னித குலத்தை அழிக்கும் முதலாளித்துவத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் வீழ்த்துவோம் என்கிற தலைப்பில் நவம்பர் புரட்சி தின விழா நடைபெற்றது. ம.க.இ.க. மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் விழாவிற்கு தலைமை தாங்கினார் வீரவணக்க பாடலுடன் கூட்டம் தொடங்கியது. தோழர் இராமலிங்கம் தனது தலைமை உரையில் “இந்த விழா பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நடக்கிறது. நாம் ஏற்கனவே ஏற்பாடு செய்த மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் காவல் துறை தடுத்துள்ளது. மண்டப உரிமையாளரை மிரட்டி மண்டபத்தை தரவிடாமல் தடுத்துள்ளது. மக்களுக்காக களத்தில் நிற்கும் செயல்பாட்டாளர்கள் அமைப்பினரை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள். இது இந்த நாட்டில் பாசிசம் பகிரங்கமாக வந்து கொண்டிருப்பதற்கான சான்று.  இதை முறியடிக்க தோழர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் ” எனக் கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக பேசிய பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் சினேகா ‘‘பாசிச நீதி மன்றத்தில் டிமிட்ரோவ் உரை” என்கிற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார். அதில் இட்லரின் நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட பொய் சதி வழக்கையும் கம்யூனிஸ்டுகள் மீதான அவதூறையும் தோழர் டிமிட்ரோவ் முறியடித்த விசயங்களை பேசினார் இன்று இங்கு நம் நாட்டில் பாசிசம் எப்படி அரங்கேறி இருக்கிறது என்பதையும் விளக்கினார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி “மீள முடியாத நெருக்கடியில் இந்தியப் பொருளாதாரம்” என்கிற தலைப்பில் பேசினார்.  “இன்றைய பொருளாதார நெருக்கடி எப்படி ஆட்டோமொபைல் துறை கட்டுமானத்துறை என தொடர்ந்து எல்லா துறைகளும் எப்படி நெருக்கடியில் சிக்கியுள்ளது இந்த நெருக்கடியை தீர்க்க இந்த மோடி கும்பல் எடுத்து வரும் நடவடிக்கைகள் மீண்டும் எப்படி படுகுழியை நோக்கியே போகிறது என்பதையும் இந்த நெருக்கடியை தீர்க்க இவர்களால் முடியாது என்பதனை அம்பலப்படுத்தி பேசினார்.

படிக்க :
குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !

அடுத்ததாக, சமநீதி வழக்குரைஞர்கள் சங்கத்தின் வழக்குரைஞர் கனகவேல், காஷ்மீரின் வரலாற்று பின்னணி அரசியலை சுருக்கமாக எடுத்துரைத்த அவர், ”இந்தியாவில் மதக்கலவரங்கள் எப்படி பிரிட்டிஷ் வருகைக்கு பிறகு அதிக அளவில் நடந்தது அது மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் நினைத்திருந்தால் சமஸ்தானங்களை முன்பே ஒருங்கிணைத்து ஒரு நாட்டை உருவாக்கியிருக்க முடியும் அப்படி செய்யாமல் எப்படி மக்களை பிரித்தாளும் கொள்கை மூலமாக ஆட்சி செய்தார்கள் அதன் தொடர்ச்சிதான் காஷ்மீர் பிரச்சனை” என்பதனை வரலாற்று விவரங்களிலிருந்து விளக்கினார்.

இதன் தொடர்ச்சியாக, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன், “காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை எப்படி நீக்கினார்கள். இது எப்படி அடிப்படை அரசியல் சட்டத்திற்கே முரணான சட்டவிரோதம் என்பதை சட்ட வரையறைகளிலிருந்து எடுத்துரைத்தார். மேலும், சட்டப்பிரிவு 370 போட்டது தொடங்கி இன்று வரை காஷ்மீர் அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் நிலைமைகள் உட்பட அனைத்தும் அடிப்படை சட்டத்திற்கே விரோதமாகத்தான் நடைபெற்று வந்திருக்கின்றன என்பதையும் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி விரிவான உரை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோனிராஜ் அவர்கள் “நெருங்கி வரும் பாசிசத்தை எதிர்கொள்வது எப்படி” என்கிற தலைப்பில் விவாதமாக ஒருங்கிணைத்தார். ஆரம்பத்தில் பாசிசம் என்றால் என்ன? அது தோன்றுவதற்கான அடிப்படைகள் என்ன என்பதை விளக்கிய அவர், இன்றைய இந்திய சூழலில் பாசிசம் வளர்ந்து வருவதை ஒப்பிட்டு பேசினார். அதிலிருந்து கேள்வி பதிலாக அமைந்தது அந்த நிகழ்வு.

இறுதி நிகழ்வாக, ம.க.இ.க. அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் அவர்கள்,” மனித சமூகத்தை அழிக்கும் முதலாளித்துவத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமாக வீழ்த்துவோம்!” என்கிற தலைப்பில் இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு வேலையின்மை, வேலையிழப்பு, பசி, பஞ்சம், விவசாய அழிப்பு, இயற்கை வளக்கொள்ளை, போதை சீரழிவு, பெண்கள் மீதான அடக்குமுறை, இலஞ்சம் ஊழல், தீவிரமான வரிச்சுரண்டல் இப்படி இன்னும் ஏராளமான பிரச்சனைகளின் ஊற்றுக்கண்ணாக உள்ளதைப் பற்றியும், இதற்கு மாற்றாக சோசலிசம் சாதித்த சாதனைகள் அதன் இன்றைய தேவை அதை அடைய புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்” என பேசி தனது இறுதி உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில், ”ரசிய புரட்சி சாதித்தது அதன் இன்றைய தேவை” குறித்து கவிதை வாசித்தார் வழக்குரைஞர் நடராஜன். காவிக்கும்பலை அதன் பொய் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி ஒரு நீண்ட கவிதை வாசித்தார், லயனல் அந்தோணிராஜ். தோழர் திரு -வின் ஒக்கி புயலின் அழியா நினைவு குறித்த பாடலும் அவரது கவிதையும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி குறித்து பு.மா.இ.மு. ஒருங்கிணைப்பில் தோழர்கள் மற்றும் குழந்தைகளின் பங்கேற்பில் நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கிடையே பல்வேறு அரசியல் சூழல்களின்போது பாடப்பட்ட புரட்சிகர பாடல்களை பாடினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு மாட்டுக்கறி விருந்து வழங்கப்பட்டது.

பு.மா.இ.மு. தோழர் ராஜ்குமார் நன்றியுரையுடன் அரங்க நிகழ்வுகள் முடிவடைந்தது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க