ஸ்டெர்லைட் சதியின் பின்னணி என்ன ? மக்கள் அதிகாரம் ராஜு | கேள்வி பதில் நேரலை | இரவு 7 மணி

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க நடத்தப்படும் சதித் திட்டம் குறித்த உங்களது கேள்விகளுக்கு நேரலையில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க நடக்கும் சதியைக் கண்டித்து தூத்துக்குடி நகரெங்கும் கருப்புக் கொடி ஏற்றி தமது எதிர்ப்பை இன்று பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து எடப்பாடி அரசு ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கு ஏதுவான வகையில் வலுவற்ற அரசாணையை பிறப்பித்து ஆலையை மூடியது. அரசாணையில் உள்ள நடைமுறைச் சிக்கலை காரணம் காட்டி ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். எடப்பாடி – மோடி – அனில் அகர்வால் கும்பலின் கூட்டுக் களவாணித்தனத்தில்  ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படவிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் நாம் ?

ஸ்டெர்லைட் மீண்டும் திறப்பதன் பின்னணி என்ன ? தூத்துக்குடி மக்கள் இது குறித்து என்ன கருதுகிறார்கள்? தூத்துக்குடியில் போலீசின் அடக்குமுறை எவ்வாறு உள்ளது மற்றுமொரு மே 22 சம்பவத்திற்கு தயாராகிறதா போலீசு ?

உங்களின் கேள்விகளுக்கு இன்று மாலை 7 மணியளவில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜு ! வினவு நேரலை !

காணத் தவறாதீர்கள் ! கேள்விகளை அனுப்ப மறக்காதீர்கள் ! கேள்விகளை வினவு தளத்திலும், ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்களிலும், பின்னூட்டப் பெட்டிகளிலும் தெரிவிக்கலாம். நேரலையில் தொழில்நுட்ப பிரச்சினை இருப்பின் இந்த கேள்வி பதில் வீடியோ தனியாக வெளியிடப்படும். நன்றி

கேள்விகளை அனுப்ப :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க