எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!

மிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி’ என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழ்ச் சமுதாயத்தை சுயமரியாதையற்ற கையேந்திகளாக, அரசியலற்ற மூடர்களாக, சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் அடிமைப் பிண்டங்களாக மாற்றி வருகிறார், ஜெயலலிதா என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தோம்.

எம்.ஜி.ஆர் பாசிஸ்ட்
கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் படம்.

இன்று ஜெயலலிதாவை விமரிசிக்கின்ற எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உட்பட பலரும் எம்.ஜி.ஆரை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், ஊழலற்ற உத்தமராகவும், மக்களுக்காகப் பாடுபட்டு உயிர்துறந்த மாமனிதராகவும் காட்டுவதுடன், அவர் காட்டிய வழியில் செல்லத் தவறியதுதான் ஜெயலலிதாவின் குற்றம் என்பதாகவும் சித்தரிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். அவர் 1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற புதிய திரைப்படம் சென்னையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. ‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’, ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று பத்தாண்டுகளாக கருணாநிதி கட்சியின் பத்திரிகைகள் எழுதி வந்தன. இதற்குப் பொருத்தமாக கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் சினிமா படம் ஒன்றையும் தவறாது வெளியிட்டு வந்தன.

எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி வந்தவுடனே, பச்சோந்தித்தனமாக நிறத்தை மாற்றிக் கொண்டு நாற்பதாண்டு இனிய நண்பரை இழந்த துக்கத்தில் மூழ்கிவிட்டார், கருணாநிதி. கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கிய போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும், இத்தகைய கேடுகெட்ட ‘ராஜதந்திரங்களை’ நியாயப்படுத்திக் கொள்வதற்காக, இவற்றையெல்லாம் உயர்ந்த அரசியல் பண்பாடு என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.

எம்.ஜி.ஆர் கவர்ச்சி அரசியல்
இறந்தும் உயிர்வாழ்பவர் : எம்.ஜி.ஆர் உருவாக்கிய கவர்ச்சிவாத பொறுக்கி அரசியல்தான் இன்றும் தமிழகத்தில் கோலோச்சுகிறது.

திராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தியே அதற்கு குழி தோண்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் சோ, சுப்பிரமணியசாமி, ஆர்.வெங்கடராமன், சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம் முதல் தா.பாண்டியன் வரையிலான போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து இந்த எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணையைத் தமிழக மக்களின் தலையில் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழின அடையாளங்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் சவக்குழி தோண்டியவர் எம்.ஜி.ஆர். இன்றைய ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதைப்போலத்தான், எம்.ஜி.ஆரின் வள்ளல்தன அறிவிப்புகள் பலவும் இருந்தன. விவசாயியாகவும், தொழிலாளியாகவும், மீனவ நண்பனாகவும் நடித்து விட்டு, அதே மக்களை தேவாரம்-மோகன்தாசு தலைமையிலான போலீசு மிருகங்களை ஏவிக் கொடூரமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர். அவரை மனிதநேயர், வள்ளல் என்பது நிகழ்கால வரலாற்றையே திரித்துப் புரட்டுவதாகும். இந்த உண்மையை மறைத்து, தெரிந்தே பார்ப்பன ஊடகங்களும் பிழைப்புவாத ஊடகங்களும் சினிமாக்காரர்களும் புளுகித் திரிகின்றனர்.

சந்தேகப்பிராணியான ஜெயலலிதா தனது உடன் பிறவாத சகோதரி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உட்பட விசுவாசிகள் மீதும் அமைச்சர்கள் மீதும் உளவுப்படை போலீசை விட்டு வேவு பார்ப்பதும், சொந்த புத்தி இல்லாமல் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் கோள் மூட்டும் போதெல்லாம் பதவிகளைப் பறித்து அவர்களைப் பந்தாடுவதும், கஞ்சா வழக்குகள் பேடுவதும் எம்.எல்.ஏ., எம்பி.க்களைக்கூட தோட்டத்துக்கு இழுத்து வந்து அடிப்பதும் கூட எம்.ஜி ஆரிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடம்தான். காரியத்தைச் சாதித்துக்கொள்ள அரசியல் பிரமுகர்களுக்குப் பலவகை விருந்து வைப்பதுகூட எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கற்றுக்கொண்ட அரசியல் கலைதான். ஏன், ஜெயலலிதாவையே உளவு பார்த்து, மிரட்டி, ஒதுக்கி வைத்தார், அவரை விஞ்சிய சந்தேகப் பிராணியான, எம்.ஜி.ஆர்.

இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக்கட்சிக்கும், அதன் லஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை. இந்த உண்மை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. இதனை அனுபவித்த முந்தைய தலைமுறையினரோ மறந்து விடுகின்றனர். இதுதான் அன்றாடப் பரபரப்புச் செய்திகளில் மூழ்கடிக்கப்படும் நமது மக்களின் மிகப்பெரிய பலவீனம். இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான், அரசியல் அறிவும் ஜனநாயக உணர்வுமற்ற ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியைப் பராமரித்து வருகிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா ஆட்சியைப் புரிந்து கொள்வதற்கு, அவருடைய ‘அரசியல் உடன்கட்டை’ எம்.ஜி.ஆரின் ஆட்சியைப் புரிந்து கொள்வது அவசியம். 1987-ல் எம்.ஜி.ஆர். இறந்ததை ஒட்டி, “புதிய ஜனநாயகம்” ஏட்டில் வெளியிடப்பட்ட “ஒரு பாசிஸ்டின் மரணம்” என்ற சிறப்புக் கட்டுரையை இங்கே சுருக்கித் தருகிறோம்.

புர்ரட்சித் தலைவர்!

வெங்கட்ராமன் - எம்.ஜி.ஆர்
ஆர்.வி – எம்.ஜி.ஆர் அணைப்பு : திராவிட இயக்க அரசியலை ஒழிக்க பார்ப்பனப் பிணைப்பு!

காங்கிரசுக்காரராக அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர்., தி.மு.கழகக்காரராகப் பிரபலமானார். ஒரு மாநிலக் கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கினாலும் ஜனதாக் கட்சிப் பிரதமர் மெரார்ஜி தேசாய்-யின் மிரட்டலுக்குப் பயந்து, அகில இந்திய அ.தி.மு.க-வாக மாற்றிக் கொண்டு அண்ணாயிசமே அதன் கொள்கை என்று அறிவித்தார். அண்ணாவின் கொள்கைகளும் கம்யூனிசமும், சோசலிசமும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கமும் அளித்தார் ‘புர்ரட்சித் தலைவர்’!

அண்ணாயிசம் போன்று பலப்பல அரசியல், சித்தாந்தக் கண்டுபிடிப்புகளை வகுத்தளித்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தைப் பத்து ஆண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். எம்.ஜி.ஆரின் சாவு அவரது பாசிசப் படுகொலைகளை, குரூர இன்பங்காணும் நடவடிக்கைகளை, கொடூரமான கோமாளித்தனங்களை மறைத்துவிட முடியாது. அவற்றை எம்.ஜி.ஆர். உடலோடு சேர்த்து மெரினா கடற்கரையில் புதைத்துவிட முடியாது. மெரினா – அங்குதானே எம்.ஜி.ஆரின் போலீசு வெறிநாய்கள் தேவாரத்தின் தலைமையில் மீனவர்களைக் கடித்துக் குதறின; அங்குதானே மீனவர் குப்பங்களைச் சூறையாடின. அவை நினைவுக்கு வருகின்றன. அவை தமிழகத்தின் இருள் நிறைந்த பத்தாண்டு வரலாறு ஏற்படுத்திய வடுக்கள்!

கருணாநிதி ஆட்சியின் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளைச் சொல்லி தூய்மையான “அண்ணா”வின் ஆட்சிக் காணப் போவதாகச் சொன்னார், எம்.ஜி.ஆர். ஆனால், அவரது ஆட்சியில் தழைத்தோங்கிய இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடு, மோசடி, தில்லுமுல்லு, எத்து வேலை, பித்தலாட்டம் அனைத்திற்கும் மூலகர்த்தாவாக எம்.ஜி.ஆரே விளங்கினார். தமிழகத்தின் சுபீட்சத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர் பெரும்பான்மையான மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு இலவசப் பற்பொடி, செருப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம், சத்துணவு என்று இவரது தானத்திற்குத் தவம் கிடக்கச் செய்தார்.

படிக்க :
♦ ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!
♦ பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்

இடி அமீனையும் விஞ்சிவிடும் ஆடம்பர, வக்கிர வாழ்வும், விருந்தும், அரசு விழாக்களும் நடத்தினார். சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது “சின்ன வீடு” சினிமா பார்த்து மகிழ்ந்தார். 12 கோடிக்கு ஆடம்பரமாக உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். கருணாநிதி நடத்தினார் என்பதற்காகவே அடுத்த உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணித்து, பங்கேற்பவர்களையும் தடுத்தார்.

ஒரு வள்ளலும் ஓராயிரம் ஒட்டுண்ணிகளும்!

பாசிசக் கோமாளி
பாசிசக் கோமாளியின் அடுத்த வாரிசு

“மாண்புமிகு புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், இதயக்கனி, டாக்டர் எம்.ஜி.ஆர்.” என்று தற்புகழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார். அரசு கட்டிடங்களின் எல்லா கல்வெட்டுகளிலும் தன் பெயரே இருக்க வேண்டும் என்று வெறியோடு உத்திரவிட்டார். முகத்துதிபாடும் கூட்டத்துக்கு பொன்னும் பொருளும் கொடுத்து வள்ளலென்றும், நோபெல் பரிசுக்குரிய மேதை என்றும் புகழ வைத்தார்.

இதயம் பேசுகிறது மணியன், மக்கள் குரல் டி.ஆர்.ஆர்., சண்முகவேல், சோலை, வலம்புரிஜான் ஆகிய அவரது முகத்துதிபாடும் பத்திரிக்கை எடுபிடிகள்; போலி கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், ரங்கச்சாரி, வி.பி.ராமன் ஆகிய அரசியல் ஆலோசகர்கள்; மோகன்தாஸ் தலைமையில் ஒரு உளவுப்படை, தேவாரம் தலைமையில் ஒரு அதிரடிப்படை – இடி அமீனைச் சுற்றி ஒரு அல்லக்கைக் கூட்டம் அமைந்ததைப் போல இவர்கள் எம்.ஜி.ஆரைச் சுற்றியிருந்தனர்.

தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை எம்.ஜி.ஆர். தானமாகக் கொடுத்தார். சென்னை மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தை பழனி பெரியசாமிக்கும், சென்னை வளசரவாக்கத்தின் புறம்போக்கை நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கும், போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும், மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும் எழுதிக் கொடுத்தார்.
முனு ஆதி, லியாகத் அலிகான், மா.பொ.சி., அங்கமுத்து, உக்கம் சந்து, பழக்கடை பாண்டியன், கோடம்பாக்கம் குமார், சுலோச்சனா சம்பத், கல்யாணி ராமசாமி, அனகாபுத்தூர் ராமலிங்கம், பால குருவ ரெட்டியார் இப்படி ஒரு பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்களாக்கி அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்தார். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, கோவை முதலாளி வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தார்.

பாசிசக் கோமாளி!

தனது அரசியல் எதிரிகளை ஒழிக்கும்பொருட்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, சட்டமன்ற பதவி பறிப்பு, வெடி குண்டு வழக்கு, இந்திராவுக்கு கருப்புக் கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மீது தாக்குதல், தனது அமைச்சர் மீதே கொலை வழக்கு என்று பல வக்கிரமான வழிகளை மேற்கொண்டார்.

04-mgr-1மோகன்தாஸ் – தேவாரம் படையை ஏவிப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்தார். பத்திரிக்கைகள் மீது குண்டர்களை ஏவித் தாக்கினார்; சபாநாயகர் பாண்டியனை ஏவி அரசியல் எதிரிகளை சிறையிலிட்டார்; நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை விசாரிக்கப்போன பத்திரிக்கையாளர்களைத் தேவாரத்தை விட்டுத் தாக்கினார். சிறை – சித்திரவதை – படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தார். தனது அரசுக்கு விரோதமாகத் தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகளையும் தனது அரசை விமர்சிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் உளவு பார்க்கச் செய்தார். நாடு கடத்தும் சட்டம் என்றொரு வக்கிரமான சட்டத்தைக் கொண்டு வந்தார்.

பெரியாரின் வாரிசு, பகுத்தறிவு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டே குறி கேட்டுத்தான் எந்தச் செயலையும் செய்தார். கோஷ்டி பூசலால் ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி வந்த போதெல்லாம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது மனைவிமார்களில் சிலரையே அந்நிய உளவாளிகள் என்று அறிவித்துக்கொன்றான் இடி அமின். எம்.ஜி.ஆரோ ஒரு பாசிசக் கோமாளிக்கே உரிய முறையில் பத்திரிக்கைகளில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் கொடுத்தார்.

“அரசு நிர்வாகத்தில் சம்பந்தமில்லாத யாருடைய தலையீட்டையும், குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாக இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும். அமைச்சர்களே ஆனாலும் சரி, தலைமைச் செயலாளர் அல்லது உயர் அதிகாரிகள் சம்பந்தபட்ட ஏனைய யாராக இருந்தாலும் சரி என்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.”

எம்.ஜி.ஆர். ஆட்சியின் ஒவ்வொரு அசைவிலும் அதன் அருவருக்கத்தக்க இழிவான அம்சம் முழுவதுமாக வெளிப்பட்டு அம்பலமான பின்னும், நோயுற்று நடைபிணமான பின்னும், அவர் மத்திய அரசுக்குத் தேவையான எடுபிடி என்பதால் ஆட்சியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின் பாசிச, சேடிச, கோமாளித்தனங்களை அவருடைய “தோழமை”க் கட்சிகள், பத்திரிக்கைகளே நியாயப்படுத்த முடியாமற் தவித்த சம்பவங்கள் ஏராளமாக உண்டு. மறைமுகமாக அவரை ஆதரித்த துக்ளக், ஆனந்தவிகடன், கல்கி, தினமணி, இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகளும், போலி கம்யூனிஸ்டுகளும் கூட அவற்றைக் “கிண்டலடித்த – கண்டித்த” சம்பவங்களும் ஏராளமாக உண்டு.

அட்டைக் கத்தி வீரனின் அழுகை!

சக்களத்திச் சண்டை
சக்களத்திச் சண்டை : ஆட்சி எம்.ஜி.ஆரின் பூர்வீக சொத்தா?

பாசிச எம்.ஜி.ஆர் மூன்று தவணைகளாக பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்தார். முதல் மூன்றாண்டுகள் போலீசையும் அடக்குமுறைச் சட்டங்களையும் ஏவி ஏழை – எளியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர் – அரசு ஊழியர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரையும் அடக்கி ஒடுக்கிவிட்டார். கடைசியாக, சங்கம் வைக்கும் உரிமைக்காகப் போராடிய போலீசார் மீதே மத்தியப்படையை ஏவி ஒடுக்கினார். சந்தர்ப்பவாதமும் அரசியல் பித்தலாட்டமும் அம்பலப்பட்டு போகவே 1980 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்தார். மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டபோது எம்.ஜி.ஆர். நிலைகுலைந்து போனார்.

அதைத்தொடந்து, (சினிமாவில் வீரதீரமாகச் சண்டையிட்ட எம்.ஜி.ஆர்.) இரண்டு கண்களிலும் “கிளிசரினை” ஊற்றிக் கொண்டு தமிழக மக்களிடம் குடம் குடமாக கண்ணீர் வடித்தார். விவசாய சங்கத் தலைவரிடமும், போலீசு சங்கத் தலைவரிடமும் மண்டியிட்டார். மன்னிப்பு கேட்காத குறையாக சரணடைந்தார். ஏராளமாகப் பொய்யான வாக்குறுதிகளை வீசி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

மீண்டும் பதவி நாற்காலியில் அமர்ந்தவுடன் அத்தனையும் காற்றில் பறந்தது. அதிகார மமதை தலைக்கேற, மீண்டும் அந்த பாசிச வேதாளம் தமிழக மக்கள் மீது பாய்ந்தது. அரசியல் எதிரிகளையும், பத்திரிக்கைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. இதிலே வெற்றி பெற்ற பிறகு தமிழகத்தைத் தனது கட்சியின் ஊழல் “பேரரசாக” மாற்றுவதில் முழு மூச்சாக இறங்கினார். தனது பினாமிகளையும், சாராய சிற்றரசர்களையும், தனது புகழ்பாடும் விசுவாச ஒட்டுண்ணிக் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

படிக்க :
♦ ஜெயாவின் மறைவுக்கு அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை !
♦ வாஜ்பாய் ( 1924 – 2018 ) : நரி பரியான கதை !

தனது அரசியல் – அதிகார அட்டூழியங்களுக்கும், பகற்கொள்ளைக்கும் வசதியாக இந்திராவின் இளைய பங்காளியாகவும் பாசிச பாதந்தாங்கியாகவும் மாறினார். இலஞ்ச ஊழலும், பாசிச அடக்குமுறையும் நிறுவனமயமானது – ஆட்சியின் ஒழுங்குவிதியானது. அதன் பிறகு அவரது ஆட்சியின் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க யாரும் துணியவில்லை. நோயுற்று நடைபிணமான நிலையில், அதைக் காட்டியே அனுதாப அலையை எழுப்பி, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், எம்.ஜி.ஆரின் எடுபிடிகள் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதற்கான உரிமை பெற்றவர்களாகிவிட்டனர். சட்டமன்றத்துக்குள் சர்வாதிகாரி பாண்டியனும், வெளியே மோகன்தாஸ் – தேவரம் கும்பலும் காட்டுமிராண்டித்தனமாக ஆட்சி நடத்தினர். சாதி, மதவெறியர்களும், சாராய- மாஃபியா – கடத்தல் தலைவர்களும் கட்டுப்பாடற்ற கொள்ளையில் இறங்கினர்.

பத்தாண்டு ஆட்சியின் கருப்பு சிவப்பு புள்ளிகள் மீது வெளிச்சம் போட்டுக் காட்டினாலே போதும். அவரது பாசிச, சேடிச கோமாளித்தனங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

  • எம்.ஜி.ஆர் - இந்து மதவெறி
    பகுத்தறிவுக்குச் சவக்குழி, இந்து மதவெறிக்குப் பிள்ளையார் சுழி

    எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே, முந்தைய அவசரநிலை ஆட்சியின் போது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் அவர்கள் நடத்திய அமைதியான ஊர்வலத்தின் மீது போலீசும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பாய்ந்து தாக்கினர். மதுரை கலெக்டரே இரும்புத் தொப்பியும் கைத்தடியும் ஏந்தி மாணவர்களை அடித்து நொறுக்கினார். தப்பி ஓடிய மாணவர்களின் விடுதிகளுக்குள்ளும் புகுந்து வெறியாட்டம் போட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ரத்தக் காயங்கள்; 850 பேர் கைதாகி பொய்வழக்குகள்அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், மாநிலக் கல்லூரி, நெல்லை இந்திய மருத்துவக் கல்லூரி, தியாகராய கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீசாராலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் தாக்கப்பட்டனர். பல்கலைக்கழகம் நோக்கி ஊர்வலம் போனபோது ஊழியர்களாலும், போலீசாராலும் தாக்கப்பட்டனர்.சிறுபான்மையினரின் கல்லூரிகள் என்கிற பெயரில் நிர்வாகம் தம்மை ஒடுக்குவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்களும் புதுக்கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் அக்கல்லூரி நிர்வாகங்களை எதிர்த்துப் போராடினர். எம்.ஜி.ஆர் அரசு, கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு மாணவ- மாணவிகளைத் தாக்கவும், ஆசிரியர்களைப் பழிவாங்கவும் துணை போனது. எல்லாவற்றுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான எம்.சி.ராஜா விடுதியின் ஊழல்களை எதிர்த்தும், கல் – மண் கலந்த உணவு, அடிப்படை வசதி மறுப்பு ஆகியவற்றை எதிர்த்தும் அவர்கள் பலதடவை முறையிட்டனர். கடைசியாக, அமைதியாக ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கியது போலீசு. தப்பி ஓடி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை எம்.ஜ.ஆர். ரசிகர்கள் இரும்புக் கம்பிகள், சைக்கிள் செயின், சோடா பாட்டில்கள் சகிதமாகப் புகுந்து தாக்கினர். விடுதியைச் சூறையாடினர்.

தொழிலாளிகள் மீது எம்.ஜி.ஆர். குண்டர் படையின் தாக்குதல்!

  • 1974-க்குப் பிறகு ஊதிய உயர்வே கண்டிராத பஞ்சாலைத் தொழிலாளர்கள் 77-78-ல் வேலை நிறுத்தத் தாக்கீது கொடுத்தபோது எம்.ஜி.ஆர். அரசு கண்டுகொள்ளவேயில்லை. வேலைநிறுத்தம் தொடங்கிய இரண்டாம் நாளே போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விடுவதாக எம்.ஜி.ஆர். அரசு முடிவு செய்தது. இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் போலீசை ஏவித் தடியடிப் பிரயோகம் நடத்தியது; நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர் மீது பொய் வழக்குகள் போட்டது. பின்னர், தொழிலாளர்களுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் விலக்கிக் கொள்ளப் போவதாகத் திடீரென்று ‘சுதந்திர’ தினத்தன்று எம்.ஜி.ஆர். அறிவிப்பு செய்தார். ஆனால், போலீசார் எந்த வழக்கையும் விலக்கிக் கொள்ளவில்லை.தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று யார் போராடினாலும், சட்டம் அதன் வேலையைச் செய்யும் என்று மிரட்டினார் எம்.ஜி.ஆர். ஆனால், இந்திரா கைது செய்யப்பட்டதையொட்டி காங்கிரசு குண்டர்கள் வெடிகுண்டு வீசியும், பஸ்களைத் தாக்கியும் பலரைப் படுகொலை செய்தும் வெறியாட்டம் போட்டுக் கைதானவர்களை விடுதலை செய்தார். 1972-ல் தனிக்கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க. வினர் நடத்திய காலித்தனங்களுக்காக அவர்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட்ட எம்.ஜி.ஆர்., பஞ்சாலைத் தொழிலாளருக்கு எதிராகப் போடப்பட்ட பொய் வழக்குகளை விலக்கிக் கொள்ளவில்லை.

04-mgr-2

  • 1978 அக்டோபரில் பஸ் தொழிலாளர் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது. பஸ் தொழிலாளர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காணாது தன்னிச்சையாகக் குறைந்தபட்ச போனஸ் தருவதையே எம்.ஜி.ஆர். அரசு வழக்கமாகக் கொண்டிருப்பதை எதிர்த்து இரண்டே நாட்கள்தான் வேலைநிறுத்தம் செய்தனர். அதற்குள் ‘மினிமிசா’வையும் அவசர சட்டத்தையும் எம்.ஜி.ஆர். அரசு ஏவியது. 5000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கருங்காலிகளையும், போலீசையும், எம்.ஜி.ஆர். ரசிகர்களையும் வைத்து பஸ்கள் ஓட்டப்பட்டன. பஸ்களை நிறுத்துபவர்களைக் கண்டதும் சுட எம்.ஜி.ஆர். உத்திரவு போட்டார். வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல, அதை ஆதரிப்பவர்களையும், நிதி அளிப்பவர்களையும் கூட சிறையிலடைக்கும் சட்டம் கொண்டு வந்தார். “பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்கிற பெயரில் – எம்.ஜி.ஆரின் குண்டர்படை – அடையாள அட்டைகளும், வெள்ளைச் சட்டைகளும் அணிந்த தொண்டர்கள் என்கிற பெயரில் – பஸ் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்டது. அதன் பிறகு பத்தாண்டுகளாக எம்.ஜி.ஆர் அரசு ஒருதலைப்பட்சமாக அறிவித்துத் தரும் குறைந்தபட்ச போனசுதான் கொடுக்கப்பட்டது.
  • பஸ் தொழிலாளர் போட்டத்தின் போது தீவிரமாக நடந்து கொண்டிருந்தன டி.வி.எஸ் – டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் போராட்டங்கள். ஆரம்ப காலத்திலிருந்து தங்கள் மீது நிர்வாகம் திணித்திருந்த கருங்காலி காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத் தலைமையைத் தூக்கியெறிந்து போலி கம்யூனிஸ்டு வி.பி. சிந்தன் தலைமையை சென்னை – பாடி டி.வி.எஸ். தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். மதுரையிலிருந்து குண்டர்படையை இறக்குமதி செய்து ஆலைக்குள்ளேயே தொழிலாளர்களைத் தாக்கியது நிர்வாகம்.தொழிலாளருக்குப் பாதுகாப்பு என்கிற பெயரில், பாடி – வில்லிவாக்கம் – அம்பத்தூர் தொழில் வட்டாரமெங்கும் போலீஸ் முகாம்கள் அமைக்கப்பட்டன. டி.வி.எஸ். ஆலைக்குள் நிர்வாகத்தின் குண்டர் படை திரட்டப்பட்டது. நான்கு மாதக் கதவடைப்புக்குப் பிறகு, 350 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்த பிறகு நிர்வாகத்திடம் மன்னிப்புக் கோரும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்தின் குண்டர் படையும், போலீசும் தொழிலாளர்களை மிரட்டி அரசு பஸ்களில் கடத்திப் போய் டி.வி.எஸ். ஆலையில் உற்பத்தியை நடத்தினர்.டி.வி.எஸ். ஆலைக்கு வெளியே போடப்பட்ட தொழிலாளர் பந்தல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. போராடும் தொழிலாளர்களை குண்டர்கள் தாக்கி அரிவாளால் வெட்டினார்கள். போலீசார் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். டி.வி.எஸ். பாணியைத் தொடர்வது என்று மற்ற முதலாளிகள் தீர்மானிக்கவே, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள்ஸ் ஆலையில் தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், கதவடைப்பும் தொடங்கியது. சென்னை நகரத் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் செய்தனர்.04-mgr-3மதுரை மாநகரத் தேர்தலுக்குப் பிறகு டி.வி.எஸ்., டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் பிரச்சிைனையைத் தீர்க்காமல் அவர்களை ஒடுக்குவதில் இறங்கியது எம்.ஜி.ஆர். அரசு. 1978 அக்டோபர் 16-ல் மாநில மற்றும் மத்திய போலீசை ஏவி தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி அமைதியாக மறியல் செய்த தொழிலாளர்கள் மீது பாய்ந்தது. ஆத்திரமுற்று வேலை நிறுத்தத்தில் இறங்கி வெளியேற முயன்ற “டன்லப்” தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது. “டன்லப்” தொழிற்சங்க அலுவலகத்திலிருந்த குசேலர், கோபு, சுப்பு ஆகிய தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்குகள் போட்டது.போராட்டத்தை உடைக்கும் எம்.ஜி.ஆர்.- டி.வி.எஸ். முதலாளியின் அராஜக வேலைகளுக்கு எதிராக போலி கம்யூனிஸ்டு சங்கமான சி.ஐ.டி.யு. தலைவர் அரிபட் மற்றும் இருவர் உயர் நீதிமன்றத்தருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஐந்தாம் நாள் “வலது” கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவர்கள் கோபு, சுந்தரம் தலைமையில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க கோட்டை நோக்கி ஊர்வலமாகப் போனார்கள் டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் குடும்பத்தினர். எம்.ஜி.ஆர். அரசின் உத்தரவுப்படி, அவர்களை வழிமறித்து கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தியது மத்திய ரிசர்வ் போலீஸ்படை. பெண்களும், குழந்தைகளும், போலி கம்யூனிஸ்டுத் தலைவர்களும் படுகாயமுற்றனர். அதேசமயம், உயர்நீதிமன்றத்தருகே உண்ணாவிரதமிருந்தவர்களை எம்.ஜி.ஆரின் ரசிகர்படை தாக்கியது. 45 நிமிடம் வெறியாட்டம் போட்டு, போலீஸ் நிலையத்துக்கு அருகாமையில் இருந்த உண்ணாவிரதப் பந்தலைக் கொளுத்தியது; தொழிலாளர்களும் தலைவர்களும் சிதறி ஓடினர்.எம்.ஜி.ஆர். அரசின் இந்தக் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து 1978 அக்.23-ம் தேதி தமிழகம் தழுவிய கடையடைப்பு நடத்துவதாக காங்கிரசு மற்றும் ஜனதா தவிர அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்தன. கடையடைப்பை முறியடிப்பதாக எம்.ஜி.ஆர் யுத்தப் பிரகடனம் செய்தார். 10 நாட்களுக்குக் கல்லூரிகள் மூடப்பட்டு வேறு மாநில மற்றும் மத்திய போலீசுப் படைகள் குவிக்கப்பட்டன. போராட்டக்காரர்களில் 10,000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
    எம்.ஜி.ஆர் அடிமைகள்
    சுயமரியாதை இல்லாத தோட்டத்து அடிமைகள்!

    எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவியாபாரிகள், கைத்தொழிலாளர்கள், பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரையும் கடை அடைப்பை முறியடிக்கும்படி பிரச்சாரம் செய்யும் விளம்பரத்தைப் பத்திரிகைகள், வானொலி மூலம் எம்.ஜி.ஆர். நடத்தினார். மன்னார்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கு 22 பேர் காயமடைந்தனர். பல நகரங்களிலும் அ.தி.மு.க. குண்டர்படை வெறியாட்டம் போட்டது. ஆனாலும், மாநிலந்தழுவிய கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது.

  • இனி “டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ்” பாணியிலே தொழிலாளர்களை ஒடுக்குவது என்று முதலாளிகளும் எம்.ஜி.ஆர். அரசும் தீர்மானித்தனர். ஆளும் கட்சித் தலைமையிலான “அல்ட்ரா மரைன்” ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் கூட பலாத்காரமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. அதேகதிதான் போராடிய கோவை லட்சுமி மிஷின் டூல்ஸ், மேட்டூர் மில்ஸ், மின் வாரியத் தொழிலாளர்களுக்கும் நேர்ந்தது. அதன் பிறகு குறிப்படத் தகுந்த அளவு உறுதியாக நடந்தது திருச்சி “சிம்கோ மீட்டர்ஸ்” ஆலைத் தொழிலாளர் போராட்டம்தான். இங்கும் கருங்காலி ஐ.என்.டி.யு.சி.யின் தலைமையும், துரோக ஒப்பந்தமும் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து சி.ஐ.டி.யு. தலைமையில் தொழிலாளர்கள் போராடினர்.டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ் போராட்டங்களை முறியடித்த மமதை, அமெரிக்காவில் தனக்கு “ராஜ உபசாரம்” செய்த “சிம்கோ மீட்டர்ஸ்” முதலாளியிடம் விசுவாசம் காரணமாக போலீசையும், அ.தி.மு.க. வெண் சட்டைப் படையையும் “சிம்கோ” தொழிலாளர் மீது ஏவினார். தொழிலாளர்கள் மீது மட்டுமின்றி, சங்கத்தலைவர் உமாநாத் வீடும் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டது. திருச்சி நகர மக்கள் பலர் தொழிலாளர் பக்கம் நின்று ஒத்துழைத்தனர்.
    14 விவசாயிகள் சுட்டுக்கொலை!
  • மீனவர் துப்பாக்கிச் சூடு
    பிணந்தின்னிகள் : மெரினா மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

    தொழிலாளர்களையும், மாணவர்களையும் ஒடுக்கிய பிறகு விவசாயிகள் பக்கம் திரும்பியது, எம்.ஜி.ஆரின் பாசிச பார்வை. எம்.ஜி.ஆரின் தொகுதியாயிருந்த அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றது, எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு வழக்கம் போல இறந்து போனவர் குடும்பத்துக்குத் தலா ரூ 5000 நிதியும், விசாரணைக் கமிஷனும் அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே பல கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலந் தழுவிய கடையடைப்பு நடத்தியது. கடையடைப்பை முறியடிக்கும் வெறியுடன் போலீசைக் குவித்து, பஸ்களை ஓட்ட முயன்றது, எம்.ஜி.ஆர். அரசு. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 14 விவசாயிகள் பலியாயினர். நெல்லை – சங்கரன் கோவில் அருகே ஒரு துணை போலீஸ் அதிகாரி விவசாயப் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதால், ஆத்திரமுற்று விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் பிறகு எம்.ஜி.ஆரின் போலீசு, விவசாயிகள் மீது வெறித்தனமாகப் பாய்ந்தது. சென்னை – திருவள்ளூர் அருகே வள்ளியூர் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்து கிழவிகள், சிறுமிகள் உட்பட பெண்களை வெளியே இழுத்துப் போட்டு மிருகத்தனமாகத் தாக்கியது. பெண்களை லாரிகளில் ஏற்றி, உணவு, தண்ணீரின்றி கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் நிறுத்தித் துன்புறுத்தி சென்னை மத்திய சிறையில் அடைத்தது. தாக்குண்ட பெண்களைத் தனது பெண் அமைச்சருடன் போய் பார்த்து ஆறுதல் சொல்லி ஏய்க்க முயன்றார், எம்.ஜி.ஆர். போலீசு அவர்களைக் கற்பழிக்காது நல்ல முறையில் நடந்து கொண்டதற்குப் பாராட்டினார். பெண்களை முன்னிறுத்தும் கோழைகள் என்று அவதூறு பேசி, விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது கொலைக்குற்ற வழக்குப் போட்டார். இராணுவத்தை வரவழைத்து போராட்டத்தை ஒடுக்குவதாக மிரட்டினார்.

அரசு ஊழியர்களைத் தாக்கிய அ.தி.மு.க. குண்டர்கள்!

  • தனது பாசிச ஒடுக்குமுறைகள் மூலம் இரத்த ருசி பார்த்த எம்.ஜி.ஆர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும் பாய்ந்தார். ஊதிய உயர்வு, ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் பிறகோரிக்கைகளுக்காக 1978 மார்ச்சில் மாநில அரசு ஊழியர்கள் போராடியபோது தனது கட்சி தலைமையில் போட்டிக் கருங்காலி சங்கத்தை தொடங்கினார். 30 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. “விவசாயப் பெண்களுக்கு மானத்தைக் காத்துக் கொள்ள துணி கூட இல்லை, உங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமா? பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று எச்சரித்தார். பொதுமக்கள் என்கிற போர்வையில் அ.தி.மு.க. குண்டர்களை ஏவி அரசு ஊழியர்களைத் தாக்க முயன்றார். ஆயுதங்களுடன் வந்த குண்டர்களைப் பிடித்துக் கொடுத்த போதும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.வேலை நிறுத்தத்தை எதிர்க்கும்படி அரசு ஊழியர்களின் மனைவிமார்களுக்கு கோரிக்கை விட்டார், எம்.ஜி.ஆர். கைதுகள், வேலைநீக்கங்கள், தற்காலிக ஊழியர்கள் வேலைநீக்கம் – என பழிவாங்குவதில் ஈடுபட்டார். வேலைநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை எடுக்கப் போவதாகவும் அறிவிப்புகள் கொடுத்தார். அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டு உருவாகி உறுதிப்பட்டவுடன் சற்றுப் பின் வாங்கிக் கொண்டு, சில்லரைச் சலுகைகளை அறிவித்தார். போராட்டத்துக்குத் தலைமையேற்ற சிவ.இளங்கோ தலைமையிலான கும்பலை விலைக்கு வாங்கினார்.
  • எம்.ஜி.ஆர் : அமைச்சர்கள் பதவி பறிப்பு
    அமைச்சர்கள் பதவி பறிப்பு : இதற்கும் ஜெ.யின் முன்னோடி எம்.ஜி.ஆரே!

    பரந்துபட்ட மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக யாரைப் பயன்படுத்தினாரோ, அந்தப் போலீசாருக்கு எதிராகவே எம்.ஜி.ஆரின் தாக்குதல் திரும்பியது. பல்வேறு மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் உருவானதைத் தொடர்ந்து தமிழகப் போலீசாரும் நைனார்தாஸ் மற்றும் ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அதைத் தடை செய்துவிட்டு தானே தனது கருங்காலிகளைக் கொண்ட மூன்று சங்கங்களை அமைத்தார். அதன் கீழ்வர மறுத்த போலீசார் போராட்டத்தில் குதித்தனர். மத்திய ரிசர்வ் படையை வைத்து போராடிய போலீசாரை வேட்டையாடினார் எம்.ஜி.ஆர். போலீஸ் குடியிருப்புகளில் புகுந்து பெண்கள், குழந்தைகளைத் தாக்கினார். சங்கத் தலைவர்கள் தலைமறைவாகினர். அவர்களை வேலைநீக்கம் செய்தார் எம்.ஜி.ஆர்., சங்கம் வைக்கும் முயற்சியை முறியடித்தார்.போலீசுக்கும், விவசாயிகளுக்கும் மட்டுமல்லாது, ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் ஏராளமான தேர்தல் வாக்குறுதி வழங்கினார், எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு நிலமும், கல்லுடைப்போர், மூட்டை சுமப்போருக்கெல்லாம் மாதச் சம்பளமும், வீட்டுக்கொருவருக்கு வேலை, இல்லையானால் 100 ரூபாய் ஈட்டுத் தொகை, ரேசனில் போடும் 5 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ இலவசம், ஏழைகள் – முதியோருக்கு ஓய்வூதியம், வேலையில்லா பட்டதாரிகள், ஆசிரியருக்கு நிவாரண நிதி, தாலிக்குத் தங்கம், வேலையில்லாத நாட்களில் கூலி விவசாயிகளுக்கு ஒரு ரூபாயும் ஒருகிலோ அரிசியும் என்று எவ்வளவோ வாக்குறுதிகள் – அவ்வளவும் காற்றில் பறக்க விடப்பட்டன.

  • பெரியாரின் பகுத்தறிவு – சமூக சீர்திருத்த இயக்கங்களைத் தொடர்ந்து சற்று வரம்புக்குள் இருந்த சாதி, மதவெறியர்கள், எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு புதிய நம்பிக்கை – வேகத்துடன் சாதி-மதக் கலவரங்களில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில் தொடர்ந்து ஒருவார காலத்துக்கு விழுப்புரம் நகரில் தாழ்த்தப்பட்டவர்கள் வேட்டையாடப்பட்டனர். 12 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். குடிசைகள் கொளுத்தப்பட்டன. மண்டைக்காடு, புளியங்குடி, மீனாட்சிபுரம், பேர்ணாம்பட்டு, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் சாதி-மதக் கலவரங்கள் என்கிற பெயரில் தாழ்த்தப்பட்டவர்களும், மீனவர்களும் தாக்கப்பட்டனர். இந்து முன்னணியின் பெயரில், எம்.ஜி.ஆர். கட்சியினரின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.பண்ணையார்களும், அ.தி.மு.க. காரர்களும், முதலாளிகளும், போலீசாரும் பல கொலைகள் புரிந்தனர். தஞ்சை விவசாய சங்கத் தலைவர் வெங்கடாச்சலம், பண்ணையார்களால் கொல்லப்பட்டார். நாகை எம்.பி. முருகையன் அ.தி.மு.க. காரனால் கொல்லப்பட்டார். மதுராந்தகம் அ.தி.மு.க. அலுவலகத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்ட பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டார். கோயில் நகை கொள்ளைகளில் அ.தி.மு.க.வினர் சம்பந்தப்படிருந்தனர்.திருச்செந்தூர் கோவிலில் நகை சரிபார்க்கும் அதிகாரி கொல்லப்பட்டார். இந்த வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்கு எம்.ஜி.ஆர் அரசு முயலவேயில்லை; காரணம் தெரிந்ததே!
  • மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதறத் தொடங்கவிட்டது, எம்.ஜி.ஆர் அரசு. போலீஸ் “லாக்-அப்” சித்திரவதை கொலையில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகப் போலீசு, சென்னை – வியாசர்பாடியில் சந்தேகத்தின் பேரில் இழுத்துப்போன ஒரு இளைஞரை அடித்துக் கொன்றது. நியாயம் கேட்கத் திரண்ட பகுதி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரைக் கொன்றது.

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு! நக்சல்பாரிகள் நரவேட்டை!

  • உலக வங்கி உத்தரவின் கீழ் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாக முடிவு செய்து பெரும் போலீஸ் படையுடன் போய் இரவோடு இரவாக மீனவர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்காக, ஆத்திரத்தைத் தூண்டி துப்பாக்கி சூடு நடத்தி, பலரைக் கொன்றது; மீனவர் வீடுகளுக்குள் புகுந்து சூறையாடியது.பஸ் வசதி கோரிப் போராடிய மக்களைக்கூட விட்டு வைக்கவில்லை. பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மூவரைக் கொன்றது. பெரும் போலீஸ் படை கிராமத்துக்குள் புகுந்து கண்மண் தெரியாமல் தாக்கியது. மிரண்டு போன மக்கள் தப்பி ஓடி, காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
  • 04-mgr-4சாதாரண மக்கள் மீது இப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாசிச எம்.ஜி.ஆர். கம்யூனிச புரட்சியாளர்களை விட்டு வைப்பாரா? வட ஆற்காடு, தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கம்யூனிச புரட்சியாளர்கள் 21 பேரை மோகன்தாஸ் – தேவாரம் போலீஸ் கும்பலை ஏவி படுகொலை செய்துவிட்டு, “நக்சலைட்டுகளுடன் போலீசு மோதல்” என்று கதை கட்டினார். நக்சலைட்டுகளைப் பூண்டோடு ஒழிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். சபதமேற்றார். போலீசின் படுகொலைகளை விசாரிக்கப்போன மக்கள் உரிமை அமைப்பினரையும், பத்திரிக்கையாளரையும் கூட போலீசு தாக்கியது. மாநிலம் முழுவதும் பலர் மீது தேச விரோதப் பொய் வழக்குப் போட்டது.வரம்பில்லாத இலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகளில் மூழ்கிக் கிடந்த எம்.ஜி.ஆர். அவற்றை அம்பலப்படுத்திக் குற்றஞ்சாட்டுவோரையே பழிவாங்கும் சட்டம் கொண்டு வந்தார். அதன்படி குற்றஞ்சாட்டுவோர்தான் அவற்றை நிரூபிக்க வேண்டும்; தவறினால், அவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்று மிரட்டினார். கடும் எதிர்ப்பிற்குப் பிறகு, அதை விலக்கிக்கொண்டார்.அரசை விமர்சிக்கும் “அப்பாவி” பத்திரிக்கைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. ஆபாசத் தடைச் சட்டம், பத்திரிக்கைத் தடைச் சட்டம் என்கிற பெயரில் சுவரொட்டி, கருத்துப் படம், பாடுவது, பேசுவது, எழுதுவது கூட கிரிமினல் குற்றம் என்கிற கொடிய அடக்குமுறைச் சட்டம் கொண்டுவந்தார். குதிரைகளை விரட்டுவது, பட்டம் விடுவது, வாகனங்கள் ஓசை எழுப்புவது, வாகனங்களை சாலைகளில் நிறுத்துவது, பரீட்சைகளில் காப்பி அடிப்பது ஆகியவைகூட கிரிமினல் குற்றங்கள் என்று சட்டம் கொண்டு வந்தது – ஆகியவையெல்லாம் எம்.ஜி.ஆர் அரசின் சாதனைகள்!
  • அ.தி.மு.க. ஆரம்பித்ததிலிருந்து தாய்மார்களுக்காக முதலை கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர், சாராயம், லஞ்ச ஊழலின் பரம எதிரி போல நடித்தார். ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்குச் சட்டத்தைக் கடுமையாக்கினார். இது கள்ளச் சாராய பெரும் புள்ளிகளுக்கும், போலீசாருக்கும் கொள்ளையடிப்பதற்கு மிகவும் வசதியாகிப் போனது. கள்ளச் சாராயத்தையும், லஞ்சத்தையும் ஒழிக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு பணம் கட்டி உரிமை பெற்றவர்களுக்கு மட்டும் சாராயம் குடிக்க அனுமதி என்றார். அப்புறம், படிப்படியாக கள்ளு – சாராயக் கடைகளை முழுவதுமாகத் திறந்து விட்டார். சாராயத் தொழிற்சாலை வைக்கும் உரிமை வழங்கியதில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி அம்பலப்பட்டு போனார்.மதம் ஏழை – எளிய மக்களை ஏய்க்கும் போதையாக இருப்பதைப் போலவே, சினிமா ஒரு கவர்ச்சிப் போதையைத் தருவதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அதைக் கொண்டு கிராமப்புற விவசாயிகளையும், நகர்ப்புற உதிரிப் பாட்டாளிகளையும் ஏய்த்தார். போலி கம்யூனிஸ்டுகளின் கூட்டு, பிற பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற உதவியது. சத்துணவு உட்பட ஏழைகள் மீதான அவரது கரிசனையும் தான தருமங்களும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலர்களுக்கே உரித்தான அடிமைகளின் பாலான பரிவுதான்.அவசரநிலை பாசிச ஆட்சியை ஆதரித்த எம்.ஜி.ஆர். அதன் கொடுமைகளை விசாரித்த ஷா, அனந்த நாராயணன் மற்றும் இஸ்மாயில் கமிசன் அறிக்கைககளைக் குப்பைத் தொட்டியில் வீசினார். சென்னை மத்திய சிறை சித்திரவதைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட பொன்.பரமகுரு, வித்யாசாகர் உள்ளிட்ட போலீசு குற்றவாளிகளுக்குப் பதவி உயர்வளித்தார். ஜனதா ஆட்சியானாலும், அது கொண்டு வந்த தொழிலாளர் விரோத தொழிலுறவு மசோதா போன்றவற்றை ஆதரித்தார். தாய்க்குலத்தைப் பற்றி நீலிக்கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர். ராஜீவ் கொண்டுவந்த பிற்போக்குத்தனமான முஸ்லீம் மண முறிவு (ஷாரியத்) சட்டத்தை ஆதரித்தார்.

“ஐயா, தருமவானே, நீங்களாகப் பார்த்து ஏதாவது தான தர்மம் கொடுங்கள்” என்று கையேந்தி நிற்பவர்களுக்கு பரோபகாரியாகவும், “இது எங்கள் உரிமை” என்று போராடுபவர்களுக்குப் பரம எதிரியான பாசிஸ்டாகவும் விளங்கியவரே எம்.ஜி.ஆர்.!

– ஆர்.கே.
(புதிய ஜனநாயகம், 1-5, ஜனவரி 1988)
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

47 மறுமொழிகள்

  1. இவரை பற்றி தெரிந்தது தான் .

    அண்ணா ஆட்சி பொற்கால ஆட்சி எனபது போல பேசி வருகிறார்களே , அதை பற்றி எதாவது கட்டுரை உண்டா ?

    பெரியாரின் திராவிடத்தையும் , எம் ஜி ஆரின் சினிமா கவர்ச்சியையும் ஒருங்கிணைத்து முதல்வரான ஸ்மார்ட் மென் எனபது என் கணிப்பு

  2. எம். ஜி .ஆருக்கும் அம்பிகா ராதாவிற்கும் என்ன தொடர்பு.. அதுவும் சொத்துக்கள் எழுதிவைக்கும் அளவுக்கு..? எங்கேயோ இடிக்கிறதே?இதன் பின்னணியில் ஏதேனும் வரலாறுகள் உண்டோ? வினவு விளக்கவும்..

  3. 24.12.14 நேற்று இரவு நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் இனத்திற்கு உழைத்த தந்தைக்கும்,ஈழத்திற்கு உதவிய தலைவருக்கும் என்ற தலைப்பில் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
    தந்தை -பெரியார் என்பது சரி.தலைவர்-எம்.ஜி.ஆராம்.இதை அண்ணன் சீமானும் தன்னுடைய பேச்சின்போது பொளந்து கட்டினார்.இதை என்னவென்று சொல்ல.’நாம் தமிழர் ‘பரிசீலனை செய்யவும்.

  4. எம்ஜிஆர் பக்தர்களுக்கு அருமையான பதிவு.ஆனால் அவர்கள் இதை படித்து உணர்வதை விட கோபம்தான் படுவார்கள்.காரணம் அவர்கள் மூளையில் எம்ஜிஆர் பற்றிய பதிவு அப்படி.ஜெயா வின் ஆட்சியும் எம்ஜிஆரின் வழிபடிதான் நடக்கிரது என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.

  5. சரியான முட்டால் தனமான கட்டுரை .M G ற் க்கு பில்லையா குட்டியா?ந தமிலக மக்கலுக்கக பாடுபட்டவர் .கட்டுமரம் கருனானிதி குடும்பமெ இன்ரு அரசியலலில் சம்பாதிது பனக்கரன் ஆகியுல்லன் .__________ உன் கட்டுரை முலுவதும் பொய்

    • டாட்டா குழுமத்தின் ரத்தன் டாடாவிற்கு பிள்ளையா குட்டியா…..

  6. your site articles express your naxel support. your site should have been banned, do not play our religions and other things. wr u r getting money? from pakistan???___________.

    • இந்த இந்துத்துவர்களுக்கு அறிவு கடுகு அளவு கூட இருக்காது என்பதை அடிக்கடி நிருபவிப்பர்.
      இவர்களால் பதில் சொல்லமுடியாவிட்டால் பாகிஸ்தானை வம்புக்கு இழுக்க வேண்டியது. இந்தியாவில் காவி தீவிரவாத்தை ஆதரித்து போல் அங்கு தாலிபான்கலால் அல்லல் பட்டுக்கோண்டுள்ளனர்.

  7. Hello Bro,
    Pleased be inform that,this article will be forwarded to AIADMK team and we will take necessary actions against this article via LAW.
    Don’t under estimate that , we are not an idiots to trust your articles as blind manner. be ensure about hindu and tamilian culture prior to post like this kind of JUNK,BLINDED,FOOLISHNESS & Fuc…g articles. whilst pl note am not brahmin.
    By,
    The Tamilian.

    • dear respectedfull madam,

      ass i is a sufferrin of by the fiver, i was wanted into going to the hospital. kindly grande me a leaves for five day only. whilst pls noat am is a tasty student.

      By,

      the tamilian.

    • ஒரு சாம்பிள் கடிதம் நரேசுவின் அறிவார்ந்த ஆங்கில புலமையின் பாதிப்பில் எழுதப்பட்டது.

      ஆறு வரிகள், ஆயிரம் எழுத்துப் பிழைகளும் இலக்கண பிழைகளும். புறாமீன் அல்லாத தமிழராம், அரைகுறை ஆங்கிலத்தில் ஒரு கடிதம். இதற்கு நீர் ஒரு பாப்பானாகவே இருந்திருக்கலாம்.

      • As Sukumaran told, Satheesh and Naresh reacted with anger. Especially Naresh, it seems, typed with blinding rage, he chewed and spit words. //எம்ஜிஆர் பக்தர்களுக்கு அருமையான பதிவு.ஆனால் அவர்கள் இதை படித்து உணர்வதை விட கோபம்தான் படுவார்கள்.காரணம் அவர்கள் மூளையில் எம்ஜிஆர் பற்றிய பதிவு அப்படி.//

  8. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நான் ஒரு பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே கூறித் தனது சாதிப்பெருமையைக் காட்டிக் கொண்டார் என்கிறார்கள். அவ்வாறே, தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக இருந்து கொண்டே, நான் ஒரு மலையாளி என்று தனது இன, மொழிப் பெருமையைக் காட்டி, அவர்களுக்குச் சார்பாக எம்ஜிஆர் எப்பொழுதாவது நடந்து கொண்டதுண்டா, யாரும் தெரிந்தவர்கள் கூறுங்கள்.

    தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாதோர்களில் பெரும்பான்மையினருக்கும், பார்பன, கன்னட, வடுக மலையாளிளுக்கும் இலங்கையில் தமிழர்களுக்கென நாடு உருவாவதில் விருப்பமில்லை. அவர்களில் பலர் தமது தமிழின எதிர்ப்பை, தமிழர்கள் மீதுள்ள வெறுப்பை, சிங்களவர்களுக்கு ஆதரவளித்து தீர்த்துக் கொண்டனர். தமது ஊடகங்களினூடாகவும், தமது மாநில அரசுகளினூடாகவும் ஈழத்தமிழர்களுக்கெதிராக இயங்கினர். ஆனால் பிறப்பால் மலையாளியாகிய எம்ஜிஆர், முழுமனதுடனும், உறுதியுடனும் ஈழத்தமிழர்களுக்கு தனது ஆதரவை நல்கினார் என்பதை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றைப் பார்க்கும் போது எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. அத்தகைய தமிழுணர்வுள்ள மனிதரை, அவர் இறந்த பின்பு, தமிழர்களே இவ்வாறு வசைபாடுவது கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாகத் தான் தெரிகிறது.

  9. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதுதான், முல்லை பெரியார் அணையின் நீர் மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது . அதற்காக சட்டசபையில் அனைத்து கட்சி ஒப்புதல் பெறப்படவில்லை. மந்திரி சபை கூட்டப்படவில்லை. எம்.ஜி.ஆர், கேரள தலைமை செயலாளர், கேரள மந்திரி இவர்களாகவே கூடி முடிவெடுத்து அணையை பலப்படுத்துவதாக கூறி நீர்மட்டத்தை குறைத்தனர். அதன் பின் நீர் மட்டத்தை உயர்த்த இத்தனை ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பின் தான் அதுவும் 142 அடிக்குத்தான் உயர்த்த முடிந்தது.
    தமிழ் ஈழ போராட்டத்தை ஆதரிக்க காரணம் இரண்டு. முதலாவதாக அவர் மலையாளியாக இருந்தாலும் பூர்வீகம் இலங்கை.அப்பொழுது சிங்கள பேரினவாதிகளால் அவரோ அவரது குட்ம்பத்தினரோ அடைந்த துன்பம் அல்லது அவமானத்திற்கு பழிவான்குவதர்க்காகவும் இருக்கலாம். இரண்டாவது கருணாநிதியின் மீது அப்போது இருந்த தமிழின தலைவர்(?) என்ற பெயரை தன்பக்கம் திருப்புவது என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.

    • right of Tamil nadu to own and maintain the entire Mullai periyaru dam area is given to kerala and only shutter open/close right alone retained during his period. The present Mullai periyaru problem is purely this guys work

  10. எனது தந்தை ஒரு எம் ஜி ஆர் வெறியர். மாணவப் பருவத்திலிருந்தே பெரியார் கட்சியில் இருந்தார். அடுத்தது திமுக. அடுத்தது அதிமுக என எம் ஜி ஆரோடு பயணித்தவர். அவர் சொல்வது நினைத்த நேரத்தில் எம் ஜி ஆரைப் பார்க்க முடியும். என் தந்தையை அடையாளம் கண்டு கொண்ட எம் ஜி ஆர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, ஒரே முத்தம் தலைவா என்று கேட்டு வாங்கி கொண்டவர் அவர் !!! பணம் காசு கேட்கவில்லை. ஆனால் எம் ஜி ஆரைப் பற்றி அவரின் கார் டிரைவராக பணியாற்றிய ஒருவர் எங்கள் ஊரைச் சார்ந்தவர். அவர் சொன்னது – எம் ஜி ஆர் வாயைத் திறந்தால் வண்டை வண்டையாக கெட்ட வார்த்தைப் பேசுவாராம். மேலும் வினவில் வந்த கட்டுரைகளைப் படித்துப் பார்த்து விட்டு, என் தந்தை போன்ற எம் ஜி ஆர் வெறியர்களின் வாழ்க்கையினை உற்று நோக்கினால் புலப்படுவது : பொதுவாக இவர்கள் ஏழை மிக ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள். கால் வயிறு உணவுக்கு கூட வழி இல்லாதவர்கள். ஆக இவர்களிடம் ஊருக்கு உழைக்கும் எம் ஜி ஆரின் நாயகத்தன்மை தெய்வமாக இறங்கியது. இரண்டாவது, பொதுவாக ஒன்றுமற்றவர்களிடம் பாலியல் கொஞ்சம் அதிகம் இருக்கும். அதாவது கிடைக்காததின் காரணமாகவும், பாலியல் மதம் , போதை போன்று கொஞ்சம் உலகை மறக்க செய்வதால், அது அதிகமாக இருக்கும். நான் ரெளடிகளை சொல்லவில்லை. ஒன்றுமற்ற வாழ்வின் மீது தாகம் கொண்ட மக்களைச் சொல்கின்றேன். இந்த இரண்டு காரணிகளையும் தெளிவாக புரிந்து கொண்டு தனது சினிமா பாத்திரத்தை வைத்ததால்தான் எம் ஜி ஆர் அசைக்க முடியாத தலைவரானார். இது எனது கருத்து. மறைந்த டெல்லி வாழ் சிந்தனையாளர் பாண்டியன் இதனைப் பற்றி எழுதி உள்ளார். மற்றவர்கள் கருத்து ஏதோ ?

  11. MGRs’ Penami Jeppiear (Sathyabama University), Viswanathan (VIT university), udayar (Ramachandra Univesrity), AG shanmugam (Dr. MGR University) all are now father of Education in chennai. First of government should undertake all the universities

  12. எம்.ஜி.ஆர். ஒரு மிகச்சிறந்த மனிதர்.
    1975 இல் கருணா மிக பலம் பொருந்தியவராக இருந்தார். எம்.ஜி.ஆரை விட்டால் வேறு மாற்று அப்போது இல்லை.
    கருணாவின் ஊழல்களை எளிதில் ஊரறியச்செய்தவர். அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் கருணா காணாமல் போயிருப்பார்.
    தமக்காக, தான் ஆட்சியில் இருந்த போது ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கிக் கொள்ள வில்லை. ஜெயா அப்படியா இருந்தார்? கருணா அப்படியா இருந்தார்?
    இலங்கைப் போராளிகளுக்கு மனப்பூர்வமாக உதவியவர்.
    சத்துணவுத்திட்டத்தினால் எத்தனையோ குழந்தைகள் ஒரு வேளை உணவாவது உண்டனர்.
    தமக்கு அவப்பெயர் வரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார். மற்றவர்களைப் போல் எதற்கும் துணிந்து, கூசாமல் செயல் பட வில்லை.
    அனைவரையும் அரவணைத்துச் சென்றார்.
    தான் மறைந்த பிற்கும் ஏழைக்குழந்தைகளுக்கு பயன் தருமாறு தமது சொத்துக்களை எழுதி வைத்தார்.
    அவர் தம்மிடம் பணி புரியும் அதிகாரிகளை மதிப்பார். கருணா கோபம் வந்தால் மரியாதையின்றிப் பேசுவார். ஜெயாவிடம் அமைச்சர்களே பேச அச்சப் படுவர். அதிகாரிகளைப் பார்ப்பதில்லை.
    எல்லோரிடமும் குறைகளும் உள்ளன. நிறைகளும் உள்ளன. இரண்டையும் சீர் தூக்கினால் எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த மனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  13. ஆசாமி அவர்களே,

    ஊடகங்கள் தூக்கி பிடிக்கும் எம்.ஜி.ஆர்.பிம்பத்தை பார்த்து இப்படி பதிவிட்டுள்ளீர்கள்.

    காமராஜரின் மதிய உணவு திட்டம் தான் கொஞ்சம் பாலிஷ் செய்து சத்துணவு திட்டமாக உருவானது என்பதை ஊடகங்கள் மறைப்பது ஏனோ?

    எம்.ஜி.ஆருக்கும் ராமசாமி உடையாருக்கும் இருந்தது என்ன வகை நட்பு?
    இராமாவரம் தோட்டத்தில் புதைந்துள்ள ரகசியங்கள் என்னென்ன?

    ஆனந்த விகடன் ஆசிரியரை ஒரு கார்டூனுக்காக சிறைக்கு அனுப்பியது நினைவிருக்கிறதா?

    நாட்டில் ரவுடியிசம் அதிகமாக இருக்கிறதென்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு மக்கள் அனைவரும் கத்தி வைத்திருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறினாரே, அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?

    தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு பதில் மதுரையை தலைநகரமாக்குவேன் என்று சூளுரைத்து பின் சென்னையையே தலைநகரமாக இருக்க செய்த துக்ளக் தர்பார் தனம் நினைவில்லையா?

    நடிகர் சந்திரபாபுவின் திரையுலக நட்டத்திற்கும் அதனால் ஒருவகையில் அவர் மரணத்திற்கும் காரணம் எம்.ஜி.ஆர் தான். அது தெரியுமா தங்களுக்கு.

    எம்.ஜி.ஆர், திரையில் மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு சிறந்த நடிகராக விளங்கினார்.

    • கற்றது கையளவு அவர்களுக்கு,

      “ஊடகங்கள் தூக்கி பிடிக்கும் எம்.ஜி.ஆர்.பிம்பத்தை பார்த்து இப்படி பதிவிட்டுள்ளீர்கள்.”

      ஐயா, எம்.ஜி.ஆரோடு பழகியவர்கள் ஊடகங்களில் எழுதுவதன் அடிப்படையிலேயே நான் பதிவிட்டுள்ளேன். பெருவாரியானவர்கள் நிலை அது தான். இந்த கட்டுரையே அவ்வாறு தான் எழுதப்பட்டுள்ளது.

      “காமராஜரின் மதிய உணவு திட்டம் தான் கொஞ்சம் பாலிஷ் செய்து சத்துணவு திட்டமாக உருவானது என்பதை ஊடகங்கள் மறைப்பது ஏனோ?”

      மற்றவர்களின் நல்ல செயல்களை, நாமும் செய்தல் நல்லது தானே. காமராஜரின் மதிய உணவு திட்டம் தொடர்ந்திருந்தால் சத்துணவு திட்டதிற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. வாரியார் சுவாமிகளின் யோசனையின் பேரில் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டதாக அறியப்படுகிறது.

      “எம்.ஜி.ஆருக்கும் ராமசாமி உடையாருக்கும் இருந்தது என்ன வகை நட்பு?
      இராமாவரம் தோட்டத்தில் புதைந்துள்ள ரகசியங்கள் என்னென்ன?”

      எம்.ஜி.ஆருக்கும் ராமசாமி உடையாருக்கும் என்ன வகை நட்பு இருந்திருந்தாலும் அதனால் நமக்கு என்ன? அதனால் பொது மக்கள் பாதிக்கப் பட்டார்களா?
      இராமாவரம் தோட்டத்தில் புதைந்துள்ள ரகசியங்கள் என்னவென்று உங்களுக்கு வேண்டுமானால் தெரிந்து இருக்கலாம். தெரிந்ததை தயவு செய்து பகிரவும்.

      “ஆனந்த விகடன் ஆசிரியரை ஒரு கார்டூனுக்காக சிறைக்கு அனுப்பியது நினைவிருக்கிறதா?”

      அது தவறு தான்.

      “நாட்டில் ரவுடியிசம் அதிகமாக இருக்கிறதென்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு மக்கள் அனைவரும் கத்தி வைத்திருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறினாரே, அதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?”
      முதலில் தற்காப்பு. பின்னரே நண்பர்களும், உறவினர்களும், அரசும் உதவிக்கு வருவர். அந்த அர்த்தத்தில் சொல்லி இருக்கலாம். நாம் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு சொல்லிக் கொடுப்பதில்லையா?

      “தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு பதில் மதுரையை தலைநகரமாக்குவேன் என்று சூளுரைத்து பின் சென்னையையே தலைநகரமாக இருக்க செய்த துக்ளக் தர்பார் தனம் நினைவில்லையா?”

      தமிழகத்தின் தலைநகரை திருச்சியில் அமைக்கலாம் என்று தான் யோசிக்கப் பட்டது. திருச்சி தமிழகத்தின் நடுவில் உள்ளது. தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் குறைந்தநேரத்தில் எளிதில் அங்கு வரலாம். சென்னை ஆந்திராவுக்கு அருகில் உள்ளது.

      இப்போது ஆந்திராவுக்கு, குண்டூருக்கருகில் தலைநகர் வரப்போகிறது இல்லையா?

      துக்ளக் தலைநகரின் செயல் பாடுகளை மட்டும் மாற்றி இருந்தால் பரவாயில்லை. ஆனால் மக்களையே இடம் பெயரச்செய்தது தான் சோகம்.

      “நடிகர் சந்திரபாபுவின் திரையுலக நட்டத்திற்கும் அதனால் ஒருவகையில் அவர் மரணத்திற்கும் காரணம் எம்.ஜி.ஆர் தான். அது தெரியுமா தங்களுக்கு.”

      எம்.ஜி.ஆரின் சகோதரர் சக்ரபாணியை, சந்திரபாபு திட்டியதாகவும் அதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர், சந்திரபாபுவின் சொந்த தயாரிப்புக்கு ஒத்துழைக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. ஆகவே அது அவர்களது தனிப்பட்ட பிரச்சினை.

      “எம்.ஜி.ஆர், திரையில் மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு சிறந்த நடிகராக விளங்கினார்.”

      எம்.ஜி.ஆரின் தொழில் நடிப்பு தான். நிஜ வாழ்க்கையில், மற்றவர்களைப் போல் அவர் ஊரை அடித்து உலையில் போட வில்லை. கருணா போல் குடும்பத்தில் உள்ள பரிவாரங்களுக்காகவோ, ஜெயா போல் நண்பியின் குடும்ப பரிவாரங்களுக்காகவோ எண்ணிலடங்கா சொத்துக்களை வளைத்துப் போட்டு விட்டு உத்தம சீலர்கள் போல், வெட்கமின்றி உலா வரவில்லை.

      மீண்டும் கூறுகிறேன்:
      எல்லோரிடமும் குறைகளும் உள்ளன. நிறைகளும் உள்ளன. இரண்டையும் சீர் தூக்கினால் எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த மாமனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  14. கற்றது கை அளவு அவர்களுக்கு ஆசாமி குடுத்துள்ள பதில்களை பார்க்கும் போது கரட்டாண்டிய கூட சினிமால குளோசப்புல காமிச்சு இதுதான் டைனோசர் எ பிலிம் பை பாரதிராசா அப்பிடினு சொல்லலாம் ஆனா சினிமா பாத்துட்டு கரட்டான்டிதான் டைனோசர் என்று நம்பும் ஆசாமியை என்ன செய்ய , அடுத்தவன் குறை எப்பிடியா எம் ஜி யாரை நீதிமானாக்கும் அந்த அளவுக்கு உங்கள நம்ப வச்சுறுக்கானுக உங்கள என்ன செய்ய ,கருனாநிதி 5 கொலை பன்னாறு எம் ஜி யார் 3 கொலைதான் பன்னாறு அதனால எம் ஜி யார் தான் நீதிமான் அப்பிடினு சொல்ல தனி மனநிலை வேனும் இல்லனா அதிமுக ல இருந்து நல்ல வருமானம் வரனும் நீங்க எல்லாம் முற்ப்போக்கு இனைய வலை பூவில் எழுதுவதை விட தற்ப்போக்கு இணைய தளங்களில் உங்கள் கருத்துகலை பதிவிடலாம்…

    • பி. ஜோசப் அவர்களுக்கு,

      “கரட்டாண்டிய கூட சினிமால குளோசப்புல காமிச்சு இதுதான் டைனோசர் எ பிலிம் பை பாரதிராசா அப்பிடினு சொல்லலாம் ஆனா சினிமா பாத்துட்டு கரட்டான்டிதான் டைனோசர் என்று நம்பும் ஆசாமியை என்ன செய்ய”

      எம்.ஜி.ஆரோடு, அல்லது மற்றவர்களோடு நேரில் பழகித் தான் எதையும் எழுத வேண்டும் என்றால், இந்த வினவில் வந்த அனைத்துக் கட்டுரைகளும் அப்படியா எழுதப் பட்டன?

      “அடுத்தவன் குறை எப்பிடியா எம் ஜி யாரை நீதிமானாக்கும்”

      நான் எழுதியதை சரியாகப் படிக்கவும்: “எல்லோரிடமும் குறைகளும் உள்ளன; நிறைகளும் உள்ளன. இரண்டையும் சீர் தூக்கினால் எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த மாமனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”

      மேலும், 1970 வாக்கில் கருணாவிற்கு மாற்று வேறு எவரும் இருக்கவில்லை. அப்போது கருணாவின் ஆட்சியில் வெருப்படைந்திருந்த மக்களுக்கு எம்.ஜி.ஆர் மாற்றாய் இருந்தார்.

      “எம் ஜி யார் தான் நீதிமான் அப்பிடினு சொல்ல தனி மனநிலை வேனும் இல்லனா அதிமுக ல இருந்து நல்ல வருமானம் வரனும்”

      என்னைப்பற்றி எதுவும் தெரியாமலேயே நீங்கள் என்னை பற்றி தவறாகவும், அபாண்டமாகவும் அனுமானம் செய்கிறீர்கள் அல்லவா? ஆனால் இதைப் போலில்லாமல் எம் ஜி ஆர் பற்றி பல வருடங்களாக (எம் ஆர் ராதா உட்பட) பலரும் பேசியும், எழுதியும் வந்துள்ளனர். ஆகவே அவரைப் பற்றி அறிய போதிய தகவல்கள் உள்ளன.

      “நீங்க எல்லாம் முற்ப்போக்கு இனைய வலை பூவில் எழுதுவதை விட தற்ப்போக்கு இணைய தளங்களில் உங்கள் கருத்துகலை பதிவிடலாம்…”

      ஒருவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் கூசாமல் அவரைப் பற்றி அபாண்டமாக எழுதுவது தான் முற்போக்கு எழுத்தா?
      அது சரி, முற்போக்கு என்றால் என்ன வரையறைகள் என்று எங்களுக்குப் புரியும் படி, உங்களைப் போன்ற மாபெரும் சிந்தனையாளர்கள் சொன்னால் உதவியாய் இருக்கும்.
      ஒரு போராட்டத்தில் மாட்டுக்கறி சாப்பிடுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் (வினவில் போட்டோவுடன் வந்திருப்பதால்) முற்போக்கு தானா என்று இந்த மர மண்டைக்குப் புரியும்படி விளக்கினால் உங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வேன்.

      • என்ணணே பிரிச்சு பிரிச்சு விளக்கம் எழுதி இருக்கீக ஆனா கரட்டான்டிதான் டைனோசர்னு நீங்க நம்புறதுக்கு ஆதாரப்பூர்வமா ஒன்னும் விளக்கவே இல்லயேன்னே…

      • ஆனா பாருங்க அது கரட்டான்டிதான் அப்பிடினு நம்ம வினவு தளத்துகாரங்க கரட்டாண்டி தலைய மட்டும் ஆட்டுனது அது பயந்து போய் பொந்துக்குள்ள ஓடுனது அப்புறம் கண்டதெல்லாம் தின்னது சின்ன புள்ளைகள பயமுறுத்துனதுனு அடுக்கடுக்கா அதோட வாழ்வில் இருந்து ஆதாரங்களை அதன் செயல்பாடுகளில் இருந்த்து வைக்கிறார்கள் வெறுமனே கரட்டான்டிய டைனோசர்னு நம்புறத விட்டுட்டு அவங்க சொல்லுற கரட்டாண்டியின் செயல்பாடுகள்னு அவுங்க சொல்லுற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்க அம்மா சொல்லுறா மாறீ சொல்லுவீங்களா சொல்லுவீங்களானு கேக்குறென்…

  15. M.G.R. died in 1984, what is the use of this article now.

    Plenty of issues is there to talk in tamilnadu

    For Eq:- Methane in Thanjavur
    Former succide talks and Kaththi success
    TN. Public transport worker strike (D.M.K. support)
    2G and D.M.K.

    You people spoil the communism

    UDAYAN

  16. Udayan, MGR died in 1987. Not in 1984.
    In 1984 he was admitted to hospital in USA and was (mis)ruling TN for another 3 years.

    Many do not know the real character and nature of this person.
    I am glad that atleast someone is throwing some light on the dark side of this person.

  17. Knowing History is not Waste of Time.
    If we understand, we will not commit the same mistake again.
    But after knowing history, if we still repeatedly commit the same mistake, then history is a waste of time for them.

    Unfortunately, Our Tamil voters are still magnetically attracted to Glamour and not substance.
    MGR, Then Jayalalithaa, Then Now Vijayakanth, Vijay also dreaming of a Political career in the future, If Rajnikanth had the guts, our people would have voted him to a CM also.

    Anybody from Any field can become a Politician. But our Film Heroes are expecting a straight shortcut to become CM. And our people are encouraging them again and again.