கார்ப்பரேட் கரசேவையில் பாஜக ! களமிறங்காமல் வாழ்வில்லை ! | மக்கள் அதிகாரம் காணொளிகள்

கொரோனா பேரிடரை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, மின்சார சட்ட திருத்தம் மற்றும் சுற்றுசூழல் சட்ட திருத்தம் (EIA - 2020) ஆகியவற்றை அமல்படுத்த துடிக்கும் பாஜக-வின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ தொகுப்பு.

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடந்த 16.08.2020 அன்று இணையவழி கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துவரும் பாஜக-வின் திட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர் ஈசன், வழக்கறிஞர் வெற்றி செல்வன் மற்றும் வழக்கறிஞர் தோழர் ராஜூ ஆகியோர் உரையாற்றினர். அக்காணொளிகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளின் தியாகத்தில் பெற்ற இலவச மின்சார உரிமை பறிபோகுது!

உரை : வழக்கறிஞர் ஈசன், ஒருங்கிணைப்பாளர், இலவச மின்சார உரிமைப் பாதுகாப்பு கூட்டியக்கம்.

***

எட்டுவழிச் சாலைக்கும் டெல்டாவில் மீத்தேன் எடுக்கவும் மக்களை கேட்க வேண்டாம்! வருகிறது புதிய EIA 2020 சட்டம்!

உரை : வழக்கறிஞர் வெற்றி செல்வன், பூவுலகின் நண்பர்கள்

***

கார்ப்பரேட் கரசேவையில் பாஜக ! களமிறங்காமல் வாழ்வில்லை !

உரை : வழக்கறிஞர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க