08.03.2023
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு ஓடு!
47 பேரின் சாவுக்கு ரவியே முழு பொறுப்பு!
கண்டன அறிக்கை
தமிழ்நாடு அரசின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பியுள்ளார் ஆர்.என்.ரவி.
நேற்றைய தினம்(07.03.2023) வரை இந்த சட்ட மசோதா பற்றி வாய் திறக்காத ரவி தான் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு முதலாளிகளிடம் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தார்.
கடந்த 142 நாட்களில் மட்டுமே ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 47 பேர்.
இந்த 47 பேரின் சாவுக்கு ரவி மட்டுமே பொறுப்பு. தமிழ்நாட்டுக்கு சவால் விடும் வகையில் இணை ஆட்சி நடத்திக் கொண்டு எவன் செத்தால் நமக்கென்ன என்று தமிழ்நாட்டையும் தமிழையும் தமிழர்களையும் ஒழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பாசிச உளவாளி ரவியை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
பாசிச ரவியின் இப்படிப்பட்ட மக்கள் விரோத செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள்தான் பாசிச பாஜகவும் அதிமுகவும்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும் ஒழித்துக் கட்டுவதற்கும் பாசிச உளவாளிகளை ஆளுநர்களாக நியமித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பல். இந்த ஆளுநர்கள் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புக்கள் வழியே கூறிய போதும் அதை மயிரளவுக்கு கூட மதிக்காமலேயே செயல்பட்டு வருகின்றனர் ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஆளுநர்கள்.
20-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு அரசின் சட்ட மசோதாக்கள் பதில் ஏதும் கூறாமல் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தின்று கொழுத்து உல்லாச வாழ்வு வாழும் ரவி, தமிழ்நாட்டுக்கு எதிராகவே செயல்பட்டு தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் சவால் விடுகிறார்.
பார்ப்பன இந்து மதவெறியர்களை அழைத்துக் கொண்டு வந்து போதனை கூட்டங்கள் நடத்துவதும் தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து வன்மத்தை கக்குவதும், பாஜகவில் உள்ள தலைவர்களுக்கும் ரவுடிகளுக்கும் பொறுக்கிகளுக்கும் ஆலோசனைகள் வழங்குவதும் பாதுகாப்பதும் மத்திய அரசுப் பணியில் உள்ள தமிழ்நாட்டின் அதிகாரிகளை மிரட்டி கொண்டிருப்பதுமே ஆர்.என்.ரவியின் தலையாயக் கடமையாக இருக்கிறது.
நாகலாந்தை போல பாசிச உளவாளி ரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டே விரட்டி அடிக்கப்பட வேண்டும். அவ்வாறு விரட்டியடிக்கப்படுவதானது ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச எதிர்ப்பில் முக்கிய மைல்கல்லாகவே இருக்கும் என்றும் அதற்கான போராட்டங்களை தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321