ரசியப் புரட்சியைக் கொண்டாட வேண்டும்!
சோசலிச அரசின் சாதனைகளை நினைத்திட வேண்டும்!
கடந்த கால வரலாறு தெரியாதவருக்கு நிகழ்காலம் புரியாது.
நிகழ்காலம் புரியாதவருக்கு எதிர்காலமில்லை!
நவ-7,1917-ல் தோழர் லெனின் தலைமையிலான ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களைத் திரட்டி சோசலிச கொள்கைகளைப் பரப்பி புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. உலக அரங்கில் முதல் உழைப்பவர்கள் அரசாக உதயமானது. இதனைப் பார்த்த உலக முதலாளிகளை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. அவரவர் நாட்டு மக்களை திருப்திப்படுத்த புதிய சட்டங்கள், போலித்தனமான சீர்திருத்தங்கள், சலுகைகள் காட்டினார்கள்!
- ரசிய மக்கள் சந்தித்த வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், ஜார் மன்னன் – முதலாளிகளின் சுரண்டல் – சொத்துக்குவிப்பு, அடக்குமுறைகள் மொத்தமாக ஒழிக்கப்பட்டது!
- நிலப்பகிர்வு – கூட்டு விவசாயம், மின்சாரமயம், தொழில்துறை வளர்ச்சி மூலம் உண்டான உபரியை பொதுவுடைமை என்றதோடு நில்லாமல் ஏழை நாடுகளுக்கும் பகிர்ந்து தந்தனர்!
- 20 வயது வரை கட்டாயக் கல்வி, அனைவருக்கும் வேலை – வீடு, மருத்துவம், சுகாதாரம், ரேசன் மூலம் தரமான உணவு வினியோகம் என அனைத்தையும் லெனின் தலைமையிலான சோசலிச அரசு பொறுப்பு ஏற்றுச் சாதித்தது!
- சோசலிசக் கொள்கை நடைமுறையால் போட்டி – பொறாமை, திருட்டு – பதுக்கல், கொலை – கொள்ளை சமூக குற்றங்கள் ஒழிந்தும் அவசியமின்றியும் சிறைச்சாலைகள் காலியாகின!
- தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 36 மணி நேர வேலை எனத் தீர்மானிக்கப்பட்டது. கூலிக்காக உழைப்பது என்றில்லாமல் நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக உழைத்ததன் மூலம் ஐந்தாண்டு திட்டங்களை மூன்றாண்டுகளில் நிறைவேற்றிச் சாதித்தனர்!
- உலகில் முதல்முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமையும், பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்திருக்கும் உரிமையும், அரசியல் உரிமைகள், பேறுகால விடுமுறைகள் வழங்கி பெண்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது!
- பொதுசமையல் முறை திட்டம் நடைமுறைப்படுத்தி அடுப்படியிலிருந்து பெண்களுக்கு விடுதலை அளித்தது சோசலிச அரசு.
- சோசலிச கொள்கையால் உற்பத்தி பெருகியது. – தனிச்சொத்துடமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் திருட்டு – பதுக்கலுக்கு அவசியமில்லை என மக்கள் பண்பில் மாற்றம் ஏற்பட்டது.
- விலைவாசி உயர்வு தடுக்கப்பட்டது. மொத்தத்தில் வறுமை ஒழிந்து கல்வி – அறிவியல் ஆராய்ச்சி வளர்ந்து மேலும் தொழிற்துறை – உற்பத்தி, வளர்ச்சி விண்ணைத் தொட்டது!
- உலகின் பல நாடுகளுக்குத் தொழில்நுட்ப உதவிகள் செய்தது சோசலிச அரசு!
- சோசலிச ஆட்சியின் சாதனைகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் எதிரொலியாக பகத்சிங் போன்ற இளைஞர்களை விடுதலை போராட்டக் களம் ஈர்த்தது!
நேற்று … இன்று… நாளை?
மறைக்கப்படும் வரலாற்றை அறிவோம்!
சார்பியல் விதிகளைப் புரிந்து கொள்வோம்!
360 கோணங்களில் சிந்திப்போம்!
சுரண்டலையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம்!
- 1931: உலக சுற்றுப் பயணம் சென்று வந்த பெரியார், கலைவாணர் NS கிருஷ்ணன் (பயணம் 1951) தொடங்கி காமராஜர் (பயணம்1966), கண்ணதாசன் வரை இப்புவிப்பரப்பில் சொர்க்கம் ஒன்றை ரசிய தொழிலாளர்கள் உருவாக்கிவிட்டதாக கூறினார்கள்!
- 1917-ல் மற்றொரு பக்கம் ரஷ்ய சோசலிச புரட்சியின் விளைவாக உலகெங்கும் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் விடுதலை போராட்டம் தீவிரமானது!
- 1919-ல் ரசியப் புரட்சி எதிரொலியாக, குறிப்பாக இந்தியாவில் மான்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம் மூலம் இரட்டை ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டது. அரசு கட்டமைப்பில் (நாடாளுமன்றத்தில்) மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பு என மாற்றங்களைக் கொண்டுவந்தது ஆங்கிலேயர் அரசு! (இன்றோ அந்த போலி ஜனநாயக கட்டமைப்பின் யோக்கியதை அம்பலப்பட்டுப் போய் சந்தி சிரிக்கிறது)
1923 – தொழிலாளர் இழப்பீடு சட்டம்,
1926 – தொழிற்சங்க சட்டம்,
1936 – சம்பளம் வழங்கல் சட்டம்
என சில சட்ட உரிமைகள் வழங்கி தொழிலாளர்களை கம்யூனிச புரட்சிகர சிந்தனைகளிலிருந்து திசைதிருப்பியது ஆங்கிலேயர் அரசு. - 1930 – ல் முதலாளித்துவ கொள்கையைப் பின்பற்றிய அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளில் சுரண்டலால் நெருக்கடிகள் சூழ்ந்தது. அவற்றின் காலனி நாடுகளில் பஞ்சம், பசி, பட்டினியால் பல லட்சம் மக்கள் இறந்து போனார்கள். ரஷ்யாவில் முதலாளிகளின் சுரண்டல் தடை செய்யப்பட்டதால் துளியும் பாதிப்பு இல்லாமல் ரஷ்ய மக்கள் நிமிர்ந்து நின்றார்கள்!
- 1939-ல் ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் முதலாளிகளின் அரசுகளால் சந்தை பிடிக்கும் போட்டியில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது!
- 1945 – ல் ஹிட்லர் முசோலினி பாசிச கும்பலை ஒழித்துக் கட்டி, உலகை மீட்டது ஸ்டாலின் தலைமையிலான செம்படை!!
- 1947 – ல் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் காலனி ஆட்சிகள் முடிவுக்கு வந்து சுதந்திரம் என அறிவிக்கப்பட்டது, பெயரளவிலான, அரைகுறை முதலாளித்துவ ஜனநாயக ஆட்சிமுறை அமலுக்கு வந்தது.
- 1949 – ல் சீன பொதுவுடைமை கட்சி மாவோ தலைமையில் நடைபெற்ற புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் மக்கள் சீனம் உதயமானது. பொதுவுடைமை கொள்கை – தன்னிறைவு பொருளாதாரம் விதைக்கப்பட்டது. இன்று பொருளாதார வல்லரசாக அடிப்படையாக உள்ளது!
- 1953-ல் தோழர் ஸ்டாலின் மறைவு,
1975-ல் தோழர் மாவோ மறைவு.
மாபெரும் இரு தலைவர்களின் மறைவுக்குப் பின் அந்நாட்டு அரசுகளின் இயல்புகள் மாறியது! - 1991-ல் சோவியத் கூட்டமைப்பு பிரியாதவரை தொழிலாளர்கள், உழைக்கும் பிரிவினரின் உரிமைக்குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தது. சட்ட உரிமைகள் கிடைத்தது. USSR உடைந்த பிறகு உலக அரங்கில் அமெரிக்காவின் கைகள் ஓங்கியது!
- 1995-ல் அமெரிக்கா தலைமையிலான W.T.O மூலம் GATT ஒப்பந்தம் இந்தியாவில் போடப்பட்டு மீண்டும் பொருளாதார காலனி ஆக்கும் சதித்திட்டங்கள் அரங்கேறியது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற பெயரில் கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் சுரண்டல் அனுமதிக்கப்பட்டது. மெல்ல, மெல்லச் சட்ட உரிமைகள் கூட மறுக்கப்பட்டது.
- 2014-ல் இந்தியாவில் பிற்போக்கு, சுரண்டல் சொத்துடைமை வகுப்பினரின் RSS-BJP தலைமையில் பாசிச ஆட்சி அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 44 தொழிலாளர் சட்டங்கள் உட்பட நூற்றுக்கணக்கான சட்டங்கள் திருத்தப்பட்டு, தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், சிறு – குறு தொழில் முனைவோர் பொதுமக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது!
கல்வி, மருத்துவம், விவசாயம், தொழில்துறை, வங்கி, தொலைப்பேசி, எரிபொருள், இன்சூரன்ஸ், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், ஜவுளி, சிறு – குறுந்தொழில் என எல்லாம் கார்ப்பரேட் கொள்ளைக்குத் திறக்கப்பட்டு விட்டது. கார்ப்பரேட் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி என்று பொய் பேசுகின்றனர்!கார்ப்பரேட் சுரண்டல் கொள்கையால் விலைவாசி உயர்வு, வேலை நிரந்தரமின்மை, கல்வி – உழைப்புக்கேற்ற கூலியின்மை, நாடோடிமயமான வாழ்க்கை, பெண்கள் பாதுகாப்பின்மை, கட்டற்ற போதை – ஆபாசம் – சீரழிவு என நாட்டு மக்களைச் சுற்றிவளைத்துக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கிடையே மக்களைப் பிரிக்க ஜாதி – மத வெறுப்பு அரசியலைத் தீவிரப்படுத்துகின்றனர்!
உழைக்கும் மக்களைப் பாதுகாக்க
இயற்கை வளங்களைப் பாதுகாக்க
மீண்டும் தேவை, தொழிலாளர் தலைமையிலான சோசலிசப் புரட்சி!
தொழிலாளர் சிந்தனைகள்
07.11.2024
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram