Monday, September 16, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுசென்னையின் ஷாகீன் பாக் - தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் !

சென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் !

பாஜக காவி கும்பல் ஆட்சி செய்யும் மாநிலங்களின் போலீசுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என, அடிமை எடப்பாடி போலீசு நிரூபித்திருக்கிறது.

-

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், பற்றி பரவி வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் நடந்துவரும் தொடர் போராட்டங்களை முன் மாதிரியாகக் கொண்டு, பல இடங்களில் போராட்டங்கள் பரவி வருகின்றன. மேலும் இந்தியாவெங்கும் இசுலாமியர்கள் தங்கள் பகுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையின் போதும் அமைதியாக கூடி CAA, NRC, NPR –க்கு எதிர்ப்பு தெரிவிப்பதை செய்து வருகின்றனர்.

அதே போல நேற்று (14.02.2020) சென்னை வண்ணாரபேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்த இசுலாமியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அமைதி வழியில் திரண்டு போராடினர். அப்போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகையை முன்வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் விதமாக போலீசு அதிகாரி  தனது நரித்தனத்தை தொடங்கியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தனிமைப்படுத்தி இழுத்துச் செல்வது, அவர்களை கடுமையாக தாக்குவது என தனது சுயரூபத்தை காட்டத் துவங்கியது போலீசு. ஆண்கள் இவ்வாறு கைது செய்யப்படுவதைத் தொடர்ந்து, பெண்களும் போராட்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரமடையத் தொடங்கியது. மேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். என அவர்கள் முழக்கமிடத் துவங்கினர்.

ஒரு சிலரை கைது செய்வதன் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, சி.ஏ.ஏ. போராட்டங்களை நீர்த்துப் போக செய்ய போலீசு மேற்கொண்ட முயற்சி வீணாகிப் போனது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலீசு தனது வக்கிரத் தாக்குதலை பெண்கள் மீதும் தொடுக்க ஆரம்பித்தது.

படிக்க :
ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !
♦ நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் !

குறிப்பாக டெல்லி போலிசார் ஜாமியா பல்கலைக் கழகத்தில் மாணவிகள் மீது என்ன மாதிரியான பாலியல் வக்கிரத் தாக்குதலை அரங்கேற்றியதோ அதற்கு சற்றும் குறையாத வகையில், போராடும் பெண்களை மார்பகங்களில் தாக்குவது என கோரத்தாண்டவமாடியது. மேலும் ஆபாச வசவுகளையும் பொழிந்துள்ளது. போராடும் பெண்களில் பலரும் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை விடவும் போலீசின் ஆபாச வசவுகளால் கூனிப் போயுள்ளனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் வேறு வழியின்றி சென்னை கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 120 பேரை விடுவித்துள்ளார்.

மேலும் போராட்டத்தின் போது போலீசார் தொடுத்த தாக்குதலில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 70 வயது முதியவர் ஒருவர் மரணித்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசு தரப்போ  அதனை மறுத்துள்ளது.

இந்நிலையில் சென்னையின் ஷாகீன் பாக் என வண்ணாரபேட்டை போராட்டம் குறித்து சமூக வளைத்தளங்களில் பலரும் போராட்டத்தை ஆதரித்தும், போலிசை கண்டித்தும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதில் தமிழக போலீசு உத்திரப் பிரதேச ‘காவி போலீசைப்’ போல செயல்படுகிறது என்றும் கண்டனம் எழுப்பியுள்ளனர்.

உண்மைதான் இதுவரை உ.பி அரசின் ‘காவி போலிசு’ நடத்திய தாக்குதலில் 25-க்கும் மேற்பட்டவர்கள் செத்துப் போயுள்ளனர். அதேபோல டெல்லி ஜாமியா மற்றும் ஷாகீன் பாக் பகுதிகளில் காவி குண்டர்கள் நேரடி துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டபோது டெல்லி போலிசும் கை கட்டி வேடிக்கைதான் பார்த்திருந்தது. அந்த வகையில் எடப்பாடி அரசின் போலிசு நாங்கள் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்துள்ளது.

இவை அனைத்தும் சொல்லும் செய்தி ஒன்றுதான், இனி வெறும் மனுக்களால் இங்கு தீர்வு கிடைக்காது என்பதுதான் அது. தீர்வு போராட்டங்களில் தான் அடங்கி இருக்கிறது. அதனை முன்னெடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளாகிய நம் அனைவரது கடமையாகும். இதற்காக நாம் களத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை. வண்ணாரப் பேட்டையில் தொடங்கி சென்னை மிண்ட் பாலம் வரை கூட்டம் பெருகி நிற்கிறது. போராட்டம் தொடர்கிறது ! வாருங்கள் ! போராட்டத்தைக் கொண்டாடுவோம் !

  1. தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சியினர் குறிப்பாக திரிவடுக வந்தேறிகள் ஆதிக்கம் செலுத்தும் திராவிட கட்சிகளும் கம்யூனிஸ்ட் கும்பல்களும் எதற்காக CAA சட்டத்தை எதிர்க்கிறார்கள்? தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்கள் எப்போதும் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. அவர்களில் ஒரு சிலர் அப்படி அடையாளப்படுத்திக் கொண்டாலும் அது அவ்வப்போதைய அரசியல் நலன்களுக்காக மட்டுமே. தமிழர்களுடைய நலனை பாதிக்கக்கூடிய வகையிலேயே இஸ்லாமியர்களும் அவர்களின் அமைப்புகளும் எப்போதும் செயல்பட்டு வந்துள்ளார்கள். இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினராக இருந்த தமிழர்கள் சிறுபான்மையினர் ஆனது யாரால்? இப்போது அங்கு யார் பெரும்பான்மையினர்? சிங்கள இராணுவத்தோடும் சிறப்பு அதிரடிப்படையோடும் கூட்டு வைத்துக்கொண்டு இஸ்லாமிய ஊர்காவல் படையினர் தமிழ் கிராமங்களை அழித்து தமிழர்களை கொலை செய்தனர். சிறு குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் நிர்க்கதி ஆனதற்கு இவர்களும் முக்கிய காரணம். போர் உச்சத்தில் இருந்தபோது நாளும் பல்லாயிரக்கணக்கானோர் குண்டுவீச்சில் செத்துக்கொண்டிருந்தனர். போருக்கு எதிராக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்தன. ஆனால் இங்கு இருக்கும் இஸ்லாமியர்களும் அவர்களின் அமைப்புகளும் தமிழர்களுக்கு எதிரான அந்தப் போரை வெளிப்படையாக ஆதரித்து பேசி வந்தனர். இப்போது இவர்களுக்கு ஆதரவாக இங்குள்ள கட்சிகளும் அமைப்புகளும் மத்திய அரசுக்கு எதிராக எதற்கு போராட்டம் நடத்தி தமிழ்நாட்டு மக்களின் மீது மத்திய அரசுக்கு ஆத்திரத்தை மூட்ட வேண்டும்? ஓட்டு மற்றும் காசு பொறுக்கிகளான வந்தேறி திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழ்நாட்டு மக்களை நிம்மதியாகவே இருக்க விட மாட்டார்கள் போல. இதில் சீமான் மாதிரியான கோமாளிகள் வேறு. இந்த ஆமைக்கறி தான் ஈழத் தமிழர்களின் அழிவுக்கு நீதி கேட்கிறதாம்.

  2. ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸ் நோய்க்கு (கம்யூனிஸ்ட்கள் மனித இனத்தின் மீது பயன்படுத்த உருவாக்கிய bioweapon ) பலியாகும் போது சீனா கம்யூனிஸ்ட் அதிபர் மக்களை சந்திக்காமல் ஏதோ ஒரு பொந்துக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறாரே அதை பற்றி ஒரு வார்த்தை வினவு கூட்டங்கள் பேசும்மா ?

    எங்களுக்கு தேசம் முக்கியம் அல்ல மனிதம் தான் எங்கள் கொள்கை என்று ஊருக்குள் பொய்களை சொல்லி கொண்டு திரிந்த இந்திய கம்யூனிஸ்ட்கள் எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே ???

  3. லாரன்ஸ் பிரிக் எனும் அரசியல் அறிஞர் பாஸிசம் என்றால் என்னவென்று பதிநான்கு கூறுகளாய்ப் பிரித்து நமக்கு விளக்குகிறார், அவை என்னவென்று பார்க்கலாம்.
    1) அதீத தேசியவாதம்.
    அதாவது நாடுதான் எல்லாமும் எனப் பேசுவது, நாடுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று பேசுவது, அது தேசப்பற்று என்பதை மிஞ்சி அடுத்தவர் மீதான வன்முறை என்று மாறிப்போவது.

    2) மனித உரிமை மறுப்பு.
    அதிகாரத்தில் இருப்பவர் தம்மைக் காத்துக் கொள்ள மனித உரிமையற்ற சூழலை உருவாக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, அதிகாரத்தில் இருப்பவர் எவரும் வன்முறையைக் கையில் எடுக்கலாம் என்பது போல.

    3) பொது எதிரி என்கிற கற்பனையை உருவாக்குவது, அதாவது மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பாமல் இருக்க குற்றமே செய்யாத சம்பந்தமே இல்லாத ஒரு பிரிவினரை நாட்டுக்கே எதிரியென சித்தரிப்பது, அந்த எதிரி என்கிற ஒன்று ஒரு இனமாகவோ மதமாகவோ நாடாகவோ இருக்கலாம்.

    4) ராணுவத்தின் அதிகாரம்.
    அதாவது நாட்டின் பொருளாதாரம் பெருமளவு ராணுவத்திற்கே செலவழிக்கப்படும். அந்த ராணுவமும் வெளிநாட்டினருடன் போரிடுவதை விட உள்நாட்டு மக்களை கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்குமே அதிகமாக பயன்படுத்தப்படும்.

    5) ஆணாதிக்கம்.
    அதிகாரத்திலிருப்பவர் அனைவரிடமும் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும். அதிகாரத்தில் பெண் அமர்த்தப்பட்டாலும் அவர் ஆணாதிக்கத்தைத் தூக்கிச் சுமப்பவர்களாகவே இருப்பார்.

    6) ஊடகங்களில் அரசின் தலையீடு.
    அரசிற்கு சாதகமாகவே ஊடகங்கள் செயல்படும் அல்லது செயல்படுத்தப்படும்.

    7) தேசப் பாதுகாப்பு என்ற அச்சம்.
    அதாவது தேசத்திற்கு பாதுகாப்பில்லை என்கிற ஒரு அச்சத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டேயிருப்பது. அதன் வழியே அரசு செய்யும் எல்லா செயல்களுக்கும் மக்களிடம் ஆதரவைத் திரட்டிக் கொள்ளுவது.

    8) மதமும் அரசும் ஒன்றாக இருக்கும். அதாவது குறிப்பிட்ட மதத்தின் ஆதிக்கம் அரசில் அதிகமாக இருக்கும். அரசிலிருக்கும் அமைச்சர்கள் அதிகாரிகள் தம் பெரும்பான்மை மதத்தையே முன்னிருத்தி அரசியல் செய்வர். அரசின் குறைபாடுகள் எல்லாமும் மதம் என்கிற போர்வையால் மூடி மறைக்கப்படும்.

    9) முதலாளிகள் பாதுகாக்கப்படுவர். அதாவது தொழிலதிபர்கள் முதலாளிகளின் சொகுசு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பையும் அரசு ஏற்படுத்தாது, அவர்களை முதற் கடமையாக பாதுகாக்கும். அவர்கள் மக்களைச் சுரண்ட அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

    10) உழைக்கும் சக்தி ஒடுக்கப்படும். அதாவது தொழிலாளர் நலன் நசுக்கப்படும். தொழிலாளர்கள் சங்கங்கள் அழிக்கப்படும். தொழிலாளர்கள் அரசியல் சக்தியாக உருவாவதை அரசு முறியடிக்கும்…

    11) அறிவு மறுக்கப்படும்.
    அதாவது அரசு விரும்பும் கல்வி மட்டுமே அனுமதிக்கப்படும், அதை எதிர்க்கும் அறிஞர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள், கலைகளும் ஒடுக்கப்படும்…

    12) தண்டனைகள் மீதான ஆர்வம். அதாவது பாஸிஸ ஆட்சியில் காவல்துறைக்கு கட்டுமீறிய அதிகாரம் வழங்கப்படும். தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட முன்னுரிமைகள் வழங்கப்படும். நியாயமான கோரிக்கைகள் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படும்.

    13) ஊழல்.
    அதாவது முதலாளிகளுக்கு ஏதுவான வழிமுறைகள் தங்கு தடையின்றி திறந்துவிடப்படும். முதலாளிகளுக்கு ஆதரவானவர்களே அதிகாரங்களில் நியமிக்கப்படுவர்.

    14) முறைகேடான தேர்தல்கள்.
    அதாவது பாஸிசம் பரவும் நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் முறைகேடுகள் மிகுந்திருக்கும். மாற்றுக் கட்சித் தலைவர்கள் கொல்லப்படுவர் அல்லது சட்டம் வளைக்கப்படும் அல்லது வாக்கு எந்திரங்கள் திருடப்படும் குளறுபடியாகும், வாக்கு எண்ணிக்கை பொய்யாக சொல்லப்படும்.

    இந்த 14 விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இந்த 14 விஷயங்களும் உங்களுக்கு பரிச்சயமானதாகத் தோன்றுகிறதா என யோசியுங்கள்.

    பரிச்சயமானது போல் தோன்றினால் குறித்துக் கொள்ளுங்கள் உங்களையும் முசோலினி போன்ற ஒரு பாஸிஸ்டே ஆண்டு கொண்டிருக்கிறார் என்று.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க