privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாசி.பி.ஐ. ராகேஷ் அஸ்தானா வழக்கில் உயிருக்கு ஆபத்தென சனா புகார் !

சி.பி.ஐ. ராகேஷ் அஸ்தானா வழக்கில் உயிருக்கு ஆபத்தென சனா புகார் !

தற்போது பேசப்பட்டுவரும் சி.பி.ஐ விவகாரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கும் சதீஷ் சனா தனது உயிருக்கு ஆபத்து என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

-

தீஷ் சனா, தற்போது பேசப்பட்டு வரும் சி.பி.ஐ விவகாரத்தில் முக்கியமான நபர். சி.பி.ஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது இவர் கொடுத்த லஞ்சப் புகாரின் அடிப்படையிலேயே இவ்வளவு விவகாரங்களும் நடைபெற்று வருகின்றன.

இவர் கடந்த அக்டோபர் 29, அன்று தமது உயிருக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதன் அடிப்படையில் தமக்குப் போலீசு பாதுகாப்பு வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அலோக் வர்மா (இடது) – ராகேஷ் அஸ்தானா (வலது)

அக்டோபர் 30 அன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சனாவுக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், விசாரணையில் கலந்து கொள்ள சனாவுக்கு சி.பி.ஐ அனுப்பிய நோட்டீசுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க மறுத்துள்ளது.

முன்னதாக, தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய கடந்த அக்டோபர் 29 அன்று விசாரணை அதிகாரி சதீஷ் டாகரிடமிருந்து சம்மன் வழங்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த சனா, விசாரணைக்கான அழைப்பாணையை ரத்து செய்து உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மா மீதான ரூ 2 கோடி இலஞ்சப் புகாரின் மேல் இலஞ்ச ஒழிப்புத் துறை நடத்தும் விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான ஏ.கே. பட்நாயக்கின் முன்னிலையிலேயே தாம் வாக்குமூலத்தை பதிய விரும்புவதாகவும் தெரிவித்தார்

வாக்குமூலங்களை மாற்றுமாறு தாம் மிரட்டப்படலாம் என அஞ்சுவதாக உச்ச நீதிமன்றத்தில் சனா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மொயின் குரேசிக்கு எதிராக சி.பி.ஐ நடத்தும் வழக்கில் குரேசிக்கு சாதகமாக நடந்து கொள்ள அலோக் வர்மாவுக்கு சனா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அஸ்தானா கடிதங்கள் அனுப்பி குற்றம் சாட்டியிருந்தார்.

படிக்க:
மோடியின் எடுபிடிகளே சி.பி.ஐயின் இயக்குநர்கள்
சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா !

முன்னரே குயிண்ட் இணையதளம், “சனாவின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டதால், அவரை சி.பி.ஐ தொடர்பு கொள்ள இயலாததை அடுத்து, ஹைதராபாத்தில் உள்ள சனாவின் வீட்டில் அக்டோபர் 26 அன்று மாலை 5:30 மணியளவில் விசாரணைக்கு வரவேண்டும் என்ற அழைப்பாணையை அவரது வீட்டுக் கதவில் சிபிஐ ஒட்டிச் சென்றது” என்ற செய்தியை வெளியிட்டிருந்தது.

சனா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு முக்கிய விசயங்கள்:
  1. சி.பி.ஐ தனது வாக்குமூலத்தை பிரிவு 164-ன் படி நீதித்துறை நடுவர் முன்னிலையில் பெற்றுக் கொண்டதாகவும், சிபிஐ ஏற்கனவே சம்பந்தப்பட்ட வாக்குமூலங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
  2. உச்சநீதிமன்றம் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீது இலஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிட்ட அதே நாளில் அவருக்கு சிபிஐ வெகுவேகமாக சம்மன் அனுப்பிய விதத்தைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
  3. மேலும் தாம் ஏற்கனவே கொடுத்திருந்த வாக்குமூலங்களை மாற்றவோ, வாபஸ் பெறவோ மிரட்டப்படலாம் என அஞ்சுவதாகத் தெரிவித்தார். தாம் குறி வைக்கப்படுவதாகவும், நெருக்கமாகப் பின்தொடரப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 3, 2018 அன்று மொயின் குரேஷி வழக்கை விசாரித்து வரும் அதிகாரி தேவேந்திர குமாரால் தாம் தாக்கப்பட்டதாகவும் அந்த மனுவில் அவர் தெரிவித்தார்.
  4. சிபிஐ இயக்குனரும் சிறப்பு இயக்குனரும் விடுமுறையில் அனுப்பப்பட்டதால், அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சதீஷ் டாகர் எனும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரி மாற்றமும் மாறியிருக்கும் சூழ்நிலைகளும் தமது வாழ்வை அபாயத்தில் நிறுத்தியிருப்பதாகக் கூறினார். அதன் காரணமாக ஹைதராபாத் நகர எஸ்.பி, தமக்கு போலீசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மொத்தத்தில், அஸ்தானாவிற்கு எதிரான வழக்கை விசாரிக்கவிருக்கும் புதிய சிபிஐ அதிகாரிகளை எதிர்கொள்ள அச்சப்படுகிறார் சனா.

சனாவின் அச்சம் நியாயமானதுதான். லோயா எனும் நீதிபதிக்கே என்ன கதி நேர்ந்தது என்பது ஊரறிந்த விசயம்தான். பின்னர் சனாவுக்கு பயம் வராமல் இருக்குமா? குஜராத் படுகொலை வழக்கு, ஹரேன் பாண்டியா கொலை வழக்கு, சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கு, இஷ்ரத் ஜஹான் படுகொலை வழக்கு, துளசிராம் கொலை வழக்கு, என பல கொலை வழக்குகளை அசால்டாக டீலிங் செய்த மோடி அமித்ஷா கும்பலின் ஆசி பெற்ற அஸ்தானாவிற்கு எதிராக யாரேனும் புகார் கொடுத்தால் மோடிஜி சும்மா விட்டுவிடுவாரா என்ன ?      

தமிழாக்கம் : வினவு செய்திப்பிரிவு
மூலக்கட்டுரை : நன்றி – தி குயிண்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க