NEP 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | சசிகாந்த் செந்தில் உரை | CCCE

தேசியக் கல்விக் கொள்கையின் அதிகார மத்தியத்துவ, வணிகமய, காவிமய அடிப்படைகளை அம்பலப்படுத்தி உரையாற்றுகிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 – என்னவாகும் உயர்கல்வி? என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த இணையவழி கூட்டத்தில் திரு சசிகாந்த் செந்தில் உரையாற்றினார்.

தனது உரையில், தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை மற்றும் சமஸ்கிருத திணிப்பு குறித்த விவாதங்கள் பரவலாக நடந்துவருகின்றன. அதேவேளையில் கல்விக் கொள்கையில் உள்ள முக்கியமான வேறு சிலவற்றையும் நாம் பேசவேண்டும். இக்கொள்கை பின்வரும் மூன்று விசயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

1. வணிகமயமாக்கல்
2. அதிகார மையப்படுத்துதல்
3. காவிமயமாக்கல்.

இவர்கள் கல்வியை புதிய தாராளவாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்க்கிறார்கள். எந்த ஒரு பாசிச அரசும் தன் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு முதலில் தாக்குதல் தொடுப்பது கல்வியில் தான். அதையே தான் தற்போது பாஜக-வும் இந்த கல்விக் கொள்கையின் வாயிலாக செய்கிறது என்று பேசினார்.

மேலும் உயர்கல்வியில் கல்விகொள்கை முன்வைக்கும் பரிந்துரைகளைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் திரு சசிகாந்த் செந்தில் விளக்கியுள்ளார். அவரது உரையை முழுமையாகக் காண :

காணொலி :

பாருங்கள் ! பகிருங்கள் !