Friday, June 2, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதேர்தல் முடிவின் பொருள் என்ன ?

தேர்தல் முடிவின் பொருள் என்ன ?

-

ஜெயாங்குற லேடி, நரவேட்டை மோடி இருவருமே பாசிச கேடிதேர்தல் முடிவுகள் அனைத்திந்திய அளவில் மோடியின் வெற்றியையும், தமிழகத்தில் ஜெயலலிதாவின் வெற்றியையும் உறுதி செய்கின்றன. இந்த முடிவே முற்றிலும் எதிர்பாராதது என்று கூறிவிட முடியாது. இந்த முடிவின் வீச்சென்னவோ அவர்களே எதிர்பாராததுதான்.

பத்தாண்டு காலம் ஒரு ஆட்சி நடந்த பின், அந்த ஆட்சியின் மீதான அதிருப்தியை அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி அறுவடை செய்து கொள்வதொன்றும் இந்தியாவின் தேர்தல் அரசியலில் புதிய விடயமல்ல. அந்த வகையில் இந்த வெற்றி என்பது மன்மோகன் அரசு மோடிக்கு போட்ட பிச்சை. எனவே, பாரதிய ஜனதா தனது வெற்றி குறித்து மிகைபடப் பீற்றிக் கொள்வதை நாம் பொருட்படுத்த தேவையில்லை.

நமது கவலைக்கும் அக்கறைக்கும் உரிய விசயங்கள் வேறு.

1

ன்மோகன் சிங் அமல்படுத்திய மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக, எந்த கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திடம் இந்திய மக்கள் தமது வாழ்க்கையையும் உரிமையையும் பறிகொடுத்தார்களோ, அதே முதலாளி வர்க்கம், இந்த தேர்தல் மூலம் மக்களின் எதிர்ப்புணர்ச்சியையும் அறுவடை செய்து கொண்டு விட்டது.

மக்களின் எதிர்ப்புணர்ச்சியை முன்னறிந்து, அதனை தான் விரும்பிய திசையில் திருப்பி, வடிவமைத்து, பிறகு தனது கைப்பிள்ளையையே தங்களுடைய தலைவனாக ஏற்கும்படி மக்களை நம்ப வைப்பதிலும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசு அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற 2009-ம் ஆண்டிலிருந்தே, “எதிர்காலப் பிரதமர் மோடி” என்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தொடங்கி விட்டதையும், “ஒளிரும் குஜராத்” என்ற புனைகதையை பரப்பியதையும்  மே – 2014 இதழ் புதிய ஜனநாயகம் கட்டுரை விளக்கமாக கூறுகிறது.

பல்வேறு காரணங்களுக்காக மன்மோகன் சிங் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், மக்களுடைய அதிருப்தியின் வழியாக தனது அதிருப்திக்கு விடை கண்டுவிட்டது; மோடிக்கு முடி சூட்டுவதென்ற தனது கருத்தை இந்திய மக்களின் பொதுக்கருத்தாக மாற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறது என்பதுதான் இந்த தேர்தல் வெற்றியின் உண்மையான பொருள். இந்த தேர்தல் முடிவு, அம்பானி, டாடா, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை பிரதமர் நாற்காலியில் நேரடியாகவே அமர வைத்திருக்கிறது என்று கூறலாம். தொண்டைமானுக்குப் பதிலாக எட்டப்பன் அரியணை ஏறியிருப்பதாகவும் புரிந்து கொள்ளலாம்.

2

“இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை பிரச்சினைகள்” என்று சிலவற்றை மூடிஸ் என்ற ஏகாதிபத்திய தர நிர்ணய நிறுவனம் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும்போதே அறிவித்து விட்டது. கனிம வளக்கொள்ளைக்கு காடு, மலைகளைத் திறந்து விடுவது முதல் தொழிலாளர் உரிமைச் சட்டங்களை ரத்து செய்வது, காப்பீட்டுத் துறை தனியார்மயம் வரையிலானவை அந்த அடிப்படை பிரச்சினைகளில் அடக்கம்.

இது ஒரு புறமிருக்க, “ராமர் கோயில், காஷ்மீர் விவகாரம், பொது சிவில் சட்டம் போன்ற அடிப்படை பிரச்சினைகளை” மோடி கவனிக்க வேண்டுமென்று நேற்று ஆர்.எஸ்.எஸ் கூறியிருக்கிறது. “மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் நிர்ப்பந்தத்துக்கு பணியக்கூடாது” என்றும், “வளர்ச்சிப்பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் கார்ப்பரேட் எச்சில் பொறுக்கி ஊடகவியலாளர்கள், மோடிக்கு “அறிவுரை” கூறத்தொடங்கி விட்டனர். இனி ஊடகங்களும் ஓட்டுப் பொறுக்கிகளும் இதனைச் சுற்றி விவாதங்களையும் பொதுக்கருத்தையும் கொண்டு செல்வார்கள்.

ஆர்.எஸ்.எஸ், தான் எழுப்பும் அடிப்படைப் பிரச்சினைகளின் மீது மக்களின் கவனத்தை இழுக்கும். மூடிஸ் எழுப்பிய அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு, அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் நாட்டை அறுத்து எடைபோடுவார் மோடி. தென்னிந்திய முஜாகிதீன், தென் மாவட்ட முஜாகிதீன், சைக்கிள் குண்டு, டிபன் பாக்ஸ் குண்டு ஆகியவை தினத்தந்தி, தினமலரின் தலைப்புச் செய்திகளாக பரபரக்க, காடுகளும் மலைகளும் ஓசைப்படாமல் கைமாறும். காட் ஒப்பந்தத்துக்கும் பாபர் மசூதி பிரச்சினைக்கும் இடையிலான உறவை அன்று இந்தியா புரிந்து கொள்ளவில்லை. இன்று “வளர்ச்சி”க்கும் இந்துத்துவத்துக்கும் இடையிலான உறவை மோடி இந்தியாவுக்குப் புரிய வைப்பார்.

3

ந்த தேர்தலில் அதிமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றியும் நமது கவனத்துக்குரியது. இந்த வெற்றிக்குக் காரணம், மக்களின் அறியாமை என்று சொல்வதை விட, “அறிவு” என்று சொல்வதே பொருத்தமானதாக தெரிகிறது. வாக்குகளை விலைக்கு விற்பதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பது போலத் தெரிகிறது. மக்களின் பேரம் பேசும் ஆற்றல், தேர்தலுக்கு தேர்தல் கூடி வருகிறது.

“நாயே சும்மாவாடா ஓட்டு போட்டே, காசு வாங்கல? ஐயா போன வாட்டி நூறு ரூபா கொடுத்தீங்க கட்டுப்படியாகல, இந்த வாட்டி நூத்தம்பது கொடுங்கன்னு கேளு, அது ஜனநாயகம்; அத வுட்டுட்டு உரிமை அது இதுன்னு பேசுற?” என்று இயக்குநர் வி.சேகர் திரைப்படமொன்றில் கவுண்டமணி மக்களைப் பார்த்து பேசும் வசனம் வரும்.

இதனை நகைச்சுவைக் காட்சி என்று கருதி தமிழர்கள் இனி சிரிக்க முடியாது. தமிழகத்தில் தேர்தலுக்கு முந்தைய தினம் போடப்பட்ட 144 தடை உத்தரவு, நம்பகமான அதிகார வர்க்கத்தின் பொறுப்பில், போலீசு வேன் மூலம் அதிமுக நடத்திய பண விநியோகம் போன்றவையெல்லாம் ஊர் சிரித்துப் போன உண்மைகள்.

ஓட்டுப் பொறுக்கிகளின் ஒழுக்கக்கேடு, பிழைப்புவாதம் ஆகியவை குறித்து நாம் பேசுவதற்கு புதிதாக ஒன்றுமில்லை. அவையெல்லாம் மெல்ல மெல்ல மக்களின் பண்பாடுகளாக மாறி வருகின்றன என்பதுதான் இப்போது நம் கவலைக்குரிய விடயமாகியிருக்கிறது. அதிமுக வுக்கு பதிலாக திமுக வுக்குப் போட்டிருந்தால் அதன் காரணமாக ஒரு வெங்காயமும் மாறிவிடப் போவதில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும். நல்ல விலை கிடைத்தால் தங்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மக்களுடைய பிழைப்புவாத மனோபாவம்தான், நம்மை அச்சுறுத்துகிறது.

இந்த நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டிய சவால் இது.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நேரடிக் கொடுங்கோன்மை, அதனை அமலாக்கும் எடுபிடிகளாக இந்து மதவெறிக் காலாட்படை, அதன் தலைவனாக ஒரு தொழில்முறைக் கொலையாளி, இவர்களுடன் கூச்சமே இல்லாமல் கூட்டு சேரத் தயாராக இருக்கும் பல வகைப் பிழைப்புவாதக் கட்சிகள், பார்ப்பனப் பாசிசக் கும்பலின் சேவகனாகவே வேலை செய்யத் தயாராக இருக்கும் அதிகார வர்க்கம், அரசியல் மடமையும் பிழைப்புவாதமும் இணைந்த கலவையாக மக்கள்!

– இந்தச் சேர்க்கைதான் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் வெற்றி என்று வெட்கமின்றி சித்தரிக்கப்படுகிறது.

பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.

தண்டனையிலிருந்து மக்களை விடுவிக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்வோம்.

  • ஹலோ குமார்

   சரி உங்க மூளையை தான் பயன்படுத்தி சொல்லுங்க பார்ப்போம்.

   இந்த தேர்தல் முடிவு என்பது மோடி இந்தியாவை வல்லரசு ஆக்கிடும்னு சொல்லவரங்கிளா.

   அப்படிண்ணா எந்தமாதிரி கொள்கையை பின்பற்றி இந்தியாவை முன்னேத்துவார் மோடி சொல்லுங்க மிஸ்டர்.குமார்(புத்திசாலி)

    • Mr. Kumar, Revolution had been tried already in Arab countries which is first after world war II. The Arab spring in Tunisia, Egypt and recently in Syria which is going on for the past few years.

    • குமார் அவர்களே நீங்க சொல்லுங்க உண்மையான ஜனநாயகம்ன என்னனு, இப்ப இருக்குற ஜனநாயகத்துல கிடைச்ச உங்க எல்லா உரிமையும் பத்தி சொல்லுங்க , மோடி வந்துட்ட இன்னும் ஒரு மாசத்துல இந்தியா வல்லரசு ஆயடும்னு சொல்லவரிங்க போலிருக்கு, யாருக்கு வேணும்க வல்லரசு இந்த நாட்டில் பெரும்பகுதியான உழைக்கும் மக்கள் அடிப்படை வசதியின்றி (basic needs) இருக்கும் போது இந்த நாடு வல்லரசாக ஆகி நமக்கு நாக்குவழிக்கவா , ஜெயலலிதா 2011 நாங்க ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மின்மிகு மாநிலமாக ஆக்குவோம்னு சொன்னங்க செய்தாங்களா ? இன்னும் திமுகனாலே தான் இப்படி இருக்குன்னு பழைய ஆட்சிய குறைசொல்லியே மூன்று வருஷம் ஓட்டிட்டாங்க, இப்போ 37 இடம் வந்துருக்காங்க பாருங்க இனி 24 மணி நேரமும் உங்க வாழ்க்கை இருளிலா இல்ல வெளிச்சததுலயானு ?? பத்துவருஷம் ஆண்ட காங்கிரஸ் கஜானாவை காலிபண்ணிடுச்சு அதானாலே எங்களுக்கு டைம் வேணும்னு சொல்லுவாங்க இதேமாதுரி அடுத்ததடவை உங்க வீணாப்போன வாக்களிசிங்கன்னா இந்தியா (ஒளிஞ்சுரும்) ஒளிரும்

 1. தற்போதைய சூழலையும் எதிர்வரும் காலத்தில் நடக்க இருப்பதையும் சரியாக படம்பிடித்துக் காட்டும் எளிய மற்றும் வலிமையான வார்த்தைகளுடைய கட்டுரை,வாழ்த்துக்கள்.

   • Are you the sole proprietor of this land? did democracy not allow any non Indians to live in this land? then what is democracy? then why do you want to call this land as a democratic?
    wait intelligent piece, you will be given a perfect and proper reward by your god kedi/modi.

    • If you are not indian, do you have indian visa, otherwise you must leave india immediately… otherwise you should be deported
     first go and learn about Democracy .. you brainless … 😛 … tension aagandheenga.. nidhaanamaa yosichu parungal puriyum…

     • I’ve all what must i’ve,but who are you to ask all this you useless/brainless holy crap? you first go and study about democracy and vomit here!

     • தமிழனை இந்திய குடிமகனாக பார்க்காத தேசத்தில் தமிழன் அங்கம் வகிப்பது அவமானத்தை உண்டாக்குகிறது. முதல்வர் அறிக்கையளித்தும், கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் ப.ஜ.க இதை செய்யுமானால் தமிழன் ஏன் தனி நாடு கோர கூடாது? புதிய போராட்டத்திற்கு இது இட்டு செல்லுமே.. நான் இந்தியன் என்று என்னால் சொல்ல முடியாத அள்வுக்கு தமிழகத்தை இந்தியம் புறக்கணிக்கிறது. நாங்கள் இந்தியராகவே வாழ்கிறோம்.. கலவரமற்ற சகோதரர்களாய், களங்கப்படுத்தினால்.. . கார்கில் போரில் கொட்டி கொடுத்தவன் தமிழன், தேசத்தில் எங்கே பேரழிவு என்றாலும் வாரி இரைத்தவன் தமிழன்.. தொடர்ந்து நாங்கள் நசுக்க படுகிறோம்.. புரட்சி வெடித்தால் இளைஞர்கள் திரண்டால்… எங்கள் தமிழினம் காக்க வேறு வழியில்லை.

      Source: http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/invite-to-neighbours-celebration-of-democracy-bjp-114052300014_1.html

 2. தேர்தல் முடிவுகளை அறிவித்துகொண்டு இருக்கும் போதே தமிழக மக்களின் பிழைப்புவாதமும், எதிர்காலமும் நன்றாக தெரிந்தது.

  மக்களுக்கு இதன் மூலம் தெரியும் பார்ப்பன பாசிஸ்ட்களின் உண்மையான மூகம்.

 3. எல்லோரும் பிச்சை எடுக்கத்தயாராகுங்க

  மோடி மோடின்னு யாரெல்லாம் ஆட்டம் போட்டீங்களோ எல்லோரும் கவனிங்க. நீங்கள் விரும்பிய தலிவர் இன்னும் சில நாட்களில் பதவியேற்று இந்திய பிரதமராகிவிடுவார். ஆனால் இந்தியாவை அவர் ஆட்சி செய்யப்போவதில்லை, பிறகு யார் ஆளுவார்கள் என்கிறீர்களா? அதை தானே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையாக பார்க்கப்போகிறீர்கள் அதற்குள் என்ன அவசரம்!

  மன்மோகன்சிங் ஒரு ஏகாதிபத்தியக்கைக்கூலி என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் மோடி என்கிற இந்த பாசிஸ்ட் பல கோடி மன்மோகன் சிங்கிற்கு இணையானவர் என்பதை இந்த உலகமே இனி பார்க்கப்போகிறது. மோடி எப்படிப்பட்ட ஏகாதிபத்தியக் கைக்கூலித்தன்மை கொண்ட தரகன் என்பதை மோடியை ஆதரித்து பூரித்துக்கொண்டிருந்த நண்பர்களும் இனிவரும் நாட்களில் கண்கள் குளிர காணலாம்.

  சாதாரண மக்களோடு இணைந்துகொண்டு அவர்களுடைய தவறான கருத்துக்களை ஊக்கப்படுத்தும் வகையில் போலி கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட ஊடகங்கள், குறிப்பாக ஜீ.வி, ஜீ.வியிலும் குறிப்பாக திருமாவேலன் போன்ற பார்ப்பன அடிமைகள் மோடியை ஆதரித்து ஏற்றிப்போற்றி எழுதினர். இவர்கள் ஏற்றிப்போற்றிய ரட்சகர் மோடியால் இந்த நாடு இனிவரும் நாட்களில் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்யப்படவிருக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் இப்போது பெற்றிருக்கும் இந்த மோசமான வாழ்கையையும் இனிமேல் இழக்கப்போகிறார்கள். அனைத்தும் அபாயகரமான முறையில், தலைகீழாக மாறப்போகிறது. மக்களை இப்போது இருப்பதைவிட மேலும் பிச்சைக்கார நிலைக்குத்தள்ளப்போகிறது மோடி அரசு. இனிவரும் நாட்களில் மோடி அரசின் கீழ் நடக்கவிருக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் இதுவரை மோடியை ஆதரித்து ஜால்ரா போட்ட திருமாவேலன் போன்ற அல்லக்கை “பத்திரிகையாளர்கள்” பதில் கூற வேண்டியிருக்கும்.

 4. ஹிஹிஹ்ஹ்ஹீஹீ.. வினவுன்னு ஒரு காமெடி பீஸ் சைட் ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்க… இதுதானா அது.. ஹெஹ்ஹ்ஹஹே……

 5. தற்போதைய நிலையையும், வரப்போகும் அபாயத்தையும் தெள்ளத் தெளிவாக மார்க்சிய ஒளியில் விளக்கும் அருமையான கட்டுரை.

  மக்களை புரட்சிகரப் போராட்டத்திற்கு அணி திரட்டும் போராட்டத்தில் புரட்சிகர அமைப்புகளுக்கு துணை நிற்போம் …

 6. அபார ஹிமாலய வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் பாரத பிரதமராக பொருப்பெடுக்கும் நரெந்தர் மோதி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  இனி எல்லாம் நலமே, நமது நாடு சுபிக்ஷாம் பெரும்,நாடு மக்கள் வளர்ச்சி அடைவார்கள்,நாட்டின் பகைவரும் திரோகிகளும் ஒழிக்கப்படுவர்.

  பாரத் மாதா கி ஜே?

   • Kumar, you don’t have to aggravate yourselves by responding to every one wants to make this country a graveyard. Their ultimate aim is to either sell themselves to Christian missionaries (or) fold their hands and watch terrorism…

    Pakutarivu, communism endra peyaril naattai seerazhikka vandha onaaikal!!

 7. //நல்ல விலை கிடைத்தால் தங்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மக்களுடைய பிழைப்புவாத மனோபாவம்தான், நம்மை அச்சுறுத்துகிறது.//
  உண்மையான ஜனநாயகவாதிகளை இது அச்சுறுத்துகிறது பிழைப்பு வாத ஓட்டு அரசியல் வாதிகளுக்கு இதுதான் தேவயான ஜனநாயகம் நீங்களும் மினதட்டுப்பாடு, குடிநீர் பிரச்சனை ,கட்டண உயர்வு,விவசாயி கஸ்டம்னு எதேதொ சொன்னிங்க இதெல்லாம் மக்களுக்கு சுமையா தெரியலயா இல்ல 1000 ரூபாயில அதெல்லாம் தீர்ந்திடும்னு மக்கள் நினைக்குறாங்களா ஒன்னும் புரியல நாடாளுமன்ற தேர்தலுக்கும் சட்ட மண்ற தேர்தலுக்கும் வித்தியாசம் கூட தெரியாத அரசியல் அறிவு குறந்த மக்கள் ஜெயா குடுக்கும் இலவசங்களை பெரிதாக நினைக்கும் மக்கள் ஜாதிக்காரனுக்கு ஓட்டு போடனும்னு நினக்கிற மக்கள் இவங்களுக்கு எல்லாம் இருக்குறவர ஜனநாயகமும் இப்பிடித்தான் இருக்கும்

 8. காசு வாங்கிக் கொண்டு தி மு க விடமிருந்து கடந்த சட்டசபை தேர்தலில் ‘டபாய்த்ததை’ போல மக்கள் செய்வார்கள் என எதிர்பார்த்தேன். மக்கள் ‘நேர்மையாக’ நடந்துள்ளனர். கவலைப் பட வேண்டிய ‘நேர்மை’. அன்புமணி வெற்றியும் கவலைக்குரிய சேதியே.தமிழகத்தை பொறுத்தவரை மோடி அலை ஒரு புஸ்வாணமானதை,வைகோ,விஜயகாந்த் போன்ற பிழைப்பு வாதிகள் தோல்வியை நினைத்து மகிழுவதோ திருப்தி படுவதோ கூட இயலாமல் உள்ளது.

 9. பாவம் வயிற்றேரிச்சலில் எழுதிய கட்டுரை…. கூடங்குளம் பிரச்சனையிலிருந்து, தற்போதய தேர்தல் முடிவுகள் வரை வினவு முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது… கூடிய விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிசேக பத்திரிக்கயை வினவு வெளியிடும்…. தமிழ் நாட்டில் “நோட்டோ” விற்க்கு நொட்ட சொன்ன வினவின் பு.ஜா.கா தோழர்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது… இனிமேலாவது அடக்கி வாசிக்கவும்…

 10. பல்வேறு காரணங்களுக்காக மன்மோகன் சிங் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், மக்களுடைய அதிருப்தியின் வழியாக தனது அதிருப்திக்கு விடை கண்டுவிட்டது//
  கண்டிப்பா இது தான் உண்மை…தரகு முதலாளிகளின் எதிர்ப்பை மீறி ஈரானிடம் இந்திய ரூபாயின் மதிப்பில் எண்ணெய் வாங்கியது என தரகு முதலாளிகளை சில இடங்களில் ஆதரித்தும் சில இடத்தில் எதிர்த்தும் விட்டது தான் காங்கிரஸ் செய்த தவறு…

  ஆர்.எஸ்.எஸ், தான் எழுப்பும் அடிப்படைப் பிரச்சினைகளின் மீது மக்களின் கவனத்தை இழுக்கும். மூடிஸ் எழுப்பிய அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு, அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் நாட்டை அறுத்து எடைபோடுவார் மோடி// இந்த முறை இது சாத்தியமானது தானா என்பது கேள்வி தான்…மக்கள் இதை முன்னரே ஒரு முறை புரிந்து கொண்டிருப்பார்கள்…மேலும் இதே பார்முலா உபயோகப்படுத்தினால் அது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்று தெரியவில்லை…ஆனால் பாராளுமன்றமும் இந்திய ராணுவ தலைமை அலுவலகமும் தாக்கப்படுவது உறுதி(ஹிஹிஹி)…

  ஆர்.ஸ்.ஸ் நாட்டை வழிநடத்தும்…இந்தியாவின் தேர்தலை அதிபர் முறையாக மாற்றும், உள்துறை அமைச்சராக அமித் ஷா இங்கேயும் இருக்கோணும்…அப்போ தான் நாடு விளங்கும்…

  • You don’t have to ban them. Everybody has their right to express their views and it is for the common man to be aware of these communists and their sinister ideas.

   Everyone knows the plans of the christian missionaries and how they gets their funds from NGO’s and the west to convert the entire country! Every one knows about the tamil and kerala muslim organisations that receives money from Arabia, Slowly people will also know about these black communists.

 11. // அதிமுக வுக்கு பதிலாக திமுக வுக்குப் போட்டிருந்தால் அதன் காரணமாக ஒரு வெங்காயமும் மாறிவிடப் போவதில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும். நல்ல விலை கிடைத்தால் தங்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மக்களுடைய பிழைப்புவாத மனோபாவம்தான், நம்மை அச்சுறுத்துகிறது.//இந்த கார்ப்பரேட் போலி ஜனநாயகம் ஊழலையும்,கையூட்டையுமே மக்களிடம் பரவலாக்கியிருக்கிறது.

 12. பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.

 13. உங்களுக்கு கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் நல்ல விதமாக எழுதுவீர்கள். அது ஒருகாலும் நடக்க போவதில்லை. இப்படியே சந்தையில் விலைக்கு போகாத உளுத்து போன சமாசாரங்களை எழுதிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

  • சந்தையே ஒரு உளுத்து போன சமாசாரமானது இதோ:

   “Finally, there came a time when everything that men had considered as inalienable became an object of exchange, of traffic and could be alienated. This is the time when the very things which till then had been communicated, but never exchanged; given, but never sold; acquired, but never bought – virtue, love, conviction, knowledge, conscience, etc. – when everything, in short, passed into commerce. It is the time of general corruption, of universal venality, or, to speak in terms of political economy, the time when everything, moral or physical, having become a marketable value, is brought to the market to be assessed at its truest value.”
   – Marx, The poverty of philosophy

 14. பொறுத்திருந்து பார்ப்போம். ஆட்சியை பிடிக்கும் மோடிக்கு வாழ்த்துக்கள்.

 15. இதெல்லாம் சரி! மோடி வரவே மாட்டார்னு அடிச்சும் கூட சொன்னீங்களே, அது என்னாச்சு?

 16. ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் பார்ப்பனர்களுக்கு இந்த தேர்தல் பெரு வெற்றி நான்கே மாதத்தில் மோடியை இந்தியா முழுமைகும் தேவ தூதுவனாய் காட்சிபடுத்திய பார்ப்பன பனியா கூட்டின் வெற்றி ,,,,

 17. இனிமேல் தான் உள்ளது உண்மையான முடிவு, அந்த முடிவு உங்களின் bjp ஆட்சியின் சாராம்சத்தை பொருத்து அமையும். இந்த தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான அலை மோடியை பிரதமராக்கி உள்ளது. மேலும் இதற்க்கு சில விளம்பர உக்திகளும் துணை நின்றுள்ளது..

 18. அப்படியே தேர்தல் முடிவு BJP வெற்றின் வந்தாலும், உண்மையான முடிவு BJP ஆட்சி சையும் முறையை பொருத்து தான் அமையும் , அந்த முடிவானது உங்களுக்கு தொடர்ச்சியான வெற்றியையும் , அரசியல் வரலாற்றிலிருந்து தொடைத்தேரியப்படும் தோல்வியையோ அடையலாம். இன்னும் உங்கள் இருவரின் பிஜேபி காங்கிரஸ் தீய ஆட்சிமுறையானது மறைமுகமாக கம்யூனிஸ்ட் வளர்ச்சிக்கு பெரிதும் வழிவகுக்கும். என் கருத்தில் எவ்வித காழ்புணர்வும் இல்லை உண்மையின் எதார்த்தம் மட்டுமே உள்ளது

 19. இவர்கள் இருவருமே ஒருவரை மாற்றி ஒருவர் குறைசொல்ல மட்டுமே முடியும் நல்ல ஆட்சியை தரவே முடியாது. பிஜேபி காங்கிரெஸ் இரண்டுமே ஊழல் பெருச்சாளிகள் தான். என்ன ஊழல் செய்த துறைகள் மட்டும் வேறுபாடும்… ஆனாலும் சவப்பெட்டியில் கூட ஊழல் செய்ய முடியும் என்று நிறுபித்த ஒரே கட்சி பிஜேபி தான். என்ன ஒரு சாதனை.

 20. ஓகே. மக்கள் நாங்கள் சொல்வதை ஏற்றிராவிட்டாலும் அவர்களது கோரிக்கைகளுக்காக அவர்களுடன் தோளோடு தோழனாக நிற்கப்போவது நாங்கள்தான். அப்போது, மக்களின் வாக்கால் பிரதமரான மோடியோ போராடும் மக்கள் முன் நீட்டப்போவது குண்டாந்தடியைத்தான்.

  • மோடியின் ஆட்சிமுறை பற்றிய ஐயம் எனக்கும் உள்ளது. அதே சமயம் மக்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு பெரும்பான்மையான வாக்குகளை ஏன் அளித்தார்கள் என்பதை நாம் கூர்ந்து பார்க்க வேண்டும்.

   1. தற்போதைய காங்கிரஸ் ஆட்சி ஊழலின் உச்சத்தை எட்டியது. கண்டிப்பாக அது தூக்கியெறியப்பட வேண்டும்.
   2. வேறு மாற்று ஆட்சி கண்டிப்பாக மக்கள் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். பாஜக மட்டும் தான் அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக தற்போது உள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு சிறு வட்டத்துக்குள் பலமின்றி இருக்கிறதால் வேறு வழியின்றி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.

   மக்கள் வாக்குக்கு மதிப்பளிப்போம். பொறுத்திருந்து பார்ப்போம்.

   மக்கள் விரோத ஆட்சி நடத்தினால் இதே மோடியை தூக்கியெறியும் சக்தியும் மக்களிடம் உள்ளது.
   நல்லாட்சியை தந்தால் பாராட்டுவோம். அநீதி தலை தூக்கினால் போராடுவோம்.
   முதலில் ஆட்சி எப்படி நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

   • என்ன கற்றது கை அளவு அநீதி நடக்குமா உஙளுக்கு மோடி மீதுநம்பிக்கை இல்லயா

    • இல்லை நண்பரே.

     ஆனால் ஒட்டுமொத்தமாக மக்கள் ஒரு தீர்ப்பினை வழங்கி உள்ளனர். அந்த தீர்ப்பை மதித்து இவர்கள் என்ன வகையான ஆட்சியை தருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

     • நண்பர் கற்றது கைஅளவு மோடி தவறு செய்தால் தீரத்துடன் போராட தயாரா நீங்கள் தடியடி போஸிசின் போலி எண்கவுண்டர் இவைகளை எதிர் கொள்வீர்களா என்னா குராத்லா முதலமைசரா இருக்கும்போதே இவைகளை நடத்தி காட்டியவர் மோடி அதான் கேட்டேன்

      • பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
       தனிப்பட்ட முறையில் மோடியின் மேல் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.
       அதே சமயம் ஒட்டு மொத்தமாக மக்கள் அந்த கட்சிக்கு பேராதரவு கொடுத்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். ஜனநாயக முறைப்படி அவர்கள் ஆட்சிமுறை எப்படி இருக்கிறதென்று பொறுத்திருந்து பார்த்து பின்னர் ஒரு முடிவு எடுப்போம்.

 21. இது இந்தியாவின் கடைசி தேர்தலா? ராஜபக்செ பதவிக்கு வந்த பிறகு அந்த பதவியில் நிறந்தர்மாக வுட்கார்ந்து விட்டார்.

  • சுயம் சேவக்காக இருந்து கார்ப் சேவக்காக நியமிக்கப்பட்டுள்ள கேடியின் கார்ப் விசுவாசம் குறையுமானால் நாற்காலி பறிபோகும்.

 22. இந்த வெற்றி மக்களுக்கு வருங்காலத்தில் மக்களை பட்டுத் தெளிய வைக்கும். அந்த வகையில் சொல்லித் தெளியாத பொதுத்திருவாளர்கள் பட்டுத் தெளிவார்கள்.

 23. எல்லா விஷயத்திலும் 24 மணி நேரமும் சுடச் சுட பின்னூட்டம் இடும் சரவணன் என்பவரை யாராவது பார்த்தால் வினவில் அவர் வெளுத்து வாங்கக் கூடிய சப்ஜெக்ட் ரெடி என்று சொல்லுங்கள்.

 24. இந்த தேர்தல் எனக்கு தெரிந்து யார் யாரெல்லாம் கலவரத்தை தலைமை தாங்கினார்களோ (தர்மபுரி, குஜராத்) அவங்கெல்லாம் வெற்றி பெற்றிருப்பதை பார்த்தால் நம்ம மக்கள் எந்த பாதையை தேர்ந்து எடுக்கிரார்கல்னு கவலையா இருக்கு.

 25. Aloor Shanavas..

  21 ஆம் தேதி மோடி பிரதமராக பொறுப்பேற்ற உடன்
  மறுநாளே பிரதமருடன் தனி விமானத்தில் இலங்கை சென்று
  தனி ஈழம் பெற்றுத் தருவதுதான் தமிழருவி மணியனின்
  அடுத்தவார திட்டமாம்.

 26. இந்த தேர்தல் முடிவில் அதிகம் கவலையில் மூழ்கியிருப்பது ஜெ.ஜெ வாகத்தான் இருக்கும் காரனம், மகசூலிருந்தும் விலை இல்லாமல் போய்விட்டது.

  பி.ஜே.பி தனிமெஜாரிட்டியில் வந்து தொலைதுவிட்டது. ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் அமைந்து இருந்தால் எம்.பி எனும் அடிமைகளைநல்ல விலைக்கு விற்று இருப்ப்பார்.

  இந்த தேர்தல் முடிவில் அதிகம் சந்தோசப்பட்டு கொள்பவர் மு.க வாக இருக்கும் இனி தன் மக்களின் ப்ங்க்காளிச்சண்டையை தீர்த்துவைக்க ஏதுவாக இருக்கும்.
  இந்திய மக்களின்நிம்மதி என்னவென்றால்…
  1.நேரு குடும்ப அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது
  2.பீகாரில் லாலு குடும்ப அரசியல் ஓய்ந்துவிட்டது
  3. தமிழ்நாட்டில் மு.க குடும்ப அரசியல் அறுந்துபோய்விட்டது
  4. தமிழ்நாட்டில் சாதிய கட்ச்சிகளின் (ப.ம.க., வி.சி.,இ.யூ.மு.லீ., மு.மு.க., த.த.ஜ., பா.வே., வை.கோ.) சாயம் வெளுத்து விட்டது.
  அதேநேரத்தில் சாமானியனின் கவலை…
  1. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இனி …?
  2. பொது துறைநிறுவனங்கள் இனி தனியார் துறைகளாகிவிடும்
  3. தீவிரவாதீகள் ஊடுவல் எனக்கூறி அப்பாவி காஸ்மீர் முஸ்லிம்கள் கொல்லப்படலாம் கூடவே ஒன்றிரண்டு ஒத்துவர்ராத இராணுவ வீரர்களும் கொல்லப்படலாம்
  4. இளம் பெண்களை வேவு பார்ப்பது தேசிய விளையாட்டாக இருக்கலாம்…

  • என்னப்பா பயம் காட்டுர நீ கம்மூனிஸ்ட் இல்லயா இதுக்கெல்லாம் குரல் குடுக்க மாட்டியா அப்புரம் ஏன் பயம் தவறு நடந்தால் போராட மாட்டயா

   • //என்னப்பா பயம் காட்டுர நீ கம்மூனிஸ்ட் இல்லயா இதுக்கெல்லாம் குரல் குடுக்க மாட்டியா அப்புரம் ஏன் பயம் தவறு நடந்தால் போராட மாட்டயா//

    இங்கு யாரையும் பயம் காட்டவில்லை எச்சரிக்கையுடன் இருக்கவே வேண்டும் என்கிறேன்.
    ஜோசப் அது என்னப்பாநபோராட மாட்டாயா என்றொரு கேள்வி, எப்படி அநீதிநடந்தால் போராடுவோம் என்று கூறுமய்யா.

 27. Most of the leaders in congress and other parties even some BJP have too much hate on Modi. That is also another factor for victory of Modi. There were hundreds of factors came favorable for Modi in past 2 years. That is the reason BJP was able to get seperate majority. One factor is Bihar, If Nitesh supported BJP, Then single majority would not have been possible but Nitesh could have survived. Another factor some communal violence in UP also helped BJP. Also this sweet victory happened without a single violence in elections in any part of India. No question that Modi has extraordinary luck or Divine support or Whatever you call

 28. ஒரு வாரத்தில் இந்தியா வல்லரசு ஆகி விடும்.

  இரண்டு வாரத்தில் கங்கை நீர் காவேரிக்கு வந்து தமிழகத்தில் 7 போகம் விவசாயம் நடக்கும்.
  தமிழகத்தில் ஒரு செகண்ட் கூட இனி கரண்ட் கட் இருக்காது.
  பெட்ரோல் இனி 1 ரூபாய் 50 காசுக்கு விற்கும்.
  இந்தியா முழுவதும் 5000 புல்லட் ரயில் இயக்கப்படும்.
  40 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரயில் விமானம் பஸ் போன்றவற்றில் இலவசம்.
  கர்நாடகா கோர்ட் இடிக்க பட்டு பயித்தியக்கார ஆசுபத்திரி ஆக்க படும்.
  அமெரிக்கா அடிபணியும், இங்கிலாந்து கை கட்டும்,
  இலங்கை தன நாட்டை இந்தியாவிடம் ஒப்படைத்து விடும்
  சீனா எல்லா ஆயுதங்களையும் மோடியிடம் நேரடியாக ஒப்படைத்து விடும்,
  இனி உரம் வாங்குவது நிறுத்தப்படும் எல்லாம் ஆர்கானிக் விவசாயம் தான், உணவு பொருட்கள் அதிக அளவில் விளைந்து குவிய போவதால் சீனா அமெரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இலவச உணவு வழங்கும் நிலையங்களை இந்தியா ஆயிரக்கணக்கில் அமைக்கும்.
  நேச நாடுகள் படையில் இந்தியா மட்டுமே இனி இருக்கும்.
  2 G ஊழலில் நடந்த ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் கோடி பணமும் இரண்டு நாட்களில் கஜானாவில் சேர்க்க படும்.
  வெளிநாட்டில் உள்ள பணம் அனைத்து ஆயிரம் கப்பல்களில் திரும்ப கொண்டு வந்து ஏழை எளிய மக்களுக்கு குடும்பத்துக்கு 5 மூட்டை வீதம் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்படும்.
  பாகிஸ்தான் ஹிந்து நாடு என தன்னை பிறகான படுத்தத் உள்ளது.

  இன்னும் என்ன என்னவோ நடக்க போகிரது ம்ம் மற்றவை விரைவில்……………..

 29. விகிதாச்சார அடிப்படையிலான (ஜெர்மானிய) தேர்தல்முறை இந்தியாவின் தற்போதைய அவசிய தேவை.

  ஜெயலலிதா (3.3%)- 37
  மாயாவதி (4.3%) – 0.

  இது தான் போலி ஜனநாயகம்.

 30. ஒருவேளை கம்யூனிஸ்டு தோழர்களுக்கு அம்மையார் போட்டியிட சீட் கொடுத்திருந்தால், இக்கட்டுரை வெளிவந்திருக்குமா? இதே நிலைப்பாட்டை தான் தோழர்கள் கடைபிடித்திருப்பார்களா.

 31. 34% of Muslims have voted for Modi in Uttar Pradesh. Hope Modi keeps up his words to take all communities together. Till now, his actions are very promising unlike what vinavu has been saying.

  • Appreciate you Mr. Abdullah… i believe all Muslims should believe in BJP and Modi without involving provocative attitude. Together India can be developed. Hope all the Muslims change their mindset… & (Hindus will also recibrocate) and Vise-vesa:-)

 32. Many Channels agree that without a certain percentage of Muslim votes BJP could not have won 71 out of 80 seats in UP. The vital question is whether congress a family belonging is to be defeated or not.In BJP until Modi entered the party inner party democracy was excellent but Modi and Jaitley seem to ruin the same

  • How did Modi and Arun Jaitley destroyed BJP’s inner party democracy?
   To me, if not for BJP’s inner party democracy, Modi wouldn’t have become PM candidate so soon. Advani would have.
   Note: Selecting candidate based on years of experience is not democracy, rather based on talent and work one has done along with most of the cadres accepting one.