privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாசெயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?

செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?

உளவு பார்க்கப்பட்டது உண்மை என்பதை வாட்சப் நிறுவனமும் ஒப்புக்கொண்டாலும், யாரால் உளவுப்பார்க்கப்பட்டார்கள் என்கிற விவரத்தை வெளியிட மறுக்கிறது அந்நிறுவனம்.

-

லகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் 1400-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலின் உளவு மென்பொருள் பெகாசஸ் மூலம் அரசாங்கங்களால் உளவு பார்க்கப்பட்டதாக வாட்சப் நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர்களும் அடங்குவர்.

வாட்சப் மூலம் பரப்பட்ட ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளை தயாரித்த இஸ்ரேலிய உளவு நிறுவனம், அரசாங்கங்களுக்கு மட்டுமே இந்த உளவு மென்பொருளை விற்றதாக கூறியிருந்தது. மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்ட வாட்சப், இந்திய அரசாங்கம் இந்த உளவு வேலையைப் பார்த்திருக்கலாம் என தெரிவித்திருந்தது. ஆனால், வெளிப்படையாக உளவு பார்த்தது யார் என்பதை அது தெரிவிக்கவில்லை.

மோடி அரசு, சத்தீஸ்கரில் மக்கள் உரிமை சார்ந்து பணியாற்றும் வழக்கறிஞர்களையும், அரசு திட்டங்களை எதிர்ப்பவர்களை உளவு பார்த்ததாக விவரங்கள் வெளியாகின. பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் இதுகுறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த மே மாதமே தகவல் தொடர்பு அமைச்சகத்துக்கு இந்தியர்களின் வாட்சப் உளவு பார்க்கப்படுவதாக செய்தி அனுப்பியதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியில் போதுமான அளவு தகவல்கள் இல்லை எனக் கூறி நிராகரித்துள்ளது மத்திய அரசாங்கம்.

தற்போது உளவு பார்க்கப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில் வாட்சப் நிறுவனத்திடம், மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. வாட்சப் நிறுவனம் மேற்கண்ட விளக்கத்தை பதிலாக அனுப்பியுள்ளது.

படிக்க:
அந்தரங்கத்தை திருடும் ஃபேஸ்புக் ! காறித் துப்புகிறது உலகம் !
♦ வாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு !

இதுவரை இந்தியாவைச் சேர்ந்த பல செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்களுடைய வாட்சப் உளவு பார்த்த தகவலை பகிர்ந்துள்ளனர். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தன்னுடைய மொபைல் போனும் உளவு பார்க்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

அதுபோல, காங்கிரஸ் கட்சியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பதவி வழங்கப்பட்ட பிரியங்கா காந்தியின் வாட்சப் கணக்கும் உளவு பார்க்கப்பட்டதாக அக்கட்சியின் ஊடக தொடர்பாளர் கூறியுள்ளார்.

பெகாசஸ் உளவு மென்பொருளை அனுமதிக்கும் லிங்கை க்ளிக் செய்யவில்லை என்றபோதும், ப்ரியங்காவை உளவு பார்க்க முயற்சி நடந்திருப்பதாக ஊடக தொடர்பாளர் சூரஜ்வாலா தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரித்த இஸ்ரேலிய நிறுவனம் அரசாங்கங்களுக்கு இதை விற்றதாகக் கூறியுள்ள நிலையில், யார் இதை வாங்கினார்கள், யார் இதை வாங்க ஒப்புதல் அளித்தார் என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு முன், உளவு பார்க்கப்பட்டது குறித்து வாட்சப் எச்சரித்தபோதும், அரசாங்கம் அதுகுறித்து மவுனம் காத்தது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், வாட்சப் முதன்மை செயல் அதிகாரி கிறிஸ் டானியல்ஸையும் ஃபேஸ்புக் துணை தலைவர் நிக் கிளக் – ஐயும் செப்டம்பர் மாதம் சந்தித்தார். ஆனால், இந்த உளவு விவகாரம் குறித்து அவர்கள் மவுனம் காத்துள்ளனர் எனவும் சூரஜ்வாலா சுட்டிக்காட்டியுள்ளார்.

படிக்க:
நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !
♦ அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி ! 

“ஒரு மோசமான வழியை அரசாங்கம் கைக்கொண்டுள்ளது. இப்போதுள்ள கேள்வி என்னவென்றால், இந்தியாவில் உள்ளவர்களுக்கு தனி உரிமை உள்ளதா என்பதே… மோடி அரசாங்காத்தின் விருப்பங்களுக்கும் கற்பனைக்கும் ஏற்ப சட்டத்தின் ஆட்சி குப்பை தொட்டியில் போடப்பட்டுவிட்டதா என்பது கேள்விக்குள்ளாகிறது. இந்த விசயம், பல விளைவுகளுக்கு இட்டுச் செல்லப்போகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

உளவு பார்க்கப்பட்டது உண்மை என்பதை உளவு பார்த்தவர்களும் வாட்சப் நிறுவனமும் ஒப்புக்கொண்டாலும் யாரால் உளவுப்பார்க்கப்பட்டார்கள் என்கிற விவரத்தை தனது வர்த்தக நலனுக்காக வெளியிட மறுக்கிறது அந்நிறுவனம். தனது அத்துமீறலை மறைக்க இந்திய அரசாங்கமும் இதை பயன்படுத்திக் கொள்கிறது. கார்ப்போரேட்களும், கார்ப்பரேட் நல அரசாங்கங்களும் இறுதியில் இணைந்துவிடுகிறார்கள் என்பதை இந்த உளவு பார்க்கப்பட்ட சம்பவம் உணர்த்துகிறது.


கலைமதி
நன்றி :  டெலிகிராப் இந்தியா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க