தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு ! சென்னையில் மக்கள் அதிகாரம் கூட்டம் | வினவு நேரலை | Vinavu Live

சென்னை சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் அரங்கக் கூட்டம், 26-08-2018 மாலை 4 மணி முதல் வினவு இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

தூத்துக்குடி சதி வழக்கு: தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டாஸ், சிறை சென்ற போராளிகளுக்கு வரவேற்பு !  விடுவித்த வழக்கறிஞர்களுக்கு நன்றி !

அரங்கக்கூட்டம் – வினவு நேரலை

26.08.2018 | ஞாயிறு மாலை 4 மணி,
சென்னை நிருபர்கள் சங்கம்,சேப்பாக்கம், சென்னை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்களை முடக்கவும், போராட்ட முன்னணியாளர்கள், ஆதரவாக நின்ற வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆகியோர் மீது பொய் வழக்குகள் போட்டு தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்தது போலீசு.

இதனை எதிர்த்துப் போராடிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு நன்றியும் சிறை சென்று வெளியில் வந்த போராளிகளுக்கு வரவேற்பும் அளிக்கும் வகையில் ஒரு அரங்கக் கூட்டம் சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் இன்று (26.08.2018) மாலை 4.00 மணியளவில் மக்கள் அதிகாரம் சார்பில் நடக்கவிருக்கிறது.

 

இக்கூட்டத்தின் நேரலை ஒளிபரப்பு வினவு இணையதளத்திலும், ‘வினவின் பக்கம்’ முகநூல் பக்கத்திலும், யூ-டியூப்-லும் ஒளிபரப்பப்படும்.

7 மறுமொழிகள்

  1. திட்டமிட்டு கலவரத்தை தூண்டிய உங்களை போன்றவர்களின் பொய்களை ஒருவரும் நம்ப போவதில்லை… சமூகவிரோதிகளுக்கு எடுத்துக்காட்டாக வினவு கூட்டங்கள் இருக்கிறது.

    • தாங்கள RSS,பா.ஜ.க., ஸ்டெர்லைட் ஆகியவற்றின் “கைக்கூலிதான்” என்பதை அழகாக ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்தது மிகவும் சிறப்பு.
      பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🍟
      உண்மையான மக்கள் துரோகியும் தாங்கள்தான்…..

      • தூத்துக்குடி கலவரத்திற்கு முன்பே போராட்டத்தின் பின்னணியில் வினவு கூட்டங்கள் இருக்கிறது என்று சொன்னேன் நான் சொன்னது உண்மை என்பதை தூத்துக்குடி வன்முறை நிரூபித்து இருக்கிறது.

  2. Vedanta Ltd Chairman’s speech delivered at its 53rd AGM is published in all business newspapers. today(27th August)Normally,any significant development in the company will be informed to the shareholders by the Chairman in the AGM.But the Chairman of Vedanta Ltd has not informed about the closure of the Sterilite plant at Tuticorin and the reasons for closure.The tragic loss of lives there is mentioned just as a passing reference.On the other hand,the Chairman has stated,”Your company has been instrumental in the socio-economic transformation of the region.Our copper smelter strongly complies with all environmental norms and is amongst the best globally”At the bottom of the published speech,there is an image of a smiling young girl with following lines printed under the image-“Safe drinking water to millions through our CSR initiatives”What an irony?

Leave a Reply to Mayilsamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க