Sunday, April 2, 2023
முகப்புமறுகாலனியாக்கம்கல்விசென்னை - திருச்சி - திருவாரூர் : நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டங்கள் !

சென்னை – திருச்சி – திருவாரூர் : நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டங்கள் !

-

சென்னையில் அனைத்து கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து நீட்டுக்கு எதிராக போராட்டம்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 07.09.2017 அன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பு.மா.இ.மு அறிவித்தது.

மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செல்வதை தடுக்க கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறை பல முயற்சிகளை செய்தது. அதையும் தாண்டி 200 -க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சில மாணவர்கள் “மாணவர்களில் நியாயமான போராட்டங்களை முடக்க போலீசு நினைக்கிறது. போராடும் மாணவர்களை மிரட்டுகிறது, கைது செய்து குண்டாஸ் போடுகிறது. போலீசு திருடர்களை பிடிக்க செல்லாமல் நாங்கள் என்னவோ குற்றம் செய்ததுபோல் எங்களைக் கைது செய்கிறீர்கள். எனவே இந்த போலீசு நியாயமான போராட்டத்திற்கு எதிரானது.

எனக்கு போராட்டம் நடத்த வேண்டும் என்ற உணர்வை அளித்தது இந்த பு.மா.இ.மு என்ற அமைப்பு தான். நாம் போராட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டத்தை நடத்த வேண்டும். ” என்று கூறினர்.

அதன்பின் போராசிரியர் சாந்தி மற்றும் பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் மாணவர்களிடையே எழுச்சி உரையாற்றினர்.

மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு அரசு அஞ்சுகிறது. தமிழகத்தில் மோடியின் அடக்குமுறைச் சட்டங்கள் ஒருபோதும் செல்லுபடியாகாது என்பதை இந்த போராட்டங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

***

திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரியில் நீட்டுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் பு.மா.இ.மு. சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டுவருகின்றது. அதன் தொடர்ச்சியாக திருச்சியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து கடந்த 09.09.2017 அன்று பேரணி நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி.

***

மாணவி அனிதாவை படுகொலை செய்த மத்திய மாநில அரசுகள் மற்றும் உச்சிக்குடுமி மன்றத்தைக் கண்டித்தும், நீட் தேர்வை எதிர்த்தும், திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து 07.09.2017 அன்று காலை பு.மா.இ.மு. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சுமார் 700 மாணவர்கள் கலந்துகொண்ட மறியல் போராட்டத்தால் திருவாரூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஸ்தம்பித்தது. பு.மா.இ.மு. மாணவர்கள் ஐந்து பேர் மீது மறியல் செய்ய மாணவர்களை “தூண்டினார்கள்” என கொரடாச்சேரி போலீசார் 10.09.2017 அன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மறியலுக்கே வழக்கென்றால், சிறுமியை கொடூரமாக கொலை செய்த இந்த அரசமைப்பை தூக்கிலிட வேண்டுமல்லவா!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர் .

_____________

இந்த போராட்டச் செய்திகள் உங்களுக்கு பயனளித்தனவா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. கடந்த வருடம் MBBS சேர்ந்த தலித் மாணவர்கள் 94 இந்த வருடம் நீட் வழி MBBS தலித் கோட்டாவில் சேர்ந்த தலித் மாணவர்கள் 135. Open Category யில் சேர்ந்த தலித் மாணவர்கள் 36 மொத்தம்(135+36)= 171 இப்போது சொல்லுங்கள் எது சமூக நீதி…? தலித்கள் பாதிக்கப்படுவார்கள்எனச் சொல்லியே மூளைச்சலவை செய்து அவர்களை வைத்தே சுயநலப் போராட்டத்தைநடத்துவது அரசியல் கட்சிகளின்நோக்கம்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க