ஆழி செந்தில்நாதன் மோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதில் என்ன வேடிக்கையென்றால், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, வங்காள மொழிகளில் Statue of Unity மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.

தமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இது “ஸ்டேட்டுக்கே ஒப்பி. யூனிட்டி” என்று ஆகியிருக்கிறது!

(அரபி, உருது படிக்கமுடியவில்லை)

பாவிகளா, Google Translate இல் போட்டுப்பார்த்தால்கூட “ஒற்றுமை சிலை” என்று சரியாக வருகிறது.

சரிதான். இந்திக்கும் குஜராத்திக்குமே இந்த நிலைதான் என்றால், தமிழுக்கு கேட்பானேன்!

படிக்க:
சர்கார் படம் : கள்ள ஓட்டுக் கதை கள்ளக் கதையானது | வீடியோ | கருத்துக் கணிப்பு
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

பாவம், இந்தியை ஆதரித்த குஜராத்தியான பட்டேல். பரிதாபம், இந்திவெறிபிடித்த குஜராத்தி மோடி!

இந்த ஒலிபெயர்ப்பு விவகாரம் திட்டமிட்ட அவமதிப்பு இல்லை (ஏனென்றால் இந்தி. குஜராத்தியிலும் ரஷ்யனிலும்கூட அது ஒலிபெயர்க்கப்பட்டிருக்கிறது).

ஆனால் இது மிகமோசமான அலட்சியத்தின் வெளிப்பாடு. இந்தியாவின் “ஆட்சி” மொழிக்கே இந்த கதி என்றால் இந்த பலகையை வடிவமைத்தவர்கள், உருவாக்கியவர்கள், வைத்தவர்கள், அனுமதிப்பவர்களின் மனநிலையை இது காட்டுகிறது. அநேகமாக இவ்வளவு மோசமான மொழிக்கொள்கை உள்ள நாடு உலகில் வேறெங்கும் இருக்காது.

இந்த அழகில் ஓர் உயரமான சிலையை வைத்து நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காக்கப்போகிறார்களாம், வெட்கங்கெட்டவர்கள்!

(பி.கு: நண்பர் Thiru Yo சொன்னது போல, இந்தச் சிலையை மட்டுமல்ல, இந்த பலகையையும் சீனாவிலேயே செஞ்சிருக்காங்க போலிருக்கு. சீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோட சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் “ராஷ்ட்டிரபாஷா”வில் ஒலிபெயர்த்திருக்கிறான்! மோடியின் தாய்மொழியையையும் விட்டுவைக்கவில்லை!. தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்!)

முகநூலில்: ஆழி செந்தில்நாதன்

9 மறுமொழிகள்

 1. இது புரளி என்று செய்தி வந்ததை போராளிகள் காணத்தவறியதில் வியப்பில்லை

  • Rajan இது புரளி என்று செய்தி வந்ததை போராளிகள் காணத்தவறியதில் வியப்பில்லை//
   என்பதை கண்டறிந்த Rajan நீங்களும் போராளிதாம்பாஸ்…

   • Photoshop ல் செய்யப்பட்டு போலி படத்தை பார்த்த உடன் உணர்ச்சி வசப்பட்டு உளறி பழி செல்லும் ஆழி ஒரு உருப்படாத கழி சடை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். இது ஒரு பிழைப்பு? தூ…

  • கம்யூனிஸ்ட்கள் போராளிகள் இல்லை பெருச்சாளிகள், நாட்டிற்கு தீங்கானவர்கள்.

 2. சாட்டையடி.ஆனா தமிழன் தமிழ்ல எழுதாம English luh eludhi sakadikkuradhai payhi pesiyirukkalam.<<இந்தமாதிரி

 3. Manidhan மாதிரி அதிபுத்திசாலிகளுக்கு எந்த உண்மையும் புரியாது.ஏனெனில் அவர் ஒரு RSS, B.J.Pகளின் சொம்பு தூக்கி

Leave a Reply to R பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க