ரிந்து சாம்பலாவதற்கான அத்தனை சாத்தியங்களோடும் இருக்கிறது பா.ஜ.கவின் பாசிச எதேச்சாதிகாரம். அந்த அதிகாரத் தோரணையும் திமிரும் சுடுகாட்டு மேடையின் மீது கிடத்தப்பட்டு விறகுகளும் அடுக்கப்பட்டு விட்டன. அதன் மேல் முதல் தீக்கனலை தூக்கிப் போட்டுள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் லூயி சோஃபியா.

கனடாவில் கணித ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர் சோஃபியா, விமானத்தில் தூத்துக்குடி வந்துள்ளார். அதே விமானத்தில் பா.ஜ.கவின் தமிழிசை சௌந்திரராஜனும் பயணித்துள்ளார். விமானத்தை விட்டிறங்கி பயணப் பைகளைப் பெற்றுக் கொள்ளும் இடத்தில் “பாசிச பா.ஜ.க அரசு ஒழிக” என்று தமிழிசையைப் பார்த்து முழக்கமிட்டுள்ளார். 13 உயிர்களைப் பலி கொடுத்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அந்த இயல்பான நியாயமான கோபத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் சொர்ணாக்கா தமிழிசைக்கு அது புரிய நியாயமில்லை. முழக்கமிட்ட போது அமைதியாக இருந்த தமிழிசை, விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்திருந்த கட்சி குண்டர்களைப் பார்த்த பின் தைரியம் வந்து பொங்கியுள்ளார். சோஃபியாவைக் கும்பலாகச் சூழ்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க ரவுடிகள், இழிவான வார்த்தைகளால் சோஃபியாவை திட்டியதோடு அடிமை அரசின் காவல் துறையிடம் முறையிட்டு கைது செய்ய வைத்துள்ளனர்.

சோஃபியா கைது செய்யப்பட்ட செய்தி தமிழ்நாட்டின் சொரணை உணர்ச்சியை சீண்டி விட்டது. விளைவு, சமூக வலைத்தளங்களில் பா.ஜ.கவை கழுவி ஊற்றி வருகின்றனர் மக்கள். விமான நிலையத்தோடு முடிந்திருந்தால் சோஃபியா என்கிற ஒரு மாணவரின் ஒரே ஒரு முழக்கத்தோடு போயிருக்கும். ஆனால், அதைக் கிளறி நாடெங்கும் பல லட்சம் மக்களின் வாயில் பா.ஜ.கவை விழ வைத்ததற்காக தமிழிசைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம் – மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் தொகுப்பைப் பார்ப்போம்

19 மறுமொழிகள்

 1. பத்து வருடங்களுக்கு முன்பே மக்கள் கலை இலக்கிய கழகம்(ம.க.இ.க) நடத்திய பார்ப்பன பாசிச எதிர்ப்பு மாநாட்டில் தமிழகத்தில் பார்ப்பன பாசிசத்திற்க்கு கல்லறை கட்டுவோம் என்று முழங்கிய கோஷம் இன்று மக்களின் விருப்பமான முழக்கமாக மாற்றம் பெறுகிறது!
  ம.க.இ.க க்கு வாழ்த்துக்கள் 🍟🙏👍

 2. நீதிபதி: சோபியாவின் பெற்றாரிடம் “மகளுக்கு அறிவுரை கூறுங்கள்”.

  இந்தியா பெற்றார்கள்:YES OK YOUR HONER “பாசிச பா.ஜ.க ஒழிக” 👍

 3. நீதிபதி: சோபியாவின் பெற்றாரிடம் மகளுக்கு அறிவுரை கூறுங்கள்.

  இந்தியா பெற்றார்கள்:YES YOUR HONER: மகள்களே,மகன்களே
  ” பார்ப்பனீய பாசிச பா.ஜ.க.ஒழிக”👍

 4. சோபியா இன்று முதல் வானுர்தி நக்ஸலைட் என அனைவராலும் அன்போடு அழைக்கபடுவார்!

 5. இந்த இருண்ட வேளையில் ஜெர்மனியின் பாசிச எதிர்ப்பு போராளி சோபியா ஸ்கோல் நம்முன் வருகிறாள். பாசிச இட்லரின் நாஜிக் கட்சிக்கு எதிராக வெள்ளை ரோஜா என்ற இயக்கத்தை நடத்திய குற்றச்சாட்டில் சோபியாவும் அவளது அண்ணன் ஹான்ஸ் இருவரும் தூக்கில் இடப்பட்டனர். அவள் குடும்பத்தையே இட்லரின் ஏவல் படைகள் அழித்தனர். மாணவர்களைக் கண்டால் நடுங்கும் நாஜிக்கள் சோபியாவை ஒரு உதாரணமாக காட்டி இனியாரும் நாசிகளை எதிர்த்துப் பேசக்கூடாது என்ற காரணத்தால் அவளை கொன்றார்கள். சோபியாவை விசாரித்த நீதிபதி நாசிகளின் கைததடி ப்ரிஸ்லர் அவளை தலையை வெட்டி தூக்கிலிட ஆணையிட்டான்.

  இதோ சோபியாவின் விசாரணையும் தீர்ப்பும் இங்கே:

 6. கிறிஸ்துவ மதமாற்ற கூட்டங்களின் பிஜேபி வெறுப்பு கடல்தாண்டியும் பயணித்து இருக்கிறது. அதாவுது இந்த மதமாற்ற கூட்டங்களின் அநியாயங்களை பிஜேபி எதிர்ப்பதால் அவர்களுக்கு கோபம் வருகிறது அதை சோபியா காண்பித்து இருக்கிறார். இந்த மாதமாற்ற கூட்டங்களுக்கு கம்யூனிஸ்ட் சிங்கிகள் தாளம் தட்டுகிறார்கள்… தேசவிரோதிகள் அனைவருக்கும் அயோக்கிய கம்யூனிஸ்ட் என்றும் துணையிருப்பான்.

  • இதைத்தான் பாசிசம் ன்னு சொல்றோம்… உங்களை எதிர்த்தால் தேசவிரோதி…

   மீண்டும்#பாசிச பாஜக ஆட்சி ஒழிக

   • உங்களை போன்றவர்கள் (போலியாக) மதவாதத்தை எதிர்க்கிறோம் என்று சொன்னால் அது முற்போக்காம் அதுவே நாங்கள் தமிழக மக்களுக்கு ஆபத்தாக வளர்ந்து நிற்கும் கிறிஸ்துவ மதவாத செயலை எதிர்த்தால் அது பாசிசமா ??? உங்க காமாலை பார்வை மிக மோசமாக இருக்கிறது.

    ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்லலாம் இந்த கிறிஸ்துவ இஸ்லாமிய கம்யூனிச மதவாத பயங்கரவாத சக்திகளால் தமிழகத்தில் மிக மோசமான மதப்பிரிவினை வளர்க்கபடுகிறது. என்னை போன்ற சாதாரண மக்களுக்கு பிஜேபி என்றால் யார் என்றே தெரியாதவர்களிடம் இந்த கிறிஸ்துவ மதவாதத்தை எதிர்த்து பிஜேபிக்கு வாக்கு அளித்தால் என்ன எண்ணத்தை வளர்க்கிறார்கள்.

 7. ஒழிகாகப்பட வேண்டிய பாசிச தேசவிரோத இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க.வை.ஒழிக என தனியாளாகமுமழக்க மிட்ட வீர தமமிமழசி ஜோஃபியா விறகு எனது பாராட்டுகள் இனி இந்த பஸிஸ்ட்டுகளை காணும் இடமெல்லாம் தமிர்கள் மட்டுமிண்றி அணைத்து உழைக்கும் மக்களும் விரட்ட இதனை உலகறியச் செய்ய வேண்டும்

 8. திடுமென வெளிப்பட்ட தீப்பொறி

  சோபியா!
  உன் முழக்கம்
  இருள் கவிந்த வெளியில்
  திடுமென பளிச்சென்று
  வெளிப்பட்ட தீப்பொறி

  ஒரு எரிமலை
  கொதித்து வெளி கிளம்ப போவதன்
  அறிகுறி

  உன் முழக்கம்
  வெறும் வார்த்தைகளின் குவியல்
  அல்ல

  ஆதிக்கத்தின் கரங்கள்
  அன்று
  தூத்துக்குடியில் தூக்கி பிடித்த
  துப்பாக்கி சனியன்களில் இருந்து
  வெளிப்பட்ட ரவைகளுக்கு
  எதிராக இப்பொழுது
  விர்ரென்று சீறிய
  நியூட்டனின் மூன்றாம் விதி

  மாட்டு கறியை முன்னிறுத்தி
  மனிதக்கறி கேட்டு
  பல்லிளித்த பாசிசங்கள்

  ஒற்றை பண மதிப்பு இழப்பு உத்தரவால்
  ஓட்டு மொத்த தேசத்தையே
  தெருவில் இழுத்துவிட்ட கொடூரங்கள்

  தலித்துகளும் முஸ்லீம்களும்
  இந்த மண்ணில் தொடரந்து
  மதவெறிக்கு பலியிடப்படும் கொடுங்கோன்மை கள்

  இவற்றையெல்லாம் இவற்றையெல்லாம்
  நீதிதேவதை கண்டிருந்தால்
  நீதிதேவதை என் றொருத்தி உண்மையென்றால்

  அவள் கண்களில் இருந்து
  ஒரு ஜீவநதியே புறப்பட்டு இருக்கும்
  இமயத்தையே சிறு கல்லென புரட்டி போட்டு இருக்கும்

  எனில்
  உன்னில் இருந்து
  உயிர் பெற்ற சொற்கள்
  சட்டத்திற்கு புறம்பாவது எப்படி?
  தர்மத்திற்கு தீங்காவது எங்கனம் ?

 9. பாசீச ஒடுக்குமுறையை, அதன் காட்டுமிராண்டித்தனத்தை நேரடியாக எதிர்கொண்டு வீழ்த்திய.. தோழர் சோபியா..

 10. பாசீச ஒடுக்குமுறையை, அதன் காட்டுமிராண்டித்தனத்தை நேரடியாக எதிர்கொண்டு வீழ்த்தியது சோபியாவின் முழக்கம்

 11. இப்ப news7la விவாத நிகழ்ச்சி பார்த்தேன்.bjp narayanan,a ctor Kasturi இவங்க தமிழிசைய ீ. ஆதரிக்கறத வழக்கமானதுதான.ஆனா பெரியாியலாளர்னு சொல்லிட்டு ஓவியா தமிழிசைய ஆதரிக்கறத பார்த்தாதா ஆத்திரமா வருது.நல்ல வேளை இத பார்க்க பெரியார் இல்ல.இவங்க தமிழிசைய ஆதரிக்க காரணம் அவங்க ஒரு பெண்ணாம்.அதனால பெண்ணியம் அடிப்படையில் ஆதரிக்கறதா சொண்ணாங்க.பாவம் சோபியாவும் ஒரு பெண்ணுங்கறத மறந்துட்டாங்க ி

 12. அணிதா இறக்வில்லை அவள் விதைக்கப்பட்டாள் இன்று ஜோஃபியா வாக விளைந்துள்ளாள் இனி ஒன்று ஓராயிரமாகி உரைக்கும் பாசிச பா.ஜ.க ஒழிக என்று. ….
  தோழமையுடன்
  நந்தன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க