privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!

ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!

-

ஈழப்போராட்டம் குறித்து  பல வருடங்களுக்கு முன்னர் என்ன சொன்னோம் என்று தமிழினவாத இயக்கங்களிடம் கேட்டால் அவற்றை மீட்டுப்பார்க்க விரும்ப மாட்டார்கள். பொதுவில் இந்தியாவுக்கு காவடி தூக்கியும், ஓட்டுக்கட்சி தலைவர்களின் பிழைப்புவாதத்திற்கு ஒத்துப் போனதையும் மறைக்கவே விரும்புவார்கள். ஈழப்போராளிகள், புலிகளும் கூட இந்த அணுகுமுறையைத்தான் பொதுவில் கொண்டிருந்தனர். ஆனால் ம.க.இ.க அமைப்புகள் மட்டுமே ஈழம் குறித்த சரியான பார்வையை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இது குறித்து கடந்த 25 ஆண்டுகளில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களில் ஈழம்  தொடர்பாக வந்த கட்டுரைகளை இங்கு வெளியிடுகிறோம். ஈழப்போராட்டம் முள்ளிவாய்க்கால் போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை பலி கொடுத்து பரிதவிக்கும் நேரத்தில் இந்த வரலாற்று பார்வை ஒரு ஆவணம் போல உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறது. ஈழத்தின் நண்பன் யார், எதிரி யார், பாதை என்ன, செயல் தந்திரம் என்ன என்பதையெல்லாம் இந்த வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். படித்துப் பாருங்கள்!

– வினவு

________________________________________________________

(நவம்பர் 1986ல் வெளியானது)

எம்.ஜி.ஆர்., ராஜீவ் காந்திதுரோகம்! தன்னிடம் தஞ்சம் புகுந்த வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேய காலனியவாதிகளிடம் காட்டிக் கொடுத்துக் கைது செய்து, புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமான் செய்தது துரோகம். சிங்கள இனவெறிபிடித்த பாசிச இராணுவத்துக்கு எதிராகப் போராடி வரும் ஈழ விடுதலைப் போராளிகள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கெதிராக நவம்பர் 7-ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு இந்திய பாசிச ராஜீவ்-எம்.ஜி.ஆர் கும்பல் மோகன்தாஸ்-தேவாரம் தலைமையிலான போலீசுப் படையை ஏவி திடீர்த் ‘தாக்குதல்’ நடத்தியிருப்பது துரோகம்.

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஈழப் போராளி அமைப்புகளின் முகாம்கள், அலுவலகங்கள், இல்லங்களை ஆயுதம் தாங்கிய தமிழ்நாடு சிறப்புக் காவற்படையினரோடு போய் திடீர் சோதனை நடத்தினர். தலைவர்கள் உட்பட 1000த்துக்கும் மேற்பட்ட போராளிகள் கைது செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான மதிப்புடைய அதிநவீன ஆயுதங்களும், வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நக்சல்பாரி புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள “க்யூ” பிரிவு போலீசாரால் பல மணி நேரம் விசாரணைக்குப் பிறகு, புகைப்படங்களும் அடையாளக் குறிகளும் எடுத்துக் கொண்டு தலைவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் போராளிகளில் அணிகள் பலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே கலந்தாலோசித்து திட்டமிட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது; எனினும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று மத்திய அரசு மழுப்புகிறது. முரண்பட்ட தகவல்கள் தரப்படுகின்றன. “’சட்டத்தை தங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ள முடியாது’ என்று போராளிகளை எச்சரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

“பெங்களூரில் நடக்கவிருக்கும் தெற்காசிய வட்டார ஒத்துழைப்பு சங்கக் கூட்டத்துக்கு வரும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவை; அந்தச் சமயத்தில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேறெங்கும், குறிப்பாக பெங்களூருக்குச் செல்லக் கூடாது என்று எச்சரிக்கப்பட்ட பின் பெரும்பாலான போராளிகள் நிராயுதபாணிகளாக விடப்பட்டு பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

ராஜீவ் காந்தி, ஜெயவர்தனே
ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனா

ஈழப் போராளிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கை சிங்கள இனவெறியர்களையும் அவர்களது இந்தியப் பங்காளிகளையும் குதூகலமடையச் செய்துள்ளது. கொழும்பில் பெரும் உற்சாகம் காணப்படுகிறது. “தங்களுக்கு ஆதரவும் அடைக்கலமும் அளித்த மக்களையே விழுங்கிவிடும் அளவுக்கு போராளிகள் பயங்கர பூதமாக உருவாவதை பிரதமர் ராஜீவும் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் விரும்பவில்லை என்பதையே அவர்களின் ஒப்புதலுடன் நடந்த இந்த வேட்டை புலப்படுத்துகிறது” என்று இலங்கை அரசுப் பத்திரிக்கை எழுதுகிறது. “இது துணிச்சலான செயலாகும், முன்பு ஈழத்தலைவர்களை வெளியேற்றிய போது நடந்ததைப் போல இந்தத் தடவை தென்னாட்டின் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு ராஜீவும், எம்ஜிஆரும் பணிந்து விட மாட்டார்கள்” என்று வேறொரு பத்திரிகை நம்புகிறது.

“தமிழகக் கொரில்லாக்களை இந்தியத் தலைவர்கள் தனிமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்” என்று சிங்கள இராணுவ மந்திரி லலித் அதுலத் முதலி பாராட்டியுள்ளார். “பல தோல்விகளால் சோர்வடைந்துள்ள இலங்கை ராணுவத்துக்கு தமிழ்ப் போராளிகள் மீது நடந்த வேட்டை உற்சாகமும் புதிய நம்பிக்கையும் அளிக்கும்; இதைச் சாதகமாக்கிக் கொண்டு வட பகுதி போராளிகள் மீது ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்துமாறு சிங்கள இனத்தினர் நிர்ப்பந்திக்கலாம்” என்று இந்தியப் பிற்போக்குப் பத்திரிகைகளே ஊகிக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை சிங்கள பேரினவாதத்துக்கு அடகு வைக்கும்படியான ஒரு சமரசத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி ஈழப் போராளிகளை இந்திய பாசிச ராஜீவ்-எம்.ஜி.ஆர். கும்பல் நிர்ப்பந்தித்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஒன்றுதான் இந்த அதிரடித் தாக்குதல்.

ஏற்கனவே, ஈழப் போராளிகளின் பிரதிநிதிகளை நாடு கடத்தியும், பலமுறை எச்சரித்தும், தொலைபேசித் தொடர்புகளைத் துண்டித்தும், ஈழப் போராளிகளுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பியும் இதைச் செய்து வருகிறது ராஜீவ்-எம்.ஜி.ஆர். கும்பல். தீபாவளி நாளன்று சென்னையில் ஒரு ஈழ அமைப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூடு உட்பட பல சம்பவங்களில் ஈழப் போராளிகள் நடந்து கொள்ளும் அராஜகவாத நடவடிக்கைகள் மேற்கண்ட நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஈழப் போராளி அமைப்புகள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. “இது இனப்படுகொலை தொடர்வதற்கு ஊக்கமளிக்கும்; எவ்வித விளக்கம் அளிக்கப்பட்டாலும் ஜெயவர்த்தனாவை மகிழ்விக்க எடுத்த நடவடிக்கை இது. விடுதலை இயக்கம் அவமானத்துக்கும் இழிவுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டோம். முன் கூட்டியே எச்சரிக்கை விட்டிருந்தால் இந்த நாட்டை விட்டு வெளியேறியிருப்போம்” என்று விடுதலைப் புலிகள் அறிக்கை விட்டுள்ளனர்.

ஈழப் போராளிகளுக்கு வேண்டுமானால் இந்த நடவடிக்கை அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளித்திருக்கலாம். இது என்றாவது ஒரு நாள் நடக்குமென்று நாம் முன் கூட்டி முடிவு செய்ததுதான். “நரிகளின் தயவில் புலிகளா?”, “நாயிடமிருந்து பிடுங்குவது பேயிடம் தருவதற்கோ?” – என்று ஏற்கனவே புதிய ஜனநாயகம் – புதிய கலாச்சாரம் ஆகிய புரட்சிகர ஏடுகள் கேட்டிருக்கின்றன.

ஆனால், ஆயுதம் தரித்த அந்த “மாவீரர்கள்” எப்போதும் இந்தியப் புரட்சியாளர்களை அலட்சியம் செய்தே வந்திருக்கின்றனர். எமது எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக, சமாதானத் தலைவர்களாக இந்திராவையும், ராஜீவையும் இன உணர்வின் இலட்சியப் புருஷர்களாக எம்ஜிஆரையும், கருணாநிதியையும் மதித்து வந்தனர். தாக்குதல் தொடுக்கிறது ராஜீவ்-எம்ஜிஆர் கும்பல். கருத்து சொல்ல மறுக்கிறது கருணாநிதி கூட்டம்.

இப்போதும் காலம் மீறிப் போய் விடவில்லை. இந்திய ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளையும், தமிழக அரசியல் பிழைப்பு வாதிகளையும் நம்பி, சார்ந்து ஈழ விடுதலைப் போராளிகள் நிற்பதைக் கைவிட வேண்டும். சர்வதேசப் பாட்டாளி வர்க்கமும், புரட்சியாளர்களும்தான் தேசிய இன விடுதலைக்கு நம்பகமான கூட்டாளிகள் என்பதை ஏற்க வேண்டும்.

எட்டப்பர்களாக போலிக் கம்யூனிஸ்டுகள்

நவம்பர் முதல் தேதியன்று சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினர் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவர் இறந்து போனார். எல்லா அரசியல் கட்சிகளையும் முந்திக் கொண்டு அறிக்கை விட்டார் வி.பி.சிந்தன். ஈ.பி.ஆர்.எல்.எ்ப் தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள ருஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் இந்திய அடிவருடிக் கட்சிகளில் ஒன்றான ‘மார்க்சிஸ்ட்’ கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.

“உடனடியாக ஈழ அமைப்புகளின் அலுவலகங்கள், முகாம்கள், வீடுகள் அனைத்திலும் சோதனை நடத்தி ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களால் தமிழக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டது” வி.பி.சிந்தனின் இந்த எட்டப்பன் எச்சரிக்கையை அப்படியே ஏற்று அடுத்த வாரமே ஈழப்போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றினார் அவரது “சகபாடி” எம்.ஜி.ஆர்.

இன்னொரு போலி கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் எட்டப்பர்களின் திலகம் கல்யாணசுந்தரம், “தமிழக போலீசின் நடவடிக்கை பிரதமர் ராஜீவ் காந்திக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது” என்று கண்டிக்கிறார். ராஜீவின் ஏவுதலால் நடந்த நடவடிக்கை காரணமாக ராஜீவுக்கு கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்ற அக்கறையைத்தான் முக்கியமாக கல்யாணசுந்தரம் காட்டுகிறாரே தவிர, ஈழப் போராளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை அல்ல. சர்வதேச விடுதலைக்காகப் போராடி வரும் புரட்சிகர சர்வதேச தலைவராக ஈ.பி.ஆர்.எல்.எ்ப் கொண்டாடும் கல்யாணசுந்தரத்தின் யோக்கியதை இதுதான்! “அவரது புரட்சிகர அனுபவங்களை சுவீகரித்துக் கொள்வோம்” என்று புத்தகம் போட்ட போராளி பத்மநாபா பார்வைக்கு இந்த எட்டப்பன் வேலைகளை முன் வைக்கிறோம்.
_______________________________________________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 1986
________________________________________________________________________

 1. அமாம் இத ஏன் இப்பொ சொல்லறீர்… இதுல ஏதாவது உள்குத்து இருக்கா..? (சந்தானம் பாணியில் படிக்கவும்)

  எனக்குப் புரியுது… எல்லாருக்கும் (உள் அர்த்தம்) புரியுமா காம்ரேட்….

 2. புலிகளையும், ஈழத்தையும் வன்மத்தோடு எதிர்க்கும் பார்ப்பன கும்பலோடு புரட்சிகர இயக்கங்களின் ஈழ நிலைப்பாட்டை ஒன்றாக வைத்து அவதூறு கிளப்பும் தமிழினவாதிகள் இக்கட்டுரையை படித்து தங்கள் கருத்துக்களை சொல்ல முன் வரட்டும்.

  புலிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை ‘புதிய ஜனநாயகம்’ கண்டித்துள்ளது. இந்த கட்டுரையின் ஒளியில் தமிழின அமைப்புகள் தமது அரசியல் உறவை சீர் செய்து கொள்ளட்டும். எம்.ஜி. ஆர் எனும் பாசிச கோமாளியின் புகைப்படத்தை நெஞ்சில் குத்துவது அவமானம்.

  • “புலிகளையும், ஈழத்தையும் வன்மத்தோடு எதிர்க்கும் பார்ப்பன கும்பலோடு” – Fine. What about the stand of tamil Muslims in Srilanka regarding supporting LTTE ? Did they support LTTE? If yes, why did Prabhakaran kick them out of North Lanka? BTW, for the first time i feel Muslims were right in NOT supporting LTTE. (Reasons can be many – but final decision is right)

   Why do you always bring the Brahmins in the picture for everything?

   What LTTE did was wrong and what tamil politicians are doing now in the name of lankan issue is also wrong. Please read last two issues of Thuglak where there are articles on current sri lankan situation. The tamils – unanimously – say they are happy after LTTE has been cleaned up.

   • \\Why do you always bring the Brahmins in the picture for everything?\\

    How innocent coated cunning question this is ! Don’t you know Dr. Subramaniam Swamy, a coward at heart, secretly plotting with Rajapakse to prevent him from international pressures ? What is the source of inspiration for Subramaniam Swamy and Cho Ramaswamy to act and speak against the Tamils in Elam and and disrespecting the sentiments here. It is the brahminical ideology they are wedded to give them the audacity to go to any possible extent to deprive the rights of the oppressed Tamils.

    • The wrongs of the LTTE have been exhaustively discussed and for their political mistakes they had been swept off completely. And any reasonable analysis on the mistakes of the LTTE will have its credibility only if it is rooted on a political solution involving the aspirations of all the stake holders of Elam region including Muslims, hill Tamils and Indian Tamils. Mr. Sridhar and Natrayan — Will your world vision permit to have a such thing to materialise? Can you people raise above the parochial and narrow mindset harnessed by Brahminism? You are laughing at the nil presence of the LTTE. But thTe issue at stake is much more?

      • Read and follow Vinavu to know the solution. Your suggestion is a typical attitude attributed to the dominant sect ‘Either hold the scruff of the neck or lick the boot if not possible.

       • Boss,

        Before you stereotype me,Most of Vinavu’s articles and solutions are based on idealism and if we are to discuss practical solutions,it is not going to work.

        You are the one who says TN shouldn’t be a part of India and you want to do historical revision and revisit changes.

    • //What is the source of inspiration for Subramaniam Swamy and Cho Ramaswamy to act and speak against the Tamils in Elam and and disrespecting the sentiments here//

     First: They are DEFINITELY not against “Tamils” but against LTTE only.
     Second: Source of inspiration – Facts that LTTE killed tamils and the fact that Tamil Politicians are only using it for political benefits.
     Third: Subramaniam Swamy and Cho alone are not representatives of Brahmins. And, just because they are against the Eelam formation, it doesnt mean All Brahmins are bad. And in this specific case, both of them are right also.
     Fourth: Assuming if a person from a particular caste, is against Tamil Eelam, does that mean the entire caste is against the issue? Your argument is like that. In that case, there are atleast one famous person from each caste who are agaisnt tamil eelam issue.
     Vice versa, there are brahmins who are supporting the issue also.

     So, dont spew venom against Brahmins.

     • The readers of Cho’s Thuglak are mostly Brahmins, a fact which you cannot deny. Their political outlook synchronises with Hindutva though they are all technically not in the RSS or BJP, another fact which you cannot deny. Cho or Hindutva is dead against a political solution aspired by the Elam Tamils.

      No Brahmin leader is a mass leader; they can never be. But Cho, Swamy, Jeyandran are certainly local Brahmin satraps who have lot of influence over ordinary Brahmins and to them the Brahmin community looks at for every issue concerning their interests.

      The proof of the pudding is in the eating. Can you give one instance of Cho or Subramaniam Swamy coming out openly to demand the punishment of war criminal Rajapakse who unleashed a holocaust on our innocent brethren in Elam? On the contrary Subramaniam Swamy colluded with Rajapakse in drafting the resolution proposed by America which he proudly trumpeted in the national news channels. Then how can you try to make us believe Cho or Swamy is not against Tamils?

      Again the proof of the pudding is in the eating. All sections of people in Tamil Nadu have been on the streets for a plebiscite in Elam and to execute Rajapakse for his war crimes. Why was there not a single person from the ‘peace loving’ Brahmin community vocal on the issue?

      • //Cho or Hindutva is dead against a political solution aspired by the Elam Tamils.//

       Wrong. They are just against LTTE. No matter how hard you try, you cannot make “all sections of people in TN” believe that LTTE are Elam Tamils. They are different. There are two types of Tamils in Sri Lanka – Peace loving tamils and LTTEs. Cho & S.Swamy are supporters of peace loving tamils – unfortunately, they were targeted more by LTTE than Sri Lankan army.

       //The readers of Cho’s Thuglak are mostly Brahmins, a fact which you cannot deny.//

       On what basis you say this? Please explain. Have you ever seen the Annual day of Thuglak where people throng. Significant portion of them are Non-Brahmins. Pls do your home work.

       //Their political outlook synchronises with Hindutva though they are all technically not in the RSS or BJP, another fact which you cannot deny. //

       I am a thuglak reader. I dont subscribe to so-called hindutva. I am a nationalist interested in nation developing. One major aspect that prevents development is Congress brand of “Secularism” that considers/treats Muslim Terrorists as “Peace loving Muslims” while target Hindus for even miniscule mistakes/sometimes even without any mistakes for the sake of votes. So, i may appear supporting BJP, but i am not. I have not voted for BJP in the last 2 elections since in my constituency, i have better candidates. (FYI)

       //No Brahmin leader is a mass leader; they can never be. But Cho, Swamy, Jeyandran are certainly local Brahmin satraps who have lot of influence over ordinary Brahmins and to them the Brahmin community looks at for every issue concerning their interests. //

       Not sure why you said that. I dont understand the context. I am also surprised at the kind of assumptions you are making. Brahmin community constitutes just 3-5% of TN population and you are concerned about that??? You are also underestimating the intelligence of them by saying these 3 have influence over them…Do you know how many brahmins are followers of Bangaru Adigal?

       //Can you give one instance of Cho or Subramaniam Swamy coming out openly to demand the punishment of war criminal Rajapakse who unleashed a holocaust on our innocent brethren in Elam?//

       Half knowledge is dangerous. Why should they come out and demand punishment for Rajapakse for killing Terrorist Tigers (LTTE)? Having said that, no one says Rajapakse is clean. He should be punished for post war killings – or for the wayhe treated prisoners of war – under geneva convention. Now, if we have to take action under an international convention rules, you need to have support of international communities. Please dont use the word “Holocaust” just like that. Its because of these insensitive words, nobody wants to jump in and take up the cause. What Hitler did to Jews is holocaust. In Sri lanka, even now, there are so many peace loving tamils living happily. And Tamil Muslims also – who hated LTTEs.

       //how can you try to make us believe Cho or Swamy is not against Tamils?//

       Please read their suggestions for a peaceful co-living. You have to read a lot – other than one-sided and biased Vinavu. Move out and there is a world of information out there in internet. If you want to know both sides, you have to read both sides of teh story.

       //Again the proof of the pudding is in the eating. All sections of people in Tamil Nadu have been on the streets for a plebiscite in Elam and to execute Rajapakse for his war crimes. Why was there not a single person from the ‘peace loving’ Brahmin community vocal on the issue?//

       Who all? Did this happen in your dreams? Of those small sections of people who came out to protest, there were many Brahmins also. But you are toooooo blind to see that. And again – your “All Sections” comment is laughable.

       • All ethnic races suffered at least one time in History. Even Jews on the Holocaust suffered. The only ethnic group which never underwent the suffering is the Brahmin community, given their manipulative skills. So you will never be able to understand the sufferings of others unless you undergo a suffering of some kind. What is the use of arguing with a person who couldn’t even understand what happened to Tamils on those fateful days. It is a structured genocidal onslaught on Tamils and not a mere war between Rajapakse and the LTTE.

        Whatever be my argument here, you are shamelessly and brazenly telling lies that Cho, Subramaniam Swamy and the ilk have concerns for Tamils in Elam. Unless you people are taught some bitter lessons by History, you never seem to be changed.

        • // The only ethnic group which never underwent the suffering is the Brahmin community, given their manipulative skills. //

         History tells a different story.. How many brahmins were converted to Islam forcefully in Kashmir during medieval India.. how many brahmins massacred in the hands of fanatical muslim rulers.. You see only the survivors among brahmins not those fallen majority of the brahmins.. They never gave up and this is how brahmins earned their respect among hindus & muslims too..

        • // Unless you people are taught some bitter lessons by History, you never seem to be changed. //

         The irony is, the historical bitterness between the dravidian organizations and the brahmims made the brahmins to look everything with suspicion and fear if it has the support of dravidian parties & organizations.. Tamil elam, actively advocated by the dravidian parties and organizations, was viewed as a threat to brahmins in the long run as a way for seperate tamil nation and subsequent persecution of brahmins who will not have any type of protection from the dravidian racists..

         You now promise that their nightmare will be fulfilled.. You really sound like Hitler, man.. If a gentle man like you talk like this against a minority, think of the racial fanatics.. You keep on pushing the Tambras towards RSS…

          • அரிகுமாரும் அம்பிகளும் அலட்டிகொள்வது ஏன்? ராஜிவ் கொலைக்கு பிறகுதானா நீஙகள் கருணானிதியை வெறுத்தீர்கள்? அதற்கும் முன்னாள் காமராஜரை ஆதரித்தீர்களா? பெரியாரின் போராட்டத்தால் ராஜாஜி பதவி இழந்து, காமராஜர் முதல்வரான போது, அவரை கருப்பு காக்கா என்றும், க்லிக் என்றும் விமர்சித்து விஷம் கக்கியது எந்த கூட்டம்? சேரன்மாதேவி குருகுலத்தில் தனி பிராமண பந்தி, காந்தி,காங்கிரசு கொள்கைக்கு விரோதமானது என்று பெரியார் கொதித் தெழுந்த பொதே உஙகள் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டதெ! பிராமணர்களால் அரசுகள் வீழ்ந்த சரித்திரம் பல! இவர்கள் வாழ்த்தி வாழ்ந்த சரித்திரம் உண்டா? (ராஜராஜன் முதல் ராமதாசு உட்பட)!

          • // பிராமணர்களால் அரசுகள் வீழ்ந்த சரித்திரம் பல! இவர்கள் வாழ்த்தி வாழ்ந்த சரித்திரம் உண்டா? (ராஜராஜன் முதல் ராமதாசு உட்பட)! //

           என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள் கருத்துக் கதிரவனே.. ராஜராஜருக்குப் பின் ராஜேந்திரரும், குலோத்துங்கரும் கடல் கடந்த ஒரு பேரரசை நிறுவவில்லையா.. சோழப் பேரரசு ராஜராஜருக்குப் பின்னும் ஒன்றரை நூற்றாண்டுகள் வலிமையுடன் இருக்கவில்லையா.. அது மட்டுமா.. விசய நகரப் பேரரசும், மராட்டியப் பேரரசும் பிராமண பிரண்ட்லியாக நூற்றாண்டுகளாக கோலோச்சவில்லையா.. அபாண்டமாக குற்றம் சாட்டி பிராமண சாபத்துக்குள்ளாகாதீர்கள்..

        • To Tambras, please shed your prejudices against elam and LTTE.. LTTE was not a racial force but guardians of elam tamils against sinhalese racist oppression.. LTTE never encouraged differences based on caste, religion and race.. They led a true tamil national freedom movement & betrayed by all…

         • Yeah but we will see them only as a tool of Christian missionary conversion activities.

          I have been to Colombo and I find temples there and people are not forcibly converted to Buddhism.

          • // Yeah but we will see them only as a tool of Christian missionary conversion activities. //

           Hari, you are beyond redemption..

           // I have been to Colombo and I find temples there and people are not forcibly converted to Buddhism. //

           Colombo is not Tamil Elam.. The famous Kathirkamam Murugan temple in south sri lanka is now being claimed as buddist shrine.. Live in you dreams..

        • நண்பர் சுகதேவ்,

         பார்ப்பனர்களுக்கு தமிழர்களும், தமிழ் மொழியும் பிடிக்காது என்பதினால் அவர்கள் தமிழில் எழுதுவதில்லை. ஆனால் உங்களுடைய கருத்துகள் வினவைப் படிக்கும் பல தோழர்களையும் சென்றடைய வேண்டும், என்பதினால் நீங்கள் தமிழிலேயே எழுதவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

         இப்படிக்கு
         ஒரு தோழர்

         • தோழர்,
          ஆங்கிலத்தில் குறிப்பிட்ட அந்த நண்பர் உரையாட முன்வந்ததாலேயே அவருடன் அவ்வாறு விவாதித்தேன். நன்றி, சுட்டிக்காட்டியமைக்கு.

          • இது பார்ப்பனர்களின் தந்திர உத்தி.அதற்கு தமிழர்கள் பலியாகி விட கூடாது.தமிழில் பேசும்போதே அங்கங்கே ஆங்கில சொற்களையும் சொற்றொடர்களையும் வலிந்து திணித்து பேசுவது பார்ப்பனர்களின் தந்திர உத்தி.நடைபாதையில் துணியும்,பொம்மையும்,,செருப்பும் விற்கும் படிப்பறிவு இல்லாத தமிழர்களிடம் கூட இந்த மேதாவிகள் this one that one பிப்டி கொடுங்கோ,கவ் மச் என்று பேசி அவர்களையும் கெடுப்பார்கள்.

           அதே போன்றுதான் இங்கிலிபிசுல பின்னூட்டம் எழுதுகிறார்கள்.நம்மவர்களும் எனக்கும் ஆங்கிலம் தெரியுமாக்கும் என்று காண்பிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி அவர்களையும் ஆங்கிலம் அல்லது தங்கிலிசை பயன்படுத்த வைக்கிறார்கள்.ஆம்.ஆங்கிலம் தெரிந்தால் அவன் அறிவாளி என்ற மாயை நம் மக்களிடத்தில் திணிக்கப்பட்டுள்ளது.தமிழ் தனித்து தூய்மையாக வாழ்வது அவர்களுக்கு பொறுக்காது.பழைய ஆயுதம் வடமொழி,புதிய ஆயுதம் இங்கிலிபிசு.

           இந்த விவாதத்தில் கூட வழக்கமாக தமிழில் எழுதும் அம்பி ஓடி வந்து தன ஆங்கில அறிவை காட்டுகிறார் பாருங்கள்.இந்த அற்ப பெருமை நமக்கு தேவையில்லை என்பதை நீங்கள் உணர்வதால்தான் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தெரிவிக்கிறீர்கள்.அவர்களோ என்றென்றும் மாற மாட்டார்கள்..

          • // இந்த விவாதத்தில் கூட வழக்கமாக தமிழில் எழுதும் அம்பி ஓடி வந்து தன ஆங்கில அறிவை காட்டுகிறார் பாருங்கள்.இந்த அற்ப பெருமை நமக்கு தேவையில்லை என்பதை நீங்கள் உணர்வதால்தான் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தெரிவிக்கிறீர்கள்.அவர்களோ என்றென்றும் மாற மாட்டார்கள்.. //

           சுட்டிக்காட்டியதற்கு சுகதேவ் நன்றி தெரிவித்தார் என்றால், என்னை குத்திக் காட்டுவதற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமா.. நன்றி இல்லை.. நன்றி..

         • //பார்ப்பனர்களுக்கு தமிழர்களும், தமிழ் மொழியும் பிடிக்காது என்பதினால் அவர்கள் தமிழில் எழுதுவதில்லை.//

          What a crap…!!! Right from agathiyar, tholkaapiyar to parithimaalkalaignar and swaminatha iyer to bharathiyaar – All are brahmins who have contributed to Tamil. And you say brahmins dont like Thamizh makkal and thamizh. Take a ride, bro….I used to write in Thamizh, but it takes long time to write what i want to since i have to use backspace again and again and get the spelling correct. So typing in English is not only fast but easy also.

          Since “ஒரு தோழர்” wants the message to reach all vinavu users, why dont you translate my message also -“ஒரு தோழர்”?

          I have my friend who studied with me in college – a brahmin friend – who is doing an exemplary work on researching on tamil olai chuvadi and restoring them with his own money. I am sure he wont do it without love for his language.

          I am also surprised how biased you are – SUkdev and ஒரு தோழர், against brahmins. YOu make statements without any proof.

          Even the person who you hate – Cho is running his Thuglak in Tamil. I am reading vinavu, because it is in Tamil. My request to you is to correct your bias and look at the world objectively without any prejudice.

          FYI; Finally, my marks in tamil in 12th std is 184 – HIghest in my school. Pls note that i lost BITS pilani since i lost to my friend in marks – who had beat me only because he had chosen French. BTW, my friend is a Non-Brahmin. And, note that i dont regret taking tamil – inspite of that. Grow up man. Stop making pointless allegations.

          Vinavu – You are only spreading hatred with your tag – “Paarpaneeya Hindu matham” and tag that to all crimes in the world. Why dont you ask people who make such statements to quantify what they say?

          • NHM writer என்ற மென்பொருளை பயன்படுத்தி எழுதிப் பாருங்களேன். இணையத்தில் தமிழில் எழுதுவது அவ்வளவு கடினமா என அம்பியிடம் ஆலோசித்துப் பாருங்களேன்

 3. ///புலிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை////
  புலிகள் தமிழர்களுக்கு இளைத்த மறக்க முடியாத துரோகத்தையும் நினைவில் கொள்ளவேண்டும். அமிர்தலிங்கம் சீறி சபாரத்தினம், பத்மநாபா மாத்தையா மற்றும் ஏராளமான தமிழர்களை நிராயுதபாணியாக கொன்றது யார்? இந்த புலிகள் தானே! இந்த புலிகளால்தான் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதனை இலங்கையில் இருக்கும் ஈழத்தமிழர்களே கூறுகிறார்கள். தங்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெட்டது செய்யாமல் இருங்கள் என்று ஈழத்தமிழர்கள் இந்திய தமிழர்களைப் பார்த்து கேட்கிறார்கள்.
  தமிழகத்தில் அகதிகளாக துன்பப்படும் ஈழத்தமிழர்களை இதுவரை யாராவது பார்த்து நல்லது செய்துள்ளர்களா? தயவு செய்து அங்கே இருக்கும் தமிழர்களையாவது அமைதியாக வாழவிடுங்கள். இதனை நான் சொல்லவில்லை. ஈழத்தமிழர்கள்தான் உங்களை கேட்கிறார்கள். மதுரை வக்கீல்கள் ராஜபட்சே உருவப்பொம்மையை தூக்கில் இட்டார்கள். இதனை அந்த நாட்டுத் தமிழர்கள் “எங்கள்” நாட்டுத் தலைவரை இவ்வாறு செய்த வக்கீல்கள் “கோமாளிகள்” என்று கேவலமாக கூறினார்கள்.
  இதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  • நாட்றாயன்! ரொம்ப ஓவராக பேசாத. புலிகளை விட சிங்கள அரசும் இந்திய அரசும் தான் அதிக கொடுமைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈழ மக்களுக்கு செய்தார்கள். செய்துகொண்டிருக்கிறார்கள்! இன்றைக்கும் ஈழ மக்களில் பெரும்பாலானோருக்கு புலிகள் மீது அபிமானம் உண்டு. இதை உன்னால் மறுக்க முடியுமா? ஈழ மக்கள் அவர்கள் மண்ணில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்று வாழ்ந்தால் தமிழகத்தில் யார் அவர்களை பற்றி நினைக்க போகிறார்கள். இலங்கை தமிழகத்தில் இருந்து வெறும் பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. அங்கு நடப்பது தமிழ்நாட்டை பல வகைகளிலும் பாதிக்கிறது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் பேசப்படாது. இங்கிருந்து நாலாயிரம் கிலோமீட்டருக்கு அப்புறம் இருக்கும் காஷ்மீர்ல இந்துக்கள் கஷ்டப்படுவதை மட்டுமே பேச வேண்டுமாம். வந்துட்டாரு அறிவாளி.

   • ///இன்றைக்கும் ஈழ மக்களில் பெரும்பாலானோருக்கு புலிகள் மீது அபிமானம் உண்டு///

    புலிகள் தமிழ் மக்களை கேடயங்களாக பயன்படுத்தியது உங்களுக்குத் தெரியாது போலும். அதனால்தான் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது ஐயாயிரத்துக்கும் மேற்ப்பட்ட யாழ்ப்பான தமிழர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் சென்றார்கள். இதனை அனைத்து ஊடகங்களும் மறைத்து விட்டன. யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் அங்கு என்ன நடக்கிறது என்று தினமணிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதனை நீங்கள் படிக்க வில்லைபோலும். யாழ்ப்பாண மக்கள் யாரும் புலிகளை ஆதரிக்க வில்லை.இதுதான் நிதர்சன உண்மை.
    இங்குள்ள உங்களைப் போன்ற சிலர் மக்களை தவறாக இழுத்துச் செல்கிறீர்கள். இங்குள்ள சில அரசியல்வாதிகளும் தங்கள் சுயநலத்திர்க்காக மக்களை ஏமாற்றி வருகிறார்கள்!!!
    அதுமட்டுமல்லாமல் இந்திய தமிழர்களையும் மலையக தமிழர்களையும் உதாசீனம் செய்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளகொள்ளவேண்டும்.
    தமிழ் வார இதழ் ஒன்று தனது நிருபர்களை இலங்கைக்கு அனுப்பி அங்கு நடக்கும் உண்மை நிலவரத்தை எழுதி வருகிறது. தமிழ் மக்களை நேரடியாக சந்தித்து வந்துள்ளார்கள்!!!
    அதே போல் நீங்களும் ஈழத்திற்கு நேரடியாக சென்று உண்மை நிலவரத்தை தெரிந்து வரலாமே!!!!
    தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறுகிறார்கள். மக்கள் முள்வேலியில் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும்போது இவர் ஏன் ஒளிந்துகொண்டு இருக்கிறார்!!

    • நான் தினமணியில் வந்த யாழ்ப்பாணத்துக்காரரின் கடிதத்தை படித்தேன். அதில் நீங்கள் குறிப்பிடுவது மாதிரி புலிகளை பற்றி எதுவும் இல்லை. நான் புலிகளை குற்றமற்றவர்கள் என்று சொல்ல வில்லை. ஆனால் புலிகள் மட்டும் இல்லையென்றால் தமிழர்கள் என்னும் இனம் இலங்கையில் இருந்தது கூட வெளியுலகுக்கு தெரியாமல் அழிக்கப்பட்டு இருப்பார்கள். இப்போது அது தான் நடந்து வருகிறது. அங்குள்ள பெரும்பாலான தமிழர்களுக்கு குறிப்பாக வடகிழக்கு வாழ் தமிழர்களுக்கு புலிகளின் மீது சில வகைகளில் வெறுப்பு இருந்தாலும் அபிமானமே மேலோங்கி இருக்கிறது. இது தான் உண்மை.

    • // இந்த புலிகள் தானே! இந்த புலிகளால்தான் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.//

     தமிழர்களை கொன்ற புலிகளை நிராகரிக்கச் சொல்கிறீர்கள். நொம்ப சரி. உங்கள் நல்லெண்ணத்திற்கு பாராட்டுகள். அதே நல்லெண்ணம் காஷ்மீர் மீதும் பாயுமா?

 4. இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு சுதந்திர தமிழீழத்தை உருவாக்கித்தர இந்திய மத்திய அரசு (!?) நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை சர்வ வல்லமையும் பொருந்திய மத்திய அரசில் இருப்பவர்களும் வட இந்திய ஊடகங்களும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் விமர்சித்தார்கள். இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று காரணம் கூறப்படுகிறது. இலங்கையின் பிரச்சினைக்குரிய வடகிழக்கு பகுதியை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அது புத்திசாலித்தனமானதாக இருந்திருக்கும். வரலாற்றுரீதியாக பார்க்கும் போது அத்தீவின் வடகிழக்கு பகுதி சிங்களப்பகுதியோடு ஒத்திருந்ததை விட பல வகைகளிலும் தென்னிந்தியாவோடு தான் (குறிப்பாக தமிழகத்தோடு) அதிகம் ஒத்திருந்தது. அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலே. காலனிய ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட தமிழ்ப்பகுதிகள் சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அடங்கியிருந்தன. அவ்வாறே நிர்வாகமும் செய்யப்பட்டன. பிற்பாடு தான் கடல் கடந்து நிர்வாகம் செய்வது சிரமம் என கருதப்பட்டு அத்தீவின் தமிழ்ப்பகுதிகள் சிங்களப்பகுதிகளோடு இணைக்கப்பட்டு கொழும்பு நிர்வாகத்தின் கீழ் வந்தன. இலங்கை தனிநாடாக இருந்தாலும் அதன் நிலப்பரப்பு தமிழ்நாட்டை விட சிறியது தான். மக்கள் தொகையோ வெறும் இரண்டு கோடி. ஆகையால் இலங்கையின் வடகிழக்குப்பகுதியை தமிழகத்தோடு இணைப்பது சாத்தியமான ஒன்றே. இப்படி ஒரு தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் பெரும்பாலான இந்திய மாநிலங்கள் பிரச்சினை இல்லாமல் ஏற்றுக்கொள்ளும். இந்திய தேசவிரோத செயல் என்று யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். இத்தகைய இணைப்பு ஏற்பட்டால் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் ஈழத்தமிழர்கள் ஆகிய மூன்று தரப்புக்கும் நன்மை தான் விளையும்.”ஈழ நிலம் தமிழ்நாட்டுடன் இணைவதன் மூலம் ஈழத்தமிழர்களும் இந்திய அடிமைகளாக மாறவேண்டுமா? தமிழ்நாட்டுத்தமிழர்கள் இந்தியாவில் அடிமைகளாக இருப்பது போதாதா?” என ஈழத்தமிழர்களில் சிலர் நினைக்கலாம். ஆனால் வேறு வழி இல்லை. தனித்தமிழீழம் என்பது சாத்தியமாக முடியாத ஒரு கனவு. 1871ல் மொத்த இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருந்த தமிழர்கள் இப்போது வெறும் பதினைந்து சதமாக குறைந்துபோய் உள்ளார்கள். சிங்கள அரசின் தொடர்ச்சியான சிங்களக்குடியேற்றம், ராணுவமயமாக்கம், புத்தமயமாக்கம் ஆகியவற்றால் ஈழம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது. போதாக்குறைக்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், கப்பம் அறவிடுதல் ஆகியவற்றால் ஈழமக்கள் நாசமடைந்து வருகிறார்கள். இதே பாணியில் சம்பவங்கள் தொடர்ந்தால் இன்னும் ஐம்பது வருட காலத்தில் ஈழமும் ஈழத்தமிழ் மக்களும் முற்றிலும் அழிந்து போவார்கள். இப்படி அழிந்து போவதை விட தமிழ்நாட்டோடு இணைந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மேலானது. மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் ஈழ மக்களுக்கு பரந்து விரிந்த இந்தியா பாதுகாப்பானது. தமிழக மீனவர்களும் நாள்தோறும் உயிருக்கு பிரச்சினையை சந்திக்க வேண்டியதில்லை. கச்சத்தீவு தகராறும் இருக்காது. இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே பிரச்சினை எழுந்தால் எளிதாக சமாளிக்கும் சாத்தியமும் உண்டு. சேது சமுத்திரம் போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய தேவையே இல்லை. இந்திய ராணுவத்தளமாக இருக்கும் திருக்கோணமலையில் கப்பல்கள் வசீகரமாக நங்கூரமிடலாம். இந்துமாக்கடல் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் அனுசரணையுடன் இந்திய அரசு தனது பிடியை இறுக்கி வைத்துக்கொள்ள முடியும். பாக்கிஸ்தான், வங்காள தேசம், சீனா ஆகிய பகை நாடுகளால் சூழப்பட்ட இந்தியாவுக்கு கடல் பிராந்தியத்தின் மீதான ஆளுகை மூலம் வலிமை உண்டாகும். இலங்கையின் கிழக்கில் அம்பாறை பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் தமிழ் மற்றும் அரபி இரத்தக்கலப்பு கொண்டவர்கள். இவர்கள் பலரின் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் இருந்து போய் குடியேறியவர்கள் தான். இந்தியாவோடு இணைவதன் மூலம் உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இரண்டாவது பெரிய நாட்டோடு இணைந்த உணர்வு இம்மக்களுக்கு உண்டாகும். சிங்களருக்கு பயப்படவேண்டிய தேவையே இல்லை. இதையெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யோசிக்க வேண்டும். ”ஈழத்தமிழர்களுக்கு என தனிப்பட்ட அடையாளம் உண்டு. தமிழ்நாட்டோடு இணைவதன் மூலம் அந்த அடையாளத்துக்கு பாதிப்பு உண்டாகும்” என ஈழ மக்கள் நினைத்தால் மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் சுயாட்சி கவுன்சில் மாதிரியான ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு காலத்தில் இந்திய சுதந்திர தினத்தின் போது தங்கள் வீடுகளின் மீது இந்திய தேசியக்கொடியை ஏற்றியவர்கள் தானே ஈழ மக்கள். பின் எதற்கு தயங்க வேண்டும்?

  • பெரியசாமி நீங்களும் காமெடியே செய்கிறீர்கள். புலிகளை ஈழ மக்கள் நேசிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்; அது உண்மை தான். ஆனால் தமிழ்நாடுடனும், இந்தியாவுடனும் இணைய ஈழ மக்கள் விரும்புகிறார்களா? ஏன், இப்படி ஆளாளுக்கு அவரவர் விருப்பத்தை திணிக்கிறீர்கள்? இது கூட ஒரு வன்முறை தான்.

   இந்தியா சிறுபான்மை தேசிய இனங்களான வடகிழக்கு மாநில மக்களை எப்படி நடத்துகிறது என்பது உங்களுக்கு தெரியாதா? மேலும் ஈழம் தமிழ்நாடோடு இணைந்தால் புதுச்சேரிக்கு கிடைத்திருக்கும் அந்தஸ்து கூட கிடைக்காது. மேலும் இங்குள்ள பெரும்பான்மை இந்து தேசிய மற்றும் தமிழ் தேசிய சக்திகள் அவர்களை சந்தேகத்தோடே பார்ப்பார்கள்.

   உங்கள் பரிந்துரை இந்திய விரிவாக்க நலன்களையே பேசுகிறது. ஈழ மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட துணை நிற்பதன் மூலமே அம்மக்களுடன் நாம் நட்பை வளர்க்க முடியும். இன்னொரு முக்கியமான விஷயம், இது போன்ற எண்ணற்ற பரிந்துரைகள் அனைத்தையும் இந்திய அரசு புறங்கையால் உதறி விட்டது. இலங்கை, ஈழத்தை வைத்து இந்தியா போடும் கணக்கே வேறானது. அது தமிழ் இனவாத கண்களுக்கு தென்படாத ஒன்றாகவே முள்ளிவாய்காலுக்கு பிறகும் இருப்பது வேதனையான ஓன்று.

   • can tamil ealam stand on its own without the support of India or Srilanka?

    Who is more closer to Eazham Tamizh people? Sinhalese/Indian Tamizhnadu.

    If Indian Tamizhnadu is India and thus untouchable for Eazham Tamils,are thye more untouchable than Sinhalese SL.

    If neither country is willing to accept the sovereignty of Eazham,then why is it nor better to align with India than the Sinhalese?

   • // புலிகளை ஈழ மக்கள் நேசிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்; அது உண்மை தான்.//

    சுகதேவ், இந்த உண்மை உங்கள் மன விருப்பத்தினால் ஏற்பட்ட உண்மையா அல்லது ஈழ மக்களின் ஏகோபித்த ஒப்புதலா?

    • There are few people who supported the Tigers but most of them are not beyond 10th std pass,

     Every single educated Tamil i met in Srilanka hates the Tigers for making life hell for them,maybe it is true that regular people on the street suffer more from Sinhalese aggression than Educated people but thats the whole idea.

     Anyway,even many families in Yaazhpanam support the Tigers a sthey have no otehr option.

    • சந்தானம்,
     ஈழத்தை சேர்ந்த ரதி எனும் பெண்மணி வினவில் எழுதிய கட்டுரைகளுக்கு எழுந்த எதிர்ப்பும், பின்னர் தொடர்ந்த விவாதத்தின் இறுதியில் வினவு முன்வைத்த நீண்ட விளக்கங்களுடன் கூடிய முக்கியமான கட்டுரையில் உங்கள் கேள்விக்கான பதில் அடங்கியிருப்பதாக நினைக்கிறேன்.

     சமீபத்தில் நியூஸ் X என்னும் தொலைக்காட்சியில் போருக்கு பிந்தைய ஈழ நிலைமைகள் பற்றிய செய்தி அலசல் ஒன்றை வழங்கினார்கள். அதில், வீட்டில் கணவனை பறிகொடுத்த பெண் கூறும் போது, இரவானால், வீட்டின் முன்பு ஆண்கள் அணியும் செருப்புகளை அடுக்கி வைப்பாராம்; இராணுவத்திடமிருந்து காப்பாற்றிக் கொள்ள. இந்த பாதுகாப்பின்மை புலிகளின் அழித்தொழிப்புக்கு பிறகு ஏற்பட்ட நிலைமை.

     ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ நண்பன் கடலில் தனது அண்ணன் கடுமையாக இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்ட செய்தியை பகிர்ந்த போது சொன்ன உண்மை. ( கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டத்தோடு இணையாத மீனவ மக்கள், இவர்கள்) புலிகளின் அழித்தொழிப்புக்கு பின்னர் இந்திய மீனவர்களின் நிலைமை மிகவும் மோசமாகியிருப்பதாகவும், புலிகள் இருந்த போது அவர்கள் தாக்கப்படவில்லை என்றும் சொன்னார்.

     புலிகளுக்கு எதிரான மக்கள் கருத்தும் நிச்சயமாக ஈழத்தில் இருக்கும். புலிகளின் அரசியல் தவறுகள் பற்றிய புரிதலுடன் புதிய அரசியல் பாதை ஓன்று இனிமேல் தான் அங்கு ஏற்பட வேண்டும்.

     • சுகதேவ்,

      உண்மைதான். நேற்று அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் மட்டகளப்பைச் சேர்ந்த மாணவனிடம் இது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் கூறிய கருத்துக்கள் உங்களுடையதை ஒத்ததாகவே இருந்தது. புலிகள் இருந்த சமயத்தில் ஆமியின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டகளப்பு, யாழ் பகுதிகளில் அரசின் செயல்பாடுகள் புலிகளை விட மோசம் என்பதையும் புலிகள் அழித்தொழிக்கப்பட்ட பின்னான இந்நாட்களில் நிலைமை இன்னும் மோசமடைந்திருப்பதாகவும் கூறினார்.

      நன்றி.

   • இந்தியாவுடன், அதாவது தமிழ் நாட்டுடன் ஈழத்தை இணைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உலகப்போர் மூளும். சீனா மற்றும் பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக போரில் இறங்கும். இதனால் பாதிக்கப்படுவது நாம்தான்! இதனைக்கூட புரிந்து கொள்ளாமல் அரசியல் பேசுகிறீர்கள். உலக நடப்பை சற்று தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும்.

    • இலங்கைத் தூதர் கரியவாசம் சிங்களவர்கள் வட இந்தியர்களின் வாரிசுகள் என்று சொந்தம் கொண்டாடுகிறாரே.. சிங்கள மாநிலமாகவும், ஈழ மாநிலமாகவும் இந்தியாவுடன் இணைய வேண்டியதுதானே என்று ஏன் யாரும் கேட்கவில்லை..?!

 5. //ஆனால் தமிழ்நாடுடனும், இந்தியாவுடனும் இணைய ஈழ மக்கள் விரும்புகிறார்களா? ஏன், இப்படி ஆளாளுக்கு அவரவர் விருப்பத்தை திணிக்கிறீர்கள்? இது கூட ஒரு வன்முறை தான்.

  இந்தியா சிறுபான்மை தேசிய இனங்களான வடகிழக்கு மாநில மக்களை எப்படி நடத்துகிறது என்பது உங்களுக்கு தெரியாதா? // சுகதேவ் அவர்களே! தெனாலி ராமன் வளர்த்த குதிரை/பூனை கதை எல்லோருக்குக்கும் தெரியுமல்லவா? அது போலத்தான் இந்திய ஜனனாயகம்! இருந்தாலும்,நண்பர் பெரியசாமியின் கருத்தே சரியானது! நம்மில் ஒற்றுமையின்றேல் அனைவருக்கும் தாழ்வே! வடநாட்டிலும் சாதாரண மக்கள் ஒடுக்கிவைக்கப்படுகிரார்கள்! சாதி, மத , மொழி, இன போதையில் மற்றவை வெளியே தெரிவதில்லை!

 6. ஈழத்தில் நடந்த சண்டையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக இருப்பதாக கூறப்படுகிறது!! இவர்களுக்கு வாழ்வு கொடுக்க இங்குள்ள மணமாகாத இளைஞர்கள் முன் வர வேண்டும். மற்றும் மாணவர்களும் இதனை ஏற்று அவர்களுக்கு மறுவாழ்வுக்காக அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். தற்போது போராட்டம் நடத்துவதை காட்டிலும் இது அவர்களுக்கு பெருமை சேர்க்கும்.

  அப்போதுதான் இவர்கள் எந்த அளவிற்கு ஈழத்தமிழர்களை ஆதரிக்கிறார்கள் என்று தெரியும்.

 7. வினவில் ஈழம் தொடர்பான கட்டுரைகள் வரும் போதெல்லாம் அம்பி, நட்ராயன் போன்ற இந்திய தேசிய குஞ்சுகள் சந்தில் சிந்து பாடுகிறார்கள்.

  • மார்கண்டேய கட்ஜு பாகிஸ்தான் ஒரு போலியான நாடு, இன்னும் 10-15 ஆண்டுகளில் இந்தியாவுடன் இணைந்துவிடும் என்று ஆரூடம் கூறியிருக்கிறாரே.. அவரும் இந்திய தேசிய குன்சா..

   http://ibnlive.in.com/news/pakistan-a-fake-country-will-reunite-with-india-one-day-says-katju/383805-3.html

  • ஈழம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் புலிகளை இசுலாமிய விரோதிகளாகவும், ஈழ விரோத காங்கிரசு-கார்பரேட் கூட்டணியை பின்னுக்குத் தள்ளிவிட்டும், பார்ப்பன கும்பல் – காசுமீர் என்று லாவணி பாடும் சுகதேவ் வகையறாக்கள், எங்களை ஏன் விட்டுவிட்டீர்கள என்று நடுவில் வந்து குதிக்கும் சங் பரிவார சிறீதர நட்ராயன்கள், ஹரிகுமார் போன்ற புலி விரோத சு.சாமி சீடர்கள் மற்றும் பலர் மத்தியில், அய்யோ பாவம் ஈழத்தமிழர்கள்..

   • ஈழம் விடுதலை பெறட்டும்; ஆனால் காஷ்மீர் மக்கள் விடுதலை பெற ஆதரவில்லை என்கிறீர்களே, உங்கள் மனசாட்சி பிளவுபட்டிருப்பதை அறிகிறீர்களா? காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு எதிராக இருக்கும் அதே பார்ப்பனீயம் தான் ஈழ தமிழர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறது.

    ஈழத்தை ஆதரிக்க வேண்டி வந்தால், காஸ்மீர் விசயத்திலும் அதற்கொப்ப நடந்து கொள்ள வேண்டி வரும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர், இந்திய ஆளும்வர்க்க அறிவாளிகள். எனவே தமிழீழம் எனும் உங்கள் ஆசை நிறைவேற நீங்கள் காஸ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுத்தாக வேண்டியுள்ளது.

    • சுய நிர்ணய உரிமை, அதற்கு எதிரான அடக்குமுறை என்ற பொதுப் பார்வையில், ஒற்றைப் பரிமாண நோக்கில் ஈழ விடுதலைப் போராட்டத்தையும், சுதந்திர காசுமீருக்கான போராட்டத்தையும் ஒரே தளத்தில் வைக்கிறீர்கள்..

     காசுமீரில், காசுமீரிகளின் ஜனநாயக அரசும், காசுமீர்களுக்கு மட்டுமேயான காசுமீரில் உள்ள நிலங்களின் மீதான உரிமையும், ஆயுதப் போராட்டத்துக்கு எல்லை தாண்டிய உதவியும்-உத்தரவுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்கானிப்பில் ராணுவ நடவடிக்கைகளும் உள்ளதைப் போன்றா ஈழ விடுதலைப் போராட்டம் இருந்தது..?!

     வடக்கு கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பே நடைபெற முடியாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது.. தமிழர் நிலங்களில் சிங்கள ஆக்கிரமிப்பு தங்கு தடையின்றி தொடர்கிறது.. புத்த மத-கலாசார ஆக்கிரமிப்புகள் கூடவே நடந்து கொண்டிருக்கிறது.. ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்குத்தான் எல்லை தாண்டிய உதவிகள் வந்தனவே தவிர அதை ஆதரித்து எந்த உதவியும் இல்லாத நிலைதான் இருந்தது.. எதிரி நாட்டின் மீது நடத்தம் யுத்தத்தை விட கொடூரமான போரை தமிழ் மக்கள் மீது (அவர்களை தங்கள் மக்கள் என்று கூறிக்கொண்டே) இலங்கை நடத்தியது.. காசுமீருக்காக கூக்குரல் இடும் எந்த அரசும் இந்தப் போரை தட்டிக்கேட்கவில்லை.. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் தமிழீழத்தில் நுழைய முடியாத நிலை..

     உங்களுக்கு காசுமீரும், பார்ப்பனீய எதிர்ப்பும்தான் முக்கியம்.. இல்லையா..?!

     • காஸ்மீரில் நடப்பது இஸ்லாமிய பயங்கர வாதம்!!! சுதந்திரமோ ஜனநாயகத்திக்காகவோ அல்ல!! “காஷ்மீரிகள்” என்று ஏன் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. அங்கு இந்துக்களும் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பிரிவினை கோரி போராட்டம் நடத்தவில்லை! ஏன் முஸ்லீம்கள் என்று கூற பயப்படுகிறீர்கள் என்று தெரியவில்லை. இதற்கு பெயர்தான் “மதசார்பின்மை” போலும். இந்தியாவில இந்துக்கள் அதிகம் இருக்கும் மற்ற மாநிலங்களில் இது போன்ற பிரிவினை சக்திகள் இல்லை. ஆனால் முஸ்லீம்கள் சற்று அதிகமானால் இது போன்ற பயங்கரவாதம் அதிகரிக்கும். கேரளாவில் சில மாவட்டங்களில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர். அங்கு அடிக்கடி கலவரம் நடக்கிறது. அதேபோல்தான் மியன்மீரிலும் பிரிவினை கோரி வந்தேறிகள் (முஸ்லீம்கள்) ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

 8. இந்தக் கட்டுரை பேசுவது ஈழப்போராளிகளுக்கு எம்ஜிஆரும் ராஜீவும் ‘எப்படியெல்லாம்’ உதவினார்கள் என்பதுபற்றி. ஏதோ எம்ஜிஆரும் இந்திரா காந்தியும் இன்றைக்கு இருந்திருந்தால் இந்நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என்று பேசி அரசியல் நடத்திவரும் சில அரசியல் தலைவர்களைப் புரிந்துகொள்ளவும் எம்ஜிஆர் ஈழ விவகாரத்தில் எப்படி இருந்தார் என்பதை அறிந்துகொள்ளவும் உதவும் கட்டுரை இது. இதனை அப்படியே திசைதிருப்பி என்னென்னவோ தத்துவார்த்த விஷயங்களையெல்லாம் பேசி கட்டுரையின் மய்யக்கருத்துக்கே போகவிடாமல் செய்திருக்கின்றனர் இங்குள்ள சில பின்னூட்டவாதிகள். இவர்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவர்களே.

 9. இலங்கைக்கு ராணுவ உதவி செய்த அமெரிக்காவை கண்டித்து 1983 அக்டோபர் 12 இல் சென்னையில் கருஞ்சட்டைப் பேரணியை எம்.ஜி.ஆர் நடத்தினார். பொ.செ ப.உ.சண்முகம்,கொ.ப.செ ஜெயலலிதா இலங்கைக்கு அமெரிக்கா உதவக்கூடாது என அமெரிக்க தூதரிடம் மனு கொடுத்தனர் http://mdmkfriends.blogspot.in/2013/04/8_8.html

  ஐ.நா. சபையில் புகார் செய்ய இந்திராவுக்கு எம்.ஜி.ஆர். தந்தி தமிழகத்தில் பந்த் http://www.maalaimalar.com/2012/10/09103029/37-tamilians-killed-in-srilank.html

  22 நவ 1986இல் இந்திய அரசு தன்னிடம் இருந்த பறித்த தொலைத் தொடர்பு சாதனங்களை திரும்பத்தரக் கோரி பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார்
  http://www.youtube.com/watch?v=fSHTC1ambno

  விடுதலை – அன்ரன் பாலசிங்கம் http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88

  சுதந்திர வேட்கை -அடல் பாலசிங்கம்
  http://www.scribd.com/doc/26407313/Suthanthira-Vetkai-Adel-Balasingam

  படித்தால் எம்.ஜி.ஆர் செய்தது என்னவென்று புரியும்.

 10. 1986- க்கு பிறகு இந்திய அரசுக்கு என்ன புதிய னானோதயம் வந்தது? இந்திய பார்ப்பன ஆளும் வர்க்கம் கஷ்மீரிகளை நம்பவில்லை, அசாமியர்களைநம்பவில்லை, தமிழர்களையும், இந்திய முச்லிம் களையும் நம்பவில்லை! திராவிட இயக்கம் தோன்றியதே பார்பனர்களின் பித்தலாட்டஙகள் அள்வுக்கு மீறி சென்றதால்தான்! பெரியாரின் குடியரசு பழைய இதழ்களை படியுஙகள், நல்ல மனம் கொண்ட அன்பர்களே!

  • Dravidar Kazhagam was formed because like everywhere,British wanted to leave the society fractured as they could do nothing against the Brahmins,they got all the kings drunk in their whiskey and privy purses,but they could do nothing against the brahmins,so naturally they get the other upper castes to open a small crack and play it up bigtime.

   Like the Brahmins used the British to get educated and advance themselves scientifically,The other upper castes like Vellalar/Mudaliar/Naidu/Nayakkar/Nair used this oppurtunity to advance themselves politically against the Brahmins.

   Thats all,it is a simple power game,and of course there are millions like ajaatashatru to get fooled by this.

   Everyone knows this,Veeramani himself knows this.

 11. Thippu enbathu thamizh pere kedayathu,

  appuram,dravidar kazhagam aarambicha ethana per england poi padichu sir pattam vaangunaanga?

  iruppathileye pazhaya peruchaali thamizha paathukakkurathu thaan,ippo adhuva.

 12. //…….it is a simple power game,and of course there are millions like ajaatashatru to get fooled by this………// Either Mr.Harikumaar is brainwashed or he is trying to fool others! I can only feel pity ! Will Bramins never change their attitude? Sariththira purattarkaL!

 13. […] இன்னொரு போலி கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் எட்டப்பர்களின் திலகம் கல்யாணசுந்தரம், “தமிழக போலீசின் நடவடிக்கை பிரதமர் ராஜீவ் காந்திக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது” என்று கண்டிக்கிறார். ராஜீவின் ஏவுதலால் நடந்த நடவடிக்கை காரணமாக ராஜீவுக்கு கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்ற அக்கறையைத்தான் முக்கியமாக கல்யாணசுந்தரம் காட்டுகிறாரே தவிர, ஈழப் போராளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை அல்ல. சர்வதேச விடுதலைக்காகப் போராடி வரும் புரட்சிகர சர்வதேச தலைவராக ஈ.பி.ஆர்.எல்.எ்ப் கொண்டாடும் கல்யாணசுந்தரத்தின் யோக்கியதை இதுதான்! “அவரது புரட்சிகர அனுபவங்களை சுவீகரித்துக் கொள்வோம்” என்று புத்தகம் போட்ட போராளி பத்மநாபா பார்வைக்கு இந்த எட்டப்பன் வேலைகளை முன் வைக்கிறோம். _______________________________________________________________________ புதிய ஜனநாயகம், நவம்பர் 1986 […]

 14. உலக மகா நடிப்புடா சாமி…….. இந்த “வினவு” தரும் செய்திகள்…….. ஐந்தும் இரண்டும் ஏழு என்று சொன்னால் தப்பு எட்டு என்று சொல்லுகிறது இந்த வினவு இணையதளம்……. “கேட்கறவன் கேனையான இருந்தால்…… எலி கூட எலிகாப்டர் ஓட்டும்” என்று நாளை சொன்னாலும் சொல்லும்……….. ஈழத்தமிழர்கள் ஈழ தமிழர் விடுதலை மாவீரன் பிரபாகரன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியவை ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டது என்பதை தமிழை நேசிக்கும் தமிழ் உணர்வு கொண்ட உலகில் உள்ள ஒவ்வொரு தமிழருக்கும் தெரியும்……. ஆமா நீங்கள் சிங்களவன் கிட்ட இருந்து வாங்கின காசுக்கு அதிகமாவே கூவுகிற மாதிரி இருக்குது!

 15. ராஜபக்சவின் தோல்வியும் சிறிசேனாவின் வெற்றியும் Wining of Srilanka Election Results

  ஜனவரி 9,2015 : ராஜபக்சவின் தோல்வியும் சிறிசேனாவின் வெற்றியும்

  ஈழ தமிழருக்கு இனி என்ன ?

  ராஜபக்சவின் வெற்றிக்காக மறைமுக களம் கண்ட தெற்காசிய பிராந்திய வல்லரசான இந்திய வல்லான் அரசுக்கும் அதன் மதவாத பிராதமர் மோடிக்கும் கொடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கை மணியோசை தான் சிறிசேனவின் வெற்றியும், ராஜபக்சவின் தோல்வியும். ராஜபக்சவின் தோல்வி முகம் போன டிசம்பர் மாதமே ஒளிர தொடங்கினாலும் அதனை முழுமையாக காட்டிய நாள் இன் நாள். ஈழ தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய வல்லான் அரசு எடுத்த நேரடியான ராஜபக்ச ஆதரவு கைகோர்ப்புகள் ,அனுப்பிவைக்கபட்ட ஆதரவு பிரச்சசார நடிப்புலக பிரங்க்கிகள் ஈழ மக்கள் சனநாயக சக்தியின் முன் செய்லிழந்தது ஒன்றும் உலக அரசியலில் முதலும் அல்லது இருதியுமானது அல்ல.ஆனால் வடக்கு மாகாண தமிழ் மக்கள் ,வடகிழக்கு தமிழ் மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் ,இந்திய வம்சாவழி மலையகத்து தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் ராஜபக்சவின் தோல்விக்கு மிக நேரடியான காரணமாக அமைந்தது என்பதனை பெரும்பான்மை சிங்கள பொதுமக்களே மறுக்க இயலாத நிலையில் அடுத்து பதவி ஏற்க்க வரும் சிறிசேனாவிற்கு ஒன்று பட்ட ஈழத்துக்கும் ,அதில் வாழும் அனைத்து இன மக்களின் அதிகார பகிர்விக்கும்,வாழ்வுரிமைக்குமான அரசியல் செயல்பாட்டுக்கு உரிய அதிகப்ச்ச புரிதலை கொடுக்கும் ,கொடுக்க வேண்டும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.

  இன ,மத வேறுபாடுகளை கடந்த ஈழத்து எளிய மக்களிடம் நடைமுறைக்கு வரவேண்டிய அரசியல் ,பொருளாதார ஐக்கியமும் ,அதனை நேக்கிய நீண்ட புரிந்துணர்வு பயணமும் ,இன சீற்றத்தை கடந்த வர்க்க ஒற்றுமையும் மட்டுமே அம்மக்களின் நீண்ட , நிலைத்த எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனையும் ,உலக ,பிராந்திய வல்லரசுகளின் ஆதிகத்தில் இருந்து ஈழத்தை மீட்டெடுக்கும் என்பதனையும் ,அவர்களின் நாட்டின் இறையாண்மையை காக்கும் என்பதனையும் இலங்கை[ஈழ] மக்கள் அனைவருமே புரிந்து கொள்ளவேண்டிய நாள் ஜனவரி 9,2015.

  அனைத்து இலங்கை[ஈழ] மக்களுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துகள் !

  இவன் ,

  தமிழ்
  சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க