privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மாருதி தொழிலாளர்களை மீட்போம் - நாடு தழுவிய போராட்டம்

மாருதி தொழிலாளர்களை மீட்போம் – நாடு தழுவிய போராட்டம்

-

03.04.17

பத்திரிக்கைச் செய்தி

ஏப்ரல் 04: மாருதி தொழிலாளர்களின் சிறை மீட்புக்கான நாடு தழுவிய போராட்டத்தை ஆதரிப்போம்!

டந்த 18.06.2012-ல் தொழிற்சங்க உரிமைக்காகவும், சட்டவிரோத ஒப்பந்த முறைக்கு ஏதிராகவும் போராடிய மாருதி தொழிலாளர்கள் 148 பேரை சிறையிலடைத்தது, ஹரியானா போலிசு. அவர்களில் 13 தொழிலாளர்களுக்கு வாழ்நாள் சிறை. 4 தொழிலாளிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 14 பேருக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அளித்து, கடந்த 18.03.17 தேதியில் தீர்ப்பளித்துள்ளது, ஹரியானா மாநில கீழமை விசாரணை  நீதிமன்றம். தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க மாருதி நிர்வாகம் – ஹரியானா போலிசு – நீதிமன்றம் கூட்டுச்சதி செய்து போராடும் தொழிலாளர்களை பழி வாங்குகிறது.

நாடு முழுவதிலும் போராடுகின்ற தொழிலாளர்களை அச்சுறுத்தும் விதமாக அளிக்கப்பட்ட இந்த தண்டனையின் மூலமாக போலீசும் நீதிமன்றமும் தொழிலாளர்களுக்கானதல்ல என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. இந்த அரசு உழைக்கும் மக்களுக்கானதாக இல்லாமல் முதலாளிகளுக்கு மட்டுமே சேவை செய்து வருகிறது என்பது நாளுக்கு நாள் அம்பலப்பட்டு வருகிறது.

இனியும் அரசை, நீதிமன்றத்தை நம்பி பயனில்லை. மாருதி தொழிலாளர்களை பாதுகாக்க நாட்டின் ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கமும் போராட வேண்டும். அது ஒன்றே சிறையில் இருக்கும் மாருதி தொழிலாளர்களை மீட்பதற்கான ஒரே வழி !

இந்த பாதையில் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. ஏப்ரல் 04-ம் தேதியில் நாடு முழுவதிலும், மாருதி தொழிலாளர்களின் சிறை மீட்புக்காக நடைபெறவுள்ள போராட்டத்தை எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆதரித்து கீழ்கண்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளோம்.

  1. பேருந்து நிலையம், கும்முடிப்பூண்டி
  2. பெரியார் நகர், திருவொற்றியூர்
  3. அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம்.
  4. தாலுக்கா அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்.

இந்த செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இப்படிக்கு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்.
9444461480, 9445368009, 8807532859, 8489735841

***

ஏப்ரல் 4: மாருதி தொழிலாளர்களின் சிறை மீட்ப்புக்கான நாடு தழுவிய போராட்டத்தை ஆதரிப்போம்!

ஏப்ரல் 4 செவ்வாய்க் கிழமை,
மாலை 5 மணி – ராம்நகர் அண்ணா சிலை அருகில்,
ஓசூர்.

நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தொழிலாளர்களே, தோழர்களே!

ஹரியானா மாநிலம், மானேசர் மாருதி தொழிற்சாலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மாருதி நிர்வாகம் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே வெளியில் இருந்து ரவுடிகளையும், போலீசையும் வரவழைத்து தொழிலாளர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தியது. ரவுடிகளைக் கொண்டு வன்முறையை திட்டமிட்டு நிர்வாகமே நடத்தி, ஆலையின் ஒரு பகுதிக்கு தீ வைத்தது. அவினேஷ் குமார் என்ற எச்.ஆர். அதிகாரியைக் கொன்றது.

ஆனால், வன்முறையும் இந்தக் கொலையையும் காரணம் காட்டி 546 நிரந்தரத் தொழிலாளர்களையும் சேர்த்து மொத்தம் 2346 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது மாருதி நிர்வாகம். குர்கான் மாவட்ட நீதிமன்றம், எத்தகைய ஆதாரங்களும் இல்லாத நிலையில், நிர்வாகம் ஏற்பாடு செய்த போலியான சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, மாருதி சுசுகி தொழிற்சங்கத்தின் (MSWU) நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் 4 பேருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளது. மேலும், 14 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே இந்த தண்டனையை சிறையிலேயே கழித்துவிட்டனர்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறையை எதிர்த்தும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும், அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமையைப்போல நடத்தப்படுவதை கண்டித்தும் உறுதியுடன் போராடி வந்ததால், இவ்வழக்கில் மாருதி நிர்வாகம் – போலீசு – நீதிமன்றம் – ஹரியானா அரசினால் குறிவைத்து பழிவாங்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு “வர்க்கத் தாக்குதல்”. அதிகாரத்தில் இருப்பவர்களால், உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே வழங்கப்பட்ட தீர்ப்பு இது.

ஆனால், இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும், உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்ச் 18-ம் தேதி வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பை எதிர்த்து 30,000  தொழிலாளார்கள் குர்கானிலும், மானேசரிலும் வெலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.

தேசவிடுதலைப் போராளிகளான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளான மார்ச் 23-ம் தேதி மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று, அரசு விடுத்திருந்த 144 தடையுத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வர்க்க ஒற்றுமையை நிலைநாட்டினர்.

“சட்டப்பூர்வமாக” தொழிலாளர் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளவேண்டி அரசு நமக்கு வகுப்பெடுக்கிறது. பொய், பித்தலாட்டம், மோசடி மூலம் மாருதி தொழிலாளர்களை தண்டித்துள்ள இந்த அரசுக்கு அவ்வாறு கூறுவதற்கு அருகதை உண்டா? அன்னிய, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்காக பெயரளவில் இருந்த தொழிலாளர் நலச்சட்டங்களை “தேர்ந்தெடுக்கப்பட்ட” அரசின் மூலம் முதலாளிகளின் கழிவறைக் காகிதங்களாக்கி விட்ட மோடி அரசுக்கு அந்த அருகதை உண்டா ? இல்லை, முற்றிலும் சட்டபூர்வமாகவே ஆள அருகதை இழந்துவிட்டது ஆளும் இந்த அரசுக் கட்டமைப்பு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இப்போது சட்டவிரோதமே சட்டமாக, அநீதியே நீதியாக, பொய்யே உண்மையாக, முதலாளி வகுத்த விதிகளே வழிகாட்டுதலாக முற்று முழுதாக அம்மணமாக நிற்கிறது. ஆம், சர்வாதிகாரத்தின் நிழல் பரவிவருகிறது. எதிர்த்து முறியடிக்காவிட்டால் இன்று மாருதித்தொழிலாளர்களின் நிலைதான் நம் அனைவருக்குமே. மாருதி நிர்வாகம் மற்றும் அரசின் கூட்டுத்தாக்குதலை தொழிலாளர் ஒற்றுமை கொண்டு முறியடிப்போம் !

ஏப்ரல் 4 மற்றும் 5 ம் தேதிகளில் இந்தியா மற்றும் உலக நாடுகளின் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாருதி தொழிலாளர்கள் சிறை மீட்புக்கான போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது, மாருதி தொழிலாளர் சங்கம். அந்த போராட்டம் வர்க்க ஒற்றுமையின் அடையாளமாகவும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு மரண அடியாகவும் அமைய நாம் ஒன்றிணைவோம்!

  • மாருதி நிர்வாகம், போலீசு மற்றும் நீதித்துறையின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
  • ஆயுள் தண்டனை உள்ளிட்ட அனைத்து தண்டனைகளையும் ரத்து செய்யும் வரை போராடுவோம்!
  • தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்!
  • முதலாளிகளின் அடியாள் படையான இந்த அரசுக்கட்டமைப்பை அடித்து நொறுக்குவோம்!
  • பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784, ndlfhosur2004@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க