Tuesday, May 24, 2022
முகப்பு செய்தி இந்தியா பயங்கரவாத பாஜக : இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமாம் !

பயங்கரவாத பாஜக : இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமாம் !

நாடு முழுவதும் கொலைகார குண்டர் படையை , காவி கும்பல் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்று, பா.ஜ.க. - எம்.எல்.ஏ ராஜாசிங்கின் பேச்சு.

-

விஜிலண்ட் ஆர்மி என்ற பெயரில் ஷாகா நடத்திய ஹைதராபாத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ “இந்துக்கள் ஆயுதப் பயிற்சி பெற வேண்டும்” என்று கூறியுள்ளார். டி.ராஜாசிங் மீது மசூதியைத் தாக்கியது உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

‘தற்காப்புக்காக’ ஆயுதங்களை இயக்க இந்துக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ, டி.ராஜாசிங் தெரிவித்துள்ளார். இத்தகைய பேச்சு இவருக்கு முதல்முறையல்ல. வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசி இரு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது உட்பட சிங் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிறன்று (9.2.2020), மகாராஷ்டிராவின் ஜல்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது இந்துக்களுக்கு தற்காப்புக்காக ஆயுதங்களை இயக்குவதில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக நின்றால் மட்டுமே இந்து ராஷ்டிரத்தை அடைவதற்கான தனது கனவை நிறைவேற்ற முடியும். 2023 -க்குள் இந்தியா இந்து ராஷ்டிரமாக மாறும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ டி.ராஜாசிங்

CAA, NRC ஆகியவற்றிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் இச்சட்டங்களை ஆதரித்து இக்கூட்டத்தில் பேசியுள்ளார். இவர் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரே பா.ஜ.க. எம்.எல்.ஏ.

இந்துக்கள் அனைவரும் ஆயுதப் பயிற்சி பெற வேண்டும் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அத்தகைய பயிற்சி அளிக்கப்படும் முகாம்களையும் (ஷாகாக்கள்) நடத்தியுள்ளார். ‘துரோகிகளை’ சமாளிக்க ‘விஜிலண்ட் ஆர்மி’ உருவாக்குவதாக 2019 செப்டம்பரில் அறிவித்து சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டுள்ள வீடியோக்களில், “ஆறு மாதங்களுக்கு முன்பு, நாங்கள் முகாமைத் திட்டமிட்டோம். ஒரு தேதியைத் தீர்மானித்து இந்துக்களில் துணிச்சலானவர்களையும் தேசபக்தர்களையும் முகாமில் கலந்து கொள்ள அழைத்தோம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு படைவீரனாக பயிற்சி அளிக்கப்படும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் இராணுவம் காரணமாக இந்தியா பாதுகாப்பாக உள்ளது, இதேபோல் அனைத்து இந்திய இளைஞர்களும் ஒரு ராணுவ வீரரைப் போல தயாராக இருப்பார்கள், வரும் நாட்களில் இந்தியாவுக்கு இது தேவைப்பட்டால் இந்திய இளைஞர்கள் பின்வாங்கக் கூடாது. வெளியில் துரோகிகளை இந்திய இராணுவம் கவனித்து வருகிறது. ஆனால் நாட்டினுள் இருக்கும் பயங்கரவாதிகளை கவனித்துக் கொள்ள ஒரு ராணுவம் இருக்க வேண்டும். தற்போது அத்தகைய இராணுவம் தயாராக உள்ளது”. என்று கூறியுள்ளார்.

பெங்களூருவில் நடந்த இந்த ஷாகாவில் 470 பேர் கலந்து கொண்டனர் என நியூஸ் மினிட் செய்தி கூறுகிறது.

படிக்க:
பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான விசத்தை கக்குவது ஏன் ?
♦ பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !

டிசம்பர் 2019 -ல் அவனது பெயர் ஹைதராபாத்தில் ரவுடிகள் பட்டியலில் இருந்தது. மங்கல்ஹாட் காவல்நிலையத்தால் பராமரிக்கப்படும் குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கின் சமீபத்திய தேர்தல் வாக்குமூலத்தின்படி, அவர் மீது 43 போலீஸ் வழக்குகள் உள்ளன. ஒரு மசூதியைத் தாக்கியதற்காக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆல்ட் நியூஸின் 2017-ம் ஆண்டின் அறிக்கையின் படி, மக்களின் தலைகளை துண்டிப்பதாக அச்சுறுத்துவது, காஷ்மீர் தொழில்களை புறக்கணிக்குமாறு மக்களிடம் கூறுவது, தலித் எதிர்ப்பு அறிக்கைகளை விடுவது போன்ற குற்றச்சாட்டுகள் ராஜா சிங் மீது உள்ளது.

வினவு செய்திப் பிரிவு
தமிழாக்கம் :
சமீரா
நன்றி :  தி வயர். 

  1. காவிகளுக்கு ஆயுதப் பயிற்சி…எடுக்கட்டும்.இந்திய மக்கள் அவர்களை துடைத்தெறியும் போது..கோழைகளை கொன்று விட்டார்கள் என்று வரலாறு நம் மீது பழி சுமத்தாமல் இருக்கும்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க