பேல் ஒப்பந்தம் பா.ஜ.க. அரசின் போஃபர்சாக மாறி விடுமோவென வலதுசாரி ஆதரவுப் பத்திரிகைகளே தற்போது விழிபிதுங்கி நிற்கின்றன. தமது கற்பனைக் கழுதைகளைக் கட்டவிழ்த்து விட்டும் படைப்பூக்கமான முட்டுக் கொடுத்தல்கள் சிக்காமல் கைபிசைந்து நிற்கின்றன பா.ஜ.க.வின் அல்லக்கை ஊடகங்கள். இத்தனைக்கும், பா.ஜ.க. ஆதரவுப் பத்திரிகைகளின் பரிதாப நிலைக்கு பா.ஜ.க.வே காரணம் என்பது தான் கதையின் சுவாரசியமான திருப்பம்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைகளை அடுத்து வெளியாகி உள்ள சட்ட அமைச்சகத்தின் ஆவணங்கள் புதிய உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளது. இத்தனை நாட்களாக ரபேல் ஒப்பந்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் கோரிய போதெல்லாம் இந்த ஒப்பந்தம் அரசாங்கங்களுக்கு இடையிலானது என்றும் எனவே அதன் விவரங்களை வெளியிடுவது சாத்தியமில்லை என்றும் பா.ஜ.க. அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சட்ட அமைச்சகத்தின் ஆவணங்களின் படி ரபேல் ஒப்பந்தத்தின் சில முக்கியமான ஷரத்துகளை பிரெஞ்சு அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், இறுதியாக கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள அந்த முக்கியமான ஷரத்துகளுக்கான பொறுப்பை பிரெஞ்சு அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

அவ்வாறு பிரெஞ்சு அரசாங்கம் கைகழுவிய பொறுப்புகள் எவை? முதலாவதாக விமானங்களை உரிய காலத்திற்குள் சப்ளை செய்வது மற்றும் அது தொடர்பான தொழிற்துறை சேவைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளின் மேல் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எந்தக் கடப்பாடும் இல்லை என அவ்வரசு குறிப்பிட்டுள்ளது. இரண்டாவதாக, ஒப்பந்தத்தில் ஏதேனும் தாவாக்கள் எழுந்தால் அதைத் தீர்த்துக் கொள்ளும் பொறுப்பை இந்திய அரசாங்கமும் தஸ்ஸால்ட் நிறுவனமுமே பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அதில் பிரெஞ்சு அரசாங்கம் தலையிடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை ஒப்பந்தப்படி விமானங்கள் சப்ளை செய்யப்படவில்லை என்றாலோ, அல்லது அவ்வாறு சப்ளை செய்யப்பட்ட விமானங்கள் போதிய தரத்தில் இல்லை என்றாலோ, அல்லது போர்க்காலங்களில் ரபேல் விமானங்கள் ஒழுங்காக செயல்படவில்லை என்றாலோ அல்லது இது போல் வேறு ஏதேனும் சிக்கல்கள் எழுந்தாலோ அதில் பிரெஞ்சு அரசாங்கம் தலையிடாது. அவ்வாறான சூழலில் பிரெஞ்சு அரசாங்கம் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் எனவும், அதற்காக பிரெஞ்சு அரசின் இறையாண்மைப் பூர்வமான உத்திரவாதம் ( sovereign guarantee ) வழங்கப்பட வேண்டும் எனவும் இந்தியத் தரப்பில் கோரப்பட்டதை பிரான்சு நிராகரித்துள்ளது.

அதே போல் விமான ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பில் பிரெஞ்சு அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்த பல்வேறு கூட்டுப் பொறுப்புகளையும் அவ்வரசு ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இதற்கு பதிலாக இந்திய அரசு தஸ்ஸால்ட்டின் விமானங்களை வாங்குவதற்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என்பதற்கான “ஆறுதல் கடிதம்” (letter of comfort) மட்டும் வழங்கியுள்ளது. எனினும், இந்தக் கடிதம் இந்திய அரசு ஏற்கனவே கோரியிருந்த இறையாண்மைப் பூர்வமான உத்திரவாதத்திற்கு எந்த வகையிலும் இணையானதோ மாற்றோ அல்ல. சட்டரீதியாக இந்த ஆறுதல் கடிதத்திற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை பிரெஞ்சு அரசாங்கம் தனது பொறுப்புகளை கைகழுவியதில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

படிக்க:
ரஃபேல் ஊழல் : அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை !
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

தேசபக்தியையும் தேசப் பாதுகாப்பையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ளதாக பீற்றிக் கொள்ளும் வலதுசாரி பாசிஸ்டுகளின் உண்மையான யோக்கியதை இது தான். கார்கில் போரின் முடிவில் இறந்து போன வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் செய்த பாரம்பரியம் கொண்ட கட்சியான பாரதிய ஜனதாவிடம் இதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது. ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான செய்திகள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கிளம்பி வரும் நிலையில் ஊடகங்களின் சாதித்து வரும்  ஆழமான கள்ள மௌனம் நமது கவனத்திற்குரியது.

கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தின் இறுதியில் ஊழல் ஒழிப்பிற்காக அவதாரம் எடுத்த தேவதைகளான அன்னா ஹசாரே உள்ளிட்டவர்கள் இப்போது ஓடி ஒளிந்து கொண்டதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பீற்றிக் கொள்ளப்படும் ஊடகங்கள் மற்ற எல்லா விவகாரங்களிலும் மேகங்களுக்கு மேல் நின்று கொண்டு மக்களிடம் அறிவுரை சொல்ல எந்தக் கூச்சமும் படுவதில்லை. அதே பா.ஜ.க. வின் ஊழல்கள் என்று வந்தால் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு மௌனம் சாதிப்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேலும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஊடகங்களை நம்பிப் பலனில்லை. மக்களே ஊடகங்களாய் மாறி இந்துத்துவ பாசிஸ்டுகளின் அயோக்கியத்தனங்களை ஒவ்வொருவருக்கும் பரப்பி அம்பலப்படுத்தியாக வேண்டிய தேவை எழுந்துள்ளது.

செய்தி ஆதாரம்:
♦ Rafale Twist: Why Did France Refuse to Give India a Sovereign Guarantee?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க