நாள்: 06-10-2020

பத்திரிகை செய்தி

க்டோபர் 6, 2020 அன்று சென்னையில் மக்கள் அதிகாரத்தின் மாநில செயற்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கூடி கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளோம்.

அமைப்பு விரோத, சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மாநிலப் பொருளாளர் காளியப்பன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் த.கணேசன், அனைத்து பொறுப்புகளில் இருந்தும், மக்கள் அதிகாரத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். அவர்களுடன் மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைமைக் குழுவில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வழக்கறிஞர் சி.ராஜு கருத்து வேறுபாடு காரணமாக, மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், தலைமைக் குழு மற்றும் செயற்குழுவில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சுரேசு சக்தி முருகன், வேறு பணிகள் காரணமாக தலைமைக் குழு மற்றும் செயற்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதே போன்று கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் ஆகியோர் அவர்கள் வகித்த மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் இருந்தும், செயற்குழுவில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர்.

தலைமைக் குழுவின் புதிய உறுப்பினர்களாக தோழர்கள் வெற்றிவேல் செழியன், மருது, குருசாமி, முத்துகுமார் மற்றும் சாந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளராக தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலப் பொருளாளராக தோழர் குருசாமி, மாநில செய்தித் தொடர்பாளராக தோழர் மருது என தேர்வு செய்யப்பட்டனர். மக்கள் அதிகாரத்தின் அனைத்து உறுப்பினர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ள தலைமைக் குழுவின் கீழ் வழக்கம் போல் இயங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழகம் மற்றும் புதுவை மக்களும், அனைத்து சனநாயக சக்திகளும் மக்கள் அதிகாரத்தின் அரசியல்-அமைப்பு செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறோம்.

தோழமையுடன்,
வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை

4 மறுமொழிகள்

  1. சிறப்பு! வாழ்த்துக்கள்!!

    //
    கட்சியைத் தூய்மைப்படுத்தும் பணி அநேகமாக கருத்தாழமுள்ள, மிக முக்கியமான பணியாக வளர்ந்து விட்டது.

    முக்கியமாக அனுபவத்தையும் கட்சியைச் சாராத தொழிலாளர்களின் குறிப்புக்களையும் ஆதாரமாகக் கொண்டு அவர்களது குறிப்புக்களின் வழிநின்று கட்சியைச் சாராத வெகுஜனங்களின் பிரதிநிதிகளைக் கணக்கில் கொண்டு கட்சியைத் தூய்மைப்படுத்திய இடங்கள் உண்டு. இதுதான் மிக மதிப்புள்ளதும் மிக முக்கியமானதுமாகும். இவ்வாறக “முகஸ்துதி பார்க்காது” மேலிருந்து கீழாக கட்சியைத் தூய்மைப்படுத்த உண்மையிலேயே நம்மால் முடிந்தால் மெய்யாகவே புரட்சியின் வெற்றி மகத்தானதாயிருக்கும்.

    ஏனெனில் புரட்சியின் வெற்றிகள் முன்பிருந்ததைப் போன்றே இப்போது இருக்க இயலாது. போர்க்களத்திலிருந்து பொருளாதாரக் களத்தை நோக்கிய மாறுகாலத்தைப் பொறுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையை நோக்கிய மாறுகாலத்தைப் பொறுத்தும், உழைப்பின் உற்பத்தி திறனை உயர்த்தவும் உழைப்புக் கட்டுப்பாட்டை உயர்த்தவும் முதற்கண் தேவைப்படும் சூழ்நிலைகளைப் பொறுத்தும் இவை தமது தன்மையை நிச்சயம் மாற்றிக்கொள்ளும்.

    இந்தக் காலத்தில் புரட்சியின் முக்கிய வெற்றியாக உள் மேம்பாடு, பிரகாசமற்ற, கண்ணில்படாத, உடனடியாகத் தெரியாத உழைப்பு மேம்பாடு, அதன் அமைப்பின், அதன் முடிவுகளின் மேம்பாடு உள்ளது; இந்த மேம்பாடு பாட்டாளி வர்க்கத்தையும் கட்சியையும் சிதைக்கக் கூடிய குட்டிமுதலாளித்துவ மற்றும் குட்டிமுதலாளித்துவ-அராஜகவாதக் கட்டுப்பாடற்ற சூழ்நிலையின் தாக்கத்திற்கு எதிரான போராட்டத்தைக் குறிக்கிறது. இத்தகைய மேம்பாட்டை நடைமுறையாக்க வெகுஜனங்களிடமிருந்து பிரிந்து போகுபவர்களை அகற்றி கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டும் (வெகுஜனங்களின் கண்களின் முன் கட்சியை இழிவுபடுத்து பவர்களைப் பற்றிக் கூறவே வேண்டியதில்லை).

    வெகுஜனங்களின் எல்லா குறிப்புக்களுக்கும் நாம் கீழ்படிய வேண்டியதில்லை என்பது உண்மையே, ஏனெனில் வெகுஜனங்கள் கூட சில நேரங்களில்-குறிப்பாக மிக அயர்ச்சியான ஆண்டுகளிலும், அபரிதமான பாரமும் வேதனையும் தரும் அளவிற்கதிகமான களைப்பேற்படும் ஆண்டுகளிலும்-சிறிதும் முற்போக்கில்லாத மனநிலைக்கு உட்படுவார்கள். ஆனால் மக்களை எடை போடுவதில், “கட்சியில் வந்து ஒட்டிக்கொண்ட”, “கட்டளையிடும் மனப்பான்மையுள்”’, “அதிகார மனப்பாங் குடைய” நபர்களின் மேலான எதிர்மறையான தொடர்பில் கட்சியைச் சாராத பாட்டாளி வர்க்க வெகுஜனங்களின் குறிப்புக்களும், பல சந்தர்ப்பங்களில் கட்சியைச் சாராத விவசாயி வெகுஜனங்களின் குறிப்புக்களும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. உழைப்பாளி வெகுஜனங்கள், நேர்மையான, தங்களை அர்ப்பணித்த கம்யூனிஸ்டுகளுக்கும் நெற்றி வியர்வையை சிந்தி உணவைப் பெறும் மனிதனுக்கு, எந்தவிதமான சலுகைகளும், எந்தவிதமான ”தலைமையதிகாரிகளுக் கான வழிகளும்” இல்லாத மனிதனுக்கு அருவருப்பை ஊட்டுபவர்களுக்கும் இடையேயுள்ள மாறுபாட்டை மிகக் கூர்மையாகப் புரிந்து கொள்கின்றர்கள்.

    கட்சியைச் சாராத உழைப்பாளிகளின் கருத்துக்களைக் கணக்கில் கொண்டு கட்சியைத் தூய்மைப்படுத்துவது ஒரு மாபெரும் செயலாகும். இது நமக்குக் கருத்தாழமுடைய பயன்களைத் தரும். இது கட்சியை முன்பிருந்ததைவிட பன் மடங்கு அதிக சக்திவாய்ந்த வர்க்க முன்னணிப்படையாக, வர்க்கத்தோடு அதிக உறுதியாக தொடர்பு கொண்டுள்ள முன்னணிப்படையாக, அதை பல்வேறு இன்னல்கள், ஆபத்துகளுக்கிடையே வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் திறமை வாய்ந்ததாக செய்யும்.//

    : – : கட்சியைத் தூய்மைப்படுத்துவதைப் பற்றி – லெனின் : – :

    நன்றி : “ மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் படைப்புகள் ” வலைப்பூ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க