றிவியலிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மத பழமைவாதிகளின் கூடாரமாக இருப்பதை பல நேரங்களில் வினவு சுட்டிக் காட்டியிருக்கிறது. ஒருபக்கம் இசுலாமிய அடிப்படைவாதத்தை பகடி செய்துகொண்டும் அதை ‘தீவிரவாத’மாகவும் சொல்லிக்கொள்ளும் இந்த நாடுகள், கடைந்தெடுத்த கிறித்துவ அடிப்படைவாதிகளை தலைவர்களாக கொண்டவை.  கடவுள், நரகம் அரசியல்வாதிகளின் நாவில் சாதாரணமாக சுழலும் வார்த்தைகள்..

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொலாண்ட் டஸ்க், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து பிரிந்து போக வலியுறுத்துகிற ‘பிரிக்சிட்’-ஐ ஆதரிக்கிறவர்களுக்கு நரகத்தில் சிறப்பான இடம் காத்திருக்கிறது” என பகிரங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தில் பேசினார்.

டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கிறித்தவ மிஷனரிகளின் நெருக்கமான உறவில் உள்ளவர். எல்லா மேடைகளிலும் இவர் தவறாமல் “கடவுளையும்”, “அமெரிக்கா நம்பிக்கையாளர்களின் நாடு” என சொல்வதையும் தவறுவதில்லை.  கிறித்துவ அடிப்படைவாதத்தை பரப்புவதில், கடவுள் நம்பிக்கையாளர்களாக இருந்த முன்னாள் அதிபர்களைக் காட்டிலும் ‘அமெரிக்க மோடி’யான டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. நாத்திகர் ஒருவர் அமெரிக்க அதிபராகவே முடியாது.

‘கடவுள் பெயரால்’ என அரசியலமைப்பிலேயே அறிவித்துக்கொண்ட  நாடான அமெரிக்காவில் ‘நம்பிக்கையற்றவர்’களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்த செய்திப் படம் சொல்கிறது.  அமெரிக்காவின் டெக்ஸாஸ், டென்னசி உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் கடவுள் மறுப்பாளர்கள், அலுவலகங்களை திறப்பது சட்டப்படி குற்றம். நாத்திகர்கள், மாணவர்கள் படைகளில் சேரமுடியாது.

வளர்ந்த நாடுகளில் அதிக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைக் கொண்ட நாடாக அமெரிக்க உள்ளது. 55 % இளைஞர்கள் தாங்கள் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர்.  ஐரோப்பாவில் 22% இளைஞர்கள் மட்டுமே தினசரி பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், தற்போது 23% சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் எந்த மதத்தையும் சேராதவர்கள் என தெரிவின்றனர். இதில் இளைஞர் 35% பேர்.

மத சார்புள்ள நாடாக அறிவித்துக்கொண்ட அமெரிக்காவில் ஏன் மக்கள் மதங்களை புறக்கணிக்கின்றனர் என்பதை விளக்குகிறது இந்த செய்திப்படம். கருக்கலைப்பை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், மாற்றுப் பாலினத்தோருக்கான உரிமை மறுப்பு, ஆணாதிக்கம், நரகத்தின் மீதான கேள்வி, தொடர்ந்து வெளியாகும் கத்தோலிக்க கிறித்தவ மத போதகர்கள் மீதான பாலியல் நடத்தை மீறல் குற்றச்சாட்டுகள் என பலர் தங்களுடைய மத நம்பிக்கையின்மைக்கு காரணங்களை அடுக்குகின்றனர்.

அதோடு, கடவுள் இருக்கிறாரா இல்லையா, நரகம் எப்படி இருக்கும் என்பதற்கு பதில் அளிக்கும் கூகுளும்கூட கடவுள் மறுப்பாளர்களை உருவாக்குவதாகக் கூறுகிறது இந்த எட்டு நிமிட செய்தி படம்.


கலைமதி

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க