Wednesday, June 3, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயிகளுக்கு தேவை புரட்சி - விவிமு பொதுக்கூட்டம்

விவசாயிகளுக்கு தேவை புரட்சி – விவிமு பொதுக்கூட்டம்

-

ட்டு போட்டு விட்டோம். புதிய ஆட்சி வரப் போகிறது. ஏதாவது நல்லது நடக்கப் போகிறது என நீங்கள் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால், மோடியோ, லேடியோ அல்லது வேறு எந்த கேடியோ, யாருடைய ஆட்சி அமைந்தாலும் நம்முடைய பிரச்சினைகள் தீரப் போவதில்லை, மாறாக தீவிரமடையத்தான் போகின்றன.

விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு. அது இன்று பாதாள குழியில் புதைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது. வானம் பார்த்த பூமியான நமது மாவட்டத்தில் 400 முதல் 500 அடி ஆழ்குழாய் கிணறுகள் இறக்கியும் தண்ணீர் கிடைப்பதில்லை. அதையும் மீறி தண்ணீர் கிடைக்கும் ஒரு சில பகுதிகளில் மோட்டார்க்கு டீசல், ஆயில் போட்டு போண்டி ஆகி விட்டார் விவசாயி.

இவ்வளவு துன்பங்களையும் கடந்து விவசாயம் செய்து, உற்பத்தி செய்த பொருளை கமிஷன் மண்டிக்காரன் உரிய விலை கொடுப்பதில்லை. அரசு கொள்முதல் நிலையங்களை மூடச் சொல்கிறான் உலக வர்த்தகக் கழகம்  (W.T.O). இது மட்டுமா? இலவச மின்சாரம், பூச்சி மருந்து, உரம் போன்ற விவசாய பொருட்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று உத்தரவு போடுகிறான். இந்த உலக வர்த்தகக் கழகம்தான் உலக நாடுகளின் ரவுடியின் கைக்கருவி – அவன்தான் அமெரிக்கா.

தன்னுடைய நிலத்தில் நெல்,பருத்தி, கம்பு,சோளம், தினை, கேழ்வரகு, குதிரவள்ளி  மற்றும் பருப்பு வகைகளை உற்பத்தி செய்த விவசாயிகள், இதனை மீண்டும் உற்பத்தி செய்ய விதை வித்துக்களை எடுத்து பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்தார்கள். இந்த உரிமைகளைக் கூட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையின் அடிப்படையில் விதை வித்துக்களை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் இயற்றுகிறான் உலக வர்த்தகக் கழகம்.

மகாராஷ்டிராவில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீர்க்கு மத்திய – மாநில அரசுகள் மீட்டர் பொருத்தி வரி வசூல் செய்து வருகிறார்கள். காட் ஒப்பந்தத்தின் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட பொருட்களை அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் நமது பாரம்பரிய விவசாயிகளின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து, பாரம்பரிய விதை ரகங்களை அழித்து, ஒழித்து வருகின்றன பன்னாட்டு கம்பெனிகள். இந்த பன்னாட்டுக் கம்பெனிகள் கொடுக்கும் விதைக்கு அவர்கள் கொடுக்கும் பூச்சி மருந்துதான் பயன்படுத்த வேண்டும். இதுவாடா பசுமைப் புரட்சி!

இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்கள் நம்மை பற்றிக் கொள்கின்றன. மேலும் இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு நம்முடைய அரசியல் உணர்வு, சுயமரியாதை, சமூக சிந்தனை மற்றும் தேசப்பற்று உணர்வினை இழந்து நிற்கிறோம்.

இது மட்டும் அல்லாமல், விசைத்தறி, கைத்தறி நெசவு, சிறுதொழில்கள் அழிந்து வருகின்றன. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. கல்வி, மருத்துவம், சேவைத் துறைகள் அனைத்தும் காசாகி விட்டது.

நம் நாட்டில் ஒரு சமூக மாற்றம் தேவைப்படுகிறது. இந்த சமூக மாற்றத்துக்கு,  ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி, அதிமுக, திமுக, போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் மதவெறி அமைப்புகள், கோடானு கோடி மக்களுடைய வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

இதற்கு மாறாக நாம் அனைவரும் வர்க்க ரீதியாக ஒன்றிணைந்து புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரண்டு ஒரு புதியஜனநாயக புரட்சியைப் படைப்போம்.

  • விவசாயிகளை, விவசாயத்தை விட்டு விரட்டும் பன்னாட்டு கம்பெனிகளை விரட்டியடிப்போம்.
  • பன்னாட்டு கம்பெனிகளின் சொத்துக்களையும், அவற்றுடன் கூட்டுச் சேர்ந்துள்ள டாடா போன்ற தரகு முதலாளிகளின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்க வேண்டும்.
  • விவசாயிகள், சிறுதொழில் முனைவோர்களின் உற்பத்தி பொருட்களுக்கு விலையை தீர்மானிக்கும் உரிமையை அவர்களின் கமிட்டிக்கு வழங்க வேண்டும்.
  • தனியாரிடம் உள்ள கல்வி, மருத்துவம், மின்சாரம், வங்கிகள் போன்ற அனைத்து சேவைத் துறைகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்க வேண்டும்.
  • மக்கள் விரோதிகளின் வாக்குரிமையைப் பறித்து, உழைக்கும் மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும் அதிகாரத்தை படைக்க வேண்டும்.
  • எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு சாதாரண தொழிலாளி, விவசாயிகளின் கூலியளவு மட்டுமே சம்பளம் வழங்க வேண்டும். இவர்களுக்கு வழங்கும் விசேச சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட வேண்டும்.
  • இராணுவம், போலீசு, நீதித்துறையின் வரம்பற்ற அதிகாரம் பறிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டியின் கீழ் அவர்களை கொண்டுவர வேண்டும்.
  • நாம் தேர்ந்தெடுத்த மக்கள் கமிட்டிக்கே சட்டம் இயற்ற, அமுல்படுத்த அதிகாரம் வேண்டும். மக்களை மதிக்காத எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஊராட்சி, நகராட்சித் தலைவர்களின் அதிகாரத்தைப் பறிக்கவும், தண்டிக்கவும் மக்களுக்கு உரிமை வேண்டும்.
  • புரட்சிகர விவசாயிகள் சங்கங்களை கட்டியமைப்போம்.
  • மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்.

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்.

விவசாயிகள் விடுதலை முன்னணி
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

நாள் : 11.05.2014, ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 6 மணி
இடம் : முடுக்கலான்குளம், கோவில்பட்டி தாலுக்கா

தலைமை : தோழர் வி. சக்திவேல் அவர்கள், விவசாயிகள் விடுதலை முன்னணி
முன்னிலை : தோழர் கோ இராஜபாண்டியன் அவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சிறப்புரை :
தோழர். மோகன் அவர்கள், விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர், தேனி மாவட்டம்
தோழர். நாகராசன் அவர்கள், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பாளர், சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டம்

நன்றியுரை : தோழர் சு. குமார் அவர்கள், முடுக்கலான்குளம்

பொதுக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண் :

விவசாயிகள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு
தொடர்புக்கு : தோழர் சக்தி. முடுக்கலான் குளம் 9677882424

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க