“அவள் படிப்பில் முதலிடத்தில் இருந்தாளா அல்லது தீவிரவாதிகள் அமைப்பில் முதலிடத்தில் இருந்தாளா? NIA விசாரிக்கட்டும். உண்மை வெளிவரும்” – டிவிட்டர் முட்டுச் சந்தில் முகமறியாத தேசபக்தர் ஒருவர்.

ஐயர் ஐயங்கார் டெக்னாலஜி என்று பரவலாக அறியப்படும் சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் அவளது பேராசிரியர்கள் துன்புறுத்தியதை அடுத்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாள். அதையடுத்து சமூக வலைத்தளங்களில் #justiceforfathimalatheef என்கிற ஹேஷ்டேக் வைரலாக பரவி வருகின்றது. மேற்படி ஹேஷ்டேக் ஒன்றில் பதிவிடப்பட்ட டிவிட்டர் பதிவுக்கு வந்த மறுமொழி தான் மேலே உள்ளது.

பாத்திமா லத்தீப்.

இந்த சுற்றில் வாயைத் திறந்தால் அம்பலமாகி விடுவோம் என்பதால் பார்ப்பன பாரதிய ஜனதா லாபியும் நாம் தமிழர் தம்பிமார்களும் கொஞ்சம் அமுக்கி வாசிப்பதால் இதைப் போன்ற பதிவுகள் வெகு சொற்பமாகவே கண்ணில் படுகின்றன. மற்றபடி ஃபாத்திமாவுக்கு நீதி வேண்டி பொதுவானவர்கள் பல்லாயிரக்கணக்கில் பதிவிட்டு வருகின்றனர். ஃபாத்திமா தனது தற்கொலைக்கு காரணமாக பேராசிரியர் சுதர்ஷன் பத்மனாபனை குறிப்பிட்டிருக்கிறாள்.

சமூக வலைத்தளங்களில் ஃபாத்திமாவின் படுகொலைக்கு நீதி வேண்டி பதிவிடுகின்றவர்கள் பார்ப்பன பேராசிரியர் சுதர்ஷன் பத்மனாபனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கின்றனர். அறப்போர் இயக்கத்தோடும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடும் நெருங்கிய  தொடர்பை பராமரித்து வந்துள்ள பத்மநாபன், இந்த இயக்கங்களுக்கு ஆதரவாக பல கூட்டங்களை நடத்திய விவரங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் (குறிப்பாகடிவிட்டரில்) ஃபாத்திமாவின் படுகொலைக்கு நீதி வேண்டி வெளியாகி உள்ள பதிவுகளின் ஒரு சிறிய தொகுப்பை இந்தப் பதிவின் பின்பகுதியில்  தொகுத்துள்ளோம்.

♦ ♦ ♦

தற்கு முன்  ஃபாத்திமாவின் தாயார் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள் இங்கே.

பாத்திமா லத்தீபின் தாயார்.

”எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதாரணமாக கும்பல் படுகொலை நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.

ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடு எனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.

சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?”

♦ ♦ ♦

”தமிழ்நாடு எனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.” அந்த அப்பாவித் தாயின் நம்பிக்கையை காப்பாற்றத் தவறியிருக்கிறோம் நாம். உண்மையில் தமிழர்கள் என்று பெருமிதப்பட்டுக் கொள்வோரெல்லாம் சோற்றில் உப்பு போட்டு தின்பது உண்மை என்றால், சூடு சொரணை இருப்பது உண்மை என்றால் ஃபாத்திமாவைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க தெருவில் இறங்கிப் போராட வேண்டும்.

தமிழ்நாடு என்பது எங்கள் அந்தப்புரம் தான் என்று கொக்கரிக்கின்றனர் சாதி வெறியர்களும் சனாதனப் பார்ப்பனர்களும், இந்துத்துவ பாசிஸ்டுகளும். தங்கை அனிதா முதல் ஃபாத்திமா வரை சனாதனம் பறித்த உயிர்களே இதற்கு சாட்சி.   நமது முகத்தில் செருப்பை சாணியில் முக்கி அடிகின்றனர் பார்ப்பனியவாதிகள், உறைக்கவில்லையா சக தமிழர்களே?  சாதி மதவாதிகள் எங்கள் மாநிலத்தில் ஆட்டம் போட முடியாது என்று நாமெல்லாம் அடித்துக் கொண்டிருந்த சவடாலை உண்மையென்று நம்பி ஒரு தாய் தன் மகளை அனுப்பி இன்று பறிகொடுத்து விட்டு நிற்கிறாள் – என்ன பதில் சொல்லப் போகிறோம்?

அனிதாவை பறிகொடுத்தோம். நமது அற உணர்ச்சிக்கு ஏற்பட்ட பங்கத்திற்கு டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் பதிவிட்டு களிம்பு தடவிக் கொண்டோம். இந்துத்துவ கூடாரத்தினர் களத்தில் நிற்கிறார்கள் – அன்றும் இன்றும். நாம் மெய் நிகர் உலகம் தரும் பாதுகாப்பில் சுகம் கண்டு தேங்கி நிற்கிறோம். நமது கையாலாகாத்தனத்திற்கு இன்று மற்றுமொரு உயிர் பறிபோய் உள்ளது. இனியும் நீதி கேட்கும் நமது குரல்கள் இணைய வெளிகளில் மட்டும் நின்று விடும் என்றால் நம்மை விட கோழைகள் தொடைநடுங்கிகள் இந்த உலகத்தில் இருக்க முடியாது.

படிக்க:
ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!
ரோஹித் வெமுலா முதல் நஜீப் வரை : தீவிரமடையும் பார்ப்பன பாசிசம்

நீதிக்கான குரல்களை நாம் தெருவில் இறங்கி எழுப்புவோம் தமிழர்களே. அந்தப் பெண் நம்மை நம்பித்தான் வந்தாள். அவளின் கொலைக்கு நீதி வாங்க வேண்டியது நமது கடமைதான்.

♦ ♦ ♦

மூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகளில் சில :

வேணி :
”என்னுடைய பெயரே இங்கு பிரச்சினையாக இருக்கிறது அப்பா” என்று தனது தந்தையிடம் கூறியிருக்கிறார் ஃபாத்திமா. அனைத்திந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஐ.ஐ.டி ஆசிரியர்களின் சாதிய மற்று இசுலாமிய வெறுப்புரீதியான துன்புறுத்தல்களாக் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

மேலும் வாசிக்க #JusticeForFathimaLatheef என்கிற ஹேஷ்டேக்கிற்கு செல்லவும்.

சாக்கியன்