Saturday, June 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்சென்னை போரூர் கட்டிட விபத்து - புகைப்படங்கள்

சென்னை போரூர் கட்டிட விபத்து – புகைப்படங்கள்

-

சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !

டந்த சனிக்கிழமை (ஜூன் 27, 2014) சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில்    இதுவரை 17 தொழிலாளிகள் பலியாகியிருக்கின்றனர்.  100-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.  தப்பிப் பிழைத்தவர்களும் தமது சொற்ப உடமைகளை கட்டிட இடிபாடுகளில் பறிகொடுத்து விட்டு ஏதிலிகளாக விடப்பட்டுள்ளனர். புதையுண்டவர்களின் உறவினர்களோ என்ன ஏது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  வினவு செய்தியாளர் குழு நேரில் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில :

இடிந்து விழுந்த கட்டிட வளாகத்தின் நுழைவாயில்
இடிந்து விழுந்த கட்டிட வளாகத்தின் நுழைவாயில்
கட்டிட இடிபாடுகள்
கட்டிட இடிபாடுகள் பக்கத்து வீட்டில் விழுந்து அந்த வீட்டில் வசித்த ஒருவர் உயிரிழந்தார்.
தமிழ் செல்வன்
மதுரை திடீர் நகரைச் சேர்ந்த தமிழ் செல்வன் – கட்டிட இடிபாடுகளில் சிக்கி தப்பித்து வெளி வந்தவர்
பாதிக்கப்பட்ட தொழிலாளிகள்
பாதிக்கப்பட்ட தொழிலாளிகள்
கணவரை இழந்த பெண்
கட்டிட வேலைக்குச் சென்ற கணவரை தேடும் போரூரைச் சேர்ந்த சாந்தி
அடையாள தேடல்
உள்ளே சிக்கிக் கொண்டவர்களின் புகைப்படங்களை அதிகாரிகளிடம் காட்டி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தேடும் உறவினர்கள்.
building-collapse-victim-13
கட்டிட இடிபாடுகளில் சிக்கிய விருதுநகர் பர்மாகாலனியைச் சேர்ந்த முகமது ஹாசனைத் தேடி அலையும் அவரது தந்தை
தொழிலாளர்கள்
விடை தெரியாத கேள்விகளுடன் தொழிலாளர்கள்
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி – இடிந்தது தனியார் நுகர்வு வெறிக்கான கட்டிடமானாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் கொடுப்பது அரசுப் பள்ளிதான்.
தங்குமிடம்
கிராமத்தில் வாழ்க்கை பறிக்கப்பட்டு, வசிப்பிடமாக இருந்த கட்டப்பட்டு வந்த கட்டிடமும் இடிந்து நொறுங்கிய பிறகு கிடைத்திருக்கும் புகலிடத்தின் லட்சணம்.
தொண்டு நிறுவன வல்லூறுகள்
தொண்டு நிறுவனத்தின் சின்னத்தோடு, புகைப்படக்காரர்களை கூடவே அழைத்து வந்து சாவு வீட்டிலும் விளம்பரம் தேடும் சென்னையைச் சேர்ந்த “உங்களுக்காக” தொண்டு நிறுவனம்.
பத்திரிகையாளர்
பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள்
ஃபிளாஷ் ஃபோட்டோ
நள்ளிரவில் கதறி அழும் தொழிலாளர்கள்.
நெல்லூர் சப்கலெக்டர்
தெலுங்கு தொழிலாளர்களுக்கு நிவாரணம் – நெல்லூரிலிருந்து வந்த சப்-கலெக்டர் பெண்மணி
கட்டிட விபத்து பிக்னிக்
இடிந்த கட்டிடத்தை வேடிக்கை பார்க்க குழந்தைகளோடு வந்திருப்பவர்கள்.
வி.ஐ.பிக்கள் கார் ஊர்வலம்
வி.ஐ.பிக்கள் கார் ஊர்வலம்
  1. சில விடயங்களில் வினவின் கருத்துக்கள் தவறானவையாகவே உள்ளன.

    //கிராமத்தில் வாழ்க்கை பறிக்கப்பட்டு, வசிப்பிடமாக இருந்த கட்டப்பட்டு வந்த கட்டிடமும் இடிந்து நொறுங்கிய பிறகு கிடைத்திருக்கும் புகலிடத்தின் லட்சணம்.//

    இங்கே புகலிடத்தின் இலட்சணம் என்று யாரைக் குற்றம் சொல்கிறீர்கள்? கண்ட இடங்களிலும் இப்படிக் குப்பைகூழங்களைப் போட்டது யார்?

    //தொண்டு நிறுவனத்தின் சின்னத்தோடு, புகைப்படக்காரர்களை கூடவே அழைத்து வந்து சாவு வீட்டிலும் விளம்பரம் தேடும் சென்னையைச் சேர்ந்த “உங்களுக்காக” தொண்டு நிறுவனம்.//

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் என்ன பங்களிப்புச் செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தொண்டு நிறவனத்தைக் குறைசொல்வதில் மட்டும் குறைவைக்கவில்லை. தொண்டு நிறுவனங்கள் இப்படிப் புகைப்படம் எடுப்பதைத் தவறென்று கூறமுடியாது. அவர்கள் செலவு செய்த பணம் நிவாரணத்திற்காக பயன்பட்டது என்பதற்கு ஆதாரம் வேண்டாமா?

    சகட்டுமேனிக்கு மற்றையவர்களைக் குறைசொல்வதன் மூலம் உங்களைத் தவிர மற்றையவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள், மூடர்கள் என்று நிரூபிக்க முயல்வது அபத்தம்.

  2. ///இங்கே புகலிடத்தின் இலட்சணம் என்று யாரைக் குற்றம் சொல்கிறீர்கள்? கண்ட இடங்களிலும் இப்படிக் குப்பைகூழங்களைப் போட்டது யார்?///

    புகலிடம் = அரசு பள்ளி. குப்பைகூழங்களை சுத்தம் செய்வது யாருடைய வேலை (அ) பொறுப்பு ?????

    • புகலிடம் தேடியவர்கள் கூட குப்பை போட்டிருக்கலாமல்லவா? இவர்களுக்கு புகலிடம் வழங்கியதற்காக அரசு பள்ளியின் துப்பரவுப் பணியாளர் இரவு பகலாக வேலைசெய்யவேண்டும் என்கிறீர்களா?
      முதலில் கண்ட இடங்களிலும் குப்பை போடுவது தவறென்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து நாங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் குப்பை வீசுவோம், அதை மற்றையவர்கள் வந்து சுத்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணும் கேவலமான மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

  3. புகலிடம் தேடி வருபவர்கள் குப்பை போடத்தான் வருகிறார்கள் என்றெண்ணும் கேவலமான மனப்பான்மையை நீங்கள் விட்டொழியுங்கள்.

    • புகலிடம் தேடி வருபவர்கள் குப்பை போடத்தான் வருகிறார்கள் என்று சொல்லவில்லை. அவர்களும் குப்பை போடுவார்கள் என்றுதான் சொல்கிறேன். உங்களுக்குத் தமிழ் புரிவதில்லையா? அல்லது வினவு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்பதா உங்கள் வாதம்?

      ஒரு பாடசாலை சுத்தமாக இல்லாவிட்டால் அது சாதாரணமாக இயங்கும் நாளில் புகைப்படமெடுத்துப் பிரசுரித்து விமர்சியுங்கள்.

      சாதிக்கொடுமை எதிர்ப்பு, முற்போக்கு என்றெல்லாம் எழுதும் பலரும் தாங்கள் போடும் குப்பைகளை மற்றையவர்கள் வந்துதான் எடுக்கவேண்டும் என்று நினைப்பது முரண் என்பது புரிவதில்லை.

      • ///உங்களுக்குத் தமிழ் புரிவதில்லையா?///

        உங்களுக்கு யதார்த்தம் புரிவதில்லையா?… “புகலிடம் அளிக்கும் இடத்தில் குப்பைகள் நிறைந்து இருந்தது” இதிலென்ன உமக்கு இவ்வளவு சந்தேகம்.

        //வினவு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்பதா உங்கள் வாதம்?//

        வினவு “மனிதர்கள் வாயினால் உணவு உண்கிறார்கள்” என்று சொன்னால் கூட உடனே அதை எதிர்த்து வாதம் செய்ய கட்சை கட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  4. Maakaan and இனியன்,

    [1]தமிழக அரசு, அரசு பள்ளிகளில் துப்புரவு தொழிளாலர்கள் நியாமானம் செய்யபடுவதே அபூர்வம். வாத்தியாரையே குறைந்த பச்ச தேவைக்கு நியமனம் செய்யாத இவ்வரசு பள்ளி சுகாதாரத்துக்கு செலவு செய்யுமா என்பதை யோசித்துபாருங்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் கொடுத்த அப் பள்ளி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி. அப்பள்ளிக்கு அரசு எந்த அளவுக்கு சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதையும் நினைத்து பாருங்கள்.

    [2]இவ் விடயத்தில் சோகமான முரண் என்ன என்றால் தன் பிள்ளைகளை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் ஆந்திர ரெட்டி, நாயுடுகள் இப்போது புகலிடம் தேடிசெல்வது ஆதிதிராவிடர் நல பள்ளியே !

    [3]மேலும் அப் படத்தில் உள்ள குப்பைகள் paper போன்ற மக்கும் குப்பைகளே ! எனவே சுகாதாரம் பொருட்டு அஞசத் தேவை இல்லை. ஆனால் மனித கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. தொற்று நோயை பரப்பும் தன்மை வாய்ந்தவை. எனவே புகலிட கழிப்பிடங்கள் தூய்மையாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

    • நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
      மக்கும் குப்பைகள் என்பதற்காக அவற்றை கண்ட இடங்களிலும் போடுவது சுகாதாரத்திற்கு கேடில்லை என்கிறீர்களா?

      • இனியன்,

        [1] என்ன சொல்ல வருகின்றேன் என்றால் paper போன்ற மக்கும் குப்பைகளை விட மனித கழிவுகள் மிகவும் ஆபத்தானவை.தொற்று நோயை பரப்பும் தன்மை வாய்ந்தவை. எனவே புகலிட கழிப்பிடங்கள் தூய்மையாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

        //நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

  5. பத்து நாட்கள் போகட்டும்…

    ‘போரென்றால்
    பிணங்கள் விழும்.
    அதுபோலத்தான்.
    கட்டடம் என்றால்
    ஒரு நாளைக்கு
    இடிந்து விழத்தானே செய்யும்?
    கூடவே
    கொஞ்சம் பிணங்களும்.
    என்ன,
    இது கொஞ்சம்
    முந்திரிக்கொட்டை மாதிரி
    முந்திக்கொண்டது…
    அவ்வளவுதான்!’

    ஒரு இனிய மாலைப்பொழுதில்
    செய்திச் சேனல் விவாதத்தில்
    காப்பிக் குவளையை வாயில்
    கவிழ்த்து சுவைத்தபடி
    தன் அபிமான கட்சிக்கார
    கட்டுமான முதலாளிக்காக
    ஒரு புதிய மாற்றுக்கருத்தை
    முன் வைப்பார்கள்
    மனுஷ்ய புத்திரர்கள்.
    பத்ரிக்களோ
    சுபவீரர்களோ
    சுரங்களை ஏற்றியிறக்கி
    சுக்லாம்பரதரம்
    பாடிக்கொண்டிருப்பார்கள்.

    ஆனால்
    இப்போது வேண்டாம்.
    மக்கள் கோபத்தில்
    கொந்தளிக்கிறார்கள்.
    பத்து நாட்கள்
    போகட்டும்.
    அப்போது
    அவிழ்த்துவிடலாம்.

    ‘குழந்தைப் பிறப்பின் வலியை
    கட்டடம் குமுறியபோது
    உணர்ந்தான்
    அந்த
    கட்டுமான முதலாளி;
    ஏன், இருக்கக்கூடாதா?
    அவனும்
    ஒரு சிருஷ்டிதானே?’ என்று
    வானத்திலிருந்து
    வார்த்தகளைப்பிடுங்கி
    வரிகளாக்கி
    கட்டுமான முதலாளியை
    மையமாகவைத்து
    கதை எழுதித் தீர்ப்பார்கள்
    ஜெயமோகன்கள்.

    ஆனால்
    இப்போது வேண்டாம்.
    மக்கள் கோபத்தில்
    கொந்தளிக்கிறார்கள்.
    பத்து நாட்கள்
    போகட்டும்.
    அப்போது
    எழுதிவிடலாம்.

    ‘விண்ணில்
    அந்தரத்தில்
    நின்றிருக்கவேண்டிய
    அர்ப்புத வியர்வைகள்
    அவைகள்.
    ஆனால் அந்தோ,
    தரைவழியாக
    வழிந்து
    வீணாய்ப் போயின…’
    வைரமுத்துக்கள்
    வரிகளிலே
    கலைஞர் டிவிக்களில்
    ஒப்பாரி வைக்கலாம்.

    ஆனால்
    இப்போது வேண்டாம்.
    மக்கள் கோபத்தில்
    கொந்தளிக்கிறார்கள்.
    பத்து நாட்கள்
    போகட்டும்.
    அப்போது
    அழுது தீர்க்கலாம்.

    ஏல்
    பல்கலைக்கு
    இணையான
    காட்டாங்கொளத்தூர்
    வளாகத்து
    கல்வித் தந்தைகள்
    இந்தக் கட்டுமான
    முதலாளிக்கு
    ‘டாக்டர்’ பட்டம்
    வழங்க
    ஏற்பாடு செய்யலாம்.

    அவருக்கு
    பொன்னாடை போர்த்தி
    உலக உருண்டைமீது
    கழுகு உட்கார்ந்திருப்பதுபோல
    ஒரு வெண்கல
    நினைவுப்பரிசை
    வழங்கிட
    ஏதாவது
    லயன்ஸ் கிளப்புகள்
    ஒரு கோப்பைக்கு
    ஆர்டர் கொடுத்திருக்கலாம்.

    ஆனால்
    இப்போது வேண்டாம்.
    மக்கள் கோபத்தில்
    கொந்தளிக்கிறார்கள்.
    பத்து நாட்கள்
    போகட்டும்.
    அப்போது
    அளித்துக்கொள்ளலாம்.

    அடித்தளப்பகுதியில்
    சாதிச் சங்கத்தின்
    அடிப்படை உறுப்பினர்
    அட்டையோடு
    சுருண்டுகிடக்கும்
    ஒரு
    தொழிலாளிக்கு
    ஒரு
    தண்ணீர் பாக்கெட்டுகூட
    தரத் துணியாத
    சாதிவெறிச் சங்கங்கள்.

    ஆனால்,
    முதலாளி மட்டும்
    தன் சாதிக்காரனாக
    இருந்துவிட்டால்…
    இதே சாதிவெறிகள்
    அவரைக் காப்பாற்ற
    நடுவண் அரசுக்கு
    ஹாட்-லைனில் பேசி
    நெருக்கடி கொடுக்கலாம்.
    ஏனென்றால்
    அவர்
    பத்து நாள்
    சிறையிலிருந்தாலும்
    அது
    சாதிக்கே அவமானம்.

    சாதி, மதம் மட்டுமல்ல
    கட்சிக்காரனாய்
    இருந்தாலும்
    இதே கதிதான்.

    இந்த
    சாதி வெறியர்களோ
    மதவாதிகளோ
    கழகக் கட்சிகளோ
    இந்த முதலாளிக்காக
    சட்டங்களை ஓட்டைபோட்டு
    திட்டமிட்டு
    சமுதாயத்தில்
    அவரை மீண்டும்
    சுற்றவிடுவார்கள்.

    ‘இன்னும் மேலும் மேலும்
    அடுக்கடுக்காக
    கட்டிடங்கள் கட்டி முடித்திட
    வாழ்த்துக்கள்’ என்று
    வீர உரை முழங்கி
    வீரவாள் பரிசளிப்பார்கள்.

    ஆனால்
    இப்போது வேண்டாம்.
    மக்கள் கோபத்தில்
    கொந்தளிக்கிறார்கள்.
    பத்து நாட்கள்
    போகட்டும்.
    அவர்
    வெளியே வரட்டும்.
    அப்போது
    பார்த்துக்கொள்ளலாம்.

    பாவம் அவர்.
    வாழ்ந்து கெட்டவர்.
    என்ன இருந்தாலும்
    முதலாளியில்லையா?
    என்று
    பத்து நாள் கழித்து
    நம் சக தொலாளியே
    அவர்மீது
    வருந்திப் பேசலாம்.
    ஏனென்றால்
    நாமெல்லோரும்
    இப்படிச் சொல்லியேதான்
    வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

    இதை
    எல்லாம் கடந்துபோம்
    என்றுதான்
    எடுத்துக்கொள்ள வேண்டுமா?

    பத்து நாட்கள்!
    பத்து நாட்களில்
    மனிதர்கள்
    எப்படியெல்லாம்
    மாறிப்போகிறார்கள்?!

  6. நேற்றுமுன்தினம் ஒரு செய்திச் சேனல் விவாதத்தில் “மக்கள் குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு முண்டியடிப்பதால் தான் கட்டுமான பொருள்களின் தரத்தில் கொஞ்சம் விட்டு கொடுத்து கட்டி, குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் எனவே இது போன்ற நிகழ்வுகளுக்கு மக்களும் ஒரு காரணம்” என்கிறர்கள் இந்த விவாத மேதைகள். இதை பார்க்கும் போது கிராமத்து சொலவடை ஒன்று நினைவுக்கு வருகிறது. அது… “பேண்டவனை விட்டு விட்டு பீயை கம்பு எடுத்து அடி அடின்னு அடிச்சானாம்”.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க