மதுரை: மார்ச் 08 – சர்வதேச பெண்கள் தினத்தை உயர்த்திப் பிடிப்போம்!

சர்வதேச பெண்கள் தினத்தை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் மார்ச் 8, 2023 அன்று மதுரையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

ர்வதேச பெண்கள் தினத்தை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் மார்ச் 8, 2023 அன்று மதுரையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர் உமா தலைமை தாங்கினார்.

அவர் தனது தலைமை உரையில், “மார்ச் 8 பெண்கள் தினமான வரலாறைப் பற்றி கூறினார். டென்மார்க்கில் கிளாரா ஜெட்கின் தலைமையில் பெண்கள், அணி திரண்டு எட்டு மணி நேர வேலை, ஆண்களுக்கு நிகரான ஊதியம், மற்றும் ஓட்டுரிமை இன்னும் இதர கோரிக்கைகளை முன்வைத்து முதல் மாநாடு கோரிக்கை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து 1917-இல் ரஷ்யாவில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சியினால் ஜார் மன்னன் வீழ்த்தப்பட்டு சோசலிச அரசு அமையப்பெற்றது. அதில், தோழர் லெனினிடம் கிளாரா பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில், பெண்கள் திரளாக உரிமைக்காகப் போராடிய  மார்ச் 8 தேதியை கொண்டாட வலியுறுத்தினார்.

அதிலிருந்து சோசயலிஸ்ட்கள் பெண்கள் தினமாக மார்ச் 08-ஐ கொண்டாடி வந்தனர். பின்னர் ஐ.நா சபையில் பெண்களுக்கான தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை எழவே, ஏதேனும் ஒரு மாதத்தில் கொண்டாடிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள், பின்னர் சோசலிச நாடுகளில் கொண்டாடுவதைப் போன்று உலகம் முழுமைக்கும் மார்ச் 8 தினத்தையே பெண்கள் தினமாக  கொண்டாட முடிவு செய்தனர். அதனால் இன்று முதலாளித்துவ நாடுகளும், இரண்டாம் உலக நாடுகளும் இன்று மார்ச் 8 உலக பெண்கள் தினமாகக் கொண்டாடி வருகின்றனர்” என்றார்.

படிக்க : ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்? | தோழர் மருது வீடியோ

டாக்டர் பிசியோதெரபி செல்வி அவர்கள் தனது உரையில், “பெண் என்பவள் தெய்வத்திற்கு இணையானவள் என்று புனிதப்படுத்தி ஒதுக்கி வைக்கின்றார்கள். பார்ப்பனியம் பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பகிர்ப்பு என்ற குனங்கள் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இது பெண் என்பவள் அச்சப்பட்டு அடங்கி ஒடுங்கி இருக்கவும், இத்துடன் அறிவாக இருக்கக் கூடாது அதற்காக “மடம்” மடத்தனமாக இருக்க வேண்டும் என்றும், நானம் என்றால் கூச்சப்படக் கூடியவளாக இருக்கவும், பகிர்ப்பு என்றால் அழுக்கு என்று அர்த்தம் வருகிறது பெண் குளித்து இருந்தாலே முன்னொரு காலத்தில் மாமியார்கள் அப்பெண்ணை தவறுதலாக பேசுவார்கள் அதனால் பெண் வீட்டில் குளித்து இருக்கக் கூடாது என்றும், இவ்வாறு பெண் என்பவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு பார்ப்பனியம் கூறுகிறது.

அத்துடன் கார்ப்பரேட் நுகர்வு கலாச்சாரத்தில் விளையாட்டு சாமான்களில் கூட ஆண் குழந்தைகளுக்கு தைரியமான, கம்பீரமான, புஜபலமிக்க பொம்மைகள் தயாரிக்கப்படுகிறது. அதைத்தான் ஆண் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு சாதுவான கலர் பொம்மை வாங்கி கொடுக்கிறார்கள். அந்த பொம்மைக்கு ஷூ டிரஸ் பராமரிக்கும் வேலையையும் சேர்த்து பெண்களுக்கு கொடுக்கிறார்கள். அதேபோன்று கிண்டர் ஜாய் சாக்லேட்டில் ஆண் குழந்தைகளுக்கு ஊதா கலர் பெண் குழந்தைகளுக்கு பிங்க் கலர் வாங்கி கொடுக்கிறார்கள். இதை கலர் மாற்றி வாங்கிக் கொண்டால் சக ஆண் குழந்தைகளே கேலி செய்கிறார்கள். இவ்வாறான உளவியல் ஆண், பெண் பேதத்துடன் தான் இந்தப் பார்ப்பனிய கார்ப்பரேட் சமூகம் இயங்குகிறது.” என்றார்.

தோழர் ராமலிங்கம் தனது உரையில், “மார்ச் 8 இன்று எப்படி கொண்டாடப்படுகிறது, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை வழமையாக பேசுவதைப் போன்று பேசுவதுதான் உள்ளது. அத்துடன் மற்ற தினங்களைப் போன்று இதுவும் ஒரு தினம் என்ற அளவில் மட்டுமே கொண்டாடப்படுகின்றது. பெண்களை கவுரவிப்பதும், பிரபல கலையரங்கு, ஹோட்டல் போன்ற இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நடத்தி பெண்களுக்கெதிரான கருத்துக்களை அநீதிகளை பேசிவிட்டு செல்கின்றன.

ஆனால் இன்றும் பெண்களை ஆண்களுக்கு நிகராக சக மனிதனாக பார்ப்பதற்கு இந்த சமூகம் அனுமதிக்கவில்லை. அதற்கு இந்த அரசும் அரசு கட்டமைப்பும் முக்கியமான காரணம் ஏனென்றால் இன்று உள்ள அரசு கட்டமைப்பில் இயல்பாகவே ராணுவம், போலீஸ் இன்னும் இதர துறைகளில் பெண்கள் சமமாக நடத்தப்படுவதில்லை, அவர்கள் மீதான பாலியல் வன்முறை, உழைப்புச் சுரண்டல், பணியிடங்களில் பாதுகாப்பற்ற சூழல் என அனைத்து வடிவங்களிலும் பெண்கள் மீது ஒடுக்குமுறை நடந்த வண்ணம் உள்ளது.

படிக்க : ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு ஓடு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

பெண்களை ஒரு அடிமையாக, நுகர்வு பொருளாகதான் இந்த சமூகம் நடத்துகிறது. ஆண்களைப் போன்று பெண்களும் தனக்கான சம அந்தஸ்து பெறக்கூடிய அரசியல், பொருளாதார, சமூக சூழ்நிலையை பெற இந்த அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக இன்றைய ஆளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிச அரசு பிரித்தாலும் சூழ்ச்சியை கையில் எடுத்து உழைக்கும் மக்களை சாதி, மத, இன அடிப்படையில் பிரித்து மோதவிடும் கொடூர செயல்களை செய்து வருகிறது. அதில் இஸ்லாமிய மத வெறுப்பு பிரச்சாரம் செய்து இஸ்லாமிய மக்களை படுகொலை செய்கிறது.

தமிழ்நாடு உட்பட பல இடங்களில் பல சாதிய மோதல்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படுகிறது. சீமான் போன்றவர்களை வைத்து உழைக்கும் தொழிலாளர்களை இனரீதியாக பிரிக்கும் ஒரு பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்து செல்கிறது. அத்துடன் மக்களை பிரிவினைவாத அடிப்படையில் இன மோதல்களை தூண்டிவிட்டு தமிழகத்தை கலவரக்காடாக மாற்றத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல்.

பெண்கள் சமூக விடுதலை அடைய வேண்டுமெனில் இந்த ஆர்எஸ்எஸ்-பிஜேபி அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்கான போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்தியுடன் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும். சமூக  விடுதலையே பெண்கள் விடுதலை” என்றார்.

தகவல்: ம.க.இ.க, மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க