Friday, January 17, 2025
முகப்புசெய்திபுஜதொமுவின் புதிய மாநில நிர்வாகக் குழு

புஜதொமுவின் புதிய மாநில நிர்வாகக் குழு

-

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
110/63, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை-24.

தலைவர் அ.முகுந்தன்
பொதுச் செயலாளர் சுப.தங்கராசு

பத்திரிக்கை செய்தி

பொருள்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த எமது அறிக்கை

ஐயா,

வணக்கம், தொழிலாளர்களின் உரிமைக்காகவும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தினைச் சூறையாடி கொழுத்து வரும் முதலாளித்துவ சுரண்டல் அமைப்பிற்கு மாற்றாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்தவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

பிற, போலி கம்யூனிஸ்டு சங்கங்களும், சாதி, மத, இனவாதக் கட்சிகளின் சங்கங்களும் தமது சமரச – பிழைப்புவாத – காரியவாதப் போக்குகளில் செயல்பட்டு வெறுமனே பொருளாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தி ஓட்டுப் பொறுக்கும் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால், இந்தப் பொருளாதாரக் கோரிக்கைகள் யாவும் இன்றைய தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் (Re-colonisation) கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்படுவதால் விலைவாசி உயர்ந்து பலனில்லாமல் போய் விடுகின்றன. அதனால், மீண்டும் தொழிலாளர்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்த நிலைமைகளை அனைத்து ஓட்டுக்கட்சி, பிழைப்புவாத சங்கங்கள் தெரிந்திருந்தும், தொழிலாளர்களை அரசியல் உணர்வற்றவர்களாக வைத்துக் கொள்வதையே விரும்புகின்றனர். ஆனால், தொழிலாளர்கள் அரசியல் – சமூக – பண்பாட்டுப் பிரச்சினைகளுக்குப் போராடி, இந்த முதலாளித்துவ சுரண்டல் அமைப்பினால் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் ஏனைய ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரிவினரையும் இணைத்துப் போராடி சமூக மாற்றத்தை நிகழ்த்துவதன் மூலம் தான் உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.

இந்த உன்னத லட்சியத்துடன் செயல்பட்டு வரும் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 26.10.2014 அன்று மாநிலத் தலைவர் தோழர். முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் பட்டியல்:

தலைவர் : தோழர். முகுந்தன்
துணைத் தலைவர்கள் :
தோழர். பரசுராமன்
தோழர். விளவை ராமசாமி

பொதுச் செயலாளர் : தோழர். சுப. தங்கராசு

இணைச் செயலாளர்கள் :
தோழர். சுதேஷ்குமார்
தோழர். பழனிசாமி

பொருளாளர் : தோழர். விஜயகுமார்

பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் தங்களது மார்க்சிய அறிவை வளர்த்துக் கொண்டு சங்கத்தின் வளர்ச்சிக்கான வேலைகளில் ஒருமித்த புரிதலுடன் செயல்படுவதாக உறுதியளித்து, புதிய நிர்வாகிகளாக தங்களைத் தேர்ந்தெடுத்த மாநில செயற்குழுவிற்கு தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

நன்றி! வணக்கம்!

தங்கள் உண்மையுள்ள,
(சுப. தங்கராசு)
பொதுச் செயலாளர்

உழைப்பு
கார்ட்டூன் – “டஸ்ட்” வாலின், இண்டஸ்ட்ரியல் பயனீர், ஆகஸ்ட் 1921 (நன்றி : http://www.laborarts.org/
முதலாளிகளுக்கு லாபத்தை குவித்து கூலியாக ஒரு சிறு பகுதியை பெறும் தொழிலாளி வர்க்கம்.
  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள். உழைக்கும் மக்களின் தேவை அறிந்து தேவைக்கான நடுநிலமையுடன்செயல்பட வாழ்த்துகிறோம்.

  2. பழைய நிர்வாகிகளில் பலரும் புதிதாக சிலரும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி. கூடுதல் உற்சாகத்துடன் செயல்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    வினவிற்கு,

    ஒரு சின்ன திருத்தம். தோழர். முகுந்தன் என எல்லா தோழர்களின் பெயருக்கு முன்னாலும், தோழருக்கு பக்கத்தில் புள்ளி வைத்திருக்கிறீர்கள். இது தவறு. எனவே மாற்றிவிடுங்கள்.

    தோழமையுடன்,

    குருத்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க