privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதமிழகம் முழுவதும் ஏழாவது நாளாகத் தொடரும் மாணவர் போராட்டங்கள் ! !

தமிழகம் முழுவதும் ஏழாவது நாளாகத் தொடரும் மாணவர் போராட்டங்கள் ! !

-

மிழகத்தில் தொடர்ந்து 7 -வது நாளாக இன்றும் (07.09.2017) பல்வேறு இடங்களில் மாணவர்கள் அனிதாவின் படுகொலைக்கு காரணமான மோடி – எடப்பாடி கும்பலைக் கண்டித்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 5 -வது நாளாக (07.09.2017) புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் சுரேந்திரன் தலைமையில் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்.

***

கும்பகோணம் அரசு பெண்கள் கலைக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தங்களது போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்.

***

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் பு.மா.இ.மு தலைமையில் 6. 9.2017 மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராடினர். கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் முன்னணியாக இருந்த மாணவர்களை காவல்துறை மிரட்டியது.
அத்துடன் கல்லூரி நிர்வாகமும் இணைந்து இன்று போராட்டத்தை தொடரவிடாமல் தடுத்தது. இவற்றை அம்பலப்படுத்தி இன்று புமாஇமு சார்பில் நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அவற்றை கிழிக்கும் வேலையை போலீசு செய்து வருகிறது.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.

***

செய்யாறு அரசுக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நேற்று (06.09.2017) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. MODI government is targeting minority institutions in the name of NEET. Vellore CMC usually reserves 84 seats for the minority community (or the people who ever they wish). CMC will use the tax money of majority tax payers to educate the minority community. NEET is a major blow to CMC and other private institutions as they cannot make money using this NEET. MODI government should fund the minority colleges from majority tax payers and give exemption to CMC from NEET,so that more minority people can take away the chance of majority people and minority people and CMC can become richer.

    • அய்யா ராசா…..உமக்கு உண்மையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஆகும் அளவிற்கு மாட்டு மூளை இருக்குதயா.

      எப்படி மந்திரியாரே உமது மா மா மன்னனை போலவே யோசிக்கின்றீர்?

      கறுப்புப் பணத்தை பிடிக்க டெமோ
      தனியார் கொள்ளையை தடுக்க நீட்..

      ஆகட்டும்….தாரைத்தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா…..

      இப்போ தான் ரூம் போட்டு கண்டுபிடிசீங்களா? போன வருஷம் இதெல்லாம் தெர்லய உங்க காவிக் கலருக்கு?

      உண்மையிலேயே தனியார் மருத்துவ கல்லூரிகள் கொள்ளையடிக்க கூடாது என்றால அதற்கெல்லாம் மூடு விழா நடத்த வேண்டும். ஆங்காங்கே தமிழகம் போல
      பிற மாநிலங்களிலும் மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க வேண்டும். நல்ல மார்க் வங்குனவன் மட்டும் அங்க சேரனும். காசு இருக்குறவன் சேர கூடாதுனு சொல்ல சொல்ல வேண்டியது தானே. சும்மா பினதிகினு…..

      தமிழகத்து மக்களுக்கு தமிழ் தெரிந்த மருத்துவராக இருப்பது தான் சிறப்பு.
      ஆந்திராவுக்கு தெலுகு….
      அப்புறம் ஹிந்தி பெல்ட்டுக்கு ஹிந்தி….
      இது தானே சமூக நீதி.

      அப்போ தமிழகத்து பள்ளிக் கல்வி முறையில் இருந்து வருபவனுக்கு அதே முறையில் தான் தேர்வு வேண்டும். ஏற்கனவே பனிரெண்டு ஆண்டுகள் புடம் போட்ட ஒரு மாணவருக்கு எதுக்கு வாலாக நீட்.

      சும்மா CMC பிரச்சினை எல்லாம் நீங்க கிளப்பி விட்டு பிரச்சினைகளை திசை திருப்ப பார்க்கின்றீர்கள். அதுக்கெல்லாம் இது ஹிந்து/ஹிந்து பெல்ட் ஏரியா கிடையாது… இது தமிழ்நாடு…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க