இந்தியாவில் உள்ள 20 ஐ.ஐ.எம்-களில் 8-ல் மட்டுமே எஸ்.சி. / எஸ்.டி. ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். அதிலும் 11 பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு கிடைத்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அளித்துள்ள தரவுகளில் இருந்து இந்த விவரம் தெரியவந்துள்ளது.
ஐ.ஐ.எம். சட்டம் 2017-ன் படி, அனைத்து ஐ.ஐ.எம்-களும் மத்திய கல்வி நிறுவனங்களின் கீழ் வருபவை. மாணவர்கள் சேர்க்கையின்போது, சேர்க்கை ஒதுக்கீடு சட்டம் 2006-ன் படி இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின் பிரிவு 3-ன் படி சேர்க்கையில் பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
2019-ம் ஆண்டில் ஐ.ஐ.எம்-களில் மொத்தமுள்ள 4,118 இடங்களில் 378 இடங்களில் மட்டும் பழங்குடியின மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். அதாவது 9.17% மட்டுமே. அதுபோல, ஐ.ஐ.டி-களில் உள்ள 11,279 இடங்களில் 16% இடங்களில் மட்டுமே பழங்குடியின மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் அலகாபாத் ஐ.ஐ.டி வெளியிட்ட பி.எச்டி படிப்புக்கான விண்ணப்ப அழைப்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்களுக்கான இடஒதுக்கீடு பற்றி குறிப்பிடவில்லை. இடஒதுக்கீடு சட்டம் 2006-ஐ தெளிவாக மீறியிருக்கிறது அலகாபாத் ஐஐடி.
ஆசிரியர் பணி இடங்களில் இடஒதுக்கீட்டு கொள்கையை சரியாக நடைமுறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்றக் குழு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை வினவிய பின்னரே, அரசாங்கம் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிபடுத்தியது.
படிக்க :
♦ மதுரையில் 102 – வது ரசிய சோசலிச புரட்சி நாள் விழா ! படங்கள் !
♦ “காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் ? | பொ.வேல்சாமி
2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு ஆணைப்படி, பட்டியலின சாதியினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடும் தரப்பட வேண்டும். அதைத் தவிர, ஓபிசி பிரிவினருக்கு 27%, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடும் தரப்பட வேண்டும்.
இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போதும், அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப பதவிகளுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கும் 1975-ல் வெளியிடப்பட்ட ஆணையே பின்பற்றப்படுகிறது. ஆரம்ப காலத்திலிருந்து ஐஐஎம்-கள் இடஒதுக்கீடு வழங்குவதை மறுத்து வருகின்றன. ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர், பொது பிரிவில் இருந்தே பணியிடங்களுக்கு போட்டியிடுகின்றனர்.
எனவே, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவு ஐஐஎம் என்னும் உயர்சாதி கல்வி மடங்களில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பட்டியலின/ பழங்குடியின மக்களுக்கு வழங்கியிருக்கும் அநீதியை சுட்டிக்காட்டுகிறது.
1. அகமதாபாத் ஐஐஎம் – 0 பணியிடம்
2. கொல்கத்தா ஐஐஎம் – 0 பணியிடம்
3. பெங்களூரு ஐஐஎம் – 1 பணியிடம்
4. லக்னோ ஐஐஎம் – 1 பணியிடம்
5. இந்தூர் ஐஐஎம் – 0 பணியிடம்
6. கோழிக்கோடு ஐஐஎம் – 2 பணியிடங்கள்
7. சில்லாங் ஐஐஎம் – 2 பணியிடங்கள்
8. ரோத்தாக் ஐஐஎம் – 1 பணியிடம்
9. காசிபூர் ஐஐஎம் – 0 பணியிடம்
10. உதைப்பூர் ஐஐஎம் – 1 பணியிடம்
11. திருச்சிராப்பள்ளி ஐஐஎம் – 0 பணியிடம்
12. ராஞ்சி ஐஐஎம் – 0 பணியிடம்
13. விசாகப்பட்டினர் ஐஐஎம் – 0 பணியிடம்
14. சம்பல்பூர் ஐஐஎம் – 0 பணியிடம்
15. சிர்மாவூர் ஐஐஎம் – 1 பணியிடம்
16. புத்த கயா ஐஐஎம் – 0 பணியிடம்
17. நாக்பூர் ஐஐஎம் – 0 பணியிடம்
18. அம்ரித்சர் ஐஐஎம் – 0 பணியிடம்
19. ஜம்மு ஐஐஎம் – 2 இடங்கள்
20. ராய்பூர் ஐஐஎம் – 0 பணியிடம்
அரசியலமைப்பு, சட்டம், நீதிமன்றம் என அனைத்துக்கும் மேலானவர்களாக ஐஐடி-கள், ஐஐஎம்-களை ஆக்கிரமித்துள்ளனர் பார்ப்பன – பனியாக்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகால சாதியமைப்பு முறை, நவீன காலத்திலும் இந்த உயர்கல்விக்கூடங்களை ஆக்கிரமித்துள்ளது பெரும்பான்மை இந்தியர்களுக்கு இழுக்கு சேர்ப்பதாகும். பெரும்பான்மை இந்தியர்களை கும்பல் வன்முறையாளர்களாகவே வைத்திருக்க பார்ப்பன கும்பல் ஏன் விரும்புகிறது என்பதற்கான பதிலும் இதிலேதான் உள்ளது.
அனிதா
நன்றி : சப்ரங் இந்தியா.