Sunday, January 19, 2025
முகப்புவாழ்க்கைகுழந்தைகள்தருமபுரி குழந்தைகள் படுகொலை - கண்டன பொதுக்கூட்டம்

தருமபுரி குழந்தைகள் படுகொலை – கண்டன பொதுக்கூட்டம்

-

ருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14 தேதி தொடங்கி அடுத்தடுத்து 16 பச்சிளம் குழந்தைகள் கோரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து சேலம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்ற 9 பச்சிளம் குழந்தைகள் இறந்து போயின. இவ்வாறு தொடர்ந்து நடந்தேறிய இந்த சம்பவங்களுக்கு மருத்துவர் அலட்சியமோ அல்லது மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றக்குறையோ காரணம் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் மூடிமறைக்கும் வேலையில் இறங்கியது. மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது என்று செய்தி வெளியிட்டுக் கொண்டு மருத்துவ உபகரணங்களை அவசரஅவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து இறக்கியது.

ஆனால் இது வரை குழந்தைகள் என்ன காரணத்தால் இறந்தன என்று முழுமையான விவரமோ, இறந்த குழந்தைகளின் பெற்றோர்க்கு நட்டஈடு கூட அறிவிக்கவில்லை. மாறாக, குழந்தைகள் மரணத்திற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை, பருவகால மரணம், குறை பிரசவம் என்று மரணத்திற்கான காரணத்தை தேடிபிடித்து வெளியிட்டு இந்த பிரச்சனையை மூடிமறைக்கும் வேலையில் அரசும் ஆட்சியாளர்களும் இறங்கினர். மேலும் பெற்றோர்கள் மீதே பழியை போட்டுள்ளனர்.

மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், “மருத்துவமனை சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் சில அமைப்புகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. இதனை நிறுத்தி கொள்ளவேண்டும்” என்று பேட்டி கொடுத்தார். இறந்த குழந்ததைகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்ககூட அமைச்சர் தயார் இல்லை.

இந்நிலையில் பச்சிளம் குழந்தைகளின் மரணம் என்பது தனியார்மயத்தின் படுகொலை என்பதை அம்பலப்படுத்தியும், “காசில்லாதவர்களின் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறை“, “தனியார் மருத்துவ கிரிமினல் கும்பலின் கொள்ளைக்காக பிள்ளைகறி தின்னுகிறது அரசு” என்பதை விளக்கியும், “மருத்துவம் நமது பிறப்புரிமையை மீட்டெடுப்போம்” என்கிற வகையில் மக்களை அறைகூவி போராட்டத்திற்கு அழைத்தது விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

dharmapuri-infants-death-meeting-4

பேருந்து, கடைவீதி பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம், கிராம பிரச்சாரம், வீட்டு பிரச்சாரம் என பல வகையில் ஒருவாரகாலம் மக்கள் மத்தியில் பரவலாக பிரச்சாரத்தை கொண்டு சென்றோம். இதன் இறுதியாக தருமபுரி நகரத்தில் தந்தி அலுவலகம் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினோம்.

dharmapuri-infants-death-meeting-3

தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் 25 பச்சிளம் குழந்தைகள் படுகொலை!
காசில்லாதவர்களின் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறை!
தனியார் மருத்துவ கிரிமினல் கும்பலின் கொள்ளைக்காக பிள்ளைக்கறி தின்னும் அரசு!

கண்டன பொதுக்கூட்டம்

இந்த பொதுக்கூட்டத்திற்கு விவிமு வட்டார செயலர் தோழர். கோபிநாத் தலைமை தாங்கினார். “மருத்துவமனையை ஆய்வு செய்துவிட்டு சிறப்பாக இருக்கிறது மருத்துவமனை  என்றால் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதே மருத்துவமனையில் தங்கள் குடும்பத்தினர்க்கு பிரசுவம் பார்ப்பார்களா” என்று இவர்களின் பொய்களை அம்பலப்படுத்தி தலைமையுரை ஆற்றினார்.

அடுத்ததாக பேசிய தோழர் ராஜா பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர், போராட்டமே தீர்வு என்பதையும் மருத்துவமனை சீர்கேட்டையும் விளக்கி பேசினார்.

dharmapuri-infants-death-meeting-1

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் தோழர்.ஜானகிராமன் வழக்கறிஞர் பேசும்போது அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இருப்பதையும், சட்ட ரீதியாக மருத்துவமனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், ஜோசப் கண் மருத்துவமனையில் 66 பேருக்கு கண்பார்வை பறிபோனது அதற்காக போராடி நட்டஈடு மற்றும் மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என்பதையும் விளக்கி பேசினார்.

dharmapuri-infants-death-meeting-2

சிறப்புரையாற்றிய தோழர். விளவை இராமசாமி பு.ஜ.தொ.மு மாநில துணைத்தலைவர், “மருத்துவமனையில் குழந்தைகளின் இறப்பு குறித்து படம்பிடிக்காமல் நியாயத்தை கேட்கும் எங்களை படம்பிடித்து அரசுக்கு தெரிவிக்கிறது, உளவுத்துறை.” என்று உளவுத்துறை ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்படுவதை அம்பலப்படுத்தினார். அரசு மருத்துவமனைகள் நாடு முழுவதும் சீர்கெட்டு இருப்பதையும், அரசு மருத்துவ மனைகளை தனியாருக்கு  கொடுத்திருப்பதை அம்பலப்படுத்தியும், அமைச்சர்கள் அதிகாரிகளும் தான் குற்றவாளிகள் என்றும் “சாதாரண குற்றத்திற்கு குண்டாஸ் சட்டத்தை ஏவும் அரசு இந்த கொலைக்காரர்களை ஏன் தண்டிக்கவில்லை” என்றும், “இவர்கள் தான் தனியார்மயத்தின் ஊழியர்கள் எனவே தனியார்மயத்தை ஒழிக்காமல் நமக்கு வாழ்வில்லை” என்பதை போர்குணத்தோடு விளக்கியும் உரையாற்றியது மக்களுக்கு உணர்வூட்டியது.

தர்மபுரி குழந்தைகள் மரணம்

இதனைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது புரட்சிகர பாடல்கள் மூலம் தெருக்களில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கூட இறுதிவரை நின்று பார்த்துவிட்டு ஆதரவும் நிதி அளித்து சென்றனர். இறுதியாக தோழர். தாமரைச்செல்வன் நன்றியுரை ஆற்றினார்.

பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
தருமபுரி மாவட்டம் 
9943312467

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க