாவிலும் தொழிற்புரட்சி நடந்தபோது அந்த தொழிற்சாலைகளுக்கான நிலங்கள் வானத்தில் இருந்து தானாக வந்தனவா, இல்லை, இருக்கும் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டதா?

      பெரிய தொழிற்சாலை, விமான தளம், மெட்ரோ திட்டம் இதற்கெல்லாம் நிலம் தேவை. அதை மக்களிடமிருந்து கையகப்படுத்தப்படும்போது அவர்களுக்கு உரிய நியாயமான இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். அது கிடைக்கவில்லை என்றால் அதற்கு போராடி பெறலாம். ஆனால் எந்த நிலத்தையும் கையகப்படுத்த கூடாது என்றால் பின் தொழில் எப்படி வளரும்? FORD, HYUNDAI போன்ற நிறுவனங்கள் கார்களை உற்பத்தி செய்யும்போது, துறைமுகத்துக்கு அருகாமையிலும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமலும், நகரத்திற்கு மிக தொலைவில் இல்லாமலும் ஒரு இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்த இடங்கள் தான் மறைமலை நகரும், திருப்பெரும்புதூரும்.

      சீனாவில், ரசியாவில் கார் உற்பத்தி நடப்பதில்லையா, தொழிற்சாலைகள் இருப்பதில்லையா?

      அரசியல்வாதிகள் முதலாளிகளுக்கு தரகு வேலை பார்ப்பதாக கூறுகிறீர்கள். அத்தகைய அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்தது யாருடைய குற்றம்?

      சமீப காலமாக 2008 இல் இருந்து உலக அளவில் பொருளாதார பின்னடைவு (recession)ஏற்பட்டுள்ளதால் எப்பேர்பட்ட நிறுவனமும் எந்நேரமும் இழுத்து மூடும் அபாயம் உள்ளது. ரசியாவிலும் வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடுவது தங்களுக்கு தெரியாததல்ல. இதனால் யாருக்கும் வேலை நிரந்தரம் இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை.

      ரசியாவில் பொருளாதார ரீதியில், ஜனநாயக அளவுகோலில் கம்மியுனிசம் ஒரு சிறந்த மாற்றாக இருந்திருந்தால் ரசியாவில் பின்னடைவு எர்பாடிருக்க வாய்ப்பே இல்லையே. கம்மியுனிசம் தங்களுக்கு பெரும் நன்மை தரும், அது தான் எதிர்காலம் என்று ரசிய மக்கள் நம்பி இருந்தால் முதலாளிகள் கம்மியுநிசத்தை அழிக்க நினைக்கும்போதே அவர்களை வேரறுத்து விட மாட்டார்களா?

      ஏன் ரசிய மக்களிடம் பழைய கம்மியுநிசத்துக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெறுவதில்லை.

      ஜனநாயகத்தில் குறைந்த பட்சம், அரசுக்கு எதிராக நம்மால் கருத்து தெரிவிக்க முடிகிறது.
      சர்வாதிகார ஆட்சிகளில் அது சாத்தியமே இல்லை.

      நான் முதலாளித்துவத்தை பிடித்து கொண்டு தொங்கவில்லை. ஜனநாயகத்தை தான் பிடித்து கொண்டு தொங்குகிறேன். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

  38. நம் சொந்த அனுபவத்தின் ஊடாக இந்த முதலாளித்துவ ஜனநாயகம் நொறுங்கி விழுந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறோம் . விழுந்ததைப் பொறுக்கி எடுத்து ஓட்டுவதென்பது செத்தப் பிணத்ததுக்கு உயிர் கொடுப்பதை போன்றது. இதற்க்கு மாறாக ஒரு புதிய ஜனநாயகம் வேண்டுமென்றும் அதை ஒரு மக்கள் புரட்சியின் ஊடாகத் தான் பெற முடியும் என்றும் கட்டுரை ஆணித்தரமாக முன் வைக்கின்றது மற்றும் அதற்க்கு உதாரணமாக சோவியத் ரஶிய மற்றும் சோசலிச சீனா அரசுகளை காட்டுகிறோம் .

    ஆனால் இங்குப் பின்னூட்டமிடும் நண்பர்கள் சோசிலிசம்/கம்யூனிசம் தோற்று விட்டது மற்றும் அதற்க்கு ஆதாரமாக தற்போதைய ரஶிய மாற்று சீன முதலாளித்துவ அரசுகளைக் காண்பிக்கின்றார்கள்.

    சிறிது காலமே இருந்தாலும் சோவியத் ரஶிய மற்றும் சோசலிச சீனா அரசுகள் மக்கள் நலன் அரசாக இருந்தன. ஆனால் ஏறக்குறைய 300 ஆண்டுகளாக இருக்கும் இந்த முதாளித்துவ ஜனநாயக அமைப்பு யாரின் நலன்களைப் பேணுகிறது என்பதை நடைமுறைப் பிரச்சினைகளை வைத்து அலசினாலேத் தெரிந்து விடும்.

    இதை மறுக்கும் நண்பர்கள் அதற்க்கு மாற்றாக என்ன உள்ளது என்பதை தெளிவாக முன் வைக்குமாறு கேட்டு கொள்கிறேன் .

    சில பேர் ஆயுத போராட்டமெல்லாம் சரிப்பட்டு வராது அமைதி வழியில அண்ணா ஹசாரே மாதிரி போராடலாம்னு எல்லாம் சொல்றாங்க. அண்ணா ஹசாரே கதைய வினவுல படிச்சிருப்பீங்க .

    அமைதியான வழியில பன்ணுன போராட்டமெல்லாம் பெரிய உயிரிழப்புல முடிஞ்சதுக்கு நெறய வரலாறு இருக்கு. அதே போல சொற்ப உயிர்களை மட்டுமே பலிக்கொண்ட அக்டோபர் புரட்சி போன்ற ஆயுத போராட்டங்களும் இருக்கு .

    முதலாளித்துவம் பலிக்கொண்டதைப் போல இதுகாறும் இருந்த சமூகமைப்பு எங்கிலும் அழிவை காண முடியாது .

    நன்றி.

  39. கற்றது கையளவு,

    [1]சமுகத்தில் அரசியல் ,பொருளாதாரம் ,கலாச்சார மாற்றங்களை முழுமையாக ஏற்படுத்துவது தான் புரட்சி என்பது.இன்றைய முதலாளிகளீன் கையில் உள்ள அரசு அதிகாரத்தை தொழிலாளர்-விவசாயிகள் தலைமைக்கு மாற்றுவது தான் அரசியல் புரட்சி. இப் புரட்சியீன் தொடர்சியாக தான் தொழிலாளர்-விவசாயிகள் தலைமையிலான அரசு socialism சார்ந்தா பொருளாதாரம்,கலாச்சார மாற்றங்களை செய்ய முடியும். தற்போது உள்ள முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளர்-விவசாயிகளுக்கு உகந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே முதலீல் அரசு அதிகாரத்தை தொழிலாளர்-விவசாயிகளுக்கு தலைமை ஏற்க்கும் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சீ முலம் பெற வேண்டும்.

    புரட்சீ செய்வதற்க்கு மக்கள் தான் முதன்மை என்றாலும் புரட்சீக்கு மக்களை வழி நடத்த அறிவும் ஆற்றலும் உள்ள, கொள்கையில் இருந்து விளகாத கம்யூனிஸ்ட் கட்சி வேண்டும். அது போன்ற ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தேவதைகள் வானிலிருந்து அனுப்பமாட்டார்கள்.மக்கள் மீதும், எதீர்கால சந்ததிகள் மீதும் அன்பும் ,பாசமும் கொண்ட நாம்மை போன்றவர்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டும்.உலக நாடுகளில் உள்ள தேவையே இது தான்.ரஷ்யாவுக்கும் இப்போதைய சூழலீல் இது பொருந்தும்.

    //இந்திய மக்களுக்கு கம்மியுனிசம் பரப்பும் நீங்கள், ரசியாவில் கம்மியுனிசம் ஏன் இப்போது செழிக்கவில்லை என்று ஆராய்ந்து பாருங்கள். //

    [2]முதலாளிகளீன் பயம் ஜனநாயக போர்வைக்குள் புகுந்து கொண்டு பேசும் உங்கள் வார்த்தைகளில் எதிரொலிகின்றது.

    //ஒரு சாதாரண குடிமகனாக நான் பேசுகிறேன். நான் எல்லாம் படித்த மேதாவியும் அல்ல, அதே சமயம் கம்மியுனிசம் இங்கே வெற்றி அடைய வேண்டுமானால் முதலில் என்னை போன்ற சாமானியர்களுக்கு உங்கள் கம்மியுனிசம் போய் சேர வேண்டும். எனக்கு இன்னும் கம்மியுனிசம் மேல் நம்பிக்கை வரவில்லை. கம்மியுனிச ஆட்சி அமைந்தால் சர்வாதிகாரம் தலை தூக்கும் என்பது எம்மை போன்ற பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் பயம். //

    • //அரசு அதிகாரத்தை தொழிலாளர்-விவசாயிகளுக்கு தலைமை ஏற்க்கும் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சீ முலம் பெற வேண்டும்//

      முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அப்புறம் சித்தப்பா என்று கூப்பிடுவதை பற்றி யோசிப்போம்.

      நாட்டில் எந்த கம்மியுநிஸ்ட் குழுவை கேட்டாலும் தாங்கள் தான் உண்மையான கம்மியுநிஸ்ட். மற்றவரெல்லாம் போலி கம்மியிநிஸ்ட்கள் என்று கம்மியுநிஸ்ட்களே ஒருவருக்கு ஒருவர் சேற்றை வாரி இறைத்து கொண்டிருக்கிறார்கள்.

      அப்போது நாங்கள் யாரை தான் நம்புவது? உங்களுக்குள்ளேயே ஒரு ஒற்றுமை இல்லையே. உங்களுக்குள்ளேயே கருங்காலிகள் சந்தர்ப்பவாதிகள் உள்ளனரே. இப்படி இருக்கும்போது உங்களை நம்பி 120 கோடி மக்கள் வாழும் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்தால் நாடு என்ன ஆகும் என்று மக்கள் யோசிக்க மாட்டார்களா?

      மக்கள் நம்பிக்கை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். அது தான் முதல் படி.

      ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்டுள்ள ஒரு சாதாரண குடிமகன் தான். பொதுமக்களின் பிரதிநிதியாகவே நான் பேசுகிறேன், முதலாளிகளின் பிரதிநிதியாக இல்லை.

      என்னை போன்ற பொதுமக்களின் ஆதரவு இல்லாமல் கம்மியுனிசம் நாட்டை ஆள இயலாது.
      ஆகவே, எங்களுக்கு உங்கள் சித்தாந்தத்தின் மேல் நம்பிக்கை வர என்ன வழி என்று யோசியுங்கள்.

      • கற்றது கையளவு நீங்கள் கூறும்

        உழைப்பாளர்களே, தொழிலாளர்களே, தோழர்களே, உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!!!!!

        இதற்க்கு என்ன பொருள் ?கம்யுனிசம் உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் மே தின வாழ்த்துகள் கூறுவதன் உண்மை பொருள் என்ன ?

        இன்று தரகு முதலாளித்துவ,கையாளாகாத, திறமைஅற்ற, ஊழல் மிக்க, புழுத்து போன,நாறிப்போன, தொழிலாளிகள் விரோத, விவசாயிகள் விரோத முதலாளித்துவ மாடல் இந்திய அரசு தான் election commission மூலம் “ஜனநாயகம்” பேசுகிறது.

        அத்தகைய ஜனநாயகத்தை மக்களும் விரும்பாதா போது கற்றது கையளவு அவர்கள் தன்னை பொதுமக்களின் பிரதிநிதியாக கூறுவது நகைப்பிற்கு உரியது

        //ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்டுள்ள ஒரு சாதாரண குடிமகன் தான். பொதுமக்களின் பிரதிநிதியாகவே நான் பேசுகிறேன், முதலாளிகளின் பிரதிநிதியாக இல்லை.//

        • //தரகு முதலாளித்துவ,கையாளாகாத, திறமைஅற்ற, ஊழல் மிக்க, புழுத்து போன,நாறிப்போன, தொழிலாளிகள் விரோத, விவசாயிகள் விரோத முதலாளித்துவ மாடல் இந்திய அரசு//

          இந்த வாக்கியத்தை COPY PASTE செய்யாமல் ஒரு பதிவு கூட உங்களால் இட முடியாதோ 🙂

          அந்த தரகு முதலாளித்துவ,கையாளாகாத, திறமைஅற்ற, ஊழல் மிக்க, புழுத்து போன,நாறிப்போன, தொழிலாளிகள் விரோத, விவசாயிகள் விரோத முதலாளித்துவ மாடல் இந்தியாவில் தான் நீங்கள் அரசை எதிர்த்து தைரியமாக இது போல பதிவிடுகிறீர்கள்.
          இல்லை என்றால் இந்தியாவிலும் ஒரு தியான்மென் சதுக்கம் நடக்கும்.

          சர்வாதிகாரத்தின் பிரதிநிதியாக இருப்பதற்கு தாங்கள் பெருமைப்பட்டு கொண்டால் அது உங்கள் இஷ்டம். நான் ஜனநாயகத்தின் பிரதிநிதியாக இருந்து விட்டு போகிறேன்.
          தியான்மென் சதுக்கத்தில் உயிரிழந்தது முதலாளிகளா, இல்லை ஜனநாயகத்தை விரும்பிய பொதுமக்களா?

  40. ஜனநாயகவாதி கற்றது கையளவு அவர்களீன் மக்கள் விரோத புதிய பொருளாதார கொள்கை
    ————————————————————————————————————————————————————

    ஜனநாயகவாதி கற்றது கையளவு அவர்களே ,

    [1] நம் தாய் நாட்டையே தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு Fordக்கு விலை பேசுவது உங்களுக்கு இனிப்பாக உள்ளதோ? நம் தாய் நாட்டை தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பெயரில்Fordக்கு விலை பேசிய தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு, தாயை விலை பேசி வேசி வேலைக்கு வன்முறையுடன் அழைத்து செல்லும் மாமா வேலை செய்பவனுக்கு சமம்.

    [2]தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பச்சை கொடி காட்டி இந்தியாவின் resource [human and natural]களை கொள்ளை அடிக்க ஆதரிக்கும் கற்றது கையளவு அவர்களே ,உங்கள் கொள்கையும் ,மன்மோகன் கொள்கையும் எவ்வளவு அழகாக இணைகின்றது பார்தீர்கலா ? உங்களை இனி “காங்கிரஸ் கற்றது கையளவு” என்று அழைத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள் தானே ?

    [3] கீழக்கரனைக்கு Ford வந்ததால் தொழிலாளிகள் , விவசாயிகள் எப்படி எல்லாம் பாதிக்கபட்டார்கள் என்பதை நான் விளக்கீய பின்பும் நீங்கள் கூறும் மன்மோகன் தரப்பு பதில்கள் யாரை திருப்தி செய்ய ? நீங்கள் கேட்ட ஒரு கேள்வி உங்களுக்கு நினைவிருகிறதா ? நான் கூறட்டுமா?

    “நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், இதை நீங்களே நம்புகிறீர்களா?
    இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர் சார். கொஞ்சம் ப்ராக்டிகலாக யோசியுங்கள்”

    இதே கேள்வியை தான்……

    புதிய பொருளாதார கொள்கை மூலம் நம் தாய் நாட்டை சுரண்ட கதவுகளை திறந்த நரசிம்ம-மன்மோகன் அரசையும் அதை பின் தொடர்ந்த BJP ஆகியவர்களை ஆதரிக்கும் உங்களிடமும் கேட்கின்றேன் !

    ஜனநாயகவாதி கற்றது கையளவு அவர்களே உங்கள் பதில் மூலம் மக்கள் விரோத புதிய பொருளாதார கொள்கை] கிழியும் நேரம் இது!

  41. நீங்கள்[கற்றது கையளவு] ஜனநாயகவாதியா ?
    ———————————————————————————————————————————

    [1]FORD, HYUNDAI போன்ற பன்னாட்டு கம்பெனிகளீன் லாபம் என்ற கோர பசிக்கு எம் இந்திய மக்கள் தான் தாலி அறுக்க வேண்டுமா “மன்மோகன் முகதிரையுடன் பேசும் கற்றது கையளவு” ?

    [2]”கார்களை உற்பத்தி செய்யும்போது, துறைமுகத்துக்கு அருகாமையிலும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமலும், நகரத்திற்கு மிக தொலைவில் இல்லாமலும் ஒரு இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்”

    ஆம் இது எல்லாம் பன்னாட்டு கம்பெனிகள் தொழில் தொடங்க வைக்கும் நிபந்தனைகள்[ conditions ]!
    இதை ஏற்று தாய் நாட்டை சுரண்ட,கீழக்கரனை மக்களை அழீத்து FORDக்கு கதவுகளை திறக்க ஆதரிக்கும் நீங்கள் ஜனநாயகவாதியா

    //FORD, HYUNDAI போன்ற நிறுவனங்கள் கார்களை உற்பத்தி செய்யும்போது, துறைமுகத்துக்கு அருகாமையிலும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமலும், நகரத்திற்கு மிக தொலைவில் இல்லாமலும் ஒரு இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்த இடங்கள் தான் மறைமலை நகரும், திருப்பெரும்புதூரும். //

  42. கற்றது கையளவு,
    தமிழக மக்கள் பசியை போக்க 2000 ஆண்டு வரை நெல்லும், கருனைகிழங்கும் வீளைவித்த எமது கீழக்கரனை மக்கள் இன்று பஞச பரதேசிகளாக மாறி,நிலத்தை இழந்து தின கூலிகளாகவும், அருகில் உள்ள SRM போன்ற நீறுவனங்களில் மாதம் rs 5000 க்கு அடிமாட்டு சம்பளத்துக்கும் வேலை செய்யும் அவலம் ஏற்பட காரணம் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசும்

    //ஆனால் எந்த நிலத்தையும் கையகப்படுத்த கூடாது என்றால் பின் தொழில் எப்படி வளரும்? FORD, HYUNDAI போன்ற நிறுவனங்கள் கார்களை உற்பத்தி செய்யும்போது, துறைமுகத்துக்கு அருகாமையிலும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமலும், நகரத்திற்கு மிக தொலைவில் இல்லாமலும் ஒரு இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்த இடங்கள் தான் மறைமலை நகரும், திருப்பெரும்புதூரும். //

  43. Hi KK,

    //சீனாவிலும் ரசியாவிலும் *** தொழிற்சாலைகளுக்கான நிலங்கள் வானத்தில் இருந்து தானாக வந்தனவா, இல்லை, இருக்கும் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டதா?//

    During British rule and before, lands belonged to the Government/temples, some people like Jamindhaar were appointed to manage the collection of share in the yield from the lands in a particular area. In pre-industrial Europe also lands belonged to the Governments. This must be the picture in almost all over the world.

    Slowly, as coins and currencies became means of common exchange, capital became a big power and capitalists [none other than family members and cronies of the royal families and other authorities] were successful in getting lands registered as their private property. Same process spread to every part of the world. Currently capitalists have succeeded even to privatize water, power and other natural resources. (Remember, even today, in spite of all this, we still have some common lands under the control of Government)

    In socialist Russia, lands were not dispossessed from People but from landed gentry [a kind of jamindhaars]. Actually all lands were declared common property. Even the factories built on the lands were common property. So fruits are and will be shared. This is nothing like a meagre compensation for acquired lands paid decades after the actual occupation in our country.

    //அத்தகைய அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்தது யாருடைய குற்றம்?//

    You seem to be highly ignorant about the current system. Who gets to contest in elections? Only those who prostrate themselves at the feet of Jaya, Karuna, Sonia, Modi etc without any self-respect. Can any good come out of these MPs/MLAs? Can they be made in any way to enact those laws that you are talking? We say not to vote for this system. You want to keep this system but you blame the people for voting.

    //கம்மியுனிசம் ஒரு சிறந்த மாற்றாக இருந்திருந்தால் ரசியாவில் பின்னடைவு எர்பாடிருக்க வாய்ப்பே இல்லையே.//

    That is the power of ill-will of the selfish people, who were not happy to see simple people get all the facilities. Those selfish people acted as a weight tied to a swimmer. They were not few but should be around at least 10% percent of the population which is enormous. Imagine swimming with a weight of 10% of your body weight tied to you. In connivance with the Capitalists world over, particularly from US, they succeeded in degenerating the system to its old state. Another reason could have been that the Russian communists were not fully prepared to face the challenges. Next time, these errors would be rectified.

    //ஜனநாயகத்தில் குறைந்த பட்சம், அரசுக்கு எதிராக நம்மால் கருத்து தெரிவிக்க முடிகிறது. சர்வாதிகார ஆட்சிகளில் அது சாத்தியமே இல்லை.//

    வெறும் கருத்து தெரிவிக்க முடிவதால் என்ன பயன்? கம்யுனிச ஆட்சியில் கருத்து தெரிவிக்க முடியாது என்பது வெறும் அவதூறுதான். உன்மையான ஜனநாயகமான கருத்துப்பரிமாற்றங்களின் மூலம்தான் கம்யுனிச ஆட்சி நடைபெறும். பொதுமக்கள் நலனுக்கு தீங்கு பயப்பவர்கள்தான் கம்யுனிசத்தை எதிர்த்து வேலை செய்வார்கள்.

    //ஜனநாயகத்தை தான் பிடித்து கொண்டு தொங்குகிறேன்.//

    இது ஜன+நாயகம் அல்ல. முதலாளி+நாயகம்.

    //கம்மியுனிச ஆட்சி அமைந்தால் சர்வாதிகாரம் தலை தூக்கும் என்பது *** நீண்ட நாட்களாக இருக்கும் பயம்

    கம்மியுனிச ஆட்சியில் நீங்கள் எது போன்ற உரிமைகளை இழக்க நேரிடும் என்று பயப்படுகிறீர்கள்?

    //மக்களுக்கு கம்மியுனிசம் என்றால் என்ன என்று புரிய வைக்க வேண்டும். தற்போதைய வேகத்தில் ***, 300 வருடங்களானாலும் அதற்கு சாத்தியம் இல்லை//.
    புரிய வைப்பவர்களுக்கு இருக்கும் தெளிவாகக்கூறும் கடமையைப் போல புரிய வைக்கப்படுபவர்களுக்கும் கடமையிருக்கிறது. நீங்கள் புரிந்து கொள்ளும் வேகத்தில், உங்கள் கூற்று உன்மையாகக் கூட இருக்கலாம். என்ன செய்வது. காத்திருக்கத்தான். Anyway, you must have heard of exponential growth.

  44. கற்றது கையளவு,

    [1]”சரவணன், நான் இந்திய அரசுக்கோ, முதலாளித்துவத்துக்கோ கொடி பிடிக்கவில்லை.
    ஜனநாயக முறையிலேயே நாடு முன்னேற என்ன வழி என்று தான் யோசிக்கிறேன்”

    என்று நீங்கள் கூறி விட்டு பின்பு …

    முழுவதும் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசும், மன்மோகனும்,சிதம்பரமும் பேசும் அதே மொழீயீல் நீங்களும் இந்திய மக்களுக்கு எதிராகவும் ,பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாகவும் பேசும் மர்மம் என்ன ?

    [2]

    [a]தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பெயரில் மக்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்ட உமக்கு இருக்கும் ஆர்வத்துக்கு பெயர் தான்……

    [b]பன்னாட்டு நிறுவனங்களுக்கு பச்சை கொடி காட்டி இந்தியாவின் resource [human and natural]களை கொள்ளை அடிக்கும் இச் செயலுக்கு பெயர் தான்…….

    தரகு முதலாளித்துவம் என்பது.

    [2]தரகு முதலாளித்துவ மக்கள் விரோத காங்கிரஸ் மற்றும் BJP ஆகியர்க்ளீன் பொருளாதார கொள்கையை நீங்களும் ஏற்று கொள்வதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?

    //சரவணன், நான் இந்திய அரசுக்கோ, முதலாளித்துவத்துக்கோ கொடி பிடிக்கவில்லை.
    ஜனநாயக முறையிலேயே நாடு முன்னேற என்ன வழி என்று தான் யோசிக்கிறேன். //

  45. கற்றது கையளவு,

    [1]உங்கள் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசாங்கத்தில் பங்கு பெற்ற கட்சிகளில் ஒன்றாவது பன்னாட்டு முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்காமல் இருந்தனவா ?

    [2]காங்கிரஸ்,BJP,CPI,CPM,DMK,ADMK என்று அனைத்து ஓட்டு பொறுக்கிகளும் ஆட்சியில் இருந்த போது பன்னாட்டு முதலாளிகளுக்கு தரகு வேலை செய்தனவே !

    [3] மாநிலம் வாரியாக இவர்கள் பன்னாட்டு முதலாளிகளுக்கு செய்த தரகு வேலையை [மாமா வேலையை] பட்டியல் இட நான் தயார்.

    [4]அப்படி இருக்கும் போது இந்த முதலாளித்துவ அமைப்பு தவரானது அல்லவா ? மேலும் உலகமே இந்தியாவை முதலாளித்துவ சமுகமாக ஒத்துகொள்ளும் போது அவ் வார்த்தையை நீங்கள் தவிர்த்து ,ஜனநாயகம் என்று நீங்கள் பம்முவது ஏன் ?

    //அரசியல்வாதிகள் முதலாளிகளுக்கு தரகு வேலை பார்ப்பதாக கூறுகிறீர்கள். அத்தகைய அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்தது யாருடைய குற்றம்?//

    • முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தெரிந்தும் தெரியாதது போல ஏன் பதிவிடுகிறீர்கள் நண்பரே.

      பம்முவது என் குணம் அல்ல. பொறுமையாக பதிலளிப்பதால் பயந்து பம்முவதாக தவறாக நினைக்க வேண்டாம் சார்.

      உங்கள் லாஜிக் படி பார்த்தால் நீங்கள் கம்மியுநிசத்தை ஆதரிக்கவில்லை, சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறீர்கள் என்று எடுத்து கொள்ளலாமா சரவணன் 🙂

      • ஆம் கம்யுனிசம் என்பது பாட்டாளி வர்கத்தீன் [தொழிலாளர்-விவசாயிகளீன்] சர்வாதிகாரம் தான்.
        தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கு எந்த உரிமையும் இல்லை

        //உங்கள் லாஜிக் படி பார்த்தால் நீங்கள் கம்மியுநிசத்தை ஆதரிக்கவில்லை, சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறீர்கள் என்று எடுத்து கொள்ளலாமா சரவணன்//

      • ஜனநாயகம் என்பதே முதலாளித்துவம் பெற்று எடுத்த குழந்தை என்பது KK வுக்கு தெரியாதா ?
        ஜனநாயகம் என்ன மன்னர்கள்,நில பிரபுக்கள் முன்வைத்த அமைப்பா ? இல்லையே ?

        //முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தெரிந்தும் தெரியாதது போல ஏன் பதிவிடுகிறீர்கள் நண்பரே. //

        • முதலாளித்துவத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று நீங்கள் ஜனநாயகத்தை எதிர்க்கிறீர்கள் சரவணன். மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை தரும் எந்த அரசாங்கமாக இருந்தாலும், அது கம்மியுநிசமாக இருந்தாலும் எனக்கு சரி தான். ஆனால் கம்மியுனிசம் என்ற போர்வையில் எல்லா நாடுகளிலும் நடப்பது சர்வாதிகாரம் தான் என்பது தங்களுக்கு புதிதாக நான் சொல் வேண்டியதில்லை.

          கேட்டால் அவர்களெல்லாம் போலி கம்மியுனிச நாடுகள் என்று சொல்வீர்கள்.
          போலி கம்மியுநிசவாதிகளின் பிடியில் இருந்து உண்மையான கம்மியுனிச ஆட்சியை ஏன் மக்கள் போராடி பெற முயற்சிக்கவில்லை என்று கேட்டால் அதற்கு சரியான தெளிவான பதிலை கூற மாட்டேன் என்கிறீர்கள்.

          முதலில் ஒரு நல்ல மாடல் எங்களுக்கு காட்டுங்கள். (மீண்டும் மீண்டும் பழைய வரலாற்றை புரட்டாதீர்கள். தற்போதைய நிகழ்காலத்துக்கு வாருங்கள்).

          • கற்றது கையளவு,

            [1]ஜனநாயகம் என்பதே முதலாளித்துவம் பெற்று எடுத்த குழந்தை என்பது KK வுக்கு தெரியாதா ?
            ஜனநாயகம் என்ன மன்னர்கள்,நில பிரபுக்கள் முன்வைத்த அமைப்பா ? இல்லையே ?

            [2]ஆம் கம்யுனிசம் என்பது பாட்டாளி வர்கத்தீன் [தொழிலாளர்-விவசாயிகளீன்] சர்வாதிகாரம் தான்.தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கு எந்த உரிமையும் இல்லை

            //ஆனால் கம்மியுனிசம் என்ற போர்வையில் எல்லா நாடுகளிலும் நடப்பது சர்வாதிகாரம் தான் என்பது தங்களுக்கு புதிதாக நான் சொல் வேண்டியதில்லை. //

    • விவாதத்தில் இருந்து நீங்கள் தாவி தாவி செல்கின்றீர்கள் கற்றது கையளவு!

      “அரசியல்வாதிகள் முதலாளிகளுக்கு தரகு வேலை பார்ப்பதாக கூறுகிறீர்கள். அத்தகைய அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்தது யாருடைய குற்றம்?”

      என்ற உங்கள் கேள்விக்கு என் பதில் மேலே உள்ளது. படித்து பதில் அளீக்க முயலுங்கள்

      • தரகு முதலாளித்துவத்தை நான் ஆதரிக்கவில்லை சரவணன்,

        அதே சமயம் வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் தேவைப்படும்போது மக்களிடமிருந்து தான் வாங்க முடியும்.

        தாங்கள் கம்மியுனிச நாடுகளில் மக்களுக்கு என்று தனியாக எந்த நிலமும் கிடையாது. எல்லாம் பொதுநிலம், பொதுச்சொத்து ஆகி விடும் என்கிறீர்கள். அத்தகைய சித்தாந்தம் சிறந்ததாக இருந்தால் 10 சதவீத முதலாளிகள் 90 சதவீத பொதுமக்கள் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு புரட்சி போராட்டம் ஏன் நிகழவில்லை?

        முதலில் கம்மியுனிச நாடுகளில் மக்கள் நலம் பேணும் நல்லாட்சியை நிகழ்காலத்தில் நடத்தி காட்டி விட்டு பின் எங்களுக்கு உபதேசம் செய்தால் உங்கள் கருத்துக்களை ஏற்க முடியும்.
        இதை விடுத்து எதிர்மறை அரசியல் மட்டுமே செய்துக்கொண்டிருந்தால் மக்களுக்கு கம்மியுநிஸ்ட்கள் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பும் நம்பிக்கையும் கூட விலகி விடும்.

        உங்கள் கருத்துக்களை செவி மடுத்து கேட்கும் எங்களை போன்றவர்களையே நீங்கள் எதிரியாக கருதினால் பின் எப்படி உங்கள் கருத்துக்களை மற்ற பொதுமக்களிடம் கொண்டு செல்வீர்கள்?

        உங்கள் கருத்துக்களுக்கு மறுபேச்சு பேசக்கூடாது என்ற எண்ணம் இருக்கும்வரை உங்கள் மேல் சர்வாதிகார நிழல் விலகவே விலகாது. மற்றவர்கள் கருத்துக்களையும் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை அப்படியே மறுபேச்சு பேசாமல் ஒத்துக்கொள்ளாததால் நான் உங்களுக்கு எதிரியாகி விட மாட்டேன். ஆனால் தங்களின் பதிவுகளில், உணர்ச்சி கொப்பளிக்க எதிர்கொள்ளும் வேகம் தான் தெரிகிறதே தவிர நான் சொன்ன கருத்துக்களை பொறுமையாக ஆராய மாட்டேன் என்கிறீர்கள்.

        தங்களது IDEAL கம்மியுனிசம் நிகழ்காலத்தில் சாத்தியமில்லை என்பது என் கருத்து.
        உலகம் அந்த காலகட்டத்தை தாண்டி சென்று பல வருடங்களாகி விட்டது.
        இயல்பு வாழ்க்கைக்கு வாருங்கள். நடைமுறைக்கு சாத்தியமான வழி என்ன என்று யோசித்து முடிவு செய்வோம். பழம்பெருமைகளை பேசிக்கொண்டிருந்தால் பின் உங்களுக்கும் மதவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

        • கற்றது கையளவு,

          விவாதத்தில் இருந்து “மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ” நீங்கள் தாவி தாவி செல்கின்றீர்கள் கற்றது கையளவு!

          “அரசியல்வாதிகள் முதலாளிகளுக்கு தரகு வேலை பார்ப்பதாக கூறுகிறீர்கள். அத்தகைய அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்தது யாருடைய குற்றம்?”

          என்ற உங்கள் கேள்விக்கு என் பதில் கீழே உள்ளது. படித்து பதில் அளீக்க முயலுங்கள்

          [1]உங்கள் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசாங்கத்தில் பங்கு பெற்ற கட்சிகளில் ஒன்றாவது பன்னாட்டு முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்காமல் இருந்தனவா ?

          [2]காங்கிரஸ்,BJP,CPI,CPM,DMK,ADMK என்று அனைத்து ஓட்டு பொறுக்கிகளும் ஆட்சியில் இருந்த போது பன்னாட்டு முதலாளிகளுக்கு தரகு வேலை செய்தனவே !

          [3] மாநிலம் வாரியாக இவர்கள் பன்னாட்டு முதலாளிகளுக்கு செய்த தரகு வேலையை [மாமா வேலையை] பட்டியல் இட நான் தயார்.

          [4]அப்படி இருக்கும் போது இந்த முதலாளித்துவ அமைப்பு தவரானது அல்லவா ? மேலும் உலகமே இந்தியாவை முதலாளித்துவ சமுகமாக ஒத்துகொள்ளும் போது அவ் வார்த்தையை நீங்கள் தவிர்த்து ,ஜனநாயகம் என்று நீங்கள் பம்முவது ஏன் ?

  46. @சரவணன் ( மச்சம் வெச்ச செந்தில் குமரன் ?! )

    //அல்லது ரஷ்ய ,சீனா கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாளிகள் ஊடுருவி சீரழீத்த நிகழ்வையா ?ரஷ்ய ,சீனா நாடுகளில் முதலாளித்துவம் மீண்டும் வந்ததுக்கு இது தான் காரணம். //

    மண்ணாங்கட்டி .

    மாவோ கொடுத்த டார்ச்சரில் மக்கள் வெறுத்து போய்விட்டார்கள் சீனாவில் .
    ஊர் கூடி தேர் இழுப்போம் உழுவோம் , என்று சொன்ன பிறகு யாரும் சரியாக விவசாயம் செய்யவில்லை . பசி பட்டினியில் முப்பது லட்சம் பேர் செதுவிட்டர்கள் . ஆனால் கட்சி அதிகாரிகள் நல்ல பேர் எடுக்கணும் என்பதற்காக எங்க ஊரில் அமோக விளைச்சல் என்று பொய் சொல்லி எல்லா தானியத்தையும் கிட்டங்கிக்கு அனுப்பி மக்களை பட்டினி போட்டார்கள் . மாவோ வீண் ஜம்பத்திற்காக தானியத்தை ஏற்றுமதி செய்து , கம்ம்யூநிசம் எப்பை அமோக விளைச்சல் கொடுக்குது பாருங்கள் என்று பந்தா காட்டினார் .
    டினாமேன் சதுக்கத்திலே செத்து எல்லாம் முதலாளிகளா ?

    ரஷ்யாவில் , நல்ல வீடு வேணுமா கட்சி காரன்க்கு
    நல்ல கார் வேணுமா கட்சி காரனுக்கு
    கஷ்டப்பட்டு வேலை செஞ்சா ,சம்பளம் எல்லாருக்கும் ஒரே மாதிரி .

    சரி இந்தியாவிலே கம்மியூனிச மாநிலம் எப்படி இருக்குதுன்னா பார்த்தா , 2005 இல கோலாகதா போய் இருந்தேன் .அப்போ மனிதர்கள் கைவண்டி இழுத்துக்கொண்டு இருந்தார்கள்

    • // சரி இந்தியாவிலே கம்மியூனிச மாநிலம் எப்படி இருக்குதுன்னா பார்த்தா , 2005 இல கோலாகதா போய் இருந்தேன் .அப்போ மனிதர்கள் கைவண்டி இழுத்துக்கொண்டு இருந்தார்கள். //

      வினவின் மீதும் கம்யூனிசக் கொள்கையின் மீதும் வசைமாறிப் பொழிந்தே சுய இன்பம் தேடும் சில ஜென்மங்கள் உள்ளன். அவர்கள் எதையும் படித்துவிட்டு பின்னூட்டமிடுவதில்லை.

      போலிக் கம்யூனிஸ்டுகளைப் பற்றி பல கட்டுரைகள் எழுதிய பின்பும். மேற்கு வங்கத்தின் இப்படி, கேரளாவில் அப்ப்டி என்றும் கூறும் ஜென்மங்களைப் பற்றி என்ன கூறுவது?

      இந்தத் ‘தோழரை’ உங்களுக்குத் தெரியுமா?
      https://www.vinavu.com/2012/06/16/do-you-know-them/

      • சும்மா நிறுத்துங்க பகத் . இந்த மாவோ கதை சொன்னது எனக்கு பக்கத்துக்கு சீட்டில் உக்காந்து இருக்கும் சீனாக்காரன் லின். அவங்க அப்பா தாத்தா பட்ட கஷ்டம் அவனுக்குதான் தெரியும் . உங்களை மாதிரி கிணத்து தவளைகள் , புத்தகம் படித்து ப்ரோபகன்டாவை உண்மை என்று நம்பி ஏமாந்து போவீர்கள்

        போலி கம்யூனிஸ்டுன்னு சொல்றியே , நாளைக்கு உங்க கூட்டதிலயிம் போலிங்க , அரை குறைங்க வராதுன்னு என்ன நிச்சயம்

        நீ வினவு மட்டும் படுச்சுட்டு சொல்றே , நான் சீனாக்காரன் , போலந்து காரன் , ஆர்மீனியா காரன் , உக்ரைன் காரன் என்று பலரோட பேசி உண்மை நிலை என்ன , ஏன் வொர்க் ஆகுல என்று தெரிந்து பேசுறேன்

  47. கற்றது கையளவு,

    தரகு முதலாளித்துவ,கையாளாகாத, திறமைஅற்ற, ஊழல் மிக்க, புழுத்து போன,நாறிப்போன, தொழிலாளிகள் விரோத, விவசாயிகள் விரோத முதலாளித்துவ மாடல் இந்திய அரசை கற்றது கையளவு பீடித்துகொண்டு இன்னும் தொங்குவது ஏனோ ?. 🙂

    • நான் கருத்து சுதந்திரம் இருக்கும், ஊடக சுதந்திரம் இருக்கும் ஜனநாயகத்தை தான் பிடித்து கொண்டு தொங்குகிறேன் சார். என்னை முதலாளித்துவ ஏஜென்டாக நினைக்க வேண்டாம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

      மெய்ப்பொருள் காண்பது அறிவு!

      • உழைப்பாளர்களே, தொழிலாளர்களே, தோழர்களே, உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!!!!!

      • அனைத்து ஊடகங்களிளும்[mass media ] டாடா,அம்பானி ஆகியேரின் share capital இருக்கும் போது அவை சுதந்திரமாக செயல் பட முடியும் என்று நீங்கள் கூறுவதில் ஏதாவது logic இருக்கா ?

        //நான் கருத்து சுதந்திரம் இருக்கும், ஊடக சுதந்திரம் இருக்கும் ஜனநாயகத்தை தான் பிடித்து கொண்டு தொங்குகிறேன் சார். என்னை முதலாளித்துவ ஏஜென்டாக நினைக்க வேண்டாம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. //

        • வினவு கூட ஒரு ஊடகம் தான் சரவணன் சார்! நீங்களும் நானும் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்து கொண்டு வருகிறோமே. நம் நாட்டில் அரசை எதிர்த்து நடத்தும் போராட்டங்களை சீனாவிலோ ரசியாவிலோ நடத்த முடியுமா?

  48. ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்…

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல். எதுவுமே ஒரு அளவோடு தான் பின்பற்றப்பட வேண்டும். இது நாடாளும் கொள்கை என்கிற பதத்திற்கும் பொருந்தும். எந்த நாட்டிலும் முழுமையான கம்யுனிசமும் இருக்க கூடாது. அதே போல் எந்த நாட்டிலும் முதலாளித்துவமும் முழுமையாக ஆட்சி செய்ய கூடாது. ஒன்று மேலோங்கினால் அதை சமன் செய்வதற்கு இன்னொன்று மேலோங்க வேண்டும். எந்த இடத்தில பொதுவுடைமை இருக்க வேண்டுமோ அங்கு பொதுவுடைமை கொள்கை இருக்க வேண்டும்.. எங்கு தனியுடமை(முதலாளித்துவம்)கொள்கை இருக்க வேண்டுமோ அங்கு தனியுடமை தான் இருக்க வேண்டும். அது,அது அதன்,அதன் அளவை தாண்ட கூடாது.

    இரண்டில் எது அதிகமானலும் ஒன்று சோவியத் ரஷ்யவாக பொய் முடியும்,அல்லது அமெரிக்காவில் 2008இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போல்(வால் வீதி முற்றுகை) போய் முடியும். ஆக, இரண்டையுமே ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

  49. அணைத்து உழைக்கும் மக்களுக்கும் என் உளமார்ந்த மே நாள் நல்வாழ்த்துக்கள்

  50. // எந்த இடத்தில பொதுவுடைமை இருக்க வேண்டுமோ அங்கு பொதுவுடைமை கொள்கை இருக்க வேண்டும்.. எங்கு தனியுடமை(முதலாளித்துவம்)கொள்கை இருக்க வேண்டுமோ அங்கு தனியுடமை தான் இருக்க வேண்டும். அது,அது அதன்,அதன் அளவை தாண்ட கூடாது.//

    எந்த இடத்தில் கயூனிசம் இருக்க வேண்டும் ? எந்த இடத்தில் முதலாளித்துவம் இருக்க வேண்டும்? என்று கூறுங்களேன்.

    நீங்கள் கம்யூனிசத் தத்துவத்தைப் பற்றி முதலாளித்துவத்தின் அவதூறுகளின் மூலம் தான் அறிந்திருக்கிறீர்கள் போலும்.

    சோவியத் ரஷ்யாவிலும், சீனவிலும் ஏற்பட்ட பினனடைவுக்குக் காரணம் என்ன? என்ற விடைதேடும் முதலாளித்துவாதிகள் சொல்லும் எளிமையான பதில் “கம்யூனிசக் கொள்கையே அப்படித்தான். அது ஒரு சர்வாதிகாரம். அது நிலைப்பது சாத்தியமல்ல“.

    இதே பதிலைத்தான் நீங்களும் கற்றது கையளவு அவர்களும் கூறுகிறீர்கள்.

    கம்யூனிசக் கொள்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும், வர்க்க சமுதாயத்தையும் ஒழிப்பது தான் அதன் நோக்கம். சோவியத் ரஷ்யாவிலும், சீனவிலும் ஏற்பட்ட பினனடைவுக்குக் காரணம் கம்யூனிசக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளும், ஏகாதிபத்தியங்களின் சதியும் தான்.

    ஆனால் முதலாளித்துவம் அடிப்படையிலேயே தவறானது. சுரண்டல், தனியுடமை(Accumulation of Wealth) இவை இரண்டும் முதலாளித்துவத்தின் அடிப்படை. இவை இரண்டும் இல்லாமல் முதலாளித்தும் வாழவே முடியாது. முதலாளித்துவத்தை சரியாக நடைமுறைபப்டுத்தினாலும், தவறாக நடைமுறைப்படுத்தினாலும் அவ்வமைப்பில் ஏற்றத்தாழ்வு இருந்தே தீரும்.

    ஆனால் கம்யூனிசக் கொள்கையை சரியாக நடைமுறப்படுத்தினால் அது சமுதாயத்தை பூலோக சொர்க்கமாக மாற்றும்.

    2008 நெருக்கடிக்குப் பின் கம்யுனிசம் தொடர்பான புத்தங்களின் விற்பனை பன் மடங்கு பெருகி வருகின்றது. பல நாடுகளில் ஆயுதமேந்திய/ஆயுதமேந்தாத இடதுசாரி அமைப்புகள் அந்நாடுகளின் அரசை நிலை குலையச் செய்கின்றன. பின்னடைவுகளில் இருந்து எழுந்து வந்து பாட்டாளி வர்க்கம் இந்த முதாலாளித்துவ அமைப்புமுறைக்குப் பாடை கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    • //கம்யூனிசக் கொள்கையை சரியாக நடைமுறப்படுத்தினால் அது சமுதாயத்தை பூலோக சொர்க்கமாக மாற்றும்.//
      கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. உலகின் எந்த மூலையிலாவது அத்தகைய பூலோக சொர்க்கத்தை நிறுவி நிரூபித்து காட்டுங்களேன்.

      சமுதாயத்தை பூலோக சொர்க்கபுரியாக மாற்றும் ஒரு வழியை மக்கள் ஏன் தூக்கி எறிந்தார்கள்?
      சில முதலாளிகளின் பேச்சை கேட்டு ஆள்பவர்கள் கம்மியுநிசத்தை நாசப்படுத்தினால் அதனை பார்த்து கொண்டு மக்கள் சும்மா ஏன் இருக்கிறார்கள். பூலோக சொர்க்கத்தை காட்டும் வழியில் அல்லவா மீண்டும் செல்ல வேண்டும் என்று போராடி இருப்பார்கள்? ஏன் அப்படி மக்கள் போராடவில்லை?

      மெய்ப்பொருள் காண்பது அறிவு!

  51. கற்றது கையளவு, Rebecca Mary

    இக்கட்டுரைகளைப் படித்துவிட்டு தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்

    சோஷலிசத்தின் அற்புதங்கள்:

    “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
    https://www.vinavu.com/2010/11/07/nov-7-3/

    மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் – வரலாற்றுப் பின்புலம்!
    https://www.vinavu.com/2012/10/26/welfare-state/

    நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!
    https://www.vinavu.com/2009/11/07/stalin-dvd-intro/

    கம்யூனிசத்தின் மீதும், ஸ்டாலின் மீதான அவதூறுகளுக்கான பதில்:

    ஸ்டாலின் சர்வாதிகாரி தான்! யாருக்கு ?
    http://vrinternationalists.wordpress.com/2009/10/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/

    தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
    http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html

    சோசலிசமும் – பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
    http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html

    இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 32
    http://senkodi.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 1
    http://vrinternationalists.wordpress.com/2009/08/10/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF/

    ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2
    http://vrinternationalists.wordpress.com/2009/08/31/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF-2/

    முதலாளித்துவத்தின் நெருக்கடி:

    அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது !
    https://www.vinavu.com/2008/10/13/recession/

    டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?
    https://www.vinavu.com/2011/08/23/double-dip/

    புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!
    https://www.vinavu.com/2012/03/08/the-eu-crisis/

    மீண்டெழும் தொழிலாளி வர்க்கம்

    முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை!
    https://www.vinavu.com/2011/11/04/occupy-wall-street/

    ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!
    https://www.vinavu.com/2010/05/10/greek-revolution/

    இந்தியா சுதந்திர ஜனநாயக நாடா?
    1947-ல் நடநதது சுதந்திரமா? இல்லை ஆட்சிமாற்றமா?
    August 15, 1947 The Transfer of Power: Real or Formal?
    http://www.rupe-india.org/43/ghosh.html

  52. கற்றது கையளவு விவாதத்தில் பதில் அளிக்காமல் நழுவும் கேள்விகள்
    ————————————————————————————

    [1]அனைத்து ஊடகங்களிளும்[mass media ] டாடா,அம்பானி போன்ற முதலாளிகளீன் share capital இருக்கும் போது அவை சுதந்திரமாக செயல் பட முடியும் என்று நீங்கள் கூறுவதில் ஏதாவது logic இருக்கா ? இது தான் ஊடக சுதந்திர ஜனநாயகத்தை பிடித்து கொண்டு தொங்கும் அழகா ?

    [2]உங்கள் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசாங்கத்தில் பங்கு பெற்ற கட்சிகளில் ஒன்றாவது பன்னாட்டு முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்காமல் இருந்தனவா ?அப்படி இருக்கும் போது இந்த முதலாளித்துவ அமைப்பு தவரானது அல்லவா ?

    [3]ஜனநாயகம் என்பதே முதலாளித்துவம் பெற்று எடுத்த குழந்தை என்பது KK வுக்கு தெரியாதா ? நான் மேலும் வரலாற்று பின்னணியுடன் விளக்க வேண்டுமா ?

    [4]ஆம் கம்யுனிசம் என்பது பாட்டாளி வர்கத்தீன் [தொழிலாளர்-விவசாயிகளீன்] சர்வாதிகாரம் தான்.
    தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.இதில் kk என்ன தவறு கண்டார் ?

    [5]”முதலாளித்துவத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.” என்பதை kk அவர்கள் தான் விளக்க வேண்டும்!

    [6]தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பெயரில் பன்னாட்டு Ford கம்பெனியீன் வருகையை ஆதரிக்கும் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசும், மன்மோகனும்,சிதம்பரமும் பேசும் அதே மொழீயீல் நீங்களும் பேசும் மர்மம் என்ன ?

    [7]பன்னாட்டு நிறுவனங்களுக்கு பச்சை கொடி காட்டி இந்தியாவின் resource [human and natural]களை கொள்ளை அடிக்கும் தரகு முதலாளித்துவ செயலுக்கு kk அவர்கள் ஆதரிப்பது ஏன் ?

    [8]தமிழக மக்கள் பசியை போக்க 2000 ஆண்டு வரை நெல்லும், கருனைகிழங்கும் வீளைவித்த எமது கீழக்கரனை மக்கள் இன்று பஞச பரதேசிகளாக மாறி,நிலத்தை இழந்து தின கூலிகளாகவும், அருகில் உள்ள SRM போன்ற நீறுவனங்களில் மாதம் rs 5000 க்கு அடிமாட்டு சம்பளத்துக்கும் வேலை செய்யும் அவலம் ஏற்பட காரணம் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு. இதன் பெயர் தான் கற்றது கையளவு கூறும் ஜனநாயகமா ? இத்தகைய தரகு முதலாளித்து ஜனநாயகம் இந்தியாவுக்கு தேவையா ?

    [9]FORD, HYUNDAI போன்ற பன்னாட்டு கம்பெனிகளீன் லாபம் என்ற கோர பசிக்கு எம் இந்திய மக்கள் தான் தாலி அறுக்க வேண்டுமா கற்றது கையளவு” ?

    [10]கீழக்கரனைக்கு Ford வந்ததால் தொழிலாளிகள் , விவசாயிகள் எப்படி எல்லாம் பாதிக்கபட்டார்கள் என்பதை நான் விளக்கீய பின்பும் நீங்கள் கூறும் பதில்கள் யாரை திருப்தி செய்ய ?

    [11]நம் தாய் நாட்டையே தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு Fordக்கு விலை பேசுவது உங்களுக்கு இனிப்பாக உள்ளதோ?

    [12]கற்றது கையளவு நீங்கள் கூறும்
    உழைப்பாளர்களே, தொழிலாளர்களே, தோழர்களே, உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!!!!!
    இதற்க்கு என்ன பொருள் ?கம்யுனிசம் உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் மே தின வாழ்த்துகள் கூறுவதன் உண்மை பொருள் என்ன ?

    [13]இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன பின்பும் 80% குடி மக்களுக்கு [தொழிலாளர்-விவசாயிகள் ] உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளிக்காத தற்போது உள்ள இந்திய முதலாளித்துவ அமைப்புடன் ,10 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளித்த சோவித் ரஷ்யா அமைப்பை ஒப்பீடு செய்யும் போது என் அறிவுக்கு கம்யுனிசம் தான் இந்தியாவிற்க்கு சரியான model என தெரிகின்றது. உங்கள் அறிவுக்கு எது சிறந்ததாக தெரிகின்றது ?

    [14]“குழந்தைகளின் உணவு, உடை, கல்வி அனைத்தையும் அளிப்பது பெற்றோரின் கடமை என்று தான் சொன்னேன். நான் மேலே சொன்ன குறைந்த பட்ச சம்பளம் தொழிலாளிகளுக்கு அளிக்கப்பட்டால் அவர்களால் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு முடியும்” என்று இத்துனை 67 ஆண்டுகளாக எத்துனையோ கற்றது கையளவுகள் பேசிவீட்டார்கள். ஆனால் நடப்பது என்ன ? தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கை தரம் குறைவது, முதலாளி மேலும் மேலும் சொத்து சேர்ப்பது தானே நடக்கிறது. ?????????????????

    [15]ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ? இது தான் kk வின் ஜனநாயக கொள்கையா ?

    [16]இந்தியாவில் 67 ஆண்டுகளாக உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசால் செய்ய முடியாத சாதனைகளை இனிமேல் தான் சாதிக்க போகின்றிர்களா ?

    [17]ஊருல ஒரே ஒரு ஓட்டு பொறுக்காத நல்லவன் ம.க.இ.க. அவனையும் கெட்டவனாக்க பார்ப்பது ஏன் kk ???????????????????????????????

    • கற்றது கையளவு,

      இக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறும் போது நழுவி செல்லாமல் yes /no என்றும் அல்லது ஒரே வார்த்தையீலும் அல்லது ஒரு வாக்கியத்திலும் எளிமையாக பதில் அளீக்க முயலுங்கள்.

  53. கற்றது கையளவு,

    இந்த அமைப்பில் அரசு, அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, ஊடகங்கள் என சகல துறைகளும் மொத்த அமைப்பும் அழுகி நாறிக்கொண்டிருப்பதை தான் இந்த கட்டுரை பேசுகிறது. அதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்றும் மாற்றம் தேவை என்பதை உணர்ந்துள்ளீர்கள் என்றும் நினைக்கிறேன். மாற்றம் வேண்டும் என நினைத்துக் கொண்டே இந்த அமைப்புக்குள்ளேயே மாற்றத்தை தேடுவது உங்களுகே முரணாக தெரியவில்லையா?

    இல்லை, இந்த முறையிலேயே மக்களுக்கு பயன் தரக்கூடிய உண்மையான ஜனநாயகத்தை சாதிக்க முடியும் என்று நீங்கள் கருதினால், அதை நீங்கள் தான் அறிவியல் பூர்வமாக முரணற்ற முறையில் விளக்கவேண்டும். தயவு செய்து விளக்குங்கள்.

    • ஆணி அவர்களே,

      மன்னிக்கவும். உங்கள் கேள்வியை இப்போது தான் பார்த்தேன். பல பின்னூட்டங்கள் நடுவில் உங்களது பதிவை நான் கவனிக்கவில்லை.

      அரசு, அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, ஊடகங்கள் என சகல துறைகளும் மொத்த அமைப்பும் நாறிக்கொண்டிருப்பதாக சொல்கிறீர்கள். இந்த அனைத்து அமைப்பிலும் உள்ளது உங்களை போன்ற, என்னை போன்ற மனிதர்கள் தானே. தனி மனித ஒழுக்கம், தனி மனித நேர்மை நம் மக்களிடம் இப்போது மிகவும் தேய்ந்து குறுகி உள்ளது. இது தான் அனைத்து அமைப்புகளிலும் ஊழல், சந்தர்ப்பவாதம், சுரண்டல் என்று நாடு முழுக்க பரவியிருக்கிறது.

      மக்களுக்கு பயன் தரும் உண்மையான ஜனநாயகத்தை சாதிக்க முடியும். ஆனால் அதற்கு மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும். நான் மேலே சொன்ன ஒழுக்கம், நேர்மை நம் அனைவருக்குள்ளும் இருந்து வர வேண்டும்.

      ஒரு புரட்சியானது நம்மை போன்ற சாமானிய மக்களை புறக்கணித்து வெறும் ஒரு சிறு குழுவின் மூலம் வெற்றி பெரும் விடயம் அல்ல. அனைத்து மக்களின் ஆதரவை பெற்ற புரட்சி தான் உண்மையான புரட்சியாக இருக்கும். அதன் வெற்றி நீடித்து இருக்கும். இங்கு பதிவிடும் தோழர்கள் பலர் மக்களை என்னமோ வெறும் ஆட்டு மந்தைகளாக நினைத்து அவர்களை இந்த புரட்சியில் ஈடுபடாமல் சிறு குழுக்கள் மூலமே நாட்டை தலை கீழாக மாற்ற முடியும் என்று நினைக்கிறார்கள்.
      அது தற்காலிக நடைமுறையில் சாத்தியம் இல்லை.

      அதனால் முதல் அடியாக மக்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு சிறிய அளவில் வெற்றிகள் பெற வேண்டும். அவர்களின் தினசரி முக்கிய பிரச்சினைகளுக்கு போராட்ட குரல் மட்டும் கொடுக்காமல் அதற்கு நடைமுறை தீர்வு அளிக்க வேண்டும். அப்போது தான் மக்களின் பேராதரவு உங்களுக்கு கிட்டும்.

      அரவிந்த் கேஜ்ரிவால், அண்ணா அசாரே போன்ற ஸ்டண்ட் பார்டிகளிடமிருந்தும் நாம் சில விடயங்களை கற்றுக்கொள்ளலாம். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லியில் இத்தனை ஆதரவு கிடைத்ததற்கு என்ன காரணம்? மக்கள் தற்போதுள்ள காங்கிரஸ், பாஜக மேல் நம்பிக்கை இழந்ததனால் தானே. அதே போல எந்த விதமான அரசியல் பதவியையும், அதிகார பதவியையும் வகிக்காத அண்ணா அசாரே லோக்பால் என்ற சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நடைமுறைபடுத்தி வெற்றி காண முடிந்தால் அப்போது மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல சட்டங்களை சிவப்பு சட்டைக்காரர்களும் மக்களிடம் தெளிவாக உரைத்து அவர்களின் ஆதரவை பெற்று அரசாங்கத்தை அந்த சட்டங்களை நிறைவேற்ற நிர்பந்திக்கலாம் இல்லையா?

      முதலில் மக்களின் பேராதரவு பெரும் Common Minimum Program போன்ற சட்டங்கள் என்னென்ன என்று நாம் யோசிக்கலாம்.

      உதாரணத்திற்கு என் மனதில் தோன்றிய சில எண்ணங்கள்:

      1. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் திறமையற்றவராகவோ, இல்லை ஊழல் பேர்வழியாகவோ இருந்தால் அவர்களை மக்களே திரும்ப பெரும் வசதி உள்ள Candidate Recall facility.
      2. நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம்/கூலி நிர்ணயிக்கப்பட்டு அது சரியாக நடைமுறை படுத்தப்படுகிறதா என்று பார்க்க ஒரு ஆணையம். இந்த சட்டத்தை மீறுகிற நிறுவனங்களுக்கு மிக கடுமையான அபராதம், மற்றும் லைசன்ஸ் கான்சல் போன்ற கடுமையான தண்டைனைகள் தர வேண்டும்.
      3. தொழிலாளிகள் கூட்டாக சேர்ந்து ஒரு தொழிலை தொடங்க அரசு ஆதரிக்க வேண்டும். திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முதலாளியாக முடியும். அத்தகையோருக்கு அரசு கடன் வசதி செய்து கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.
      4. மின் அணுவியல், இயந்திரவியலில் நாம் பயன்படுத்துகிற அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக இல்லை. அதனால் தென்கொரியா, சீனா, தைவான் போல இந்த துறைகளில் நம் நாட்டிலேயே சொந்தமாக தொடங்கப்படும் தொழில்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்.
      5. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சமச்சீர் கல்வி. அதனோடு முடிந்தவரை நடைமுறை வழி கல்வி, வெறும் புத்தக அறிவு மட்டுமல்லாது மாணவர்களை சிந்திக்க தூண்டும் வகையில் பாடத்திட்டம். மனப்பாடம் செய்பவர்கள் மட்டும் முதல் மதிப்பெண் வாங்க முடியும் என்ற தற்போதைய கல்வி திட்டத்தை மாற்றி கருத்துருவை மாணவர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்வி திட்டம்.

      இது போல இன்னும் எத்தனையோ சட்டங்கள், சட்ட திருத்தங்கள் கொண்டு வர மக்களின் ஆதரவை நாம் பெற யோசிக்கலாம். நான் மேற்கூறிய வழிகளை போல இன்னும் எண்ணற்ற வழிகள் நம் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் ஆழமாக இருக்கிறது. அதனை நாம் விவாதம் செய்து வெளியே கொண்டு வரலாம். ஆக்கபூர்வமாக யோசிக்கலாம்.

      • இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் வெளிநாட்டுக்காரன் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தில், வெளி நாட்டுக்காரன் உருவாக்கிய பொருட்களை நாம் வெறும் CONSUMER என்ற அளவில் மட்டும் பயன்படுத்தப்போகிறோம்?

        எப்போது நாம் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை வெளிநாடுக்காரனது நாடுகளில் விற்பது?

        இந்திய பொருள் என்றால் தரம் குறைந்த பொருள் என்ற எண்ணத்தை அடியோடு மாற்றி இந்திய பொருட்கள் தரமானதாக, அதே சமயம் சரியான விலையில் விற்கப்படும் பொருள் என்று வெளிநாட்டுகாரனுக்கு புரியும் வகையில் நாம் எப்போது பொருட்களை தரமாக உற்பத்தி செய்ய போகிறோம்?

        சாமியார்களை நம்பி ஓடும் நம்மவர்கள் அறிவியல் பக்கம், தொழில் நுட்பத்தின் பக்கம், தங்களது கவனத்தை எப்போது திருப்புவார்களோ, அப்போது தான் நாடு உருப்படும்.

        பார்ப்போம்.

  54. சரவணன் சார்,

    முடிந்தவரை உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் ஒரே கேள்வியை நீங்கள் பல்வேறு வடிவங்களில் கேட்கும்போது அவை எல்லாவற்றிற்கும் சேர்த்து நான் பதிலளிப்பதை நீங்கள் கவனிக்கவில்லை போலிருக்கிறது. நீங்கள் 4 கேள்வி கேட்பீர்கள். அதற்கு பதிலளித்தால் எட்டு கேள்வி கேட்கிறீர்கள். எல்லா கேள்விகளின் சாரமும் ஒன்றாக இருப்பதால் சில கேள்விகளுக்கு சேர்த்து பதிலளிக்கிறேன். சென்ற முறை 12 கேள்விகள் கேட்டீர்கள். பெரும்பாலான கேள்விகள் ஒரே வகையை சேர்ந்ததாக இருந்தாலும் அனைத்திற்கும் பொறுமையாக தான் பதிலளித்தேன். இப்போது மீண்டும் 17 கேள்வி கேட்கிறீகள். பரவாயில்லை. பதிலளிக்கிறேன்.

    1. ஏற்கனவே பதிலளித்த கேள்வி தான். ஊடகம் என்றால் டாட்டா அம்பானி ஸ்பான்சர் செய்யும் ஊடகம் மட்டும் தானா? வினவு கூட தான் ஒரு மீடியா தான். வினவுக்கு இங்கே கிடைக்கும் கருத்து சுதந்திரம் சர்வாதிகார ஆட்சிகளில் கிடைக்காது. Refer my reply: 50.1.2.1

    2. இதற்கும் ஏற்கனவே பதிலளித்துள்ளேன். கட்சிகள், அரசியல்வாதிகள் செய்யும் தவறுக்கு ஜனநாயகத்தை குறை கூறுவது சரியா? அந்த கட்சிகளை வோட்டு போட்டு வெல்ல வைத்தது நாம் தானே. வண்டியை ஓட்டுபவர் செய்யும் தவறுக்கு நீங்கள் வண்டியை குறை கூறிக்கொண்டிருக்கிறீர்கள். தற்போதைய தேர்தல் முறை ஜனநாயகத்தில் சில குறைகள் உள்ளன. இல்லை என்று நான் மறுக்கவில்லை. எந்த குறைகளை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தான் விவாதிக்கிறோம். லெனின், ஸ்டாலின் கால கம்மியுநிசத்திலும் குறைகள் இருந்தன, அதனால் தான் அதிலுள்ள குறைகளை முன்னிறுத்தி குருசேவும் டெங்சேவும் கம்மியுநிசத்தை கலந்கப்படுத்தினார்கள் என்று உங்கள் தோழர் பகத் கூறியிருக்கிறார். சிறந்த மாதிரி வடிவம் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு கம்மியுநிசத்துக்குள் குதிக்க முடியாது. ஒரு நல்ல மாதிரி வடிவம், வெற்றிகரமாக நடத்தி காட்டினால் நாங்களும் உங்களுடன் சேருவோம் அல்லவா.

    3. ஏற்கனவே பதிலளித்து விட்ட கேள்வி தான். Pls refer 48.1.2.1

    4. தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கும் நான் எப்போதும் துணை நிற்கவில்லை. தொழிலாளிகளின் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்று தானே கூறி வருகிறேன். நிலப்பிரபுக்களுக்கும் என்னுடைய கருத்துகளுக்கும் முடிச்சு போடுவது முற்றிலும் தவறு சரவணன். விளைச்சலுக்கான விலையை விவசாயிகள் தான் தீர்மானிக்க வேண்டும், அரசு அல்ல என்று இதற்கு முன்னேயே தெரிவித்திருக்கிறேன்.

    5. தயவு செய்து அகராதியை படித்துவிட்டு வாருங்கள் நண்பரே, முதலாளித்துவம் – ஜனநாயகம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியும்.

    6. தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இரண்டும் நல்லது தானே. இதற்கு ஏன் நான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? தொழில் வளர்ந்தால் உற்பத்தி பெருகும். வேலை வாய்ப்பு பெருகினால் நாட்டில் வறுமை நீங்கும். இதிலென்ன பிரச்சினை?

    7. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நான் ஜனநாயகத்துக்கு தான் ஆதரவு அளிக்கிறேன் என்று சொல்கிறேனே தவிர தரகு முதலாளித்துவத்திற்கு அல்ல. முதலில் போலி கம்மியுனிசம் இல்லாத உண்மையான கம்மியுனிசம் தழைக்கும் ஒரு மாடலை ஒரு நாட்டில் உருவாக்கி செயல்படுத்தி காட்டிய பின் கேளுங்கள். உங்களுக்கு என் ஆதரவு நிச்சயம் அப்போது கிடைக்கும்.

    8. Plrease refer my reply: 40.1

    9. ஒரு நிறுவனம் நடத்துவது என்பது இலாப நோக்கத்துக்காக தானே. நட்டப்பட வேண்டும் என்று எந்த நிறுவனமாவது விரும்புமா? ஏன் விதண்டாவாதமாக பேசுகிறீர்கள்? ஒரு தொழிற்சாலை நடக்கிறதென்றால் அதில் இலாபம் இருந்தால் தான் தொழிலாளர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். நட்டத்தில் ஓடும் தொழில்களுக்கு போனஸ் கொடுக்க இயலுமா? இலாபத்திற்காக தொழிலாளிகளை சுரண்டுவது கண்டிப்பாக தவறு. அது தண்டனைக்குரிய குற்றமாக இருக்க வேண்டும். ஆனால் இலாப நோக்கமே ஒரு நிறுவனத்துக்கு இருக்க கூடாது என்று எண்ணுவது எப்படி சார்? நிறுவனத்தை நடத்த கோடிகளில் முதலீடு செய்பவர் நட்டத்தில் ஒடுவதர்காகவா முயற்சிப்பார்? தொழிலாளர்களின் சம்பளம், வேலை நேரம், பாதுகாப்பு இதில் எவற்றையும் காம்ப்ரமைஸ் செய்யாமல் இலாபம் பார்த்தால் தவறல்லவே.

    10. கம்மியுனிச ரசியாவிலும் சீனாவிலும் மக்களின் நிலங்களெல்லாம் அரசுகள் கையகப்படுத்தப்பட்ட போது அம்மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? மக்களின் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்ட போது அதற்கு தகுந்த இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. தொழிற்சாலை கட்ட வானத்தில் இருந்து நிலத்தை எடுக்க முடியாதல்லவா? இருக்கும் நிலங்கள் யாருக்காவது சொந்தாமாக இருக்கும் வேளையில் அவர்களிடமிருந்து பெற வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. அதற்கு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பது தான் என் கருத்து.

    11. கேள்வி எண் 10 க்கு அளித்த விடையை பாருங்கள்.

    12. உழைப்பாளர்கள் தினத்தில் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க கூட எனக்கு உரிமை இல்லையா? இது சர்வாதிகாரமாக தங்களுக்கு தோன்றவில்லையா?

    13. ஏற்கனவே பல முறை பதிலளித்தாகி விட்டது. அந்த 10 ஆண்டு காலத்திற்கு பின்னர் ஏன் மக்கள் மீண்டும் அத்தகைய ஆட்சியை மலரச்செய்ய போராடவில்லை? 90 சதவீத மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு அமைப்பை அந்த 90 சதவீத மக்கள் ஏன் ஆதரித்து போராடி மீட்கவில்லை?

    14. ஜனநாயகத்தில் உள்ள குறைகளை மீண்டும் கூறுகிறீர்கள். ஏழைகள் இல்லாத சமூகம் என்பது IDEAL GOAL. அப்படிப்பட்ட சமூகம் உருவாகத்தான் நாம் ஆக்கபூர்வமாக யோசிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் என்னை முதலாளித்துவ ஏஜென்ட்டாக நீங்கள் உருவகப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்மறை அரசியலில் நீண்ட நாள் வெற்றியை தக்க வைக்க இயலாது என்பது வரலாற்றில் தெரியும். பாருங்கள் நண்பரே.

    15. Please refer Reply 30, Point no.3.

    16. ஏன் 67 வருடங்களுக்குள் சுருக்கி விட்டீர்கள்? அதற்கு முன் இந்தியாவில் கம்மியுனிசம் தான் இருந்ததா? நெகட்டிவாக யோசித்தால் ஒன்றுமே இயலாது தான். முடியும் என்று நம்பினால் முடியும்.

    17. நல்லவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தானாக பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். ம.க.இ.க. வில் நாட்டு நலனில், நாட்டு மக்கள் நலனில் அக்கறை உள்ளோர் இருக்கிறார்கள் என்று நான் நம்புவதால் அப்படி நான் சொன்னேன். அரசியல் ஒரு சாக்கடை என்று நீங்கள் ஒதுங்கிக்கொண்டால் அப்புறம் யார் அந்த சாக்கடையை சுத்தம் செய்வது?

    சரவணன் சார், தங்கள் கேள்விகளில் REPETITION வருகிறது. அதை தவிர்க்க பழகவும்.
    ஒரே கேள்வியை பல்வேறு இடங்களில் மாற்றி மாற்றி கேட்டால் எப்படி?

    நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். சொல்ல வந்த கருத்தை நச் என்று எளிதாக நறுக்கு தெரித்தாற்போல் சொல்லி முடித்து விட வேண்டும்.

    Brevity is the Soul of Wit !!!

    உங்களுக்கு பதில் சொல்லி பதில் சொல்லி நானும் மைல் நீளத்துக்கு பதிவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. மிக நீண்ட கேள்விகள் ஆனாலும் சரி, மிக நீண்ட பதில்கள் ஆனாலும் சரி, மற்றவர்களும் படிக்க வேண்டுமில்லையா. சுருக்கமாக பதிவிட பழகுங்கள் நண்பரே,

    வாழ்த்துக்கள்.

  55. வினவு,

    நண்பர் சரவணன் எழுப்பிய 17 கேள்விகளுக்கு நான் பதிவிட்ட பதில்கள் வெளிவரவில்லை.
    யாரையும் இழிவு படுத்தி எந்த பதிவும் நான் இட்டதில்லை.
    என் பதில்களை வெளிடவும். – கற்றது கையளவு.

  56. வினவு மற்றும் வினவு வாசகர்களுக்கு ,

    திரு கற்றது கையளவு அவர்கள் 17 கேள்விகளுக்கும் பதில் அளித்த போது எப்படி எல்லாம் நழுவி சென்று என் கேள்விகளை தவிர்கின்றார் என்பதை இங்கு தொகுக்க போகிறேன்

    [1]அனைத்து ஊடகங்களிளும்[mass media ] டாடா,அம்பானி போன்ற முதலாளிகளீன் share capital இருக்கும் போது அவை சுதந்திரமாக செயல் பட முடியும் என்று நீங்கள் கூறுவதில் ஏதாவது logic இருக்கா ? இது தான் ஊடக சுதந்திர ஜனநாயகத்தை பிடித்து கொண்டு தொங்கும் அழகா ?

    ஏற்கனவே பதிலளித்த கேள்வி தான். ஊடகம் என்றால் டாட்டா அம்பானி ஸ்பான்சர் செய்யும் ஊடகம் மட்டும் தானா? வினவு கூட தான் ஒரு மீடியா தான். வினவுக்கு இங்கே கிடைக்கும் கருத்து சுதந்திரம் சர்வாதிகார ஆட்சிகளில் கிடைக்காது. Refer my reply: 50.1.2.1

    [2] தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசாங்கத்தில் பங்கு பெற்ற கட்சிகளில் ஒன்றாவது பன்னாட்டு முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்காமல் இருந்தனவா ?அப்படி இருக்கும் போது இந்த முதலாளித்துவ அமைப்பு தவரானது அல்லவா ?

    இதற்கும் ஏற்கனவே பதிலளித்துள்ளேன். கட்சிகள், அரசியல்வாதிகள் செய்யும் தவறுக்கு ஜனநாயகத்தை குறை கூறுவது சரியா? அந்த கட்சிகளை வோட்டு போட்டு வெல்ல வைத்தது நாம் தானே. வண்டியை ஓட்டுபவர் செய்யும் தவறுக்கு நீங்கள் வண்டியை குறை கூறிக்கொண்டிருக்கிறீர்கள். தற்போதைய தேர்தல் முறை ஜனநாயகத்தில் சில குறைகள் உள்ளன. இல்லை என்று நான் மறுக்கவில்லை. எந்த குறைகளை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தான் விவாதிக்கிறோம். லெனின், ஸ்டாலின் கால கம்மியுநிசத்திலும் குறைகள் இருந்தன, அதனால் தான் அதிலுள்ள குறைகளை முன்னிறுத்தி குருசேவும் டெங்சேவும் கம்மியுநிசத்தை கலந்கப்படுத்தினார்கள் என்று உங்கள் தோழர் பகத் கூறியிருக்கிறார். சிறந்த மாதிரி வடிவம் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு கம்மியுநிசத்துக்குள் குதிக்க முடியாது. ஒரு நல்ல மாதிரி வடிவம், வெற்றிகரமாக நடத்தி காட்டினால் நாங்களும் உங்களுடன் சேருவோம் அல்லவா.

    [3]ஜனநாயகம் என்பதே முதலாளித்துவம் பெற்று எடுத்த குழந்தை என்பது KK வுக்கு தெரியாதா ? நான் மேலும் வரலாற்று பின்னணியுடன் விளக்க வேண்டுமா ?

    ஏற்கனவே பதிலளித்து விட்ட கேள்வி தான். Pls refer 48.1.2.1

    [4]ஆம் கம்யுனிசம் என்பது பாட்டாளி வர்கத்தீன் [தொழிலாளர்-விவசாயிகளீன்] சர்வாதிகாரம் தான்.
    தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.இதில் kk என்ன தவறு கண்டார் ?

    தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கும் நான் எப்போதும் துணை நிற்கவில்லை. தொழிலாளிகளின் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்று தானே கூறி வருகிறேன். நிலப்பிரபுக்களுக்கும் என்னுடைய கருத்துகளுக்கும் முடிச்சு போடுவது முற்றிலும் தவறு சரவணன். விளைச்சலுக்கான விலையை விவசாயிகள் தான் தீர்மானிக்க வேண்டும், அரசு அல்ல என்று இதற்கு முன்னேயே தெரிவித்திருக்கிறேன்.

    [5]“முதலாளித்துவத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.” என்பதை kk அவர்கள் தான் விளக்க வேண்டும்!

    தயவு செய்து அகராதியை படித்துவிட்டு வாருங்கள் நண்பரே, முதலாளித்துவம் – ஜனநாயகம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியும்.

    [6]தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பெயரில் பன்னாட்டு Ford கம்பெனியீன் வருகையை ஆதரிக்கும் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசும், மன்மோகனும்,சிதம்பரமும் பேசும் அதே மொழீயீல் நீங்களும் பேசும் மர்மம் என்ன ?

    தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இரண்டும் நல்லது தானே. இதற்கு ஏன் நான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? தொழில் வளர்ந்தால் உற்பத்தி பெருகும். வேலை வாய்ப்பு பெருகினால் நாட்டில் வறுமை நீங்கும். இதிலென்ன பிரச்சினை?

    [7]பன்னாட்டு நிறுவனங்களுக்கு பச்சை கொடி காட்டி இந்தியாவின் resource [human and natural]களை கொள்ளை அடிக்கும் தரகு முதலாளித்துவ செயலுக்கு kk அவர்கள் ஆதரிப்பது ஏன் ?

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நான் ஜனநாயகத்துக்கு தான் ஆதரவு அளிக்கிறேன் என்று சொல்கிறேனே தவிர தரகு முதலாளித்துவத்திற்கு அல்ல. முதலில் போலி கம்மியுனிசம் இல்லாத உண்மையான கம்மியுனிசம் தழைக்கும் ஒரு மாடலை ஒரு நாட்டில் உருவாக்கி செயல்படுத்தி காட்டிய பின் கேளுங்கள். உங்களுக்கு என் ஆதரவு நிச்சயம் அப்போது கிடைக்கும்.

    [8]தமிழக மக்கள் பசியை போக்க 2000 ஆண்டு வரை நெல்லும், கருனைகிழங்கும் வீளைவித்த எமது கீழக்கரனை மக்கள் இன்று பஞச பரதேசிகளாக மாறி,நிலத்தை இழந்து தின கூலிகளாகவும், அருகில் உள்ள SRM போன்ற நீறுவனங்களில் மாதம் rs 5000 க்கு அடிமாட்டு சம்பளத்துக்கும் வேலை செய்யும் அவலம் ஏற்பட காரணம் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு. இதன் பெயர் தான் கற்றது கையளவு கூறும் ஜனநாயகமா ? இத்தகைய தரகு முதலாளித்து ஜனநாயகம் இந்தியாவுக்கு தேவையா ?

    Plrease refer my reply: 40.1

    [9]FORD, HYUNDAI போன்ற பன்னாட்டு கம்பெனிகளீன் லாபம் என்ற கோர பசிக்கு எம் இந்திய மக்கள் தான் தாலி அறுக்க வேண்டுமா கற்றது கையளவு” ?

    ஒரு நிறுவனம் நடத்துவது என்பது இலாப நோக்கத்துக்காக தானே. நட்டப்பட வேண்டும் என்று எந்த நிறுவனமாவது விரும்புமா? ஏன் விதண்டாவாதமாக பேசுகிறீர்கள்? ஒரு தொழிற்சாலை நடக்கிறதென்றால் அதில் இலாபம் இருந்தால் தான் தொழிலாளர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். நட்டத்தில் ஓடும் தொழில்களுக்கு போனஸ் கொடுக்க இயலுமா? இலாபத்திற்காக தொழிலாளிகளை சுரண்டுவது கண்டிப்பாக தவறு. அது தண்டனைக்குரிய குற்றமாக இருக்க வேண்டும். ஆனால் இலாப நோக்கமே ஒரு நிறுவனத்துக்கு இருக்க கூடாது என்று எண்ணுவது எப்படி சார்? நிறுவனத்தை நடத்த கோடிகளில் முதலீடு செய்பவர் நட்டத்தில் ஒடுவதர்காகவா முயற்சிப்பார்? தொழிலாளர்களின் சம்பளம், வேலை நேரம், பாதுகாப்பு இதில் எவற்றையும் காம்ப்ரமைஸ் செய்யாமல் இலாபம் பார்த்தால் தவறல்லவே.

    [10]கீழக்கரனைக்கு Ford வந்ததால் தொழிலாளிகள் , விவசாயிகள் எப்படி எல்லாம் பாதிக்கபட்டார்கள் என்பதை நான் விளக்கீய பின்பும் நீங்கள் கூறும் பதில்கள் யாரை திருப்தி செய்ய ?

    கம்மியுனிச ரசியாவிலும் சீனாவிலும் மக்களின் நிலங்களெல்லாம் அரசுகள் கையகப்படுத்தப்பட்ட போது அம்மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? மக்களின் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்ட போது அதற்கு தகுந்த இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. தொழிற்சாலை கட்ட வானத்தில் இருந்து நிலத்தை எடுக்க முடியாதல்லவா? இருக்கும் நிலங்கள் யாருக்காவது சொந்தாமாக இருக்கும் வேளையில் அவர்களிடமிருந்து பெற வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. அதற்கு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பது தான் என் கருத்து.

    [11]நம் தாய் நாட்டையே தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு Fordக்கு விலை பேசுவது உங்களுக்கு இனிப்பாக உள்ளதோ?

    கேள்வி எண் 10 க்கு அளித்த விடையை பாருங்கள்.

    [12]கற்றது கையளவு நீங்கள் கூறும்
    உழைப்பாளர்களே, தொழிலாளர்களே, தோழர்களே, உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!!!!!
    இதற்க்கு என்ன பொருள் ?கம்யுனிசம் உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் மே தின வாழ்த்துகள் கூறுவதன் உண்மை பொருள் என்ன ?

    உழைப்பாளர்கள் தினத்தில் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க கூட எனக்கு உரிமை இல்லையா? இது சர்வாதிகாரமாக தங்களுக்கு தோன்றவில்லையா?

    [13]இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன பின்பும் 80% குடி மக்களுக்கு [தொழிலாளர்-விவசாயிகள் ] உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளிக்காத தற்போது உள்ள இந்திய முதலாளித்துவ அமைப்புடன் ,10 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளித்த சோவித் ரஷ்யா அமைப்பை ஒப்பீடு செய்யும் போது என் அறிவுக்கு கம்யுனிசம் தான் இந்தியாவிற்க்கு சரியான model என தெரிகின்றது. உங்கள் அறிவுக்கு எது சிறந்ததாக தெரிகின்றது ?

    ஏற்கனவே பல முறை பதிலளித்தாகி விட்டது. அந்த 10 ஆண்டு காலத்திற்கு பின்னர் ஏன் மக்கள் மீண்டும் அத்தகைய ஆட்சியை மலரச்செய்ய போராடவில்லை? 90 சதவீத மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு அமைப்பை அந்த 90 சதவீத மக்கள் ஏன் ஆதரித்து போராடி மீட்கவில்லை?

    [14]“குழந்தைகளின் உணவு, உடை, கல்வி அனைத்தையும் அளிப்பது பெற்றோரின் கடமை என்று தான் சொன்னேன். நான் மேலே சொன்ன குறைந்த பட்ச சம்பளம் தொழிலாளிகளுக்கு அளிக்கப்பட்டால் அவர்களால் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு முடியும்” என்று இத்துனை 67 ஆண்டுகளாக எத்துனையோ கற்றது கையளவுகள் பேசிவீட்டார்கள். ஆனால் நடப்பது என்ன ? தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கை தரம் குறைவது, முதலாளி மேலும் மேலும் சொத்து சேர்ப்பது தானே நடக்கிறது. ?????????????????

    ஜனநாயகத்தில் உள்ள குறைகளை மீண்டும் கூறுகிறீர்கள். ஏழைகள் இல்லாத சமூகம் என்பது IDEAL GOAL. அப்படிப்பட்ட சமூகம் உருவாகத்தான் நாம் ஆக்கபூர்வமாக யோசிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் என்னை முதலாளித்துவ ஏஜென்ட்டாக நீங்கள் உருவகப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்மறை அரசியலில் நீண்ட நாள் வெற்றியை தக்க வைக்க இயலாது என்பது வரலாற்றில் தெரியும். பாருங்கள் நண்பரே.

    [15]ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ? இது தான் kk வின் ஜனநாயக கொள்கையா ?
    Please refer Reply 30, Point no.3.
    [16]இந்தியாவில் 67 ஆண்டுகளாக உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசால் செய்ய முடியாத சாதனைகளை இனிமேல் தான் சாதிக்க போகின்றிர்களா ?

    ஏன் 67 வருடங்களுக்குள் சுருக்கி விட்டீர்கள்? அதற்கு முன் இந்தியாவில் கம்மியுனிசம் தான் இருந்ததா? நெகட்டிவாக யோசித்தால் ஒன்றுமே இயலாது தான். முடியும் என்று நம்பினால் முடியும்.

    [17]ஊருல ஒரே ஒரு ஓட்டு பொறுக்காத நல்லவன் ம.க.இ.க. அவனையும் கெட்டவனாக்க பார்ப்பது ஏன் kk ???????????????????????????????

    நல்லவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தானாக பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். ம.க.இ.க. வில் நாட்டு நலனில், நாட்டு மக்கள் நலனில் அக்கறை உள்ளோர் இருக்கிறார்கள் என்று நான் நம்புவதால் அப்படி நான் சொன்னேன். அரசியல் ஒரு சாக்கடை என்று நீங்கள் ஒதுங்கிக்கொண்டால் அப்புறம் யார் அந்த சாக்கடையை சுத்தம் செய்வது?

    குறிப்பு :
    ————-
    வினவு மற்றும் வினவு வாசகர்களுக்கு ,

    திரு கற்றது கையளவு அவர்கள் ஒரு கேள்விக்காவது நேரடியாகவும், மனசாட்சிக்கு வீரோதம் இல்லாமலும் ,தர்க்கபடியும் பதில் அளித்து உள்ளாரா என்பதை வினவு மற்றும் வினவு வாசகர்கர்க்ளீன் ஆய்வுக்கு விட்டு விடுகின்றேன்.

    திரு கற்றது கையளவு,

    தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    றன்னெஞ்சே தன்னைச் சுடும்

  57. திரு கற்றது கையளவு,

    உங்களிடம் மிகவும் எளிமையா “—– சரி /தவறு—-” வகையான கேள்விகளை மீண்டும் கேட்ட போகிறேன். தயவு செய்து சிரமம் இன்றி,நழுவாமல் பதில் அளிக்கவும்.

    [1]அனைத்து ஊடகங்களிளும்[mass media ] டாடா,அம்பானி போன்ற முதலாளிகளீன் share capital இருக்கும் போது அவை சுதந்திரமாக மக்களுக்காக,மக்கள் நலனுக்காக ,உழைக்கும் வர்கத்துக்காக செயல் பட முடியுமா ? [முடியும் /முடியாது ]

    [2]தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசாங்கத்தில் பங்கு பெற்ற கட்சிகளில் அனைத்தும் பன்னாட்டு முதலாளிகளுக்கு தரகு வேலை பார்த்தன.அப்படி இருக்கும் போது இந்த முதலாளித்துவ அமைப்பு தவரானது அல்லவா ? [ஆம் /இல்லை ]

    [3]ஜனநாயகம் என்பதே முதலாளித்துவம் பெற்று எடுத்த குழந்தை என்பது உலகமே ஏற்ற உண்மை.இதை நீங்கள் ஏற்கின்றீர்களா ? [yes /no ]

    [4]ஆம் கம்யுனிசம் என்பது பாட்டாளி வர்கத்தீன் [தொழிலாளர்-விவசாயிகளீன்] சர்வாதிகாரம் தான்.
    தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.இக் கருத்து சரியா ?தவறா ? [சரி /தவறு ]

    [5]ஜனநாயகம் என்பதே முதலாளித்துவம் பெற்று எடுத்த குழந்தை என்பது உண்மையாகும் போது ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தீன் ஒரு அரசியல் வடிவம் தானே ?.[சரி /தவறு ]

    [6]தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பெயரில் பன்னாட்டு Ford கம்பெனியீன் வருகையை ஆதரிக்கும் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசும், மன்மோகனும்,சிதம்பரமும் பேசும் அதே மொழீயீல் நீங்களும் பேசுகின்றீர்கள்.[சரி /தவறு ]

    [7]பன்னாட்டு நிறுவனங்களுக்கு பச்சை கொடி காட்டி இந்தியாவின் resource [human and natural]களை கொள்ளை அடிக்கும் தரகு முதலாளித்துவ செயலுக்கு kk அவர்கள் ஆதரிப்பது சரியா ?தவறா ? [சரி /தவறு ]

    [8]தமிழக மக்கள் பசியை போக்க 2000 ஆண்டு வரை நெல்லும், கருனைகிழங்கும் வீளைவித்த எமது கீழக்கரனை மக்கள் இன்று பஞச பரதேசிகளாக மாறி,நிலத்தை இழந்து தின கூலிகளாகவும், அருகில் உள்ள SRM போன்ற நீறுவனங்களில் மாதம் rs 5000 க்கு அடிமாட்டு சம்பளத்துக்கும் வேலை செய்யும் அவலம் ஏற்பட காரணம் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு. இதன் பெயர் தான் கற்றது கையளவு கூறும் ஜனநாயகமா ? இத்தகைய தரகு முதலாளித்து ஜனநாயகம் இந்தியாவுக்கு தேவையா ?[தேவை /தேவை இல்லை ]

    [9]FORD, HYUNDAI போன்ற பன்னாட்டு கம்பெனிகளீன் லாபம் என்ற கோர பசிக்கு எம் இந்திய மக்கள் தான் நிலம் இழந்து தாலி அறுக்க வேண்டுமா கற்றது கையளவு” ?[ஆம் /இல்லை ]

    [10]கீழக்கரனைக்கு Ford வந்ததால் தொழிலாளிகள் , விவசாயிகள் எப்படி எல்லாம் பாதிக்கபட்டார்கள் என்பதை நான் விளக்கீய பின்பும் நீங்கள் கூறும் பதில்கள் யாரை திருப்தி செய்ய ?
    Options
    [a] உங்கள் பொய்த்த தன்னெஞ்சுக்கு
    [b] விவாதத்தில் வெற்றி பெற
    [c ]தொழிலாளிகள் , விவசாயிகள் பாதிக்கபடுவதால் கவலை இல்லை

    [11]நம் தாய் நாட்டையே தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு Fordக்கு விலை பேசுவது உங்களுக்கு இனிப்பாக உள்ளதோ?[ஆம் /இல்லை ]

    [12]கம்யுனிசம் உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் மே தின வாழ்த்துகள் கூறுவதில் ஏதாவது பொருள் உள்ளதா ?[இருக்கு /இல்லை]

    [13]இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன பின்பும் 80% குடி மக்களுக்கு [தொழிலாளர்-விவசாயிகள் ] உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளிக்காத தற்போது உள்ள இந்திய முதலாளித்துவ அமைப்புடன் ,10 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளித்த சோவித் ரஷ்யா அமைப்பை ஒப்பீடு செய்யும் போது என் அறிவுக்கு கம்யுனிசம் தான் இந்தியாவிற்க்கு சரியான model என தெரிகின்றது. உங்கள் அறிவுக்கு எது சிறந்ததாக தெரிகின்றது ?
    Options
    [a] இந்திய முதலாளித்துவ அமைப்பு
    [b] கம்யுனிசம்

    [14]இந்தியா சுதந்திரம் அடைந்த இத்துனை 67 ஆண்டுகளாக தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கை தரம் குறைவது, முதலாளி மேலும் மேலும் சொத்து சேர்ப்பது தானே நடக்கிறது.[ஆம் /இல்லை ]

    [15]ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ? இது தான் kk வின் ஜனநாயக கொள்கையா ?[ஆம் /இல்லை ]

    [16]இந்தியாவில் 67 ஆண்டுகளாக உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசால் செய்ய முடியாத சாதனைகளை இனிமேல் தான் சாதிக்க போகின்றிர்களா ?[ஆம் /இல்லை ]

    [17]ஊருல ஒரே ஒரு ஓட்டு பொறுக்காத நல்லவன் ம.க.இ.க. அவனையும் ஒட்டு பொறுக்க நீங்கள் அழைப்பது சரியா / தவறா ? [சரி /தவறு ]

    • திரு கற்றது கையளவு,

      மீண்டும்,மீண்டும் கேள்வி கேட்பதால் தவறாக நினைக்க வேண்டாம் . இவை எல்லாம் confirmation type கேள்விகள். உங்கள் பதில்கள்[yes/no], நம் விவாதத்தை முற்று பெற வைக்க உதவும்

      • குறிப்பு
        ————–

        முதலாளித்துவ/போலி ஜனநாயக மாயையில் உள்ள நண்பர்கள் யார் வேண்டுமானாலும் மேலே உள்ள 17 கேள்விகளுக்கு [சரி /தவறு ] பதில் அளீக்க முயலலாம்

        • கற்றது கையளவு கே ஆர் அதியமான் போலவே சிந்திக்கிறார் ஒரு வேலை அவராகக் கூட இருக்கலாம்.

          • திரு நாகராஜ்,

            அவர் வேறு அவர் வேறு.

            கற்றது கையளவு அவர்கள் ஜனநாயக போர்வைக்குள் மறைந்து உள்ள, மக்கள் நலன் மீது அக்கறை உள்ள பகுதி அளவு முதலாளித்துவ ஆதரவாளர்.கற்றது கையளவு அவர்களுக்கு மக்கள் நலன் மீது உள்ள அக்கறை காரணமாக கம்யூனிஸ்ட்ஆக பரிமாணம் அடைய 100% சாத்தியம் உள்ளது.

            கே ஆர் அதியமான் அவர்கள் முழுமையான முதலாளித்துவ அறிவு ஜீவி . கே ஆர் அதியமான் அவர்களை பொருத்த வரையில் அவர் கம்யூனிஸ்ட்ஆக பரிமானம் அடைய 0% சாத்தியம் உள்ளது.

            • திரு நாகராஜ் அவர்களே,

              அதியமான் அவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் சமீப காலமாக தான் வினவின் கட்டுரைகளை படித்து விவாதங்களில் ஈர்க்கப்பட்டு பதிவிடுகிறேன்.

      • உங்கள் 17 கேள்விகள் அனைத்திற்கும் மீண்டும் விளக்கமாக பதிலளித்து வருகையில் கணினியில் பிரச்சினை ஏற்பட்டு அனைத்தும் பதிவிட முடியாமல் போனது. மன்னிக்கவும்.

        மீண்டும் அந்த 17 கேள்விகளுக்கு விடையளித்தால் தங்களுக்கு தெளிவாகவே மீண்டும் விடையளிக்க முயற்சிக்கிறேன்.

        1. முடியும். உதாரணம் – வினவு போன்ற வலைதளங்களும் ஒரு வகை ஊடகம் தான் மீடியா தான்.

        2. அரசியல்வாதிகள் முதலாளிகளுக்கு தரகு வேலை செய்வதை நான் எப்போதும் ஆதரித்ததில்லை. நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். என்னை முதலாளித்துவ ஏஜென்ட் ஆக நீங்கள் கருதுகிறீர்கள். அது தவறு.

        3. ஏற்க மாட்டேன். ஜனநாயகம் என்ற கருத்துருவும் முதலாளித்துவம் என்ற கருத்துருவும் வேறு வேறு தான். தயவு செய்து அகராதியை படித்து விட்டு வாருங்கள்.

        4. தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கும் நான் எப்போதும் ஆதரவானவன் இல்லை, இல்லை, இல்லை. அதே சமயம் தொழிலாளிகளை சுரண்டாத நிறுவனங்கள் இல்லவே இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா? தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், தகுந்த பாதுகாப்பு வசதிகள், நல்ல வேலை சூழல் அமைத்து தரக்கூடிய முதலாளிகள் ஒருவர் கூட இல்லையா? ஒவ்வொரு தொழிற்சாலையிலும் மேற்கூறிய தொழிலாளர் நல வசதிகள் ஏற்பட என்ன வழி என்று யோசிக்கலாமே?

        5. கேள்வி என் 3 ஐ மீண்டும் வேறு வழியில் கேட்கிறீர்கள். இதற்கும் ஒரே பதில் தான்.

        6. தவறு. நான் பேசுவது மன்மோகன், சிதம்பரம் பேசுவது போல உங்களுக்கு தோன்றினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி இதெல்லாம் வேண்டும் என்று எண்ணினால் நான் மன்மோகன்/சிதம்பரம் போல பேசுகிறேன் என்று GENERALIZE செய்கிறீர்கள். தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு பெருக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கும் உண்டு தானே. தொழிலாளர்களை சுரண்டாத தொழில் வளர்ச்சி, அனைவருக்கும் உரிய வேலை வாய்ப்பு போன்றவற்றை அடைவதில் நாம் இருவரும் ஒரே கோட்டில் தான் பயணிக்கிறோம்.

        7. இரு வேறு விடயங்களை ஒரே கேள்வியில் கேட்கிறீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் கால் வைக்கலாமா என்பது ஒன்று. அவர்கள் நமது Human/Natural Resources ஐ கொள்ளையடிக்கலாமா என்பது இரண்டாவது. பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் கால் வைக்க கூடாது என்று தடை செய்தால் நம் நாட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்வதையும், தொழில் தொடங்குவதையும் அந்நாட்டினர் எதிர்த்து அனைவரையும் இந்தியாவுக்கு விரட்டி அடித்தால் அது சரியாகுமா? மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் வளைகுடா நாடுகள், அமேரிக்கா, இங்கிலாந்து, கனடா நாடுகளில் வாழும் நம்மவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பினால் என்ன ஆவது? அதே சமயம் பன்னாட்டு நிறுவனங்கள் நம்மவர்களை கொள்ளையடிப்பதை நான் எப்போதும் ஆதரித்ததில்லை.

        8. தொழிற்சாலைகளுக்கான நிலங்களை அரசு கையகப்படுத்தும்போது மிகவும் கவனமாக கையாள வேண்டும். நிலங்கள் ஆகாயத்தில் இருந்து வரப்போவதில்லை. இருக்கும் நிலங்கள் யாராவது ஒருவருக்கு சொந்தமாக தான் இருக்கிறது. அவற்றை அரசு கையகப்படுத்தும்போது அதற்கான உரிய இழப்பீடு முதலில் வழங்கப்பட்ட பின் தான் நிலங்கள் கையகப்படுத்த வேண்டும். சீனா, ரசியா நாடுகளிலும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு நிலங்கள் வானத்தில் இருந்து பெறப்படுவதில்லை இல்லையா. உரிய இழப்பீடு கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். இந்த முறையில் குளறுபடிகள் இருந்தால் அதை சரிசெய்ய வேண்டும். ஆக்கபூர்வமாக யோசித்தால் நிலங்களை அரசுக்கு கொடுத்த விவசாயிகளுக்கு அரசு வேறொரு இடத்தில் விவசாய நிலங்களை கொடுக்கலாம், பணம் மட்டும் இழப்பீடாக இல்லாமல் தகுந்த வேலை வாய்ப்பு, மாற்று வழி வருமானம் வர அந்த விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும். இந்த பாதையில் சற்று யோசித்து பாருங்கள்.

        9. மேலே கேள்வி எண் 8க்கு அளித்த பதில் தான் இதற்கும்.

        10. நீங்கள் குறிப்பிட்ட மூன்று OPTIONகளும் தவறு. கேள்வி எண் 8க்கு அளித்த பதிலை மீண்டும் கவனமாக படிக்கவும். உங்களுக்கு தெரியும் நான் எந்த கோட்டில் பயணிக்கிறேன் என்று.

        11. நம் நாட்டில் தொழில் தொடங்க ஒரு நிலம் அவர்களுக்கு வேண்டும். அதற்கு நாட்டை விற்பதாக தாங்கள் கூறுவது சரியல்ல. அவர்கள் நாட்டில் நம்மவர்களும் தொழில் செய்கிறார்கள், நிலத்தை வாங்குகிறார்கள். எடுத்தேன், கவிழ்த்தேன் முறையில் செயல்படுவது சரியல்ல என்று எனக்கு தோன்றுகிறது.

        12. கிருத்துமஸ் வாழ்த்து சொல்வதற்கு கிருத்துவனாக இருக்க வேண்டும் என்று இல்லை. ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்கு இசுலாமியனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நானும் ஒரு தொழிலாளி, உழைப்பாளி என்ற வகையில் என் சக தொழிலாளிகளுக்கு, உழைப்பாளர்களுக்கு மே தின வாழ்த்து தெரிவிப்பதில் என்ன தவறு? தொழிலாள்ளர் நலம், மக்கள் நலம், உழைப்பாளர் நலம் பற்றிய அக்கறை இருப்பவர் யார் வேண்டுமானாலும் மே தின வாழ்த்துக்களை சொல்லலாம், பகிரலாம்.

        13. இன்னும் நான் முடிவு செய்யவில்லை. இப்போது இரண்டு Optionகளையும் சீர்தூக்கி பார்த்துக்கொண்டிருக்கிறேன். கம்மியுநிசத்தின் மேல் எனக்கு இருக்கும் சில ஐயப்பாடுகள் இன்னும் தீரவில்லை. ஜனநாயகத்தின் மேல் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. தற்போதைய இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் குறைகளே இல்லை என்று நான் கூறவில்லை. அதே சமயம் அந்த குறைகளை எப்படி நிவர்த்தி செய்ய முடியும் என்று கோட்டில் நான் பயணிக்கிறேன். ஜனநாயகத்தை, மக்கள் கருத்துக்கு சுதந்திரம் கொடுக்கும் உண்மையான கம்மியுநிசத்தை நான் கண்டால் என் ஆதரவு அதற்கு நிச்சயம் உண்டு.

        14. ஜனநாயக முறையிலேயே இதற்கு என்ன தீர்வு என்று யோசிக்கலாமே? எல்லா ஜனநாயக நாடுகளிலும் விவசாயிகள் இது போல கஷ்டப்படுகிரார்களா? இல்லையே. இந்தியாவில் மட்டும் கஷ்டப்படுகிறார்கள் என்றால் தவறு ஜனநாயகத்தின் மேல் இல்லை, அது ஆள்பவர்கள் செய்யும் தவறு. சரியான ஒரு நபர் ஆண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு கிட்டும்.

        15. ஒரே சமச்சீர் கல்வி என்ற கருத்துக்கு என் ஆதரவு நிச்சயம் உண்டு. நான் STATE BOARDஇல் படித்து வந்தவன் தான்.

        16. ஆம். முயன்றால் சாதிக்கலாம். முடியாது என்று முடங்கிக்கொண்டால் சாதிக்க முடியாது. தற்போதைய ஜனநாயகத்தில் இருக்கும் குறைகளை நீக்கினால் முடியும். அதற்கு என்ன வழி என்று நம் விவாதத்தை ஆக்கபூர்வமாக தொடர யோசிப்போமே நண்பரே.

        17. நல்லவன் தான் ஒட்டு பொறுக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். 🙂 நல்லவர்கள் ஆண்டால் அது ஜனநாயகமாக இருந்தாலும் சரி சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி, மக்கள் நலமாக இருப்பார்கள். 🙂

        • ஒரு சிறிய ஐடியா.

          தொழில் வளர்ச்சிக்காக நிலங்களை அரசுகள் கையகப்படுத்தும்போது அந்த நிலங்களை ஒட்டு மொத்தமாக குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து வாங்குவதை விட்டு, அந்த நிலங்களுக்கு சொந்தமான விவசாயிகளின் பெயரிலேயே இருந்து அவற்றை லீஸ் போல கொடுக்கலாம். மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட வாடகை தொகையை அந்த விவசாயிகளுக்கு அந்த தொழில் நிறுவனங்கள் கொடுக்கலாம். கையகப்படுத்தப்பட்ட நிலம் விவசாய நிலமாக இருக்கும் பட்சத்தில், வாடகை மட்டுமல்லாமல் அந்த விவசாயிக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் வேறு தொழில் தொடங்க கொடுக்கலாம். இதனால் நிலத்தை விவசாயிகள் இழக்க மாட்டார்கள்,நிரந்தர வருமானம் அவர்களுக்கும் கிடைக்கும்.

          இது சரியாக இருக்குமா? தெரியவில்லை. விவாதங்களை வரவேற்கிறேன்.

        • Dear KK,

          The above questions are conformation type questions.

          If you answer the above questions with [yes/no] answer than We can end up the discussion clearly.

          No need of detailed answers for the above questions because the nature of questions are [yes/no] type.

          Pls answer with out any difficulties.

          I know that my friend KK never give up the battle field to the opponent so easily. I understood that there might be some valid reason for you to make this delay 🙂
          //உங்கள் 17 கேள்விகள் அனைத்திற்கும் மீண்டும் விளக்கமாக பதிலளித்து வருகையில் கணினியில் பிரச்சினை ஏற்பட்டு அனைத்தும் பதிவிட முடியாமல் போனது. மன்னிக்கவும்.//

          For me conquering the opponent is not impotent in discussions but understanding the opponent mind clearly is very important for me.

          so pls answer with yes/no

          Thank you

          • நன்றி சரவணன்,

            தங்களது 17 கேள்விகளுக்கும் இரண்டாவது முறை பதிலளிக்கும்போது பெரும்பாலும் முதல் வார்த்தையில் Yes/No, முடியும்/முடியாது, ஆம்/இல்லை என்ற வகையில் தான் பதிலளித்தேன். சில கேள்விகள் இரண்டு கேள்விகளை இணைத்து கேட்கப்படுவதால் ஒரு கேள்விக்கு எனது பதில் “ஆம்” என்றும் கேள்வியின் இரண்டாம் பாகத்திற்கு “இல்லை” என்றும் பதிலளிக்க வேண்டியதுள்ளதால் சற்று நீண்ட விளக்கமாக பதிலளித்துள்ளேன்.

            நானும் தங்களை எதிராளியாக கருதவில்லை. விவாதத்தின் முடிவில் இருவரும் கருத்து பரிமாற்றத்தால் தெளிவடைந்தோமானால் அதுவே போதும் 🙂

            • இது நடக்காது, ஆகாது என்று வருத்தபடுவதை விட, கோபப்படுவதை விட, இது நடக்க என்ன வழி, என்ன செய்யலாம் என்ற நோக்கில் நாம் யோசிக்கலாம்.

              ஒட்டுமொத்தமாக நாட்டையே தலைகீழாக மாற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கலாம்.

              இப்போது நாட்டுக்கு தேவை தெளிவான சிந்தனை தான். உணர்ச்சி வசப்படுவதால் தவறுகள் நடக்கும், வன்முறைகள் நிகழும். தண்ணீர் தண்ணீர் நாடகத்தை பார்த்திருப்பீர்கள். மக்களே அவர்கள் முயற்சியினால் மடையின் போக்கை மாற்றி ஊருக்கு தண்ணீர் கொண்டு வர முயற்சிப்பார்கள். அது போல ஆக்கபூர்வமாக வழி இருக்கிறதா என்று யோசிப்போம். மக்கள் சக்தி மகத்தானது. ஒரு அரசாங்கத்தையே தூக்கி எறியக்கூடிய சக்தி மக்களிடம் உள்ளது. நாம் தான் அந்த சக்தியின் மகத்துவத்தை உணராமல் என்னமோ மக்களை வெறும் ஆட்டு மந்தைகளாக கருதுகிறோம். ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் சாமானியர்களின், சாதாரண பொதுமக்களின் ஆதரவு அந்த போராட்டத்திற்கு கிடைக்க வேண்டும். வெறும் எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களை மக்கள் வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். வேண்டுமானால் சில கைத்தட்டல்கள் விசில் சத்தம் கேட்கலாம். ஆனால் அவர்கள் உங்கள் பின்னால் வர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் ஆக்கபூர்வமான தீர்வு அவர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் நீங்கள் கொடுக்க வேண்டும். மக்களை மாக்கானாக நினைத்த அறிவுஜீவிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

              அதனால் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறிய அளவில் நாடு முழுவதும் அவர்களுக்கான தினசரி பிரச்சினைகளை நாம் தீர்த்து வைத்தொமேன்றால் அவர்களுக்கு நம் மீது முழு நம்பிக்கை வரும், நாம் சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள்.

              முதல் அடியை எடுத்து வைப்போம். மக்களுக்கு நாம் பயனுள்ளவர்களாக என்ன வழி என்று யோசிப்போம். மக்களின் நம்பிக்கையை பெறுவோம், பின் ஆதரவு தானாக கிடைக்கும்.

            • Dear KK, You can also split the question in case if it contains two sub questions. But the answers with yes/no can/will only clear some doubts about your understanding about the particular subject area.

              Will you provide me yes/no type answers?

              Actually answering yes/no is a very easy process than typing lengthy answers 🙂

              For example you can answer like this!

              [1] yes
              [2] no
              [3] yes
              [4] no



              [17] no
              //சில கேள்விகள் இரண்டு கேள்விகளை இணைத்து கேட்கப்படுவதால் ஒரு கேள்விக்கு எனது பதில் “ஆம்” என்றும் கேள்வியின் இரண்டாம் பாகத்திற்கு “இல்லை” என்றும் பதிலளிக்க வேண்டியதுள்ளதால் சற்று நீண்ட விளக்கமாக பதிலளித்துள்ளேன். //

              • So, you want me to read all your questions fully thoroughly and answer. But you don’t want to read my answers fully. If you read my answers, the first word for most of the answers gives you my single word answer. I substantiate my answers in the next sentance. That’s all. So please read my latest 17 answers and you will get all the Yes/No answers. Please read my answers again. You will find all the answers there Saravanan. 🙂

                • Dear KK,

                  During our Discussion, it is wrong to blame me that I have not read your 17 answers for all these 17 questions.

                  Okey , Shall I interpret your answers in to yes/no type binary mode of answers now?

                  I understood your lengthy answers for my binary mode questions from your replays 60.1.2 as follows.

                  [1]அனைத்து ஊடகங்களிளும்[mass media ] டாடா,அம்பானி போன்ற முதலாளிகளீன் share capital இருக்கும் போது அவை சுதந்திரமாக மக்களுக்காக,மக்கள் நலனுக்காக ,உழைக்கும் வர்கத்துக்காக செயல் பட முடியுமா ? [முடியும் ]
                  Your answer : முடியும். உதாரணம் – வினவு போன்ற வலைதளங்களும் ஒரு வகை ஊடகம் தான் மீடியா தான்.
                  My comment: Vinavu & PJ are the Mass medias which are against this present political system. But what about the all other mass medias which are showing interest to capitalist people ?

                  [2]தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசாங்கத்தில் பங்கு பெற்ற கட்சிகளில் அனைத்தும் பன்னாட்டு முதலாளிகளுக்கு தரகு வேலை பார்த்தன.அப்படி இருக்கும் போது இந்த முதலாளித்துவ அமைப்பு தவரானது அல்லவா ? [இல்லை ]
                  Your answer:அரசியல்வாதிகள் முதலாளிகளுக்கு தரகு வேலை செய்வதை நான் எப்போதும் ஆதரித்ததில்லை. நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். என்னை முதலாளித்துவ ஏஜென்ட் ஆக நீங்கள் கருதுகிறீர்கள். அது தவறு.
                  My Comment: If this present political system is Okey then why do all the political parties are supporting Multinational companies to install their factories in India?

                  [3]ஜனநாயகம் என்பதே முதலாளித்துவம் பெற்று எடுத்த குழந்தை என்பது உலகமே ஏற்ற உண்மை.இதை நீங்கள் ஏற்கின்றீர்களா ? [ No ]
                  Your answer:ஏற்க மாட்டேன். ஜனநாயகம் என்ற கருத்துருவும் முதலாளித்துவம் என்ற கருத்துருவும் வேறு வேறு தான். தயவு செய்து அகராதியை படித்து விட்டு வாருங்கள்.
                  My comment: You read the history of capitalism and Democracy instead of advising me to refer the Dictionary!

                  [4]ஆம் கம்யுனிசம் என்பது பாட்டாளி வர்கத்தீன் [தொழிலாளர்-விவசாயிகளீன்] சர்வாதிகாரம் தான்.தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.இக் கருத்து சரியா ?தவறா ? Ambiguous Answer![neither Right or Wrong!]
                  your answer:தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கும் நான் எப்போதும் ஆதரவானவன் இல்லை, இல்லை, இல்லை. அதே சமயம் தொழிலாளிகளை சுரண்டாத நிறுவனங்கள் இல்லவே இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா? தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், தகுந்த பாதுகாப்பு வசதிகள், நல்ல வேலை சூழல் அமைத்து தரக்கூடிய முதலாளிகள் ஒருவர் கூட இல்லையா? ஒவ்வொரு தொழிற்சாலையிலும் மேற்கூறிய தொழிலாளர் நல வசதிகள் ஏற்பட என்ன வழி என்று யோசிக்கலாமே?
                  My Comment: How can I interpret your answer? Your answer is neither YES nor FALSE. There is an ambiguity in your answer!Ambiguous answers are not fit for binary mode questions!

                  [5]ஜனநாயகம் என்பதே முதலாளித்துவம் பெற்று எடுத்த குழந்தை என்பது உண்மையாகும் போது ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தீன் ஒரு அரசியல் வடிவம் தானே ?.[தவறு ]
                  Your answer:கேள்வி என் 3 ஐ மீண்டும் வேறு வழியில் கேட்கிறீர்கள். இதற்கும் ஒரே பதில் தான்.
                  My comment: You read the history of capitalism and Democracy instead of advising me to refer the Dictionary!

                  [6]தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பெயரில் பன்னாட்டு Ford கம்பெனியீன் வருகையை ஆதரிக்கும் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசும், மன்மோகனும்,சிதம்பரமும் பேசும் அதே மொழீயீல் நீங்களும் பேசுகின்றீர்கள்.[தவறு ]
                  Your answer :தவறு. நான் பேசுவது மன்மோகன், சிதம்பரம் பேசுவது போல உங்களுக்கு தோன்றினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி இதெல்லாம் வேண்டும் என்று எண்ணினால் நான் மன்மோகன்/சிதம்பரம் போல பேசுகிறேன் என்று GENERALIZE செய்கிறீர்கள். தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு பெருக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கும் உண்டு தானே. தொழிலாளர்களை சுரண்டாத தொழில் வளர்ச்சி, அனைவருக்கும் உரிய வேலை வாய்ப்பு போன்றவற்றை அடைவதில் நாம் இருவரும் ஒரே கோட்டில் தான் பயணிக்கிறோம்.
                  My comment: Mr Manmokan and Mr. Chadambaram are also supporting the arrival of multinational companies like Ford in to India in the name of Employment and Development!What way you are differing from their words? You can only explain this! AS YOU SAID IT FALSE! I AM NOT SUPPORTING THE MULTINATIONAL COMPANIES IN TO MY MOTHERLAND.

                  [7]பன்னாட்டு நிறுவனங்களுக்கு பச்சை கொடி காட்டி இந்தியாவின் resource [human and natural]களை கொள்ளை அடிக்கும் தரகு முதலாளித்துவ செயலுக்கு kk அவர்கள் ஆதரிப்பது சரியா ?தவறா ? [பச்சை கொடி சரி /கொள்ளை தவறு ]
                  Your answer: இரு வேறு விடயங்களை ஒரே கேள்வியில் கேட்கிறீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் கால் வைக்கலாமா என்பது ஒன்று. அவர்கள் நமது Human/Natural Resources ஐ கொள்ளையடிக்கலாமா என்பது இரண்டாவது. பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் கால் வைக்க கூடாது என்று தடை செய்தால் நம் நாட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்வதையும், தொழில் தொடங்குவதையும் அந்நாட்டினர் எதிர்த்து அனைவரையும் இந்தியாவுக்கு விரட்டி அடித்தால் அது சரியாகுமா? மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் வளைகுடா நாடுகள், அமேரிக்கா, இங்கிலாந்து, கனடா நாடுகளில் வாழும் நம்மவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பினால் என்ன ஆவது? அதே சமயம் பன்னாட்டு நிறுவனங்கள் நம்மவர்களை கொள்ளையடிப்பதை நான் எப்போதும் ஆதரித்ததில்லை.
                  my comment:So you support the arrival of Multinational companies into India but not supporting their robbery of Human and natural resource! If it is so What for they are coming to India? Are they come for doing any social service to my Indians?

                  [8]தமிழக மக்கள் பசியை போக்க 2000 ஆண்டு வரை நெல்லும், கருனைகிழங்கும் வீளைவித்த எமது கீழக்கரனை மக்கள் இன்று பஞச பரதேசிகளாக மாறி,நிலத்தை இழந்து தின கூலிகளாகவும், அருகில் உள்ள SRM போன்ற நீறுவனங்களில் மாதம் rs 5000 க்கு அடிமாட்டு சம்பளத்துக்கும் வேலை செய்யும் அவலம் ஏற்பட காரணம் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு. இதன் பெயர் தான் கற்றது கையளவு கூறும் ஜனநாயகமா ? இத்தகைய தரகு முதலாளித்து ஜனநாயகம் இந்தியாவுக்கு தேவையா ?
                  Ambiguous Answer! [Neither needed nor not needed!]

                  Your answer:தொழிற்சாலைகளுக்கான நிலங்களை அரசு கையகப்படுத்தும்போது மிகவும் கவனமாக கையாள வேண்டும். நிலங்கள் ஆகாயத்தில் இருந்து வரப்போவதில்லை. இருக்கும் நிலங்கள் யாராவது ஒருவருக்கு சொந்தமாக தான் இருக்கிறது. அவற்றை அரசு கையகப்படுத்தும்போது அதற்கான உரிய இழப்பீடு முதலில் வழங்கப்பட்ட பின் தான் நிலங்கள் கையகப்படுத்த வேண்டும். சீனா, ரசியா நாடுகளிலும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு நிலங்கள் வானத்தில் இருந்து பெறப்படுவதில்லை இல்லையா. உரிய இழப்பீடு கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். இந்த முறையில் குளறுபடிகள் இருந்தால் அதை சரிசெய்ய வேண்டும். ஆக்கபூர்வமாக யோசித்தால் நிலங்களை அரசுக்கு கொடுத்த விவசாயிகளுக்கு அரசு வேறொரு இடத்தில் விவசாய நிலங்களை கொடுக்கலாம், பணம் மட்டும் இழப்பீடாக இல்லாமல் தகுந்த வேலை வாய்ப்பு, மாற்று வழி வருமானம் வர அந்த விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும். இந்த பாதையில் சற்று யோசித்து பாருங்கள்.
                  My comment: Again Your answer is ambiguous! How can i interpret your answer? Is it your style of democracy that spoils the 1000’s of people life in keezakaranai village in India?

                  [9]FORD, HYUNDAI போன்ற பன்னாட்டு கம்பெனிகளீன் லாபம் என்ற கோர பசிக்கு எம் இந்திய மக்கள் தான் நிலம் இழந்து தாலி அறுக்க வேண்டுமா கற்றது கையளவு” ?[ஆம் /இல்லை ] Ambiguous answer[neither yes nor no]
                  Your answer:மேலே கேள்வி எண் 8க்கு அளித்த பதில் தான் இதற்கும்.
                  My comment: Again Your answer is ambiguous! How can i interpret your answer? Is it your style of democracy that spoils the 1000’s of people life in keezakaranai village in India?

                  [10]கீழக்கரனைக்கு Ford வந்ததால் தொழிலாளிகள் , விவசாயிகள் எப்படி எல்லாம் பாதிக்கபட்டார்கள் என்பதை நான் விளக்கீய பின்பும் நீங்கள் கூறும் பதில்கள் யாரை திருப்தி செய்ய ? new option [d] justifying that giving compensation to the people of LAND LOSERS

                  Options
                  [a] உங்கள் பொய்த்த தன்னெஞ்சுக்கு
                  [b] விவாதத்தில் வெற்றி பெற
                  [c ]தொழிலாளிகள் , விவசாயிகள் பாதிக்கபடுவதால் கவலை இல்லை
                  Your Answer:நீங்கள் குறிப்பிட்ட மூன்று OPTIONகளும் தவறு. கேள்வி எண் 8க்கு அளித்த பதிலை மீண்டும் கவனமாக படிக்கவும். உங்களுக்கு தெரியும் நான் எந்த கோட்டில் பயணிக்கிறேன் என்று.
                  My comment: So You are justifying that giving compensation to the people of LAND LOSERS FROM land looters in the name of Internationalization ?

                  [11]நம் தாய் நாட்டையே தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு Fordக்கு விலை பேசுவது உங்களுக்கு இனிப்பாக உள்ளதோ?[ஆம் /இல்லை ]
                  Ambiguous answer[neither yes nor no]
                  Your answer:நம் நாட்டில் தொழில் தொடங்க ஒரு நிலம் அவர்களுக்கு வேண்டும். அதற்கு நாட்டை விற்பதாக தாங்கள் கூறுவது சரியல்ல. அவர்கள் நாட்டில் நம்மவர்களும் தொழில் செய்கிறார்கள், நிலத்தை வாங்குகிறார்கள். எடுத்தேன், கவிழ்த்தேன் முறையில் செயல்படுவது சரியல்ல என்று எனக்கு தோன்றுகிறது.
                  My comment: Again Your answer is ambiguous! How can i interpret your answer? yes or no?

                  [12]கம்யுனிசம் உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் மே தின வாழ்த்துகள் கூறுவதில் ஏதாவது பொருள் உள்ளதா ?[இருக்கு ]
                  Your Answer:கிருத்துமஸ் வாழ்த்து சொல்வதற்கு கிருத்துவனாக இருக்க வேண்டும் என்று இல்லை. ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்கு இசுலாமியனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நானும் ஒரு தொழிலாளி, உழைப்பாளி என்ற வகையில் என் சக தொழிலாளிகளுக்கு, உழைப்பாளர்களுக்கு மே தின வாழ்த்து தெரிவிப்பதில் என்ன தவறு? தொழிலாள்ளர் நலம், மக்கள் நலம், உழைப்பாளர் நலம் பற்றிய அக்கறை இருப்பவர் யார் வேண்டுமானாலும் மே தின வாழ்த்துக்களை சொல்லலாம், பகிரலாம்.
                  My comment:You are the person who support capitalism and multinational companies into India. At the same time greeting workers for May day. Your attitude is Ridiculous!

                  [13]இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன பின்பும் 80% குடி மக்களுக்கு [தொழிலாளர்-விவசாயிகள் ] உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளிக்காத தற்போது உள்ள இந்திய முதலாளித்துவ அமைப்புடன் ,10 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளித்த சோவித் ரஷ்யா அமைப்பை ஒப்பீடு செய்யும் போது என் அறிவுக்கு கம்யுனிசம் தான் இந்தியாவிற்க்கு சரியான model என தெரிகின்றது. உங்கள் அறிவுக்கு எது சிறந்ததாக தெரிகின்றது ? Not yet decided!
                  Options
                  [a] இந்திய முதலாளித்துவ அமைப்பு
                  [b] கம்யுனிசம்
                  Your answer:இன்னும் நான் முடிவு செய்யவில்லை. இப்போது இரண்டு Optionகளையும் சீர்தூக்கி பார்த்துக்கொண்டிருக்கிறேன். கம்மியுநிசத்தின் மேல் எனக்கு இருக்கும் சில ஐயப்பாடுகள் இன்னும் தீரவில்லை. ஜனநாயகத்தின் மேல் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. தற்போதைய இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் குறைகளே இல்லை என்று நான் கூறவில்லை. அதே சமயம் அந்த குறைகளை எப்படி நிவர்த்தி செய்ய முடியும் என்று கோட்டில் நான் பயணிக்கிறேன். ஜனநாயகத்தை, மக்கள் கருத்துக்கு சுதந்திரம் கொடுக்கும் உண்மையான கம்மியுநிசத்தை நான் கண்டால் என் ஆதரவு அதற்கு நிச்சயம் உண்டு.
                  My Comment: You are expecting this same kind of false-democracy in the communist Government! But communist government can only provide democracy to working class people. any problem for you KK?

                  [14]இந்தியா சுதந்திரம் அடைந்த இத்துனை 67 ஆண்டுகளாக தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கை தரம் குறைவது, முதலாளி மேலும் மேலும் சொத்து சேர்ப்பது தானே நடக்கிறது.[ஆம் /இல்லை ] Ambiguous answer![neither yes nor no]
                  Your Answer:ஜனநாயக முறையிலேயே இதற்கு என்ன தீர்வு என்று யோசிக்கலாமே? எல்லா ஜனநாயக நாடுகளிலும் விவசாயிகள் இது போல கஷ்டப்படுகிரார்களா? இல்லையே. இந்தியாவில் மட்டும் கஷ்டப்படுகிறார்கள் என்றால் தவறு ஜனநாயகத்தின் மேல் இல்லை, அது ஆள்பவர்கள் செய்யும் தவறு. சரியான ஒரு நபர் ஆண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு கிட்டும்.
                  my comment:Again Your answer is ambiguous! How can i interpret your answer? yes or no?

                  [15]ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ? இது தான் kk வின் ஜனநாயக கொள்கையா ?[இல்லை ]
                  Your Answer:ஒரே சமச்சீர் கல்வி என்ற கருத்துக்கு என் ஆதரவு நிச்சயம் உண்டு. நான் STATE BOARDஇல் படித்து வந்தவன் தான்.
                  My comment: If You do not accept these different kind of Educational systems center and state] then why they are existing in Your current democratic political system? Who os responsible for this differences?

                  [16]இந்தியாவில் 67 ஆண்டுகளாக உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசால் செய்ய முடியாத சாதனைகளை இனிமேல் தான் சாதிக்க போகின்றிர்களா ?[ஆம் ]
                  Your Answer:ஆம். முயன்றால் சாதிக்கலாம். முடியாது என்று முடங்கிக்கொண்டால் சாதிக்க முடியாது. தற்போதைய ஜனநாயகத்தில் இருக்கும் குறைகளை நீக்கினால் முடியும். அதற்கு என்ன வழி என்று நம் விவாதத்தை ஆக்கபூர்வமாக தொடர யோசிப்போமே நண்பரே.
                  My comment:In your present capitalistic political system, How many years you need to fulfill the basic requirements of our fellow Indians? 2000 Years you need?

                  [17]ஊருல ஒரே ஒரு ஓட்டு பொறுக்காத நல்லவன் ம.க.இ.க. அவனையும் ஒட்டு பொறுக்க நீங்கள் அழைப்பது சரியா / தவறா ? [சரி]
                  Your Answer:நல்லவன் தான் ஒட்டு பொறுக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். 🙂 நல்லவர்கள் ஆண்டால் அது ஜனநாயகமாக இருந்தாலும் சரி சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி, மக்கள் நலமாக இருப்பார்கள். 🙂
                  My comment:Instead of planing for Revolution you are advising them to do their contributions in this Fake-Democracy!

                  Dear KK,

                  5/17 your answers are unclear,uncertain,indefinite and ambiguous! How can I understand you mind clearly if your answers are vague!

                  So let us continue our discussions after you are answering the binary[0/1] mode questions which you have answered already with ambiguity!

                  More over you pls conform my understanding about the interpretation of your lengthy answers into binary mode of answers [yes/no] is correct or not!

                  Best wishes for you! 🙂

                  • Dear KK,

                    I am interpreting and summarizing your descriptive type answers for my Binary mode[yes/no] questions as follows:-

                    [1] முடியும்

                    [2] இல்லை

                    [3] No

                    [4] Ambiguous Answer![neither Right or Wrong!]

                    [5] தவறு

                    [6] தவறு

                    [7] பச்சை கொடி சரி /கொள்ளை தவறு

                    [8] Ambiguous Answer! [Neither needed nor not needed!]

                    [9] Ambiguous answer[neither yes nor no]

                    [10] new option [d] justifying that giving compensation to the people of LAND LOSERS

                    [11]Ambiguous answer[neither yes nor no]

                    [12]இருக்கு

                    [13]Not yet decided!

                    [14]Ambiguous answer![neither yes nor no]

                    [15]இல்லை

                    [16]ஆம்

                    [17]சரி

                    I hope you will —–“conform”—- these answers and more over you will again respond to the ambiguous answers with clarity [yes/no]

                    When you do this than it is easy for us to continue discussion about this topic “தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?” very fruitfully!

                    pls reconsider the questions 4,8,9,11,14 which have gotten only ambiguous answer from you.

                    My Best wishes for you!

                    • சரவணன் சார், நீங்களும் என்னை விடுவதாக இல்லை, நானும் உங்களை விடுவதாக இல்லை 🙂

                      தங்கள் விருப்பப்படியே மீண்டும் பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.

                      4]ஆம் கம்யுனிசம் என்பது பாட்டாளி வர்கத்தீன் [தொழிலாளர்-விவசாயிகளீன்] சர்வாதிகாரம் தான்.
                      தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.இக் கருத்து சரியா ?தவறா ? [சரி /தவறு ]

                      கற்றது கையளவு பதில்:
                      தவறு.
                      சர்வாதிகாரம் என்பது எந்த முகமூடி போட்டுக்கொண்டு வந்தாலும் அது மக்களுக்கு கெடுதி தான். தொழிலாளர்களை முதலாளிகள் சுரண்டக்கூடாது, விவசாயிகளை நிலப்பிரபுக்கள் வதைக்க கூடாது. ஆனால் அந்த காரணத்தை காட்டி நாட்டை சர்வாதிகாரி கையில் ஒப்படைத்தால் பாகிஸ்தானில் முசாரப் ஆட்சி போல தான் நடக்கும்.

                      [8]தமிழக மக்கள் பசியை போக்க 2000 ஆண்டு வரை நெல்லும், கருனைகிழங்கும் வீளைவித்த எமது கீழக்கரனை மக்கள் இன்று பஞச பரதேசிகளாக மாறி,நிலத்தை இழந்து தின கூலிகளாகவும், அருகில் உள்ள SRM போன்ற நீறுவனங்களில் மாதம் rs 5000 க்கு அடிமாட்டு சம்பளத்துக்கும் வேலை செய்யும் அவலம் ஏற்பட காரணம் தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு. இதன் பெயர் தான் கற்றது கையளவு கூறும் ஜனநாயகமா ? இத்தகைய தரகு முதலாளித்து ஜனநாயகம் இந்தியாவுக்கு தேவையா ?[தேவை /தேவை இல்லை ]

                      கற்றது கையளவு பதில்:
                      தரகு முதலாளித்துவம் – தேவையில்லை.
                      ஜனநாயகம் – தேவை.
                      சர்வாதிகார ஆட்சி என்பது முதலாளித்துவ ஆட்சியை விட மோசமானது.

                      [9]FORD, HYUNDAI போன்ற பன்னாட்டு கம்பெனிகளீன் லாபம் என்ற கோர பசிக்கு எம் இந்திய மக்கள் தான் நிலம் இழந்து தாலி அறுக்க வேண்டுமா கற்றது கையளவு” ?[ஆம் /இல்லை ]
                      கற்றது கையளவு பதில்:
                      பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவுக்கு வரலாமா – ஆம், வரலாம்.
                      அவர்கள் தொழிலில் லாபம் ஈட்ட முயலலாமா – ஆம், லாபம் ஈட்டலாம், தவறில்லை.
                      லாபம் என்ற பெயரில் தொழிலாளர்களை சுரண்டலாமா – இல்லை, கூடாது.
                      இந்திய மக்கள் நிலத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அரசு கொடுக்கலாமா – கொடுக்கலாம், ஆனால் தகுந்த இழப்பீடு, அந்த நிலத்தினால் மக்களுக்கு முக்கிய வருவாய் (விவசாயம் போன்ற வருவாய்) கிடைத்ததென்றால் அந்த மக்களுக்கு உரிய மாற்று வருவாய் அமைத்து கொடுப்பது அரசின் கடமை.
                      எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அனைத்து நிலங்களையும் மக்களிடமிருந்து அரசு பறித்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்கலாமா – கொடுக்க கூடாது, மிகவும் கவனமாக பரிசீலித்து மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். மிகவும் அவசியமாக இருக்கும் பட்சத்தில் மட்டும் நிலங்கள் கையகப்படுத்த வேண்டும். தகுந்த இழப்பீடு, உரிய பாதுகாப்பு, மாற்று வருவாய் போன்றவற்றை பரிசீலித்து ஆய்ந்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.

                      [11]நம் தாய் நாட்டையே தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசு Fordக்கு விலை பேசுவது உங்களுக்கு இனிப்பாக உள்ளதோ?[ஆம் /இல்லை ]
                      கற்றது கையளவு பதில்:
                      Ford இந்தியாவில் தொழில் தொடங்கலாமா – ஆம், தொடங்கலாம்.
                      நிலத்தை அரசு கொடுக்க வேண்டுமா – நாட்டில் வேலை வாய்ப்பு, தொழில் பெருகும் பட்சத்தில் கொடுக்கலாம், ஆனால் அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் அம்மக்களுக்கு உரிய இழப்பீடு கண்டிப்பாக, காலதாமதமின்றி கொடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். அரசுக்கு இந்த கடமை உள்ளது.
                      விலை பேசுவது – நாட்டில் ஒரு தொழில் தொடங்கினால் அது நாட்டை விலை பேசுவதாக, நாட்டை விற்பதாக அர்த்தம் ஆகாது. அப்படி பார்த்தால் நம்மவர்கள் வெளிநாடுகளில் வசிக்கவோ, தொழில் தொடங்கவோ முடியாதே.

                      [14]இந்தியா சுதந்திரம் அடைந்த இத்துனை 67 ஆண்டுகளாக தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கை தரம் குறைவது, முதலாளி மேலும் மேலும் சொத்து சேர்ப்பது தானே நடக்கிறது.[ஆம் /இல்லை ]
                      67 ஆண்டுகளாக தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கை தரம் குறைவது – ஆம், நடக்கிறது. ஆனால், அதே சமயம், அதற்கான தீர்வு சர்வதிகாரம் இல்லை என்பது என் கருத்து.

  58. மே தினம் 2914

    வீழவீழ எழுவோம்

    முதலாளித்துவம் வீழும் வரை முயல்வோம் !

    கருப்பு ,மஞ்சல், சிகப்பு வண்ணத்தோல்கள் எங்கள் ஜீன்கள்

    ஆனால் உதிரம் சிந்தும் உழைப்பால் நாங்கள் சிகப்பாவோம்

    இனத்தால் வேறு வேறு நாங்கள்

    ஆனால் உழைப்பால் இணையும் எங்கள் இனம் “பாட்டாளி” வர்க்கம்

    மொழிகள் கூறும் இலக்கணங்கள் வேறு வேறு

    ஆனால் எங்கள் “பாட்டாளி வர்கத்தீன் ஒரே மொழி எம் தோழன்-மார்க்சு எழுதீய மூலதனம்

    மொழி,மதம் ,இனம் கடந்தவர்கள் நாங்கள்

    நாங்கள் படைக்கும் கம்யுனிச பூமியில் நாடுகளுக்கு எல்லையும் இருக்காது,நாடுகளும் இருக்காது.

    ஓரே நாடு அது உலகம் முழுவதுக்குமான கம்யுனிச நாடு ,

    ஒர் வர்க்கம் எமது பாட்டாளி வர்க்கம்

    May Day 2014 celebrations Worldwide
    ————————————————————

    May Day rallies worldwide demand reform, higher wages; clashes in Cambodia, Turkey
    http://www.foxnews.com/world/2014/05/01/may-day-rallies-worldwide-demand-reform-higher-wages-clashes-in-cambodia-turkey/

    International Workers’ Day celebrated alongside protests in many major cities
    http://www.aa.com.tr/en/news/321313–protests-mark-worldwide-may-day-celebrations

    Turkish protesters clash with police in Instanbul.
    http://www.commondreams.org/headline/2014/05/01-0

    A demonstrator hits an advertising panel with a hammer during a May Day protest in Medellin, Colombia.
    http://o.canada.com/news/photos-may-day-and-international-labour-day

    People walk with flags and balloons towards St. Basil’s Cathedral on Red Square during a rally in Moscow May 1, 2014
    https://news.yahoo.com/100-000-march-moscow-revives-may-day-tradition-090426845.html

    Moscow revives Red Square May Day parade
    http://www.usatoday.com/story/news/world/2014/04/30/moscow-may-day/8526297/

    Eastern Ukraine shows support for Russia during May Day celebrations
    http://www.euronews.com/2014/05/01/eastern-ukraine-shows-support-for-russia-during-may-day-celebrations/

    Oxford May Day: Thousands gather at Magdalen Bridge
    http://www.bbc.com/news/uk-england-oxfordshire-27235795

    Supporters of the Iraqi Communist Party celebrate during an International Worker’s Day, or Labor Day, rally in Baghdad
    http://www.ibtimes.com/may-day-2014-demonstrations-around-world-celebrations-international-workers-day-pictures-1579059

    may day celebrations in African
    http://www.english.rfi.fr/africa/20140501-african-press-review-1-may-2014

    • Correction:

      மே தினம் 2014

      வீழவீழ எழுவோம்

      முதலாளித்துவம் வீழும் வரை முயல்வோம் !

      கருப்பு ,மஞ்சல், சிகப்பு வண்ணத்தோல்கள் எங்கள் ஜீன்கள்

      ஆனால் உதிரம் சிந்தும் உழைப்பால் நாங்கள் சிகப்பாவோம்

      இனத்தால் வேறு வேறு நாங்கள்

      ஆனால் உழைப்பால் இணையும் எங்கள் இனம் “பாட்டாளி வர்க்கம்”

      மொழிகள் கூறும் இலக்கணங்கள் வேறு வேறு

      ஆனால் எங்கள் “பாட்டாளி வர்க்கத்தீன்” ஒரே மொழி

      எம் தோழன்-மார்க்சு பாட்டாளி வர்க்கத்துக்கு இலக்கணம் எழுதீய “மூலதனம்” !

      மொழி,மதம் ,இனம்,நாடு கடந்தவர்கள் நாங்கள்

      நாங்கள் படைக்கும் கம்யுனிச பூமியில் நாடுகளுக்கு எல்லைகளும் இருக்காது,நாடுகளும் இருக்காது.

      ஓரே நாடு அது உலகம் முழுவதுக்குமான கம்யுனிச நாடு ,

      ஒர் வர்க்கம் அது எமது பாட்டாளி வர்க்கம்

  59. நோட்டா -வை தேர்ந்தெடுப்பதன் மூலம் தேர்தல் புறக்கணிப்பை உறுதிப்படுத்த‌லாமே?.

  60. Hi KK,

    You are yet to respond to my previous inputs. I am eager to see your replies.

    //இருக்கும் நிலங்கள் யாருக்காவது சொந்தாமாக இருக்கும் வேளையில் அவர்களிடமிருந்து பெற வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது//

    We can understand a plot or ground or a house in private possession. The people should have worked, saved and paid for those lands and houses. We can even understand few acres or hectares. Their foreparents should have worked and developped the land. How come a person owns large areas ? With the help of the power, the bullies just declared those lands as their possession (and created/fudged records for it.)

    //90 சதவீத மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு அமைப்பை அந்த 90 சதவீத மக்கள் ஏன் ஆதரித்து போராடி மீட்கவில்லை?//

    Most of the people are indifferent. If few people work and create/achieve something, this indifferent class will enjoy. Otherwise they would be content with their lot. They are always worried about their own well-being and about the மேலோக சொர்க்கம். Any revolution is the product of a dedicated work of few. In Russia, it was the first attempt in known human history in such a big scale. It will surely not be the last one.

    //ஒரு நல்ல மாதிரி வடிவம், வெற்றிகரமாக நடத்தி காட்டினால் நாங்களும் உங்களுடன் சேருவோம்//

    You want to hop on when everything is ready. அப்படியே ஆகட்டும்.

    • Hi Buddy,

      Sorry for not responding to all your queries some times.
      Our friend Saravanan comes up with a series of 17 questions and my limited time is spent entirely on answering Mr.Saravanan these days. 🙂
      I will answer you shortly, dont worry, I wont run away 🙂
      Its just that my free time is predominantly occupied by one Mr.Saravanan 🙂

    • Hi Univerbuddy,

      I am asking very simple Binary mode questions from may 2 ,which have only yes/no answers!

      But our friend Mr.KK only complicating the situation and consuming his own time by providing descriptive type answers.

      His own time is predominately consumed by his own interest not just because of my simple yes/no type questions.

      Take care…

      • Hi Saravanan,

        //our friend Mr.KK only complicating the situation and consuming his own time//

        Yes. He does not want to answer in binary.

        You too need to structure your comments better. You are repeating many things needlessly (just like Senthil). It is waste of your time and our time. Instead of questionnaire of 17 items, you could have gone with few at a time.

        Please don’t mistake me. As communists, we need to be very efficient. Our inefficiency will kill/delay the communication.

        • Hi Buddy,

          Mr.Saravanan is framing questions in such a way that for some questions, answering in binary mode will present a wrong picture.

          Most of his questions are framed such that the questions have 2,3, or even 4 points and he will ask me to answer in a simple yes or no. I will agree to part 1 of the question, but not to part 2, and part 3 may be irrelevant and part 4 will be a repeated question. So,
          If I answer with a simple yes or no, you may not know my real feedback.

          Please go through all his latest 17 list of questions and my answers and my latest feedback to his 5 questions above. You will understand that Saravanan is clubbing 2,3,4 points in 1 questions and trying to portray me as a total and outright capitalist.
          In reality, I am not a capitalist, but a person concerned with the Democratic rights of the normal people.

          In all his statements, he considers a Business man as a evil representative. In reality, it is not like that. All humans have some positive aspects and also negative aspects.

          Real world is not truly binary. There are lots of grey areas.
          I hope you will understand my point Buddy.

    • Hi Buddy,

      Sorry for the delay in my response.

      //இருக்கும் நிலங்கள் யாருக்காவது சொந்தாமாக இருக்கும் வேளையில் அவர்களிடமிருந்து பெற வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது//

      தொழில் வளர்ச்சிக்காக அரசு மக்களது நிலங்களை கையகப்படுத்துவதை தான் நான் இதில் குறிப்பிட்டேனே தவிர நிலப்பிரபுக்கள் மாற்றி பேசவில்லை. இவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலங்கள் சரியான வகையில் மக்களுக்கு பயன்படும் வகையில் தொழிற்சாலைகள் உருவாக பயன்படுத்தப்படவேண்டுமே தவிர பண முதலைகள் கொள்ளையடிப்பதற்கு பயன்பட கூடாது என்ற கருத்தினில் நான் தீவிரமாக இருக்கிறேன். அரசு நிலங்களை கையகப்படுத்தும்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த இழப்பீடு, வேலை வாய்ப்பு/வேற்று வழி வருமானம் ஆகியவற்றை மிக கவனமாக கையாண்டு கொடுக்க வேண்டும். எந்த இழப்பீடாக இருந்தாலும் உடனுக்குடன் கொடுக்கப்பட வேண்டும். I am seriously dead against the accession of lands by bullies who fudge the records. Those criminals MUST BE PUT IN JAIL.

      //90 சதவீத மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு அமைப்பை அந்த 90 சதவீத மக்கள் ஏன் ஆதரித்து போராடி மீட்கவில்லை?//
      இதற்கு நீங்கள் அளித்துள்ள பதிலில், Most of the people are indifferent என்று கூறுகிறீர்கள். இதில் நான் வேறுபட விரும்புகிறேன். மக்களை அவ்வளவு எளிதாக எடை போடாதீர்கள். If people were so Indifferent, then we should have never seen any toppling of the government. Take the case of Tamilnadu. Any government exceeding its limit will face the brunt of opposition from the general public in the next election.

      My other concern is that if you say that the revolution is just the product of a dedicated work of few people and the general mass public are not consulted and ignored in the revolution, then it is not a true revolution. It may not withstand in the long run at all. True Revolution should involve the support of the mass public.

      நாம் எல்லாம் அறிவுஜீவிகள், பொதுமக்கள் எல்லாம் முட்டாள்கள் என்று எண்ண வேண்டாம் நண்பா. மக்கள் ஆட்டு மந்தை போல தான் தெரிவார்கள். ஆனால் சமயம் வரும்போது எப்பேர்பட்ட கொம்பனையும் மண்ணை கவ்வ வைத்து விடுவார்கள். அதனால் சாமானிய மக்களின் அறிவின் மேல் நம்பிக்கை வைத்து உங்கள் புரட்சி அமைப்பை பற்றி மக்களிடம் தெளிவாக விளக்குங்கள்.

      என்னை பொறுத்தவரை புரட்சி அமைப்பில் சர்வாதிகாரம் தலை தூக்குவதற்கு வாய்ப்பு உள்ளதால் எனக்கு அதில் சில சந்தேகங்கள் உண்டு. அதற்காக தான் ஒரு நல்ல செயல்படும் மாதிரி வடிவத்தை நடத்தி காட்டுங்கள் என்று கூறினேன். ஜனநாயக வழியில், மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு ஊறு விளைவிக்காத ஆட்சி அமைப்பிற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு நண்பா.

  61. திரு.பகத்..

    நீங்கள் கொடுத்த சுட்டிகள் அனைத்தையும் படித்து பார்த்தேன். கட்டுரைகள் மிக அற்புதமானவை தான். பேசமால் கம்யுனிச “Theology”க்கு மாறி விடலாமா என எண்ண தோன்றுகிறது. என்ன செய்வது “Reality” அதற்க்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறது. நீங்கள் கூறும் காரணங்கள் எதுவும் ரஷ்ய மக்கள் அறியாதவைகளா. நிலவிற்கே ராக்கெட் அனுப்பிய ரஷ்யர்களுக்கு தங்கள் நாட்டில் கம்யுனிச ஆட்சி வீழ்ந்ததற்கு காரணம் ஏகாதிபத்திய சதிதான் என்பது அவர்களுக்கு தெரியாமலா போய் இருக்கும். விஷயம் அதுவல்ல ரஷ்ய மக்களே கம்யுனிச கோட்பாட்டை ஏற்று கொள்ள தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம். 1991அம் ஆண்டில் கம்யுனிச சோவியத் ரஷ்யா உடைந்த பொழுது அங்கு மிக பெரிய ஆர்ப்பாட்டமோ, மக்கள் கிளர்ச்சியோ ஏன் நடக்கவில்லை.

    ஒரு மிகச்சிறந்த பொருளாதார அமைப்பை ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய துணை கொண்டு தகர்கிறார்கள் என்றால் அந்த நாட்டின் மக்கள் அந்நாட்டு அதிபருக்கு எதிராக போராடி இருக்க வேண்டுமே. எது நடந்தாலும் பரவாயில்லை என்று எருமை மாட்டின் மேல் தண்ணீர் ஊற்றியதை போல் சுரணை இல்லாமல் இருப்பதற்கு ரஷ்யர்கள் ஒன்றும் இந்தியர்கள் அல்லவே. உண்மை என்னவென்றால் சுதந்திரமான சந்தை பொருளாதாரத்தை தான் மக்கள் விரும்புகின்றார்கள். அரசின் கட்டுபாட்டில் அனைத்தும் இருப்பதை யாரும் விரும்பவில்லை.

    புரியும்படி சொல்லவேண்டுமானால், எத்தனை நாளைக்கு தான் வீட்டில் உட்கார்ர்ந்து கொண்டு T.Vயில் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் வடிகட்டி ஒளிபரப்பும் மொக்கை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். ஒரு மாறுதல் வேண்டாமா. பொழுதுபோக்குக்கு என்று 40 அலைவரிசைகள், வெறும் திரைப்படம் பார்பதற்கு என்று Star Movies ,H.B.O போன்று 40 சேனல்கள், விஞ்ஞானம் பற்றி தெரிந்துகொள்ள Discovery , National Geographic போன்று 10 சேனல்கள் Health & Beauty Tips பற்றி கூற 10 சேனல்கள் என்று இப்படி Colorfullஆக இருந்தால் தான் மக்களுக்கு பிடிக்கும். அராசங்க அலைவரிசையில் வரும் வடிகட்டிய நிகழ்ச்சிகள் மட்டுமே என்று கூறினால் மக்கள் வாழ்வை வெறுத்து விடுவார்கள். நீங்கள் கூறும் கம்யுனிச அமைப்பு என்பது “வயலும் வாழ்வும்” தூர்தர்ஷனை போன்று தான் இருக்கும். இதன் மூலம் சொல்லவருவது என்னவென்றால் “Choice Of Selection” என்பதை முதலாளித்துவம் மக்களுக்கு வழங்குகிறது. கம்யுனிச கோட்பாட்டில் அது கிடையாது ஒரே சர்வாதிகாரம் தான். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் என்ன கொடுக்க படுகிறதோ அது பிடிக்கிறதோ,பிடிக்கவில்லையோ அதை பெற்று கொள்ள வேண்டும்.

    • Hi Rebecca Mary,

      It is good to have a woman to discuss with.

      //ரஷ்ய மக்களே கம்யுனிச கோட்பாட்டை ஏற்று கொள்ள தயாராக இல்லை//

      People with control on extraordinary extent of natural resources like lands were dead against it. Indifferent class with some privileges to themselves were not happy to lose some of their privileges.

      //1991அம் ஆண்டில் கம்யுனிச சோவியத் ரஷ்யா உடைந்த பொழுது ***, மக்கள் கிளர்ச்சியோ ஏன் நடக்கவில்லை.//

      Certainly people protested. But the counter-revolutionaries had gained upper hand.

      // மக்கள் அந்நாட்டு அதிபருக்கு எதிராக போராடி இருக்க வேண்டுமே.//

      I wish it was just a single person who was against the Communism.

      //எருமை மாட்டின் மேல் தண்ணீர் ஊற்றியதை போல் சுரணை இல்லாமல் இருப்பதற்கு//

      A correction: Buffalo loves water. It is because water helps it cool down. That is why it loves rain and water. It is not because it does not have சுரணை.

      //சுதந்திரமான சந்தை பொருளாதாரத்தை தன் மக்கள் விரும்புகின்றார்கள்.//

      Free market may seem efficient but it is not. It has lot of wasteful and hidden costs. Just to give an example: let’s take the packaged food. The free market has spawned countless varieties and brands which necessitate lot of packaging, paint, advertisement, distribution, wastage due to expiry, poisonous preservatives; etc which pollutes our environment and the cost will be borne by the future generations. Organized market may seem restrictive but it is not.

      //எத்தனை நாளைக்கு தான் *** T.Vயில் ***மொக்கை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். ***பொழுதுபோக்குக்கு என்று 40 அலைவரிசைகள், ***Discovery , National Geographic *** என்று இப்படி Colorfullஆக இருந்தால் தான் மக்களுக்கு பிடிக்கும்.//

      When we had only one channel, we enjoyed it a lot. We derived more pleasure from it than possible now. Almost the whole village gathered in front of the public TV. 1 channel to 100 channels is a gradual growth. Much more is possible in Communist society. In addition, in Communist society, TV won’t be only the option of entertainment. We would have countless other means. Neighbourhood playgrounds, parks, pools, etc that are worthy of their name, are some examples.
      Having said that, we have got a lot of work to be done and entertainment can wait. Currently what is the status of our country? As I have already said couple of times in Vinavu, we are left with slum like streets, towns and cities with rubble and rubbish strewn streets and roads, clogged, stinking drainage, highly polluted water bodies, filthy public places like railway stations, bus stands, etc and the situation is getting worse by day. To reverse the trend, we need a highly organized communal way of work. Currently, we gather just to pull the temple chariot/namaaz/prayer, nothing else. We have to reduce our Entertainment and wasteful actions and do some useful common work, if we are to make this place liveable for our next generation. Only communism can give a system that facilitates such mobilization of all the people.

      Let’s discuss.

    • தோழர் ரேபேக்கா,

      தோழர்கள் பகத் மற்றும் யுனிவர்படி உங்களது கேள்விகளுக்கான பார்வையை வைத்திருக்கிறார்கள்.
      உங்களது கருத்துகள் தொடர்பாக நானும் சில பார்வைகளைவைக்க விரும்புகிறேன். உங்களது பின்னூட்டத்தை கீழிருந்து அணுகுவோம்.

      \\கம்யுனிச கோட்பாட்டில் அது கிடையாது ஒரே சர்வாதிகாரம் தான். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் என்ன கொடுக்க படுகிறதோ அது பிடிக்கிறதோ,பிடிக்கவில்லையோ அதை பெற்று கொள்ள வேண்டும்.\\

      நீங்கள் பாட்டாளி என்றால் எடுக்கப்படுவதையோ கொடுக்கப்படுவதையோ நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். மற்றபடி பயந்து போய் அம்பானி இப்படி எழுதினால் நீங்கள் கூறுவது உண்மையே. இது போக, உலகின் மொத்த செல்வமும் வெறும் 5 சதவீதத்தனரின் கையில். 95% பேர் கைகளுக்கு அதிகாரங்கள் மடைமாற்றப்பட வேண்டும் என்பதை சுரண்டலை உணர்ந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். நீங்கள் எதை விரும்புகீறிர்கள்?

      \\“Choice Of Selection” என்பதை முதலாளித்துவம் மக்களுக்கு வழங்குகிறது.\\
      முதலாளித்துவம் என்பதில் தேர்வைப் பற்றிச் சிந்திப்பதற்கு அதவாது எதாவது ஒரு சேனலைப் பார்ப்பதற்கு உங்களுக்கு அடிப்படையான ஓய்வு தேவை. பல சேனல்கள் பார்க்கிற அளவிற்கு உங்களுக்கு ஓய்வு இருக்கிறதா என்ன? முதலாளிகள் முதலில் இதை வழங்கினால் தானே தேர்வைப் பற்றிச் சிந்திக்க முடியும்? ஒய்வு இல்லாத மனிதன் காட்டுமிராண்டி னே. வருடம் முழுவதும் வயிற்றுப்பாட்டுக்கே ஓவர்டைம் பார்க்கும் பொழுது ஹெச் பி ஓ இருந்தால் என்ன? ஸ்டார் மூவிஸ் இருந்தால் என்ன?

      \\உண்மை என்னவென்றால் சுதந்திரமான சந்தை பொருளாதாரத்தை தான் மக்கள் விரும்புகின்றார்கள். அரசின் கட்டுபாட்டில் அனைத்தும் இருப்பதை யாரும் விரும்பவில்லை.\\

      பஞ்சம் என்கிற வார்த்தையே முதலாளிகள் தானே உருவாக்கினார்கள். எனில் சுதந்திரமான சந்தைப் பொருளாதாரத்தின் யோக்கியதை என்ன? பலகோடி டன் கோதுமைகளை கடலில் கொட்டுவதா?

      \\ஒரு மிகச்சிறந்த பொருளாதார அமைப்பை ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய துணை கொண்டு தகர்கிறார்கள் என்றால் அந்த நாட்டின் மக்கள் அந்நாட்டு அதிபருக்கு எதிராக போராடி இருக்க வேண்டுமே. எது நடந்தாலும் பரவாயில்லை என்று எருமை மாட்டின் மேல் தண்ணீர் ஊற்றியதை போல் சுரணை இல்லாமல் இருப்பதற்கு ரஷ்யர்கள் ஒன்றும் இந்தியர்கள் அல்லவே\\

      ரஷ்யர்களோ இந்தியர்களோ, மக்கள் என்றைக்குமே சரியாகத்தான் இருக்கிறார்கள். அதனால் தான் கம்யுனிசத்தை மக்களிடம் இருந்து கற்றுகொள்ள பணிக்கிறார்கள் புரட்சிகர அமைப்புகள். சாவேசை அமெரிக்க ஏகாதிபத்தியம் துக்கியெறிகிற பொழுது மக்கள் சாவேசைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் ரஷ்யாவில் அது நடக்கவில்லை என்பதற்கு மக்கள் காரணமல்ல என்பது புரிவது எளிது. மக்கள் காரணமில்லை என்றால் வேறு என்ன காரணம்? இதற்கு பதில் வைப்போம். அடுத்த பதிலை படியுங்கள்.

      \\விஷயம் அதுவல்ல ரஷ்ய மக்களே கம்யுனிச கோட்பாட்டை ஏற்று கொள்ள தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம். 1991அம் ஆண்டில் கம்யுனிச சோவியத் ரஷ்யா உடைந்த பொழுது அங்கு மிக பெரிய ஆர்ப்பாட்டமோ, மக்கள் கிளர்ச்சியோ ஏன் நடக்கவில்லை.\\

      மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற வலுவற்ற உங்கள் கற்பனைக்கு மிகப்பெரிய ஆர்பாட்டமோ கிளர்ச்சியோ ஏன் நடக்கவில்லை என்ற காரணத்தை வைக்கிறீர்கள்.

      சமூக விஞ்ஞானத்தில் இதை சட்டபூர்வ மார்க்சியவாதம் என்றும் அதை தூக்கிப்பிடிப்பவர்களை சட்டபூர்வ மார்க்சியவாதிகள் என்றும் சொல்கிறோம். அதவாது ஒரு உற்பத்தி முறையிலிருந்து மற்றொரு உற்பத்தி முறைக்கு ஏற்படுகிற மாற்றத்திற்கு சமூகத்தின் புறவய காரணிகளே காரணமாய் இருக்கிறது என்று சொல்பவர்கள் புரட்சிகர கட்சிகளின் தேவையை புறக்கணிப்பார்கள். அதாவது கம்யுனிசம் வரும்போதும் வரும். அதற்கு கட்சிதேவையில்லை. ஏனெனில் முழுக்க முழுக்க சமூகநிலைமைகளை சார்ந்தது என்பார்கள். இது ஒரு வகை.

      நீங்கள் இதற்கு அப்படியே எதிர்வகை. சோசலிசம் தகர்கிற பொழுது மக்கள் ஏன் எதிர்வினையாற்றவில்லை என்கிறீர்கள். இங்கு நீங்கள் தவறவிடுவது சமூகத்தின் புறவயநிலைமைகளை. இரு வகை கருத்துகளும் தவறு மட்டுமல்ல. சந்தர்ப்ப வாதமும் கூட. அதாவது சோசலிச சமூகத்தில் சொத்துகுவிப்பு முழுமையாக தகர்ந்துவிடவில்லை. வர்க்கப் போராட்டம் என்ற ஒன்று தேவையில்லை என்பதை எல்ட்சின் கார்ப்பசேவ் போன்ற திருப்புவாதிகளே காவுகொடுக்கிற பொழுது உங்களது கருத்தின் தன்மையில் கம்யுனிசத்தை புறந்தள்ளுவதற்கான தன்முனைப்புதான் தெரிகிறது. இது சரியா? உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். இது பற்றி உதாரணங்களுடன் விவாதிப்போம்.

  62. நான் அளித்த இணைப்புகளில் உள்ள கட்டுரைகளை நீங்கள் சரியாக படிக்கவில்லை எனபது மட்டுமல்ல. சரியாக படிக்க விருப்பமில்லை என்பது உங்களது பதிலில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

    // நிலவிற்கே ராக்கெட் அனுப்பிய ரஷ்யர்களுக்கு தங்கள் நாட்டில் கம்யுனிச ஆட்சி வீழ்ந்ததற்கு காரணம் ஏகாதிபத்திய சதிதான் என்பது அவர்களுக்கு தெரியாமலா போய் இருக்கும். //

    இது பற்றி நான் ஏற்கனவே கற்றது கையளவு அவர்களுக்கு பதிலளித்திருக்கிறேன்.

    https://www.vinavu.com/2014/04/23/futile-elections-pseudo-democracy-what-is-the-real-solution/#comment-137084

    மேற்கண்ட இணைப்பில் குறிப்பாக “4. கம்யூனிசம் அவ்வளவு எளிதாக வீழ்த்திவிடக் கூடியதா? என்று கேட்கிறீர்கள்“ என்ற தலைப்பில் உள்ள கருத்துக்களைப் படியுங்கள்..

    // இதன் மூலம் சொல்லவருவது என்னவென்றால் “Choice Of Selection” என்பதை முதலாளித்துவம் மக்களுக்கு வழங்குகிறது. //

    கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம், முதலாளித்துவத்தில் மட்டும் தான் ஜனநாயகம் இருக்கின்றது எபதைதான் காலங்காலமாக முதலாளித்துவவாதிகள் உடைந்த டேப் ரிக்கார்டர் போலத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் (கம்யூனிஸ்டு அல்லாத)சோவியத் ரஷ்யாவிலும்ம் மற்ற கம்யூனிச நாடுகளிலும் கருத்துச் சுதந்திரம் எப்படி இருந்தது என்பது குறித்து எழுதியிருக்கிறார்கள்.

    மேலும் தற்போது, குறிப்பாக 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு உங்கள் “Choice Of Selection” னின் யோகியதை கிழிந்து தொங்குகிறது. உங்கள் “Choice Of Selection” னின் விளைவு தான் 2012 “Occupy Wall Street“ போராட்டம்.

    உங்கள் முதலாளித்துவத்தின் யோக்கியதையை அடித்துத் துவைத்துத் தொங்கவிடுகிறார் அருந்ததி ராய்.

    Arundhati Roy: Capitalism – A Ghost Story
    https://www.youtube.com/watch?v=JL9mzqLGjmQ

    அமெரிக்க ஆவணப்பட இயக்குநர் மைக்கேல் மூர் எடுத்த அமெரிக்க முதலாளித்துவத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் ஆவணப்படங்கள்

    Capitalism: A Love Story – Documentary
    https://www.youtube.com/watch?v=232qaFGyzwQ

    SICKO
    https://www.youtube.com/watch?v=biVfMORI56Q

    இவற்றைக் கவனமாகப் பார்த்துவிட்டு, அதில் எழுப்பப்பட்டிருக்கும் பிரச்ச்னைகளுக்கு பதில் கூறுங்கள்.

  63. Hi KK,

    Though you are yet to respond to my comments, you have not altogether stopped responding. So let me continue to interact with you.

    //ஒரு சிறிய ஐடியா. *** நிலங்களுக்கு சொந்தமான விவசாயிகளின் பெயரிலேயே இருந்து அவற்றை லீஸ் போல கொடுக்கலாம். மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட வாடகை***//

    It is better, though this is like scratching the nose with the hand around the head. And it still does not address the question of large lands under the control of a few.

    //ஒரு அரசாங்கத்தையே தூக்கி எறியக்கூடிய சக்தி மக்களிடம் உள்ளது.//

    This is what we say. When the people, instead of beating around the bush ( like NGOs, Human rights organizations, Charities, People against corruption, etc) , realize that the problem of poverty, etc is in unbridled private property and privatization of natural resources like land, water, minerals, etc., we need not fire a single shot to get a new setup.

    // நாம் தான் *** மக்களை வெறும் ஆட்டு மந்தைகளாக கருதுகிறோம்.//

    You are using நாம் here wrongly. We don’t say so.

    // மக்களே *** தண்ணீர் கொண்டு வர முயற்சிப்பார்கள்.//

    This is called revolution in village level. Same thing is possible in Country level.

    //மக்களுக்கு பயன்படும் வகையில் *** தீர்த்து வைத்தொமேன்றால் அவர்களுக்கு நம் மீது முழு நம்பிக்கை வரும்//

    You have not budged from your starting argument. I have replied to this. But you don’t seem to have noticed it. While we do work for some immediate issues, we have also set our sight on the main goal and work towards it.

  64. Hi Rebecca Mary,

    //கம்யுனிச கோட்பாட்டில் *** ஒரே சர்வாதிகாரம் தான்.//

    In my life so far, I have heard so many people, telling that the dictatorship is the right option for India, particularly in relation to dirty public spaces. Some would specifically cite the example of Singapore. Probably you too could have evoked such sentiments in different places and contexts. You have even categorized Indians as ‘Senseless’. Communism is not dictatorship but a fellowship. Decisions would be taken in the interest of all based on the best inputs and broader consensus.

  65. Dear KK,

    Our Indian Constitution Starts with…….
    ————————————————————

    “WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a [SOVEREIGN
    SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC] and to secure to all its citizens”

    Technically speaking this Indian Constitution is totally outdated and having no values under the present capitalist-political system.

    Fake SOVEREIGN!
    ————————
    [1] Is there any sovereign in our political system While IMF,World bank are taking decisions about our Indian Economy?
    [2]Is there any sovereign in our political system while General Agreement on Tariffs and Trade (GATT) is regulating Indian trade?

    Is it SOCIALIST?
    ————————-
    [1] According to Indian Constitution India should be a socialist country!But What about the present situation.In a socialist government the companies are belonging to Government. But What is happening now? The Public sector is now day by day privatization now. BHEL,NLC etc are sold to private.
    [2] So according to The constitution of India,In Paper, India is a Socialist country. But in reality it is a capitalist country

    Is it SECULAR?
    —————-
    [1] Is India a Secular country now? I already told you that India is either going to be a Saffron color country BY RSS or going to be a RED Flag country by CPI(Mao).
    [2]Who will secure secularism in India ? RSS or CPI(Mao)?

    Certainly the government that is now day by day growing against the present government with people support is CPI(Mao) can only safeguard secularism

    Is India DEMOCRATIC Now?
    ———————————-
    [1]In the name of Democracy only Milliners and billionaires can participate in this MP election by acquiring support for rowdies and killer and thief

    [2] In a real democracy a common man should be able to participate in a election. But in India it is impossible now

    What is really REPUBLIC ?
    ——————————————————-

    [1] In a true federation and republic Each state should have rights to join and disintegrate from the federation. But in this Indian republic, We do not have these rights.

    Dear KK,

    What you are hoping is making little changes[amendments] in Indian constitution , We can solve all our problems!

    What I am planing is by doing revolution We can demolish the present system and constructing a new Democratic system and writing a new Constitution for the welfare of Working class of India.

  66. Sarvanan Sir,

    Can you do a Nation wide revolution without the support of the Masses?
    Did you take the first step in convincing the People of the country?

    Yes, I agree that there are some serious flaws in the current system.
    But there are some flaws in your proposed system too?

    நீங்கள் கம்மியுனிசம் என்பது தொழிலாளர் வர்க்கத்தின், உழைக்கும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் தான் என்று கூறினீர்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள். சர்வாதிகாரம் என்பது எந்த அளவில், எந்த வகையில் இருந்தாலும் அது இரு முனை கத்தி தான். சர்வாதிகாரம் என்றைக்கும் ஒரு நிரந்தர தீர்வை கொடுக்காது. இந்த ஒரு காரணத்தினால் தான் மக்களுக்கு ஸ்டாலினின் சோவியத் கம்மியுனிசத்தின் மேல் நம்பிக்கை இழப்பதற்கு முக்கிய காரணம். சர்வாதிகாரம் என்பது ஒரு போதை. அதை ஒரு முறை சுவைத்தவர்கள், ஆரம்பத்தில் மக்களுக்காக, மக்கள் நலனுக்காக தான் சர்வாதிகாரம் என்று கூறுவார்கள். அதற்கு பின் என்ன ஆகிறது? பாகிஸ்தானில் பர்வேஸ் முசாரப் செய்தது என்ன. அரசியல்வாதிகள் எல்லாம் ஊழல்வாதிகள், நாட்டை நான் சுத்தப்படுத்துகிறேன் என்று நாட்டை கைப்பற்றினார். பின் என்ன ஆனது, முசாரப் நல்லாட்சி கொடுத்தாரா? முசாரப்பால் நீண்ட நாள் ஆட்சியில் நிலைத்து நிற்க முடிந்ததா? முசாரப் ஆட்சி கவிழும்போது மக்கள் முசாரப்புக்கு ஏன் ஆதரவளிக்கவில்லை?

    ஒரே காரணம், சர்வாதிகாரம் எந்த முகமூடி போட்டுக்கொண்டு வந்தாலும் மக்கள் அதனை நிராகரிப்பார்கள். தேர்தல் முறையிலும் கூட அரசியல்வாதிகளின் ஆட்டம் அதிகமானால் மக்கள் அடுத்த தேர்தலில் அந்த கட்சியினரை ஒன்றும் இல்லாது செய்து விடுவார்கள்.

    முதலாளி – தொழிலாளி என்று நீங்கள் பிரித்து பார்க்கையில் ஒன்றை மறந்து விடுகிறீர்கள். முதலாளிகளாக இப்போது இருக்கும் பலர் ஒரு காலத்தில் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி, படிப்படியாக முன்னேறி முதலாளியாக வந்திருப்பார்கள். நான் அப்பன் காசை கொண்டு முதலாளியாகி இருக்கும் வர்க்கத்தை பற்றி சொல்லவில்லை. உழைப்பால் உயர்ந்து முதலாளியாக ஆகி இருப்பவர்களை பற்றி சொல்கிறேன்.

    ஏன், கம்மியுனிச ஆதரவாளர்கள் ஒருவர் கூட சுய தொழில் செய்பவர்களாக இருந்ததில்லையா.
    தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்பெர்கேற்ற ஊதியம், நல்ல பாதுகாப்பு கட்டமைப்புகள், நல்ல வேலை சுற்றுசூழல் இவை கொடுக்கும் முதலாளிகளை நீங்கள் ஆதரிப்பீர்கள் அல்லவா?

    முதலாளிகள் என்றாலே கெட்டவர்கள், சுரண்டுபவர்கள் என்ற எண்ணலாமா?

    அதே போல லாப நோக்கம் என்பது வேறு, சுரண்டல் என்பது வேறு. லாப நோக்கம் இல்லாமல் யாரும் வணிகம் நடத்த இயலாது, தொழில் செய்ய இயலாது. அவரவர்களுக்கு குழந்தை, குடும்பங்கள் உண்டல்லவா? So, there should be a proper balance. தொழிலில் லாபமும் பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம், வசதிகள் செய்து தர வேண்டும். இது நடக்கவே நடக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

  67. Dear KK,

    என் 17 கேள்விகளுக்கு நீங்கள் அளித்த உங்கள் விடைகள் மிகவும் முரண்பாடுகளுடனும், அரசியல்,வரலாற்று விழிப்புணர்வு இல்லாமலும் இருப்பது எனக்கு ஆச்சிரியம் அளிக்கவில்லை.

    [1]அனைத்து ஊடகங்களிளும்[mass media ] டாடா,அம்பானி போன்ற முதலாளிகளீன் share capital இருக்கும் போது அவை சுதந்திரமாக மக்களுக்காக,மக்கள் நலனுக்காக ,உழைக்கும் வர்கத்துக்காக செயல் பட முடியும். உதாரணம் – வினவு போன்ற வலைதளங்களும் ஒரு வகை ஊடகம் தான் மீடியா தான். என்ற உங்கள் பதில் கூறும் பொருள் என்ன ?

    மாற்று அரசியல் அமைப்புக்கான[புதிய ஜனநாயக புரட்சிக்கான] முன் முயற்சியில் உள்ள ம.க.இ.க. வின் வினவு இணைய தளத்தை மட்டுமே நீங்கள் உதாரணம் காட்டுவதன் மூலம் அனைத்து ஏனைய ஊடகங்களும்[முதலாளித்துவ ] உங்கள் நம்பிக்கையை இழந்து உள்ளன என்பதை நம்மால் உணர முடியும். இவ்வாறு முதலாளிகளீன் நலனுக்காக மட்டும் நடத்தபடும் sun ,tandi ,vijai ,jaya ND tv etc ஊடகங்கள், மக்கள் நலனுக்காக ,உழைக்கும் வர்கத்துக்காக செயல் பட முடியும் என்று நீங்கள் நினைப்பது
    முரண்பாடாக இருக்கிறது.

    [2]தரகு முதலாளித்துவ மாடல் இந்திய அரசாங்கத்தில் பங்கு பெற்ற கட்சிகளில் அனைத்தும் பன்னாட்டு முதலாளிகளுக்கு தரகு வேலை பார்த்தன.அப்படி இருக்கும் போது இந்த முதலாளித்துவ அமைப்பு தவரானது அல்லவா ? எனற என் கேள்விக்கு உங்கள் விடை : அரசியல்வாதிகள் முதலாளிகளுக்கு தரகு வேலை செய்வதை நான் எப்போதும் ஆதரித்ததில்லை. நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். என்னை முதலாளித்துவ ஏஜென்ட் ஆக நீங்கள் கருதுகிறீர்கள். அது தவறு.

    அப்படி எனில் நீங்கள் கற்பனை உலகில் வாழ்வதாக தான் பொருள். ஏன் தெரியுமா ? அனைத்து கட்சிகளும் தரகு முதலாளித்துவத்தை நேரடியாகவே ஆதரிக்கின்றன என்ற எளீய உண்மை கூட உங்களுக்கு புரியவில்லை என்பது எனக்கு மிக்க வருத்தம் அளிக்கின்றது. இன்று ஜிண்டால் ஸ்டீல் என்ற முதலாளி தமிழகத்தை கொள்ளை அடிக்க தமிழக அரசு துணை உடன் வந்து உள்ளான்.அவனுக்கும் நீங்கள் தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆதரவு தருவீர்கள் தானே ?

    [3]ஜனநாயகம் என்பதே முதலாளித்துவம் பெற்று எடுத்த குழந்தை என்பது உலகமே ஏற்ற உண்மை.இதை நீங்கள் ஏற்கின்றீர்களா ?
    [5]ஜனநாயகம் என்பதே முதலாளித்துவம் பெற்று எடுத்த குழந்தை என்பது உண்மையாகும் போது ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தீன் ஒரு அரசியல் வடிவம் தானே ?.
    என்ற என் இரு கேள்விகளுக்கும் உங்கள் விடை : ஏற்க மாட்டேன். ஜனநாயகம் என்ற கருத்துருவும் முதலாளித்துவம் என்ற கருத்துருவும் வேறு வேறு தான். தயவு செய்து அகராதியை படித்து விட்டு வாருங்கள்.

    ஜனநாயகம்,முதலாளித்துவம் ஆகிய தத்துவங்களை அகராதியை படித்து விட்டு தெரிந்து கொள்ள சொல்லும் உங்கள் பெயரை “——கற்றது அகராதியளவு——” என்று மாற்றி கொள்ள வேண்டுகிறேன்.
    நண்பரே வரலாற்று போக்கில் ஜனநாயகம்,முதலாளித்துவம் போன்ற தத்துவங்களை படித்து அறிந்தால் தான் நம் அறிவு முழுமை அடையும் என்பதை மிக்க தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

    நாம் இன்று நடைமுறை படுத்தும் ஜனநாயகம் என்பது ஐரோப்பிய மாடல் ஜனநாயகமே !
    15,16 ஆம் நூற்ராண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட நிலபிர்புத்துவ மன்னர் ஆட்சி முறையில் இருந்து முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி முறைக்கு ஏற்பட்ட மாற்றத்தை மறுக்கும் உங்கள் போக்கு வரலாற்று-அரசியல் மாற்றங்களை மறுப்பதாகவே உள்ளது.

    குறைந்த பட்சம் நாம் பள்ளியில் படித்த ஐரோப்பிய வரலாற்றை மீண்டும் revision செய்து விட்டாவது விவாதத்துக்கு வாருங்கள் நண்பரே !

    con….

    • [4]ஆம் கம்யுனிசம் என்பது பாட்டாளி வர்கத்தீன் [தொழிலாளர்-விவசாயிகளீன்] சர்வாதிகாரம் தான்.தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.இக் கருத்து சரியா ?தவறா

      கற்றது கையளவு பதில் I : தொழிலாளர் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கும் , விவசாயிகளை வதைக்கும் நில பிரபுக்களுக்கும் நான் எப்போதும் ஆதரவானவன் இல்லை, இல்லை, இல்லை. அதே சமயம் தொழிலாளிகளை சுரண்டாத நிறுவனங்கள் இல்லவே இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா? தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், தகுந்த பாதுகாப்பு வசதிகள், நல்ல வேலை சூழல் அமைத்து தரக்கூடிய முதலாளிகள் ஒருவர் கூட இல்லையா? ஒவ்வொரு தொழிற்சாலையிலும் மேற்கூறிய தொழிலாளர் நல வசதிகள் ஏற்பட என்ன வழி என்று யோசிக்கலாமே?

      கற்றது கையளவு பதில் II :
      தவறு.
      சர்வாதிகாரம் என்பது எந்த முகமூடி போட்டுக்கொண்டு வந்தாலும் அது மக்களுக்கு கெடுதி தான். தொழிலாளர்களை முதலாளிகள் சுரண்டக்கூடாது, விவசாயிகளை நிலப்பிரபுக்கள் வதைக்க கூடாது. ஆனால் அந்த காரணத்தை காட்டி நாட்டை சர்வாதிகாரி கையில் ஒப்படைத்தால் பாகிஸ்தானில் முசாரப் ஆட்சி போல தான் நடக்கும்.

      99% மக்களை போலி ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரம் செய்யும் 1% டாடா,அம்பானி,அதானி ,ஜின்டால் போன்ற முதலாளிகளீன் செயல் உங்களுக்கு சரியாக படுகின்றது. ஆனால் 99% பாட்டாளி வர்கத்தீன் [தொழிலாளர்-விவசாயிகளீன்] சர்வாதிகாரம்[புதிய ஜனநாயகம்] தவறு என்று நீங்கள் கூறும் போது , நீங்கள் யாருக்கு சாதகமாக பேசுகின்றீர்கள் என்று புரிகீன்றதா ?

      [12]கம்யுனிசம் உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் மே தின வாழ்த்துகள் கூறுவதில் ஏதாவது பொருள் உள்ளதா ?[இருக்கு ]
      Your Answer:கிருத்துமஸ் வாழ்த்து சொல்வதற்கு கிருத்துவனாக இருக்க வேண்டும் என்று இல்லை. ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்கு இசுலாமியனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நானும் ஒரு தொழிலாளி, உழைப்பாளி என்ற வகையில் என் சக தொழிலாளிகளுக்கு, உழைப்பாளர்களுக்கு மே தின வாழ்த்து தெரிவிப்பதில் என்ன தவறு? தொழிலாள்ளர் நலம், மக்கள் நலம், உழைப்பாளர் நலம் பற்றிய அக்கறை இருப்பவர் யார் வேண்டுமானாலும் மே தின வாழ்த்துக்களை சொல்லலாம், பகிரலாம்.

      முதலாளிகளை நீங்கள் ஆதரித்துக்கொண்டு அதே சமயம் மே தின வாழ்த்துகள் கூறுவது, இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்துக்கு கார் கதவுகள் தயாரிக்கும் கெஸ்டாம்ப் சுங்வூ ஹைடெக் என்ற தென் கொரிய நிறுவனம் மே 1 அன்று தொழிலாளர்களை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தைத் தாண்டி அமைந்திருக்கும் கோல்டன் சன் ரிசார்ட்ஸ் என்ற இடத்திற்கு 7 வேன்களில் அழைத்துச் சென்று மது வாங்கிக் கொடுத்து குடித்து கொண்டாட ஏற்பாடு செய்தது போன்று கேவலமாக உள்ளது.

      con…

    • Dear KK,

      உங்கள் பதில்கள் 6,7,8,9,10,11 களுக்கு …..
      ————————————————–

      உங்கள் பதில் 2 ல் அரசியல்வாதிகள் முதலாளிகளுக்கு தரகு வேலை செய்வதை நான் எப்போதும் ஆதரித்ததில்லை என்று நீங்கள் கூறிவிட்டு உங்கள் பதில்கள் 6,7,8,9,10,11ல் நீங்கள் நேரடியாகவே ford ,HYUNDAI போன்ற கம்பெனிகளுக்கு தரகு வேலை செய்வது ஏன் ?

      உங்கள் பதில்கள் 13,14,15,16,17 களுக்கு ……
      ——————————————————————
      [13]இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன பின்பும் 80% குடி மக்களுக்கு [தொழிலாளர்-விவசாயிகள் ] உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளிக்காத தற்போது உள்ள இந்திய முதலாளித்துவ அமைப்புடன் ,10 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் உணவு ,உடை ,இருப்பிடம்,கல்வி அளித்த சோவித் ரஷ்யா அமைப்பை ஒப்பீடு செய்யும் போது என் அறிவுக்கு கம்யுனிசம் தான் இந்தியாவிற்க்கு சரியான model என தெரிகின்றது. உங்கள் அறிவுக்கு எது சிறந்ததாக தெரிகின்றது ? Not yet decided!
      Options
      [a] இந்திய முதலாளித்துவ அமைப்பு
      [b] கம்யுனிசம்
      Your answer:இன்னும் நான் முடிவு செய்யவில்லை.

      இது வரை முதலாளித்துவத்தை நேரடியாகவே நீங்கள் ஆதரிக்கும் போது ,இக் கேள்விக்கு பதில் அளிப்பதில் ஏன் தயக்கம் ? 🙂

      [14]இந்தியா சுதந்திரம் அடைந்த இத்துனை 67 ஆண்டுகளாக தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கை தரம் குறைவது, முதலாளி மேலும் மேலும் சொத்து சேர்ப்பது தானே நடக்கிறது.[ஆம் /இல்லை ]

      you said:67 ஆண்டுகளாக தொழிலாளர், விவசாயிகள் வாழ்க்கை தரம் குறைவது – ஆம், நடக்கிறது. ஆனால், அதே சமயம், அதற்கான தீர்வு சர்வதிகாரம் இல்லை என்பது என் கருத்து.

      99% மக்களை போலி ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரம் செய்யும் 1% டாடா,அம்பானி,அதானி ,ஜின்டால் போன்ற முதலாளிகளீன் செயல் உங்களுக்கு சரியாக படுகின்றது. ஆனால் 99% பாட்டாளி வர்கத்தீன் [தொழிலாளர்-விவசாயிகளீன்] சர்வாதிகாரம்[புதிய ஜனநாயகம்] தவறு என்று நீங்கள் கூறும் போது , நீங்கள் யாருக்கு சாதகமாக பேசுகின்றீர்கள் என்று புரிகீன்றதா ?
      [15]ஏன் இந்த CBSE ,state board என்ற வேறுபாடு ? IIT நுழைவு தேர்வு syllabus CBSC தரத்தில் இருக்கும் போது state board குழந்தைகள் எப்படி IIT க்கு தெரிவு செய்யபடுவார்கள் ? இது தான் kk வின் ஜனநாயக கொள்கையா ?[இல்லை ]
      Your Answer:ஒரே சமச்சீர் கல்வி என்ற கருத்துக்கு என் ஆதரவு நிச்சயம் உண்டு. நான் STATE BOARDஇல் படித்து வந்தவன் தான்.
      My comment: If You do not accept these different kind of Educational systems center and state] then why they are existing in Your current democratic political system? Who os responsible for this differences?

      [16]இந்தியாவில் 67 ஆண்டுகளாக உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய அரசால் செய்ய முடியாத சாதனைகளை இனிமேல் தான் சாதிக்க போகின்றிர்களா ?[ஆம் ]
      Your Answer:ஆம். முயன்றால் சாதிக்கலாம். முடியாது என்று முடங்கிக்கொண்டால் சாதிக்க முடியாது. தற்போதைய ஜனநாயகத்தில் இருக்கும் குறைகளை நீக்கினால் முடியும். அதற்கு என்ன வழி என்று நம் விவாதத்தை ஆக்கபூர்வமாக தொடர யோசிப்போமே நண்பரே.
      My comment:In your present capitalistic political system, How many years you need to fulfill the basic requirements of our fellow Indians? 2000 Years you need?

      [17]ஊருல ஒரே ஒரு ஓட்டு பொறுக்காத நல்லவன் ம.க.இ.க. அவனையும் ஒட்டு பொறுக்க நீங்கள் அழைப்பது சரியா / தவறா ? [சரி]
      Your Answer:நல்லவன் தான் ஒட்டு பொறுக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். 🙂 நல்லவர்கள் ஆண்டால் அது ஜனநாயகமாக இருந்தாலும் சரி சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி, மக்கள் நலமாக இருப்பார்கள். 🙂
      My comment:Instead of planing for Revolution you are advising them to do their contributions in this Fake-Democracy!

  68. Hi KK,

    //I am seriously dead against the accession of lands by bullies who fudge the records.//

    I have written the bullies in historical sense, not alone now. I am talking about the usurping of large tracts of lands by few individuals, temples, etc, and depriving many from any possession of land, centuries back. We communists have lot of explaining to do.

    //If people were so indifferent, then we should have never seen any toppling of the government.//

    Do you think that the voting for the opposition and changing the government every 5 year is such a big revolution? I very much wonder whether you are so naïve or a troll.

    //My other concern is *** True Revolution should involve the support of the mass public.//

    Take the case of our struggle for freedom from British rule. Do you think ‘mass public’ participated in the struggle? Unfortunately not. In the ratio of the population, it would not have been even a 10% who actively participated in the struggle. Have you heard of ‘critical mass’? As for us, we welcome the participation maximum number of people. That is why I am replying and explaining to you. Right from the beginning I am saying ‘until the SIGNIFICANT number of people becomes aware of our common destiny and the challenges involved, we cannot get a new setup’. This does not mean the exclusion of mass public.

    // பொதுமக்கள் எல்லாம் முட்டாள்கள் என்று எண்ண வேண்டாம்*** //

    I have already replied to this as ‘We don’t say so’. When I say ‘SIGNIFICANT’ number of people, it means, critical mass of the common people, nothing else.

    // சர்வாதிகாரம்//, // மாதிரி//

    Myself and others have answered to these. Instead of responding to those points, you are repeating the same worry.

    Continued…

  69. Hi KK,

    //அரவிந்த் கேஜ்ரிவால்//

    In few days, we will get the results. It is less likely that AAP will fare as well as in Delhi. Please take 10 years, i.e., 2 elections. See what AAP will do. Till then, be on the fence.

    //அண்ணா அசாரே *** வெற்றி காண முடிந்தால்*** சிவப்பு சட்டைக்காரர்களும்***//

    You want some old red shirted comrades to lie down on fast onto death? You should be joking. They are not trained in this form as Anna Hazare. If you can, please come forward, for your laws.

    //தொழிலாளிகள் கூட்டாக சேர்ந்து ஒரு தொழிலை தொடங்க அரசு ஆதரிக்க வேண்டும்.//

    The people running the Govt, barring some exceptions, have nothing but contempt to the working people. They will do all to hinder the progress of the working people. Examples are many. Only those with real senses can discern them. Let me give you one example. When Tamils working in tea plantations of Srilanka were denied citizenship and had to come back (around 5 lakhs), they asked our government to allocate lands in the mountains so that they can cooperatively develop plantations. Govt. did not bother, instead it leased lands to private plantation owners (one ex. Bombay Burma plantation) and the repatriated Tamils were again reduced to indentured laborers.

  70. //In few days, we will get the results. It is less likely that AAP will fare as well as in Delhi. //

    That is exactly my point. Anybody can get the support of the masses by blaming the current system. If they dont have a working model which can withstand the test of time, then we cannot get support from the public for that system.

    Regarding Anna Hazare, I did not ask the communists to do dharna and die. I just emphasized that if Anna can force a change of law, why can’t the communist force a change of law which can help the general public. The success of Anna-Lokpal is that he and his team were able to capture the attention of the masses and this public support forced the government to look into the issue. Communists can also get the attention of the government, if they can get mass support from the public for some important laws.

    You earlier mentioned about the Critical Mass. My question is, if Soviet Union achieved Critical mass in getting public support, why this mass disappeared all of a sudden? Why the comrades didnt take efforts to get that critical mass again from public support. This is a serious issue which needs to be pondered over. Blaming the political people or business people only does not solve your problem. Please go into the root of the problem – Basic lack of belief from the Public. Lost Hope. That is the Crux of the issue. No point in beating around the bush. Why the public of Russia lost hope? Why the Critical Mass declined to negligible Pre Communist era levels? Serious Introspection is needed in this issue.

    I agree with one point. That we did not elect the right representatives. What is the guarantee that the selected team of comrades also become like this?

    Let us take some examples, Take out the list of developed countries all over the world. Let us see how many are communist countries in the developed countries list. Let us see how many communist countries are there in the list of countries with High GDP, List of Top countries with the Highest Human Development Index(HDI), the list of Inequality adjusted Human Development Index (IHDI).

    In these list, how many democratic countries are seen in the Top 10, Top 20. How many communist countries, I mean TRUE COMMUNISTS COUNTRIES, Not PSEUDO COMMUNISTS in the Top 10, Top 20 list.

    So, the moral of the story is, the problem is not with democracy, but the people who rule. The people who are elected by these democratic countries.

    I have no problem with communism as long as it can give a better life style to all the general public. But the point is, even if we give power to communism, can this model sustain? If yes, why it did not sustain in its roots of Soviet Union and China?

    In India, the problem is not with the democratic model, but with the politicians who use/misuse the loop holes in the system. Plug the loop holes. Our system will be alright.

    • Hi KK,

      I see you keep repeating your original points. You are not reflecting on our points and posing the questions based on your reflection.

      // the root of the problem – Basic lack of belief from the Public//
      //why it did not sustain in its roots of Soviet Union and China?//

      For these, I have already answered to Rebecca, as ‘the counter revolutionaries had got upper hand’. That is counter revolutionaries had become critical mass. Others have also answered.

      // What is the guarantee that the selected team of comrades also become like this?//

      I have answered /People’s army will be qualitatively very different from the current one, you need not fear People’s army/. That is the Communist govt will be qualitatively very different from the current one. In another post, I have replied you saying well prepared systems and procedures to handle the black sheeps (among leadership in all levels) should be in place before a new setup can come into existence. I am adding the following. Decisions will be made in committees not by individuals in a new communist society. So, outright tyranny is not possible. Please use your imagination.
      //How many *** TRUE COMMUNISTS COUNTRIES *** in the Top 10//
      I don’t know about those indexes. Cuba is doing well, in spite of a very harsh blockade. I am not sure those indexes are designed with the countries such as Cuba in mind. Many countries adopt Socialism/Communism in varying degrees. The public health systems of France, UK, Canada, etc. are far better than US system. Creation of Israel was possible only by the settlements (Kibbutz) based on communism. Even if there is no country at present, even if the few attempts did not work, it does not mean, we cannot make it better and use.

      // the problem is not with democracy//

      What we have now is not democracy. It is oligarchy or Greedyocracy. ஜன+நாயகம் அல்ல முதலாளி+நாயகம்.

      // Plug the loop holes. Our system will be alright.//

      I gave you one example of Tamil plantation workers repatriated from Srilanka. I told you that / The people running the Govt, barring some exceptions, have nothing but contempt to the working people/. How can we plug such a kind of loop holes?
      As for us, the MAIN loop hole is the unbridled greed of unlimited private property and privatization of natural resources like land, water, minerals, etc. Until we plug this big hole, we can keep on plugging holes as newer holes will spring up. If you have any doubt in this we can discuss. Meanwhile, I can give you one example for your reflection. Children are kidnapped (e.g. the movie ‘6 Melugu Vathigal or 6 Candles), locked in secretive locations, to use them as enslaved labor, for the greed of unpaid work and profit. Can such atrocities happen in Communist society? It is worth to bring Communism at least to save children from such slavery. You imagine your child having been kidnapped.

      KK, please try to answer our questions, pose questions based on our inputs. Otherwise, there is no point wasting our time.

      • Dear Buddy,

        // ‘the counter revolutionaries had got upper hand’. That is counter revolutionaries had become critical mass. //

        This is called living in denial- The refusal to accept present reality.
        The Common traits of people living in denial mode:
        “I/My system is above failure”
        “I/My system is never at fault”
        “Finding Excuse – Setback/Failure happened because of external XYZ reasons, not me/my system”
        “Every one else is wrong”
        “I am perfect, My system is perfect, I/My system don’t require any change/modification”
        “Its all a big conspiracy, I/My system is the victim of this conspiracy”

        I am seeing all the above traits in your answers trying to rebuff me or my points.
        I for one, never considers that I know everything, I am still learning lot of things the world is offering me.

        You are trying to say that the counter revolutionaries attained majority over the revolutionaries and attained critical mass. Do you think the entire world is made up of only these 2 categories – Revolutionaries and Counter Revolutionaries. There is also the silent majority of the mass public. Repeatedly you are ignoring the influence of the mass public. If the mass public support revolutionaries,they attain critical mass. If the mass public reject them, they lose critical mass. In Soviet, the revolutionaries lost control because they lost the faith of the general public. Why the faith is lost, We need to find an answer for that instead of blaming the traitors. Please do not under estimate the influence of mass public for the impact/setback to communism in Soviet Union.

        //What we have now is not democracy. It is oligarchy or Greedyocracy. //
        Thanks for accepting that the problem is not with the democracy, but with the oligarchy.
        Ironically, the same oligarchy could be the cause of the demise/setback of communism in Soviet union. In the name of public, the power was controlled by the small group of people and hence the public ignored these group of people in Soviet Russia.

        //People’s army will be qualitatively very different from the current one, you need not fear People’s army. That is the Communist govt will be qualitatively very different from the current one.//
        So called People’s army, ignored the sentiments of the people. Hence the decline/setback. People’s army is supposed to be the biggest most powerful than any other army in the world. A strong support from a strong majority of the people is no match against a few group of people. Hence the few group of people who controlled the soviet in the name of public were discarded by the same public. If the so called People’s army did good for the public, the public would have rallied behind the so called people’s army in support and would have fought against the counter revolutionaries. In reality, did it happen?
        This is exactly what I meant – Living in Denial.

        Atleast I have the guts to tell that the present democratic system is having loop holes and it needs to be plugged. But you never accept the fact that the communism at the present form is not ideal.

        //Cuba is doing well, in spite of a very harsh blockade. I am not sure those indexes are designed with the countries such as Cuba in mind.//
        I also admire Cuba, Che Guvera and Fidel Castro. The Guts of Castro to face USA boldly.
        But one disturbing fact is that Cuba is one of the 2nd most worst country in terms of arrests and jailing of Journalists. The Number 1 in this list being China.
        Cuba ranks extremely low in Press Freedom Index.
        This is exactly what I fear when we have dictatorship in the name of communism.
        We need the freedom to speak, freedom to write.

        Cubans cannot read books, magazines or newspapers unless they have been approved/published by the government.Cubans can not receive publications from abroad or from visitors.
        In March 2012 Cuban police beat and then arrested at least 50 female members of the Ladies in White, a prominent dissident group, who were holding demonstrations just days before the visit of Pope Benedict XVI. Two kinds of online connections are offered in Cuban Internet cafes: a ‘national’ one that is restricted to a simple e-mail service operated by the government, and an ‘international’ one that gives access to the entire Internet. The local cuban population is restricted to the first one, Foreign visitors are not allowed to use their computers for local Cubans.In order to get around the government’s control of the Internet, citizens have developed numerous techniques. Some get online through embassies and coffee shops or purchase accounts through the black market. The black market consists of professional or former government officials who have been cleared to have Internet access.These individuals sell or rent their usernames and passwords to citizens who want to have access to the intenet. Cubans were legally allowed to buy computers from 2007 onwards only. Prior to march 2008, Mobile phones are banned for general public unless it is for work purpose. This ban was lifted by Raul Castro along with the bans for Consumerist goods.

        • Regarding the plantation workers issue, It is the fault of the rulers, not democracy itself. My Dear Univerbuddy, Yourself and Mr.Saravanan always blame the vehicle while the fault lies with the driver who drives recklessly and creating an accident.
          Elect a good considerate leader, you will be in safe hands.
          Elect an opportunistic scam fested leader, your problems will continue.

          The same concept applies to both Democracy and Communism.
          Ideal Democracy and Ideal Communism are good.
          Democracy is better because we have freedom to speak, freedom to write, freedom to express our opinion even against the ruler.

  71. திரு கற்றது கையளவு,

    [1]ஆய்வுகள், விவாதங்கள் அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் ஆய்வுகள் மற்றும் விவாதங்கள், அதன் முடிவுகள் research ethics என்ற ஆராய்ச்சி நெறிமுறைகளை மீறுவதாகவும், முதலாளித்துவம் சார்ந்து ஒருதலைபட்சமாகவும் ,99% உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், 1% முதலாளிகளுக்கு ஆதரவாகவும், ஏழை,எளிய ,நடுத்தர மக்களீன் அபிலாசைகளுக்கு தீங்கு பயக்கும் முறையிலும் உள்ளது.

    [2]மேலும் பார்பனியத்தின் கொடுரங்களை மிகவும் நேர்மையாக எதிர்க்கும் உங்கள் மனம் முதலாளித்துவத்தை எதிர்க்க முடியாதது மிகவும் முரண்பாடான விடயம். 1%முதலாளிகள் இன்று நடைமுறை படுத்தும் போலி ஜனநாயகம் உங்களுக்கு சிறப்பாக தெரிவதும்,99% உழைக்கும் மக்கள் படைக்க போகும் உண்மையான புதீய ஜனநாயகம் என்பது முசாரப் ஆட்சி போன்று இருக்கும் என்று நீங்கள் அவதூறு செய்வதற்கும் காரணம் உங்கள் தவறான புரிதலும் , முதலாளித்துவ சார்பும் தான் காரணம்.

    [3]முதலாளித்துவ-ஜனநாயக வரலாற்றை அகராதியில் படித்து தெளியும் படி நீங்கள் கூறிய போது மிகவும் மனம் கலங்கி போனேன்.அருகில் உள்ள நூலகத்துக்கு செல்லுங்கள் கற்றது கையளவு ! அங்கு எவ்வளவே ஐரோபிய வரலாற்று புத்தகங்கள் கிடைக்கும்.

    • சரவணன் சார்,

      ஆய்வுகள், அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும். சரி தான். நீங்களே உலக நாடுகளில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் லிஸ்ட் எடுத்து பாருங்கள். மக்களின் தனி நபர் வருமானம், மக்களிடையே இருக்கும் வருமான ஏற்ற தாழ்வை கணக்கில் எடுத்து கொண்டு Inequality adjusted Human Development Index (IHDI), மக்களின் வாழ்க்கை தரம் இவை அனைத்தையும் பாருங்கள். கம்மியுனிசம் இல்லாத நாடுகள் எத்தனை இருக்கின்றன, கம்மியுனிசம் ஆட்சியிலிருக்கும் (உண்மையான கம்மியுனிசம் தான், போலி கம்மியுனிசம் இல்லை) நாடுகள் எத்தனை என்று கணக்கில் எடுத்து பாருங்கள்.

      நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான். நம் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு ஜனநாயகத்தை காரணம் காட்டாதீர்கள். ஆள்பவர்கள் செய்யும் தவறுக்கு ஜனநாயகம் பொறுப்பல்ல. மீண்டும் மீண்டும் நீங்கள் வண்டியை ஓட்டுபவனின் தவறுக்கு நீங்கள் வண்டியை குறை கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.

      என்னை உங்கள் எதிராளியாக நினைக்க வேண்டாம். கம்மியுனிசம் பற்றி அறியாத ஒரு பாமரனாக கருதி, இந்த பாமரனுக்கும் புரியும் வண்ணம் கொஞ்சம் விளக்குங்களேன்.

      நான் ஜனநாயகம் VS சர்வாதிகாரம் பற்றி தான் சொல்கிறேன்.
      நீங்கள் கம்மியுனிசம் VS முதலாளித்துவம் பற்றி சொல்கிறீர்கள்.
      இரண்டும் ஒன்றென்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் இல்லை என்று சொல்கிறேன்.

      It is better for us to agree to disagree than disagree to agree! 🙂

      நான் ஒரு காகிதத்தில் 6 என்று எழுதுகிறேன்.
      நீங்கள் அதன் எதிர்பக்கத்தில் இருந்து தலைகீழாக பார்ப்பதால் அதனை 9 என்று சொல்கிறீர்கள்.
      இருவரும் அவரவர் வாதப்படி பார்த்தால் சொல்வது சரியே.
      பார்க்கும் பார்வையில் இருக்கிறது சூட்சுமம்.

      So, Let us agree to disagree 🙂

      • திரு கற்றது கையளவு,

        நீங்கள் கம்யூனிசம் குறித்தும், மக்கள் ஏன் சோவியத் ரஷ்யா வீழ்ச்சியை எதிர்க்கவில்லை? என்பது குறித்தும் கேட்ட கேள்விகளுக்கான என் பதில்.

        https://www.vinavu.com/2014/04/23/futile-elections-pseudo-democracy-what-is-the-real-solution/#comment-137084

        இதைப் பொறுமையாகப் படித்து விட்டு தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவம் குறித்து பின்னர் பதிவிடுகிறேன்..

        • நன்றி பகத், நீங்கள் கொடுத்த சுட்டிகளை நான் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சில சமயம் நேரமில்லாமை காரணமாகவும், நம்முடைய மற்ற நண்பர்களின் நீண்ட கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் சொல்கையில் உங்களது கருத்துக்களுக்கு பதில் சொல்வதற்கு மறந்து விடுகிறேன். மன்னிக்கவும்.

          கம்மியுனிசம் என்பது அதன் தூய வடிவில் மக்கள் அனைவரும் ஒன்று, அனைவருக்கும் ஒரே வகையான முக்கியத்துவம், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் ஆகிய கருத்துகளுக்கு என் ஆதரவு என்றும் உண்டு. நாட்டில் உள்ள ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகள் நலனுக்கு ஏற்ற சட்டங்கள் கொண்டு வருவதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

          நான் எங்கு உங்கள் பாதையிலிருந்து விலகுகிறேன் என்றால், கம்மியுனிசம் என்ற பெயரில் சில சமயம் நம் நண்பர்கள் சர்வாதிகாரத்தை ஆதரிப்பதும், ஜனநாயகத்தை குறை சொல்வதிலும் தான் நான் வேறுபடுகிறேன். சீமான் வகை எதிர்ப்பு அரசியல், அரவிந்த் கேஜ்ரிவால் வகை எதிர்ப்பு அரசியலை வைத்து நாம் கூட்டம் கூட்ட முடியும், கை தட்டல் வாங்க முடியும். ஆனால் மக்களின் முழுமனதான பேராதரவு எப்போது கிட்டும்? அவர்களது முக்கிய பிரச்சினைகளுக்கு நம்மிடம் நல்ல தீர்வு இருக்கிறதென்று ஒரு நம்பிக்கை அவர்களுக்கு வர வேண்டும். இவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் இவர்கள் நேர்மையான, திறமையான, மக்கள் நலம் பேணும் ஆட்சியை தருவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வர வேண்டும். அது எப்போது நிகழும்? அவர்களின் சிறிய பிரச்சினைகள், தினசரி பிரச்சினைகள் இவற்றிற்கு நம்மால் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு தனி மனிதனால் ஒரு மலையையே உடைக்க முடிந்ததல்லவா? தசரத் மஞ்சி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டு நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பது சோம்பேறித்தனம் இல்லையா? அரசாங்கம் நமக்கு அனைத்தையும் தர வேண்டும் என்று எண்ணுவதை விட நாமே நமது எதிர்காலத்தை செதுக்க வேண்டும். தண்ணீர் தண்ணீர் நாடகத்தை பார்த்திருப்பீர்கள். சில முக்கிய பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைக்கவில்லையெனில் நாம் அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாமே நமக்கு உதவ வேண்டும்.

          முதல் கட்டமாக உள்ளூர் கவுன்சிலர் வேலையை ஒழுங்காக அவரது கடமையை செய்கிறாரா என்று பாருங்கள். அவர் செய்யவில்லை எனில் நாம் அனைவரும் ஒரு குழுவாக இனைந்து மக்களின் தினசரி தண்ணீர், கழிவுநீர், தெருவிளக்கு பிரச்சினைகளுக்கு நாம் போராடி தீர்த்து வைப்போம். மக்கள் நம்பிக்கையை இப்படி தான் நாம் படிப்படியாக பெற முடியும். அவர்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு நீங்கள் ஒரு முடிவு தருவீர்களானால் அடுத்த முறை கவுன்சிலர் பதவிக்கு மீண்டும் அந்த பழைய செயல்படாத, ஊழல் மிக்க மனிதரை மக்கள் தேர்ந்தெடுப்பார்களா, இல்லை அவர்களுக்காக ஓடி ஓடி உழைத்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட ம.க.இ.க போன்ற குழுக்களுக்கு ஆதரவு கொடுப்பார்களா?

          சிறுதுளி பெருவெள்ளம். முதல் படியை எடுத்து வைப்போம். மக்களின் பிரச்சினைகளுக்கு நம்மால் ஆன தீர்வை காணுவோம். அரசை குறைகூறிக்கொண்டு, அரசையே நம்பிக்கொண்டு இருப்பதை விட்டு நம்மால் முடிந்த வரை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பார்ப்போம்.

          மக்கள் நம்பிக்கையை பெற்ற பின் அவர்களே உங்களை நாடி வருவார்கள். அப்போது மக்களுக்கு பயன் தரும் சட்டங்களை/ சட்ட திருத்தங்களை நீங்கள் மக்களிடம் சரியான தருணத்தில் விளக்கலாம். இதை விடுத்து இவன் சரியில்லை, அவன் சரியில்லை, ஜனநாயகம் சரியில்லை, அரசு சரியில்லை என்று எதிர்ப்பு அரசியல் மட்டும் நடத்திக்கொண்டிருந்தால் ஏற்கனவே மனம் நொந்து இருக்கும் மக்கள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து கேட்க மாட்டார்கள்.

      • திரு கற்றது கையளவு,

        [1]அத்தகைய ஆராய்ச்சியை தானே இக் கட்டுரை [தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?] ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கு [research ethics] உட்பட்டு செய்து உள்ளது.

        [2]இக் கட்டுரையை சமுக அறிவியல் என்ற அறிவியல் பிரிவுக்கு உட்படுத்தி நான் மறுஆய்வு[review] செய்த போது கட்டுரையில் உள்ள புள்ளிவிவர தரவுகளும் [statistical data],வரலாற்று தரவுகளும்[historical data] சரியாகவும் , ஆய்வு முடிவுகள் 100 % துல்லியமாகவும், 100% அறிவியல் பூர்வமாகவும் தானே உள்ளன !

        //ஆய்வுகள், அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும். சரி தான். நீங்களே உலக நாடுகளில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் லிஸ்ட் எடுத்து பாருங்கள். மக்களின் தனி நபர் வருமானம், மக்களிடையே இருக்கும் வருமான ஏற்ற தாழ்வை கணக்கில் எடுத்து கொண்டு Inequality adjusted Human Development Index (IHDI), மக்களின் வாழ்க்கை தரம் இவை அனைத்தையும் பாருங்கள். கம்மியுனிசம் இல்லாத நாடுகள் எத்தனை இருக்கின்றன, கம்மியுனிசம் ஆட்சியிலிருக்கும் (உண்மையான கம்மியுனிசம் தான், போலி கம்மியுனிசம் இல்லை) நாடுகள் எத்தனை என்று கணக்கில் எடுத்து பாருங்கள்//

        • நீங்களே சொல்லுங்களேன் சரவணன்,

          மக்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, வருமானம், பொருட்களை வாங்கும் திறன், கருத்து சுதந்திரம், இவை அனைத்திலும் முன்னேறி இருக்கும் கம்மியுனிச நாடு (போலி கம்மியுனிச நாடு அல்ல) எங்கே உள்ளது?

          வினவின் இந்த கட்டுரையில் தற்போதைய தேர்தல் முறையில் உள்ள குறைகள், குளறுபடிகள் பற்றி தெளிவாக கூறப்படுள்ளது. மறுக்கவில்லை. தேர்தலில் பணக்காரர்கள், பெரிய கட்சிகள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலுக்கு வேண்டுமானால் வினவு சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் ஒரு சிறிய கவுன்சிலர் தேர்தலுக்கு ஜெயிப்பவர் பணக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் வினவு மற்றும் ம.க.இ.க நண்பர்களை இங்கே கவனம் செலுத்த சொல்கிறேன். சிறுதுளி, பெருவெள்ளம். இதுவரை 30 வருடங்கள் போராடி இது வரை ஒரு தொகுதியில் கூட மக்களை தேர்தல் புறக்கணிப்பு செய்ய நிர்பந்தித்தும் முடியவில்லை. அப்போது வேறு என்ன வழி என்று யோசிக்கலாம் அல்லவா? மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு நபருக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

      • திரு கற்றது கையளவு

        ஒருவேளை நீங்கள் இச் சமுகத்தை இலக்கியங்கள் மூலம் கற்க விரும்பினால் திரு கல்கி அவர்கள் எழுதீய தியாகபூமி என்ற புதினத்தில் இருந்து தொடங்கலாம். மேலும் எம் தோழன் மாக்சிம் கார்க்கி எழுதிய தாய் என்ற புதினத்தையும் [சு]வாசிக்கலாம். இந்த புதினங்கள் பற்றீய சிறு குறிப்புகளை கீழே கொடுத்து உள்ளேன்.

        மேலும் திரு சந்தனமுல்லை அவர்கள் எழுதிய தாய் என்ற புதினத்தை பற்றீய அறிமுகம் உங்கள் வாசிப்புக்கு உதவும் என நம்புகின்றேன்.
        https://www.vinavu.com/2011/04/21/mother-maxim-gorky/

        தியாகபூமி
        ————-
        [1]தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது. கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு உள்ளார். 1938-1939 களில் இப்புதினம் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது.

        [2]தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய கருத்துகளடங்கிய இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது.இந்தப் புதினத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்று, கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார். நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே தமது புதினத்தில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார்.

        தியாகபூமி புதினத்தை படிக்க….

        http://www.tamilkalanjiyam.com/literatures/kalki/thiyaga_boomi/index.html#.U2x-N6I5iW5

        தாய்
        ——-
        [1]தாய் (உருசியம்: Мать) எனும் ரஷிய புதினம் மார்க்ஸிம் கார்கியால் எழுதப்பட்டது. 1907 இல் முதன் முதலாக வெளியான இது உலகின் மிகச் சிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

        [2]ரஷியாவின் கம்யுனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தை காலமாகவும், புரட்சியில் பங்கேற்க்கும் இளைஞர்களை கொண்ட தொழிற்சாலையை கதை களமாகவும் கொண்ட புதினம். இந்த புதினம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

        [3]பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையை புரிந்து கொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்………….

        //என்னை உங்கள் எதிராளியாக நினைக்க வேண்டாம். கம்மியுனிசம் பற்றி அறியாத ஒரு பாமரனாக கருதி, இந்த பாமரனுக்கும் புரியும் வண்ணம் கொஞ்சம் விளக்குங்களேன். //

  72. திரு கற்றது கையளவு,

    [1]சமுக அறிவியல் சார்ந்த இக் கட்டுரை கொடுத்து உள்ள விவரங்கள் தவறு என்றால் நீங்களும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கு [research ethics] உட்பட்டு தகுந்த தரவுகளுட்ன் மறுஆய்வு[ review ] செய்யலாமே!

    [2]நீங்கள் முதன்மை படுத்தும் இந்திய போலி ஜனநாயகத்தை தவறு என்று தரவுகளுடன் இக்கட்டுரை நீருபணம் செய்தாலும் அதை ஏற்க முடியாமைக்கு காரணம் ஜனநாயக முகமுடிக்குள் மறைந்து உள்ள உங்களின் முதலாளித்துவத்தீன் மீது உள்ள காதல் மட்டுமே காரணம்.

    [3]இக் கட்டுரையீன் நோக்கமே நீங்கள் கூறும்…..

    ” என்னை உங்கள் எதிராளியாக நினைக்க வேண்டாம். கம்மியுனிசம் பற்றி அறியாத ஒரு பாமரனாக கருதி, இந்த பாமரனுக்கும் புரியும் வண்ணம் கொஞ்சம் விளக்குங்களேன்.” தானே !

    மேலும் திரு பகத் அவர்கள் நீங்கள் கம்மியுனிசம் பற்றி அறியாத எவ்வளவு முறை உதவி செய்து உள்ளார் ! அவர் சுட்டிய இணைய தள கட்டுரைகளை படித்தீர்களா ?

    [4]வினவில் வரும் கட்டுரைகள் கம்யுனிசம் சார்நத கட்டுரைகள் உங்கள் கண்களுக்கு பட்டாலே உங்கள் அரசியல் பாமர தனத்தை நீக்கீ நீங்கள் அரசியல் வீழிப்புணர்வு பெற முடியுமே !

    //நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான். நம் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு ஜனநாயகத்தை காரணம் காட்டாதீர்கள். ஆள்பவர்கள் செய்யும் தவறுக்கு ஜனநாயகம் பொறுப்பல்ல. மீண்டும் மீண்டும் நீங்கள் வண்டியை ஓட்டுபவனின் தவறுக்கு நீங்கள் வண்டியை குறை கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.

    என்னை உங்கள் எதிராளியாக நினைக்க வேண்டாம். கம்மியுனிசம் பற்றி அறியாத ஒரு பாமரனாக கருதி, இந்த பாமரனுக்கும் புரியும் வண்ணம் கொஞ்சம் விளக்குங்களேன். //

    • போலி ஜனநாயகத்தை தூய ஜனநாயகமாக ஆக்குவது எப்படி என்று யோசிக்கலாமே.

      தூய கம்மியுனிச நாடாக உருவான ரசியா, சீனா, தங்களின் கருத்துப்படி போலி கம்மியுனிச நாடாக உருமாறும்போது போலி ஜனநாயகமாக நீங்கள் கருதும் இந்தியாவை தூய ஜனநாயக நாடாக மாற்ற முடியும் அல்லவா? எல்லாம் மக்களாகிய நம் கையில் தான் உள்ளது.

      மக்களின் பேராதரவு உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால், மக்களையும் உங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வைக்க வேண்டுமென்றால், முதலில் மக்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும். அதை எப்படி ஏற்படுத்த போகிறீர்கள்? வெறும் எதிர்ப்பு அரசியல் மட்டுமே நடத்திக்கொண்டிருந்தால் மக்கள் பேராதரவு கிடைக்காது. ஆக்கபூர்வமாக மக்களுக்கு நீங்கள் பயன்பட்டால் தானாக உங்களுக்கு அவர்கள் ஆதரவு கொடுக்க போகிறார்கள். யோசித்து விவாதிப்போம்.

      • So that We are proposing New Democratic Revolution

        //போலி ஜனநாயகத்தை தூய ஜனநாயகமாக ஆக்குவது எப்படி என்று யோசிக்கலாமே. //

        Yes Working class people of India will integrate themself for the New Democratic Revolution

        //தூய கம்மியுனிச நாடாக உருவான ரசியா, சீனா, தங்களின் கருத்துப்படி போலி கம்மியுனிச நாடாக உருமாறும்போது போலி ஜனநாயகமாக நீங்கள் கருதும் இந்தியாவை தூய ஜனநாயக நாடாக மாற்ற முடியும் அல்லவா? எல்லாம் மக்களாகிய நம் கையில் தான் உள்ளது.//

        What is happening in central India[People support to Moist] is happening in TamilNadu for True communist people like M K E K.

        //மக்களின் பேராதரவு உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால், மக்களையும் உங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வைக்க வேண்டுமென்றால், முதலில் மக்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும். அதை எப்படி ஏற்படுத்த போகிறீர்கள்? வெறும் எதிர்ப்பு அரசியல் மட்டுமே நடத்திக்கொண்டிருந்தால் மக்கள் பேராதரவு கிடைக்காது. ஆக்கபூர்வமாக மக்களுக்கு நீங்கள் பயன்பட்டால் தானாக உங்களுக்கு அவர்கள் ஆதரவு கொடுக்க போகிறார்கள். யோசித்து விவாதிப்போம்.//

  73. திரு கற்றது கையளவு,

    [1]சமுகத்தை அறிவியல்படியும், வரலாறு பின்னணியீலும் அணுகுங்கள் kk. உங்கள் 6 மற்றும் 9 பிரச்சனைகள் தீரும்! குறைந்த பட்சம் நாம் பள்ளியில் படித்த ஐரோப்பிய வரலாற்றை மீண்டும் revision செய்து விட்டாவது விவாதத்துக்கு வாருங்கள் நண்பரே !

    [2]சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு.

    “மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்”

    //நான் ஒரு காகிதத்தில் 6 என்று எழுதுகிறேன்.
    நீங்கள் அதன் எதிர்பக்கத்தில் இருந்து தலைகீழாக பார்ப்பதால் அதனை 9 என்று சொல்கிறீர்கள்.
    இருவரும் அவரவர் வாதப்படி பார்த்தால் சொல்வது சரியே.
    பார்க்கும் பார்வையில் இருக்கிறது சூட்சுமம். //

    //நான் ஜனநாயகம் VS சர்வாதிகாரம் பற்றி தான் சொல்கிறேன்.
    நீங்கள் கம்மியுனிசம் VS முதலாளித்துவம் பற்றி சொல்கிறீர்கள்.
    இரண்டும் ஒன்றென்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் இல்லை என்று சொல்கிறேன். //

    • வரலாறு இருக்கட்டும் நண்பரே, நிகழ்காலத்துக்கு வாருங்கள் 🙂 வரலாறு என்பது ஒரு ஏமாற்று வேலை. ஒரே விடயத்தை அவரவர் கருத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து விளக்கம் கொடுக்க இயலும். நிகழ்காலத்தில் வளர்ந்த நாடுகளில் எத்தனை நாடுகள் ஜனநாயகத்தை பின்பற்றுகின்றன. எத்தனை நாடுகள் கம்மியுநிசத்தை கடைபிடிக்கின்றன?

      நான் யுனிவர்பட்டிக்கு அளித்த பதில்களை படித்து பாருங்கள். ஜனநாயக அளவில், கருத்து சுதந்திர அளவில், மக்கள் வருவாய் அளவில், ஏற்ற தாழ்வற்ற நிலையளவில், பாதுகாப்பான வாழ்வின் அடிப்படையில் வளர்ந்த நாடுகளில் எத்தனை நாடுகள் ஜனநாயகத்தை கடைபிடிக்கின்றன? எத்தனை நாடுகள் கம்மியுநிசத்தை கடைபிடிக்கின்றன?

      • கற்றது கையளவு வரலாற்று விடயத்தில் ரொம்ப வீக் போல !

        வரலாறு தான் எதீர் காலத்துக்கு சிறந்த வழிகாட்டி என்பது வரலாற்று விடயத்தில் ரொம்ப வீக்கான கற்றது கையளவுக்கு தெரியாதது ஆச்சிரியம் ஏதும் இல்லை !

        உலகில் வளர்ந்த நாடுகள் அதிகமா ? இல்லை [India like ]ஏழை நாடுகள் அதிகமா கற்றது கையளவு?

        //நான் யுனிவர்பட்டிக்கு அளித்த பதில்களை படித்து பாருங்கள். ஜனநாயக அளவில், கருத்து சுதந்திர அளவில், மக்கள் வருவாய் அளவில், ஏற்ற தாழ்வற்ற நிலையளவில், பாதுகாப்பான வாழ்வின் அடிப்படையில் வளர்ந்த நாடுகளில் எத்தனை நாடுகள் ஜனநாயகத்தை கடைபிடிக்கின்றன? எத்தனை நாடுகள் கம்மியுநிசத்தை கடைபிடிக்கின்றன?//

        • சரிங்க சரவணன், எனக்கு ஒன்றுமே தெரியாததாகவே நினைத்து கொள்ளுங்கள்.
          எல்லாம் தெரிந்த சரவணன் அவர்கள் சொல்லட்டுமே, வாழ்வியல் ரீதியில், ஜனநாயக ரீதியில், கருத்து சுதந்திரம், வருமானம், இவை அனைத்தின் மதிப்பீட்டிலும் முன்னேறி இருப்பது ஜனநாயக நாடுகளா, இல்லை கம்மியுனிச நாடுகளா? உங்களுக்கு தான் “எல்லாம் தெரியும்” இல்லையா, நீங்களே சொல்லுங்களேன் 🙂

  74. Hi KK,

    //do not under estimate the influence of mass public for the impact/setback to communism//

    You want to suggest that the mass public did not want communism. So be it. When mass public wants it will you agree to it? If there is a referendum on whether to have Communism or not, will you vote for it? If mass public votes yes, will you be happy?

    //Ironically, the same oligarchy could be the cause of the demise/setback of communism//

    Yes. But they were wolves in sheep’s clothing.

    //Living in Denial.//
    //you never accept the fact that the communism at the present form is not ideal.//

    No. I even invited you to discuss and bring out new form. I had also told you that one reason why communism failed could have been that the Russian communists were not fully prepared.

    //Cuba ranks extremely low in Press Freedom Index.//

    In 2014, India is at 140, Cuba is at 170. Considering that this index gives negative points for existence of a state monopoly and media regulation, I don’t see any difference between India and Cuba.

    //Cubans cannot read books, magazines or newspapers unless they have been approved/published by the government//.

    I am not sure how much of this is true. I am for correcting this bad state. Communism is for continuous improvement. Having said that, Governments all over the world do ban things: books, etc. In US itself, the communist ideas was almost banned (see MacCarthyism).

    //In March 2012 Cuban police beat and then arrested at least 50//

    Getting beaten and arrested is lot better than killed by shooting and hitting with rifle butts. In India, every now and then people get killed by police. Paramakudi is a standard example, where not even a crowd 1000 had to bear the loss of 6 lives, shot at and crushed with rifle butts.

    //Two kinds of online connections are offered in Cuban Internet cafes//

    I agree this is not pleasant. This will be rectified in coming days and years. But the main reason is the US embargo.

    //Cubans were legally allowed to buy computers from 2007 onwards only//

    Again the embargo is the reason. US won’t sell its Computers to Cuba just because Cuba has not surrendered to Capitalism. Now that one can get anything from countries other than US and its allies, Cubans can buy them. Same applies to Mobile phones.

    //[You] blame the vehicle while the fault lies with the driver//

    We blame the driver only, who is the ruling class. This driver is not doing well as it is selfish and greedy and at best indifferent to the problems of common people and at worst kills them in various ways

    //Elect a good considerate leader, you will be in safe hands.//

    I have already said /You seem to be highly ignorant about the current system. Who gets to contest in elections? Only those who prostrate themselves at the feet of Jaya, Karuna, Sonia, Modi etc without any self-respect. Can any good come out of these MPs/MLAs? Can they be made in any way to enact those laws that you are talking?/

    Now,
    I have a question for you. You have said “Plug the loop holes. Our system will be alright”. Could you tell us how?

  75. Dear Buddy,

    //You want to suggest that the mass public did not want communism. So be it. When mass public wants it will you agree to it? If there is a referendum on whether to have Communism or not, will you vote for it? If mass public votes yes, will you be happy?//

    Let us talk about reality. Let us understand WHY the mass public is not giving their outright support to communist governance. The simple reason is, they don’t see a better alternative in communism when compared to the current system. I agree, the current system is not perfect. It has lot of loop holes, problems. But the communistic solution also is not that much promising. If it evokes so much hope and faith, atleast half of the world would have turned to communism. WHY IT DIDN’T HAPPEN?

    //Yes. But they were wolves in sheep’s clothing.//
    This is exactly what I meant – You people are living in Denial mode.
    Please come to reality. Are the leaders of communism so dumb to allow wolves to capture their only hold? Why aren’t the public opposing the so called wolves? Why no such revolution happening again?
    And now, Even if the public give full support to communism and bring a communist governance, What is the guarantee that the wolves capture it again? Soviet Union, People’s Republic of China, What is happening here? You already mentioned that Delhi public will not support AAP Arvind Kejriwal again. Reason, He failed to capitalize on the opportunity to rule the state with good governance. He was able to capture the mass public attention initially due to his Anti Corruption planks and he did succeed in getting the initial wave of support. Why you feel that He cannot recreate the Delhi Magic again? Simple reason, He squandered the golden opportunity given and didn’t do anything constructive to the development of the public. Just Empty Slogans. The same thing happened years ago during Soviet Union rule. Public gave their mass support to communists hoping that they can alleviate them from all their problems. But, In Ground Reality, What happened?
    So, the public lost faith in communism, just like the Delhi public lost faith in Arvind Kejriwal.

    //one reason why communism failed could have been that the Russian communists were not fully prepared.//
    Oh, Come on Buddy, Are the True Russian Communists still preparing? How many years more they need to prepare then? Can it happen in our life time? You always conveniently point out the problems with the current system (Which, I agree, is present), but conveniently ignore the same when it happens in communist system and blame it on wolves, not prepared, etc.

    //In 2014, India is at 140, Cuba is at 170. Considering that this index gives negative points for existence of a state monopoly and media regulation, I don’t see any difference between India and Cuba.//
    Dear Buddy, I asked you about how many developed countries follow democracy and how many developed countries follow Communism. You came with a single answer – Cuba. As the other so called communist countries – Russia and China are just not breeding true communism. Nothing to say about North Korea either.So you have to come up with only one option, that is Cuba.
    I have given you several examples of the state of Democracy and Freedom of expression, Press Freedom in Cuba. I always admired the qualities of Che Guvera and Fidel Castro and their braveness in opposing the most powerful country of their time. I still admire their qualities. But I do have reservations about the way democracy is played with in Cuba. I can confidently say, India is in a better position than Cuba. So, even the best example of communism you gave, did not stand up against one of the worst examples of democracy. Then what about the comparison between other democratic and communist countries? No Comparison at all.

    //In US itself, the communist ideas was almost banned //
    That doens’t make Cuba as a Saint, Isn’t it Buddy?

    //In March 2012 Cuban police beat and then arrested at least 50//
    Buddy, Buddy, Why did you cut short my full sentence? I mentioned 50 female members. You conveniently ignore the “female” part and try to justify the Cuban Government’s act. Let us call a spade a SPADE. In your dictionary, If oppression happens in Tamilnadu, it is oppression. If it happens in Cuba, it is nothing. Is this what you are trying to Project my dear Buddy? Atleast, I had the guts to accept that the current democratic system in India has some serious faults and it needs to be addressed. I don’t proscribe blind faith on a system without looking at the issue from all perspectives.

    //Again the embargo is the reason. US won’t sell its Computers to Cuba just because Cuba has not surrendered to Capitalism. Now that one can get anything from countries other than US and its allies, Cubans can buy them. Same applies to Mobile phones.//
    Again, you go back to “Living In Denial Mode”. If US won’t sell computers, that doesn’t justify the ban on computers and mobile phones. They can very well buy whatever technological products from the People’s Republic of China, Can buy from Russia. And your excuse doesn’t justify the ban on any of these technologies and the internet.
    In my opinion, We are in a better position than Cuba. We have problems, But we atleast can raise the voice against the problems.

    //We blame the driver only, who is the ruling class. This driver is not doing well as it is selfish and greedy and at best indifferent to the problems of common people and at worst kills them in various ways//
    Ok, Agreed, the Driver, driving the democratic vehicle is not good. What is the solution, Change the vehicle and also make it driven by a new untested driver who has no great experience in running the vehicle? What if the new driver also becomes like the old driver and doesn’t come down from the vehicle even if we force him to do so? Now you will have more than a simple problem. The Communist vehicle had not run the long run. It functioned for some time and then totally stopped mid way. That is not the ideal expectation from us, isn’t it Buddy?

    //I have already said You seem to be highly ignorant about the current system. Who gets to contest in elections? Only those who prostrate themselves at the feet of Jaya, Karuna, Sonia, Modi etc without any self-respect. Can any good come out of these MPs/MLAs? Can they be made in any way to enact those laws that you are talking?//

    Ok, Let me be a highly ignorant person. You may be a more knowledgeable person. Fine, perfect. Ok, Can you tell me, to contest in elections, do we need to really prostate at the feet of Jaya, Karuna, Sonia, Modi. So you mean to say that only these 4 parties are allowed even to contest? Then in every election, only candidates from these 4 parties will participate. How lame is it? And regarding the new laws, If there is mass support for a certain law from the mass public, the ruling politicians can never never ignore it. Atleast, for the sake of vote bank politics, politicians cannot ignore the mass public’s outright support to a particular law.

    //I have a question for you. You have said “Plug the loop holes. Our system will be alright”. Could you tell us how?//
    That’s better buddy. Now we can discuss. Let us see what changes we would like to make in the current system. In terms of Farmers welfare, Labours welfare, Students education, etc.

    I am no expert in these issues. I am still learning a lot. But Whatever Came to my mind now, I am giving below:

    1. Candidate Recall Facility – Voter can recall a MLA/MP due to non performance.
    2. Strict Labour Laws – Stricter punishment for companies not complying to the minimum wages and safety norms of the employees.
    3. Common Education for all students with more emphasize on Practical studies and avoid the Memory/Mugging concept.
    4. Upper Age limit for politicians (May be 60). I came to know that a Janata Dal candidate was contesting at the age of 94 and still expected to win. He is seriously hospitalized now and what benefit he can give his voters if he is elected?
    5. Strictly, No criminals into politics.

    Buddy, these are just the initial thoughts. You are far knowledgeable than me. I am sure, You will have lot more new ideas. Let us discuss them one by one. I am interested in these kind of debates then empty debates.

  76. திரு. பகத், திரு.தென்றல்

    அதை படி, இதை படி என்று கட்டுரைகளை கொடுத்தால் மட்டும் போதாது. வரலாற்றை கொஞ்சம் ஆய்வு செய்ய வேண்டும். இன்று உலகில் இருப்பது இரண்டே வகையான நாடுகள் தான். ஒண்டு கம்யுனிசத்தை ஏற்காத நாடு.. இன்னொன்று கம்யுனிச பாதையை கை கழுவிய நாடு.

    சென்ற நூற்றாண்டில் ஒரு சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்யாவையும் காட்டி கம்யுனிச கொள்கைகளினால் தான் இந்த நாடுகள் முன்னேறிய நாடுகளாக மாறின என்று வாய் ஜாலம் செய்தார்கள். ஆனால், ஜப்பானும்.ஜெர்மனியும் இரண்டாம் உலக போரில் சுடுகாடாக மாற்றப்பட்டு மிக குறுகிய காலத்தில் இவர்களை விட வேகமாக வளர்ந்திருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் கம்யுனிசத்தை பின்பற்றவில்லையே.கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவும் இன்று கம்யுனிச சித்தாந்தத்தை ஏற்று கொண்டதினால் சிதறி சின்னாபின்னமாகி விட்டது. இதற்க்கு இவர்களின் விளக்கம் ” எங்கள் சித்தாந்தத்தில் தவறில்லை. அதனை நடைமுறை படுத்திய முறையில் தான் தவறு” என்று கீறல் விழுந்த record மாதிரி கூறி கொண்டே இருக்கிறார்கள். இவர்களின் வாதத்தை பரிசீலிப்போம். ” ஒரு மருந்து கம்பெனி சொல்கிறது. எங்கள் மருந்தின் மீது குற்றமில்லை, அதை கொடுத்த மருத்துவர் சரியாக கொடுக்காததால் நோயாளி இறந்து விட்டார் என்பதை போல. கம்யுனிசம் போலந்தில் தோற்றது, செக்கோஸ்லோவாகியா தோற்றது, பல்கேரியாவில் தோற்றது.ரஷ்யாவில் தோற்றது,யுகோஸ்லாவியாவில் தோற்றது,கிழக்கு ஜெர்மனில் தோற்றது, சீனாவிலும் தோற்று போனது. ஆக, ஒரு மருந்தை இப்படி பல டாக்டர்கள் பல நோயாளிகளுக்கு பல இடங்களில் கொடுத்துள்ளார்கள். அனால்,எல்லா நோயாளிகளும் இறந்துள்ளார்கள். மருத்துவரின் குற்றமா அல்லது மருந்தின் குற்றமா. இந்த லட்சணத்தில் எதன் அடிப்படையில் கம்யுனிச சித்தாந்தம் இந்தியாவில் மட்டும் வெற்றி பெரும் என்று கூறுகிறீர்கள்.

    இதிலிருந்து ஒன்று மட்டுமே தெளிவாக புரிகிறது…

    Communism:The Under Achiever; Capitalism means Vibrant development

    • Well said. They cant blame the culture of the people either. This capitalist Vs communist experiment is done among same culture/linguistic people.

      West Vs East Germany
      South Vs North Korea

      These people are not able to accept the bitter truth.
      They want to live in their dream land where everybody works for others welfare and feeling good about that they worked for society.

      They also view law implementation problem of our country as the failure of capitalism.

      did any communist countries make a car/pen/bike/flight/Gps/internet for consumer usage?
      These communist countries invested only on military equipment and no products to improve common mans life style.

      It was capitalist american products upgraded the women life style with fridge/washing machine/microwave/dishwasher and liberated women form chores not the communist dream of all are equal.

  77. Dear KK and Rebecca Mary,
    //ஆந்திர தேர்தலில் வேட்பாளர்கள் செலவழித்த பணம் 8,000 கோடி// http://www.dinamalar.com/news_detail.asp?id=972889

    If they spent 8,000 crores for a single state to capture the power then could you explain how do you change this system?

    Dear Rebecca Mary,
    //Capitalism means Vibrant development//

    Do you mean Vibrant development for 99% people? Could you give a honest answer?

    • @Nanthan,

      Did I ever mention that giving money to voters or spending extravagantly for elections as right? I am more concerned with the rights of the people under the so called “True Communist” leaderships. I am perfectly fine with any system which works for the upliftment of the poor, uphold the rights of all the people and protect the people.

      I repeat, “I am not against communism”. I am just saying that communism shown in the present form NEEDS IMPROVEMENT. Please consider my viewpoints as constructive criticism and try to avoid the mistakes. We will be fine.

  78. Hi KK,

    I asked a hypothetical question as to whether will you be happy if there is a referendum on whether to have Communism or not and if ‘mass public’ votes YES. You did not care to answer it. I think your answer is NO. Your ‘suspicion’ on Communism is so high that you cannot even answer a hypothetical question. You have written / ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் ஆகிய கருத்துகளுக்கு என் ஆதரவு என்றும் உண்டு/ and similar things. I suspect the honesty in those statements. You suggested that the Communism failed in USSR because ‘mass public’ did not like it. But, you are against Communism even if the ‘mass public’ welcomes it, albeit hypothetically.

    I too was suspicious on Communism for many years. But I never rejected it fully. Slowly, out of so much reflection, I came to the right conclusion. Soon, I will make a comment on the reflections I underwent, for the benefit of you and Vinavu’s readers.

    Now, I just want to clarify you on some odd things, without going into the debate.

    //Are the leaders of communism so dumb to allow wolves to capture their only hold?//

    You don’t understand the expression ‘wolves in sheep’s clothing’. It is difficult to know if they are anti-communists as they act like communists but do all they can to undermine the communist society.

    //You already mentioned that Delhi public will not support AAP Arvind Kejriwal again//

    I said this not for the reason you give.

    //Why did you cut short my full sentence?//

    I always use a bare minimum quote so that it is easy for everyone. Alas! you have not noticed it. I have no need to conveniently ignore the “female” part, as the subject is not about male or female. All I said was getting beaten up and arrested is better than getting killed. You have not noticed this distinction. By now, I am not amazed. If you want to have an example of atrocities against women in India, Vachathi is the one, where the whole tribal village is beaten, all the young women were gang raped, including 16 young unmarried girls. Such atrocities are very common against Tribals and Dalits.

    //Change the vehicle//

    The vehicle is the whole earth including the people and other assets and it cannot be changed.

    //1. Candidate Recall Facility ***5. Strictly, No criminals into politics.//

    I hope you are working towards these. I wish you best of luck.

    • Dear Buddy,

      Let me make it very clear to you. If Communism is able to evolve itself from the current outdated philosophies to a more practical solution and the general public accepts its solutions, I will be more than happy to follow it. Your hypothetical question is answered.

      //You have written / ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் ஆகிய கருத்துகளுக்கு என் ஆதரவு என்றும் உண்டு/ and similar things. I suspect the honesty in those statements. //
      Whether you suspect my honesty or not doesn’t make any difference to my opinions and views. You have interacted with me on several points and subjects and still if you suspect my honesty, there is nothing to say.

      My doubts with communism is not about equal rights to everyone, but the chance of becoming a dictatorship country. I am still not convinced with your explanations.

      //You don’t understand the expression ‘wolves in sheep’s clothing’. It is difficult to know if they are anti-communists as they act like communists but do all they can to undermine the communist society.//
      I expected the communists to be shrewd enough to know the real sheep and the wolves in the sheep clothing. You are talking like the UFO conspiracy theorists who always point to an imaginary alien being for all the happenings in life. Here, You are talking about conspiracies which undermine the communist society, but in reality, it is the people who rejected communism in its current form. If the communists accept the fact that the present form of communism is as flawed as the present form of democracy and move ahead to design a better system, the mass public will keep rejecting communists and communism. Please open your eyes. Be open to criticism. It will only make things better. Just closing our eyes to criticism will not make us any better.
      Remember:
      இடிப்பாரிலா ஏமரா மன்னன், கெடுப்பாரிலானும் கெடுவான்.
      Just because somebody criticizes your philosophy doesn’t mean that person is against your philosophy. Infact, we always wanted a better system, a better solution to the people. But the present form of communism and the present form of election democracy is flawed and needs improvement. I accepted that the present form of democracy needs improvement, while the communists like you still dogmatically hold on to the same view point of yours and say that you are always perfect, always right, all others are wrong. This is what I call as “Living in Denial Mode”

      //I always use a bare minimum quote so that it is easy for everyone. Alas! you have not noticed it. I have no need to conveniently ignore the “female” part, as the subject is not about male or female. All I said was getting beaten up and arrested is better than getting killed. You have not noticed this distinction. By now, I am not amazed. If you want to have an example of atrocities against women in India, Vachathi is the one, where the whole tribal village is beaten, all the young women were gang raped, including 16 young unmarried girls. Such atrocities are very common against Tribals and Dalits.//
      If you maintain the same standards everywhere, that’s fine for me. When it comes to the attrocities done by Non communist governments, would you and your comrades be as mild as you mentioned above related to Cuba? I doubt it. The reason why I have to dig up the attrocities happening in Cuba is because you have mentioned earlier that in the present day scenario, Cuba represents the right form of communism and all the others are pony communisms. If the right form of communism itself has so many problems, attrocities, with no freedom of speech, freedom of expression, freedom to embrace technology, then I am better off with a limping democracy than the communism which ties me down. Atleast I will be limping and paining, but still be able to speak and move and openly criticize the government. Atleast, I am not fully gagged and tied down.

      //The vehicle is the whole earth including the people and other assets and it cannot be changed.//
      At present, there are 2 vehicles available.
      1. The Democratic vehicle
      2. The Communist vehicle.

      Both the vehicles will function good as long as the drivers are sane and drive safely.
      Both the vehicles end up with major accident if the drivers are insane/drunk/extremely angry/emotional people. The world has seen both ends of the same coin.
      The Inference: As long as the driver behaves well and drives the vehicle properly, your travel will be smooth without any hiccups. So, Choosing the right driver is the key.

      //I hope you are working towards these. I wish you best of luck.//
      If you think it is not possible to improve the present situation, you may be right.
      If you think it is possible to improve the present situation, you are still right.
      It all depends on our mind set. You Believe, You succeed. You don’t believe, you stay where you are and degenerate.

      • //Both the vehicles will function good as long as the drivers are sane and drive safely.
        Both the vehicles end up with major accident if the drivers are insane/drunk/extremely angry/emotional people. The world has seen both ends of the same coin.//

        You are wrong.
        In democracy , you can change the driver.
        In communism, you may stuck with the bad driver till his death and another bad driver will be chosen for you.

        And worst case scenario is different.

        In communism death and labour camps
        In democracy sale of national wealth/resources

        • ராமன் கருத்துக்கு உடன்படுகிறேன். தேர்தல் வழி ஜனநாயகம், கம்மியுனிசம், இரண்டுமே அதன் தூய அளவில் மக்கள் நலம் காணும் ஆட்சியாளர் பயன்படுத்தினால் மக்கள் நலமாக இருப்பார்கள். அதே சமயம் குறைபாடுள்ள ஜனநாயகம் என்பது குறைபாடுள்ள கம்மியுநிசத்தை விட மேல் தான்.

    • தோழர் ரெபேக்கா மேரி,

      உங்களது இந்த மறுமொழி மிகவும் மோசடியானது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தொடர்பாக, முதலாளித்துவ தேர்வு தொடர்பாக, சுதந்திர சந்தைப் பொருளாதாரம் தொடர்பாக, மக்கள் எழுச்சி தொடர்பாக நான் வைத்த வாதங்களுக்கு (மறுமொழி 64.2) நீங்கள் பதிலே சொல்லவில்லை.

      ஆக, பதிலளிக்க வேண்டியவர் நீங்கள் தான் யுனிவர்படியல்ல.

      இந்நிலையில் 79ல் தாங்கள் வைத்த பின்னூட்டம் மற்றொருவகை அவதூறுகள். இவற்றிற்கு பதில் அளிப்பது பிரச்சனையல்ல. உங்களது சந்தர்ப்பவாதம் தான் பிரச்சனை. 64.2 க்கு சரி, தவறு, உங்கள் பார்வை என்ன என்பதை முதலில் சொல்லுங்கள்.

      79ஐ தனியாக கவனிப்போம்.

    • Hi Rebecca Mary,

      I had made a comment numbered 64.1 as a reply to your comment 64 on 3rd May. (Then one 5th May, I made another comment numbered 67.). 7 days after my reply to you, you come back and make a comment addressed to Baghat and Thendral. After seeing you back, I reminded you about my replies. But you first want reply to the new comment. Is this how one debates? I am not that desperate for a debate with such a person, even if the person is a woman.

  79. தோழர் ரெபேக்கா, பின்னூட்டம் 79தில் நீங்கள் வைத்த அவதூறுகளுக்கான பார்வை:

    \\சென்ற நூற்றாண்டில் ஒரு சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்யாவையும் காட்டி கம்யுனிச கொள்கைகளினால் தான் இந்த நாடுகள் முன்னேறிய நாடுகளாக மாறின என்று வாய் ஜாலம் செய்தார்கள். ஆனால், ஜப்பானும்.ஜெர்மனியும் இரண்டாம் உலக போரில் சுடுகாடாக மாற்றப்பட்டு மிக குறுகிய காலத்தில் இவர்களை விட வேகமாக வளர்ந்திருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் கம்யுனிசத்தை பின்பற்றவில்லையே.கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவும் இன்று கம்யுனிச சித்தாந்தத்தை ஏற்று கொண்டதினால் சிதறி சின்னாபின்னமாகி விட்டது. இதற்க்கு இவர்களின் விளக்கம் ” எங்கள் சித்தாந்தத்தில் தவறில்லை. அதனை நடைமுறை படுத்திய முறையில் தான் தவறு” என்று கீறல் விழுந்த record மாதிரி கூறி கொண்டே இருக்கிறார்கள். \\

    வாய் ஜாலம் எல்லாம் ஒன்றுமில்லை. அதுதான் உண்மை. நீங்கள் சுட்டிக்காட்டுகிற ஜெர்மனி இன்றளவும் 30சதவீத எரிவாயு எண்ணெய் வளங்களுக்காக ரஷ்யாவைத்தான் நம்பி இருக்கிறது. எரிவாயுவும் எண்ணெய் வளங்களும் ரஷ்யாவில் புதின் காலத்திலோ ஜார் மன்னனின் காலத்திலே கண்டறியப்பட்டவை அல்ல. இவைகள் ஸ்டாலின் காலத்தில் கண்டறியப்பட்டு தொழிற்துறைகள் மேம்படுத்தப்பட்டு இன்றளவும் ஐரோப்பிய நாடுகளை இயங்க வைப்பவை.

    இன்றைக்கு ஐரோப்பிய யூனியனின் பெரும்பாலான நாடுகள் கீரிமியப் பிரச்சனையில் அமெரிக்காவை ஆதரித்து, மெல்லவும் முடியாமால் ரஷ்யாவை எதிர்த்து துப்பவும் முடியாமால் இருக்கும் பொழுது ஜெர்மனிக்கே வெற்றி என்று சொல்வதை ஏஞ்சலா மெர்கல் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்.

    வேண்டுமானால் முதலாளித்துவத்திற்கு கொடிபிடிக்கிற புடின் உங்களது கருத்தை ஆதரிக்கக் கூடும்.
    ஆனால் நீங்கள் ஒன்றை இங்கு தவறவிட்டுவிடக் கூடாது. மெர்கலும் புடினும் இன்றளவும் சாய்ந்து நிற்பது பாட்டாளிகள் உழைத்து பெற்ற வெற்றியையே. கட்டுரையும் இதைச்சார்ந்துதான் நம்மை விவாதிக்க கோருகிறது. ஆக முன்முடிவுகளுடன் அணுகாமால் திறந்த மனதுடன் அணுகுங்கள்.

    \\ஜப்பானைப் பற்றி\\

    நீங்கள் சொல்வதைப் போல ஜப்பான் முதலாளித்துவ நாடுதான். முதலாளித்துவ புரட்சியில் என்னென்ன வெற்றியைப் பெற்றதோ 2008 பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு (வெறும் 16 ஆண்டுகளில்) அனைத்தையும் இழந்து நிற்பதற்கு நீங்கள் ஏதேனும் ஒரு சால்ஜாப்புகளையாவது சொல்ல முன்வர வேண்டும்.

    ஏகாதிபத்தியமும் நிதிமூலதனமும் ஒட்டச் சுரண்டிய நாடுகளில் முதன்மையானது ஜப்பான் தான்.
    இந்திய கனரா வங்கி வைத்திருக்கும் கையிருப்பு நிதி கூட ஜப்பானின் தேசியவங்கிகளிடம் கிடையாது என்பதை எப்படி அணுகுவீர்கள்?

    நீங்கள் சொல்கிற முதலாளித்துவ வெற்றிக்கு ஜப்பானைக் கைகாட்டுவது தா. பாண்டியன் புதினின் ரஷ்யாவைப் பற்றி பேசுவதைப் போன்றது. முதலாளித்துவத்தைப் பற்றி பேச வேண்டுமானால் தா. பாண்டியனையும் தாண்டிச் சிந்திக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்.

    \\ கம்யுனிசம் போலந்தில் தோற்றது, செக்கோஸ்லோவாகியா தோற்றது, பல்கேரியாவில் தோற்றது.ரஷ்யாவில் தோற்றது,யுகோஸ்லாவியாவில் தோற்றது,கிழக்கு ஜெர்மனில் தோற்றது, சீனாவிலும் தோற்று போனது.\\

    இப்பொழுது உங்களது வேலை தோற்றது என்பதற்கும் வென்றது என்பதற்கும் எது அடிப்படை என்று சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் நாம் வாதங்களை வைப்போம்.

    உயிர் வாழ்வது ஒன்றே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்கு அடிப்படை என்றால் முதலாளித்துவம் பெற்றது வெற்றி அல்ல. போட்டியில் கூட பங்குபெற முடியாத அளவிற்கு அழுகிநாறுகிறது.

    ஏனெனில் இந்தியாவை நாம் தரகு முதலாளித்துவம் என்று வரையறுக்கிறோம். நீங்கள் சொல்வதைப் போல முதலாளித்துவம் வளர வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தி பெருக வேண்டும். விவிடி தேங்காயெண்ணெய் வளர வேண்டும். கோககோலாவிற்கு எதிராக காளிமார்க் பவண்டா வளர வேண்டும். அதற்கு இந்திய நடுத்தரவர்க்க துரோகிகளைப் போல் அல்லாமல் லத்தீன் அமெரிக்க மக்களைப் போல வர்க்க உணர்வு பெற்று பெக்டல் போன்ற பன்னாட்டு கம்பெனிகளை அடித்து விரட்ட வேண்டும். இவையனைத்தும் பாட்டாளிகளின் தலைமையில் நடைபெற்றால் தான் முதலாளித்துவம் வெல்ல முடியும் என்று ஒப்புக்காவது சொல்ல முடியும்!

    அதவாது தரகு முதலாளித்துவம் அகற்றப்பட்டு முதலாளித்துவ உற்பத்தி முறை நிறுவுவதற்கே பாட்டாளிகள் தான் தேவை என்கிற பொழுது வெறுங்கழுதைக்கு எதற்காக வேசம் கட்டுகீறிர்கள்?

    மற்றபடி மருந்து மருத்துவர் கதையை அம்பானிக்குச் சொல்லுங்கள். அவர்களுக்குத்தான் தங்களைத் தக்காட்டுவதற்கு பலவகை மருந்துகளும் உங்களைப் போன்ற மருத்துவர்களும் தேவை.

    \\ Communism:The Under Achiever; Capitalism means Vibrant development\\
    இந்த வாதத்தை எங்கு கொண்டு போய் நிறுத்த? பதிலளிப்பதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும். இதற்கு வசதியாக உங்களது மற்றுமொரு வாதத்தை பதிலளிக்காமல் விட்டுவைக்கிறேன்.

    \\\\இன்று உலகில் இருப்பது இரண்டே வகையான நாடுகள் தான். ஒண்டு கம்யுனிசத்தை ஏற்காத நாடு.. இன்னொன்று கம்யுனிச பாதையை கை கழுவிய நாடு.\\

    இந்த பின்னூட்டத்திற்கு நீங்கள் பதிலளிப்பதை பொறுத்து இரண்டுக்கும் சேர்த்து பதில் வைப்போம்.

    ஆனால் நீங்கள் எப்பொழுதும் மனதில் இருத்த வேண்டியது இதைத்தான், முதலாளித்துவம் வளர்வதற்கு முதலாளிகள் பாட்டாளிகளைத் தான் சுரண்டுகிறார்கள் எனில் எதை நோக்கி யார் பக்கம் சிந்திக்கீறிர்கள் என்பதை கறாராக பரிசீலிக்க வேண்டும்.

    மற்றபடி பின்னூட்டம் உங்களுக்கும் எனக்கும் ஒரு கேடல்ல!

    • திரு தென்றல் ,

      நீங்க சொல்லுவது கேட்டு கற்றது அகராதி அளவு கோபம் கொள்ள போறாரு !
      பாத்து பேசுங்க!
      அவருக்கு போர்ட்/ஹுண்டாய் தான் வேண்டுமாம் !

      Note:
      திரு தென்றல் ,
      தரகு முதலாளித்துவத்தையும் ,தேசீய முதலாளித்துவத்தையும் மிக எளிமையாக உதாரணம் மூலம் வேறுபடுத்தி காட்டியமைக்கு மிக்க நன்றி !

      //ஏனெனில் இந்தியாவை நாம் தரகு முதலாளித்துவம் என்று வரையறுக்கிறோம். நீங்கள் சொல்வதைப் போல முதலாளித்துவம் வளர வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தி பெருக வேண்டும். விவிடி தேங்காயெண்ணெய் வளர வேண்டும். கோககோலாவிற்கு எதிராக காளிமார்க் பவண்டா வளர வேண்டும். அதற்கு இந்திய நடுத்தரவர்க்க துரோகிகளைப் போல் அல்லாமல் லத்தீன் அமெரிக்க மக்களைப் போல வர்க்க உணர்வு பெற்று பெக்டல் போன்ற பன்னாட்டு கம்பெனிகளை அடித்து விரட்ட வேண்டும். இவையனைத்தும் பாட்டாளிகளின் தலைமையில் நடைபெற்றால் தான் முதலாளித்துவம் வெல்ல முடியும் என்று ஒப்புக்காவது சொல்ல முடியும்!//

    • திரு தென்றல் ,

      உங்கள் கருத்தை, இந்த ஆண்டு கீரிமியாவுக்கு சென்று ஹிட்லர் பாசிசத்துக்கு எதிராக இரண்டாம் உலக போரில் தோழன் ஸ்டாலின் அவர்களீன் தலைமையீலான செம்படையீன் மாபெரும் வெற்றியை கொண்டாடியதன் மூலம் Vladimir Putin[ President of Russia] ஏற்கும் போது உங்கள் கருத்து மேலும் வலிமை அடைகின்றது !

      // மெர்கலும் புடினும் இன்றளவும் சாய்ந்து நிற்பது பாட்டாளிகள் உழைத்து பெற்ற வெற்றியையே.//

  80. தோழர் ராமன் அவர்களுக்கு, பின்னுட்டம் 79.1 நீங்கள் வைத்த கருத்துக்களுக்கான பார்வை

    \\They cant blame the culture of the people either. This capitalist Vs communist experiment is done among same culture/linguistic people.\\

    எக்ஸ்பிரிமெண்ட் அல்ல ராமன். போராட்டம். அதுவும் நீங்கள் சொல்வதைப் போல ஒரே கலாச்சாரம் மற்றும் மொழி பேசும் மக்களிடையே நடப்பதாக சொல்வது சரியல்ல.

    இது இருக்கப்பட்டவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம். இழந்தவனுக்கும் அபகரித்தவனுக்கும் இடையே நடைபெறும் தவிர்க்கவியலாத போராட்டம்.

    வட கொரியா தென் கொரியா என்று பார்த்தால் தென் கொரியாவிற்குள்ளேயே நடைபெறும் வர்க்கப் போராட்டங்களுக்கு என்ன பதில்? சீன அமெரிக்க மேல்நிலை வல்லரசுகளின் எதேச்சதிகாரத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக போராடுகிற வடகொரியா பாட்டாளிகளுக்கு என்ன பதில்?

    \\ They also view law implementation problem of our country as the failure of capitalism.\\

    சட்டம் தான் பிரச்சனை எனில் அமெரிக்க விவசாயிகளால் ஏன் மான்சாண்டோவின் சுரண்டலை சட்டப் போராட்டத்தால் தடுக்கமுடியவில்லை? இந்தியாவில் தான் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படவில்லையெனில் அமெரிக்காவில் கூட அப்படியா?

    அம்பானிக்கு ஒருசதுர மீட்டர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு மோடியால் கொடுக்க முடிகிறதென்றால் இங்கு சட்டம் யாருக்காக?

    நியமகிரி மலையில் தாதுக்களுக்காக பழங்குடிகள் துரத்தப்படுகிறார்கள் என்றால் அதே சட்டம் யாருக்காக?

    \\ did any communist countries make a car/pen/bike/flight/Gps/internet for consumer usage?\\

    பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த முடியாதவனுக்கு காரும் பைக்கும் ஒரு கேடா? 20வருடங்களாக திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைக்கு நாம் தான் இன்னும் வரி கொடுக்கிறோம். ஆனால் போர்டு பெப்சி கம்பெனிகள் எந்த வரியும் இல்லாமல் சொகுசாக அவர்கள் தான் சாலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

    கல்வியை கடைச்சரக்காகிவிட்டு பேனா கண்டுபிடித்தால் என்ன? இன்னும் நம் குழந்தைகள் கொத்தடிமைகளாக செங்கல் சூலைகளில் தானே இருக்கிறார்கள்.

    முதலாளிகள் கண்டுபிடித்த ஜிபிஎஸ் வெகுவாக மோடிதான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மடிப்பாக்கம் மகேந்திரனுக்கு ஜிபிஎஸ் வைத்து என்ன பண்ண?

    \\ These communist countries invested only on military equipment and no products to improve common mans life style.\\

    இராணுவ தளவாடங்களில் முதலிடூ பற்றி முதலில் இந்தியாவிடமும் முடிந்தால் அமெரிக்காவிடமும் பிறகு இஸ்ரேலிடமும் கேட்டுத்தெரிந்து கொள்வோம். பிறகு முடிவு செய்வோம் இந்த வாதத்தின் அருகதையை.

    \\ It was capitalist american products upgraded the women life style with fridge/washing machine/microwave/dishwasher and liberated women form chores not the communist dream of all are equal.\\

    நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். நம் நாட்டு பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை கூட கொடுக்க முன்வராத ஆணாதிக்க பார்ப்பனீயச் சமூகமும் லாபவெறி ஒன்றையே குறிக்கோளாக கொண்ட முதலாளித்துவத்தால் சீரழிந்த சமூகமும் நம்முடையது.

    விஸ்பரிடத்திலும் கேவின் கேரிலும் காசு கொடுத்து பேடு வாங்கிக்கொள்கிற அளவிற்கு நம் பெண்களுக்கு பணவசதி உண்டா?

    தன் மனைவி மாதவிடாய் காலத்தில் படும் துன்பத்தை காணச் சகியமால் சொந்தமாக நாப்கின் தயாரித்த நம் உள்ளூர் இளைஞர் இந்திய தரகு முதலாளிகளிடத்தில் பட்ட அவமானங்கள் உங்களுக்கு என்னவென்று தெரியுமா?

    தான் தயாரித்த விலை குறைந்த நாப்கின்களை எந்தப் பெண்ணும் சோதனைக்காக கூட அணியவில்லை. சமூகத்தின் ஆணாதிக்கம் அப்படி! ஆட்டு குடலில் இரத்தம் நிரப்பி தன் இடுப்பில் கட்டிகொண்டு தான் தயாரித்த நாப்கின்களை தானே சோதித்து வென்றி கண்டவர். முதலாளிகள் அதை நம் சமூகத்திற்கு கொண்டு சேர்க்க அனுமதித்தார்களா?

    சொந்தமாக தொழில் தொடங்க வங்கிகள் கடன் கொடுக்கவில்லை. விஸ்பரின் தொழிலுக்கே மோசம் என்று நினைத்தது இந்திய அரசாங்கம். ஓவன் என்றும் டிஸ்வாசர் என்றும் வியக்கீறிர்களே? உங்களுக்கு கொஞ்சமாவது நெஞ்சில் ஈரம் உண்டா?

    • //ஒரே கலாச்சாரம் மற்றும் மொழி பேசும் மக்களிடையே நடப்பதாக சொல்வது சரியல்ல.//

      You misunderstood. People from same culture/language were given two roads. The people who followed capitalism prospered and people who followed communism suffered.

      Now what is your excuse for failure of communism?

      //வட கொரியா தென் கொரியா என்று பார்த்தால் தென் கொரியாவிற்குள்ளேயே நடைபெறும் வர்க்கப் போராட்டங்களுக்கு என்ன பதில்?//

      South Korea has created cars,phones,frisde,washing machine,TV
      North korea produces nothing and people starve to death.

      //சீன அமெரிக்க மேல்நிலை வல்லரசுகளின் எதேச்சதிகாரத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக போராடுகிற வடகொரியா பாட்டாளிகளுக்கு என்ன பதில்?//

      Get your facts straight. They are fighting against their Own communist govt. A Govt which spends money for nuclear bomb and let farmers die
      Capitalist america gave them food grains while famine and not China/Russia

      //
      சட்டம் தான் பிரச்சனை எனில் அமெரிக்க விவசாயிகளால் ஏன் மான்சாண்டோவின் சுரண்டலை சட்டப் போராட்டத்தால் தடுக்கமுடியவில்லை? இந்தியாவில் தான் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படவில்லையெனில் அமெரிக்காவில் கூட அப்படியா?//

      Agreed. There are flaws in Capitalism and I am not selling it as complete clear solution

      //பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த முடியாதவனுக்கு காரும் பைக்கும் ஒரு கேடா? //

      It is not in the consumer perspective . I have told in the sense of production.
      And production means jobs. Think of jobs created due to cellphone.
      You cannot justify everything by comparing to food

      //இராணுவ தளவாடங்களில் முதலிடூ பற்றி முதலில் இந்தியாவிடமும் முடிந்தால் அமெரிக்காவிடமும் பிறகு இஸ்ரேலிடமும் கேட்டுத்தெரிந்து கொள்வோம். பிறகு முடிவு செய்வோம் இந்த வாதத்தின் அருகதையை.

      //

      Capitalism not only invested for Military but for common man also

      //நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். நம் நாட்டு பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை கூட கொடுக்க முன்வராத ஆணாதிக்க பார்ப்பனீயச் சமூகமும் லாபவெறி ஒன்றையே குறிக்கோளாக கொண்ட முதலாளித்துவத்தால் சீரழிந்த சமூகமும் நம்முடையது.

      //

      Who created the product first? A capitalist! Why dint this product came out of a communist country?

      //தன் மனைவி மாதவிடாய் காலத்தில் படும் துன்பத்தை காணச் சகியமால் சொந்தமாக நாப்கின் தயாரித்த நம் உள்ளூர் இளைஞர் இந்திய தரகு முதலாளிகளிடத்தில் பட்ட அவமானங்கள் உங்களுக்கு என்னவென்று தெரியுமா?

      //

      I have seen his TED talk. by the way Capitalist society allowed him to do what he wanted to do. Not forced like Communist society

      //சொந்தமாக தொழில் தொடங்க வங்கிகள் கடன் கொடுக்கவில்லை//

      A Bank works on profit motive not on philanthropic motive. If he had shown collateral, he would have received a loan. A Bank manager cannot understand the potential of every product.

      How many loans are given in communist society to produce such projects. Any example from golden(!) Lenin/stalin/mao period. Also please list the products, i am very eager to know…

      Come out of the dreams, Get real

  81. அன்பு நண்பர் திரு. தென்றல்…

    //தோழர் ரெபேக்கா மேரி//

    நான் கம்யுனிச ideology ஏற்காதவள் என்று தெரிந்தும் என்னை தோழர் என்று கூறிய உங்கள் அன்பிற்கு நன்றி.

    //உங்களது இந்த மறுமொழி மிகவும் மோசடியானது.//

    ஹ்ம்ம்..அப்புறம்.. நீங்கள் கூறுவதற்கு மாற்று கருத்து வைத்தால் உடனே அதற்க்கு பெயர் மோசடியா. இது எந்த வகையான மார்க்சியம். கம்யுனிச கொள்கைக்கு எதிராக மாற்று கருத்து வைப்பவர்களை மோசடியாளர்கள் என்று கூறி வாயை அடைக்கச் சொல்லி உங்கள் மார்க்ஸ் கற்று கொடுத்தாரா..

    கோபப்பட்டு என்னிடம் கத்துவதால் ஒன்றும் பயன் இல்லை. மோசடியாக பேசுவது நான் அல்ல இன்னும் நீங்கள் தான். ரஷ்ய, பல்கேரிய, போலந்து, யுகோஸ்லாவிய, செக்கோஸ்லாவிய போன்ற நாடுகள் முதலில் கம்யுனிச கொள்கையை ஏற்று கொண்டு பிறகு இது கவைக்கு உதவாது என்று கைகழுவவில்லையா. கேட்டால் நடைமுறை படுத்திய விதத்தில் தான் தவறு என்று இன்னும் தேய்ந்த ரெகார்ட் போல சொல்லி கொண்டே இருக்கிறீர்கள். பொதுவாக “Brain Wash” க்கு ஆளானவர்கள் தான் இப்படி சொன்னதயே திரும்ப திரும்ப கூறுவார்கள். நீங்கள் எப்படி? அது என்ன கம்யுனிச கொள்கை அமல்படுத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் அது தவறாக நடைமுறைபடுத்த பட்டதா.

    சரி, அது என்ன தவறான முறையில் நடைமுறை படுத்தப்பட்டது, சரியாக நடைமுறை படுத்துவது என்றால் எப்படி என்று விளக்குங்களேன். உலகில் பல நாடுகளில் தோற்று போன(உங்கள் பாணியில் கூறுவதானால் சரியாக நடைமுறை படுத்தாத) ஒன்றை இந்தியாவில் வெற்றிகரமாக அமல் படுத்த தங்களின் யோசனை என்ன கொஞ்சம் விளக்குங்களேன்.

    //நீங்கள் சொல்வதைப் போல ஜப்பான் முதலாளித்துவ நாடுதான். முதலாளித்துவ புரட்சியில் என்னென்ன வெற்றியைப் பெற்றதோ 2008 பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு (வெறும் 16 ஆண்டுகளில்) அனைத்தையும் இழந்து நிற்பதற்கு நீங்கள் ஏதேனும் ஒரு சால்ஜாப்புகளையாவது சொல்ல முன்வர வேண்டும்.//

    இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்த 2008 பொருளாதார தேக்க நிலையை கூறி கொண்டே இருப்பீர்கள். சரி நீங்கள் கூறுவது போல் 2008இல் Economic Crisis ஏற்பட்டது அதற்காக ஜப்பான் மக்கள் யாரும் கார்ல்மார்க்சின் படத்தையும் கம்யுனிச கொடியையும் ஏந்தி கொண்டு முதாளித்துவத்திற்கு எதிராக கோஷம் போட்டு கொண்டு வீதியில் பேரணி நடத்தவில்லையே. ஜப்பானியர்கள் புத்திசாலிகள் அவர்களின் தேச பிரச்னையை எப்படி தீர்த்து கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். பொருளாதாரத்தில் ஏற்ற நிலை என ஒன்று இருந்தால் இறங்கு நிலை என்பது இருக்க தான் செய்யும். இறங்கு நிலை மீண்டும் ஏற்ற நிலையாக மாறும் இது இயல்பான ஒன்று. ஆனால், அதற்காக கம்யுனிசத்தை வியந்தோத வேண்டிய அவசியம் இல்லை.

    //நீங்கள் சொல்கிற முதலாளித்துவ வெற்றிக்கு ஜப்பானைக் கைகாட்டுவது தா. பாண்டியன் புதினின் ரஷ்யாவைப் பற்றி பேசுவதைப் போன்றது. முதலாளித்துவத்தைப் பற்றி பேச வேண்டுமானால் தா. பாண்டியனையும் தாண்டிச் சிந்திக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்.//

    இரண்டாம் உலக போரில் Nuclear Weapon தாக்குதலுக்கு உள்ளாகி ஜப்பான் பேரழிவிற்கு ஆளானது உண்மைதானே. அந்த Nuclear disaster க்கு பிறகு ஜப்பான் குறுகிய காலத்தில் பொருளாதரத்தில் முன்னேறிய நாடாக மாறி இப்போது G7 நாடுகளில் அங்கம் வகிக்கும் அளவிற்கும் தன் பொருளாதார பலத்தை உயர்த்தி கொண்டது எப்படி மார்கிச்ய பாதையிலா. இன்று Electronics and Automobile துறையில் தன் நிகரற்ற நாடாக இருப்பது எதனால். மார்க்சிய போதனையாலா? இதில் நான் என்ன மோசடியாக கூறி விட்டேன் என்று விளக்கவும்.

    //இந்த பின்னூட்டத்திற்கு நீங்கள் பதிலளிப்பதை பொறுத்து இரண்டுக்கும் சேர்த்து பதில் வைப்போம்.//

    நீங்கள் 1008 நூல்களை கரைத்து குடித்து விட்டு. இணையத்தில் இருக்கும் அனைத்து Blogகளையும் படித்து விட்டு,நீங்கள் படித்ததை எல்லாம் என்னிடம் வந்து வாந்தி எடுத்து இதற்கெல்லாம் பதில் சொல் என்று கூறினால் நான் பொறுப்பல்ல. ஒரே ஒரு Logic ஆன கேள்வி, தற்காலத்தில், உலகில் வெற்றிகரமான ஒரே ஒரு சோசலிச நாட்டை எனக்கு காட்டுங்கள்? ஒரு வெற்றிகரமான சோசலிச பொருளாதார கட்டமைப்பை கூறுங்கள் பார்க்கலாம்.(உங்களுக்கு சிந்திக்கும் திறன் கொஞ்சமாவது இருந்தால் செத்துப் போன சோவியத்தை கூற மாட்டீர்கள் என்று நினைக்கிறன்). கம்யுனிச நாட்டில் இருந்து ஒரு ஒப்பற்ற சிறந்த விஞ்ஞான கண்டுபிடிப்பு என்று எதாவது ஒன்று இருந்தால் கூறுங்கள். ஒரு சின்ன குண்டூசி. இப்போது நீங்கள் பயன்படுத்தும் கணினியும்,இணையமும் எந்த தேசத்தின் கண்டுபிடிப்பு. ஆகவே, கோபம் கொள்ளாமல் நேரடியான பதில்களை அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

  82. // கம்யுனிச நாட்டில் இருந்து ஒரு ஒப்பற்ற சிறந்த விஞ்ஞான கண்டுபிடிப்பு என்று எதாவது ஒன்று இருந்தால் கூறுங்கள். ஒரு சின்ன குண்டூசி.//

    கணிதத்துறையின் உச்சபட்ச பரிசான Fields medal 1990 க்கு முன்பு மூன்று சோவியத் அறிஞர்கள் பெற்றனர் (இதற்கு முன் இப்பரிசு பெற்ற மொத்த அறிஞர்களின் எண்ணிக்கை 34). அதன் பிறகும் Poincare conjecture க்கு விடை கண்ட Gregory Perelman உட்பட பல ரஷ்ய அறிஞர்கள் இப்பரிசு பெற்றனர். கணிதத் துறையில் சோவியத் யூனியனின் பங்களிப்பு ஒரு போதும் நிராகரிக்க முடியாதது.

    கூடவே இரண்டு விஷயங்கள் சொல்ல வேண்டும். 1970 பரிசு பெற்ற Novikov, 1978 பரிசு பெற்ற Margulis இருவரையும் பரிசளிப்பு விழா நடைபெற்ற வெளிநாடு சென்று பரிசு பெற சோவியத் அரசு அனுமதிக்கவில்லை. 1990 க்கு பிறகு பரிசு பெற்ற ரஷ்ய அறிஞர்கள் பலரும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர்!

  83. //ஏனெனில் இந்தியாவை நாம் தரகு முதலாளித்துவம் என்று வரையறுக்கிறோம். நீங்கள் சொல்வதைப் போல முதலாளித்துவம் வளர வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தி பெருக வேண்டும். விவிடி தேங்காயெண்ணெய் வளர வேண்டும். கோககோலாவிற்கு எதிராக காளிமார்க் பவண்டா வளர வேண்டும். அதற்கு இந்திய நடுத்தரவர்க்க துரோகிகளைப் போல் அல்லாமல் லத்தீன் அமெரிக்க மக்களைப் போல வர்க்க உணர்வு பெற்று பெக்டல் போன்ற பன்னாட்டு கம்பெனிகளை அடித்து விரட்ட வேண்டும். இவையனைத்தும் பாட்டாளிகளின் தலைமையில் நடைபெற்றால் தான் முதலாளித்துவம் வெல்ல முடியும் என்று ஒப்புக்காவது சொல்ல முடியும்!/

    ஹ்ம்ம்.. இது நியாயமான வாதம். உங்களின் இந்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன். இங்கு இருக்கும் உள்நாட்டு முதலாளிகளையும், இந்நாட்டின் விஞ்ஞானிகளையும் ஊக்க படுத்தி அவர்களின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதை சரியான சந்தைபடுத்துதல் மூலம் இந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த வேண்டும். இந்தியாவில் தயாரிக்க படும் பொருட்கள் சர்வதேச மதிப்பு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.. இதற்க்கு தடையாக இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயம் முறியடிக்க வேண்டும்.

  84. Hi Buddy ……..

    //I am not that desperate for a debate with such a person, even if the person is a woman.//

    Ok. Buddy feel sorry for what i did.. To debate with me or not its up to your wish. you have to decide. Hmm.. anyhow missing Your debates so much 🙁 Bye Bye

  85. தேர்தல் என்பது சமூகத்திற்கு நல்வழி சொல்பவரை தேர்ந்தெடுப்பது என்பது தான்.இதற்கு வேறுவிதமான அர்த்தங்கள் யாரும் கொடுப்பார்களாலானால்..இந்த சமூகம் எந்த காலகட்டத்தை தாண்டிக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி எந்தவித சுயசிந்தனையோ உணர்வோ இல்லாதவர்களே!.

    ஒருநல்லமனிதரை அதாவது சமூகத்தில் அக்கறை கொண்டவரோ அல்லது அவரது பழக்கவழக்கத்தையோ வைத்து பொதுமை படுத்தி அவரை முதல்வர் ஆக்குவது எப்படி?

    திறமையாக குறிபார்த்து சுடுகிறவனையும் குறிப்பிட்ட ஒழுக்க முறைக்கு கட்டுப்பட்டவனையும் தலைவானக ஆக்கிவிட முடியுமா? ( அது கிழிஞ்ச தமிழீழம் ஆகவே முடியும்)

    ஆகவே தோழர்களே யாரும் தேர்தலை நிராகரிகாதீர்கள்.அது மனித வராலாற்றின் முற்போக்கான ஒரு அம்சம்.

    எமது வாக்கு யாருக்காக இடப்படுகிறது என்பதை புரியவைப்பது தான் ஒரு முற்போக்குதனத்தை கொண்டிருக்கும்.

    இதுவே கம்யூனிஸ கொள்கை. இதற்கு கால்மாக்ஸை துணைக்கு அழைக்க வேண்டிய தேவையிருக்காது என நம்புகிறேன்.

    ஒரு உழைப்பாளி தனக்கு என்று சொல்வதற்கு ஒரு கோடாலியோ ஒரு பேனாவோ அல்லது பூசைசெய்வதற்கு சொந்தம் என்று சொல்ல ஒரு செம்பு இல்லையே என்பவனுக்கு வாக்குசீட்டு ஒரு மகத்தான ஆயுதம்.

    இதுவே மாக்ஸியம் சொன்ன இயங்கியல்.

    • உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன் மாவோ அவர்களே.
      ஆனால் இங்கு சில நண்பர்கள் என் கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர்.

      • எனக்கும் ஒரு வாக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.வாக்களித்ததுக்காக நன்றி க.கை.

        நானும் எத்தனையோ விஷயங்களை தவறாகத் தான் புரிந்து வைத்திருக்கிறேன். அதற்காக சும்மா இருந்திட முடியுமா?

        சந்தைக்கு விடுவோம்.விலையை கணிப்பீடு செய்வோம்.

        • தோழர்கள் எம்ஏஒ மற்றும் கற்றது கையளவு,

          உங்கள் பின்னூட்டங்களை தொடர்ச்சியாக கவனிக்க முடியவில்லை. ஆனால் உங்கள் கொள்கையும் கூட்டணியும் டரியலாக்கப்பட வேண்டும்.

          ஓட்டும் தேர்தலும் உழைப்பாளிகளுக்கு ஆயுதம் அல்ல. அது எப்பொழுது ஆயுதமாக இருக்குமென்றால், அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது; அதிகாரிகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். கட்டுரை அரசும் ஆளும் வர்க்கமும் வேறு வேறாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

          மக்கள் குழுக்கள், அதிகாரிகளையும் தேர்ந்தெடுத்தால் தான் நாட்டில் மறுகாலனியாதிக்கத்திற்கு சாதகமாகிற சட்டங்களை துடைத்து எறிய முடியும்.

          விவசாயிகள் தாங்கள் விளைவிக்கிற நெல்லுக்கும் கரும்பிற்கும் தாங்களே விலை நிர்ணயிக்கமுடியும்.

          மின்சார ஒழுங்கு முறை ஆணையங்களை போன்றவற்றை களைத்துவிடவும் முடியும்.

          காடு கனிமம், நீர் போன்ற வளங்களை விற்பதற்கு ஆணையிடும் உச்ச உயர் நீதிமன்ற நீதிபதிகளை நாமே தேர்ந்தெடுக்க முடியும்.

          ஆரம்பக் கல்வியிலும் உயர்கல்வியிலும் பத்மா சேசாத்ரியையும் சாராய வியாபாரி ஜெகத் ரட்சகனையும் தூக்கியெறிய முடியும்.

          இவ்வாறான ஒரு தேர்தலும் ஓட்டுப்போடுகிற அதிகாரமும் தான் நமக்குத் தேவை. என்ன சொல்கீறிர்கள்? சும்மா ஓட்டு ஆயுதம் என்று சொல்லக்கூடாது. எனவே உங்களது இருவரது ஓட்டுகளும் செல்லாதவை என்று அறுதியிடுகிறேன்.

          • நீங்கள் சொல்வதெல்லாம் எந்த கம்மியுனிச நாட்டில் நடைபெறுகிறது இப்போது?

  86. தோழர் ராமன்,
    மறுமொழி 85.1இல் தாங்கள் வைத்த வாதங்களுக்கான பார்வைகளும் பதில்களும்

    \\You misunderstood. People from same culture/language were given two roads. The people who followed capitalism prospered and people who followed communism suffered.
    Now what is your excuse for failure of communism?\\
    \\South Korea has created cars,phones,frisde,washing machine,TV
    North korea produces nothing and people starve to death.\\

    இது தவறான வாதம். வளமாக வாழ்கிறார்கள் என்பதற்கு அடிப்படையாக டிவி பிரிட்ஜ், வாசிங்க் மெசின் என்று இன்னும் சொல்லிக்கொண்டிருக்கீறிர்கள். அப்படி பார்த்தால் இந்தியாவில் தான் இந்தப் பொருட்களுக்கான சந்தை உலகிலேயே அதிகம். இந்தியர்கள் வளமாக வாழ்கிறார்களா? மாண்டேசிங் அலுவாலியா 22ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவன் எல்லாம் ஏழையல்ல என்று சொல்வதை விட உங்கள் வாதம் குரூரமானது.

    ஒட்டச் சுரண்டப்படுகிற பாட்டாளிகள் வர்க்கம் தென்கொரியாவில் அதிகம் இருப்பதால் தான் சிலிக்கான் சந்தைக்கான பன்னாட்டு கம்பெனிகள் தென் கொரியாவை வட்டமிடுகின்றன. சாம்சங் போன்ற தரகு முதலாளிகள் நீங்கள் சுட்டிக்காட்டுகிற தென்கொரியாவிற்கு என்ன செய்திருக்கின்றன? தென் கொரியாவும் ஸ்ரீபெரும் புதூரும் வேறு வேறல்ல.

    அதே சமயம். வடகொரியாவிற்கும் வாள் பிடிப்பதல்ல நமது நோக்கம். பாட்டாளிகளுக்கான அதிகாரம் என்பது இன்றைய நிலையில் வடகொரியாவிலும் கிடையாது.
    தென்கொரியா அமெரிக்காவின் கீழ். வடகொரியா சீனாவின் கீழ். இரண்டு மேல்நிலை வல்லரசுகளின் ஆதிக்கத்தின் கீழ்தான் இரண்டு நாட்டு பாட்டாளிகளும் கசக்கிப் பிழியப்படுகிறார்கள்.

    நிலைமை இப்படி இருக்க வடகொரியா கம்யுனிச நாடு; தென் கொரியா முதலாளித்துவ நாடு என்ற பார்வையில் விவாதிப்பது எந்தப் பலனையும் தராது என்பதை முன் கூட்டியே சொல்லிவிட விரும்புகிறேன். ஏனெனில் இந்த இரு உற்பத்தி முறைகளும் அங்கு இல்லை. அங்கு நடப்பது இங்கு இந்தியாவில் நடப்பதைப் போல ஏகாதிபத்தியத்திற்கான நாய்ச் சண்டை.

    தராளமயம், தனியார்மயம், மறுகாலனியாதிக்கம் இம்மூன்றும் தான் இன்றைய உலகப் பாட்டாளிகளைப் பீடித்திருக்கிற அரசியல் சூழல். எங்கு சுற்றி எப்படி வந்தாலும் இதிலிருந்து விடுபடாமல் உற்பத்தி முறையைப் பற்றியோ வாழ்க்கை பற்றியோ பேச இயலாது.

    \\Get your facts straight. They are fighting against their Own communist govt. A Govt which spends money for nuclear bomb and let farmers die
    Capitalist america gave them food grains while famine and not China/Russia\\

    கொரிய நிலைமைகளுக்கு மேலே உள்ள பதிலைப் படிக்கவும். அதுபோக நியுக்ளியர் பாமிற்கு செலவு செய்த தொகை விவசாயிகள் இறந்ததற்கு ஆதாரம் இந்தியாவில் கண்கூடு. இது குறித்த உங்கள் பார்வை என்ன?

    அமெரிக்கா தானியங்களைத் தரவில்லை. கோதுமைகளை கடலில் கொட்டித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். சொந்த நாட்டு மக்களையே காப்பாற்ற துப்பில்லாதவன் கொரியாவிற்கு உதவி என்று போகிறான் என்றால் அவை ஏகாதிபத்ய நலன்களுக்கானவை.

    அமெரிக்கா-பிலிப்பைன்ஸ், அமெரிக்கா-இந்தோனசியா, அமெரிக்கா-ஜப்பான், அமெரிக்கா-கொரியா, அமெரிக்கா-இந்தியா, அமெரிக்கா-பாகிஸ்தான், அமெரிக்கா-இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் நிலைமைகளை உன்னிப்பாக கவனியுங்கள். அமெரிக்கா என்பதிற்கு பதிலாக ரஷ்யா, சீனா என்று அந்த இடத்தை நிரப்பினாலும் ஏகாதிபத்யம் ஒன்றே எஞ்சியிருக்கும். அங்கு ஜனநாயகம் கிடையாது.

    ஆக இங்கு இருக்கிற புரட்சிகர அமைப்புகள் தேர்தலைப் புறக்கணித்து புதிய ஜனநாயக புரட்சியை கட்டமைப்போம் என்று சொல்வதில் மிகவும் தெளிவான கறாரான அரசியல் பார்வை உண்டு. உங்களது விமர்சனக் கணைகளை இதன் மீது தொடுங்கள். நமது வாசகர்கள் பெரிதும் பயன்பெறுவர்.

    \\It is not in the consumer perspective . I have told in the sense of production.
    And production means jobs. Think of jobs created due to cellphone.
    You cannot justify everything by comparing to food \\

    பிறகு ஏன் நோக்கியா கேள்வி கேட்பார் இல்லாமால் சுமார் 25000 தொழிலாளர்களைத் தூக்கி வீசுகிறது? இவர்களை வாழ அருகதையற்றவர்களாக கருதியது எந்த உற்பத்தி முறை?
    உங்கள் வாதத்தை பேச்சுக்கு ஒப்புக் கொண்டாலும் உழைப்பை விற்று வாழ்கிற வேலை எதற்கு ராமன்? உழைப்பை விற்று வாழ்வது தான் மனித வாழ்க்கை என்றால் நாம் ஏன் மனிதர்களாக இருக்க வேண்டும்?

    தான் உற்பத்தி செய்கிற பொருளை ஒரு தொழிலாளியால் ஏன் சொந்தம் கொண்டாடமுடியவில்லை? சிலபேர் உட்கார்ந்து திங்க பல பேர் ஏன் கசக்கி பிழியப்பட வேண்டும்?

    \\Capitalism not only invested for Military but for common man also\\

    ஒரு ஆண் தொழிலாளிக்கு வீசியெறியப்படும் ரொட்டித் துண்டுகளை இரண்டாக பிய்த்து இரண்டு பெண் தொழிலாளிகளிடம் வேலை வாங்க முடியுமென்றால் முதலாளித்துவம் மனிதர்களிடமும் முதலீடு செய்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.

    கருப்பைப் புற்று நோயைச் சோதிக்க இந்தியப் பெண்களை முதலாளிகள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் இந்திய மனிதர்களில் முதலீடு செய்த முதலாளிகள் ஒன்றும் மோசமில்லை தான்!

    \\Who created the product first? A capitalist! Why dint this product came out of a communist country?\\

    உற்பத்தி செய்தவன் முதலாளி அல்ல. உற்பத்தி செய்பவன் தொழிலாளி. விற்பவன் வேறு. தயாரித்தவன் வேறு. விஸ்பர் எத்துணை பேரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது? உதிரும் உதிரத்தை வைத்துக் கூட காசு பார்க்க முடிகிற கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் உங்களது வர்க்கச் சிந்தனைதான் வியக்க வைக்கிறது இராமன்!

    ஏன் கம்யுனிச நாடுகளல் இது கண்டுபிடிக்கவில்லை என்பது உங்களது அறியாமை. வீடுகளில் கைகளால் தயாரிக்கப்படும் நாப்கின் மிசின்கள் சோசலிச நாடுகளில் 70களிலேயே பிரபலம். கூகுளைத் தட்டிவிட்டு கேவின் கேரின் சந்தை இந்த நாடுகளில் எப்படி இருக்கிறது என்று ஒரு முறை பார்க்கவும்.

    \\I have seen his TED talk. by the way Capitalist society allowed him to do what he wanted to do. Not forced like Communist society\\

    அந்த இளைஞரை செயல்பட வைப்பதற்கு பத்து நிமிடங்கள் போதும். நமது அனைத்து இந்தியப் பெண்களுக்கு இதைச் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு ஒருவாரம் கூட தேவைப்படாது! ஆனால் இங்கு பிரச்சனை முதலாளித்துவ இலாபவெறி. மிகவும் மலிவான விலையில் கிடைப்பதை திட்டமிட்டு தடுக்கிறார்கள். விஸ்பர் இந்தியாவில் இருப்பதற்கு காரணம் உங்களைப் போன்றவர்களின் இது போன்ற சந்தர்ப்பவாதப் பேச்சுக்கள். அரசு இதை ஏற்று நடத்தினால் எத்துணை கோடி செலவாகும் என்று நினைக்கீறிர்கள்? உண்மையைச் சொல்லுங்கள் இதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க எது தடையாக இருக்கிறது? யார் தடையாக இருக்கிறார்கள்?

    \\A Bank works on profit motive not on philanthropic motive. If he had shown collateral, he would have received a loan. A Bank manager cannot understand the potential of every product.

    நீங்கள் சொல்வது போல் ஒரு தயாரிப்பின் மதிப்புதான் கடன் தருவதை நிர்ணயிக்கிறதா? வங்கிகளுக்கு ப்ராவிட் மோடிவ் என்றால் மல்லையாவின் கடனை மட்டும் ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்? வாராக் கடன்கள் எத்துணை கோடி என்று உங்களுக்குத் தெரியும் இல்லையா? கல்விக்கடன் கட்ட முடியாதவர்களை புகைப்படம் போட்டு அவமானப்படுத்தும் வங்கிகள் பல்லாயிரக்கணக்கான கோடியில் கார்ப்பரேட்டுகளின் கடனை மட்டும் கண்டும் காணாதுபோல் இருக்கும் பொழுது உங்களது வாதத்தில் என்ன நியாயம் இருக்கிறது?

    How many loans are given in communist society to produce such projects. Any example from golden(!) Lenin/stalin/mao period. Also please list the products, i am very eager to know…

    ஸ்டெப்பி புல்வெளிகள் கோதுமை வயல்களாக மாறியது கூட்டுப் பண்ணைகளால் தான். டிராக்டர், உழுகருவிகள், பரந்த அளவிலான விவசாயம், பால் பொருட்கள் உற்பத்தி கூட்டுப் பண்ணைகளாலும் கம்யுன்களால் தான் சாத்தியமாயிற்று. இவற்றிற்கு வழங்கப்பட்ட லோன்களை கூட்டுப் பண்ணைகள் வெகுவிரைவில் நாட்டுடமையாக்கியது.

    ஆனால் இந்தியாவில்?. கொத்துக் கொத்தாய் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்தியாவில் கடன்கள் கார்ப்பரேட்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டன. சாய்நாத் சுட்டிக்காட்டுகிற விவசாயக் கடனால் தற்கொலை எந்த சோசலிச நாட்டிலும் நடைபெறவில்லை.

    இந்தியாவின் தங்க நாற்கர சாலைகள் உலகவங்கி கடனாகக் கொடுத்தது. ஆனால் அதை முதலாளிகள் அடைக்கவில்லை. நம்மைப் போன்ற சாதாரண மக்களிடம் டோல்வரி புடுங்கித்தான் தின்று கொழிக்கிறார்கள். ஆனால் ரஷ்ய சீன தேசிய நெடுஞ்சாலை, முழுக்க முழுக்க பாட்டாளிகள் பெற்றெடுத்தது.

    லெனின் கரோகி நீர் பாசனத்திட்டம் அவ்வகைப்பட்டதே.

    இன்று நாம் பார்க்கிற சூப்பர் மார்க்கெட்டை சோசலிச சமூகம் தான் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஸ்டாலின் காலத்திய கம்யுன்களால் இது சாத்தியமாயிற்று.

    இன்றளவும் சீனக் கிராமங்கள் விவசாய கூட்டுறவில் கிடைக்கும் ஊதியத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். இது மாவோ காலத்திய பாட்டாளிகள் பெற்றெடுத்த வெற்றியாகும்.

    Come out of the dreams, Get real\\
    இதைத் தான் கட்டுரையும் உங்களிடம் கோருகிறது.

    • /இது தவறான வாதம். வளமாக வாழ்கிறார்கள் என்பதற்கு அடிப்படையாக டிவி பிரிட்ஜ், வாசிங்க் மெசின் என்று இன்னும் சொல்லிக்கொண்டிருக்கீறிர்கள். //

      உங்களுக்கு புரிய வில்லை . சவுத் கொரியா மேற்கண்ட பொருட்களை தயாரிக்கிறது , சந்தை படுத்துகின்றது. குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு , தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றது.
      ஒரு பொருள் உற்பத்தி சந்தபத்டுததிலில் பல பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைகின்றன.

      நார்த் கொரியாவில் மக்கள் அடிமையாக மிருகத்தை போன்ற ஒரு கேவலாமான வாழ்க்கையை வாழ்கின்றனர்

      முதலீட்டு தத்துவம் , சவுத் கொரியாவை வளமான நாடாக மாற்றி உள்ளது .
      பொருள் உற்பத்தியால் தொழில் வளம்
      ஏற்றுமதியால் பண மதிப்பு என வளம் அடைந்து உள்ளது

      //வடகொரியா சீனாவின் கீழ்.//
      வடகொரியா சீனாவின் கீழ் அல்ல , கம்ம்யூநிசம் கொடுத்த வறுமையினால் , சீனாவை அண்டி பிளைகிறது

      //நிலைமை இப்படி இருக்க வடகொரியா கம்யுனிச நாடு; தென் கொரியா முதலாளித்துவ நாடு என்ற பார்வையில் விவாதிப்பது எந்தப் பலனையும் தராது//

      மன்னிக்கவும் உள்ளங்கை நெல்லிக்கனி போல இருந்தாலும் உங்களுக்கு புரிவது இல்லை.

      //அமெரிக்கா தானியங்களைத் தரவில்லை. கோதுமைகளை கடலில் கொட்டித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்//
      http://en.wikipedia.org/wiki/North_Korea%E2%80%93United_States_relations

      //ஆக இங்கு இருக்கிற புரட்சிகர அமைப்புகள் தேர்தலைப் புறக்கணித்து புதிய ஜனநாயக புரட்சியை கட்டமைப்போம் என்று சொல்வதில் மிகவும் தெளிவான கறாரான அரசியல் பார்வை உண்டு//

      ஜனநாயக புரட்சிக்கு பெயர் தான் தேர்தல் .

      //மெரிக்கா-இந்தோனசியா, அமெரிக்கா-ஜப்பான், அமெரிக்கா-கொரியா//

      அமேரிக்கா ஜப்பானுக்கும் ,தென் கொரியாவுக்கும் தொழில் நுட்ப உதவிகள் வழங்கவில்லை . ராணுவ உதவி மட்டுமே செய்கிறது . இந்த இரு நாடுகளும் பொருள் உற்பத்தியால் பொருளாதார வளர்ச்சி கண்டவை .

      பிற நாடுகள் தொழில் நுட்ப அறிவியலில் பின்தங்கியவை . அமெரிக்காவின் மூளையை அண்டி இருக்கும் நாடுகள்

      //பிறகு ஏன் நோக்கியா கேள்வி கேட்பார் இல்லாமால் சுமார் 25000 தொழிலாளர்களைத் தூக்கி வீசுகிறது? இவர்களை வாழ அருகதையற்றவர்களாக கருதியது எந்த உற்பத்தி முறை//

      முட்லஈட்டு தத்துவம் கொடுத்த செல்போன் , பல பேருக்கு வேலை கொடுக்கிறது . இட்லி சுடும் சமுதாயத்திற்கு செல்போன் விற்பது ,கார்டு சார்ஜ் செய்வது என்று பல பொட்டி கடைகள் வைத்து பல பேர் வேலை செய்து பயன் பெறுகிறார்கள் .

      நோக்கியா கம்பெனி தொழினுட்பத்தை ஆப்பிள் தொழில்நுட்பம் வென்றதால் , நோக்கியா திவால் நிலைக்கு சென்று கொண்டு இருந்தது . அதனால் அது மூட வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டது .

      ஊரில் யாரும் தக்காளி சாப்பிட மாட்டார்கள் என்றால் நீங்கள் தக்காளி பயிரிடுவீர்களா ?
      உங்கள் ஊரிலே நீங்களே தொழினுட்பத்தை கண்டுபிடித்து வேலை செஇய்ங்கலெ ?

      //உங்கள் வாதத்தை பேச்சுக்கு ஒப்புக் கொண்டாலும் உழைப்பை விற்று வாழ்கிற வேலை எதற்கு ராமன்? //

      சாயம் வெளுதுபோச்சு சார் . உன்காதுட்டே இலவசமா எல்லாம் வரணும்னு நினிகிறீங்க . கம்ம்யோனிச நாட்டிலையும் நீங்கள் உளைகொனும் . உங்களுடைய சமுதாய பங்களிப்பை செய்தாகணும் .

      //தான் உற்பத்தி செய்கிற பொருளை ஒரு தொழிலாளியால் ஏன் சொந்தம் கொண்டாடமுடியவில்லை? //

      அவரே அவுருடைய வீட்டில் உற்பத்தி செய்தால் யார் சொந்தம் கொண்டாடுவார்கள் ?

      //\\Capitalism not only invested for Military but for common man also\\//
      நான் சொல்ல வந்தது , தொழில் நுட்பத்தை முதலீட்டு தத்துவ நாடுகள் பொதுமக்களை சென்றடையும் வண்ணம் செய்துகாட்டி உள்ளன .

      நீங்கள் பயன்படுத்தும் இணையம் , ஜி பி எஸ் போன்றவை அதற்கு சான்று .

      //கருப்பைப் புற்று நோயைச் சோதிக்க இந்தியப் பெண்களை முதலாளிகள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் இந்திய மனிதர்களில் முதலீடு செய்த முதலாளிகள் ஒன்றும் மோசமில்லை தான்!
      //

      உங்கள் வீட்டிற்கு பூட்டு போடாமல் இருந்து ஒருவன் திருடி சென்றால் , யார் மீது குற்றம் ?
      அதே நிறுவனங்கள் முதலீட்டு தத்துவ நாடான அமெரிக்காவை விட்டு விட்டு உங்கள் நாட்டை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ? முதலீட்டு தத்துவமா ? இல்லை சட்டம் ஒழுங்கு இல்லாதமையா ?

      //உற்பத்தி செய்தவன் முதலாளி அல்ல. உற்பத்தி செய்பவன் தொழிலாளி. விற்பவன் வேறு. தயாரித்தவன் வேறு. விஸ்பர் எத்துணை பேரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது? உதிரும் உதிரத்தை வைத்துக் கூட காசு பார்க்க முடிகிற கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் உங்களது வர்க்கச் சிந்தனைதான் வியக்க வைக்கிறது இராமன்!
      //

      தாஜ்மஹாலை கட்டியது தொழிலாளி என்று வியாக்கியானம் பேசி என்ன ஆகா போகிறது ?
      பெண்களுக்கு நாப்கின் என்கின்ற பொருளை கொடுத்து வாழ்க்கை முறையில் ஏற்றம் பெறலாம் என்கின்ற சிந்தனை இன்னோவேசன் முதலீட்டுததுவ நாட்டில் தான் பிறந்தது . இப்படி ஒரு பொருளை செய்யலாம் என்கின்ற சிந்தனை ஏன் கம்ம்யோனிச நாட்டில் இருந்து வரவில்லை என்று கேட்டல் தொலாளி தொலாளி என்று கீறல் விழுந்த தட்டு போல கூறினால் எப்படி ?

      //வீடுகளில் கைகளால் தயாரிக்கப்படும் நாப்கின் மிசின்கள் சோசலிச நாடுகளில் 70களிலேயே பிரபலம்//

      அப்படி என்றால் ஏன் குறைந்த விலைக்கு தயாரித்து ஏழை நாடுகளுக்கு சந்தைபடுதவில்லை ?
      அல்லது தொழினுட்பத்தை கொடுத்து உதவவில்லை ?

      //ஆனால் இங்கு பிரச்சனை முதலாளித்துவ இலாபவெறி. மிகவும் மலிவான விலையில் கிடைப்பதை திட்டமிட்டு தடுக்கிறார்கள்//

      அவரை என்ன தடுத்தார்கள் ? அவரது தொழில் நுட்பம் அரசாங்கம் மூலமாக பங்களை சென்றடைகிறது .

      //அரசு இதை ஏற்று நடத்தினால் எத்துணை கோடி செலவாகும் என்று நினைக்கீறிர்கள்? உண்மையைச் சொல்லுங்கள் இதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க எது தடையாக இருக்கிறது? யார் தடையாக இருக்கிறார்கள்?//

      எதற்கு அரசாங்கம் நடத்த வேண்டும் ?

      //ங்கள் சொல்வது போல் ஒரு தயாரிப்பின் மதிப்புதான் கடன் தருவதை நிர்ணயிக்கிறதா? //

      நீங்கள் ஒரு வங்கி மேலாளராக போனால் தெரியும் . அதென்ன மடமா ?

      //வங்கிகளுக்கு ப்ராவிட் மோடிவ் என்றால் மல்லையாவின் கடனை மட்டும் ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்? //

      மல்லையா நட்டம் ஆவதற்காகவ கடன் கொடுத்தார்கள் ? கடன் கொடுக்கும் பொழுதே அதற்கான கொலேடறல் வாங்கி இருக்க வேண்டும் . அரசாங்க வங்கி என்பதால் நிறைய கொடுத்து ஏமாந்துவிட்டார்கள் . இதனால் தான் தனியார் நடத்த வேண்டும் எனபது .

      //கல்விக்கடன் கட்ட முடியாதவர்களை புகைப்படம் போட்டு அவமானப்படுத்தும் வங்கிகள் பல்லாயிரக்கணக்கான கோடியில் கார்ப்பரேட்டுகளின் கடனை மட்டும் கண்டும் காணாதுபோல் இருக்கும் பொழுது உங்களது வாதத்தில் என்ன நியாயம் இருக்கிறது?//

      இது தவறு தான் . இது போல முதலீட்டுததுவ குறைகளை வைத்து கம்ம்யூனிச அரக்கனுக்கு பவுடர் போடமுடியாது

      //ஸ்டெப்பி புல்வெளிகள் கோதுமை வயல்களாக மாறியது கூட்டுப் பண்ணைகளால் தான். டிராக்டர், உழுகருவிகள், பரந்த அளவிலான விவசாயம், பால் பொருட்கள் உற்பத்தி கூட்டுப் பண்ணைகளாலும் கம்யுன்களால் தான் சாத்தியமாயிற்று. இவற்றிற்கு வழங்கப்பட்ட லோன்களை கூட்டுப் பண்ணைகள் வெகுவிரைவில் நாட்டுடமையாக்கியது.

      //

      இதெல்லாமே புரசீடுரல் இம்ப்ரூவேமென்ட் . இதேலே என்ன புதிய பொருளை கொண்டு வந்து புதிய வேலையை உருவாக்கி உள்ளார்கள் ?
      ஏற்கனவே செய்யும் வேலையே ஒழுங்கா புடுதி இஉர்கிரார்கல் . முதலீட்டு தத்துவம் புதிய பொருளை உற்பத்தி செய்து புதிய வேலையை தருகிறது

      Come out of the dreams, Get real

      • ஜனநாயகம், கம்மியுனிசம், இரண்டிலுமே சில குறைகள் உண்டு. அதேசமயம் ஜனநாயகத்தில் தவறு செய்யும் ஆட்சியாளர்களை மக்களே தூக்கியெறியும் வாய்ப்பு உண்டு. இது வரை உலக வரலாற்றில் காணப்பட்ட கம்மியுநிசத்தை பார்த்தால் அது ஜனநாயக போர்வையை போர்த்திய சர்வாதிகாரம் என்று தான் தோன்றுகிறது. ஆரம்பத்தில் சோசலிசம் பேசும் கம்மியுநிசவாதிகள் பின்னர் ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் முழு சர்வாதிகாரிகளாகி விடுகின்றனர். கம்மியுனிச சித்தாந்தத்தில் பல விடயங்களில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் அது சர்வாதிகாரிகளின் கையில் எளிதில் விழ வாய்ப்புள்ளதால் அதன் மேல் எனக்கு முழு நம்பிக்கை ஏற்படவே இல்லை.

        மற்றபடி இங்கே பல நண்பர்கள் தற்போதைய முறையில் உள்ள குளறுபடிகளை பட்டியலிடும்போது இதே தவறுகள் கம்மியுனிச ஆட்சியிலும் நடைபெற முடியும் என்பதை மறந்து விடுகின்றனர்.

        மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஜனநாயகம் என்ற வாகனத்தை ஓட்டுபவர்கள் செய்யும் தவறுக்கு வாகனத்தை குறை கூறுகிறீர்கள் நண்பர்களே. ஓட்டுபவர் சரியாக இருந்தால் வாகனத்தில் ஒரு பிரச்சினையும் வராது. ஓட்டுபவரை மாற்றும் சக்தி ஜனநாயகத்தில் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. கம்மியுநிசத்தில் இருக்கும் முக்கிய பிரச்சினையே ஓட்டுபவரை மக்கள் மாற்றுவது அவ்வளவு எளிதில் நடக்கும் விடயம் அல்ல என்பது தான். கம்மியுனிச போர்வையில் ஆட்சியை பிடித்த பல நாடுகளில் இன்று வரை அவர்களை மாற்றும் வழி தெரியாமல் மக்கள் அவதியுறுகின்றனர். ஜனநாயகம், கருத்து சுதந்திரம் இது இல்லாத கம்மியுனிசம் என்பது குறைகள் உள்ள ஜனநாயகத்தை விட மோசமானது.

  87. விவாதங்களுக்கிடையே ஒரு சிந்தனைக் கீறல்…

    இதுகாறும் தொடர்ந்துவந்துள்ள முதலாளித்துவ அரசுகளில், அரசியல்வாதிகள்(politicians) அதிகாரவர்க்கத்திற்குக்(bureaucrats) கட்டுண்டே ஆட்சிபரிபாலணம் செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்த நடைமுறை, சோசலிஷ அரசுகளில்தான் மாற்றம் கண்டது.

    அதாவது அதிகாரவர்க்கம், அரசியல் தலைமைக்கும்(political heads), இருப்பிடம் சார்ந்த அரசியலாருக்கும்(local-politicians) கட்டுப்பட்ட அமைப்பாக செயல்படுவதாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் கூறுகளை சோவியத் ரஷ்யாவிலும், டெங் ஜியா பெங்குக்கு முந்தைய சீனாவிலும் காணலாம். இது ஒரு குறிப்பிடத்தக்க மாறுதல். இந்த மாறுதலைக் கையாள்வதில், முதலில் உருவாகிய சோஷலிச அரசுகளுக்கு ஏற்பட்ட சிந்தனைக் குளறுபடிகளே அவைகளின் தற்காலிகப் பின்னடைவு அல்லது தற்காலிக வீழ்ச்சிக்கும் காரணி.

    வருங்காலத்தில் அமையப்போகும் சோஷலிச அரசுகளுக்குத் தேவையான முதல் பாடம், அதிகாரவர்க்கத்தைக் கையாளுவதற்கான சரியான வழிமுறைகளே.

  88. தோழர் கற்றது கையளவு,

    பின்னூட்டம் 90.1.1.1.1இல் “நீங்கள் சொல்வதெல்லாம் எந்த கம்மியுனிச நாட்டில் நடைபெறுகிறது இப்போது?” என்ற கேள்வியை கேட்டிருக்கீறிர்கள்.

    கம்யுனிசம் அல்லாமல் முதலாளித்துவத்தை வைத்தே இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முடியுமா என்று முயற்சி செய்வோம். ஏனெனில் நாம் பட்டியலிட்ட அமைப்புகள் கம்யுனிச நாடுகளில் தான் என்று எல்லை. எந்த நாட்டிற்கு உள்நாட்டு உற்பத்தி ஒன்று உள்ளதோ எந்த நாட்டிற்கு தேசிய பொருளாதாரம் இருக்கிறதோ அங்கெல்லாம் இவை உண்டு.

    இங்கு நாம் பரிசீலிக்க வேண்டியது இதை; நமது நாட்டின் ஜனநாயகம் முழுக்க முழுக்க மறுகாலனியாதிக்கத்திற்கானது. இந்தியாவிற்கு என்று சொந்த உள்நாட்டு உற்பத்தி கிடையாது. சான்றாக மக்கள் சார்ந்த அமைப்புகளின் தேவையை விவசாயத்தை வைத்து விளக்கலாம்.

    இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாய உற்பத்திக்கு முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையில் கூட எந்த ஒன்றையாவது நாம் முயற்சி செய்திருக்கிறோமோ? முதலாளித்துவ நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நிலங்கள் இணைக்கப்பட்டு பரந்துபட்ட அளவில் விவசாயம் சாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பரந்து பட்ட அளவில் விவசாயம் என்பதை முதலாளித்துவ நோக்கிலேயே சிந்திக்க வேண்டுமானால் நாம் மூன்று விசயங்களை இங்கு அப்புறப்படுத்த வேண்டும்.

    ஒன்று. விவசாய நிலங்களை ரியல் எஸ்டேடுகளுக்கும், பன்னாட்டு தரகர்களுக்கு சாதகமாக உள்ள செஸ் போன்ற மண்டலங்களுக்கும் மாற்றுகிற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தடை செய்யப்பட வேண்டும். ஆனால் இது அடிமடியில் கைவைக்கிற வேலை! தேர்தல்கள் நடத்தப்படுவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை எளிதாக நிறைவேற்றித் தருகிற அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதற்காகத்தான்.

    இரண்டு. முதலாளித்துவ பாணியில் விவசாயம் நடைபெற வேண்டுமானால் இங்கு இருக்கிற நிலப்பிரபுத்துவம் தூக்கி எறியப்பட வேண்டும். முதலாளித்துவ நாடுகளான அமெரிக்காவில் பிரான்சில் ஜெர்மனியில் இது நடைபெற்றிருக்கிறது. இந்தியாவில் இதைச் சாதிக்கிறோம் என்பதற்கு அர்த்தம் அனைத்து அரசியல்வாதிகளிடத்தில் ஆதினங்களிடத்தில் மடங்களிடத்தில் கோயில்களிடத்தில் உள்ள விவசாய நிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உற்பத்தியை பெருக்குவது என்பது. சற்றேறக்குறைய 99கோடி மக்களை கசக்கிப்பிழிகிற இந்த அமைப்புகளின் அதிகாரங்கள் முதலாளித்துவ உற்பத்தி முறை என்று நினைத்தாலே தூக்கி எறியப்பட வேண்டும். இதன் நேரடியான பொருள் இதைத் தாங்குகிற அரசை தூக்கி எறி என்பது.

    மூன்று, முதலாளித்துவ உற்பத்தி முறையில் விவசாயத்தை பெருக்குவதற்கு இங்குள்ள தரகு முதலாளிகளுக்கும் அரசுக்கும் மடங்களுக்கும் ஆதினங்களுக்கும் ஏகபோக இதர டிரஸ்டுகளுக்கும் இடையில் உள்ள இணைப்புச் சங்கிலிகளை அறுத்து எறிவது. நீங்கள் போடுகிற ஓட்டும் தேர்ந்தெடுக்கிற அரசும் இதைச் செய்யாது. ஏனெனில் அரசு என்பது இவர்களின் நலன்களுக்கானவை.

    ஆக இந்தியாவில் முதலாளித்துவத்தை கொண்டுவருவதற்கே ஏகாதிபத்திய சக்திகளும் ஏகபோக டிரஸ்டுகளும் தூக்கி எறியப்பட வேண்டும் என்றால் மக்களைச் சார்ந்து அமைப்புகள் நிறுவப்பட வேண்டும். முதலாளித்துவம் இதை வரலாற்றில் எப்படி சாதித்தது? நாம் செய்ய வேண்டியது என்ன?

    பிரான்சில் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்த அந்நாட்டு முதலாளிகள் நம்மைப் போன்ற பாட்டாளிகளைத் தான் பயன்படுத்தினார்கள். இதன் அர்த்தம் மக்கள் சார்ந்த அமைப்பு என்ற ஒன்று இல்லாமால் முதலாளித்துவம் தன்னை மீட்டெடுக்கவோ நிலைப்படுத்தவோ முடியாது. ஆக உங்களது கேள்விக்கு இங்கு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதவாது முதலாளித்துவத்தை கொண்டுவருவதற்கே மக்கள் சார்ந்த அமைப்புகளை நிறுவ வேண்டியிருக்கிறது. அப்படி எனில் இது போன்ற தேர்தல்களும் ஓட்டுப் போடுகிற போலியான ஜனநாயகம் தூக்கி எறியப்பட்டு முதலாளித்துவ உற்பத்தி நிறுவுவதற்கு சென்ற பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்ட ஒழுங்கு முறை ஆணையங்களை கலைப்பது, காடு கனிம வளங்களை கொள்ளையிடுவதை ஆதரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தூக்கி எறிவது, அதைச் சார்ந்த சட்ட, காவல் மற்றும் நீதி அமைப்புகள் மக்கள் முன் நிறைவேறுவது அவசியம்.

    பாட்டாளிகளின் தலைமையில் இவை அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் நடைபெற்றிருக்கிறது. ஒருவரியில் சொல்வதனால் தொழிலாளர்களின் அமைப்புகள் தான் முதலாளிகளை மேலே குறிப்பிட்ட அனைத்துச் சிக்கல்களிலிருந்தும் விடுவிக்கிறது.

    ஆனால் எல்லா வரலாற்றிலும் முதலாளிகள் தனக்கு சுதந்திரம் அளித்த பாட்டாளி வர்க்கத்தை ஒட்டச் சுரண்டுகிறார்கள். இங்கு தான் நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையை தூக்கி எறிந்துவிட்டு சோசலிச முறையை அதே மக்கள் அமைப்புகளைக் கொண்டு பாட்டாளிகளின் தலைமையில் நிறுவ வேண்டியிருக்கிறது. இப்படி நிறுவாத ஜெர்மன் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் அந்நாட்டு முதலாளிகளிடத்தில் இன்றளவும் கசக்கிப் பிழியப்படுகிறது.

    இதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற பொழுது முதலாளிகளிடத்தில் நம்மைக் காவுகொடுக்காமல் நாம் மேலும் சுரண்டப்படாமல் இருக்க நம்மை இந்த அவலங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள பாட்டாளிகளையே ஆணையில் வைக்கிறோம். ஆக முழுக்க முழுக்க பாட்டாளிகளிடம் அதிகாரம் இருக்கிற இது போன்ற அமைப்புகள் நிறுவப்பட வேண்டும்.

    இப்பொழுது உங்களது வேலை உங்களது கேள்விக்கு நீங்களும் விடை தேட முயல்வது, சோசலிச நாடுகளில் நான் குறிப்பிட்ட இந்த மக்கள் சார்ந்த அமைப்புகள் எப்படி இருந்தது? எப்படி நிறுவப்பட்டது? இன்று எப்படி இருக்கிறது என்று நீங்கள் ஆய்வு செய்து வாசகர்களிடம் பகிர்ந்தால் நன்றாக இருக்குமென்று கருதுகிறேன்.

    இதில் இரண்டு பலன்கள் உண்டு. அங்கு அப்படி இருந்தது? இங்கு அப்படி இருந்தது என்று சொல்வதற்கு பதில் தெளிவான நோக்கோடு புரட்சிகர அமைப்புகள் வைக்கிற கோரிக்கையை ஒட்டி விவாதம் செல்லும். இரண்டாவது, பெட்டியைத் திறந்து காண்பித்தால் தான் போராட வருவேன் என்று நீங்களும் அடம் பிடிக்கமாட்டீர்கள்.

    என்ன சொல்கீறிர்கள்?

    • நண்பர் தென்றல் அவர்களே,

      ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள், விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக ஆக்கும் சுயநல புரோக்கர்கள், மக்களை ஏய்க்கும் அரசு அதிகாரிகள், இவர்கள் செய்யும் தவறுகளுக்கு நான் என்றும் துணை நிற்பதில்லை. தவறு என்றால் தவறு தான், மறு பேச்சே இல்லை.

      இதற்கு தீர்வு என்று நீங்கள் சொன்ன சில விடயங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆதீனங்கள், மட/மத வாதிகள் இவர்களிடம் உள்ள சொத்துக்களை பறிக்கலாம், தவறே இல்லை. அரசியல்வாதிகளின் ஊழல் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யலாம். செய்ய வேண்டும்.

      ஆனால் இதற்கு தீர்வாக நீங்கள் கூறும் சில விடயங்கள் நடைமுறையில் சாத்தியமா என்ற ஐயம் தான் எனக்கு இப்போது.

      ஒட்டுமொத்தமாக முதலாளிகள் என்றால் ஏமாற்றுகாரர்கள் என்று சொல்வது எனக்கு சரியாக படவில்லை. நம்மில் எத்தனையோ உழைப்பாளிகள் தங்களது ஆரம்ப காலத்தில் தொழிலாளியாக வேலை செய்து பின்னர் அந்த தொழிலின் நுட்பங்களை அறிந்து, தனது சொற்ப சம்பளத்தில் சிறுக சிறுக சேர்த்து வைத்து பின்னர் ஒரு சிறிய அளவில் சுய தொழில் தொடங்கி பின்னர் உழைப்பால் அதை படிப்படியாக முன்னேற்றும் எத்தனையோ மனிதர்கள் நம்மை சுற்றி உள்ளனர். நீங்கள் முதலாளிகள் என்ற ஒரே வார்த்தையில் இவர்கள் அனைவரையும் சேர்த்து குறை கூறுகிறீர்கள்.

      முதலாளி ஆகட்டும், தொழிலாளி ஆகட்டும், ஆள்பவராகட்டும், ஆளப்படுபவராகட்டும், அனைவரும் அவரவர் கடமைகளை நேர்மையாக செய்தால் பிரச்சினையே இல்லை.

      சில காலமாகவே, ஒட்டுமொத்தமாக மக்கள் அனைவரிடமும் ஒழுக்கம், நேர்மை குறைந்துள்ளது கவலையளிக்கிறது. காசு வாங்கி கொண்டு ஒட்டு போடும் வாக்காளன், மீட்டர் மேல் பணம் வாங்குவது தவறல்ல என்று நினைக்கும் ஆட்டோ ஓட்டுனர், லஞ்சம் கொடுத்தால் தான் பைலை நகர்த்த முடியும் என்று சாதிக்கும் அரசு அதிகாரி, அலுவலக நேரத்தில் கார்டு அடித்து விட்டு உடனே வீட்டுக்கு வந்து வீட்டு வேலை பார்ப்பது, பெட்டிக்கடை நடத்துவது, வட்டிக்கு விட்டு சம்பாதிப்பது என்று காலத்தை கடத்தும் அரசு அலுவலக தொழிலாளிகள், மக்கள் நலன் பற்றி எந்த கவலையும் இல்லாமல் எப்படி ஊழல் செய்யலாம் என்று யோசிக்கும் அரசியல்வாதிகள், சட்டத்தில் என்னென்ன ஓட்டைகள் உள்ளதோ அதையெல்லாம் உபயோகப்படுத்தி நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் முதலாளிகள் என்று அனைத்து மட்டத்திலும் ஊழல் என்பது நியாயப்படுத்தப்படுகிறது மிகவும் கவலையளிக்க கூடிய விடயம்.

      நேர்மையாக சம்பாதிப்பது என்ற குறிக்கோளை விட, எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் மேல் மட்டத்தில் மட்டும் அல்ல, கீழ்மட்டத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

      புரட்சியாளர்கள் அனைவரும் நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்று நீங்கள் கூறும் கூற்று உண்மையென்று எடுத்து கொண்டால் கூட, ஒட்டு மொத்த பெரும்பான்மையான மக்களே ஊழல் வாதிகளாக, சந்தற்பவாதிகளாக இருக்கும் பட்சத்தில் இந்த புரட்சி ஆட்சி எத்தனை நாள் நீடித்திருக்கும் என்ற ஐயமும் எனக்குள் எழுகிறது. ஆகவே, முதல் படி, மக்களிடம் நேர்மை என்ற விதையை ஆழமாக விதைக்க வேண்டும். பள்ளிகளில் இருந்து இதை ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகளை நேர்மையானவர்களாக, நாட்டுப்பற்று மிக்கவர்களாக உருவாக்கும் கல்வி முறை கிடைத்தால் தான் வருங்கால நாடு நன்றாக இருக்கும்.

      மேலும் யோசிக்கலாம் நண்பரே,

      • //ஒட்டுமொத்தமாக மக்கள் அனைவரிடமும் ஒழுக்கம், நேர்மை குறைந்துள்ளது கவலையளிக்கிறது. காசு வாங்கி கொண்டு ஒட்டு போடும் வாக்காளன், மீட்டர் மேல் பணம் வாங்குவது தவறல்ல என்று நினைக்கும் ஆட்டோ ஓட்டுனர்,//

        திருப்பி முதல்ல இருந்தா…:)

        இப்படி சொல்வதின் மூலமாக ஏழை பணக்காரர் முதலாளி தொழிலாளி … முதலான அனைவரையும் ஒரே தராசில் நிற்க வைத்து தீர்ப்பு கூறுகிறீர்கள் .

        கனவு கண்டுக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது. இது வரைக்கும் நீங்க கலந்துரையாடிக்கிட்டு இருக்கீங்களே உங்ககிட்ட இருந்து எந்த ஒரு உருப்படியான தீர்வு எதுவுமே வரலயே ஏன்?

        நீங்க சொல்ற நீதி நேர்மை நியாயம் எல்லாம் ஆதி காலத்துல இருந்து சொல்லிட்டு தான் வராங்க ஆனா என்ன பயன் ?

        25 ரூபா சம்பளம் ஒருத்த்தனுக்கு

        100 ரூபா சம்பளம் ஒருத்த்தனுக்கு

        1000 ரூபா சம்பளம் ஒருத்த்தனுக்கு

        100000 ரூபா சம்பளம் ஒருத்தனுக்கு

        நாட்டோட வளங்களெல்லாம் ஒருத்தனுக்கு னு மக்கள் வர்க்கங்களாய் பிரிந்து பட்டு கிடக்கும் போது ஒழுக்கம் நேர்மை நியாயம் இன்னும் பிற தனி மனித ஒழுக்கங்கள் அழிந்து படத் தான் செய்யும்.

        தங்க மீன்கள் படத்துல ஒரு அழகான ஒரு வசனம் வரும்

        100 ரூபா எங்கப்பாவுக்கு காஸ்ட்லீ. 1000 ரூபா எங்க தாத்தாவுக்கு காஸ்ட்லீ ….

        100 ரூபா வாங்கறவனுக்கு அடிப்பதைத் தேவைகளுக்கான விலை உயரும் போதும் , தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத போதும் வரும் ஒரு குற்ற உணர்ச்சி கையறு நிலையையை விட இந்த ஒழுக்கம் , நீதி , நியாயங்கள் ஒன்றுமே கிடையது .

        //குழந்தைகளை நேர்மையானவர்களாக, நாட்டுப்பற்று மிக்கவர்களாக உருவாக்கும் கல்வி முறை கிடைத்தால் தான் வருங்கால நாடு நன்றாக இருக்கும்//

        அதுக்கு ஒரு வழி நீங்க சொன்னீங்கண்னா உங்களுக்கு புண்ணியமா போகும்.

        எங்க பிள்ளைகளுக்கு நல்ல தரமான கல்வியும் , மக்களுக்கு தரமான மருத்துவமும் ,மற்றும் அடிப்படை தேவைகள் தேவையான அளவுக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதுக் கூட மற்ற உயிரினக்களையும் சேர்த்துக்கோங்க .பிறகு தான்னால நாட்டுப்பற்று அவங்களுக்கு வரும் . நீங்க ஒன்னும் கவலைப் படவே வேண்டாம் . இல்ல இதெல்லாம் உங்களுக்கு புடிக்கிலான நாட்டுப்பற்று ஏதாவது கடைகளில் கிடைக்கும் னு தெரிஞ்சால் நாங்க வாங்கி கொள்கிறோம் . அதுக்கப்புறம் ஒரே ஒரு கேள்வி உங்களுக்கு மட்டும் .

        அதென்ன நாட்டுப்பற்று மிக்கவர்களாக உருவாக்கும் கல்வி முறை? தயவு செய்து இதை உருவாக்கும் முறையை எங்களுக்கு விளக்கவும் .

        // நீங்கள் முதலாளிகள் என்ற ஒரே வார்த்தையில் இவர்கள் அனைவரையும் சேர்த்து குறை கூறுகிறீர்கள்.//

        எல்லாம் முதலாளியும் ஒன்னில்லை தான் . அம்பானியும் ஆரம்பத்துல ஒண்ணுமில்லாம நாதாரிய இருந்தவன்தான் , அப்புறம் எப்படி இப்படி ஆனான்னு உங்களுக்குத் தெரியும்.

        பொதுவான வரையறையில் மளிகை கடை வைத்திருக்கும் அண்ணாச்சியும் ஒரு முதலாளி தான் அம்பானியும் முதலாளி தான் . இந்த வேறுபாடுக் கூட தெரியாத ஏமாளிக்கல்னு எங்கள நெனெச்சீங்கன்னா நாங்க ஒன்னும் பண்ண முடியாது .

        புதிய ஜனநாயக புரட்சிக்கு பிறகு ஓரளவிற்கு தேசிய முதலாளித்துவம் வளர்வதை நாங்கள் மறுக்கவில்லயே மற்றும் அது கண்டிப்பான தேவையாகும் .

        உங்களுக்கு புரட்சியாளர்கள் மீது சந்தேகம் எழுகிறது . அது கண்டிப்பாக ஒரு முன் அனுமானததுடன் எங்களுடன் முரண்படுகிறது . சோசலிசத்தின் குழந்தைப் பருவத்தில் ஒரு சில தவறுகள் நேர்திருக்கலாம் . ஆனால் அது முற்றிய முதலாளித்துவத்த்தை விட நேர்த்தியானது . அதைத் திறந்த மனதுடன் அணுக வேண்டும் .

        நன்றி .

        • நண்பரே,

          குழந்தை பருவ தவறுகள் என்று மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள். உக்ரைன் மக்களை கேட்டு பாருங்கள். ___________ நான் சமீபத்தில் வேலை நிமித்தமாக கசகிஸ்தான், உக்ரைன் நாடுகளுக்கு சென்று வந்ததால் அங்கிருக்கும் நண்பர்களிடம் பேசும்போது கிடைத்த தகவல்கள் இது. சோவியத் ரசியா என்பது வெளியில் இருந்து பார்ப்பதற்கு அழகான ஒரு தோற்றத்தை கொடுக்கலாம், ஆனால் உள்ளுக்குள் கடைந்தெடுத்த சர்வாதிகாரம் தான்.

          நீங்கள் சொல்லும் சோசலித்தை ஜனநாயக முறையிலேயே நிறைவேற்ற முடியும். அதற்கு என்ன வழி என்று யோசியுங்கள். நான் பல முறை நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன். நான் சோஷலிச விரோதி அல்ல, ஆனால் சோசலிசம், கம்மியுனிசம் என்ற போர்வைக்குள் சர்வாதிகாரம் நுழைவதை தான் நான் எதிர்க்கிறேன். ஜனநாயக முறையில் கம்மியுநிசவாதிகளுக்கு மக்கள் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் ஆட்சியை கொடுத்து பார்த்தார்கள், ஒன்றும் நடக்கவில்லையே. இப்போது இருக்கும் ஜனநாயக வழியில் அவர்கள் தவறு செய்தால் அந்த கம்மியுனிச அரசுகளை மக்களால் வீழ்த்த முடியும். ஆனால் சர்வாதிகார கம்மியுநிசத்தில்???

          • நண்பரே ,

            நீங்க விதண்டாவாதம் பண்றதா தெரியுது . அதே நேரத்தில் சரியான பதில நோக்கியும் போறீங்க .

            சோவியத் ருசியா என்பது ஒரு கடந்த காலம் மற்றும் அதனூடாக ஒரு எதிர்கால கனவுகளை நினைவாக்க ஒரு வரலாறாக ஒரு சமுதாய மாற்றத்தை படைக்க ஒரு முன் மாதிரியாக எனக்கு/எங்களுக்கு தெரிகிறது .

            கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று சரித்தவறை சீர்தூக்கி பார்த்து ஒரு ஒப்புயர்வற்ற சமுதாயத்தை படைக்க வேண்டும் என்ற தீராத தாகம் தான் எங்களுக்கு . உங்களுக்கும் அப்படி ஒரு தாகம் இல்லையெனினும் அப்படி ஒரு சமுதாயம் இருந்தால் நல்லா இருக்கும் இல்லையென்றாலும் இருப்பதை வைத்து மகிழ்ச்சியடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் இது ஒரு அறிவியல். ஆம். சோவியத் ருசியா என்பது அதில் பால பாடம் . அது வரைக்கும் ஏட்டுத் தத்துவமாய் இருந்ததை முதன் முதலில் செயல்படுத்த்தும் போது கண்டிப்பாக தவறுகள் நேரும் . ஒரு மந்திரத்தில் அது படைக்கப்பட்டு விடாது . பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று எளிதில் சென்று விட முடியாது ..அது ஒரு நீண்ட போராட்டம் , பழைமைக்கும் புதுமைக்கும் , தனியுடைமைக்கும் பொதுஉடைமைக்கும் நடக்கும் போராட்டம் .

            //ஜனநாயக முறையில் கம்மியுநிசவாதிகளுக்கு மக்கள் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் ஆட்சியை கொடுத்து பார்த்தார்கள், ஒன்றும் நடக்கவில்லையே//

            மிகச் சரியா சொன்னீங்க . அதத் தான் நாங்களும் சொல்றோம் இது ஒரு போலி ஜனநாயகம்னு. கம்மியுநிசவாதிகள் மக்களோட இருக்கணும் மக்களுக்காக உழைக்கணும் அட உட்டுபுட்டு முதலாளிகளோட கலை புடிச்சுட்டு இருந்த எப்படி .

            //இப்போது இருக்கும் ஜனநாயக வழியில் அவர்கள் தவறு செய்தால் அந்த கம்மியுனிச அரசுகளை மக்களால் வீழ்த்த முடியும். ஆனால் சர்வாதிகார கம்மியுநிசத்தில்???//

            மொதல்ல கம்மியுனிச அரசுன்னா என்னன்னு சொல்லுங்க . ஒலகத்துல எங்க இப்போ கம்மியுனிச அரசு இருக்கு.

            கடைசியா ஒரு punch : உழைக்காம சோறு சாப்பிட்ட அது ஒட்டாது . போராடாம எதுவும் கிடைக்காது அப்புறம் அது நிலைக்காது .

            நன்றி.

          • கருத்து சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு போடும் வினவு எப்படி ஜனநாயகத்திற்கு துணை நிற்கும்?
            நான் யாரையும் இழிவு படுத்தி பதிவிடாதபோது எனது கருத்துக்களை தணிக்கை செய்வது சரியா?
            உங்கள் வலைத்தளம், உங்கள் விருப்பம், அது சரி, நீங்கள் கூறும் கம்மியுனிச ஆட்சியிலும் இது போல் தான் கருத்து சுதந்திரத்துக்கு தடை வருமோ என்னவோ?

        • நண்பர் சிவப்பு அவர்களே,

          எனக்கு தெரிந்த சில யோசனைகளை நான் கூறுகிறேன். (ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியது தான், நீங்கள் கேட்பதால் மீண்டும் பதிவிடுகிறேன்.

          1. சோசலிசத்தை ஒட்டுமொத்த புரட்சியினால் மட்டும் தான் செயல்படுத்த முடியும் என்று அர்த்தம் இல்லை. ஜனநாயக ரீதியிலேயும் செயல்படுத்தலாம்.
          2. முதல் கட்டம் தேர்தெடுக்கும் அரசியல்வாதிகளை நேர்மையானவர்களாக, திறமையானவர்களாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
          3. ம.க.இ.க. போன்ற அமைப்புகளில் உள்ள நேர்மையானவர்கள் உள்ளாட்சி தேர்தல் போன்ற சிறிய தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்களிடம் நல்ல சேவை புரிந்து அவர்களின் பேராதரவை பெற வேண்டும். சிறுதுளி, பெருவெள்ளம். மக்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை முதலில் வர வேண்டும். பின்னர் பேராதரவு தானாக கிடைக்கும்.
          4. மக்கள் பேராதரவு கிடைக்கும் எந்த அமைப்பினாலும் ஆளும் அரசை ஒரு மக்கள் நலம் பேணும் ஒரு சட்டத்தை/சட்ட திருத்தத்தை கொண்டு வர வலியுறுத்தி அதில் வெற்றியும் காண முடியும். உதாரணத்திற்கு லோக்பால்/ஜோக்பால். அசாரே/கேஜ்ரிவால் போன்ற காமெடி பீசுகளால் ஒரு நாட்டில் ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வர அரசை நிர்பந்தித்து வெற்று காண முடியும் என்றால் ஏன் நம்மால் முடியாது?

  89. Hi All,

    Here are my reflections related to communism, in a briefest way.

    Why?

    Current social organization allows people to amass unlimited amount of property out of greed. This leads to competition which in turn leads to exploitation, adulteration, cheating, kidnapping children and women and abusing them, enslavement, etc. The people entrusted with the mechanisms to check these manifestations themselves turn greedy and indulge in those crimes or become partners in them.
    Driven by greed for more, people indulge in actions that amount to reinventing or over production or under production, etc, there by leading to wasted effort and resources, which would ultimately affect all including the greedy.
    Whatever is one’s amassed wealth, when one is out of one’s house, he/she depends on others for their well-being. When you don’t care for others, others need not care for you. You need to always be on full alert. If you get hit in the road, your fate is uncertain. You may be robbed/kidnapped/etc.
    As people have to care for themselves, there is no meaningful cooperation, which is essential for a holistic development. For example, development of lands into plots. All lands are sold, divided into plots/apartments and there is no way of getting a common playground/pool/park/waste dumping yard/etc. for a neighborhood. No one bothers about the cleanliness of the neighborhood, water sources/food sources as greeds of each person work against all others.

    When greeds of all persons work in unison, it is called communism. (As, many are averse to this name, we may have to find a new name, if it helps) I am very greedy to have a society where no crimes exist and all do certain minimum duties and enjoy certain minimum rights. In short I am greedy to have a Paradise on Earth. Let all greedy come together.

    How?

    The current ruling class has got its position by using better weapons and being selfish, greedy and ruthless. The people against exploitation should come together, strive to get better, altruistic and benevolent organization. If it can get better weapons, it would ease the transition. We need to work towards these better tools.
    No one’s life should be endangered in this process. Those who are against new setup have to be just isolated and kept in a situation not harmful to the establishment and upkeep of the new setup.
    We should have a well-defined system or Constitution. The system should not depend on few individuals in leading positions. All decisions should be made in committees with as many members as possible. Periodical election should select those members. A well-defined procedure should be there to handle erring individuals.
    The system should allow individuals and groups to better the system, invent and discover new things that benefit one and all, etc.
    The system should allow a fair amount of private movable property. A limit can be set initially and later gradually increased or decreased as per the need of the time and broad consensus.
    Let’s discuss.

    • மக்களின் பேராதரவு உங்களுக்கு கிடைத்த பின்னர் நீங்கள் கீழ்கண்ட சட்டங்களை/சட்ட திருத்தங்களை கொண்டு வர அரசை நிர்பந்திக்க முடியும்:

      1. தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் தொகுதிக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை எனில், தொகுதி பக்கம் தலை காட்டவில்லை எனில், தொகுதி நிதியை மக்களுக்காக பயன்படுத்தவில்லை எனில், மக்கள் அவர்களை திரும்ப பெரும், பதவி இழக்க செய்யும் வழிமுறை.
      2. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கல்வி முறை. பெரிய பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் அனைவரின் குழந்தைகளும் கட்டாயம் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும். அரசு பள்ளிகளுக்கு கலெக்டரின் பிள்ளை படிக்க வந்தால் தானாக அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பொறுப்பு வரும், தவறு செய்தால் கலெக்டர் கோபத்துக்கு ஆளாவோம் என்ற பயமும் இருக்கும்.
      3. விவசாயிகள் ரசாயனம், பூச்சி மருந்து கலவாத இயற்கை முறையில் விளையும் பொருட்களுக்கு அதிக விலை வைத்து கொள்ளலாம். இதனால் நல்ல, இயற்கை முறையில் விளையும் பொருட்களை பொதுமக்கள் வாங்குவார்கள். விவசாயிகளுக்கும் நல்ல அதிக வருமானம் கிடைக்கும். ஒரு விவசாயிக்கு கணினி பொறியாளருக்கு இணையான வருமானம் கிடைக்கிறதென்றால் அனைவரும் விவசாயத்தின் பக்கம் கவனத்தை செலுத்துவார்கள் அல்லவா?
      வெளிநாடுகளில் இயற்கை முறையில் வளரும் காய்கறிகளுக்கு மூன்று மடங்கு விலை அதிகம். NATURAL GREEN PRODUCTS என்று சொல்வார்கள். அதை நம் நாட்டிலும் நடைமுறை படுத்தினால் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். நாம் சேற்றில் கை வைக்க சோற்றில் கால் வைக்கும் விவசாயிகள் கஷ்டப்பட தேவையில்லை. அறிவியல் ரீதியாகவும் அதிக மகசூலை பெற விஞ்ஞானிகள் முயல வேண்டும்.

      • 4. துபாய் போன்ற பாலைவன ஊரில், அந்த நாட்டு மக்கள் எல்லோருக்கும் கடல் நீரையே சுத்திகரித்து குடிநீராக கொடுக்க முடியும் என்றால் நாம் ஏன் அது போல ஒரு முயற்சி செய்து ராமநாதபுரத்தை பசுமை சோலையாக மாற்ற முடியாது?

        5. தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், பாதுகாப்பு வசதிகள் செய்து தராத நிறுவனங்களுக்கு பெரிய அபராதம் விதிக்க வேண்டும். அதை மீறியும் தவறு செய்தால் தொழில் செய்யும் லைசன்சு ரத்து செய்ய வேண்டும். இதை கவனிக்க ஒரு தொழிலாளர்களால் நியமிக்கப்படும் ஒரு ஆணையம் வேண்டும்.

        • கற்றது கையளவு,

          பாயிண்ட் எல்லாம் போட்டு லைனுக்கு லைன் gap விட்டு எழுதும் கற்றது கையளவு ஸ்டைல், செந்தில் குமரன் ஸ்டைல் ஆச்சே !

          செந்தில் குமரன் மற்றும் கற்றது கையளவு இருவரும் double act செய்கின்றார்கலோ ? 🙂

          கற்றது கையளவு: //ஒருவேளை நம்மோடு தமிழில் பதிவிடும் நண்பர்களில் ஒருவர் தனது ALTER EGO வாக, UNIVERBUDDY என்ற பெயரில் ஆங்கிலத்தில் பதிவிடுகிராரோ என்னவோ, 🙂

          நமது செந்தில்குமரன் சரவணன் ஆனது போல :)//

          • 🙂 உங்கள் அளவுக்கு நான் இல்லை சரவணன்/செந்தில்குமரன் சார்,

            அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். நான் இப்போது தான் குளத்தில் இறங்கி ஆழம் பார்க்கிறேன். நீங்கள் குளத்தில் முங்கு நீச்சல் போட்டு பின்னி பெடலேடுத்தவராச்சே 🙂

            நம் இருவரின் பார்வை கோணம் வேறாக இருக்கலாம். ஆனால் மக்கள் நலன் குறித்து யோசிக்கும் உங்கள் எண்ணத்திற்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. அதை நடைமுறைபடுத்தும் வழியில் தான் நாம் வேறுபடுகிறோம். ஜனநாயகத்தை, கருத்து சுதந்திரத்தை காலில் மிதிக்காத கம்மியுநிசமானாலும், சோசியலிசம் ஆனாலும், மக்கள் நலனுக்காக என்றால் எனக்கு சம்மதம் தான்.

            இன்னொரு சிறிய விடயம், வரிசைப்படுத்துவதில் ஒற்றுமை இருக்கிறது, ஆனால் அதன் ஸ்டைலில் வித்தியாசம் உள்ளது.
            உங்கள் நம்பர் ஸ்டைல் [1] [2] [3], எனது நம்பர் ஸ்டைல் 1. 2. 3.

            🙂

  90. Sometimes, I also feel that a French revolution type happens and all the corrupt politicians are arrested and put to jail by the army of people. But my only worry is, the alternate ruler who comes after that, if he becomes a dictator, then that is the end of life for the country.

    The best way, I feel is to bring a sense of responsibility in the youth towards the nation.

    • நண்பர்களுக்கு/தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் ,

      தயவு செய்து தமிழில் பதிவை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன் .

      இல்லையெனில் என்னைப் போன்று ஆங்கிலம் அறியாத நண்பர்கள்/தோழர்கள் விவாதத்தில் கலந்துக் கொள்ள முடியாத நிலமை ஏற்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

      நன்றி .

      • மன்னிக்கவும் நண்பர் சிவப்பு அவர்களே,

        மற்ற எல்லோரிடமும் நான் தமிழில் தான் பதிவிடுவது வழக்கம். நமது நண்பர் யுனிவர்பட்டி எப்போதும் ஆங்கிலத்தில் பதிவிடுவதால் அவருக்கு தமிழ் அவ்வளவாக வராது என்ற எண்ணத்தினால் நான் அவருக்கு பதிலளிக்கும்போது ஆங்கிலத்தில் பதிவிடுகிறேன். மன்னிக்கவும். இனி உங்களுடன் தமிழிலேயே பதிலளிக்கிறேன்.

    • கற்றது கையளவு,

      ///bring a sense of responsibility in the youth……..

      உங்களோட பின்னுரைகளைத் தொகுப்பாப் பாக்கும் போது, ஒன்னும் மட்டும் எனக்கு தெரியுது .

      நீங்க தனி மனித ஒழுக்கத்தப் பற்றி மட்டும் தான் பேசிட்டு வரீங்க . அதுத் தான் சமூக ஒழுக்கம்னு சொல்றீங்க. அந்த youth , நீங்க சொல்ற அந்த இளையத் தலைமுறை, பெரும்பான்மையானவர்கள் ஏழைகள், வறியவர்கள் . அவங்களுக்குத் தேவை 3 வேலை சோறு , குடிக்க தண்ணி(water) , உடுக்கத் துணி , தூங்க வீடு , சுவாசிக்க தூய்மையான காத்து அப்புறம் இதையெல்லாம் அரசு சும்மா குடுக்க (அரசோட கடம அது தான் )வேண்டாம் அதுக்கு பதிலா ஒரு நல்ல வேலை ..அவ்ளோ தான் ..அதுக்கு மேல நாகரீகம் , கலாச்சாரம் , நாட்டுப் பற்று அப்புறம் சொன்னிங்களே sense of responsibility அதுவும் தானே வரும் . அது வரைக்கும் நீங்க என்ன தான் தத்துவ விளக்கத் குடுத்தாலும் ஒன்னும் பண்ண முடியாது .

      நன்றி.

      • தோழர் சிவப்பு,

        நான் தமிழில் எழுத முடிந்தும் போதுமான அளவிற்கு தமிழில் எழுதாமல் இருப்பதற்கு எனது சூழ்நிலையே காரணம். மன்னிக்கவும்.

        மேலே உள்ள பதில் மிகவும் சுருக்கமாக ஆணித்தரமாக அருமையாக இருக்கிறது. சமூக நிலை ஒழுக்கமானதாக இருந்தால் தான் தனிமனித ஒழுக்கம் சாத்தியம்.

        • ஒருவேளை நம்மோடு தமிழில் பதிவிடும் நண்பர்களில் ஒருவர் தனது ALTER EGO வாக, UNIVERBUDDY என்ற பெயரில் ஆங்கிலத்தில் பதிவிடுகிராரோ என்னவோ, 🙂

          நமது செந்தில்குமரன் சரவணன் ஆனது போல …:)

          • KK,

            Why so much suspicion? Do you have any other commenter identified as my alter ego? Why are you wasting your time doing such imaginations? I don’t have so much time. If I had such time and situation, I would write in Tamil.

      • எல்லாமே அரசு தான் கொடுக்கணும் என்றால் அப்புறம் நமக்குன்னு ஒரு உந்துதல் எப்படிப்பா வரும்? முன்னேறுவதற்கு ஒரு உந்துகோல் முக்கியம்.

        பிள்ளைகளை பெறுவதோடு பெற்றவர்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா. நீங்கள் சொன்ன உடுக்க உடை, இருக்க இடம், கல்வி இவற்றை குழந்தைகளுக்கு வழங்குவது அந்த பெற்றோர்களின் கடமை இல்லையா?

        என்ன பொறுப்பற்ற பேச்சாக இருக்கிறது. உங்கள் குழந்தைகளுக்கு உடை, இடம், கல்வி கொடுப்பதற்கு கூட அரசு தான் வேண்டுமா?

        • நீங்க சொல்றத கொஞ்சம் மாத்தி யோசிப்போம் . பெற்றவர்கள் இடத்த்தில் அரசை வைப்போம் பிள்ளைகளின் இடத்தில் மக்களை வைப்போம் இப்போ நீங்க சொல்றது சரியாகி விட்டது .

          வெறும் சோறு தின்பது மட்டும் தான வாழ்க்கை? நாய் கூட தான் தின்கிறது . மனிதனை அதனிடத்தில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதே உழைப்பு தானே . என்னால் கடுமையாக உழைக்க முடியும் ஆனால் உழைப்பிற்கேற்ற கூலியை சரியான படியாக யார் கொடுப்பது . நான் உழைத்தால் தான் எனக்கும் என் குடும்பத்த்தும் சோறு அப்படீங்கும் போது அந்த தேவைக்கேற்ற கூலியை யார் பெற்று தருவது ?

          ஒரு தொழிலாளியோ ,நெசவாளியோ இல்லை ஒரு விவசாயியோ தனக்கு உழைப்பது மூலம் சமூகத்திற்கும் சேத்து தான் உழைகின்றான் .

          என் குடும்பத்துல 4 பேரு இருக்காங்க என் மனைவி மற்றும் என் பிள்ளைகள் 2 பேர் னு வச்சுக்குவோம். அவர்கள் மூவரும் வேலைக்கு செல்ல முடியாது . எனக்கும் அப்‌படியொன்றும் பிரமாதமான வேலை இல்லை. ஆனால் நான் உழைப்பதற்க்கு தயாராகவே இருக்கிறேன் . எனக்கு வேலை கிடைக்காத போது எனக்கு சம்பளம் கிடைக்காத போது நான் யாரை நொந்து கொள்வது? என் உழைப்பை நாட்டிற்க்காக அளிக்க தயாராக உள்ளேன். என்னையும் என் குடும்பதையும் யார் பார்த்துக் கொள்வது. என் குழந்தகளுக்கு கல்விக்கும் மருத்துவத்த்திற்கும் ஆகும் செலவுகளை யார் கொடுப்பது? . இந்த அரசு தானே .

          என்னை, என் உழைப்பை சரிவர பயன்படுத்தாதது என் குற்றமா ? இந்த எதிர்ப்பார்ப்பு எப்படி பொறுப்பற்றதனமாகும் ? இதை கூட கொடுக்க முடியாத அரசு எதற்கு ? அதனால் தான் அதை தூக்கி எறிய சொல்கிறோம் ..

          • உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றால் உழைப்புக்கேற்ற ஊதியம் எங்கு கிடைக்கிறதென்று தேடுவது தானே முறை. இல்லை, இல்லை என்று அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி?

            ஒரு மரம்வெட்டும் தொழிலாளி, நன்றாக உழைக்கிறார். அவரது முதலாளி அவருக்கு தினம் தினம் கூலி கொடுப்பார். ஒரு நாள் ஒரு புதிய இளைஞன் மரம் வெட்ட வருகிறான். இந்த புதிய இளைஞன் பழைய தொழிலாளி போல நாள் முழுவதும் மரம் வெட்டுவதில்லை. ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு ஓரமாக ஒதுங்கி உட்கார்ந்து கொள்கிறான். பின் மீண்டும் வேலை செய்கிறான். இந்த புதிய இளைஞனுக்கு முதலாளி கூலி இரு மடங்காக கொடுக்கிறார். இதனால் பழைய தொழிலாளி கோபம் அடைந்து முதலாளியிடம் ஞாயம் கேட்கிறார். அதற்கு முதலாளி சொன்னார், நீ ஒரு நாள் முழுதும் வெட்டும் மரத்தின் அளவை விட இரு மடங்கு அந்த இளைஞன் வெட்டுகிறான், அதனால் அவனுக்கு இரு மடங்கு சம்பளம் என்கிறார். அவன் எப்படி அவ்வளவு அதிகமாக வெட்டுகிறான் என்று நீங்களும் கேட்டு பாருங்கள், நீங்கள் அது போல இரு மடங்கு வெட்டினால் உங்களுக்கும் இரு மடங்கு ஊதியம் தருகிறேன் என்றார். இவரும் அந்த புதிய இளைஞனிடம் கேட்டார், நான் நாள் முழுதும் இடைவிடாது வேலை செய்தும் உன் அளவு வெட்ட முடியவில்லையே, இதில் நீ அவ்வப்போது ஓய்வெடுத்து இளைப்பாறுகிறாய், இது எப்படி சாத்தியம் என்று கேட்டார். இதற்கு அந்த இளைஞன் சொன்னான், நான் இளைப்பாறுவது போல உங்களுக்கு தெரியும், ஆனால் அந்த நேரம் நான் உட்கார்ந்தபடியே என் கோடாலியை தீட்டிக்கொண்டிருப்பேன். கோடாலி கூராக இருந்தால் மரம் எளிதில் வெட்டுபடும், வேலை எளிதில் முடியும் என்றான்.

            அந்த இளைஞனின் கோடாலி போல தான் நமது தொழில்நுட்ப அறிவும். நம்முடைய திறமையை நாம் அவ்வபோது கூர் தீட்டிக்கொண்டே இருந்தால் தான் இப்போதுள்ள போட்டி மிகுந்த வாழ்வில் வெற்றி கொள்ள முடியும். HARDWORK மட்டும் வேலைக்காகாது. கொஞ்சம் SMARTWORK உம் செய்ய வேண்டும். உங்களுக்கு ஊதியம் அதிகரிக்க என்னென்ன வழிகள் இருக்கிறதென்று யோசித்து பார்த்தீர்களா. குதிரைக்கு கண்ணை கட்டியது போல ஒரே நேர்க்கோட்டில் பார்த்தால் நமக்கு முழு பரிமாணமும் தெரியாது. வேலை நிமித்தமாக என்னென்ன புதிய திறமைகளை நீங்கள் கற்று வருகிறீர்கள்? செய்யும் வேலைக்கேற்ற கல்வி ஏதாவது கற்க முடியுமா என்று ஆராய்ந்தீர்களா? வேறு நிறுவனங்களில் இதே வேலைக்கு என்ன ஊதியம் கொடுப்பார்கள், அல்லது இதே வேலைக்கு மற்றவர்கள் எப்படி அதிக ஊதியம் வாங்குகிறார்கள் என்று யோசித்தீர்களா?

            எனது வடஇந்திய நண்பர் ஒரு முறை சொன்னார்,

            தென்னிந்தியர்களான நீங்கள் உங்கள் வருமானத்துகேற்ற வகையில் உங்கள் செலவுகளை குறுக்கி கொள்கிறீர்கள்.
            வட இந்தியரான நாங்கள் எங்கள் செலவுகளுக்கேற்ப எங்கள் வருமானத்தை பெருக்கி கொள்கிறோம். இது தான் உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்றார்.

            அப்போது தான் எனக்கும் உரைத்தது. மற்றொரு விடயம், பெரும்பாலான வட இந்தியர்கள் வர்த்தகம், வியாபாரத்தில் தான் ஈடுபாடு காட்டுவார்களே தவிர தொழிலாளிகளாக இருக்க மாட்டார்கள். எல்லோரையும் வேலை வாங்கும் வேலை மட்டும் தான் அவர்கள் செய்வார்கள். நம்மவர்கள் நல்ல உழைப்பாளிகள், ஆனால் கொடுத்த வேலையை மட்டும் செவ்வனே செய்து கொண்டு அதிகம் யோசிக்க மாட்டார்கள். வியாபார யுக்தியில் வடஇந்தியரை விட நாம் கொஞ்சம் பின்தங்கி தான் இருக்கிறோம்.

            வியாபாரத்தில் தான் அதிக வருமானம், சிறு வியாபாரமாக இருந்தாலும், அதன் மூலம் அதிக இலாபம் பெற முடியும்.

            ஆகவே, முதலில் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள், வருகிற வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை சேமிப்பில் செலவிடுங்கள். இந்த சேமிப்பை என்றாவது ஒரு நாள் மூலதனமாக கொண்டு ஒரு நல்ல தொழில் செய்யுங்கள். காலம் முழுதும் வேலைக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள் நண்பரே. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல உடை, நல்ல கல்வி கொடுப்பதற்கு அரசை நம்பியிராமல் நீங்களே அதற்கு ஏற்பாடு செய்ய முடியும். முடிவு உங்கள் கையில் தான் உள்ளது.

            • கற்றது கையளவு,
              சரி கத சொல்றதெல்லாம் இருக்கட்டும்.
              இந்த கதையோட சாரம் என்ன ? இந்த மாதிரி நீதிக் கதைகள் சொல்லி சொல்லி இந்த மக்களை ஏமாததுனது போதுமையா.. கதைய சொல்லிட்டீங்க சரி. அந்த முதலாளி அந்த தொழிலாளிகளுக்கு படியளந்தது எவ்வளவுன்னு சொல்லிபுட்டீங்கன்ன நல்லா இருக்கும். சரி எனக்கு ஒரு டவுட்? கத்திய தீட்டும் பொது அவன் ஓயவேடுப்பதில்லை. அவன் ஓய்வு நேரத்திலும் வேலை செய்யுறான் . அந்த முதலாளி அதையும் திருடி சம்பாதிக்கிறான். இதை நீதி கதைன்னு சொல்றீங்களே . என்னே அறிவு . புல்லரிகிறது .

              இதை தான் நண்பரே நாம் தகர்க்க நினைக்கிறோம் . முதலாளி தோளிலாளியை சுரண்டும் வழிகளில் இதுவும் ஒன்று . ஓய்வு நேரத்திலும் கூட ஓட்ட சுரண்டும் இந்த முதலாளித்துவத்தை , தனியுடைமையை வீழ்த்தாமல் சமூகத்திற்கு விடுதலை கிடையாது …

              நன்றி

            • //அப்போது தான் எனக்கும் உரைத்தது. மற்றொரு விடயம், பெரும்பாலான வட இந்தியர்கள் வர்த்தகம், வியாபாரத்தில் தான் ஈடுபாடு காட்டுவார்களே தவிர தொழிலாளிகளாக இருக்க மாட்டார்கள். எல்லோரையும் வேலை வாங்கும் வேலை மட்டும் தான் அவர்கள் செய்வார்கள். நம்மவர்கள் நல்ல உழைப்பாளிகள், ஆனால் கொடுத்த வேலையை மட்டும் செவ்வனே செய்து கொண்டு அதிகம் யோசிக்க மாட்டார்கள். வியாபார யுக்தியில் வடஇந்தியரை விட நாம் கொஞ்சம் பின்தங்கி தான் இருக்கிறோம். //

              உங்களுக்கு உரைக்காத ஒரு விடயம் நான் சொல்லவா? அதன் மூலம் உங்களோட வர்க்க பாசத்த சொல்லவா ?

              நம்மவர்கள் உழைப்பாளிகள் வட இந்தியர்கள் நலல வியாபாரிகள்/ முதலாளிகள் .
              இதுக்கு நீங்க பெருமைப பட்டு இருக்கணும். ஆனா நீங்க வேற மாதிரி ஒரு முதலாளித்துவ எண்ணத்தில் இருக்கும் உங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் .
              ஆனாப பாருங்க இங்கேயும் நீங்க தடுமாறிட்டு இருக்கீங்க. வட இந்திய , தென் இந்திய முழு இந்தியாலையும் இந்த முழு உலகத்துலயும் உழைப்பாளிகள் தான் எண்ணிக்கையில் அதிகம் . அவங்க எல்லாரும் முதலளியாகிட்டா யாரு உழைப்பது ? அதுக்கு பதிலா எல்லோரும் உழைப்பாளி எல்லோருக்கும் ஒரே விதமான சம்பளம் எல்லோருக்கும் ஒரே விதமான வசதிவாய்ப்பு கெடச்சா நல்லாருக்கும் தானே ? ஏன் எப்படி உங்களைப் பத்தி போட்டு உடச்சிடீங்க?

              ஒவ்வருவரோட வார்த்தைக்கும் பின்னாடியும் அவரோட வர்க்க பாசம் /நலன் இருக்கும்ங்கறது முன்னாடியே பெரியவங்க சொல்லிட்டு போய்ட்டாங்க .

              ஹ்ம்ம்

          • கற்றது கையளவு ,
            //என் குழந்தகளுக்கு கல்விக்கும் மருத்துவத்த்திற்கும் ஆகும் செலவுகளை யார் கொடுப்பது? . இந்த அரசு தானே .//
            இதை கீழ் வருமாறு படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ,

            என் குடும்பத்ததின் அடிப்படைத் தேவைகளை யார்ப் பூர்த்தி செய்வது ? ஜனநாயக பூர்வமான அரசு என்று பீற்றிக் கொள்ளும் இந்த அரசு தானே இதை செய்ய வேண்டும் .

            ஒரு தொழிலாளியோ ,நெசவாளியோ இல்லை ஒரு விவசாயியோ தனக்கு உழைப்பது மூலம் சமூகத்திற்கும் சேத்து தான் உழைகின்றான் .

            இங்க அரசுங்கறது ஒன்னும் ஒழச்சி மக்களுக்கு ஒன்னு கொடுக்கறது இல்லை அதனால //குழந்தைகளுக்கு உடை, இடம், கல்வி கொடுப்பதற்கு கூட அரசு தான் வேண்டுமா?// ங்கர பேச்சே அடிபட்டு போச்சு .

            நன்றி.

            • அனைத்தையும் அரசே இலவசமாக கொடுக்க வேண்டும் என்றால் அதற்கான பொருளை அரசு ஏதாவது ஒரு வழியில் ஈட்டித்தான் ஆக வேண்டும். மீண்டும் அது மக்களின் தலையில் அதிக வரியில் தான் வழியில் ஈட்டப்படும். நாட்டில் பொருளாதாரம் மிகுமின் அளவில் இருக்குமானால் தாங்கள் சொல்வது சாத்தியம். ஆனால் நமக்கு இப்போது இருப்பது பற்றாக்குறை பட்ஜெட் தானே நண்பரே, அனைத்தும் இலவசமாக தர வேண்டும் என்றால் மீண்டும் மக்கள் தலையில் அதிக வரி தான் வரும்.

              • இலவசம்னு சும்மா கூப்பாடு போடதீங்க நண்பரே ….
                இங்க யாரும் யாசகம் கேக்கல …

                அடிப்படைத் தேவைகளுக்கானப பொருட்களில் இருந்து மேட்டு குடியினருக்கான பொருட்கள் வரை உற்பத்தி செய்வது மக்களே. அப்படியிருக்கையில் அந்த உற்பத்திப் பொருட்களை அவர்களில் இருந்து பிரித்து வைப்பது எது ? அதை தகர்க்காமல் சும்மா பற்றாக்குறை பட்ஜெட்,அதிக வரி ன்னு சும்மா பம்மாத்து காமிக்காதீங்க.

                உற்பத்தி சமூகமாக இருக்கு ஆனா அதை பட்டுவாடா செய்வது தனி நபர் கைகளில் இருக்கு . அதை இந்த அரசு நீதி மன்றம், இராணுவம் , காவல்துறை போன்றவற்றை வைத்து பாதுகாக்கிறது .

                இத்தினி ஆண்டுகளாய் ஓட்டுப் போடுகிறோமே, எல்லாருக்கும் ஒழுங்கா சோறு கிடைக்குதா? நல்ல துணிக் கிடைக்குதா ? குடிக்க தண்ணி கிடைக்குதா ? நல்ல மருத்துவம் கிடைக்குதா ? நல்ல காத்து கிடைக்குதா ? பிள்ளைங்களுக்கு நல்ல கல்வி கிடைக்குதா ? வயசானவங்களுக்க நல்ல சாவாச்சும் கிடைக்குதா ? எதுவுமே கிடைக்கல அப்படிங்குபோது என்னத்துக்கு இந்த அமைப்பு இருக்குங்கிறேன்.

                இன்னமும் உங்களுக்கு இப்போ இருக்குற கேடுகெட்ட ஜனநாயகம் தான் வேணும்னா வச்சுக்கோங்க. எங்களுக்கு வேணாம். எங்க மக்களுக்கும் வேணாம்.

                சரி நீங்க சொல்ற மாதிரி இந்த அமைப்பே இருந்து ஓட்ட போட்டு போட்டு ஒவ்வொரு அஞ்சு ஆண்டுகளுக்கும் ஒருத்தன தேர்ந்தெடுத்து இந்த அமைப்ப சரி செய்யங் காட்டியும் இந்த நாடே சுடுகாடாயிடும் பரவாலாயா?

            • அடிப்படை தேவைகள் என்னென்ன என்று கூறுகிறீர்களா?
              இதில் எவற்றை எல்லாம் அரசு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் விளக்கினால் நன்றாக இருக்கும்.

              ஒரு தொழிலாளியோ, நெசவாளியோ இல்லை விவசாயியோ தனக்கு உழைப்பது மூலம் சமூகத்திற்கும் சேர்து தான் உழைக்கிறான் என்று கூறுகிறீர்கள். சரி, அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம்/வருமானம் என்ன என்று நாம் சரியாக நிர்ணயித்து அந்த வருமானம் அவர்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும். நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன், விவசாயி, சேற்றில் கால் வைக்கவில்லையெனில் நாம் சோற்றில் கை வைக்க இயலாது. அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படவேண்டும் என்பதில் வேறு பேச்சே இல்லை.

              நாட்டின் ஒவ்வொரு தொழிலாளியும் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் என்ன என்று நிர்ணயிக்கப்பட வேண்டும். அதன் பின் அது அவர்களுக்கு சரியாக வழங்கப்படுகிறதா, இல்லை ஏமாற்றப்படுகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.

              உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்த பின் அவரவர் குடும்பத்திற்கான செலவுகளை அவரவர் தான் செலவிட வேண்டும். அனைத்திற்கும் அரசே செய்யும் என்று நம்பி, அண்டி இருக்க தேவை இல்லை.

              துபாய் போன்ற ஊர்களில், உள்ளூர் அரபு குடிமக்களுக்கு நீங்கள் சொல்வது போன்ற அனைத்து வசதிகளும் இலவசமாக அரசே வழங்குகிறது, மேலும் மாதாமாதம் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அரசு மூலம் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்கும்போதும் உள்ளூர் அரபுகளை பார்ட்னராக கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். இதனால் உள்ளூர் அரபுகளுக்கு மாதாமாதம் குறைந்த பட்ச வருமானம் என ஒன்று அவர்களுக்கு கிடைக்கிறது. மிகுமின் பட்ஜெட் அரசாங்கத்தில் இது போன்ற நிலை சாத்தியம். ஆனால் நம் ஊரில் நம் நாட்டு வருமானம் பெருமளவு ஊழல் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் பற்றாக்குறை பட்ஜெட் என்ற நிலை உள்ளது. ஊழல் அரசியல்வாதிகளின் அனைத்து சொத்துக்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டால் தான் நீங்கள் சொல்வது போல அனைத்தையும் மக்களுக்கு இலவசமாக வழங்க முடியும்.

              நாம் இருவரும் பார்ப்பதற்கு எதிரெதிர் அணியில் இருப்பது போல தோற்றமளித்தாலும், இறுதி தீர்வு என்ற வகையில் இருவருமே ஒரே தீர்வை நோக்கி தான் யோசிக்கிறோம். நான் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்கி, பின்னர் அவரவர் செலவுகளுக்கு அவரவரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறேன். தாங்கள் தற்போதுள்ள வருமானத்திலேயே அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். அரசே மக்களின் அனைத்து செலவுகளையும் ஏற்கும் என்று தெரிந்த பட்சத்தில் மக்களுக்கு அதிகம் உழைக்க வேண்டும் என்ற உந்துதல் குறையும்.

              அதிகம் உழைத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற நிலை இருந்தால் மக்களின் வேலைத்திறன் நன்றாக இருக்கும். எப்படி உழைத்தாலும், ஒரே ஊதியம் தான் என்றால் வேலைத்திறன், வேகம் அனைத்தும் குறையவே செய்யும்.

              ஒரு அலுவலகத்தில் அல்லது தொழிற்சாலையில் 10,000 சம்பளம், வேலைக்கேற்ப 5000 அல்லது 10,000 ஊக்கதொகை என்று வழங்கப்பட்டால் ஊக்கத்தொகைக்காக அங்கு வேலை செய்பவர்கள் அதிக திறமையை, வேகத்தை காட்டுவார்கள். ஆனால் என்ன வேலை செய்தாலும், வெறும் சம்பளம் மட்டும் தான் என்றால் ஒன்றிரண்டு ஏமாளிகள் தவிர பெரும்பான்மையானவர்கள் கொடுக்கும் சம்பளத்திற்கேற்ப வேலை செய்தால் போதும் என்று சுணங்கி விடுவர்.

              இதனால் அனைவருக்கும் ஒரே சம்பளம்/ஊதியம் என்றால் வேலைத்திறன், வேகம் குறையவே செய்யும்.

              • // அதிகம் உழைத்தால் அதிகம் சம்பாதிக்கலாம்//

                உங்களுக்கு புரிய வைக்க கடைசி தடவையாக முயற்சி செய்கிறேன் .

                பொதுவாக நம் நாடு விவசாயப பின்னணி கொண்டிருப்பதால் நான் அவர்களையே இங்கே எடுத்துக்காட்டுகிறேன் .

                பண்ணையார் , பணக்கார விவசாயிகள்,நடுத்தர விவசாயிகள்,சிறு விவசாயிகள் மற்றும் கூலி விவசாயிகள் என அந்த வர்க்கம் பிரிந்து கிடக்கிறது .

                இவர்களில் அதிகம் உழைப்பை செலுத்துவது கண்டிப்பாக கூலி விவசயியகதான் இருப்பான் அதற்கடுத்த நிலையில் சிறு விவசாயியும் இருப்பான் . உழைப்பு கீழிருந்து மேலே போகும் போது குறைகிறது.

                உங்கள் கூற்றின் படி , கூலி விவசாயிதான் அதிகம் சம்பாதிக்க வேண்டும் ஆனால் அந்தோ பரிதாபம் அவன் சோற்றுக்கு கூடத தரித்திரமாகத தான் திரிகிறான்.

                ………..
                அதே போல ஒரு கார்த தொழிற்சாலையை எடுத்து கொள்ளுங்கள். ஒரு ஒப்பந்த தொழிலாளி வாங்கும் மத சம்பளம் எட்டாயிரம் ருபாய் . அதே வேலை , பதவி மேலே செல்ல செல்ல உழைப்பு குறைகிறது சம்பளம் அதிகரிக்கிறது . உங்களது கூற்று நம் கண் முன்னே பொய்பிக்கபடுகிறது.

                //ஆனால் என்ன வேலை செய்தாலும், வெறும் சம்பளம் மட்டும் தான் என்றால் ஒன்றிரண்டு ஏமாளிகள் தவிர பெரும்பான்மையானவர்கள் கொடுக்கும் சம்பளத்திற்கேற்ப வேலை செய்தால் போதும் என்று சுணங்கி விடுவர். //

                இங்கே ஏமாளிகள் யார் ? உழைப்பாளிகள? அல்லது மேலிருந்து கீழேயுள்ளவரை சுரண்டுபவரா ?
                உங்கள் புரிதலே தவறாகவும் கொடூரமானதாகவும் இருக்கிறது. நல்லது .

                இப்பொழுது கூறுங்கள். ஒரு கூலி விவசாயிக்கும் , பண்ணையாருக்கும், கார் தொழிலாளிக்கும் , கார் முதலாளிக்கும், எவ்வாறு சம்பளம் நிர்ணயம் செய்வது . அது கண்டிப்பாக நேர்மையான முடிவாகவும் இருக்க வேண்டும் .

                சில பேர் சொல்கிறார்கள் முதலாளி முதல் போடுகிறான் என்று . என்ன பெரிய முதல் போடுகிறார்கள் ? தொழிலாளியும் தான் முதல் போடுகிறான். அத்துனை கடுமையாக வேலை செய்ய அவனது உடம்பு என்னும் உற்பத்தி சக்தியை முதலாக போடுகிறான். அவன் பெறுகிற சம்பளத்தில் கணிசமான பங்கு அவன் உடலைப் பேணுவதற்கே செலவாகிறது . பொதுவாக சொல்வதானால் அவன் உயிர் ஒம்புதலுக்கான சம்பளமே பெறுகிறான்.

                நன்றி

                • நண்பரே, முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு வேறுபாடே இல்லை. முழுக்க முழுக்க ஒத்துக்கொள்ளும் விடயம் அது.

                  நான் மேலே பதிவினில் கூறியது ஒருவரின் வருமானத்தை பெருக்குவதை பற்றி தான்.
                  ஒரே வேலையில் ஒரே நிறுவனத்தில் ஒரே வகையான வேலையை காலம் முழுக்க செய்தால் வருமானம் உயராது. ஒருவரின் வருமானத்தின் அளவை அவர் தான் தீர்மானிக்க முடியும் என்று நான் சொன்னது காலத்துக்கேற்றது போல அவர்கள் தங்களது தொழில் திறமையை, தகுதியை, தங்களது தொடர்பு வளையத்தை எப்படி விரிவாக்குகிரார்களோ, அதற்கேற்ப அவர்களின் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது என்று உரைக்க தான். மூட்டை தூக்கும் ஒருவர் காலம் முழுக்க மூட்டை தூக்கினால் எப்படி அவரது வருமானம் உயரும்.

                  ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஏழையாகவோ பணக்காரராகவோ நாம் பிறப்பது நம் கையிலில்லை. அதன் பின் ஏழையாகவே இருப்பதும், பணக்காரராக மாறுவதும் அவரவர் உள்ளத்தினுள் உள்ள தீ யை பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

                  உங்களை பொறுத்தவரை முதலாளி என்றாலே ஏமாற்றுபவர், ஏய்ப்பவர், சுரண்டுபவர் என்று தீர்மானித்து பேசுகிறீர்கள். ஏன், தொழிலாளியாக வாழ்ந்து பின்னர் உழைப்பால் உயர்ந்து முதலாளியாக வாழ்ந்தவர் ஒருவர் கூட உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

                  கம்மியுநிஸ்ட் நண்பர்கள் ஒருவர் கூட உழைப்பால் உயர்ந்ததில்லையா? முதலாளியாக இருப்பவர் பரம்பரை பணக்காரராக தான் இருக்க வேண்டும் என்று என்ன சட்டம் இருக்கிறது? ஒன்றுமில்லாமல் தமது வாழ்க்கையை ஆரம்பித்து இன்று பலருக்கு வேலை கொடுக்கும் நிலையில் உயர்ந்த எத்தனையோ நபர்களை நான் கண்டுள்ளேன். அத்தகையோரிடம் வேலையும் செய்திருக்கிறேன். சுறுசுறுப்புக்கு இலக்கணமாக, உழைப்புக்கு உதாரணமாக இருந்தவர்கள் அவர்கள். அவர்களும் முதலாளிகள் தான்.

                  • திருப்பியும் விவசாயித்தையே எடுத்துக்குவோம் .. மற்ற எல்லாத்தையும் மறந்துடுவோம் ……

                    ஒரு கூலி விவசாய குடும்பம் இருக்கு …அவங்க ஒரே வேலையே பண்றதுள்ள .. நல்ல மழை பெஞ்சு நிலம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தா நாத்து நட போவாங்க , களை எடுக்க போவாங்க , வாய்க்கா வெட்ட போவாங்க, கதிர் அறுக்க போவாங்க..தண்ணி மாற போவாங்க ,கரும்பு வெட்ட போவாங்க ……
                    இங்க இருக்குற மக்கள் மட்டுமில்ல , வெளியில இருந்தும் அம்மாதிரியான கூலி விவசாய மக்கள் வருவாங்க …

                    ஒருவேளை நிலமெல்லாம் மழையில்லாமல் காஞ்சு போச்சுன்னு வெச்சுக்கோங்க. என்ன பண்றது? நகரத்துக்கு போவாங்க ..எதாவது வேலை கெடைக்குமான்னு பாப்பாங்க..குடும்பத்த கூட்டிகிட்டா போவாங்க? தனியாள தான் போவாங்க …. வாழ்க்கை பாடு சிரமம் தான் .

                    நீங்க இந்த மாயையில் இருந்து மொதல்ல வெளியுல வாங்க …சும்மா உழைப்பால உயருதல்னு சும்மா நீதி போதனை சொல்லிட்டு இருக்காதீங்க … இப்படி சொல்லி உழைக்கும் மக்களை கேவல படுத்தாதீங்க…

                    என்னோட கேள்விகள் ,

                    அவங்க கடைசி வரைக்கும் தொழிலாளியா இருக்குறதுல நீங்க அப்படி என்ன தப்பு கண்டுபிடிச்சிட்டீங்க?

                    கடைசி வரைக்கும் தொழிலாலிய இருந்தா குறைவான ஊதியம் தான் வாங்கனும்மா ?

                    மிகப்பெரிய கேள்வி என்னன்னா அப்படி எல்லாரும் உழச்சி, தகுதிய ,தொடர்பு வலையத்த வளர்த்து பெரியாளு ஆகிட்ட ஆக்கபூர்வமான வேலையை யார் பார்ப்பது ? (உடனே ஆக்கபூர்வமான வேலைன்ன என்னனு கேட்பீங்க, சரி சொல்றேன், விவசாயம் பண்றது, பேருந்து ஓட்றது, மின் கம்பம் நடுவது, ரோடு போடுவது , பாலம் கட்டுவது , கார் தொழிற்சாலையில் வேலை பார்பது ….இன்னும் பிற……)

                    அப்படி பெரியாள வர வரைக்கும் குறைவான ஊதியம் தாம் கிடைக்கும்னா இந்த கேவலமான அமைப்பு வேண்டாங்கிறேன் .

                    ஒருத தொழிலாளியோ,விவசாயியோ அவங்க வேலையுல திறமையா தான் இருக்காங்க. அதனால நம்ம வண்டியெல்லாம் ஓடிட்டு இருக்கு ..
                    அப்படிங்கறத மனுசல வெச்சுகோங்க…..அவ்ளோதான்…

                    நன்றி

                    • உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற குறிக்கோளை நாம் அடைந்து விட்டால் அதுவே நமது பெரும்பாலான விவாதங்களுக்கு முற்றுபுள்ளி வைத்து விடும்.

                      நீங்கள் சொல்வது போல் ஏர் உழுபவருக்கு இன்ன அளவு கூலி, மின் கம்பம் நடுபவருக்கு இன்ன அளவு கூலி, சாலை போடுபவருக்கு இன்ன அளவு கூலி என்று அனைத்து தொழிலாளர்களின் வேலைக்கும் குறைந்த பட்ச கூலி அளவு நிர்ணயம் செய்யப்பட்டு அது அரசின் மூலம் சட்டமாக்கப்பட்டால் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு முடிவு கிடைக்கும்.

                      நான் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில் உங்களுக்கு எதிராக இல்லை. கம்மியுனிசம் என்ற பெயரில் தற்போது அரசியல் வாதிகள் என்ற கும்பலின் கையில் உள்ள அதிகாரத்தை கம்மியுனிச வாதிகள் என்ற வேறொரு கும்பலின் கையில் கொடுப்பது தான் எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இந்த புதிய கும்பல் ஜனநாயக வழிமுறையின் படி மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தால் எனக்கு அதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் மக்களின் ஆதரவு பெறாமல் புரட்சி என்ற பெயரில் ஆயுத போராட்டம் மூலம் ஆட்சியை கைப்பற்றினால் பின்னர் இந்த புதிய கும்பல் சர்வாதிகார கூட்டமாக மாறி விடாது என்று என்ன நிச்சயம்.

                      உதாரணத்திற்கு புரட்சியின் மூலம் கம்மியுனிச ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டு பின்னர் அதன் தலைமயில் மோடி-ஜெயலலிதா போன்ற சர்வாதிகார பாசிச மனப்பான்மை உள்ள புதிய கும்பல் கையில் நாட்டின் அதிகாரத்தை கொடுத்தால், பின் மக்கள் எப்படி அவர்களை தூக்கியெறிய முடியும்?

                      மீண்டும் மீண்டும் என்னை உழைப்பாளிகளுக்கு எதிரானவனாகவோ, தொழிலாளிகள், விவசாயிகளுக்கு எதிராகவோ சித்தரிக்க முயல வேண்டாம். என் எதிர்ப்பு என்பது வர்க்கப்போராட்ட போர்வைக்குள் நாட்டின் அதிகாரத்தை பின்வாசல் வழியே கைப்பற்ற முயலுவதை தான் நான் எதிர்க்கிறேன். கம்மியுனிசம் என்ற போர்வையில் சர்வாதிகாரம் நுழைய நான் எதிர்க்கிறேன்.

                      உங்களுக்கு உண்மையிலேயே மக்கள் நலம் மேல், ஜனநாயக உரிமைகளின் மேல் நம்பிக்கை உள்ளதானால் ஜனநாயக வழிமுறையிலேயே மக்களின் பேராதரவை முதலில் பெற்று, பின் ஆட்சி அமைத்து மக்களுக்கு நற்பணி ஆற்றலாமே.

                      மக்களின் பேராதரவை பெறாத போராட்டங்கள் நீண்ட நாள் வெற்றியை தராது.
                      ஜனநாயகத்தை மதிக்காத தலைமை நீண்ட நாள் நிலைக்காது.

                      மற்றபடி ஊழல் எதிர்ப்பு, மக்கள் நலன், தொழிலாளர் நலன், விவசாயிகள் நலன், ஜனநாயக உரிமைகள், கருத்து சுதந்திரம், நாட்டு நலன், அனைவருக்கும் கல்வி, இவற்றில் எல்லாம் நான் உங்கள் கருத்துக்களோடு ஒன்றித்தான் இருக்கிறேன்.

        • தவறாகச் சொல்லுகீறிர்கள். இதுவரை அனைத்தும் உழைப்பாளிகள் கொடுத்தது. தொழிலாளிகளுக்கு யாரும் எதையும் கொடுத்துவிடவில்லை. உழைப்பாளிகளால் உலகம் இயங்குவதால் தான் உழைப்பாளிகள் தலைமையில் அரசை நிறுவ வேண்டும் என்கிறோம்.

          நடுத்தர வர்க்கங்களையும் பாட்டாளிகள் தான் ஆளும் வர்க்கத்தின் துன்பங்களிலிருந்து விடுவிக்கிறார்கள் என்பதையும் நோக்குக. ஏனெனில் உங்களைப் போன்று பாட்டாளிகளுக்கு சோசலிசம் என்பது தேர்வல்ல! தீர்வு!

            • இல்லை. தோழர் சிவப்பு. அது தோழர் க.கைக்கு சொல்லப்பட்டது. உங்களது கருத்துக்கள் படிக்கவும் புரிந்து கொள்ளவும் எளிமையாக இருந்தது.

        • உடுக்கத் துணி , தூங்க வீடு , சுவாசிக்க தூய்மையான காத்து அப்புறம் இதையெல்லாம் அரசு சும்மா குடுக்க (அரசோட கடம அது தான் )வேண்டாம் அதுக்கு பதிலா குறைந்தது ஒரு நல்ல வேலை .
          அப்படி தான் நான் சொல்லி இருக்கேன் ..

          நான் என்ன டாடா அம்பானியா எல்லாத்தயும் சும்மா குடுக்க சொல்ல . என்னால உழைக்க முடியும். என் உழைப்பிற்கேற்ற ஊதியத்த குடுங்க.

          அப்புறம் அந்த காச வெச்சுக்கிட்டு நான் என்னத்த பண்ண? . தூய்மையான காத்துக்கு,தண்ணிக்கு நான் எங்க போவேன் ?.

          சரி எல்லாத்தியும் நானே பண்ணிகிட்டா அரசோட வேலை என்ன? அதான் நாங்களே எல்லாத்தியும் பண்ணிக்கிறோம் இந்த அரசு எங்களுக்கு வேணாம்னு சொல்றோம். சும்மா பொறுப்பப் பத்தி பேச வந்துட்டாரு ..

          .
          நீங்க கொஞ்சம் பொறுப்பா படிச்சிட்டு என்னோட பொறுப்பா பத்தி பேசலாமே ..

          • சிவப்பு சாருக்கு எப்போதும் அரசையே நம்பி இருக்க வேண்டும் என்று ஏன் தான் தோன்றுகிறதோ, தன்னம்பிக்கை என்று ஒன்று இருக்கிறது, நினைவிருக்கிறதா நண்பரே,

            அரசை நம்பாதே, அரசை அண்டி இருக்காதே, வேலையை அரசு தர தேவையில்லை. நல்ல வேலையை நாமே தேர்ந்தெடுக்கலாம்.

            அரசுக்கு என்று சில கடமைகள் இருக்கிறது, இல்லையென்று சொல்லவில்லை. நல்ல சாலைகள், நல்ல கல்வியமைப்பு, அண்டை நாட்டிலிருந்து பாதுபாப்பு, உள்நாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, கருத்து சுதந்திரம், சீரான விலை, திடமான வளர்ச்சி, இதெல்லாம் அரசின் கடமை தான். அந்த கடமையை அது செய்யாத பட்சத்தில், அந்த அரசை தூக்கி எரியும் பலம் நம்மிடம் இருக்கிறது. நாம் அதனை சரியாக பயன்படுத்தாமல் மீண்டும் மீண்டும் ஊழல் செய்பவர்களையே காசு வாங்கிக்கொண்டு தேர்ந்தெடுத்தால் இப்படி தான் நடக்கும்.

            அரசு என்பது என்னமோ வேற்றுகிரகவாசிகளால் உருவான ஒரு அமைப்பு போல பேசுகிறீர்கள்? இந்த அரசை அரியணையில் ஏற்றியது நாம் தான். இந்த அரசில் ஆட்சியில் அமர்ந்துள்ளது வேற்றுகிரகவாசிகள் அல்ல, இந்த அரசின் கட்டளைகளை செயல்படுத்தும் அரசு அதிகாரிகளும் வேற்றுகிரகவாசிகள் அல்ல, அவர்களும் நம்மவர்கள் தான், மனிதர்கள் தான். நாம் தான் அரசு வேறு மக்கள் வேறு என்று அந்நியப்படுத்தி பார்க்கிறோம். அரசை உருவாக்குவதும் மக்கள் தான். அரசில் அங்கம் வகிப்பதும் மக்களால் அனுப்பப்பட்டவர்கள் தான். கடமையை ஒழுங்காக செய்ய தவறினால் ஆட்சியில் நிலைக்க முடியாதென்ற பயம் அவர்களுக்கு வந்தால் நல்லாட்சி கிடைக்கும். அதற்கு என்ன வழி என்று யோசிப்போம்.

  91. Hi KK,

    //I also feel that *** all the corrupt politicians are arrested and put to jail //

    இது நியாயமாக படுகிறது இல்லையா? சர்வாதிகாரமாக படவில்லை இல்லையா?

    //then that is the end of life for the country.//

    இல்லை. மீண்டும் முயற்சி செய்யவேண்டியதுதான். Before perfecting a bulb, Edison has tried hundreds of times. Humanity has to try till it creates Paradise here on earth. We need to do our share for the well-being of our future generations.

    //சோசலிசத்தை ஒட்டுமொத்த புரட்சியினால் மட்டும் தான் செயல்படுத்த முடியும் என்று அர்த்தம் இல்லை. ஜனநாயக ரீதியிலேயும் செயல்படுத்தலாம்//

    We say the same thing. Revolution means making a meaningfull change in the organization. It does not mean fighting the establishment, which is just a portion of the Revolution. It would be necessary only when there is to resistance. Otherwise the steps you have given are a long route at the best or unending route at the worst. We are not looking for a short cut either.

  92. பட்டி,

    1. தவறு செய்பவர்களை கைது செய்வது சர்வாதிகாரம் இல்லை, சட்டம் ஒழுங்கு.
    2. முயற்சி செய்யுங்கள், தவறில்லை, ஆனால் இச்சமயம் முயலும்போது சர்வாதிகார வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்காதீர். அது வீண் முயற்சி. மக்களின் ஆதரவு கிடைக்காது.
    3. மற்றபடி மக்களுக்கு நன்மை பயக்கும் ஆட்சி கிடைத்தால், அது மன்னராட்சியாக இருந்தாலும் எனக்கு சம்மதம் தான்.

    • KK,

      நீங்க தவறு செய்பவர்களை கைது செய்தா, சட்டம் ஒழுங்கு.
      நாங்க தவறு செய்பவர்களை கைது செய்தா, சர்வாதிகாரம்.

      இது நல்லா இருக்கே!

      • பட்டி,

        தவறு செய்பவர்களை அரசு தண்டிக்க வேண்டும் என்று தான் சொல்கிறேனே தவிர எல்லோரும் சட்டத்தை கையில் எடுத்தல் பின்னர் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆகி விடுவான்.

        ஒவ்வொரு வர்க்கத்திற்கும் தங்கள் பக்கம் நியாயம் உள்ளது என்றெண்ணி வன்முறையில் ஈடுபட்டால் நாடு இரண்டாகி விடும். ஆயுதத்தை ஏந்தியவன் நியாயமே நியாயம் என்ற நிலை உண்டாகும்.
        ஆயுதத்தை ஏந்துபவர் நீங்களாக இருக்கும் வரை அது உங்களுக்கு இனிக்கும், ஒருவேளை, உங்கள் எதிரி கையில் உங்களை விட பலமான ஆயுதம் இருந்தால், பின்னர் உங்கள் சுதந்திரம் மிதிப்பட்டு விடும்.

        அதனால் தான் சொல்கிறேன், மீண்டும் மீண்டும் சொல்கிறேன், ஆயுதம், வன்முறை, இதெல்லாம் நிரந்தர தீர்வை தராது.

        மற்றொரு முக்கிய விடயம், எல்லோரும் ஆயுதத்தை ஏந்துவது எப்போது நடக்கும், நாட்டின் தலைமை சரியில்லாதபோது அவ்வாறு நடக்கும். அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து அரவணைத்து செல்லும் தலைமையை மக்கள் எப்போது தேர்ந்தேடுப்பார்களோ, அப்போது தான் நாடு உருப்படும். தலை சரியாக இருந்தால் அனைத்தும் படிப்படியாக ஒழுங்காகும்.

        • புரட்சி என்பது ஒட்டு மொத்த மக்களையும் இணைத்து செயல்படும்போது தான் அது உண்மையான மக்கள் புரட்சி, இல்லை என்றால் அது வெறும் ஒரு குழுவின் ஆயுத புரட்சி மட்டும் தான். அது நீண்ட நாள் நிலைக்காது. ஒட்டு மொத்த மக்களின் பேராதரவை எப்படி பெறுவது என்ற கோணத்தில் நாம் யோசித்தால் தீர்வு கிடைக்கும்.

          ஒட்டு போடாதே, ஒட்டு போடாதே என்று சொல்லும் உங்கள் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை என்று இன்னும் சிந்திக்காமல் பொய்யான பார்வையில், பொய்யான நம்பிக்கையோடு நாம் காலத்தை வீணடித்து கொண்டிருக்க வேண்டியது தான்.

          புரட்சி என்பது பொதுமக்களை இணைத்து செயல்பட்டால் தான் அது உண்மையான புரட்சி.
          மக்கள் உங்கள் மேல் கவனம் திரும்பும் வகையில் நீங்கள் அவர்களுக்கு ஏதேனும் நற்பணி செய்தால் அவர்களின் ஆதரவு படிப்படியாக உங்களுக்கு கிடைக்கும்.
          10 பேர் சேர்ந்தால் ஒரு தெரு திரும்பி பார்க்கும்.
          10 இலட்சம் பேர் சேர்ந்தால் ஒரு மாநிலமே திரும்பி பார்க்கும்.
          முதலில் மக்கள் பேராதரவு உங்களுக்கு கிடைக்க என்ன வழி என்று பாருங்கள்.

          • கற்றது கையளவு அவர்களுக்கு,

            \\ஒட்டு போடாதே, ஒட்டு போடாதே என்று சொல்லும் உங்கள் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை என்று இன்னும் சிந்திக்காமல் பொய்யான பார்வையில், பொய்யான நம்பிக்கையோடு நாம் காலத்தை வீணடித்து கொண்டிருக்க வேண்டியது தான்.\\

            உங்களது வழிக்கே வருவோம். ஓட்டுப் போடு என்று சொன்னவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள்? மக்கள் ஆதரவை பெற்றார்களா? எத்துணை ஆயிரம் கோடிகளை அள்ளி வீசியிருக்கிறார்கள்? மீடியா என்ன செய்தது? மக்களிடம் வளர்ச்சி திட்டங்களைச் சொல்லி ஓட்டு கேட்டார்களா? 31% பிஜேபியை தேர்ந்தெடுக்க மோடி பயன்படுத்தியது எதை? மோடியை பயன்படுத்தியவர்கள் யார்?

            69% பிஜேபியை நிராகரித்திருக்கிறார்கள் அவர்களுக்கு நீதி என்ன? அல்லது உங்களது கருத்தின் படி இவர்களுக்கு மாற்று என்ன?

            ஜனநாயகம் என்று சொல்லிவிட்டு ஒரு குழு மட்டும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு உங்களது பதில் என்ன?

            நீங்கள் தற்போது வரை கம்யுனிசம் பற்றிய கற்பனையிலும் அவதூறிலும் தங்களுக்குள்ள பிரத்யேக வர்க்க நலன்களிலும் இருந்து விவாதிக்கிறீர்கள்.

            சோசலிச புரட்சி செய்தவர்கள் ஆயுதம் ஏந்திய குழு என்று சொல்கிற நீங்கள் அம்பானிக்காவும் அதானிக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பெரும்பான்மை மக்கள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூசாமல் பொய் சொல்வது ஏன்?

            • திரு தென்றல் அவர்களே,

              மக்கள் ஆதரவு பெற முயலுங்கள் என்று தான் சொன்னேனே தவிர மக்களுக்கு இலஞ்சம் கொடுத்தோ, இல்லை மக்களை ஏய்த்தோ ஆதரவை திரட்ட நான் சொல்லவில்லை. காசு கொடுத்து பெறப்படும் மக்கள் ஆதரவு நீண்ட நாள் நிலைக்காது. திமுக அதனை 2011 தேர்தலில் உணர்ந்திருக்கும். இப்போது மக்கள் ஆதரவு வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. ஈழ விவகாரத்தில் மக்களின் உணர்ச்சியை ஜெயலலிதா கைப்பற்றி அதிக வாக்குகளை இச்சமயம் பெற்றிருக்கிறார். அதிமுகவிற்கு இணையான வலுவான எதிர்கட்சியாக இப்போது திமுக இல்லை. விலைவாசி உயர்வு, மின்சார தட்டுப்பாடு போன்ற பல விடயங்களில் அதிமுகவை சரியான வகையில் திமுக எதிர்க்கவில்லை. அவர்களுக்குள் சேம் சைடு கோல் அடிப்பதிலேயே அவர்கள் மும்முரமாக இருந்தனர். ஸ்டாலின் – அழகிரி பிரச்சினையினால், காங்கிரசுடன் நீண்ட நாள் கூட்டு வைத்ததினால் திமுக மக்களின் இதயத்திலிருந்து பல மைல் தூரம் விலகி உள்ளது உண்மை. தற்போது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்பது காங்கிரஸ் மற்றும் திமுக ஈழ பிரச்சினையை கையாண்ட விதத்திற்கும், ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, தொலைதொடர்பு ஊழல்களினால் மக்கள் அவர்களை தண்டிப்பதற்காக அதிமுகவிற்கு முழு ஆதரவு அளித்தனர். ஆனால் அதிமுக ஆட்சிக்கு மக்கள் பேராதரவாக இருக்கிறார்கள் என்று இதை எடுத்துக்கொள்ள முடியாது. மக்கள் விரோத ஆட்சியை கொடுத்தால் மக்கள் காசு வாங்கிக்கொண்டு எதிராக தான் வாக்களிப்பார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

              இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் ஒட்டு மொத்த மக்களின் ஒட்டு ஒரு தனிக்கட்சிக்கு அகில இந்திய அளவில் கிடைப்பது என்பது மிகவும் கடினம். சுதந்திரம் பெற்ற காலத்தில் அது போன்ற நிலையில் காங்கிரஸ் இருந்தது. ஆனால் இப்போது எந்த கட்சிக்கும் விகிதாச்சார அடிப்படையில் பெரும்பான்மை கிடைக்கும் என்பது எண்ணுவது பேராசை. அனைத்து மாநிலங்களுக்கும் அதிக சுதந்திரம், சுயாட்சி கொடுத்து மத்தியில் உள்ள அரசு பாதுகாப்பு, வெளியுறவு போன்ற முக்கிய பொறுப்புகளை மட்டும் செயல்படுத்தும் வகையில் இருந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

              நீங்கள் பாஜகவுக்கு 31 சதவீத வாக்கு மட்டும் தான் கிடைத்தது என்று சொல்கிறீர்கள். ஆயுத புரட்சி நடந்து நாட்டை ஒரு கும்பல் கைப்பற்றினால் அந்த ஆட்சிக்கு 31 சதவீதம் அல்ல 0.௦௦௦31 சதவீதம் கூட மக்கள் ஆதரவு கிடைக்காது. ஆயுத புரட்சி நீண்ட நாள் நிலைக்காது.

            • நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் ஒரு குழுவிடம் இருக்கும் அதிகாரத்தை கையில் எடுத்து இன்னொரு குழுவிடம் கொடுக்க சொல்கிறீர்கள். இந்த புதிய குழு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அவர்களாகவே புரட்சி செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்று சொல்கிறீர்கள். இந்த புதிய குழு தவறு செய்தால் மக்களால் அதை தூக்கி எறிய முடியாது.

              அப்போது இதற்கு என்ன தான் வழி? முதலில் இருந்த ஜனநாயக முறையில் தவறு செய்யும் குழுவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய 5 வருடத்துக்கு ஒரு முறையாவது வாய்ப்பு உள்ளது, நீங்கள் சொல்லும் குழு தவறே செய்யாது என்று என்ன நிச்சயம். ஆட்சி அதிகாரத்தை இந்த புதிய குழுவிடம் கொடுத்து பின் இவர்கள் மோடி போலோ அல்லது ஜெ போலோ ஆட்சி நடத்தினால் மக்களாகிய நாங்கள் என்ன செய்வது?

          • Hi KK,

            // அரசு தண்டிக்க வேண்டும் என்று தான் சொல்கிறேனே தவிர//

            நானும் அதைத்தான் சொல்கிறேன்.
            நீங்கள் கூறும் அரசு கைது செய்தால், சட்டம் ஒழுங்கு.
            நாங்கள் கூறும் அரசு கைது செய்தால், சர்வாதிகாரமா?

            //ஆயுதத்தை ஏந்தியவன் நியாயமே நியாயம் என்ற நிலை உண்டாகும். *** எதிரி கையில் உங்களை விட பலமான ஆயுதம் இருந்தால், பின்னர் உங்கள் சுதந்திரம் மிதிப்பட்டு விடும்//

            This is the current situation.

            // தலை சரியாக இருந்தால்.//

            This is hero/ine worship. This is depending too much on individuals. This ugly situation should become obsolete soon.

  93. கற்றது கையளவு ,

    //ஆனால் இச்சமயம் முயலும்போது சர்வாதிகார வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்காதீர். அது வீண் முயற்சி. மக்களின் ஆதரவு கிடைக்காது.//

    ஆட்சியை பிடித்த பின்பு தான் சர்வாதிகாரம் அதுவும் மக்கள் சர்வாதிகாரம் தான் 🙂

    அது சரி, நீங்க இதுக்கெல்லாம் வர மாட்டீங்களா? ஏன் பிரித்து பேசுகிறீர்கள் ?

  94. கற்றது கையளவு அவர்களுக்கு,

    சட்டம் ஒழுங்கு தொடர்பாக
    ————————–

    சட்டம் ஒழுங்கு பற்றி பேசுகிறீர்கள் க.கை. இதுவரை உள்ள சட்டங்களில் பெரும்பாலானவை சொத்துக்கள் தொடர்பானவை. அப்படி இருந்தும் கூட ஜெ போன்றவர்களை தண்டிக்க முடியவில்லை. தயனாந்த சரஸ்வதியும் காஞ்சி சங்கராச்சாரியும் வஹ்பு வாரியும் தென்னியந்தியத் திருச்சபையும் மத உரிமைகளைக் காட்டித்தான் சொத்துக்களைப் பராமரிக்கின்றன.

    அரசை எதிர்த்து பேசினால் தேசத் துரோகச் சட்டம், Waging War against Government and Sedition Charges. மணிப்பூர் காஷ்மீரை நோக்குகிற பொழுது இந்தியாவை விட சர்வாதிகார நாடு ஒன்று இருக்க முடியாது.

    இதுவரை எந்த அரசியல்வாதியும் தண்டிக்கப்பட்டதில்லை. மோடி அமித் ஷா போன்றோர் தலைவர்களாக வருவதை ஜனநாயகம் என்று பல இடங்களில் எழுதுகிறீர்கள். 69சதவீத மக்கள் எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை மலம் துடைத்த குச்சியாகப் பார்க்கிறது ஜனநாயகம் குறித்த உங்களது பார்வை.

    ————————–
    லோக்பால் பில்லை நீங்கள் பாசிட்டிவ் ஆக அணுகுகிறீர்கள். லோக்பால் பில்லுக்காக கெஜ்ரிவாலும் ஹசாரவும் உருவாக்கப்படவில்லை. அவர்களுடைய என்ட்ரி வேறுவிதமானது. ஆனால் நீங்கள் சொல்வதைப் போல லோக்பால் இருந்தால் அதுதான் ஜனநாயகத்திற்கு எதிரானது. அதிகார குவிவு பரவலாக்கப்பட வேண்டும் என்று சொல்கிற பொழுது அடிமை வர்க்கத்தில் ரோமானிய செனட்டைக் கோருவது தான் லோக்பால்!

    லோக்பால் தான் ஒரு குழுவிற்கு மொத்த சர்வாதிகாரத்தை வழங்குகிற போக்கை ஆதரிக்கிறது.
    உங்களது கருத்துகள் சுயமுரண்பாடுகள் நிறைந்தாக இருக்கிறது என்பதை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

    உதாரணத்திற்கு ஒன்று; “புரட்சி என்பது ஒட்டு மொத்த மக்களையும் இணைத்து செயல்படும்போது தான் அது உண்மையான மக்கள் புரட்சி, இல்லை என்றால் அது வெறும் ஒரு குழுவின் ஆயுத புரட்சி மட்டும் தான். அது நீண்ட நாள் நிலைக்காது. ஒட்டு மொத்த மக்களின் பேராதரவை எப்படி பெறுவது என்ற கோணத்தில் நாம் யோசித்தால் தீர்வு கிடைக்கும்.”

    இந்தப் பதிலின் படி குறிப்பிட்ட ஒரு குழுவுக்கு மட்டும் அதிகாரங்கள் குவிகிற லோக்பாலை எப்படி மதிப்பிடுவது?

    • நண்பர் தென்றல் அவர்களே,

      நான் லோக்பாலை/ஜோக்பாலை ஆதரிப்பதாக தவறாக எண்ண வேண்டாம். என்னுடைய பல பதிவுகளில் நான் அசாரேவையும் கேஜ்ரிவாளையும் காமெடி பீசுகள் என்றும், விளம்பர ஸ்டண்ட் பார்டிகள் என்றும் கூறியுள்ளேன். நான் லோக்பாலை உதாரணத்திற்கு எடுத்தது அண்ணா அசாரே மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற நாகரீக கோமாளிகளால் ஒரு நாட்டின் சட்ட திருத்தத்தை கொண்டு வர முடியும் என்றால், மக்களுக்காக உண்மையாக போராடுபவர்களால் மக்கள் நலம் பேணும் சட்டங்களை, சட்ட திருத்தங்களை கொண்டு வர மக்கள் ஆதரவு தரமாட்டார்களா என்றே வினவினேன்.

      புரட்சி என்பது மக்களின் ஆதரவோடு இருந்தால் தான் அது நிலைத்து இருக்கும்.

      • கண்டிப்பாக மக்கள் ஆதரவோடு தான் அது நடக்கும் நண்பரே … நீங்களும் நானும் அவர்களில் ஒருவரே ..தங்கள் ஆதரவும் கண்டிப்பாக வேண்டும் ..

  95. சர்வாதிகாரம், ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பாக
    ———————————————————-

    சர்வாதிகாரம், ஜனநாயகம் ஆகிய இரண்டையும் வரையறுப்பதற்கு நீங்கள் எதை ஆதாரமாக கொள்கீறிர்கள் என்பதை விளக்கவில்லை. உங்கள் பார்வையில் சர்வதிகார ஆட்சி என்றால் என்ன?

    ஜனநாயகம் என்பதற்கான பார்வையை நான் வைத்துவிடுகிறேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு அல்ல. நமது நாட்டை தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று வரையறுக்கலாம்.
    மக்கள் எழுச்சியை இது கோரமாக நசுக்குகிறது. காந்தியம் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. கைராட்டை, கதர், அகிம்சை என்று நம்மிடம் சொல்லிவிட்டு இரண்டாம் உலகப்போருக்கு இந்தியாவில் ஆள்பிடித்துக்கொடுத்தவர் காந்தி.

    எந்த நாட்டு இராணுவ வீரனுக்கும் தான் எதற்காக யாருக்காக போரிடுகிறான் என்பது தெரியும். அகிம்சையை போதித்த காந்தி சேர்த்த படையில் அம்மக்களுக்கு தெரியுமா தாம் யாருக்காக எதற்காக போரிடுகிறோம் என்று! இது சர்வாதிகாரம் இல்லையா? ஜனநாயகத்தின் கூறுகள் எதாவது இருக்கிறதா?

    தடியெடுத்தவன் தண்டல்காரன் என்று சொன்னீர்களே. காந்தி கையில் அது தான் இருந்தது!

    ஏன் காந்தியை குறிப்பிட்டு கூறுகிறேன் என்றால் அவர் முன்வைத்த அஹிம்சை போலியானது மட்டுமல்ல. வன்முறையும் சர்வாதிகாரமும் மிக்கது என்பதைச் சொல்வதற்காகத்தான். ஏனெனில் உங்களது கருத்தும் இதைத் தான் சுற்றி சுற்றி வருகிறது.

    ——

    கருத்து சுதந்திரம் பற்றி அதிகம் கவலைப்படுகீறிர்கள். மகராஷ்ட்ராவில் சீத்தல் சாத்தே பாடல்களை பாடியதையே இந்த அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தியது.

    ஹிந்து ஆங்கில நாளிதழ் கருத்து சுதந்திரம் என்று சொல்லிவிட்டு ‘விஜிடேரியன்களுக்கு’ மட்டும் வீடு என்று விளம்பரப்படுத்துகிறது!

    பிரவீண் சாமி தினமும் முஜாகின்களைப் பற்றி மோடிக்கு நினைவுறுத்துகிறார். அதை தமிழில் சாரி மொழிபெயர்த்து பயபீதி கூட்டுகிறார். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றைக்காவது ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கம் என்று எழுதியிருக்கிறதா? சம்ஜிதா விரைவு ரயிலில் குண்டு வைத்தவர்கள் “சாரங்கபாணியும் அங்கயற்கண்ணியும் அவர்கள் கையில் டார்ச் லைட்டும் இந்திய மேப்புகளும் இருந்தன” என்பது பாணியிலான செய்திகளை படித்திருக்கீறிர்களா?

    என்றைக்காவது இது போன்ற செய்திகளின் தீவிரவாதத்தை மனித உணர்ச்சிகளின் அடிப்படையில் எந்தமாதிரியான விளைவுகளை நம்முள் உருவாக்கி வைத்திருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? இன்றைக்கு எந்த வகையான கருத்து சுதந்திரம் பிஜேபியை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது என்று வினவியிருக்கிறீர்களா?

  96. Hi KK,

    //மன்னராட்சியாக இருந்தாலும் எனக்கு சம்மதம் தான்.//

    You have not seen a real model of Monarchy. Almost all existing monarchies are constitutional monarchies not real kings/queens or dictators. There is no difference between them and other govts. They allow private property and they themselves have a large amount of it. You are ok with such monarchies, oligarchies, dictators, but not a real democracy by the common people for the common people. Thus what you are against is common property. You probably would do everything you can to hinder the formation of such govt.

    //ஆட்சியில் அமர்ந்துள்ளது வேற்றுகிரகவாசிகள் அல்ல, ***//

    Thanks for this info. However, they are interested in one class only. I know it is not easy to understand about the class division.

    //ஆட்சியில் நிலைக்க முடியாதென்ற பயம் அவர்களுக்கு வந்தால் நல்லாட்சி கிடைக்கும்.//

    At every 2 elections, people would choose the alternate. Politicians know it very well. Rarely the party will lose at the 2nd election itself or win in 3rd too.
    One important thing you should know is it is not good to entrust the country with a hero/ine surrounded by a small group. A large number of people have to participate in managing the country.

    //ஒரு மரம்வெட்டும் தொழிலாளி, ***/

    If the first woodcutter could notice new person getting double pay, can’t he notice his double output and sharpening of axe at hourly breaks before asking for the reason of double pay? This is an unrealistic example.

    //ஆகவே, முதலில் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள், *** முடிவு உங்கள் கையில் தான் உள்ளது.//

    This is right out of ‘Self development’ books. This technique will make you run all your life, without much difference in your life. Our approach is not ‘self’ development. We are interested in collective development. Please spare us such kind of advice. We know how to make our livelihood. Sivappu’s example is not for him but for all the people who are deprived of their rights to the natural resources since a long time.

    • I was replying to Mr.Sivappu’s example only. No one can say their earning limit is only this. If they say that, then they can blame only them. If you say you know everything, that’s fine. Collective development is possible if each and every person understands their responsibility and their capability and push their limits. The only fault with communism is that it doesn’t bring the best out of the teams. Excellence takes a beating. Sadly, that is the ground reality.

  97. கற்றது கையளவு அவர்களே,

    \\அனைத்தையும் அரசே இலவசமாக கொடுக்க வேண்டும் என்றால் அதற்கான பொருளை அரசு ஏதாவது ஒரு வழியில் ஈட்டித்தான் ஆக வேண்டும்.\\

    இது மிகவும் கொச்சையான கருத்து.

    உழைப்பாளிகள் யாரும் இலவசத்திற்காக தொங்கிக் கொண்டு நிற்கவில்லை. இந்திய அரசின் ரெவன்யு 75சதவீதம் ஏழைபாளிகளிடம் இருந்து வருகிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய வரிச்சலுகை மட்டும் 55ஆயிரம் கோடிகளுக்கு மேல். அப்பன் வீட்டு காசா இதெல்லாம்? மக்களின் பணம் இல்லையா? யாருடைய பணத்தில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?

    தோழர் சிவப்பு சரியாக சுட்டிக்காட்டியிருக்கிறார் இப்படி; “நான் என்ன டாடா அம்பானியா எல்லாத்தயும் சும்மா குடுக்க சொல்ல . என்னால உழைக்க முடியும். என் உழைப்பிற்கேற்ற ஊதியத்த குடுங்க.”

    இதற்கு பதில் சொல்லாமல் இலவசம் என்று எள்ளி நகையாடுவது உங்களுக்கு வக்கிரமாக தெரியவில்லையா?

    \\நாட்டில் பொருளாதாரம் மிகுமின் அளவில் இருக்குமானால் தாங்கள் சொல்வது சாத்தியம். ஆனால் நமக்கு இப்போது இருப்பது பற்றாக்குறை பட்ஜெட் தானே நண்பரே, அனைத்தும் இலவசமாக தர வேண்டும் என்றால் மீண்டும் மக்கள் தலையில் அதிக வரி தான் வரும்.\\

    அம்பானிக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு சதுர மீட்டர் நிலத்தை கொடுக்க முடிகிற அரசிற்கு அனைவருக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாதா என்ன? உங்களது கருத்துகள் ஏன் இவ்வளவு அடிமைத்தனம் வாய்ந்ததாக இருக்கிறது?

    வாழ்வதற்கு இடம், மருத்துவம், கல்வி, பொதுப்போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை மக்களுக்கு உறுதிப்படுத்துவதற்கு பெயர் இலவசமா? இதை இந்த போலி ஜனநாயகத்தில் பெற்றுக்கொள்வது எப்படி?

  98. நண்பர்களுக்கு ,

    கட்டுரைக்கு, கட்டுரையின் பேசுபொருளுக்கு எதிர்ப்பாய் சில நண்பர்களும் பதிலிட்டு வருகிறீர்கள் .
    அவர்கள் கூறும் பதில் ஒட்டுமொத சாரமாக ,

    1. இருக்கும் அமைப்பே போதுமானது. இதை அவ்வப்போது சரி செய்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடலாம்.(இன்னும் எத்துனை ஆண்டுகளில் ஒட்டு மொத்த தீர்வை எட்டுவது, இதற்கு பதிலாக சோசலிசம் வழியாக சமூக உற்பத்தி – சமூக சுவீகரிப்பு மூலம் இதற்கு தீர்வுண்டு )

    2. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க முடியாது. ஏற்றத தாழ்வென்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒன்றாகும் . (இல்லை கிடைக்கும். சமூக உற்பத்தி – சமூக சுவீகரிப்பு மூலம் இதற்கு தீர்வுண்டு )

    3. தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் , தனி மனித ஒழுக்கத்தை பேணுவதன் மூலம் தனிப்பட்ட பிரச்சினைகளை சரி செய்யலாம் .(அணைத்து மக்களுக்கான சமூக , பொருளாதாரப பிரசினைகைளை சரி செய்யாமல் தன்னம்பிக்கையை வளர்க்க முடியாது . வெறும் நீதி கதைகளை படிப்பதன் மூலம் பிரச்சினைகளை சரி செய்ய முடியாது )

    4. சும்மா எதுக்கெடுத்தாலும் அரசிடம் கையேந்தி நிற்க கூடாது . (அரசு என்றால் என்ன என்பதை விளக்கவும். நம்மைப பொறுத்த வரை மக்கள் சமூகமாக உழைக்கிறார்கள். அதன்ப பயனை அவர்கள் அடைவதை தடுக்கும் இந்த அரசு தவறானது. அதனால் கூடாது என்கிறோம் )

    5. சோஷலிச சமுதாயம் உண்மையானது மற்றும் மக்களுக்கானது என்றால் ஏன் மக்கள் அதை விரும்பவில்லை. (அதற்கு முன்னாள் இந்த முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு மக்களுக்கு பிடித்திருக்கிறது என்பதற்கு ஓட்டுப் போடுவதை தவிர வேறேதும் ஆதாரம் தாருங்கள் )

    6. தற்போது வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கும் ஒரு சோசலிச கட்டுமானத்தைக் கொண்ட ஒரு சமுதாயத்தை காட்டுங்கள் . (தற்போது வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கும் ஒரு முதலாளித்துவ சமுதாயத்தை காண்பியுங்கள் .சோசலிசம் என்பதின் ஒரு கூறான சமூக உற்பத்தி இப்போதே உள்ளது. நமக்கு தேவையானது அதை தனிநபரிடம் இருந்து சமூகத்திற்கு திருப்பி விடுவற்கு தேவையான ஒரு அமைப்பே )

    7. முதலாளித்துவம் நல்லது. அது தனி மனிதனுக்கு ஒரு உந்துதலை , குறிக்கோளை குடுக்கிறது. (இன்னும் இங்கு சோசலிசம் உருவாகவில்லை. ஆனால் ஒரு உந்துதலும் உருவாகவில்லையே ஏன்? )

    8. நன்றாக உழைத்தால் வாழ்வில் முன்னேறலாம். (அப்படி பார்த்தா நல்லா உழைக்கிற விவசாயிங்க ஏங்க தற்கொலை பண்ணிகிறாங்க? நல்லா ஏமாத்துற டாட்டா அம்பானி எல்லாம் சொகுசாதான் இருக்காங்க)

    கடைசியாக நம்மிடம் இருந்து ஒரே ஒரு கேள்வி .

    கூலியை எவ்வாறு வேறுபடுத்துவது? அதாவது யாருக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை எவ்வாறு தரம் பிரிப்பது மற்றும் இந்த அமைப்பில் எவ்வாறு அதை அடைவது ?

    நன்றி.

  99. நண்பர் கற்றது கையளவு ,

    இதுகாறும் நாம் கருத்துரையாடியது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியே … ஒத்தக் கருத்து இருந்தால் அதுவும் பரந்துபட்ட மக்களுக்கு நன்மை அளிப்பதாக இருந்தால் அதை செயல்படுத்த செயலூக்கத்துடன் நாம் பணியாற்ற வேண்டும்.

    மாற்று கருத்திருந்தால், அது நாம் வெறுமனே எழுதிக் கொண்டிருந்தால் தீராது. நேரில் சந்தித்து தான் அதைத் தீர்க்க வேண்டும். நீங்கள் கண்டிப்பாக தோழர்களைச் சந்திக்க வேண்டுகிறேன்.

    தாங்கள் சொல்வது போல, போராட்டம் என்பது நாம் துப்பாக்கியைத் தூக்கி எதிரியை அழிப்பதல்ல. மாற்றாக அது பரந்துபட்ட மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்பில் தான் அது உள்ளது.

    போராடாமல் எதுவுமே சாத்தியமில்லை நண்பரே இப்பொழுது உள்ள அமைப்பில். கூடங்குளம் போராட்டமாகட்டும்,முல்லை பெரியார் போராட்டம் ஆகட்டும், மீதேன் எதிர்ப்பு போராட்டம் ஆகட்டும் தண்டகரண்யா பழங்குடி மக்கள் போராட்டமாகட்டும் …எதற்காக இத்துனைப் போராட்டங்கள், இந்த அமைப்பின் மேல் நம்பிக்கை இருந்தால் ஏன் போராட வேண்டும்? உண்மையில் இந்த போராட்டங்களை நசுக்கத் தான் எத்துணைப் அரசப் படைகள் , காவல்காரர்கள் ……

    உண்மையில் மக்கள் தாம் எல்லாமே . அவர்கள் தான் வரலாறு படைக்கிறார்கள். கண்டிப்பாக அவர்கள் ஒத்துழைப்புடனே இந்த போராட்டம் நடக்கும். நாம் அதை முன்னின்று நடத்த வேண்டும்.

    அதற்க்கு நம் உங்களின் ஆதரவும் வேண்டும் நண்பரே.

    நன்றி.

  100. Hi KK,

    // if each and every person understands their responsibility//

    Not necessarily EACH AND EVERY person. If a significant number of people understand it and action it, it is enough.

    // push their limits//

    No need. We actually have to relax our limits, if the humanity is to survive sustainably.

    // fault with communism is that it doesn’t bring the best out of the teams//

    Not true. Initially the disgruntled elements will work to undermine the team. If others can handle this issue as long as the system can take root and establish, we can produce ‘better’ result than the current team work. The system should not depend on few exceptional individuals. Collective work is Excellence not individual’s.

    // காலம் முழுக்க மூட்டை தூக்கினால்//

    There is nothing wrong in it. As long as there is a need for heavy lifting, one can do it.

    // முதலாளி என்றாலே ஏமாற்றுபவர், *** என்று *** பேசுகிறீர்கள்//

    There are exceptions. And exceptions prove the rule.

    // உள்ளத்தினுள் உள்ள தீ//
    // உழைப்பால் உயர்ந்து முதலாளியாக//
    // ஒன்றுமில்லாமல் தமது வாழ்க்கையை ஆரம்பித்து இன்று பலருக்கு வேலை கொடுக்கும் நிலையில்//
    Let me remind you again. All these are good for ‘self-development’ which is actually not a development at all. We are interested in collective development. Please try to keep it in your mind.

    // குறைந்த பட்ச கூலி அளவு நிர்ணயம் செய்யப்பட்டு அது அரசின் மூலம் சட்டமாக்கப்பட்டால்//

    This is what we say. The govt in the current setup will not do this. Either we live with it or dissolve it and do it ourselves.

    // அதிகாரத்தை *** வேறொரு கும்பலின் கையில் கொடுப்பது//

    கொடுப்பது அல்ல எடுத்துக் கொள்வது. கும்பல் அல்ல அக்கறையுள்ள மக்கள்.

    // சர்வாதிகார கூட்டமாக மாறி விடாது என்று என்ன நிச்சயம்.//

    Now itself our principle of common property is viewed as draconian by many. As long as the new setup establishes itself well, it would be seen as such by its opponents. But significant number of people will come to realize the futility of ‘self-development’. Sooner would be better.

    // ஜனநாயக வழிமுறை//

    I think you mean the election in the current set up. This is also an option. It depends on the developments. I think that there are some black laws banning pure communism. If and when we start the party, I hope you would join our party, work for it and vote for it.

Leave a Reply to புரட்சி ஒன்று தான் தீர்வு! பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க