privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாசின்மயானந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டு : புகாரளித்த பெண் பொய் வழக்கில் கைது !

சின்மயானந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டு : புகாரளித்த பெண் பொய் வழக்கில் கைது !

சின்மயானந்த் வழக்கை திரும்பப்பெற அச்சுறுத்தவே, தன் மகளை கைது செய்திருக்கிறார்கள் எனக் கூறுகிறார் வல்லுறவு குற்றச்சாட்டு புகார் அளித்த பெண்ணின் தந்தை.

-

சின்மயானந்த் வழக்கை திரும்பப்பெற அச்சுறுத்தவே மகளை கைது செய்திருக்கிறார்கள் : புகார் அளித்த பெண்ணின் தந்தை !

சின்மயானந்த் மீது தந்துள்ள புகார்களை திரும்பப் பெற அச்சுறுத்தும் விதமாகவே தனது மகளை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்திருப்பதாக புகாரளித்த 23 வயது சட்டக்கல்லூரி மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் சின்மயானந்த் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியிருந்த சட்டக்கல்லூரி மாணவியை, “பணம் கேட்டு மிரட்டிய” வழக்கில் கடந்த புதன்கிழமை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு. சின்மயானந்தை காப்பாற்ற சிறப்பு புலனாய்வு குழுவில் சிலர் முயற்சிப்பதாக சட்டக் கல்லூரி மாணவி புகார் தெரிவித்திருந்த நிலையில், புகார் அளித்த மாணவியையே கைது செய்துள்ளது சிறப்பு புலனாய்வு குழு.

Chinmayanand case Shahjahanpur law student
மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படும் சட்ட மாணவி (கோப்புப் படம்).

தன் மகள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து ஊடகங்களிடம் பேசிய அந்தப் பெண்ணின் தந்தை, “பொய்யான குற்றச்சாட்டின் கீழ் என் மகள் சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. பணம் கேட்டு மிரட்டியதாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கும் மூன்று பெண்களுடன் தொடர்புள்ளதாகக் கூறி பொய்க் குற்றச்சாட்டை கூறுகிறார்கள். இவை அனைத்தும் பொய்யானவை. என் மகளுக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. என்னுடைய மகள் அளித்த வாக்குமூலத்தில் என் மகள் எந்த குற்றத்தையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. வேண்டுமென்றே அவர்கள் ஊடகங்களில் பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

ஷாஜகான்பூர் உள்ளூர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்திருந்தநிலையில், அடுத்த ஒரே நாளில் அந்தப் பெண்ணை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு. சின்மயானந்தின் வழக்கறிஞர் ஓம் சிங் அளித்திருந்த பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மூவர் கைதாகியுள்ளனர். இந்த வழக்கின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கேட்டிருந்த நிலையில், சட்டக்கல்லூரி மாணவிக்கு பிணை கிடைத்துவிடும் என்று கருதிய சிறப்பு புலனாய்வுக் குழு அந்தப் பெண்ணை அவசரமாக கைது செய்துள்ளதாக பெண்ணின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

படிக்க:
பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் : சட்ட மாணவி மாயம் !
♦ உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?

“உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்திருந்தாலும், அது மாநில அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படியே நடக்கிறது என்பதை மேற்கண்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நானும் என்னுடைய மகளும் சின்மயானந்த் மீது பாலியல் வல்லுறவு புகாரை அளித்திருந்தோம். ஆனால், சிறப்பு புலனாய்வு குழு பாலியல் வல்லுறவு வழக்கை பதியவில்லை. மாறாக, மாநில அரசாங்கத்தில் வழிகாட்டுதலின் படியே நடந்துகொள்கிறது. சின்மயானந்த் வழக்கை நடத்தவிடாமல் எங்கள் மீது அழுத்தம் கொடுக்க சிறப்பு புலனாய்வு குழு முயற்சிக்கிறது” என குற்றம்சாட்டுகிறார் பெண்ணின் தந்தை.

பாலியல் அச்சுறுத்தல் வழக்கில் செப்டம்பர் 20-ம் தேதி சின்மயானந்த் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி 376-வது பிரிவின் (அதிகாரத்தில் இருக்கும் நபர் பாலியல் உறவு கொள்ளுதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலியல் வல்லுறவு வழக்கு பதியப்படவில்லை.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை முன் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு சென்றிருந்தபோதே தனது மகளை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு முயற்சித்ததாக சொல்கிறார் அவருடைய தந்தை.

Chinmayanand
பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசு காமுகன் சின்மயானந்தை அலுங்காமல் அழைத்து செல்லும் காட்சி.

“நீதிமன்றத்துக்கு சற்று முன்னதாகவே என் மகளை நிறுத்தியது சிறப்புப் புலனாய்வுக் குழு. அப்போதே கைது செய்து அழைத்துச் செல்ல நினைத்தார்கள். என் மகள் என்னை அழைத்தவுடன் சில வழக்கறிஞர்களுடன் அந்த இடத்துக்குச் சென்று ஆட்சேபணை தெரிவித்தோம். நீதிமன்ற விசாரணைக்கு அனுமதிக்கும்படி கேட்டோம்” என்கிறார் அவர்.

அன்றைய கைதை தடுத்து நிறுத்தியபோதும் புதன்கிழமை கைதிலிருந்து பாதுகாப்பு பெற அந்தக் குடும்பத்தால் எதுவும் செய்ய இயலவில்லை.

“என் சகோதரரியை சில நிமிடங்கள் பேச அழைப்பதாக கூறினார்கள். ஆனால், சில நிமிடங்களில் அவரை கைது செய்வதாகக் கூறினார்கள். என் சகோதரி அவர்களுடன் போக மறுத்தார். அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றினார்கள்” என்கிறார் அந்தப் பெண்ணின் சகோதரர்.

“வேறு உடையை மாற்றவோ, காலில் செருப்பு போடவோகூட அவர்கள் அனுமதிக்கவில்லை. ஒரு போலீசு பெண் என் சகோதரியை கையை முறுக்கிக் கொண்டு அழைத்துப்போனார்” என்கிறார் அவர்.

படிக்க:
ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !
♦ காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !

“இந்தக் கைதைத் தடுத்து நிறுத்தப் போன குடும்பத்தினரிடமும் முறைகேடாக நடந்துகொண்டது போலீசு. சின்மயானந்த் கைது செய்யப்பட்ட விதமும் இங்கே சிறப்புப் புலனாய்வுக் குழு நடந்த விதமும் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. அவர் பாஜக தொடர்புடையவர் என்பதால் முழு மரியாதையோடு அழைத்துச் செல்லப்பட்டார். சின்மயானந்துக்கு எதிராகப் போராடத் துணிந்த எங்களைப் போன்ற எளிய மனிதர்களை சிறப்பு புலனாய்வு குழு அச்சுறுத்துகிறது, முறைகேடாக நடந்துகொள்கிறது. சகோதரியின் கைதை எதிர்த்த என்னையும் தந்தையையும் கீழே தள்ளியது சிறப்பு புலனாய்வு குழு” என்கிறார் அந்த இளைஞர், அவநம்பிக்கையோடு.

சின்மயனாந்த் போன்ற பாலியல் குற்றவாளிகளை பாஜக அரசாங்கம் பாதுகாக்கும்; அவர்களை எதிர்க்கும் நபர்களை கைது செய்து அச்சுறுத்தும். இந்த செய்தியைத்தான் நமக்கு மீண்டும் மீண்டும் காவி கும்பல் சொல்லிக்கொண்டிருக்கிறது.


– அனிதா
நன்றி
: இந்தியன் எக்ஸ்பிரஸ்.