Sunday, September 15, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கேரள உள்ளாட்சி தேர்தலில் தனியார் நிறுவனம்

கேரள உள்ளாட்சி தேர்தலில் தனியார் நிறுவனம்

-

kitex1
வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான ஆடைகள் ஏற்றுமதி செய்யும் கைடெக்ஸ்

கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சி.பி.எம் வெற்றி, காங்கிரஸ் கட்சி தோல்வி செய்திகளை தவிர்த்த
மற்றொரு செய்தியும் ஊடகங்களின் கவனத்தை பெற்றிருந்தது. ஒரு தனியார் நிறுவனம் ஒன்றும் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.

எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கீழக்கம்பளம் கிராம பகுதியில் செயல்பட்டு வருகிறது கைடெக்ஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம். சுமார் 8000 தொழிலாளர்களுடன் வருடத்திற்கு 1000 கோடி அளவிற்கு வர்த்தகம் செய்துவரும் இந்நிறுவனம் வால்மார்ட், மதர் கேர் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான ஆடைகள் உற்பத்தி செய்து வருகிறது.

கீழக்கம்பளம் கிராமத்தில் செயல்பட்டுவரும் இந்நிறுவனத்தின் துணி ஆலை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு சுற்றுசூழல் மாசுபடுத்துவதாக கூறி ஆலைக்கான நிரந்தர அனுமதி தர மறுத்துவிட்டது கிராம பஞ்சாயத்து. மாநில் சுற்றுச்சூழல் வாரியத்திடம் பெறப்பட்ட தற்காலிக அனுமதியின் பேரில் இயங்கிவருகிறது இந்நிறுவனம். இது தொடர்பான வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது.

இந்த பிண்ணனியில் தான் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இக்கிராம பஞ்சாயத்தின் 17 வார்டுகளிலும் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது இந்நிறுவனம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கீழக்கம்பளம் பஞ்சாயத்தின் முன்னாள பஞ்சாயத்து தலைவர் ஜாலி பாபி, “சுற்றுசூழல் பிரச்சணைகளுக்காக நாங்கள் அவர்களுக்கு லைசன்ஸ் அளிக்கவில்லை. தங்கள்து தொழிலை தடங்கலின்றி செய்யவே அவர்கள் பஞ்சாயத்தை கைப்பற்ற முயற்ச்சிக்கிறார்கள்.” என்கிறார்.“இந்நிறுவனம் கழிவு நீரை அருகிலிருக்கும் விளை நிலங்களில் திறந்துவிடுவதாகவும் அதை மறைக்கவே சி.எஸ்.ஆர் நடவடிக்கைகளில் ஈடுவதாக குற்றம் சாட்டுகிறார் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிரான் நடவடிக்கை குழு என்ற அமைப்பின் செயலாளர் ரஹீம்.

Kitex_Kerala-cadidates
கைடெக்ஸ் நிறுவனத்தின் வேட்பாளர் பட்டியல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக 20-20 என்ற பெயரில் தன்து கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு பிரிவு (Corporat Social Responsibility-சி.எஸ்.ஆர்) மூலம் சுமார் 28 கோடிகளை செலவு செய்துள்ளது. ஒரு பஞ்சாயத்து தேர்தலுக்கு இவ்வளவு செலவு செய்ய என்ன தேவை இருந்துவிடப்போகிறது? பிளச்சிமாடாவில் தண்ணீர் வளத்தை ஊறிஞ்சி சுற்றுச்சூழலை நாசப்படுத்திய கோக கோலா நிறுவனத்தை ஊள்ளூர் மக்கள் விரட்டியது நினைவிருக்கலாம். மக்களின் தீரமிக்க போராட்டங்களோடு பிளச்சிமடா பகுதி கிராம பஞ்சாயத்திற்கும் கோக கோலா நிறுவனத்திற்கும் நடந்த சட்டப்போராட்டத்தில் கிராம பஞ்சாயத்தின் வெற்றியும் சேர்த்து தான் கோக கோலாவை விரட்டியத்தது என்ற பின்புலத்தின் நோக்கினால் இந்த செலவின் தேவை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

இனி திமுக  – அதிமுக கட்சிகள் திருமங்கலம் பார்முலாவை பின்பற்ற தேவையில்லை. தங்களது உப்புமா கம்பெனிகளின் பெயரில் சி.எஸ்.ஆர் நடவடிக்கைகள் என்று சட்டப்படியே செய்யலாம். ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் அவர் காட்டியிருக்கும் உப்புமா கம்பெனிகளையே ஏற்றுக்கொள்ளும் நீதிமன்றங்கள் சட்டப்படியான இந்த வழிமுறையை ஏற்றுக்கொள்ளாதா என்ன.

sabu-jacob-MD-kitex-kerala
கைடெக்ஸ் நிறுவன முதலாளி சபு ஜேக்கப்

தங்ளது நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கைடெஸ் முதலாளி சபு ஜேக்கப் “கீழக்கம்பளம் பஞ்சாயத்தின் மொத்தம் 8000 குடும்பங்களில் 6700 குடும்பங்கள் எங்களிடம் பதிவு செய்துள்ளார்கள்” என்கிறார். தங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் அவர் தேர்தல் கமிசனில் பதிவு செய்து முறையான கட்சியாக பதிவு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளின் மீதான அதிருப்தி மக்களை இந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் பக்கம் சாயவைத்துள்ளது. “காங்கிரசும் இடது முண்ணனியும் இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆனால் கைடெஸ் நிறுவனம் மளிகை பொருள்களை பாதிவிலைக்கு தருகிறது. 458 வீடுகள் கட்டித்தந்துள்ளார்கள்.600 டாய்லெட்டுகள் கட்டிதந்துள்ளார்கள்.” என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். “அவர்களுக்கு(கைடெக்ஸ் நிறுவனத்திற்கு) வேறு நோக்கங்கள் இருக்கலாம்.யாருக்குத்தான் இல்லை. இவ்வுலகில் இலவசம் என்று எதுவும் இல்லை. எங்களை பொருத்தவரை இந்நிறுவனம் செய்த உதவி எங்கள் வாழ்வை மாற்றியுள்ளது” என்கிறார் கிராமத்தை சேர்ந்த மணி.

தனியார்மய தாராளமய கொள்கைகளின் விளைவாக விவசாயமும் சிறுதொழிலும் அழிக்கப்பட்டு வாழ்விழந்துவரும் மக்கள் தற்காலிகமான சிறு உதவிகளுக்கு கூட தங்கள் வாழ்க்கையை அடகுவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஓட்டுக்கு பணம் பெறுவது முதல் அரசின் விலையில்லா திட்டங்களை வரை மக்களுக்கு தாங்கள் கொள்ளையடிப்பட போகிறோம் என்பது அறிந்தே தான் மக்கள் அனுமதிக்கிறார்கள். எதிர்காலம் உத்திரவாதமில்லாத நிலையில் வந்தவரை லாபம் என்ற வகையில் மக்களையும் ஊழல்படுத்தப்பட்டுவருகிறார்கள்.

கைடெக்ஸ் நிறுவனத்தின் வெற்றியை தொடர்ந்து இதுவரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லாதது போலவும் இப்போதுதான் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது போலவும் சிலாகித்து எழுதுகின்றன முதலாளித்துவ ஊடகங்கள். மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு பிறகு முதலாளி-அரசியல் உறவுகள் முன்னர் போல திரைமறைவாக நடப்பதில்லை. முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறி ஒன்றுகலந்துவிட்டாகிவிட்டது. முதலாளிகளாயிருந்த விஜய் மல்லையா, நிதின் கட்கரி,சரத்பவார்,ஜெகத்ரட்சகன் போன்றவர்கள் எம்.பிக்களாக அமைச்சரகளாகவதும், நம்மூர் எஸ்.ஆர்.எம் போன்ற முதலாளிகள் அரசியல் அவதாரமெடுப்பதும், அரசியல்வாதி டி.ஆர்.பாலு, மாறன் சகோதரர்கள், ஜெயலலிதா, சசிகலா போன்றவர்கள் முதலாளிகளாயிருக்கிறார்கள்.எந்த கட்சிக்கும் கொள்கை, கோட்பாடுகள் இருப்பதில்லை.

கட்டுமான சீரமைப்பு என்ற பெயரில் முதலாளிகளும் அவர்களும் கையாட்களுமே கொள்கை முடிவெடுக்கும் இடங்களில் நேரடியாக அமர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் பணத்தில் சிந்திக்கும் சிந்தனை குழாம்ககள் தான் இவற்றை தீர்மானிக்கின்ரன. அதை அமல்படுத்தும் இடத்தில் சிவில் சொசைட்டி என்ற பெயரில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அமர்த்தப்படுகின்றன. சட்டமன்றம் நாடாளுமன்றங்களின் அதிகாரங்களை விஞ்சுகின்றன ஒழுங்குமுறை ஆணையங்களின் அதிகாரங்கள். இப்படி கார்ப்பரேட்டுகளின் கையாட்களையே அரசின் உறுப்பாய் மாற்றி வருகிறார்கள்.

நாட்டின் தேர்தல் அரசியல் கட்டுமானங்கள் சீரழிந்து வருவதும், கட்டுமான சீரமைப்பு என்ற பெயரில் முதலாளிகளே அதிகாரத்தில் அமர்ந்துவருவதன் தொடர்ச்சியாகத்தான் இத்தனியார் நிறுவனத்தின் அரசியல் செயல்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க