Saturday, July 20, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விதோழர் மருதையன் உரை : நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா !

தோழர் மருதையன் உரை : நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா !

-

னிதாவின் தற்கொலை தோற்றுவித்திருக்கும் தமிழக மக்களின் கோபத்தை திசைதிருப்ப ஆர்.எஸ்.எஸ் கும்பலால் இறக்கிவிடப்பட்டிருக்கிறார், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. நீட் தேர்வை ஆதரித்து பேசும் தமிழக பாஜக தலைவர்கள் இப்போது முன்னிலும் அதிகமாய் இதுதான் எதிர்காலம், மாணவர்கள் தயாராக வேண்டும் என கட்டளை இட்டு வருகின்றனர்.

நீட் தேர்வை ஏற்பதற்கு அதுதான் தரம் குறித்த தரமான சோதனை, தரமான மருத்துவர்களை கண்டுபிடிக்கும் தரமான தேர்வு, இந்தியா முழுவதும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள், மருத்துவக் கவுன்சில் முடிவு செய்வதை யாரும் கேள்வி எழுப்ப முடியாது, உச்சநீதிமன்றமே ஆழமாக ஆய்வு செய்து நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுவிட்டது, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கவோ, மாற்றவோ முடியாது, அடுத்த வருடமாவது நீட் தேர்வை எதிர்கொள்ளுமாறு தமிழக மாணவர்களை தயார் செய்தல் வேண்டும், தமிழக பாடத்திட்டம் – சமச்சீர் கல்வி தரமற்றது, சி.பி.எஸ்.இ பாடத்திட்டமே சாலச்சிறந்தது, அனிதா போன்ற மாணவர்கள் மருத்துவர்களானால் மருத்துவத்தில் தரம் இருக்காது என்று பல்வேறு கருத்துக்களை பா.ஜ.க கும்பல் பிரச்சாரம் செய்து வருகின்றது.

அனிதாவின் தற்கொலையை அதிர்ச்சியுடன் நோக்குவோரும், நீட் தேர்வை கொள்கை அளவில் எதிர்ப்போரில் கணிசமானோரும் கூட நமது பாடத்திட்டம் சரியில்லை, நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு கொடுத்திருந்தால் அடுத்த வருடம் மாணவர்கள் தயாராகியிருப்பார்கள் என்று கருதுகிறார்கள். ஊடகங்கள் பலவும் இப்படித்தான் பேசுகின்றன.

இந்த கருத்துக்களின் பின்புலத்தை, ஆதாரங்களுடம் தகர்க்கிறது தோழர் மருதையனின் உரை. எது தரம்? உச்சீநீதிமன்றத்தின் ‘தரம்’, மருத்துவக் கவுன்சிலின் ‘தரம்’, பாஜகவின் மூன்றாண்டு ஆட்சியின் ‘தரம்’ என இந்த தரங்கெட்டவர்களின் இரட்டை நாக்குகளை, சதிகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்றது இந்த உரை!

மக்களுக்கு சேவை செய்வதும், துறை சார் அறிவுத் தரமும் வேறு வேறாக இருக்க முடியாது என்பதை பல்வேறு சான்றுகளோடு நிறுவுகிறது இந்த உரை!

அனிதாவின் தற்கொலைக்கான நமது போராட்டம், ஏதோ மருத்துவம் படிப்பில் நமது மாணவர்களை சேர்ப்பது குறித்து மட்டுமல்ல, நமது மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம் குறித்த பிரச்சினையும் கூட! பணக்காரர்கள் மட்டும் கேஸ் சிலிண்டரை மானியமில்லாமல் வாங்க வேண்டும் என பேசிய பாஜக வாய் தற்போது அனைத்து மக்களுக்கும் மானியம் இல்லை என்று பகிரங்கமாக கொண்டு வந்து விட்டது. பல்வேறு துறைகளில் இதுதான் நிலைமை!

நீட்டிற்கு எதிரான நமது போராட்டம் நாட்டு மக்களின் வாழ்வாதாரம், ஜனநாயக உரிமைகள் அனைத்திற்குமானா போராட்டமாக மாற வேண்டும். அதற்கோர் ஆயுதமாக இந்த உரை பயன்படுத்த அழைக்கிறோம்.

பாருங்கள் – பகிருங்கள்!

___________

இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 1. உண்மையில் உரை வீச்சு சற்று பெரியதாக இருந்தாலும் ஒரு சிறு இடத்தில கூட தேக்கம் இல்லை. முழு வீச்சில் கேட்டு முடித்தேன். நண்பர்களுக்கும் பகிர்ந்து இருக்கிறேன்.

  உண்மையில் நீட் என்பது பார்பன பயங்கரவாதமும் கார்பொரேட் தரகு முதலாளித்துவமும் இனைந்து இந்த நாட்டின் ஏழை எளிய மக்கள் மீது தொடுக்கும் யுத்தம் என்பதை மிக அருமையாக புரிய வைக்கிறார்.

  இதை இரண்டு மூன்று தொகுதிகளாக பிரித்து போட்டு இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

  ஏனெனில் இது ஒட்டுமொத்த உரைவீச்சில் தொடக்கத்தில் பேசிய உரைக்கான நியாயத்தை சிலப்பத்து நிமிடங்களுக்குப் பிறகு புரிந்து கொள்ளும் வாய்ப்பு மாற்றுக் கருத்து உள்ளவர்களுக்கு அளிக்கும் என்று நான் நபுகிறேன்.

  நன்றி.

  • நீட் திறமைசாலிகளை உருவாக்கும் என்பது ஒருவேளை உண்மை என்று நாம் வைத்து கொண்டால் அந்த திறமைசாலிகள் யாருக்கு சேவை செய்வார்கள் என்பதுடன் உரசி பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

   மருத்துவப்படிப்பு என்பது முதலாளித்துவ பத்திரிக்கைகள் சொல்லுவது போல வெறும்
   பல பில்லியன் டாலர் கொழிக்கும் தொழிலல்ல. அது உயிர்காக்கும் சேவை. சமூகத்தின் உயிர் வாழும் உரிமை மீதான சோதனை. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உயிர் வாழும் உரிமை உள்ளது என்று வாதிடுபவர்கள் மட்டுமே நீட்டை ஆதரிக்க முடியும் என்பது எனது கரத்து.

   ஏனெனில் ஒட்டுமொத்த இந்தியாவில் 80 விழுக்காடு மருத்துவர்கள் நகர்ப்புறங்களில் தான் பணிப்புரிகிறார்கள். 70-75% மக்கள் இருக்கும் கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. அனிதா போன்ற ஏழை எளிய பின்புலத்தில் இருந்து வரும் மாணவச்செல்வங்கள் ஒப்பீட்டளவில் தம்முடைய மக்களுக்கே சேவை செய்ய முன்வருவார்கள். எனில் அனிதா போன்ற மாணவர்களை உருவாக்க அரசு பள்ளிகள், இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி காக்கப்படவேண்டும். அப்போது தான் பல அணிதாக்கள் வருவார்கள். சமூகத்திற்கு சேவை செய்வார்கள்.

   அதிக மதிப்பெண் அல்லது கட்ஆப் எடுப்பது தான் திறமை என்றால் அது அந்த ஆகபெரும்பான்மையான மக்களுக்கு தேவையில்லை. அவர்களுக்குத் தேவை சமூகத்தின் மீது அக்கறைக் கொண்ட அவர்களுக்கு சேவையாற்றக் கூடிய மருத்துவர்களே. நீட் அந்த மருத்துவர்களை உருவாக்காது என்பதுடன் அதன் விளைவாக மருத்துவ சேவையில் இருந்து ஒட்டுமொத்தமாக துடைத்து எறியப்படுவார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

   தோழருக்கு நன்றிகள்!!!!

  • Selvam,

   // உண்மையில் நீட் என்பது பார்பன பயங்கரவாதமும் கார்பொரேட் தரகு முதலாளித்துவமும் இனைந்து இந்த நாட்டின் ஏழை எளிய மக்கள் மீது தொடுக்கும் யுத்தம் என்பதை மிக அருமையாக புரிய வைக்கிறார். //

   1) neet தேவையா (அல்லது) தேவையில்லையா என்பதை பற்றி விவாதிக்கலாம்

   2) neet ‘கார்போரேட் முதலைகளுக்கு’ லாபமா (அல்லது) நஷ்டமா என்பதை பற்றி விவாதிக்கலாம்

   ஆனால் இதில் பார்ப்பனீயம் எங்கே இருந்து வந்தது ?

   NEETஐ 2010ல் காங்கிரஸ் தான் கொண்டு வந்தது. அப்போது பிரதம மந்திரி மன்மோகன் சிங்’ எனக்கு தெரிந்த வரை அவர் பார்ப்பனர் இல்லை

   NEETக்கு 2016ல் விலக்கு கொடுத்து, இப்போது அதை முழுவதுமாக அமல்படுத்தியது மோடி அரசு. எனக்கு தெரிந்து மோடியும் பார்ப்பனர் இல்லை. அவர் RSS பின்புலத்தில் இருப்பதால் அவரை பார்ப்பனர் என்று வைத்து கொள்ளலாம்

   ஆனால், தமிழ்நாட்டிற்கு NEET தேவையில்லை என்று சொன்னது ‘ஜெயலலிதா’ தானே? ‘ஜெயலலிதாவின்’ ஜாதி என்ன ?

   வினவு இப்போது தன்னுடைய வழக்கமான அறைகூவலை தொடரலாம்

 2. நீதிமன்றத்தின் தவறுகளை பொதுவெளியில் நாம் விவாதிக்க வேண்டும்.

 3. Everything its okay, I too agree, to get 1179 marks, how much effort is needed.
  But due to NEET, many private hospital (medical college) NRI Sheets are not filled. Infact people may know where they will get M.B.B.S. admission in one exam.

  I have one suggestion. Without NEET exam we will put admission for MBBS based on 12th standard marks in throughout INDIA….

  Because my concern is people must know where they will get admission, without huge money demanding….

 4. மிகவும் அருமையான பதிவு.

  ஆர் எஸ் எஸ் பிஜேபி பார்ப்பன பாசிச அரசையும் இதற்க்கு எடுபிடியான எடப்பாடி அரசையும்,நீதிமன்றத்தையும் காரி உமிழ்ந்துள்ளார். அனைவரும் பார்க்கவேண்டிய பதிவு.

 5. பாஜக வின்நீடித்துவரும்கொள்கையின்நீட்சியே நீட்என்பதுபுரிகிறது கசாப்புகடையில்துவங்கி கல்விசாலைவரைநீள்கிறதைஉணரமுடியுது!இந்தபாஜகபோக்கிரித்தனத்தைகண்டு உறைந்துபோகமல் உழுக்கிஎடுக்கும்போராட்டங்களே உடனடிஅவசியம்!

 6. கேரளாவில் படிப்பறிவு பெற்றவர்கள் அதிகம் அதனால் அங்கு நீட்டை ஆதரிக்கிரோம்
  − கம்யூனிஸ்ட் கனகராஜ் புதியதலைமுறை விவாதததில்..!

 7. Excellent speech which is so informative. Will share with everyone. It’s time we stay together as one and fight against these tyrants. Sorry about posting my comments in English.

 8. மருதையன் ஐயா அருமையாகப்பேசினார்.

  அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகள் உச்சநீதி மன்றம் ..இவர்கள் தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறார். அது சரியல்ல.

  அந்தப்பெண்ணின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது அவருடைய பேச்சிலேயே உள்ளது. அதுவும் தொடக்கத்திலேயே.

  அனிதா இன்று உயிரோடு இருந்தால் “+ 2 வில் 1176 மார்க் வாங்கி, நீட் தேர்வில் பாசாகலேன்னா நீ அந்த மார்க் எப்படிவாங்கினேன்னு எனக்கு சந்தேகமா இருக்கு , நீ “அன் fஇட்” என்று பேசியிருப்பார்கள்” என்று அவரே கூறுகிறார். மருத்துவக் கல்லூரி இடமும் கிடைக்காத நிலையில் இதை அவள்நினைத்துப்பார்த்து இனி நான் எப்படி முகம் காட்டுவேன் என்று சுருங்கிப் போய் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

  அனிதாவின் மரணத்திற்கு அவள் கூச்ச சுபாவம் தான் காரணம்.

  அதனால் இனி ஊடகங்கள் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியரை , தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

  • அனிதாவின் மரணத்திற்கு அவள் கூச்ச சுபாவம் தான் காரணம்….
   இருக்கலாம்… எனக்குத் தெரியாது.
   ஆனால் உங்கள் சுபாவம் சற்றும்
   கூச்சனாச்சமில்லாமல் இருக்கிறதே..
   அதை முதலில் பரிசீலியுங்கள்.

   • இந்த விஷயத்தில் எனக்கு எதற்கு கூச்சம்? நானென்ன தவறு செய்தேன்? ஓராண்டு நீட் விலக்கு என்று நம்பிக்கை கொடுத்து அனிதாவை ஏமாற்றினேனா? வெளி உலகுக்கு அவளை எக்ஸ்போஸ் செய்து மன உளைச்சலுக்கு தள்ளினேனா? அவள் மரணத்தை என் பிரச்சாரத்திற்கு வசதியாக திரித்து பேசுகிறேனா? அதை வைத்து அரசியல் செய்கிறேனா?

  • பாஸ்…ரூம் போட்டு யோசிப்பீங்களோ…..

   நீட் இல்லாமல் இருந்தால் இந்நேரம் அனிதாவிற்கு மருத்துவ சீட் கிடைத்து இருக்கும்.

   அனிதா கூச்ச சுபாவம் உள்ளவளா இல்லையா என்பதா இன்றைய பிரச்சினை. இந்த கட்டமைப்பு தனக்கு நீதி வழங்கவில்லை என்பதை அறிந்து அதன் மீது காரி உமிழ்ந்துள்ளது அவளது தற்கொலை. அந்த எச்சில் உம்மீதும் விழுந்துள்ளது குறித்து நீங்கள் தான் கூச்சம் சற்றும் அற்றுபோய் பேசுகிறீர்கள்….

   அனிதாவிற்கு நீட்டினால் மருத்துவ சீட் கிடைக்கவில்லை. நீட்டோ அல்லது வேறு எந்த நுழைவுத் தேர்வு முறையோ படிப்பதற்கு எதற்கையா? ஏற்கனவே முப்பது நாப்பது ஆண்டுகள் பரிணாமம் அடைந்திருக்கும் நாட்டிலேயே சிறந்த கல்வி அமைப்பு இங்கே இருக்கிறது. அதில் சில பிரசியிகள் இருக்கலாம்.

   எந்த பாடத் திட்டம் சிறந்தது எந்த தேர்வு முறை சிறந்தது என்பதை நாம் முடிவு செய்ய வேண்டுமானால் உண்மையில் எதார்த்தத்தில் அந்த தேர்வு முறை என்ன கிழித்தது என்பதில் இருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது சி.பி.எஸ்.சியோ இல்லை நீட்டோ இங்கிருக்கும் கல்வி முறைக்கு கிட்ட நெருங்க முடியாது.

   அப்படி இருக்கும் போது கூச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டால் அனிதா என்று அபாண்டமாக கொஞ்சம் கூட வேட்கள் இல்லாமல் கூறுகிறீர்கள்.

   உங்களுக்கு அது இருக்கா என்று நான் கேட்கவில்லை. அனிதா கூச்சத்தினால் தான் தற்கொலை செய்து கொண்டாள் என்று கூறியதற்காக வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்டால் உங்களுக்கு குறைந்தது கூச்சம் இருக்கிறது என்று நான் கருத இடம் உண்டு..

   நன்றி.!!

 9. நண்பர் சிதம்பரநாதன் நிறையவே ஆழமாக பரிசீலியுங்கள்.பின்பு நீங்கள் அனிதாவை நினைத்தால் கொஞ்சமும் கூச்சமில்லாமல் பார்ப்பன பயங்கரவாதம் ஒழிக்க தயாராகிவிடுவீர்கள்.

 10. தமிழகத்தில் நடப்பது எல்லாம் வினோதமாக இருக்கிறது, எல்லோருமே தரமான நல்ல கல்வி வேண்டும் என்றே விரும்புவார்கள் ஆனால் நாம் தரமற்ற கல்வி தான் வேண்டும் என்று போராடுகிறோம் திறமையை வளர்த்துக்கொள்ளாமல் உயர் படிப்பு வேண்டும் என்று கேட்கிறோம்…

  • மணிகண்டன்,

   முதலில் தமிழகத்தில் இருப்பது தரமான கல்வியா இல்லையா என்பதை ஏனைய மாநிலங்களில் உள்ள கல்வி நிலையை ஒப்பிட்டு புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு சற்று உழைப்பு செலுத்த வேண்டும். உங்களிடம் அது இல்லை.

   உண்மையில் கல்வி என்பதை,

   ஒருவகையான விழிப்புணர்வு என்று எடுத்துக் கொண்டால் திணிக்கப்படும் ஒவ்வொரு அடக்குமுறையையும் எதிர்ப்பதில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

   சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பின்தங்கியுள்ள மக்களை முன்னேற்றுவதற்காண சமூக நீதியாக பார்த்தல் தமிழகத்தில்(குற்றம் குறைகள் இருந்தாலும்) பல்வேறு தரப்பு மக்களையும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்வதற்கான வாய்ப்பினை ஏனைய மாநிலங்களை விட சிறப்பாக அளிக்கிறது.

   கல்வி என்பது சமூகத்தின் முன்னேற்றதிர்கானது என்றால் ஆண்-பெண் சராசரி, பேறுகால இறப்பு விகிதம், ஆயுட்காலம், குழந்தைகள் இறப்பு விகிதம், சராசரி பள்ளியாண்டு, மக்களுக்கும் – மருத்துவர்/மருத்துவமனைகலுக்குமான விகிதாசாரம், மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரிகள்….உள்ளிட்ட அனைத்திலும் இந்தியாவில் எந்த மாநிலமும் குறிப்பாக ஹிந்தி பெல்ட் தமிழகத்திற்கு ஒப்பீட்டளவில் ஈடு இணை இல்லை.

   உண்மை கள நிலவரம் இப்படி இருக்கும் பிதுங்கிய மூளைக்கு கொஞ்சமாவது உழைப்பு செலுத்தினாலே போதுமே…..

   கல்வி என்றால் என்ன?

   நமது நாட்டின் கலாச்சராம், பண்பாடு என்ன?

   கல்வி கற்பதில் உள்ள சமூக பிரச்சினைகள் என்னென்ன?

   சமூக பொருளாதரத்தில் நமக்கு கீழே உள்ள மக்களை எப்படி நம்மோடு சேர்த்து அரவணைத்து கொண்டு போவது?

   அப்படி கல்வி கற்பது யாருக்கானது?

   நம்மில் ஒவொருவரும் தனிச்சிறப்பானவர்கள் எனில் எப்படி ஒவ்வொரு மாநில கல்வி முறையையும் ஒப்ப்டிவுவது சரியானது?

   சமூக சுகாதார குறியீடுகளில் நம்மை விட சிறந்த மாநிலங்கள் இருந்தால் அதில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டுமே ஒழிய அதையே இங்கு திணிப்பது எப்படி சரியாகும்.[அப்படி எதுவும் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் இல்லை. இருந்தால் கொடுங்கள்]

   வளரும் நாடுகளுக்கான சமூக சுகாதார குறியீடுகளில் தமிழகம் முன்னுதாரணமாக எப்படி
   இருக்கிறது?
   [https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5112973/]
   [http://www.deccanchronicle.com/140808/nation-current-affairs/article/tamil-nadu-healthcare-role-model-world-who]

   இதற்கெல்லாம் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். அப்படிதான் மனிதன் தோன்றினான்…நீங்க எல்லாம் எந்த லிஸ்டுல செத்துவதுனு தெர்ல……

 11. The main point on which the target to be focused, when it comes to NEET Issue, was very well discussed by our genius Mr.Maruthaiyan. One of the great speech I ever had before. This message has to reach all across Tamilnadu, let’s all try to circulate to all by all means.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க