ஊரும் அடங்கிடுச்சி, ஊரடங்கும் நீண்டுருச்சி.. | மக்கள் அதிகாரம் பாடல் !

மோடி அரசின் அழிவுத் திட்டங்களை பற்றியும் அதற்கு எடப்பாடி அரசு துணை போவதை பற்றியும் அம்பலப்படுத்தும் விதமாக ஊரும் அடங்கிடுச்சி, ஊரடங்கும் நீண்டுருச்சி பாடல் !

கொரோனா ஊரடங்கில் நாட்டுமக்கள் வறுமையில் வாடும் சூழலில் நாடு வளரச்சி அடைகிறது என்கிறார் மோடி. மக்கள் நலன், இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களை கொரோனா ஊரடங்கு சூழலை பயன்படுத்தி விரைந்து அமுல்படுத்துகிறது மத்திய பா.ஜ.க அரசு. ஏழை தாழ்த்தப்பட்ட மக்களை தற்குறிகளாக மாற்றும் நவீன குலக்கல்வித் திட்டமான புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பையும் மீறி அமுல்படுத்துகிறது.

சுயசார்பு என பேசிக்கொண்டு அதற்கு மாறாக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கிறது. சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு மசோதா மூலம் ஒட்டுமொத்த இயற்கையையும் கார்ப்பரேட் இலாப வெறிக்குப் பலியாக்கி சுற்றுச் சூழலை பாழ்படுத்தவும் தயாராகிவிட்டது.

மோடி அரசின் அழிவுத் திட்டங்களை பற்றியும் அதற்கு எடப்பாடி அரசு துணை போவதை பற்றியும் அம்பலப்படுத்தும் விதமாக ஊரும் அடங்கிடுச்சி, ஊரடங்கும் நீண்டுருச்சி… என்ற பாடல் தருமபுரி மக்கள் அதிகாரம், கலைக்குழு தோழர்களால் காணொளி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பாருங்கள் பகிருங்கள் !

3 மறுமொழிகள்

  1. தோழர்களே! இவ்வளவு நாள் இத்திறமையை எங்கு ஒளித்து வைத்திருந்திருந்தீர்கள். பாடல் வரிகள் நக்சல்பாரி அரசியலை ஆயுதாமாக்கி பாமரரர்களுக்கும் கடத்துகிறது. அடுத்தடத்து களத்து மேட்டில் சங்கிகளை அடித்து தூற்றுங்கள். பதர்களை அகற்றி விதைகளாக நிமிறுங்கள். தோழர்களுக்கு செவ்வணக்கம்.

  2. மக்கள் அதிகாரம் தர்மபுரி கலைக்குழு தோழர்களுக்கு வாழ்த்துக்கள்…அரசியல் சமர் புரியும் வரிகளுக்கு பாராட்டுக்கள்…மெட்டிலும் இசைக்கோர்ப்பிலும் இன்னும் சிறப்பாக கவனம் கொள்ள பணிவான வேண்டுகோள்கள்…

Leave a Reply to மதி. பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க