த்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதை கண்டித்து சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டும் சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி. சேகர் வீட்டின் முன்பும் பத்திரிக்கையாளர்கள் இன்று மாலை போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய பத்திரிக்கையாளர்களை கைது செய்த போலீசு இதுவரை அவர்களை வி்டுவிக்கவில்லை. ஆனால், குற்றவாளி எஸ்.வி.சேகர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சென்னை தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா அலுவலக முற்றுகை போராட்டத்தில் பத்திரிக்கையாளர்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளர் திரு.குமரேசன்.

“பா.ஜ.க.வில் உள்ள பெண்களே மௌனம் கலையுங்கள் என்ற பதாகையுடன்”  பத்திரிக்கையாளர் கவின்மலர்.

”தனது தட்டில் என்ன உணவு இருக்கிறது என்பதை பார்க்காமல் அதை சாப்பிடுவாரா எஸ்.வி.சேகர்” – ஆவேசமாக கேள்வியெழுப்பும் ஊடகவியலாளர் ஜெனிஃபர் வில்சன்.

எஸ்.வி. சேகர் வீட்டின் முன் முழக்கமிடும் பத்திரிக்கையாளர்கள்.

பா.ஜ.க.-வில் தனது பூணூல் செல்வாக்கை விளம்பரப்படுத்தும் எஸ்.வி.சேகர்.

நாய்கள் ஜாக்கிரதை: வீட்டிற்குள் தான் இருப்பாரோ சேகர்…

பத்திரிக்கையாளர்களின் முற்றுகையை கலைக்க முயலும் போலீசார்.

”உன்னைப் போல் எங்களையும் மானங்கெட்டவர்கள் என்று நினைத்தாயா?” கேள்வியெழுப்பும் பத்திரிக்கையாளர்கள்.

எஸ்.வி.சேகரின் மானம் (அவருக்கு இல்லாத ஒன்று) கப்பலேறுவதை வேடிக்கை பார்க்கும் அண்டைவீட்டார்.

பத்திரிக்கையாளர்களைக் கைது செய்யும் போலீசு.

செய்தி – படங்கள்: வினவு செய்தியாளர்

3 மறுமொழிகள்

  1. கொங்கு பெண்: இப்ப எதுக்கு போராட்டம் பண்ணிட்டிருக்கீங்க?

    பத்திரிகையாளர்கள் :
    எஸ்வி சேகர் பெண் பத்திரிகையாளர்கள் எல்லாம் பெரிய ஆளுங்க கூட படுத்துதான் மீடியா சான்ஸ் வாங்குறாங்கன்னு சொல்லியிருக்கார் அதான் போராட்டம்

    கொங்கு பெண்: இதுல என்ன தப்பிருக்கு அவருக்கு தன்னோட கருத்தை சொல்ல உரிமை இல்லையா? இதானே கருத்து சுதந்திரம்

    பத்திரிகையாளர்கள் : ஹலோ என்ன பேசுறீங்க? பெண்கள் மத்தவங்க கூட படுத்துதான் சான்ஸ் வாங்குறாங்கன்னு சொல்றதுதான் கருத்து சுதந்திரமா

    கொங்கு பெண்: என்ன இப்படி பேசுறீங்க? திருச்செங்கோடு பெண்கள் கோவில் திருவிழாவின் போது வேற ஆம்பளைங்க கூட படுத்துதான் பிள்ளையை பெத்துக்குறாங்கன்னு பெருமாள் முருகன் எழுதுனதை கருத்து சுதந்திரம்னு நீங்க தானே சொன்னீங்க? ??

    ஏன் ஓடுறீங்க🏃‍♂🏃‍♂🏃‍♂ பதில் சொல்லிட்டு ஓடுங்க…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க