ரிந்து சாம்பலாவதற்கான அத்தனை சாத்தியங்களோடும் இருக்கிறது பா.ஜ.கவின் பாசிச எதேச்சாதிகாரம். அந்த அதிகாரத் தோரணையும் திமிரும் சுடுகாட்டு மேடையின் மீது கிடத்தப்பட்டு விறகுகளும் அடுக்கப்பட்டு விட்டன. அதன் மேல் முதல் தீக்கனலை தூக்கிப் போட்டுள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் லூயி சோஃபியா.

கனடாவில் கணித ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர் சோஃபியா, விமானத்தில் தூத்துக்குடி வந்துள்ளார். அதே விமானத்தில் பா.ஜ.கவின் தமிழிசை சௌந்திரராஜனும் பயணித்துள்ளார். விமானத்தை விட்டிறங்கி பயணப் பைகளைப் பெற்றுக் கொள்ளும் இடத்தில் “பாசிச பா.ஜ.க அரசு ஒழிக” என்று தமிழிசையைப் பார்த்து முழக்கமிட்டுள்ளார். 13 உயிர்களைப் பலி கொடுத்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அந்த இயல்பான நியாயமான கோபத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் சொர்ணாக்கா தமிழிசைக்கு அது புரிய நியாயமில்லை. முழக்கமிட்ட போது அமைதியாக இருந்த தமிழிசை, விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்திருந்த கட்சி குண்டர்களைப் பார்த்த பின் தைரியம் வந்து பொங்கியுள்ளார். சோஃபியாவைக் கும்பலாகச் சூழ்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க ரவுடிகள், இழிவான வார்த்தைகளால் சோஃபியாவை திட்டியதோடு அடிமை அரசின் காவல் துறையிடம் முறையிட்டு கைது செய்ய வைத்துள்ளனர்.

சோஃபியா கைது செய்யப்பட்ட செய்தி தமிழ்நாட்டின் சொரணை உணர்ச்சியை சீண்டி விட்டது. விளைவு, சமூக வலைத்தளங்களில் பா.ஜ.கவை கழுவி ஊற்றி வருகின்றனர் மக்கள். விமான நிலையத்தோடு முடிந்திருந்தால் சோஃபியா என்கிற ஒரு மாணவரின் ஒரே ஒரு முழக்கத்தோடு போயிருக்கும். ஆனால், அதைக் கிளறி நாடெங்கும் பல லட்சம் மக்களின் வாயில் பா.ஜ.கவை விழ வைத்ததற்காக தமிழிசைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம் – மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் தொகுப்பைப் பார்ப்போம்