கர்நாடகா பிதாரில் ஒரு தனியார் பள்ளி செயல்படுகிறது. அந்தப் பள்ளியின் விழா ஒன்றில் நான்காம் வகுப்பு பயிலும் குழந்தைகள் ஒரு நாடகம் போட்டனர். அந்த நாடகம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறது.
இந்த நாடகத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகியிருக்கிறது. முகமது யூசுப் ரஹீம் எனும் பிதாரைச் சேர்ந்த பத்திரிகையாளர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். விடுவார்களா சங்கிகள்?
லோக்கல் சங்கியான நீலஷ் ரக்ஷயால் உடனே உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் அந்த நாடகம் பிரதமர் மோடியை மோசமான முறையில் காட்டி அவரது ஆளுமைக்கு பங்கம் வருமாறு நடத்தப்பட்டருக்கிறது என்கிறார் அந்த சங்கி.
எடப்பாடி ஆட்சியிலேயே பாஜகவிற்கு ஒன்று என்றால் பொங்குவார்கள். அதுவே எடியூரப்பா ஆட்சி என்றால் சும்மா விடுவார்களா? உடனே போலிசார் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது தேசதுரோக பிரிவான 124A மற்றும் 50பிரிவின் கீழ வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பள்ளி நிர்வாகமோ நடப்பு நிகழ்வு குறித்து ஒரு நாடகம் போட்டதற்கு வழக்கா?! என்று அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
நாடகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டும் அமலுக்கு வந்தால் முஸ்லீம்கள் வலுவந்தமாக இந்தியாவை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று காட்டப்பட்டிருப்பதா புகார் கொடுத்த சங்கி கூறுகிறார். இதிலென்ன மூடுமந்திரம் இருக்கிறது? இதற்காகத்தானே முழு இந்தியாவும் போராடி வருகிறது?
இந்தப் பள்ளியானது ஷாஹீன் குழு நிறுவனம் எனும் பிரபலமான முசுலீம் கல்வி குழுமத்திற்கு சொந்தமானது. பிதாரில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் பள்ளிகளை நடத்தி வருகிறது இந்நிறுவனம். போலீசு பள்ளி நிர்வாகத்தின் மீது மட்டுமல்ல ஃபேஸ்புக்கில் வீடியோவை வெளியிட்ட ரஹீம் மேலும் வழக்கு பதிவு செய்திருக்கிறது. புகாரை பதிவு செய்து வழக்கை விசாரித்து வருவதாக காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளரை ஸ்ரீதரா கூறியிருக்கிறார்.
இந்தியாவெங்கும் போராட்டம் நடக்கும் போது அதை சுட்டிக் காட்டி நான்காம் வகுப்பு குழந்தைகள் நாடகம் போட்டது குற்றமா? கடந்த மூன்று நாட்களாக போலீசார் குழந்தைகளிடம் விசாரித்து மிரட்டி வருகின்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்போவதாக மிரட்டுவதாகவும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தவுசிப் சாப் கூறியிருக்கிறார்.
படிக்க:
♦ “உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி !
♦ குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பின்லாந்தில் போராட்டம் !
கடந்த மாதம் தெற்கு கர்நாடகாவில் இருக்கும் பன்ட்வால் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமா பள்ளியில் (ஆர்.எஸ்.எஸ் தலைவரான பிராபகர் பத் கல்லாட்காவிற்கு சொந்தமானது). பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தி நாடகம் போடப்பட்டது.
இந்த நாடகம்தான் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துமென பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் போலிசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் போலிசோ வெறும் ஐ.பி.சி செக்சன் 295ஏ-வில் மட்டும் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
நான்காம் வகுப்பு குழந்தைகள் போட்ட நாடகம் ஒரு தேச விரோதம் என வழக்கமாக சங்கிகள் கூறும் அவதூறை புகார் கொடுத்த சங்கியும் கூறுகிறார். ஆனாலும் என்ன செய்ய? தேசம் முழுவதும் ‘தேச விரோதிகளின்’ எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
மதன்