ஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய வன்முறைக் கும்பலை கண்டித்தும், உலகப் பொதுமறை திருக்குறளை பகவத் கீதையுடன் ஒப்பிட்ட எச். ராஜா, திருக்குறளை வைத்து அரசியல் நடத்துவதை கண்டித்தும், 05.11.2019 அன்று விருத்தாசலம் பாலக்கரையில் காலை 11.30 மணி அளவில் திருமுதுகுன்றம் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் தலைவர் பெரும் புலவர் சிவராம சேது அவர்கள் ஆர்ப்பட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி. ராஜு அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் திருவள்ளுவர் அறக்கட்டளை இல. சிறுத்தொண்ட நாயனார், வி. நாராயணன், சா. குப்புசாமி, மக்கள் அதிகாரம் விருத்தாசலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் கு. முருகானந்தம், மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் வா. அன்பழகன், விவசாய சங்கத்தின் சார்பில் M.G. பஞ்சமூர்த்தி, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் கதிர்காமன் மற்றும் CP-ML மக்கள் விடுதலை அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும், தமிழ் உணர்வாளர்கள் பொது மக்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க