மியான்மரில் ரோஹிங்கியா முசுலீம் இனப்படுகொலையை ஆதாரங்களுடன் எழுதியதற்காக ஏழாண்டு சிறை தண்டனை பெற்ற இரண்டு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் 500 நாள் சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் வா லோன் (33) மற்றும் யாவ் சோ ஓ (29) ஆகியோர் டிசம்பர் 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் புத்த மதத்தினர் இணைந்து பத்து ரோஹிங்கியா முசுலீம்களை கொன்றது குறித்த செய்தி வெளியிட்டதற்காக இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தது மியான்மர் அரசு. அரசு ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் இவர்களுக்கு ஏழாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மியான்மர் அரசின் ‘ஜனநாயகம்’ குறித்து கேள்வி எழுந்ததோடு, ஊடக நிறுவனங்களிடமிருந்தும் மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தும் கடும் கண்டனங்களும் வந்தன. இந்த நிலையில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு காரணமாக இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்கிழமை அன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் முதல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு காரணமாக 6,520 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறையிலிருந்து விடுதலையான வா லோன் மற்றும் யாவ் சோ ஓ தங்களுடைய குழந்தைகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இவர்கள் இருவரும் எந்தத் தவறையும் செய்யவில்லை எனக் கூறியதோடு, உடனடியாக இவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கூறியது.

சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டபின், தங்களுடைய குடும்பத்துடன் இணைந்த உற்சாகத்தில் இருவரும்..

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள்…

வா லோன் மற்றும் அவருடைய மனைவி பான் எல் மோன் தங்களுடைய மகளுடன் விடுதலையை கொண்டாடுகிறார்கள்.

யாவ் சோ ஓ, தனது மனைவி சித் சு வின் மற்றும் மகளுடன் தனது விடுதலையை கொண்டாடுகிறார்.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் 10 ரோஹிங்கியா முசுலீம் ஆண்கள் மற்றும் சிறுவர்களைக் கொன்றது தொடர்பான விசாரணையில் இருந்தபோது, டிசம்பர் 2017-ம் ஆண்டு இவர்கள் இருவரும் கைதாகினர்.

இன்செயின் சிறையிலிருந்து விடுதலையான வா லோன்.

இன்செயின் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த யாவ் சோ ஓ புன்னகைக்கிறார்.


– அனிதா
நன்றி : அல்ஜசீரா 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க