“காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் ?

நண்பர்களே….

பொ.வேல்சாமி

செப்டம்பர் மற்றும் நவம்பர் 2019 காலச்சுவடு இதழ்களில் பி.ஏ.கிருஷ்ணன் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் மீதும் வடமொழி மீதும் கீழடி ஆய்வுகளின் அடிப்படையில் சில கருத்துகளைக் கூறுகின்றார். இந்தக் கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகள் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் மிகவும் வருந்துவதாக அதன் பொறுப்பாசிரியர் நவம்பர் 2019 இதழில் ஒரு குறிப்பு எழுதியிருக்கின்றார். இந்தக் குறிப்பு இன்னொரு செய்தியையும் சொல்லாமல் சொல்கிறது. அதாவது, பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடைய கட்டுரை அறிவுபூர்வமானது. எதிர்வினைகள் உணர்ச்சிபூர்வமானது.

இந்த இடத்தில் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன….

1. செப்டம்பர் 2019 இதழில் பக்.20 இல் ஒரு இடத்தில் வேதங்கள் எழுதப்பட்டது சமஸ்கிருதத்தில் என்கிறார். அதே பக்கத்தில் வேதங்கள் வாய்வழியாக வந்தது என்கிறார். ( உலக மொழிகள் அனைத்தும் வாய்வழியாகத் தான் வந்தன என்று அறிஞர்கள் செப்புவர் ) அப்படியானால் வேதச்சொற்களுக்கு பொருள் கூறும் “யாஷ்கநிருத்தம்” முன்னுரையில் குத்சர் என்ற ரிஷியானவர் மிகப் பழங்காலத்திலேயே வேதச்சொற்களுக்கு பொருள் இல்லை என்று கூறியிருப்பதை எப்படி புரிந்துகொள்வது ? வெறுமனே இப்படி கேள்வி எழுப்புபவர்களை “அறிவிலி”கள் என்று சாடுவது அறிவுபூர்வமானதா ?,

பி.ஏ.கிருஷ்ணன்

2. பிராகிருதம் சமஸ்கிருதம் இரண்டும் வேத சமஸ்கிருதத்தின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் என்று பிரசவம் பார்த்த மருத்துவர் போல கூறுகிறாரே, அப்படியானால் தமிழில் உள்ள தண்டியலங்காரம் நூலில் “இவ்வாற்றான் தமிழ்ச்சொல்லெல்லாம் “பிராகிருத” மெனப்படும்” என்று குறிப்பிட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்லுவார் ?

3. அறிவியல் கண்ணோட்டம் இன்றி உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பேசுகின்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தகையவர்களுக்கு அறிவியல்பூர்வமாகச் செய்திகளைச் சொல்லுகின்றோம் என்று வருபவரும் அதே தன்மையில் பேசுவது எந்த வகையில் நியாயமானது ?

இந்தியாவின் எழுத்து வரலாறு பற்றி தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள், எழுத்து வளர்ச்சியின் காலகட்டங்களை குறிப்பிடவில்லை. ( உதாரணமாக ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தென்னிந்தியாவில் சமஸ்கிருதமொழியை எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட கிரந்தத்திற்கும் பின்னர் 500, 600 ஆண்டுகள் கழித்து வடஇந்தியாவில் உருவாக்கப்பட்ட தேவநாகரி எழுத்து வடிவத்திற்கும் உள்ள காலஇடைவெளி போன்றவை ) 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டு பிராமி எழுத்தில் எழுதப்பட்ட பல தமிழ் கல்வெட்டுகளை தன்னுடைய கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அதேபோல சமஸ்கிருத கல்வெட்டுகளையும் காட்டியிருப்பார் என்று ஆவலுடன் நாம் பார்த்தால் ஒன்றையும் காணோம். கி.பி.150 வாக்கில் எழுதப்பட்ட ஒரு சமஸ்கிருத கல்வெட்டைக் குறிப்பிடுகின்றார். மற்ற கல்வெட்டுகள் அழகிலும் அலங்காரத்திலும் மிகப் பிரமாதம் என்று சொல்லுகின்ற இவர் அவற்றையும் எடுத்துக்காட்டலாம் அல்லவா? வருகின்ற காலச்சுவடு இதழ்களில் அய்யா அவர்கள் குறிப்பிடுகின்ற பழங்காலத்து அழகிய சமஸ்கிருத கல்வெட்டுகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ( அப்படியான கல்வெட்டுகள் ஏதும் இல்லை என்று கல்வெட்டு அறிஞர்கள் கூறியுள்ள செய்தியை அய்யா பொய்யாக்க வேண்டும். )

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குறிப்பு : மிக விரிவாக எழுத வேண்டிய கட்டுரை ஒன்றுக்கான செய்தியை முகநூல் நண்பர்களுக்காக மிக மிக சுருக்கமாக எழுதியுள்ளேன்.

***

“கீழடி” ஆய்வுக்கு உதவியாக தமிழக இந்திய எழுத்துகளின் வரலாற்றைக் கூறும் நூல்களின் PDF வடிவம் உங்களுக்காக…..

நண்பர்களே….

சென்ற பதிவைச் (22.11.2019) சுருக்கமாக எழுதியதால் எழுத்துப் பற்றிய வரலாற்று நூல்களையும் அவற்றின் கருத்துகளையும் உங்களுக்கு விரிவாகச் சொல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது. தமிழில் இன்று எழுதிக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் ஆசிரிய பெரு மக்களும் சென்ற பதிவை பெரியளவில் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இது இத்துறைச் சார்ந்து நண்பர்கள் பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. எனவே இது சார்ந்து சிந்திப்பதற்கு துணையாக இந்திய, தமிழ்நாட்டு எழுத்து வரலாற்றை ஆராய்ச்சியுடனும் ஆதாரத்துடனும் விளக்கும் சில நூல்களை நீங்கள் தரவிறக்கம் செய்து கொண்டு வாசிப்பதற்கு வசதியாக இணையதள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

இதில்
1. அசோகன் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள்.
2. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள பிராமி எழுத்துகளின் வரலாறு.
3. கிரந்த எழுத்துகளின் வரலாறு.
4. வட்டெழுத்துகளின் வரலாறு.
இவ்வாறான எழுத்து வரலாற்று செய்திகளை எத்தகையவருக்கும் எளிதாகப் புரியும்படியான நூல்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதில் ஒரு நூல் ஆங்கிலத்தில் உள்ளது. தென்னிந்தியாவின் எழுத்து வரலாற்றை 1878 இல் முதன்முதலாக ஆராய்ந்த நூல் இதுதான் என்பது குறி்ப்பிடத்தக்கது.

கல்வெட்டியல்

தமிழ் வட்டெழுத்து

பண்டைத் தமிழ் எழுத்துக்கள்

தமிழ்நாடு எழுத்து வளர்ச்சி

அசோகனுடைய சாஸனங்கள்

இந்தியக் கல்வெட்டுகளும் எழுத்துகளும்

தென்னிந்திய எழுத்துக்களின் வரலாறு A.C.பர்னல் ENGLISH 1878

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

3 மறுமொழிகள்

  1. //“காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் ?//

    அந்த கிறுக்கு பார்ப்பான் தன்னை தானே சொல்லி கொள்கிறார் போல , பார்ப்பானுக்கு எது அல்லது யார் அணுகலமாக இல்லையய அவர்களை வசைபாடுவது தொன்று தொட்டு நடந்து வருவது தானே …

  2. //எது அல்லது யார் அணுகலமாக இல்லையய//

    சிறு தட்டச்சு பிழை *எது அல்லது யார் அனுகூலமாக இல்லையோ* என்று புரிந்துகொள்ளவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க