privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்ஒப்பந்த தொழிலாளிகளே ! வரலாற்றின் விருப்பமான தருணம் இது !

ஒப்பந்த தொழிலாளிகளே ! வரலாற்றின் விருப்பமான தருணம் இது !

-

ப்பந்தத் தொழிலாளிகளுக்கான குறைந்த பட்ச கூலியை ரூ 10,000 ஆக நிர்ணயிப்பதை இந்திய தரகு முதலாளி வர்க்கம் தடுத்து நிறுத்தியிருக்கிறது. இது பற்றிய செய்தி இந்து ஆங்கில நாளேட்டில் 21-07-2016 அன்று வெளிவந்திருக்கிறது.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திற்கு முதலாளிகளால் எழுதப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கடிதங்கள் ஒப்பந்தத் தொழிலாளிகளின் குறைந்தபட்ச கூலி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. தரகு முதலாளிகளின் கால்களை நத்தி பிழைக்கும் மோடி கும்பல், எஜமானர்களின் கட்டளைக்கு அடிபணிந்து கூலி உயர்வை நிறுத்தியிருக்கிறது. மேலும் உலக முதலாளிகளிடம் கூலி உயர்வு பற்றி ஆலோசனை கேட்டு விட்டு கருத்து சொல்வதாக கூறியிருக்கிறது இந்தியாவின் தொனா நானா அமைச்சகம்!

ஒப்பந்தத் தொழிலாளிகள்
ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான குறைந்த பட்ச கூலி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறு வேறாக இருக்கிறதாம். இதை மாற்றி நாடெங்கிலும் கூலி உயர்வு கொடுத்தால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு போட்டி வந்துவிடுமாம்.

பிர்லா குழுமத்தின் ஆதித்யா பிர்லா பேசன் மற்றும் ஆதித்யா சில்லறை வணிக நிறுவனம், ‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான கூலி உயர்வு, உற்பத்தியாளர்களுக்கு கடும் நிதிச் சுமையை உருவாக்கும்’ என கூறியிருக்கிறது. நாட்டைச் சுரண்டும் நம்பன் ஒன் பகாசுரக் கொள்ளையனுக்கு தொழிலாளிகளின் கூலி, நிதிச் சுமையாம்! ‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு பி.எஃப், கிராஜூவட்டியெல்லாம் தரும் பொழுது கூலி உயர்வு என்பது தொழிலாளிகளைச் சுமக்கும் கூடுதல் சுமை’ என்று சலித்துக்கொள்கிறார் பிர்லா.

நினைத்த நேரத்தில் சொடுக்கு போட்டு மோடி கும்பலை வேலை வாங்கும் இந்திய தரகு முதலாளிகள் சங்கமான ஃபிக்கியும் (FICCI-Federation of Indian Chamber of Commerce and Industries) இதில் கருத்து தெரிவித்திருக்கிறது. ஃபிக்கியின் அறிக்கையின் படி, ‘இந்திய ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு கொடுத்தால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் ஒப்பந்தத் தொழிலாளிகளை வைத்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வந்துவிடுமாம்’.

அதாவது பங்களாதேஷ், பாகிஸ்தான் என நாட்டு எல்லைகளைக் கடந்து தொழிலாளிகளை ஒட்டச் சுரண்டி கொள்ளை இலாபம் அடிக்கும் பொழுது, இந்திய ஒப்பந்தத் தொழிலாளிக்கு மட்டும் கூலி உயர்வு எதற்கு என்று கேட்கிறது பிக்கி! தங்களுக்கான இலாபத்தை நிர்ணயிப்பது தொழிலாளிகளுக்கான கூலிதான் என பிக்கி ‘மார்க்சியம்’ பேசுகிறது! ஆனால் இந்த அரசியலை மறைத்து, இதே முதலாளிகளிடம் ஐந்தாயிரம் கொடு, ஆறாயிரம் கொடு என்று தொழிலாளிகளை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தவிடுகின்றன ஆளும் வர்க்க தொழிற்சங்கங்கள்! இதை மீறி நிதர்சனத்தைப் பேசினால் சிவப்பு பயங்கரவாதம் என்று தொழிலாளர்களைப் பீதியூட்டுகிறார்கள்!

கூலி உயர்வை மறுக்கும் பிக்கியின் இதே வாதத்தை சிறுதொழிற்சாலைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த முதலாளிகள், இந்தியாவின் மாநிலங்களுக்கு பொருத்துகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான குறைந்த பட்ச கூலி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறு வேறாக இருக்கிறதாம். இதை மாற்றி நாடெங்கிலும் கூலி உயர்வு கொடுத்தால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு போட்டி வந்துவிடுமாம். சரிதான்! உண்மைதான்! ‘பீகார் ஒப்பந்தத் தொழிலாளியை ரூ 3,500-க்குச் சுரண்டலாம். தமிழ்நாட்டு ஒப்பந்தத் தொழிலாளியை ரூ 6,500-க்குச் சுரண்டலாம். இருவருக்கும் குறைந்தபட்சம் ரூ 10,000 என்று நிர்ணயித்தால் இலாபத்தை யார் விட்டுக்கொடுப்பது? இவர்கள் இருவரும் ஒன்றிணைய கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் சீமான்! மும்பையில் சிவசேனா! முக்குக்கு முக்கு ஆர்.எஸ்.எஸ் என்று நிறுத்தி வைத்திருக்கிறோம். இந்த கட்டமைப்பை மீறி கூலி உயர்வு என்று கேட்டால் நாங்கள் சும்மாவிடுவோமா’ என்கிறார்கள் சிறுதொழிற்சாலை முதலாளிமார்கள்.

இந்தியத் தரகு முதலாளிகள்
‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கான கூலி உயர்வு, உற்பத்தியாளர்களுக்கு கடும் நிதிச் சுமையை உருவாக்கும்’

இதையெல்லாம் விட ஆடை ஏற்றுமதி முதலாளிகள் கூட்டமைப்பு கூறிய கருத்துதான் முத்தாய்ப்பானதாக இருக்கிறது. ‘ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு அளித்தால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மட்டுமே ஆண்டொன்றுக்கு 11,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிவரும்’ என்று கணக்குப்போட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அத்துணை கோடியும் ஒப்பந்தத் தொழிலாளிகளின் உழைப்புச் சுரண்டலிருந்து வந்தது என்று மறைமுகமாகச் சொல்கிறார்கள்.

அற்ப கூலி உயர்வுக்கு ஆடை ஏற்றுமதி துறையில் மட்டுமே 11,000 கோடி இலாபத்தை விட வேண்டுமென்றால் இன்னபிற தொழிற்துறைகளில் இலாபக்கணக்கு என்னவாக இருக்கும்?

இயந்திர தொழிற்துறையான L & T தனியார் நிறுவனத்தின் 75% பணியாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; இந்தியாவின் எரிசக்தி துறையில் 54% பேர்; சிமெண்ட் தொழிற்சாலையில் 52% பேர்; ஆட்டோமொபைல் தொழிலில் 47% பேர்; சேவைத் துறையில் 8.8% பேர் ஒப்பந்தத் தொழிலாளிகள். இரயில்வே, மருத்துவமனை, கல்வித்துறையில் ஒப்பந்தத் தொழிலாளிகளின் கணக்கு குறிப்பிட்டு தெரியவில்லை.

மறுகாலனியாக்கத்தின் தீவிரத்தில் தொழிலாளிகள் பிய்தெறியப்பட்டு உதிரிகளாக்கப்பட்ட சீரழிவை கடந்த முப்பது ஆண்டுகளாக பார்த்துவருகிறோம். சங்கம் அமைக்க உரிமைகள் மறுப்பு, வேலை நேர அதிகரிப்பு, கொடூரமான சுரண்டல், என ஒப்பந்தத் தொழிலாளிகளின் வாழ்க்கை எந்தவித ஒப்பந்தமின்றியும் அடிமைகளின் வாழ்வைவிட கீழாக இழிந்த நிலையில் சுரண்டப்பட்டு வருகிறது. இதில் கூலிஉயர்வு என்பதை முதலாளித்துவ வர்க்கம் எத்துணை வெறி கொண்டு தாக்குகிறது பார்த்தீர்களா?

கைக்கூலி மோடி அரசை வைத்துக்கொண்டு, தரகு முதலாளிகள் பாட்டாளிகளை வதைக்கிற இக்கொடுஞ்செயலை படிக்கிற பொழுது தோழர் லெனின் சொன்ன கீழ்க்கண்ட பத்தி நினைவிற்கு வருகிறது.

வயிராற உண்டவர்கள் பசித்தவர்களை ஒருவரையொருவர் படுகொலை செய்யுமாறு எதற்காக விரட்டுகிறார்கள்? இதைக் காட்டிலும் மதி கெட்ட அறுவருத்தக்க குற்றத்தை உங்களால் சொல்ல முடியுமா? தொழிலாளர்கள் இதற்காக மிகக் கடுமையான விலை செலுத்த வேண்டியிருக்கும். எனினும் முடிவில் தொழிலாளிகள் வெற்றி பெறுவார்கள். இதுவே வரலாற்றின் விருப்பம்.” (தோழர் லெனின், தோழர் மாக்சிம் கார்க்கியிடம் பேசியதிலிருந்து, லெனின் சொற்சித்திரம், கீழைக்காற்று வெளியீடு)

தோழர் லெனின் சொல்வதுபடி வரலாற்றின் விருப்பமான தருணம் எதிர் நோக்கியிருக்கிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கமாக ஒன்றிணைந்து தமது உரிமையை நிலைநாட்டிக்கொள்வதுடன், தரகு முதலாளிகள் கும்பலை வீழ்த்தி தனது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தான் இந்த வரலாற்றின் விருப்பமான தருணம் அடங்கியிருக்கிறது!

– இளங்கோ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க