ங்கிகளின் காவி பார்வையில் இந்தியர்களில் தொன்னூறு சதவீத மக்கள் தேச விரோதிகளாகத்தான் இருப்பார்கள். பிரிட்டீஷாரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட சங்கிகள் திடீர் ‘தேசபக்தர்கள்’ ஆகிவிட்ட நிலையில்,  தங்கள் கருத்தியலை  கேள்வி கேட்பவர்கள் அனைவரும் தேசவிரோதிகளாகி வருகின்றனர்.

அந்த வகையில் தேசவிரோதி பட்டியலில் சேர்ந்திருக்கிறது ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம். இந்நிறுவனம் வரவிருக்கும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு  ‘நம்மை ஒன்றிணைக்கும் வண்ணம்’ என்ற தலைப்பில்  சர்ஃப் எக்ஸெல் விளம்பரத்தை வெளியிட்டிருந்தது.

சைக்கிளில் வரும் ஒரு சிறுமி, தெருவில் உள்ள தனது நண்பர்களை வண்ணம் தீரும்வரை தன் மீது வண்ணங்களை தூவுங்கள் என்கிறாள். வண்ணங்கள் தீர்ந்தவுடன் தனது முசுலீம் நண்பனை பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்கிறாள். நமாசை முடித்துக்கொண்டு வண்ண பண்டிகைக்கு வரும்படி சொல்கிறாள்.  ஒரு நிமிட சர்ஃப் எக்ஸெல் விளம்பரம் சொல்லவருவது இதுதான்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
முகிலன் எங்கே : தமிழகத்திலும் வெள்ளை வேன்கள் ?

ஆனால், காவிகளின் அகராதியில் தொப்பி, முசுலீம், நமாஸ், பள்ளிவாசல் இந்த வார்த்தைகளுக்கு நேர் பொருள் – தேசவிரோதம் என்பதாகத்தான் உள்ளது.  இந்த விளம்பரம் வெளியான உடனே, காவிகள் இந்த விளம்பரம் ‘லவ் ஜிகாத்’-ஐ ஊக்கப்படுத்துவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பொங்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு சிறுமிக்கும் சிறுவனுக்குமான நட்பை வெளிப்படுத்திய விளம்பரத்தைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் உள்ள மூடர்கூடம், இந்து – முசுலீம் இணையர்களின் விதவிதமான படங்களை வெளியிட்டு தனது வெறுப்புப் பிரச்சாரத்தை முடுக்கியது.

லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் சர்ஃப் எக்ஸெல்-ஐயும் இதைத் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் மற்ற பொருட்களையும் புறக்கணிக்கும்படி காவிகள் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தனர்.

சந்தடி சாக்கில் சில காவிகள் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பொருட்களுக்குப் பதிலாக பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை வாங்கும்படி பரிந்துரைத்தனர். பழங்குடி மக்களின் மூலிகை அறிவை திருடி விற்கும் ராம்தேவ் இத்தகைய பதிவுகளை ரீ- ட்விட் செய்து, பதிலுக்கு தானும் கடையை விரித்தார். சங்கிகள் செய்கிற எந்த செயலும் இலாபத்தை முன்வைக்காமல் இருக்காது அல்லவா?

காவிகளின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பலர் நல்லிணக்கத்தை வளர்க்கும் இந்த விளம்பரத்தை பாராட்டியும் எழுதினர்.

கறை நல்லது; அது உங்கள் இதயத்தில் இல்லாதவரை என ஒரு பதிவர் எழுதியுள்ளார்.

‘இந்த விளம்பரத்தை பகிராதீர்கள்… ஒரு நிமிடத்தில் எப்படி இவர்களால் வண்ணத்தை, அன்பை, சிரிப்பை, கொண்டாட்டத்தை, வெகுளித்தனத்தை, கலாச்சார மரியாதையை, பிணைப்பை, நல்லியல்பை காட்ட முடிகிறது? இதுநாள் வரை நாம் செய்த அத்தனை வேலைகளையும் துடைத்து போடுகிறது. நாம் என்ன முட்டாள்களா? நான் மீண்டும் சொல்கிறேன்… இந்த விளம்பரத்தை பகிராதீர்கள்’ என பகடி செய்திருக்கிறார் ஆகாஷ் பானர்ஜி.

’என்ன ஒரு அழகான விளம்பரம்.. பத்து முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது புன்சிரிப்பை வரவழைக்கிறது. வெளியான, குறும்பான, அன்பான குழந்தைகளின் பார்வையில் இந்தியாவை காட்டுகிறது. தொட்டுவிட்டது… சர்ஃப் எக்ஸெலை ஏன் தாக்குகிறீர்கள்? எல்லா இடங்களிலும் சதிச்செயல்களை ஏன் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்’ என ட்விட்டியுள்ளார் பத்திரிகையாளர் மானக் குப்தா.

“நாமெல்லாம் இயற்கையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்தவர்கள், நல்ல மனிதர்கள் என்பதை நினைவுபடுத்தியதற்காகவும் நான் கூடுதலாக சர்ஃப் எக்ஸெல் வாங்க இருக்கிறேன். மேலும், குழந்தைகளுக்கு எந்தத் தடையும் இல்லை, அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வரை. வெறுப்பாளர்களை முறியடிக்க இதுதான் சிறந்த வழி” என்கிறார் ஹரிணி களாமர்.

“சர்ஃப் எக்ஸெல் விளம்பரம் முசுலீம் சிறுவனுக்கும் இந்து பெண்ணுக்குமான நட்பை கொண்டாடுகிறது. இதனால்தான் காவி வெறுப்பாளர்கள் ‘லவ் ஜிகாத்’ கண்கொண்டு அதைப்பார்க்கிறார்கள். அவர்களுக்கு இந்தியா அன்பால் பாடம் கற்பிக்கட்டும்” என்கிறார் அரசியல் செயல்பாட்டாளர் கவிதா கிருஷ்ணன்.

“சர்ஃப் எக்ஸெல் விளம்பரம்தான் உண்மையான இந்தியா என்பது. இப்படித்தான் நாமிருந்தோம். நாம் எப்போதும் இப்படித்தான் இருந்தோம். காவிகளே…சர்ஃப் எக்ஸெலை புறக்கணிப்பது போதாது. எங்களையும் புறக்கணியுங்கள். நாங்கள்தான் இந்தியா. நீங்கள் விலகி போங்கள். நீங்களில்லாம் நாங்கள் சிறப்பாகவே இருப்போம்” என்கிறார் பத்திரிகையாளர் அர்ஃபா கானும் ஷெர்வானி.

முன்னதாக, கும்பமேளாவின்போது வெளியான இதே நிறுவனத்தின் த்ரீ ரோசஸ் டீ விளம்பரமும் காவிகளால் தாக்குதலுக்கு உள்ளானது. கும்பமேளாவில் இந்துக்கள் தங்களுடைய வயதான பெற்றோரை தொலைத்துவிட்டு போவது வழமையாக நடந்துவரும் ஒன்று. அதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த விளம்பரம், இந்துக்களை புண்படுத்துவதாகக் கூறி காவிகள் வெறுப்பு பிரச்சாரம் செய்தனர்.

சமூகத்தில் எதார்த்தமாக நிலவும் இந்து முசுலீம் ஒற்றுமையையும் அதன் பெருமிதத்தையும் ஒரு விளம்பரத்தில் பேசுவதைக் கூட சங்கிக் கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேர்தல் நேரத்தில் சங்கிகள் தூண்டத் துடிக்கும் இந்துமத வெறித் தீயின் மீது இந்த விளம்பரம் சர்வசாதாரணமாக நீரை அள்ளி ஊற்றிவிட்டுப் போகிறது என்பதுதான், சங்கிகள் கழிவதற்கான காரணம். விளம்பரங்களில் மட்டுமல்ல, வீதிகளிலும் இத்தகைய நட்புறவுகள் விரிவடைகையில், சமூகத்தில் இருந்து சங்கிகள் துடைத்தெறியப்பட்டிருப்பார்கள் .


கலைமதி
நன்றி : லைவ் வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க